Sunday, 31 August 2014

கண்ணோடு நின்ற கனவு.




............................ கலிவெண்பா
...............................

நெஞ்சள்ளும் பேரழகால் நித்தம் எனைவென்று
அஞ்சி நடந்தென்னை ஆள்கின்றாய்! கொஞ்சிடச்செய்
கிள்ளை மொழியாய்க் குயிலொலியாய் ஏழிசையாய்ப்
பிள்ளை மழலையெனப் பேசுகிறாய்! நெஞ்சம்
நினைந்துரும் வண்ணம் நிழல்போல வந்தாய் !

Thursday, 28 August 2014

வாராயோ கண்மணியே!












முத்தை விளைத்தெடுத்த மோகப்பூஞ் சித்திரமே!
தத்தை குரல்கற்கும் தங்க ரதவடிவே!
குளத்தில் தாமரையும் கூம்பி‘இதழ் விரிப்பதுபோல்
உளத்தில் மலர்ந்தென்னுள் உயிரான மெய்ப்பொருளே!

Monday, 25 August 2014

வீழும்வரை போதும்!















கிள்ளையிலும் இல்மொழியை மெல்ல‘அவள் சொல்லமனம்
       அள்ளுமிவள் உள்ளழகில் ஆழும்! – என்னைக்
கொள்ளைகொண்டு போகுமிவள் கள்ளவிழி வீச்சழகில்
       உள்ளம்பனி வெள்ளமென வீழும்!

Thursday, 21 August 2014

சொல்லாக் கவி சொல்வாய்!



 


வெட்டும்விழி கொட்டும்கணை ஒட்டும்‘எனை நாடும்!
விட்டும்பிடித் திட்டும்‘எனைத் தொட்டும் சுகம்தேடும்!
பட்டும்‘உள மொட்டும்மதி கட்டும்‘உணர் வாடும்!
கிட்டும்‘எனச் சுட்டும்நிலை கெட்டும்‘உனைப் பாடும்!

Monday, 18 August 2014

எனக்குத் தெரியாது!




 






சென்னைக் கிறித்தவக்கல்லூரியில் விரிவுரையாளருக்கான நேர்காணலுக்கு வந்திருந்த மறைமலை அடிகளிடம் பரிதிமாற் கலைஞர் கேட்டதாகச் சொல்லப்படும் கேள்வி
“குற்றியலுகரத்துக்கும் முற்றியலுகரத்திற்கும் எடுத்துக்காட்டுத் தருக“
மறைமலையடிகள் சொன்ன பதில்
“ எனக்குத் தெரியாது “

Saturday, 16 August 2014

நீ என்னை ஆள்க!


ஓங்கும் மலையாகி
     உன்னை நான்மறக்கத்
தூங்கும் வானாய்நீ
     தோன்றமனம் தோற்குதடி!

Monday, 11 August 2014

சொல் வேட்டை!



பழைய இலக்கியங்களைப் பனையோலையில் இருந்து பிரதி எடுக்கும் போது சில சொற்கள் அழிந்திருக்கும். சில எழுத்துக்கள் தெளிவில்லாமல் இருக்கும்.
சில நேரங்களில் இடையே இருக்க வேண்டிய ஓலைச்சுவடிகள் சில இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட இலக்கியங்களுக்கு வேறு பிரதி இருந்தால் ஒப்பு நோக்கித் திருத்தம் செய்யலாம். அந்தப் பாடல்கள் எங்காவது யாராவது மேற்கோளாக எடுத்துக் காட்டி இருந்தால் அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அவ்வளவுதான்!

Friday, 8 August 2014

எரியும் நினைவுகள்!




உள்ளம் உனையெண்ணி
     உருகித் துடிக்கையிலே
கள்ள  மனம்காதல்
     கவிதை எழுதுமடி!

Wednesday, 6 August 2014

படைப்பின் உயிர். (2 )- முறைவைப்பு.









மெய்ப்பாட்டுச் சுவைகளின் வரிசை முறைக்குக் காரணம் உள்ளது என்பது பற்றிச் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை முதலில் பார்த்து விடுவோம்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் ( எட்டே) மெய்ப்பாடென்ப“  ( தொல்-மெய்.3.)
எனத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் இந்த  வரிசை முறையில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.

Monday, 4 August 2014

கேள்விக்கு என்ன பதில்?




 இலக்கணப் பெரும் பரப்பில் நான் பெரிதும் மதிக்கும் அறிஞர். புலவர். கோபிநாத் அவர்கள் “ இமைக்கும் நொடி“ மற்றும் “ படைப்பின் உயிர்“ ஆகிய பதிவுகளின் இறுதியில் இரண்டு கேள்விகள் கேட்டிருந்தார். பின்னூட்டத்திற்கான பதிலிடும் வரம்பைத் தாண்டி நீண்ட அதன் கருத்துக்களின் நீட்சியால்  தனிப்பதிவாக்கிடக் கருதினேன். அப்பதிவுகளின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம் என்பதும் இதற்குக் காரணம்.

Sunday, 3 August 2014

இமைக்கும் நொடி.




மரபிலக்கணங்களின் உரைகளை வாசிக்கும் போது அவை வாய்மொழியாக ஆசிரியரால் கற்பிக்கப்பட்டதன் எழுத்துப் பதிவுகள் என்பதை மனதில் கொள்ளவேண்டும். உரை என்றாலே உரைக்கப்படுவதுதானே! ஏனென்றால் ஒரு நூலைப் படிக்கும் போது நம்மனதில் தோன்றும் அல்லது நமக்கே தோன்றாத பல ஐயங்களை உரையாசிரியர்கள் எழுப்பி அவற்றிற்கான விடைகளை அளித்துச் சென்றிருப்பார்கள். அவை ஏதோ புத்திசாலி மாணவனால் அன்றைய வகுப்பறைச் சூழலில் எழுப்பப்பட்ட நல்ல கேள்விகளாக இருந்திருக்கும். அல்லது ஆசிரியர் பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அவருக்கே தோன்றிய சந்தேகத்திற்கான பதிலாக இருந்திருக்கும்.

