Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts
Sunday, 23 October 2016
Friday, 18 December 2015
எது கவிதை?
‘தமிழகத்தில்
மக்கள் தொகையை விடக் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்’ என்பதாக என்றோ வாசித்த துணுக்கொன்று இப்போது நினைவுக்கு வருகிறது. இணையத்தில் இயங்கத்தொடங்கிய இந்தக் குறுகிய காலத்தில், எழுதுபவர்களில்
பெரும்பாலானவர்கள் கவிஞர்களாய்த் தெரிகிறார்கள். ஒருவேளை ‘காமாலைக்காரன் கண்ணுக்குக்
கண்டதெல்லாம் மஞ்சள்’ என்று கூறுவதுபோல என் கண்களுக்குத்தான் இப்படிப்படுகிறதோ என்னமோ?
Tuesday, 2 June 2015
எங்கள் நீதி இப்படித்தான் சொல்கிறது கனம் நீதிபதி அவர்களே!
சட்டங்கள், வளைக்கும் வலிமை உள்ளவன் வளைக்கவும், நீதிமன்றங்கள் பணபலத்தின், அதிகாரத்தின், குவிமையத்தில்
மண்டியிடவும் செய்கின்ற இந்தப் புன்மைச் சூழலில், எது அறம், எது வழக்கு, எது தண்டனை
எனப் பழந்தமிழில் ஏதேனும் இருக்கிறதா என அறியும் ஆர்வம் இயல்பானதுதான்.
அப்படி
ஒரு உரை நூலில் இருந்து எடுக்கப்பட்டதன் சாரம் தான் இப்பதிவு.
Wednesday, 20 May 2015
Friday, 1 May 2015
தமிழ்த்தாய் வாழ்த்தின் அரசியல் ; உங்களுக்குத் தெரியுமா?
| அருள்திரு இராபர்ட் கால்டுவெல் |
தமிழ்
என்னும் மொழி சமஸ்கிருதம் என்னும் மொழியில் இருந்து தனித்து இயங்க இயலாது. அது சமஸ்கிருத
ஆதிக்கத்திற்கு உட்பட்ட மொழியே என்ற சிந்தனை தமிழ்ப்பண்டிதர்களிடையே இலக்கணவாதிகளிடையே வலிமை பெற்றிருந்த பதினேழாம்
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்காலம்.
ஆட்சிப்பணிக்காகவும்,
மதம்பரப்புவதற்காகவும் வந்த ஐரோப்பியர்களுக்குத் தங்கள் இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச்
சார்ந்ததாகக் கருதப்பட்ட சமஸ்கிருதத்தைக் கொண்டாடவும் அதில் ஆய்வுகள் மேற்கொள்ளவுமான
காரணங்கள் அதிகம் இருந்தன. சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்த மொழிகளே பிற இந்திய மொழிகள்
என்கிற பார்வை, சமஸ்கிருதப் பண்டிதர்கள் வழியாகவும்
இந்திய மொழிகளை ஆராய்ந்த அயல்நாட்டினர் வழியாகவும் ஐரோப்பாவெங்கும் பரவி இருந்தது.
Friday, 24 April 2015
கோபிநாத்தின் நீயா நானாவும் தினமணியும் - இரு அபத்தக் கருத்துகள்.
தமிழைக் காக்க மல்லுக்கட்டுவதாய்ச் சொல்லும் பலரும் மிகச் சாதாரணமாகத் தமிழ் குறித்த தவறான தகவல்களைப் போகிற போக்கில் பகிர்ந்து போவதைக் கண்டிருக்கிறேன். பதிவெழுதுவதற்கு முன்பெல்லாம் மெல்லச் சிரித்துப் போய்விடுதலே அதைக் காணும்போதும் கேட்கும் போதும் என் பதிலாக இருக்கும். எண்ணங்களிலும் எழுத்துகளிலும் உள்ள உண்மையைப் பார்க்காமல் எழுதுகின்றவர்கள் யார் சொல்கிறவர் யார் எனப் பார்க்கும் நிலைமை மாறுகின்ற வரை சிறிதளவு பிரபலமான ஒருவரால் கூடப் படிக்கும் அல்லது கேட்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை முட்டாளாக்கிவிட முடிகிறது.
Friday, 3 April 2015
பெருமாள் முருகனின் அர்த்தநாரி – ஒரு பாமரனின் பார்வையில்.
மாதொருபாகனைத்
தொடர்ந்தும் மாதொருபாகனின் சர்ச்சை பெரிதாக வலுப்பெறும் முன்பும் 2014 இன் இறுதியில்
பெருமாள் முருகன் அவர்களால் அதன் தொடர்ச்சியாக இருநாவல்கள் எழுதப்பட்டன. மாதொருபாகனின்
முடிவில் இருந்து கிளைத்துச் செல்லும் இரு முரணான பாதைகளைத் தேர்ந்தவை அவை.
