Friday 30 October 2015

தன் உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டிப்பலி கொடுத்தவனது கல்வெட்டு.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்திற்கென ஆட்களைத் திரட்டிப் பயிற்சி அளித்து, ஜப்பானியப் படைத்தலைவனை அணுகி, அவர்களது படையோடு இணைந்து ஆங்கிலேயர் ஆட்சியை இந்திய மண்ணை விட்டு அகற்ற உதவிகோருகிறார்.

Wednesday 28 October 2015

அது போதும்.


இடியெடுத்துவெளி மழையுதிர்த்துவளர் கடல்கலக்கவருந் தும்பியை
   இரையெடுத்துநுரை பறையொலித்துமலர் கரைதெளிக்கவரு வெள்ளலை!
படமெடுக்கஒளி வடிவெடுத்தபகல் நொடியுகுத்தகுறு மின்னலைப்
    பரிந்தெடுத்துமுடி இழைபிரித்ததலை செறிவுறுத்துமிருள் வெண்ணிலா!

Saturday 17 October 2015

அத்தான் வருவதே இன்பம்!


ஆசிரியப் பயிற்சியின் போது  மாணவ ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டிய பல நெறிமுறைகள் சொல்லித்தரப்பட்டதுண்டு. அவை அச்சிடப்பட்ட எந்தப் பாடப்புத்தகங்களில் காணக்கிடையாதன. கற்பிக்கும் ஆசிரியர்கள் தங்களது சொந்த அனுபவத்தில் இருந்தோ அல்லது சக ஆசிரியர்களின் அனுபவத்தில் இருந்தோ அறிந்து பகிர்வன.

Monday 12 October 2015

யானை எழுதிய சாசனம்.

யானையின் பிடியில் உடல் முறிந்து.

யானைகள் எப்போதும் பிரமிப்புத் தருபவை. சாந்தமும் மூர்க்கமும் ஒருங்கே கொண்ட இயற்கையின் படைப்பு அவை. பண்டைய போர்க்களங்களில் அதன் ஆவேசம், மனிதனுக்காக மனிதனால் உருவேற்றப்படும் அதன் போர்வெறி, போர்க்களத்தில் வீறுகொண்டெழும் அதன் பேராற்றல், அதனை எதிர்த்துக் களமாடும் மனிதத் தறுகண், இவையெல்லாம் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை கற்பனை செய்திருக்கிறேன்.

Friday 9 October 2015

இன்புற வழிகள் ஏழு;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-15

முதலில் இவை ஓர் அரசனின் நன்மைக்காய்ப் புலவர்களால் சொல்லப்பட்ட வழிமுறைகள் என்பதைச் சொல்லிவிடுகிறேன். நமக்கும் பயன்படும் கருத்துகள் இதில் இருந்தால் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Wednesday 7 October 2015

கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்.
சித்ரா அக்கா எங்கள் தெருவின் தேர்ந்த கதைசொல்லி. நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போதே அவருக்கு வயது முப்பதற்கு மேல் இருந்திருக்க வேண்டும். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் செய்து கொள்ளவில்லை என்பதை விட அவரையாரும் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மையென இப்போது தோன்றுகிறது. ஒடிசலான உடல்வாகு. கருப்பென்றாலும் களைமிகுந்த கண்கள்.

Monday 5 October 2015

பழமைக்குத் திரும்புகிறேன்!வலைப்பதிவர் படைப்பூக்கப் போட்டிகள் முடிந்தன. இனி மதிப்பீடுகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நெடுநாள் கழித்துக் கவிதை என்ற பெயரில் கொடுக்கப்பட்ட வரையறைகளில் எழுத ஒரு வாய்ப்புக் கிடைத்தது. போட்டி என்பதைக் காட்டிலும் பங்கேற்றல் என்பதே அதன் நோக்கம். போட்டியில்தான் எத்துணை எழுத்தாளுமைகள், தொழில்நுட்பப் பதிவர்கள்,  சமூகச் சிந்தனையாளர்கள், கவிஞர்கள், நிச்சயம்  இன்னும் மெருகேறி தமிழ் வாழும் என்கிற நம்பிக்கை என்னுள் வலுவாக வேரூன்றி உள்ளது. போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பதிவர்களின் பதிவுகளையும் படித்தவன் என்கிற முறையில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும்  வணக்கங்களும்..!

Friday 2 October 2015

ஒரு துளி சேரப் பெருங்கடல்.

உலகம் யாவையும் ஒருகுடைக் கீழாய்
ஒடுக்கும் அறிவியல் நடக்கும் பாதையில்
முடங்கும் தமிழின் முதுமை களைந்து
தடங்கள் பதிக்கும் தமிழ்வலைப் பூக்கள்!