Thursday 11 December 2014

யாப்புச் சூக்குமம்-III [ விருத்தத்தின் எலும்புக்கூடு ]



  விருத்தத்தின் எலும்புக்கூடு என்னும் இந்தப்பதிவை படிக்கும்முன் நீங்கள் யாப்புச்சூக்குமம் பற்றிய முதலிரு பதிவுகளைப் படித்திருக்க வேண்டும்.
மரபுக்கவிதைகளைக் கட்டமைத்தல் குறித்த எனது புரிதல் பற்றியது என்பதால் பொதுவாசகர்களுக்கும் மரபின் நுணுக்கங்களை மரபின் வழியில் படித்தோருக்கும் இந்தப் பதிவு ஒரு சிறிதும் பயன்படாது என்பதால் இதைக் கடந்துவிடலாம்.

விருத்தத்தின் கட்டமைப்புப் பற்றி அறியவிழைவோரும் விருத்தம் எழுதிப் பார்க்கலாமே என்று விரும்புகின்றவர்களும் இனித் தொடரலாம்.
இப்பொழுது நாம் சொன்ன அனா ஆவன்னா மற்றும் ஒன்று இரண்டு தெரியும் தானே?
இந்த விருத்தம் என்பது தமிழ் மரபுக் கவிதை மரபில் பெரும் செல்வாக்குற்றது.
ஆசிரியப்பாவின் இனங்களுள் ஒன்றாய் அமைவது.
முதலில் சில பாடல்களைப்  பார்த்துவிட்டு இடையிடையே இது பற்றிய விவரங்களைத் தொடரலாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றாலும் எளிய பாடல்தான்,

பச்சைமா மலைபோல் மேனி
     பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே!
     ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய்
     இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்!
     அரங்கமா நகரு ளானே!

முடிந்தால் வாய்விட்டுப் படிக்கலாம். ஓசை உளம் பட அது வகை செய்யும்.

இந்தக் காலத்திற்கு வருவோம்.

பாரதிதாசனின் பாடல் ஒன்று,

அருவிகள், வயிரத் தொங்கல்!
     அடர்கொடி, பச்சைப் பட்டே!
குருவிகள், தங்கக் கட்டி!
     குளிர்மலர், மணியின் குப்பை.
எருதின்மேற் பாயும் வேங்கை,
     நிலவுமேல் எழுந்த மின்னல்,
சருகெலாம் ஒளிசேர் தங்கத்
      தகடுகள் பார டாநீ!  
 
கடைசியாய்க் கண்ணதாசன் நேரு மறைந்த போது பாடிய விருத்தம் ஒன்று,

சீரிய நெற்றி எங்கே?
    சிவந்தநல் இதழ்கள் எங்கே?
கூரிய விழிகள் எங்கே?
      குறுநகை போன தெங்கே?
நேரிய பார்வை எங்கே?
      நிமிர்ந்தநன் னடைதான் எங்கே?
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
      நெருப்பினில் வீழ்ந்த திங்கே!



முதல் பார்வைக்கு இந்தப்பாடல்களில் எட்டு வரிகள் உள்ளன போலத் தோன்றுகின்றன அல்லவா?

ஆனால் இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றிலும்  நான்குவரிகளே உள்ளன.

ஒரு வரியில் உள்ள சொற்கள் ஆறு. மரபில் பாடலில் வரும் சொற்களைச் சீர் என்கிறார்கள். எனவே இந்தப் பாடலின் ஒவ்வொரு அடியிலும் உள்ள சீர்கள் ஆறு. ( அறுசீர் )

பச்சைமா (1) மலைபோல்(2) மேனி (3) பவளவாய் (4) கமலச் (5) செங்கண் (6)

அருவிகள் (1) வயிரத் (2) தொங்கல் (3) அடர்கொடி (4) பச்சைப் (5) பட்டே (6)

சீரிய (1) நெற்றி (2) எங்கே? (3) சிவந்தநல் (4) இதழ்கள் (5) எங்கே?(6)


நீளமாக ஒரே வரியில் எழுதுவது கடினம் என்பதால் ஒரு ஒழுங்கிற்காக மூன்று சீர்களை ஒரு அடியிலும் அடுத்த மூன்று சீர்களைச் சற்று உள்ளே தள்ளியும் எழுதியிருக்கிறார்கள்.
ஒரு அடி உள்ளே தள்ளி எழுதப்பட்டிருந்தால், அதைத் தனி அடியாகக் கொள்ளக் கூடாது. முந்தைய அடியோடு சேர்ந்திருக்கிறது என்றே கொள்ள வேண்டும்.

இப்போது இந்தப் பாடல்கள் நான்கு அடிகளால் ஒவ்வொரு அடிக்கும் ஆறு சீர்களைப் பெற்று வந்திருக்கிறது என்பதைக் காண முடியும்.

எனவே இந்தப் பாடல்களை அறுசீர் என்கிறோம்.

ஒரு அடியில் இரண்டு சீர் மட்டும் வந்தால் அதைக் குறளடி என்கிறார்கள்.

ஒரு அடியில் மூன்று சீர் மட்டும் வந்தால் அதைச் சிந்தடி என்கிறார்கள். ( வெண்பாவின் ஈற்றடி சிந்தடி )

ஒரு அடியில் நான்கு சீர் வந்தால் அதை அளவடி என்கிறார்கள்.
( வெண்பாவில் ஈற்றடி தவிர ஏனைய அடிகள் அளவடிகள் )

ஒரு அடியில் ஐந்து சீர் வந்தால் அதை நெடிலடி என்கிறார்கள்.

ஒரு அடியில் ஐந்தடிக்கு மேல் வந்தால் அதைக் கழிநெடிலடி என்கிறார்கள்.

இப்படிக் கழிநெடிலடியாக வருவது , ஆறு சீராக இருக்கலாம், ஏழு சீராக இருக்கலாம், எட்டு சீராக இருக்கலாம், பதினான்கு சீராக இருக்கலாம்… எனவே இப்படி இந்தக் கழிநெடிலடியில் (ஐந்துக்கு மேலாக வரும் சீர்களில்) ஒரு அடிக்கு எத்தனை சீர் வருகிறது என்பதைக் குறிக்கத்தான், அறுசீர்க்கழிநெடிலடி, எழுசீர்க்கழிநெடிலடி, எண்சீர்க்கழிநெடிலடி என்று அந்தச் சீரின் எண்ணிக்கையையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.

இது ஆசிரியப்பாவின் இனமான விருத்தத்தில் அமையும் போது,

அது, அறுசீர்க்கழிநெடிலடி, எழுசீர்க்கழிநெடிலடி, எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்……………………………. ஆகிறது.

பலரும் இதை ஆசிரியர் விருத்தம் என்று கற்பிக்கிறார்கள். எழுதவும் செய்கிறார்கள் அது தவறே!

பயந்துவிடாதீர்கள். இதைத் தெரிந்து கொள்ளத்தான் சொன்னேன்.

நீங்கள் எழுதும் பாட்டு என்ன வகை என்று கேட்டால் சொல்லத் தெரியவேண்டாமா? அதற்குத் தான்!
விருத்தம் எழுத நிச்சயம் இவை எல்லாம் தெரிந்திருக்க வேண்டியது அவசியமா என்றால் நிச்சயமாக இல்லை. கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறதல்லவா?

சரி இனிப் பாடலைச் சற்று  அலசுவோம்.

இந்தப் பாடல்களின் புறத்தோற்றத்தைக் காணும் போது நாம் பின்வரும் தன்மைகளை அதில் பார்க்க முடியும்.

நான்கு அடிகளிலும் ஒரே எதுகை வருகிறது.

1.   ( பச்சை – அச்சுதா – இச்சுவை – அச்சுவை. எதுகை ‘ச்‘ )

2.   (அருவி – குருவி – எருதின் – சருகு. எதுகை ‘ரு‘ )

3.   ( சீரிய – கூரிய – நேரிய . எதுகை ரி. நான்காம் அடியில் எதுகை இல்லை. கவிஞர் எதுகைக்காக ஏங்கவும் இல்லை.)


அடுத்து மூன்று மூன்றாக மடக்கி எழுதப்பட்ட அடிகளில் முதல் மட்டும் நான்காம் சீரில் ( சொல்லில் ) மோனை வந்திருக்கிறது பாருங்கள்.
முதற் பாடலில்,

1.    ச்சை – வளம், மோனை
2.   ச்சுதா- யர், கரம் மோனை
3.   ச்சுவை – ந்திரர், மோனை,
4.   ச்சுவை – ரங்கமா, மோனை)

இப்படியே மற்ற இரண்டு பாடல்களிலும் முதல் சீரையும் உள்ளே தள்ளி எழுதப்பட்ட அதே அடியின் நான்காம் சீரையும் பாருங்கள். மோனை வந்திருக்கிறது தானே?

இப்போது, இந்த அறுசீர் விருத்தத்தின் புற வடிவத்திலிருந்து நாம் தெரிந்து கொண்டவை,

1.   அடிக்கு ஆறுசீர்
2.   நான்கு அடிக்கு பெரும்பாலும் ஒரே எதுகை வந்திருக்கிறது.
3.   ஒவ்வொரு அடியிலும் முதல் சீரிலும் நான்காம் சீரிலும் ( மடக்கி எழுதப்படும் சீர் ) மோனை வந்திருக்கிறது.


இனி பாடலை உடைத்துப் பார்த்துவிடுவோம்.

முதல் பாடலை ஒவ்வொரு சீராக எடுத்து உடைத்துப் பாருங்கள்.

“பச் - சைமா   மலை - போல்    மே - னி
 (1      2)       (2     1)         (1   1)

     பவ - ளவாய்   கம - லச்   செங் - கண்
     (  2   2  )     (2    1)     ( 1   1)

அச் - சுதா   அம - ரர்     ஏ - றே!
 ( 1    2)    (2    1)     (1   1)

     ஆ – ய(ர்)தம்    கொழுந் - தே      என் - னும்
      ( 1   2 )      ( 2       1)       ( 1  1 )

இச் - சுவை    தவி - ர      யான்-போய்
( 1     2 )    ( 2    1)       ( 1   1 )

     இந் - திர   லோ - கம்     ஆ - ளும்
     ( 1   2 )    ( 1   1 )      (1    1 )

அச் - சுவை     பெறி - னும்    வேண் - டேன்!
  ( 1   2 )      ( 2      1)      (1      1)

     அரங் - கமா    நக - ரு       ளா - னே!
       (  2   2 )    ( 2   1 )     (1   1).

( சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டவை எல்லா அடிகளிலும் மாறாமல் வரும் எழுத்துகளின் எண்ணிக்கையைக் குறிப்பவை )


விருத்தம் எழுத ஆசைப்படுபவர்கள் மட்டும் மற்ற இரண்டு பாடல்களையும் வேகமாகப் பிரித்துப் பார்த்து விடுங்கள்.

உங்களுக்கு நிச்சயம் ஓர் ஆச்சரியம் காத்திருக்கும்.

இப்பொழுது இந்த மூன்று பாடல்களில் இருந்து நாம் பார்த்த அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தின் பொதுவடிவம் இப்படி இருப்பதாக வரையறுக்கலாம்.

1.   பாடலில் உள்ள எல்லாச் சொற்களுமே இரண்டாகப் பிரிக்கப்படும் தன்மை உடையவை. ( எ.கா- பச்சைமா, பச் – சைமா )
அதாவது ஈரசைகளால் ஆனவை ( ஆயர்தம் என்னும் ஓரிடம் மட்டும் விதிவிலக்கு. அதையும் நடுவில் வரும் ர் என்பதை இல்லா எழுத்தாகக் கொள்ள வேண்டும், அலகு காரியம் பெறா எழுத்து. பிறகு பார்ப்போம். நீங்கள் விருத்தத்தில் இப்படிப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நலம்.)


2.   ஒவ்வொரு அடியிலும் முதல் மூன்று சீர்களும் மடக்கி எழுதப்பட்ட அடுத்த மூன்று சீர்களும் ஒரே அளவினதாக அமைகின்றன.


3.   ஒரு அடியில் இதன் அசைகளின் அமைப்பைப் பொதுவாக இப்படி எண்ணால் குறிக்கலாம்.

( * 2 ) (* 1 ) ( 1 1) 
     ( * 2 ) (* 1 ) ( 1 1)

உடுக்குறி இட்ட இடத்தில் ஒரு எழுத்தோ இரண்டு எழுத்தோ வரலாம். ஆனால் அடுத்த எண் காட்டப்பட்ட இடத்தில் அந்த எழுத்தின் எண்ணிக்கை மாறக் கூடாது.

(மரபில் இதை விளம் மா தேமா என்று வரும் என்கிறார்கள்.)

இப்பொழுது இந்த அறுசீர் விருத்தத்தின் ஒருபாதி அடியில் (மூன்று சொற்களில்) வரும் அளவையே மறுபாதி அடியிலும் வருகிறது.
இவ்வமைப்பு நான்கு அடிகளிலும் மாறவில்லை. இதுவே இவ்விருத்தத்தின் ஓசை ஒழுங்கிற்குக் காரணமாகிறது.

இது போல நாம் இவ்வெண்களின் அமைப்பை வெவ்வேறாக மாற்றி அமைக்கும் போதும், ஒரு அடியின் முதல் பாதியில் அமையும் எண் அளவே மறுபாதிக்கும் பாடலின் மற்ற அடிகளுக்கும. அமையுமாறு பார்த்துக் கொண்டால் பல்வேறு ஓசையுள்ள அறுசீர்விருத்தங்களை நம்மால் உருவாக்க முடியும்.

இனி இந்த எண்ணிக்கையை எடுத்துக்கொண்டு ஒரு அடியை அமைத்துப் பார்த்துவிடலாம்.

( * 2 ) (* 1 ) ( 1 1) ( * 2 ) (* 1 ) ( 1 1)

அன்னையே  தமிழே உன்னை
    
    அகமெலாம் கொண்டி ருப்பேன்! 

பிரித்துப் பாருங்கள்,

அன்-னையே  ( 1    2 )
தமி-ழே       ( 2    1 )
உன்-னை      (1    1 )

அக-மெலாம்   ( 2   2 )
கொண்-டி      ( 1   1 )
ருப்-பேன்       ( 1   1 )

இதில் மாறாமல் இருக்க வேண்டிய எழுத்துகள் சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளன.
முதல் சொல்லும் நான்காம் சொல்லும் ( ன்னையே – கமெலாம்) ஒரே மோனையைப் பெற்று வந்திருக்கின்றன.

இதில் முதல் சீர் அன்னை என்பதால் இனிமேல் வரக் கூடிய மூன்று அடிகளிலும் “ன்“ எனும் எழுத்து எதுகையாய் வரவேண்டும்.

முயற்சி செய்து பாருங்கள்.

அறு சீர் விருத்தம் இவ்வளவுதானா என்கிறீர்களா……………………………..?
இது ஆரம்பம் தான். இந்த எழுத்துகளின் எண்ணிக்கையை மாற்றி அமைத்து அமைத்து ( ஆனால் முதல் மூன்று சொற்களில் நாம் செய்யும் மாற்றம் அப்படியே அறுசீரின் அடுத்த மூன்று சொற்களிலும்,இதேபோல் மாறாமல் இருப்பதோடு மற்ற அடிகளிலும் அந்த எண்ணிக்கையிலேயே இருக்க வேண்டும்.)

இதைப் போலவே சொற்களை மூன்றாக உடைத்தும், (மூவசை) எண்ணிக்கையை மாற்றியும்பெரிதும் ஓசை நயமுடைய பல அறுசீர்விருத்தங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அதை மெதுவாகப் பார்த்துவிட்டு, இன்னும் பல வடிவ சாத்தியங்களை நம்மால் உருவாக்க முடியுமா என்பதையும் முயன்று பார்ப்போம்.

இப்பொழுது, விருத்தம் எழுத விரும்பியவர்களுக்கு முதல் அடியைக் கொடுத்துவிட்டேன்.


அன்னையே  தமிழே உன்னை
    
    அகமெலாம் கொண்டி ருப்பேன்!


இன்னும் மூன்று அடிகளைச் சேர்த்து இந்த அறுசீர் விருத்தத்தை நிறைவு செய்ய உங்கள் உதவியை வேண்டுகிறேன்.

எதுகை ‘ன்‘ மட்டுமல்ல ‘ண்‘ ஆகவும் இருக்கலாம்.
இங்கு ன்னையே என்பதில் எதுகை ன் என்பதற்கு முன்புள்ள எழுத்துக் குறிலாக இருப்பதால், ன் அல்லது ண் என்பதை எதுகையாகக் கொள்ளும் போது அதற்கு முன்னுள்ள எழுத்தும் குறிலாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

முதல் மற்றும் நான்காம் சொல்லில் மோனை அமையுமாறு பாருங்கள்.
எல்லாம் இரண்டாக உடைபடக் கூடிய சொற்களாக இருக்கட்டும்.

நாம் அமைக்க வேண்டிய வடிவம் –

         ( * 2 ) (* 1 ) ( 1 1)

அவ்வளவு தான்!
   பின்னூட்டப் பெட்டி உங்களது விருத்தங்களுக்காகக் காத்திருக்கிறது.


  படம் நன்றி -http://download.cnet.com/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

86 comments:

  1. படிக்கத் தொடங்கி விட்டேன் கவிஞரே...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி நண்பரே!

      Delete
  2. வணக்கம்
    ஐயா.

    சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.. தொடருகிறேன்.. பதிவை ஒரே தடவையில் விளங்கி கொள்வது கடினம்.. மீண்டும் மீண்டும் படித்து பார்த்த பின் முயற்சி செய்து பார்க்கிறேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆம் திரு.ரூபன்!
      சற்றுக் கடினமாகத்தான் இருப்பதை நானே அறிகிறேன்.
      சுட்டியமைக்கு நன்றி!
      முயற்சி செய்கிறீர்கள் அல்லவா?
      அது போதும்!
      நன்றி

      Delete
    2. வணக்கம்
      ஐயா

      அன்னையே தமிழே உன்னை
      அகமெலாம் கொண்டி ருப்பேன்!
      முத்தான செம் மொழியை மூவுலகம்
      முன் நின்றாய் முதல் கருவாய்
      சிந்தை குளிர ஓதிய வரிகள்
      சீக்கரம்ஞானத்தில் வைத்தேன் என்னுள்
      வற்றாத அறிவுக் கடல் வையத்துள்
      வாழ்வோரை வாழவைக்கும் எம் மொழி



      நான் ஒரு வெண்பா எழுதியுளேன் சரியா பிழையா என்று....பாருங்கள் சின்ன முயற்சி..ஐயா...

      -நன்றி-
      -அன்புடன்-
      -ரூபன்-

      Delete
    3. அன்பு ரூபன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!
      அருள்கூர்ந்து வெண்பா பற்றிய யாப்புச்சூக்குமத்தின் முதற் பகுதியை பார்க்க வேண்டுகிறேன்.

      நீங்கள் விருத்தத்தை முயன்றிருக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது.
      எதுகை பற்றி யெல்லாம் கவலைப் படாமல், முதலில் மூன்று மூன்று சிறு சொற்களைப் பொருள் படும்படிச் சேர்த்தெழுதிப் பாருங்கள்.
      பின்பு அதனை உடைத்து இரண்டு அசை வருகிறதா என்று பாருங்கள்.
      பின் அதில் வரும் எழுத்துகளைக் கொண்டு மேலே சொன்ன விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளதா எனப் பாருங்கள் .
      அமைக்க முயலுங்கள்!!!
      முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்


      தங்களின் முயற்சிக்கும் பயிற்சிக்கும் வாழ்த்துகள்!
      நன்றி

      Delete
  3. படிக்கும் காலத்தில் இப்படி யாரும் சொல்லித் தரவில்லையே நண்பரே
    நன்றி
    தம 1

    ReplyDelete
    Replies
    1. எனக்கும்தான் அய்யா!
      தங்கள் வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி!