மாதொருபாகனின்
முடிவு, காளி தற்கொலை செய்து கொள்ளப் போகிறான் என்னும் குறிப்போடு முடிந்திருக்கத்
தற்கொலை செய்து கொண்டான் ; உயிர்வாழ்கிறான் என்னும் இரண்டு சாத்தியங்களுக்கான வாசகனின்
ஊகத்தினூடாக ஆலவாயனும் அர்த்தநாரியும் பயணிக்கின்றன. பொதுவாகவே நாவலின் இறுதி எவ்வாறு
முடியலாம் என்னும் வாசகனின் சுதந்திரத்தை, எதிர்பார்ப்பை ஆசிரியரே முடித்துவைக்கும்
அதிலும் இருவகை சாத்தியப்பாடுகளையுமே நிகழ்த்திக் காட்டும் மாதொருபாகனின் நீட்சியாக இவ்விரு
நாவல்களையும் கொண்டு செல்கிறார். திரு.பெருமாள்முருகன்.
Monday, 16 March 2015
பெருமாள் முருகனின் ஆலவாயன்.
“
போரிலிருந்து சோளத்தட்டு உருவிக் கட்டிக்கொண்டு வந்து போட்ட கயிறு முதுகில் அழுந்தியது.
மேலே பார்த்தான். பூவரசங்கிளைகள் வானில் விரிந்து பரவியிருந்தன “ என்ற வரிகளுடன் முடிந்திருக்கும்
பெருமாள் முருகனின் மாதொருபாகன், காளியின்
தற்கொலை மனவோட்டத்தைக் காட்டுவதாய் முடிந்திருந்தது.
காளி
தற்கொலை செய்து கொண்டானா ? இல்லையா ? பொன்னாவின் நிலை என்ன? என்ற கேள்விகளைப் படிப்போரின் யூகத்திற்கு விட்டபடி
நாவலை முடித்திருப்பார் பெருமாள் முருகன். சிறு வயதில் கதைகளைப் படிக்கும்போதும் பின்பு
சிறுபிள்ளைத்தனமான கதைகளை எழுதியபோதும் கதை உணர்த்தும் நீதி என்ன என்பதைச் சொல்ல வேண்டியிருந்தது.
வாசிப்பின் பரப்பு விரிவடைந்த போது நீதி போதனை,
பிரச்சாரம் இவற்றைச் செய்வற்காக ஆக்கப்பட்டவை புனைவுகள் இல்லை என்பது புரிந்தது.
Monday, 9 February 2015
சுட்டது தமிழ்.
தமிழில்
யார் வேண்டுமானாலும் எந்தத் தவறை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று நினைத்துத்
தமிழைப் பேசுகிறவர்கள் எழுதுகிறவர்கள் ஒரு புறம் , முன்னோர் இட்டுவைத்த சட்டதிட்டங்களின்
படியே பேசவும் எழுதவும் வேண்டும் என்று சொல்லித் திரியும் சிறுபான்மையினரான மொழிக்காப்பாளர்கள்
மறுபுறம் என்று தன் கடன் “பணி“ செய்து கிடப்பதே என்று இருக்கும் இருதரப்பினரையும் கொண்டு
நம் மொழி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.
Monday, 2 February 2015
கவிதையின் கழுத்தை இப்படியும் அறுக்கலாம்.
நீங்கள்
தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர் என்றால் நிச்சயமாய் இந்தப் பாட்டைக்
கடக்காமல் உங்களால் போயிருக்க முடியாது. எதிர்பாராத
விதத்தில் நீங்கள் ஆசிரியராய், அதிலும் குறிப்பாய்த் தமிழாசிரியராய் இருந்துவிட்டால்
இந்தப் பாடல் இன்றும் மாணவர்களுக்குப் பாடமாய் இருக்கிறது. அதை நீங்கள் கற்பித்துக் கொண்டிருப்பீர்கள்.
உங்களைப்
பொறுமையிழக்கச் செய்ய விரும்பவில்லை.
பாடல்
இதுதான்,
Friday, 9 January 2015
மதிப்புரை என்னும் மண்ணாங்கட்டி.
“இது நாவலல்ல; பள்ளிக்கூட
மாணவன் காம்போஸிஷன்.“ ஒரு நாவலின் விமர்சனம் இந்த ஒரு வரியில் முடிவடைகிறது.
இது ஸ்வாமி சுத்தானந்த பாரதியாரால் எழுதப்பட்ட ’புதுமையும் பழைமையும்’ எனும் நூலைப்பற்றிய மதிப்புரை.
(வெளியீடு-அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா பக்கம் 112, விலை. 8
அணா )
இதுமட்டுமல்ல ….இன்னும் இருக்கிறது.
ஸ்ரீ டி.பி. கிருஷ்ணசாமி என்னும் ஆங்கில
ஆசிரியர் ‘நீதிநூற்பத்து‘ என்ற தலைப்பில் பத்து பண்டை தமிழ் நீதி நூல்களை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து ஒரு பக்கம் தமிழ் மூலமும் மறுபக்கம் ஆங்கில மொழி பெயர்ப்புமாக வெளியிட்டிருந்தார்.
அதற்கான மதிப்புரையின் சிறுபகுதிகள் தான் கீழ்க்காண்பவை,
Subscribe to:
Posts (Atom)