Friday, 1 August 2014

படைப்பின் உயிர்.





படைப்பாளியான நீங்கள் உங்கள் படைப்பின் வழியே படிப்பவருக்குள் நுழைந்து அவர்கள் மனத்தை உருக்க வேண்டுமா? மகிழ்வூட்ட வேண்டுமா? சிரிக்கச் செய்ய வேண்டுமா? கண்ணீர் விடச் செய்ய வேண்டுமா? உங்களின் நோக்கம்  எதுவாக இருந்தாலும் அப்படிப் படைப்பொன்றினை ஆக்கத்  தமிழ் இலக்கணம்  வழிசொல்லித் தருகிறது. படைப்பாளி எப்படித் தன் படைப்பை வாசகனுடைய மனதை இடமாகக் கொண்டு இதை நிகழ்த்த இயலும்? தன் அனுபவத்தைப் படைப்பின் வாயிலாகப் படிப்போனின் மனத்தில் இறக்கி வைப்பது எப்படி? திரைப்படங்களில், நாடகங்களில் இது சாத்தியப்படும். சில உண்மைச் சம்பவங்களின் எடுத்துரைப்புகள் பாதிக்கப்பட்டவரால் பகிரப்படும் போது நம் மனதில் கலக்கம் ஏற்படுவதுண்டு. ஆனால் எழுத்து வழியாக இதை எப்படிக் கொண்டு செல்வது? தானுணர்ந்த அனுபவத்தை எப்படித் தன் எழுத்தில் இறக்கி வைப்பது? படிப்பவரின் மனம் படிந்து அவர்களின் உணர்வுகளை எப்படித் தொட்டெழுப்புவது? அதற்கென்றே வடிவமைக்கப் பட்டதுதான் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல்.

Saturday, 19 July 2014

உலகில் நீ மாத்திரம்!



அறிவை முடமாக்கி அன்புப் பெருந்தீயால்
     அணைத்த என்தேவியே! – உயிர்
முறிதல் காணாயோ? மூர்க்கம் தீராயோ?
     முடங்கு தென்னாவியே!

Wednesday, 16 July 2014

நீயல்லால் வேறொரு காட்சியில்லை!




 








பாதம் அழுந்திய நின்தடங்கள் – எங்கும்
     பசுமையாய் என்றும் நினைவிருக்க
ஏதும் அறியாமல் நீயிருப்பாய்! – உனை
     என்றும் அறிந்திட நானிருப்பேன்!

Tuesday, 15 July 2014

மதி வென்ற கதிர்!





முடிந்த கதைகளைத் தொடங்கெனவே – தினம்
     மூர்க்கமாய்த் தாக்குமென் மனவிலங்கைக்
கடிந்(து) அடக்கவோர் வழியிலையே! – ஐயோ
     கடித்துக் குதறினும் பொறுப்பதன்றி!
விடிந்தன இரவுகள்! வெளிச்ச மில்லை!! – மதி
     வென்றிடத் தண்கதிர் விரும்பவில்லை!

Sunday, 13 July 2014

உயிர் திரும்பும்!





கரைகள் தகர்க்கும் ஆறெனநீ! – அவ்
     வாற்றைத் தடுக்கும் அணையென நான்!
நுரைகள் திரட்டி நீவருவாய்! – உனை
     நிரப்பி நிரம்பி நான்வழிவேன்!

Friday, 11 July 2014

“உள்ளங்கவர் களவன்“




உங்களில் பலரும் இதை உள்ளங்கவர் கள்வன் என்றே வாசித்திருப்பீர்கள். என் மேல் அக்கறை உள்ள ஒரு சிலர், “தலைப்பையே எழுத்துப் பிழையோடு எழுதிவிட்டான் உடனே  திருத்துமாறு சொல்ல வேண்டும்“ என்று மனதிற்குள்ளாவது நினைத்திருப்பீர்கள். மன்னிக்க வேண்டும். நான் சொல்ல வந்தது உள்ளங் கவர் களவனைப் பற்றித்தான்!

Tuesday, 8 July 2014

அறிவினாவும் ஐய விடைகளும்!

முத்துநிலவன் அய்யாவின் வலைப்பக்கத்தில் இருபத்தைந்து கேள்விகள் இன்று காலை கணினியைத் திறந்ததும் கண்பட்டன. சுவாரசியமானவை.
தெரிந்த விடைகளுக்கு விடையளித்துக் கொண்டே படித்தால் கடைசியில் என் பெயரும் ......!
எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெரிய வேண்டும் என்பதில்லை!
கூறும் விடையாவும் சரியாக இருக்க வேண்டுவதும் இல்லை. தவறினைத் திருத்தவும் தெரியாதனவற்றைத் தெளிவுபடுத்தவும் யாவரும் வருக!
திருத்திப் பின்னூட்டமிட முத்துநிலவன் அய்யாவையே அழைக்கிறேன்.

Monday, 7 July 2014

வீழ்ந்து விட்டேன்!






மூடிக் கிடந்த கதவினுளே – பெரும்
     மோனத் தமிழ்ந்(து) இருந்த எனைத்
தேடிப் பிடித்துன் நினைவலையால் – நிதந்
     தேடிக் கனவிலுந் தெருட்டுவையோ?

Friday, 4 July 2014

பதங்கமாதல்




கண்ணிகளை
உறவுகள்மேல் விரித்து
என்னைப் பிடித்த பின்