      Delete
  4. அன்னையே தமிழே உன்னை!
    அகமெலாம் கொண்டி ருப்பேன்!
    கண்ணையே மறந்த போதும்!
    கருத்திலே உன்னை வைப்பேன்!
    மண்ணிலே உன்னை போல!
    மற்றொரு செல்வம் ஏது!
    தன்னிலே உன்னை காண்பேன்!
    தங்கமே தமிழே வாழ்க!

    அண்ணா நான் பாஸா?? எது எப்படியோ எழுதியதும் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு:))))

    ReplyDelete
    Replies
    1. பாஸாவா..............?!!!!!
      100 க்கு நூறே வாங்கியாச்சு!
      இப்ப அந்த ரிதம் உங்கள் பாட்டில் ஓடுவது தெரிகிறதா சகோ?
      அதுதான்! அவ்வளவுதான்!
      நன்றி

      Delete
  5. அன்புள்ள அய்யா,

    அன்னையே தமிழே உன்னை

    அகமெலாம் கொண்டி ருப்பேன்!

    என்னையே என்றும் நீயே

    ஏற்றிடு வாயே தாயே!

    உன்னிடம் வேண்டிக் கேட்பேன்

    உதவியே செய்வாய்ச் சேய்க்குப்

    பண்ணிய பாட்டில் மெய்யாய்

    பைந்தமிழ் மரபே வாராய்!



    ஆசிரியப்பாவின் இனமான விருத்தத்தை அனைவரும் எளிதில் புரிந்து கொண்டு மரபில் எழுத தாங்கள் வலைப்பூ உறவுகளுக்குச் செய்யும் உதவி என்றும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது. தங்களின் புகழ் தமிழுலகில் என்றும் நிலைத்திருக்கும். சீர், அடி பற்றியும் விளக்கியது அருமை. இன்னும் இருக்கும் வடிவங்களை வடிக்க வழிகாட்டுங்கள்....மரபுக் கவிஞர்களை உருவாக்கியதில் தங்களுடைய பங்கு பெரிதாக இருக்கட்டும்.... தொடருங்கள்.... பின்தொடர்கிறோம்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா!
      நீங்கள் அன்பால் அதிகம் பாராட்டுகிறீர்கள்.
      இதெல்லாம் நமது பணி அல்லவா?
      இதை வாசித்து உங்களைப் போன்றவர்கள் முயற்சி செய்து வெற்றி அடைவதைவிட மகிழ்ச்சி வேறென்ன?

      உங்களது விருத்தம் அருமை!

      விரைவில் வெண்பாக்களைக் கொண்டோ விருத்தங்களைக் கொண்டோ தனியே ஒரு பதிவிடுங்கள்!

      நீங்கள் சுட்டிக்காட்டிய தவறைச் சரிசெய்துவிட்டேன்.

      நன்றி!

      Delete
  6. வணக்கம் ஐயா!

    அன்னையே தமிழே உன்னை
       அகமெலாம் கொண்டி ருப்பேன்
    இன்றுனை நானும் பாட
       என்னுளே இருப்பாய் நீயே!
    நன்றிதை ஐயா ஜோசெப்
       நயமுடன் கற்கத் தந்தார்!
    தொண்டெனச் சேவை செய்யும்
       தூயரைக் காப்பாய் தாயே!

    தங்களின் தொண்டுக்குத் தலை தாழ்ந்த வணக்கம் ஐயா!
    அன்னைத் தமிழாளுடன் செல்லும் உங்களை
    நானும் தொடர்கின்றேன்!

    வளரட்டும் உங்கள் தொண்டு! வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. சகோ,
      நீங்கள் அறியாத வடிவமா?
      என்னுடைய வேண்டுகோளை ஏற்று விருத்தத்தை முடித்துக் கொடுத்தமைக்கு நன்றி யுண்டு!
      பெயரும் நன்றியுமெல்லாம் எதற்குச் சகோ?
      தங்களின் வருகைக்கும் விருத்தத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி!!!!

      Delete
  7. தருவார் தரும்சுகம் பெறுவார்க் கில்லை
    உருகாதார் துய்க்கா விடில்

    அதோ தெரிகிறதே அன்பரே!
    இமயத்தில் இலக்கணக் கொடி பறப்பதை பாரீர்!
    பட்டொளியில் பளிச் சென்று தெரிகிறதேஉமது முகம்!
    ஜூவி ப்சஜோ)
    மரபை போற்றும்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.fr

    ReplyDelete
    Replies
    1. அய்யா இது என்ன உங்களின் குரலோ?
      இமயத்தில் இலக்கணக் கொடி பறக்கிறதா...?
      ஹ ஹ ஹா!!
      அய்யா உங்கள் புகழ்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா?
      என்னை விடப் பெரியவர்கள் உங்கள் அருகிலேயே உண்டு அய்யா!
      அக்கரைக்கு இக்கரை பச்சைதானே எப்போதும்...........................!!!!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

      Delete
  8. அன்னையே தமிழே உன்னை
    அகமெல்லாம் கொண்டி ருப்பேன்
    மண்ணையே இழந்த போதும்
    மறந்திட மாட்டேன் உன்னை
    கண்ணிமை போல்தான் உன்னை
    காப்பேனே தமிழே என்றும்
    பொன்னென எண்ணி நானும்
    போற்றியே மகிழ்வேன் வாழ்க !

    பண்ணிலே உன்னை வைத்து
    பாடியே மகிழ்ந்தி ருப்பேன்
    விண்ணவர் வாழ்த்த வென்று
    வாழ்த்துப்பா வரைந்து வைப்பேன்
    கன்னத்தில் கையை வைத்து
    கனவிலே சஞ்ச ரிப்பேன்
    மின்னுமுன் புகழை கண்டு
    மண்ணிலே சொக்கி நிற்பேன்!

    எப்புடி சரியா .................... மிக்க நன்றி சகோ ! ரொம்ப மகிழ்ச்சியாய் உள்ளது. அம்மு சொல்வது போலவே ஹா ஹா ... முதல்ல பாசா சொல்லுங்க ........... .கருத்தெல்லாம் அப்புறம் தான் போடுவேன். ok வா டீல் ok தானே ...



    ReplyDelete
    Replies
    1. அய்யோ சகோதரி அருமை இனிமை!!!!
      நீங்களோ ஓசையை உளங்கொண்டு பாடிப் போகிறீர்கள் !!
      உங்களுக்கெதற்கு இலக்கணமெல்லாம்?
      அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில் ஒன்றிற்கு இரண்டாகத் தந்து விட்டீர்கள்!
      ஓசைப்படி இது பொருந்தினாலும் பின் வரும் இடங்களில் மூன்று அசையாய் வருவதைத் தவிர்த்தால் இன்னும் பொருத்தமாய் இருக்குமோ?

      அகமெல்லாம் - அக மெல் லாம்
      காப்பேனே - காப் பே னே
      வாழ்த்துப்பா - வாழ்த் துப் பா
      கன்னத்தில் - கன் னத் தில்

      எளிதில் இதை மாற்றிவிடலாம்!

      பாஸா என்று கேட்டீர்கள் என்றால் நீங்கள் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட்டீர்கள்!!
      உண்மையில் தங்களின் மரபோட்டத்தைப் பார்த்து அதற்கும் இலக்கணம் எழுத வேண்டும்!

      வருகைக்கும் அழகிய விருத்தங்களுக்கும் நன்றி சகோ!

      Delete
  9. என்னவொரு விளக்கம்...!

    தளமும் இப்போது அழகு...!

    பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அய்யா தங்கள் பாராட்டிற்கு நன்றி!
      தளவடிவமைப்பு சகோதரி தேன்மதுரத் தமிழ்கிரேஸ் அவர்களையும் மற்ற திரட்டிகளை இணைத்தது அய்யா இ.பு.ஞானப்பிரகாசன் அவர்களையும் சேரும்.
      பிற பிற ஆலோசனைகளை விடாமல் தோழர் மதுவைத் தொல்லை செய்து பெற்று வருகிறேன். இவர்கள் என் நன்றிக்குரியோர்.
      நல்ல வேளை என்னிடம் உங்கள் தொலைபேசி எண் கிடைக்கவில்லை.
      கிடைத்திருந்தால் இவனை எல்லாம் யார் வலைப்பூவை அமைக்கச்சொன்னது என்று வருத்தப்படும் அளவிற்குத்தொல்லை செய்திருப்பேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  10. வணக்கம் கவிஞரே,,, மூன்று முறை படித்து விட்டேன் புரியாமல் அல்ல நான் புரிந்து கொள்வதற்காக.. காரணம் எனது லட்சணம் இப்படித்தான்... அதனால்தான் கருத்துரை இடுவதற்க்கு டூ லேட் இதற்காகவே த.ம.5
    நம்ம வூட்டாண்டே காணோமே...

    ReplyDelete
    Replies
    1. அதுசரி நடை மீண்டும் கடினமாகிவிட்டது என்பதைச் சொல்லாமல் சொல்கிறீர்கள் கில்லர்ஜி!!
      கண்டிப்பாய் இது போல் சொன்னால்தானே நானும் என்னைத்திருத்திக்கொள்ள முடியும்!!
      வூட்டாண்ட வந்தேன்!
      கருத்திட்டேன் நன்றி நண்பரே!!

      Delete
  11. பள்ளிக் காலத்தில் இவ்வாறான பாடங்களில் கவனம் செலுத்தியிருந்தால்....என்ற ஓர் எண்ணமும் அதைத் தொடர்ந்து ஏக்கமும் என் மனதில் எழுந்தது.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

      Delete
  12. மன்னிக்க வேண்டும்! நான் இன்னும் முதல் இரு பகுதிகளையே படிக்கவில்லை ஐயா! நீங்கள் எழுதி முடியுங்கள்! மொத்தமாகச் சேர்த்து வைத்துப் படிக்கிறேன். அப்பொழுதுதான் மண்டையில் ஏறும்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      பொறுமையாக நேரம் இருக்கும் போது படியுங்கள் அவசரமில்லை.
      குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

      Delete
  13. அய்யா,
    மன்னிக்க வேண்டும். நீங்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி நேரடியாகப் பதிவாகி விடுகின்றன.

    ReplyDelete
  14. உங்களின் இந்த உயர்ந்த பணிக்குத் தலை வணங்குகிறேன் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  15. இப்பணி தொடர வேண்டும்
    இலக்கணம் அறிய தூண்டும்
    ஒப்பிட இல்லை ஒன்றே
    உண்மையாம் சொல்ல நன்றே
    செப்பிடும் முறையும் அருமை
    செந்தமிழ் மொழிக்கே பெருமை
    தப்பிலை நாளும் தருவீர்
    தன்நிகர் இன்றி வருவீர்

    ReplyDelete
    Replies
    1. மூப்பிலும் இளமை யோடு
         மூப்பிலா மொழியைப் பேணிக்
      காப்பதும் மரபைப் பாடிக்
         களிப்பதும் தொண்டே அல்லோ?
      சீப்படும் நாடும் பேசும்
         செந்தமிழ் மொழியும் மூச்சாய்
      தீப்பட அவலம் சாகத்
         தருமுங்கள் கவிதை வாழ்க!!
      தாங்கள் என் தளம் வந்ததும் கருத்திட்டதும் கண்டு மிக்க மகிழ்ச்சி அய்யா!
      நன்றி!!!

      Delete
  16. ஆசானே! மிக அருமையாக எளிதாக விளக்கி உள்ளீர்கள். எங்களுக்கும் தமிழ் ஆசிரியர்கள் நன்றாகச் சொல்லிக் கொடுத்தார்கள்தான். இருந்தாலும் இப்படி எளிதாகப் புரியும் வகையில் அல்ல. மிக்க நன்றி ஆசானே! அப்போது படித்தவற்றை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்கின்றோம். இப்போது மிகவும் நன்றாகப் புரிகின்றது.

    எங்கள் முயற்சியை இங்கு தருகின்றோம். .நீங்கள் சரி செய்து எழுதியதை இங்கு கொடுத்துவிடலாமே ஆசானே!

    அன்னையே தமிழே உன்னை
    அகமெலாம் கொண்டி ருந்தேன்
    எண்ணமதில் நிறைந்தே வந்து
    எளிதாய் உன்னைப் பாட
    உன்பாதம் போற்றிப் பணிந்தோம்
    குருவின் அருளைப் பெறவே

    ReplyDelete
    Replies
    1. ஆசானே,
      உங்கள் வருகையும் மரபுப் பாடலும் காணும் போது மகிழ்ச்சி கூத்தாடுகிறது.
      அவ்வளவுதான் .
      மூன்று வரிகளாய் இருப்பதை நான்கு வரிகளாக்கி சில சொற்களின் ஒன்றிரண்டை மாற்றிவிட்டால் போதும் அருமையான விருத்தம் கிடைத்துவிடுமே....!

      முயல்கிறீர்கள் அல்லவா ஆசானே!

      மரபைக் கவிதையில் முதலடி எடுத்து வைத்துவிட்டீர்கள்!
      சிகரம் தொட அதிகத் தொலைவில்லை!!!

      வாழ்த்துகள்!

      நன்றி!!!

      Delete
  17. இந்த காலத்தில் ஆங்கில சிந்தடிக் ,எல்லோருக்கும் புரிகிறது ...தமிழ் 'சிந்தடி 'யை உங்களின் பதிவு மூலம் தெரிந்து கொண்டேன் :)
    தொடரட்டும் உங்கள் அருமை தமிழ்ப் பணி!
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா !!!! பின்னூட்டத்திலும் காமடி காக்டெய்ல்!
      நன்றி பகவானே!!!

      Delete
  18. கட்டுரைக்கும் புதிய வடிவமைப்பிற்கும் பாராட்டுகள்.
    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. கட்டுரைக்கான பாராட்டிற்கு நன்றி அய்யா!
      வடிவமைப்பு தோழர் மது, சகோ.கிரேஸ் மற்றும் ஞானப்பிரகாசன் அய்யா இவர்களுக்கே உரியது!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!!!!

      Delete

  19. வணக்கம்!

    அன்னையே! தமிழே! உன்னை
       அகமெலாம் கொண்டி ருப்பேன்!
    முன்னையே தோன்றிக் காத்த
       முதுமொழிக் கம்பன் போன்றே
    என்னையே ஈவேன்! இன்பம்
       இசைத்திடும் பாக்கள் நெய்வேன்!
    பொன்னையே நிகா்த்த வண்ணம்
       புலமையைத் தருவாய் நன்றே!

    அன்னையே! தமிழே! உன்னை
       அகமெலாம் கொண்டி ருப்பேன்!
    தென்னையே! தேனே என்று
       தீஞ்சுவைப் பாட்டி சைப்பேன்!
    தன்னையே தந்து காக்கும்
       தாய்..புகழ் கேட்டி னிப்பேன்!
    பின்னையே என்போல் பாடப்
       பேரணி திரள வைப்பேன்!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      ஏதோ ஒரு அடியைக் கொடுக்க வேண்டுமே என்று கொடுத்ததுதுான் அந்த அடிகள்.
      தங்களைப் போன்றோர் வந்து நிறைவு செய்வீர்கள் என்றால் வகையுளி தவிர்த்து இன்னும் கவனத்தோடு தந்திருப்பேன்.
      உங்களின் எழுத்தைக் காண எனக்கும் முயற்சி செய்யத் தோன்றுகிறது,

      அன்னையே தமிழே உன்னை
         அகமெலாம் கொண்டி ருப்பேன்!
      மின்னலும் நீயோ? அல்ல!
         முழுமைநீ! நிலைத்தி ருப்பாய்!
      கன்னலும் தேனும் பாலும்
         கதலியும் அமுதின் சாறும்
      முன்னிலே நிற்கும் உன்றன்
         முறுவலுக் கீடாய் ஆமோ?


      அன்னையே தமிழே உன்னை
         அகமெலாம் கொண்டி ருப்பேன்!
      தொன்னைநான் உன்னை என்றும்
         தேக்குவேன்! தீர்க்க மாட்டேன்!
      சின்னவன் முடவன் கீழே,
         சிகரமே உன்னைப் பார்த்து
      என்னைநான் நோவேன்! உன்னில்
         ஏறிடல் எந்த நாளோ?

      அன்னையே தமிழே உன்னை
         அகமெலாம் கொண்டி ருப்பேன்!
      வென்றதும் உன்னால் வீரம்
         விளைந்ததும் உன்னால் அன்றோ?
      கன்றுநான் தாய்நீ ஆவாய்!
         கவிபல தருவாய்! உன்னில்
      ஒன்றுவேன் கருணை காட்டு!
         உனையலால் ஓய மாட்டேன்!!!

      அய்யா,
      “பச்சைமா மலைபோல் மேனி“ பாடலில், “ஆயர்தம் கொழுந்தே“ எனும் சீர்களில் “ஆயர்தம்“ என்பதில் ரகர ஒற்று அலகுகாரியம் பெறாமல் இருப்பதற்கு இலக்கண விளக்கம் அளித்தால் அனைவர்க்கும் பயனுடையதாய் இருக்கும்.
      விளக்க வேண்டுகிறேன்.

      நன்றி!!!

      Delete

    2. ஐயா வணக்கம்!

      விளம் வரும் இடங்களில் காய்ச்சீர் வரும். இதன் இலக்கணத்தை விருத்தப்பாவியல் ஒழிபியலில் காணலாம்.

      விளமது வருமென விதித்த வீட்டினில்
      விளமது கொண்டிலாக் காயும் வேண்டுவார்
      விளமது நீண்டது காயின் மேவலும்
      உளதென வோர்கவொண் டொடிக்கைத் தையலே!
      விருத்தப்பாவியல் பக்கம் 74

      கருவிளம் வரவேண்டுமிடத்தில் புளிமாங்காய் வரும். கூவிளம் வரவேண்டுமிடத்தில் தேமாங்காய் வரும். இவை ஒற்று நீங்க எண்ணப்படும் எழுத்தெண்ணிக்கையில் ஒத்த சீா்களாதலின் இவ்வமைதியைச் சான்றோர் ஏற்றனா். இதனைத் தொல்காப்பியனாரும்

      வெண்சீா் ஈற்றசை நிரையசை இயற்றே
      தொல்.செய் 29
      என்ற நுாற்பாவால் விளக்கியுள்ளார்.

      விளம்வரும் இடத்தில் காய்வரும் என்றதால், அகவல் பாவில் கருவிளம், கூவிளத்தைச் சிலா் வைத்தெழுதுவார். "விளமது கொண்டிலாக் காயும்" என்பதை உணரவேண்டும். அகவலில் தேமாங்காய் புளிமாங்காய் வரலாம். தேமாங்காய் வருதலே சிறப்பு.

      கூவிளம் பலவெனக் குறித்த எல்லையில்
      மேவருங் காய்த்தொடா் நேரும் வேண்டுவார்.
               விருத்தபாவியல் பக்கம் 76

      காய் வரும் இடத்தில் விளம் வருதலும் உண்டு. கருவிளமும் கருவிளாமும் வருதல் சிறப்பாகும். கூவிளம் வருதல் சிறப்பன்று.

      சில இடங்களில் ஒற்றுகள் அலகிடப் படாமையைக் குறித்து.

      வண்ணப் பாடல்களில் சில இடங்களில் சீரின் இடையிலும் ஈற்றிலும் வரும் இடையின மெல்லின மெய்கள் அலகிடப்படுவதில்லை.

      மக்கள்மனம் மாறியுளர் வானமனம் வந்தன்றித்
      தக்கநலம் வாய்க்குமோ தான்

      வெண்பாவில் பாடல்களில் கனி வருவதில்லை. இக்குறள் வெண்பாவில் "மக்கள்மனம்" என்ற சீரில் உள்ள "ள்" அலகிடப் படாமல் காய்ச்சீராய்ச் கொள்வர். "கன்னல்மொழி" "புலவர்பலர்" போன்ற சொற்களில் உள்ள "ல்" "ர்" அலகிடப்படமால் காய்ச்சீராய் வெண்பாவில் வரும்.

      வெண்பா, கட்டளைக்கலித்துறை, விருத்தம், கட்டளைக்கலிப்பா முதலியவற்றிலே சீா் சிதையுழி, இருகுறிற்கு நடுநின்ற ஒற்றெழுத்து அவ்விருகுறிலும் இணைந்து நிரையசையாதல் வேண்டி நீக்கப்படுதலுமுண்டு. இசைகெடும்வழி ஒற்று வருவித்துச் சோ்க்கப்படுதலுமுண்டு.

      எண்டிசையும் மன்னும் எழில்வா ளிளங்கதிரோன்
      கொண்டல் பொழிலேழ் குலவரையோ - டண்டர்பதி
      முட்டப் பரந்ததே வின்னா ணொலிமுற்றும்
      வட்டத் திகரிசூழ் மண்
               பாரதவெண்பா

      இவ்வெண்பாவில் அண்டா்பதி என்ற சீரில் "ர்" ஓற்று நீக்கி அலகிடப்பட்டு காய்ச்சீராய்க் கொள்ளப்படும்.

      நல்லுறுப் பமையுநம் பியரின்முன் பவனயந்

      உன்ற கலிவிருத்த அடியில் "பியரின்முன்" என்ற சீரில் உள்ள "ன்" அலகிடப்படாமல் கருவிளமாகக் கொள்ளப்படும்.

      இசைநிறைக்கும் பொருட்டு ஒற்றுத் தோன்றி நிற்றலும் உண்டு

      அம்பென ரைந்(து) உடைய்ய காமன்
         ஐய்ய னென்ன வந்தணன்
      நம்பு நீர ரல்லர் நன்கு
         ரங்கு நீர ராயினும்
      தங்கு ரவ்வர் தாங்கொ டுப்பி
         னெஞ்சு நொந்து தாழ்வர்தாம்
      பொங்க ரவ்வ வல்கு லாரெ
         னப்பு கன்று சொல்லினான்
               சீவகசிந்தாமணி
      இவ்விருத்தத்தில் உடைய்ய, ஐய்யன், குரவ்வர், அரவ்வ, என்பவைகளிலே ஒற்றுக்கள் இசை நிறைத்தற்பொருட்டு வருவிக்கப்பட்டன. உடைய, ஐயன், குரவர், அரவ என்று நிற்றலே இயற்கை.

      இக்கருத்தை விருத்தப்பாவியல் நுாலில் ஒழிபியல் 5 ஆம் நுாற்பாவில் காணலாம்.

      வறியா ரெனவல் லொலியோங் கலிலாக்
      குறியே யெறியப் படுகொள் கையதே
      நெறிவேண் டுழியே நிலையா மதுவே
      வறியா ரொருகால் வகையா குவபோல்
               
      கவிஞா் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    3. அய்யா வணக்கம்!
      தனிப்பதிவிடும் அளவிற்கான யாப்பின் நுணுக்கமான செய்திகளையும், புறனடையாய் வரும் இலக்கண மரபின் வேரோட்டங்களையும் வெளிக்கொணர்ந்திருக்கிறது உங்களின் பின்னூட்டம். நிச்சயமாய் இதை எதிப்பார்த்தே தங்களிடம் தெளிவு படுத்த வேண்டினேன். மரபில் அடுத்த கட்டத்திற்கு நகர விரும்பும் யாவர்க்கும் தங்களின் இந்த விளக்கம் பயனுள்ளதாய் அமையும்.
      உரைகளில் “ வல்லார் வாய்க் கேட்டறிக “ என்று சொல்லப்பட்டது இது போன்றவற்றைத் தான்.
      வெண்பாவில் இது போல ஒற்று அலகு காரியம் பெறாமல் வந்துள்ள ஆறேழு இடங்களை நான் அறிவேன்.
      அவற்றிற்கான அமைதியை முன்னோர் மொழியிலிருந்து இலக்கியச் சான்றுகளின் வழி அறிந்திருக்கிறேனே ஒழிய இலக்கண அமைதியை அறிந்ததில்லை.
      விருத்தப்பாவியல் பிற்கால நூலாதலால் அதன் விளக்கங்கள் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் கூறும் பான்மையதாதலான் பொருட்படுத்தத் தவறினேன். அன்றியும் இன்றிதை முன்னுதாரணமாகக் கொண்டேற்போரும் இலை. பழம்மரபில் ஆங்காங்கு காட்டப்படுவனவற்றை தவிர்ப்போரும் இலை.
      ஆயின் நீங்கள் காட்டிய தொல்காப்பிய நூற்பா அதிமுக்கியத்துவம் வாய்ந்தது.
      என்னையும் ஒரு பொருட்டாய்க் கொண்டு விளக்கம் அளித்தமைக்கு நன்றி .
      இது போன்ற இன்னும் பல செய்திகளை யாவரும் அறியத் தர வேண்டுகிறேன் அய்யா!

      நன்றி

      Delete
    4. அய்யா,

      வணக்கம். இந்த மெய் அலகுகாரியமாக வராமை குறித்தச் சிக்கல் பேரறிவாளர் ஒருவரின் ஆய்வேட்டில், பிழைபட உள்ள வெண்பா என்றும் மெய்யை நீக்கிய வடிவம் சரியானதென்றும் இருந்ததை நோக்க என்னுள்ளத்தில் எழுந்தது. அன்று அது பிழையில்லை என்றும் பாடபேதத் தவறன்று என்றும் நான் துணிந்தது முன்னோர் ஆட்சி கருதியே!

      நானறிந்தவரை, மரபிலக்கணத்தில் அதற்கான சாத்தியங்கள் கிடைக்க வில்லை. அண்மைக் காலத்தில் எழுந்த நூல்களைக் கொண்டு சான்றோர் செய்யுட்களை அளக்கலாகா என்பதால் விருத்தப்பாவியல் பக்கமாய் நான் போகவில்லை. இலக்கியங்களில் இருந்து அமைதி கூறிச் செல்லும் பிற்கால இலக்கண நூலது என்பதும் ஒரு காரணம். இலக்கிய ஆட்சியை நாம் அறிவோமே!!‘!

      ஆனால் நீங்கள் காட்டிய

      //கருவிளம் வரவேண்டுமிடத்தில் புளிமாங்காய் வரும். கூவிளம் வரவேண்டுமிடத்தில் தேமாங்காய் வரும். இவை ஒற்று நீங்க எண்ணப்படும் எழுத்தெண்ணிக்கையில் ஒத்த சீா்களாதலின் இவ்வமைதியைச் சான்றோர் ஏற்றனா். இதனைத் தொல்காப்பியனாரும்

      “வெண்சீா் ஈற்றசை நிரையசை இயற்றே“

      தொல்.செய் 29
      என்ற நுாற்பாவால் விளக்கியுள்ளார்.//

      என்னும் சான்றில் நான் அதிசயித்தேன்.
      இப்படி ஒரு பொருள் இருக்க முடியுமா?
      தொல்காப்பியர் சொல்லி இருக்கிறாரா?
      இன்னொரு புறம், இந்தச் சூத்திரம் மரபு உரையாசிரியர்களிடையே வேறுபட்ட கருத்துடையது. இளம்பூரணர் ஒருபுறமும் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் சேர்ந்து இன்னொரு புறமும் இருந்து கொண்டு மோதிச் செய்யும் விவாதங்கள் சுவாரசியமானவை.

      அவற்றிலெங்கும் நீங்கள் கூறும் இந்தக் கருத்து வருவதாகத் தெரியவில்லை. எழுத்தெண்ணிக்கை என்னும் போது நீங்கள் கட்டளை அடிகள் பற்றிப் பேசுவதாக நினைக்கிறேன். அவற்றில் மெய்பற்றிய சிக்கல் இல்லை. அவை முற்றிலும் அங்கு தவிர்க்கவே படும்.

      முதலில் இந்த நூற்பாவுக்கான இளம்பூரணர் உரையில் அவர் இவ்வாறு கூறுகிறார்,

      “ இதுவுந் தளைவழங்குந் திறன் உணர்த்துதல் நுதலிற்று. வெண்சீரீற்றசை தளைவழங்குமிடத்து இயற்சீரசை நிரையீறு போலும் என்றவாறு. இயற்சீரென்பது அதிகாரத்தான் வந்தது “

      தொல்காப்பியச் செய்யுளியலுக்கு உரைவளம் தொகுத்து ஆய்வுரை எழுதிய வெள்ளைவாரணர், இளம்பூரணர் உரைக்கான அடிக்குறிப்பில்,

      “ ‘ வெண்சீர் – வெண்பா உரிச்சீர், அதன் ஈற்றசையாவது நேரசை. அது தளை வழங்குமிடத்து இயற்சீரைசை நிரையீறு போலும் ‘ என உரைத்த இளம்பூரணர் அதற்கு உதாரணங்காட்டி விளக்கந் தரவில்லை. எனவே இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் கொண்ட பொருள் இதுவெனத் தெரிந்து கொள்ள இயலவில்லை“என்கிறார்.

      அவர்தம் ஆய்வுரையும் இந்நூற்பாவின் உரைமுரண்களை ஆய்ந்து, ‘இருவர் மாறுகொள் ஒருதலைத் துணிதலாய்‘ இல்லை.

      இது ஒரு புறமிருக்க, முன்னும் பின்னும் வெண்பா உரிச்சீர்களை விளக்கும் நூற்பாக்களுக்கு இடையில் நிற்கும் இந்நூற்பாவை வெண்சீரைக் கொண்டு கலித்தளையை அமைப்பதற்கு அமைதி கூறுவதாய்ப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் சொல்கின்றனர்.
      ஒரு வரியை விளக்க ஏறக்குறைய எட்டுபக்கங்களுக்குத் தடைவிடைகளுடன் விளக்கும் அவர்களின் உரைத்திறனிலிருந்து, நான் புரிந்து கொண்ட சாரம் இதுதான்.

      1) வெண்சீர்கள் ( காய்ச்சீர்கள் நான்கும் ), நிலைமொழியாய் வர அடுத்த சொல் நிரையசையில் தொடங்குதல் கலித்தளை.

      2) ஒரு பாடலில் ஏனைய மூன்று சீர்கள் இவ்வாறு காய் முன் நிரையென வந்து, மூன்றாம் சீரின் அடுத்து வரும் சொல் நேரசையில் வந்தால் அதனையும் நிரையசைபோலக் கொண்டு கலித்தளையாய்க் கொள்ள வேண்டும். அதாவது ஈற்று நின்ற சீரின் முதல்வந்த நேரசை அவ்வடியின் பிற இடங்களில் சீரின் முதலில் வரும் நிரையசை போலவே கொள்ளப்படவேண்டும்.

      தொடர்கிறது......

      Delete
    5. சான்றாக,

      “ அடிதாங்கு மளவின்றி அழலன்ன வெம்மையால் “

      இங்கு யாண்டும் காய்ச்சீரின் பின் நிரையசைவர ஈற்றுச்சீர் மட்டும் முரணி, “வெம்மையாய்“ என்று நேராய் தொடங்கினும் பெரும்பான்மை நோக்கி நிரையசையாக் கொண்டு அது கலித்தளையாய் அமைவதைச் செவிகருவியாக உணர்க என்கின்றனர் இருவரும்.

      பேராசிரியர் மற்றும் நச்சரின் உரையை ஏற்க முடியாததற்குப் பல காரணங்கள் உண்டு.அவை உரைப்பிற் பெருகும்.

      முதல் காரணம் இளம்பூரணரின் கருத்தை வெள்ளை வாரணர் அவர்களைப் போலவே இவர்களும் புரிந்து கொள்ளவில்லை.

      இளம்பூரணரின் கருத்தாய் நான் புரிந்து கொண்டது இதுதான்,

      வெண்பாவிற்கு உரிய காய்ச்சீர் வருமிடத்தில், அதனை இயற்சீரின் நிரையீறு போலக் கொள்ள வேண்டும்.

      இயற்சீரில் நிரையீறாய் வருவன விளச்சீர்கள்.

      வெண்பாவில், விளச்சீர்கள் நிலைமொழியாய் வரின் அதன் வருமொழி நேரசையில் தொடங்குதல் இலக்கணம்.

      காய்ச்சீர் வரும் இடத்தை நிரையீறு போலக் கொள்வதால் காய்ச்சீரை அடுத்து வரும் சொல் நேர் அசையில் தொடங்க வேண்டும். ( விளம்முன் நேர். காய் என்பதை இயற்சீரின் நிரையீறு போல் கொள்ள, காய் முன் நேர்)

      இன்னும் இக்கருத்தை வலுப்படுத்தும் அகச்சான்றுகள் உள அய்யா.
      எனினும், புலவர் பெருமக்கள் இதை எடுத்துரைக்காததன் காரணம் விளங்கவில்லை.

      நான் இங்கு இவ்வுரைகளை மேற்கோள் காட்டுவது, “ மெய்யை அலகுகாரியமாகக் கொள்ளத் தவிர்ப்பு வழங்கும் இலக்கணம் இந்நூற்பாவில் இல்லை என்பதற்காகத் தான்!

      என் புரிதல் சரியா என்பது பற்றியும், இந்நூற்பாவை உரைகளில்லாமல் தனித்தாய்ந்த போதும் எனக்கு இந்நூற்பா, ஒற்றை அலகிட வேண்டாமை குறித்து விளக்குவதாகப் படாமையான் இது குறித்த மேலதிகச் செய்திகளைத் தங்களிடம் வேண்டியும் நிறைகிறேன்.

      நன்றி.

      Delete

    6. இலக்கணச்செல்வா் அவா்களுக்கு வணக்கம்!

      தங்கள் எழுதியுள்ள கருத்துக்கள் மேலும் தொல்காப்பியத்தைக் கற்க வேண்டும் என்ற பேராவலைத் துாண்டுகின்றன. மிக்க நன்றி.

      கவிதைக் கலையைக் கற்கும் பொழுது, விளம் வரும் இடத்தில் காய் வரும் என்றும், காய் வரும் இடத்தில் விளம் வரும் என்றும் என் ஆசிரியப்பெருமக்கள் உரைத்தனா்.

      எந்தை கவிஞா் தே. சனார்த்தனார் இடத்தில் அப்போது இதைக் குறித்துக் கேட்டேன். முன்னோர் இடத்தில் இவைபோன்று உள்ளன. ஆனால் இப்போது விளம் வருமிடத்தில் காயும், காய் வரும் இடத்தில் விளமும் எழுதுதல் சிறப்பன்று என்றும், கருத்தின் சிறப்பால் எங்கோ ஓரிடத்தில் வரலாம் என்றும், எப்படிப் பட்ட சீா்கள் வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் விளக்கம் அளித்தார்.

      பிறகு ஒருநாள் நுாற்கடல் தி.வை.கோபாலையர் இடத்தில் இதைக் குறித்துக் கேட்டேன். அவா்தான் “வெண்சீா் ஈற்றசை நிரையசை இயற்றே“ தொல்.செய் 29 என்பதைச் சொல்லி விளக்கம் அளித்தார்.

      இவ்விளக்கம் யாவும் விளம்+மா+தேமா என்ற வாய்ப்பாட்டில் அமைந்த பச்சைமா மலைபோல் மேனி என்ற பாட்டில் வந்த "ஆயா்தம்" என்ற காய்ச்சீா் வந்ததைக் குறித்தவை. ஒற்று இன்றியும் காய்ச்சீா் வரலாம்.

      பாராளும் தமிழே! உன்னை
         பாடிட வரங்கள் வேண்டும்!

      விளம் வரவேண்டிய இடத்தில் பாராளும் என்ற காய்ச்சீா் வரலாம். ஆயா்தம் என்ற காய்சீரும் அப்படியே. ஒற்று அலகுபெறுகிறதா? பெறவில்லையா என்ற பேச்சுக்கு இங்கு இடம் இல்லை.

      இனி, வெண்டளையால் இயற்றப்படும் பாக்களில் "கன்னல்மொழி", "புலவா்பலர்" கனிச்சீரும் "போதா்கின்றேன்" எனும் தேமாந்தண்பூச்சீரும் ஒற்று அலகிடாமால் காய்ச்சீராய் முன்னோர் கொண்டதேன்?

      சிலப்பதிகாரம்
      வளவன்மகன், கணவன்வர

      திருப்பாவை
      பட்டா்பிரான், போதா்கின்றேன்

      நளவெண்பா
      தங்கள்கிளை, தாளின்மறு, பண்ணின்மொழி

      ஓளவையார்
      ஈட்டல்பொருள்

      காளமேகம்
      தொண்டன்மகன், சோழன்மகன், சண்டன்மகன்

      பாரதியார்
      வேடர்களும், பாரின்மிசை, கூனர்தமை, முடியும்வரை, மாந்தா்நிகா், முதுகின்மிசை, தேனில்விழும், காதல்கொள்வான்,

      பாவேந்தர்
      பெண்டிர்களை, புத்ரர்களை, மாந்தர்களை

      இவற்றின் இடையில் வரும் ன், ர், ல், ள், ம், முதலிய ஒற்றுகளை நீக்கி அலகிட்டுள்ளனர்.

      மாந்தர்களை - தேமாங்கனி.
      ஒற்றை நீக்கி அலகிட்டால் மாந்தகளை - கூவிளம்காய்

      ய,ர.ழ ஒற்றுக்கள் உயிர்த்தம்மை உடையன ஆதலின், இவை இடைப்படும் போது செப்பலோசை பொரிதும் சிதைவதில்லை.

      பண்ணின்மொழி, தொண்டன்மகன், சோழன்மகன், சண்டன்மகன், பாரின்மிசை, ஆகிய சொற்களில் னகர ஒற்று வருவதும், முடியும்வரை என்ற சொல்லில் மகர ஒற்று வருவதும் ஆய்வுக்குரியன.

      தங்கள்கிளை, காதல்கொள்வான், ள், ல், தொடா்ந்து வல்லினம் வருவதால், தங்கட்கிளை, காதற்கொண்டான் என்று புணரும். இவ்விடங்களும் ஆய்வுக்குரியன.

      ஆடுங் கடைமணி யைவே லசதி யணிவரைமேல்
      நீடுங் கயற்கண்ணி யார்மாய மோநெடுந் துாரத்திலே
      கோடுங் குளமுங் குளக்கரை மேவிய குன்றுகளுங்
      காடுஞ் செடியும் அவளாகத் தோன்றுமென் கண்களுக்கே.
      - அசதிக்கோவை
      கடையொருசீரே விளங்காயாகி என்ற கட்டளைக் கலித்துறை விதியிருக்கத் "துாரத்திலே" என்ற கனிச்சீரில் "த்" அலகிடப்படாமல் விளச்சீராய்க் கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடமும் ஆய்வுக்குரியது.

      இதற்கான இலக்கண விளக்கத்தை எந்த நுாலிலும் நான் அறியவில்லை. ஆசிரியா்களின் வாய்வழியாகவே அறிந்துள்ளேன்.

      திருக்குறள், நாலடியார், முத்தொள்ளாயிரம் முதலாகிய நுால்களில் இவ்வகையான சீா்கள் வரவில்லை.

      "வெள்ளையுட் பிற தளை விரவா" என்பது பெரும்பான்மை குறித்து வந்ததென எண்ணுகிறேன்.

      கவிஞா் கி. பாரதிதாசன்
      தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

      Delete
    7. அய்யா வணக்கம்.
      நீங்கள் என்னை இலக்கணச் செல்வன் என்பதற்குரிய தகுதியொன்றும் எனக்கில்லை. ஒரு அடிப்படை அறிவுமட்டும் கொண்டு மரபிலக்கணத்தில் நுழைந்து பார்க்கும் அசாத்திய துணிச்சல் மட்டுமே கொண்டவன் நான். பல நேரங்களில் எனை இறுக்கி மூடும் அதனிருண்மையில் எதனோடேனும் உரசி சிறு பொறி கிளம்பி இருள்விலக்காதா என்று பார்த்த காலங்கள் உண்டு.
      குருவின் அண்மையும் பாடம் கேட்டலும் இத்தருணங்களில் நந்தா விளக்குத் தான்! அது உங்களுக்கு வாய்த்திருக்கிறது.
      உங்கள் மூலமாக நாங்களும் பயனடைகிறோம்.
      பல நேரங்களில் இதனால் குருடன் கண்ட யானையெனவே பொருளை விளங்கிக் கொண்டிருக்கிறேன். பிறகு சரியான விளக்கம் கிடைக்கும் போது இப்படி இதனை இவ்வளவு நாள் புரிந்து வைத்திருந்தோமே என்று சிரிப்புத் தோன்றும்! இலக்கணம் என்றல்ல வேறு பல இலக்கியங்களின் வாசிப்பிலும் இந்நிலை எனக்கு நேர்ந்ததுண்டு.
      நான் தொல்காப்பியத்தை முழுமையாய் வாசித்தவனில்லை.
      வாசித்தால் விளங்கிக் கொள்ள முடியும் அந்த அளவு அறிவே எனக்கிருக்கிறது. தி.வே. கோபாலையர் யாது குறித்து இங்ஙனம் கூறினார் என்று அறியேன். ஆயினும் “வெண்சீர் ஈற்றசை நிரையசை யியற்றே“ என்னுந் தொல்காப்பிய நூற்பா, நேர்ப்பொருளானோ, விதப்பானோ , உரைக்கூற்றானோ, ஒற்றினை அலகுகாரியமாகக் கொள்ளாமையைக் குறித்துவரவில்லை என்பதை உறுதியாகக் கூற முடியும்.
      முன்னோரின் இலக்கிய ஆட்சிகள், தாங்கள் காட்டிய அளவுக்கு இத்துணை தெரியேனேனும் ஒரு சில அறிந்திருந்தேன்.
      முன்னோர் ஆட்சிக்கு மரபிலக்கணத் தொன்னூல்களில் இலக்கண அமைதி எங்கேனும் இருக்கிறதா என்பதையே தேடினேன்.தேடுகிறேன்.
      தாங்கள் கற்பித்த ஓசையிலும் இந்த ஒற்று நழுவி விளச்சீராய் அமைவதை உணர்கிறேன்.
      தங்களின் மீள் வருகைக்கும் நெறிப்படுத்தலுக்கும், இலக்கண இலக்கியச் சான்றுகளுக்கும் என்றும் நன்றியுடையேன்.
      நன்றி

      Delete
  20. மிகச்சிறப்பான விளக்கம்! வெண்பா விளக்கம் படித்தும் இன்னும் எழுத பழக முடியவில்லை! இதையும் முயன்று பார்க்கிறேன்! தளத்தின் புதிய வடிவமைப்பு அழகு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்!
      தங்களுக்கு நேரம் வாய்க்கும் போது எழுதிப் பாருங்கள் அய்யா!
      நன்றி

      Delete
  21. எனது அறிவு மட்டத்திற்கு வெணபா.. அடி,சீர் என்பதெல்லாம் புரியாது.நண்பரே!! ஆனாலும் நானும் பல கவிதைகள் எழுதியதுண்டு.. அது கவிதையா???? என்பதை தாங்கள்தான் கண்டு சொல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் நிச்சயமாய் சமுதாயத அவலங்களைச் சவுக்கெடுத்து விளாசும் கவிதைகளாய்த்தானே இருக்கும் வலிப்போக்கரே!
      அதற்கெல்லாம் மா விளம் பார்க்க வேண்டியதில்லை.
      புறமுதுகிட்டு ஓடச் செய்வதாய் இருந்தால போதும்!
      தங்கள் தளத்தில் உள்ளனவா?
      கண்டிப்பாய்ப் பார்க்கிறேன்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  22. அன்னையே தமிழே உன்னை
    அகமெலாம் கொண்டி ருப்பேன்!
    அண்டையும் அயலும் எங்கும்
    அகிலென பரவச் செய்வேன்!
    அன்பிலே உலகை வெல்ல
    அகத்தினில் ஆசை கொண்டேன்!
    அன்னையே உதவி செய்வாய்
    அவையெலாம் உடனி ருப்பாய்!

    சரியா அண்ணா? :)

    ReplyDelete
    Replies
    1. அம்புட்டுதான்!!!

      சரி எனக்கு மட்டும் சொல்லுங்கள்..!
      முன்பே மரபில் எழுதுவீர்கள் தானே..?
      அதுவும் இந்த அறுசீர்விருத்தம் எழுதிப் பார்த்திருக்கிறீர்கள் தானே...?
      ஆனாலும் இந்த விருத்தம் அருமை அருமை!!
      சத்தமாகப் படித்துப் பார்த்தேன்!
      என்னமாய் ஓசையுடன் வருகிறது தமிழ்!!!

      தொடருங்கள் சகோ!!

      நன்றி

      Delete
    2. இலக்கணம் கொஞ்சம் நினைவில் இருக்கிறது அண்ணா..முன்பு முயற்சி செய்திருக்கிறேன்..சொற்களைப் பிரித்துப் போடும்பொழுது அனைவர்க்கும் புரியாது என்பதாலும் எதுகை மோனைக்காகப் பொதுவாக வழங்கப்படும் சொற்களை விட்டு கடினமானவற்றைப் போட வேண்டியிருந்ததாலும் அதிகம் எழுதவில்லை. அப்படியே தொடர்பற்றுப் போய்விட்டது..உங்கள் பதிவுகளைப் பார்த்ததும் ஆர்வம் அதிகமாகிவிட்டது..மரபிலும் எளிமையாக எழுதலாம் என்பதைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். நன்றி அண்ணா.

      Delete
  23. சகோதரரே...

    எனக்கு எட்டாத ஒன்று கணிதம் என்பதை பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்... இரண்டாவதாக எனக்கு கடினமானது இலக்கணம் ! முக்கியமாய் தமிழ் இலக்கணம் !!!

    வேண்டாம்... இப்படியெல்லாம் எளிதாக விளக்கி என்னை கவிதையின் பக்கம் இழுத்துவிடாதீர்கள்... என் கவிதைகளை படித்து பின்னர், " சுட்டுப்போட்டாலும் வராது " என்பதன் அர்த்தம் விளங்கி நொந்துவிடுவீர்கள் !!!

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அண்ணா!
      உங்கள் வருகை மகிழ்ச்சி!!
      எனக்கும் கடினமானது இலக்கணம் தான்!
      அதுவும் தமிழ் இலக்கணம்!
      கணிதம் அது பிரச்சனையில்லை.
      உங்களைக் கவிதையின் பக்கம் இழுப்பதா...?
      தலைப்பைப் பார்த்தீர்களா?
      இது எலும்புக்கூடுதான் , சதை திரட்டி, தோல்போர்த்தி உயிரூட்டக் கண்திறக்க வேண்டும் கவி!!!
      நமக்கேன் அந்த வேலை?
      நாம் கொஞ்சநாள் சந்தோஷமாய் இருப்போம் என்ன?!
      சுட்டுப் போடுவதென்றால் எனக்குச் “ சங்கு“ தான் நினைவிற்கு வருகிறது.
      கூடவே, “ சங்கு சுட்டாலும் வெண்மை தரும் “ எனும வரியும்!
      ஹ ஹ ஹா!!!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா!!!

      Delete
    2. " சுட்டுப் போடுவதென்றால் எனக்குச் “ சங்கு“ தான் நினைவிற்கு வருகிறது.
      கூடவே, “ சங்கு சுட்டாலும் வெண்மை தரும் “ எனும வரியும்!
      ஹ ஹ ஹா!!!
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா!!! "

      உங்கள் இதயத்தின் நிறத்தையும்,குணத்தையும் அழகாக சொல்லிவிட்டீர்களே !

      Delete
  24. அன்னையே தமிழே உன்னை
    அகமெலாம் கொண்டி ருப்பேன்
    பொன்னையே கொண்டு இங்கு
    பொழியினும் ஈடோ என்னில்
    உன்னையே நெஞ்சில் வைத்த
    ஊறிடும் தேனோ! பாகோ!
    தன்னையே மாய்க்க கேட்கின்
    தரணியில் நின்மெய் காப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. அருமை அய்யா !
      அருமை! அருமை!
      மரபில் முன்பே எழுதுவீர்கள் போலுள்ளதே!!!
      இங்கு விளையாட்டாய் எழுதிப் போனீர்களோ?
      எத்தனை பேர் இருக்கிறீர்களோ உங்களைப் போல!
      எழுதுங்கள் கவிஞரே!! இன்னும் இன்னும்..!
      தங்களின் கவிதைகளைப் படிக்கக் காத்திருக்கிறேன்.
      நன்றி!!!!

      Delete
  25. அய்யா, பின்னூட்டம் இட்ட பாவில் எந்தெந்த இடங்களில் இடுக்கினேன்? கவி நயம் பெற இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பதை அருள் கூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம். தாங்கள் மரபில் முன்பே எழுதுவீர்கள் போலுள்ளதே?
      இன்னும ்என்ன வேண்டும்!
      துலங்கிற்று உருவம்!
      தொடர்க உங்கள் பயணம்!!
      வாழ்த்துகள்!
      வருகைக்கும் விருத்தத்திற்கும் நன்றி!

      Delete
    2. அய்யா, தாமதத்திற்கு வருந்துகிறேன். நான் மரபுக்கவி பற்றி உயர் வகுப்பில் கற்காமல் கடந்ததோடு.சரி. உங்களை தொடர்வதால் புள்ளியில் இருந்து சிறு கோடு வரை பயணித்துள்ளேன். கன்னா, பின்னா என்ற அளவில் தான் உள்ளேன். அடுத்த கூடு கடினமா என அறிய அவா. நன்றி.

      Delete
  26. சிறந்த பாவிலக்கணப் பதிவு
    பயன்தரும் பதிவு
    பாவலருக்கு நல்வழிகாட்டல்
    தொடருங்கள்

    ReplyDelete
  27. அய்யா வணக்கம்..!
    "அன்னையே தமிழே உன்னை
    அகமெலாம் கொண்டி ருப்பேன்!
    தன்னையே தந்தேன் நீயே
    தரணியில் காப்பாய் தாயே!
    விண்ணையே முட்டு கின்ற
    விதந்தனில் வீரம் தந்து
    கண்ணையே இமைபோல் காத்து
    கருணையே பொழிவாய் நீயே..!
    இது சரியா அய்யா..?!

    ReplyDelete
  28. அய்யா வணக்கம்.! அறுசீர் விருத்த ஆசை ....என்னைத் தூங்கவிடாமல் செய்கிறது..!
    "சிகரமே வென்று காட்டு!"
    சீர்மிகு தமிழை என்றும்
    சிந்தையில் ஏற்றிப் போற்று!
    பார்மிசை எங்கும் சென்று
    பைந்தமிழ் உணர்வை ஊட்டு!
    வேர்எது? மொழிகட் கெல்லாம்
    விழுதென தமிழைக் காட்டு!
    காரெனக் கடமை யாற்றிக்
    கயமையைத் தூர ஓட்டு!
    மார்பினைப் பிளந்த போதும்
    மறத்தினைச் சான்று காட்டு!
    போரென உழன்று நிற்கும்
    புவிக்கு(நீ) அமைதி ஊட்டு!
    சேரிடம் சேர்ந்து நீயும்
    சிகரமே வென்று காட்டு!
    தேரென நிமிர்ந்து ஓடி
    தேனென வாழ்ந்து காட்டு!".........
    நானும் பாஸ் பண்ணிட்டேனா...?

    ReplyDelete
    Replies
    1. விருத்தம் வேண்டும் விருத்தம் வேண்டும் என்று யாரோ கேட்டார்களே........................
      அது தாங்கள் தானே அய்யா?
      உங்கள் வினா அறிவினா என்று தெரியாமல் இந்தப் பதிவினை இட்டுவிட்டேன்.
      தள்ளி நின்று படித்துச் சிரித்திருப்பீர்கள் தானே........................................?
      நானா உங்கள் விருத்தத்தை மதிப்பிட........................?
      அருமை அருமை என்று ரசிக்க மட்டுமே முடியும்!
      ரசிக்கிறேன்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  29. அன்னையே தமிழே உன்னை
    அகமெலாம் கொண்டி ருப்பேன்
    அம்மையே என்றும் நீயும்
    அணைத்தே எனைக்காத் திடம்மா
    பண்ணையே பாட்டாய் இசைக்க
    பாங்குடன் வந்திடு நீயே
    விண்ணையே உன்புகழ் தொட்டிட
    விரும்பியே பாடினேன் விருத்தம்.
    சரியா சார்..முயற்சித்துள்ளேன்..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் முயற்சிக்குப் பாராட்டுகள் கவிஞரே!
      99 சதவிகிதம் சரிதான்!
      “ அணைத்தே எனைக்காத் திடம்மா“ என்பது மா - மா- புளிமா ( 1 , 1, 2-1) என்று வருகிறது. இதை, “ அணைத்தெனைக் காத்தி டம்மா“ என்று சிறிய மாற்றம்செய்தால்.......1, 1, 1-1, (விளம் மா தேமா ) என ஓசை நேர் படும்.
      இவ்வண்ணமே,

      பண்ணையே பாட்டாய் இசைக்க
      பாங்குடன் வந்திடு நீயே,
      என்பதில் இசைக்க எனும் இடம் தேமா வர வேண்டியது என்பதால், “பாட“ என்றும் “வந்திடு“ என்னும் ஈரசைச்சீரின் ( கூவிளம்) இறுதி மா என்பதில் முடிய வேண்டும் என்பதால் “வருவாய் என்றும் மாற்றி,

      பண்ணையே பாட்டாய்ப் பாட
      பாங்குடன் வருவாய் நீயே!

      இவ்விதியாலே,

      “விண்ணையே உன்புகழ் தொட்டிட
      விரும்பியே பாடினேன் விருத்தம்“

      “ விண்ணையுன் புகழால் தொட்டு
      விருத்தமே பாடு கின்றேன்“

      என சிறிய மாற்றம் செய்து விட்டால், இந்த விதிப்படி ஓசைசரியாகி விடும்.
      இப்போது,

      அன்னையே தமிழே உன்னை
      அகமெலாம் கொண்டி ருப்பேன்!
      அம்மையே என்றும் நீயே
      அணைத்தெனைக் காத்தி டம்மா!
      பண்ணையே பாட்டாய்ப் பாட
      பாங்குடன் வருவாய் நீயே!
      விண்ணையுன் புகழால் தொட்டு
      விருத்தமே பாடு கின்றேன்!

      எனச் சிறிது மாற்றங்களுடன் கூடிய உங்களின் விருத்தத்தை முன்னதோடு ஒப்பிட்டுப் படித்தால் ஓசை சிறந்தது எது என்பதை உங்களால் கணிக்க முடியும்!
      நீங்கள் எழுதிய வடிவம் சரிதான்.
      கொஞ்சம் மாற்றினால் இன்னும் சிறப்பாகும்!
      நீங்கள் திரு. மகாசுந்தர் அய்யா முயன்றது போல, நான் கொடுத்த வரிகளை விட்டு நீங்களாகவே முயன்று பாருங்கள் !

      நிச்சயம் சரியாய் வரும்!

      புதிய விருத்தங்களுடன் வரும் உங்களின் மீள்வருகைக்காகக் காத்திருக்கிறேன்.

      நன்றி!!!

      Delete
  30. வணக்கம். மிகவும் தெளிவாக எனக்காகவே எழுதிய பதிவு போல் தோன்றுகிறது. மிக்க நன்றி விஜூ
    வெகு காலமாக என் மனதை அரித்துக் கொண்டிருக்கும் ஐயங்கள் இவை. தயவு செய்து விளக்குங்கள்.
    \\\பாயிரம் கீர்த்தனை பல்லாண்டு பாடிடும்
    பழக்கமிலை நாராயணா
    பன்னிரு ஆழ்வாரின் பாசுரம் ஒன்றையும்
    படித்ததிலை நாராயணா
    வாயினால் மந்திரம் வரிசையாய் ஓதிடும்
    வழக்கமிலை நாராயணா .
    வருகின்ற இலாபத்தில் ஒருபங்கு உனக்கீந்தும்
    வசதியிலை நாராயணா////

    -இது எந்த வகை. விருத்தம். ? பன்னிரு சீரா , 14 சீரா?

    \\\\\ஓமெனும் மந்திரத்தின் உட்பொருள் அறிந்தேனில்லை
    ஒன்பது கோணம் என்பார் ஒன்றுமே தெரிந்தேனில்லை .
    பூமகள் உன்பேர் சொல்லி புலம்பியே தொழுவேனன்றி
    பொருள்நிறை மந்திரங்கள் புரிந்து நான் சொன்னேனில்லை
    நாமங்கள் கோடி சொல்லி நாள்தோறும் பூஜை செய்வார்
    நானுனை அம்மா என்பேன் , நாயேனும் வேறொன்றறியேன்
    சோமனின் துணையே தாயே சுடர்விடும் ஒளியின் தீயே
    சொல்லியழ உன்னைவிட்டால் துணையெனக் கேது தாயே ? ////
    -----
    இது என்ன வகை.
    இலக்கணம் தெரியாமலே எழுதி வருகிறேன். தவறு செய்கிறேனோ என்ற பயம் வருகிறது .
    சத்தியமாய் என் புலமையைக் காட்ட இதை எழுதவில்லை. தெளிந்து கொள்ளவும் திருத்திக் கொள்ளவுமே கேட்கிறேன்.

    ReplyDelete
  31. அண்ணா இது உங்களுக்கான பதிவா?
    ஆச்சரியம். இலக்கணம் இல்லாமல் நீங்கள் இம்மரபில் எழுதுவதாகச் சொல்வதும் கூட ஆச்சரியமே!
    எனக்குத் தெரிந்து அதற்கு ஒரே சாத்தியம்தான்.
    மரபில் உள்ள இது போன்ற பாடல்கள் பலவற்றைப் படிப்பது.
    ஓசையைக்குள் விழுந்து போவது.
    சொற்களை அதன் லயத்திற்குள் விழ விழ எழுதிச் செல்வது.
    ஒவ்வொரு வார்த்தைக்கும் மேல் கீழிறங்கிச் செல்லும் அந்த ஓசை பாடலை நிரப்பிச் செல்லும் போது மட்டுமே இது சாத்தியம். உங்களுக்குச் சாத்தியமாய் இருக்கிறது.
    சில இடங்களில் தோன்றலாம் ( தோன்றலாம் தான் ) இந்த இடத்தில் ஏதோ இடிக்கிறதே, ஓசை குறையவோ கூடவோ செய்கிறதே என்று.............!
    அதைச் சரி செய்ய இலக்கணம் உதவுகிறது. அவ்வளவே !
    ஓசை சரியாக இருந்தால் அது வரம். நல்லது.
    இப்போது நீங்கள் கேட்ட உங்கள் பாடல்களின் வகைமை.

    பாயிரம் கீர்த்தனை பல்லாண்டு பாடிடும்
          பழக்கமிலை நாராயணா
       பன்னிரு ஆழ்வாரின் பாசுரம் ஒன்றையும்
          படித்ததிலை நாராயணா
    வாயினால் மந்திரம் வரிசையாய் ஓதிடும்
          வழக்கமிலை நாராயணா .
       வருகின்ற இலாபத்தில் ஒருபங்கு உனக்கீந்தும்
          வசதியிலை நாராயணா“


    இது போல இன்னும் இரு கூறுகள் இருந்தால் தான் இந்தப் பாடல் முழுமையடையும். நீங்கள் அப்படித்தான் எழுதியும் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சரிதானே?
    இப்பொழுது, உங்கள் பாடலில் உள்ள அடிகள் நான்குதான்.
    ஒரு அடியில் உள்ள சீர் எத்தனை வருகிறது என்று பார்த்தீர்கள் என்றால்,
    “பாயிரம் “ தொடங்கி “ நாராயணா“ வரை ஒரு அடி.
    (அடுத்த அடி, “ வாயினால் “ என பாயிரம் என்பதற்குரிய எதுகையோடு தொடங்குவதைப் பாருங்கள். ) ஓர் அடியில் வரும் சீர்களை எண்ணுங்கள்.
    பன்னிரண்டு சீர்கள். ஐந்து சீர்க்கு மேல் போனால் கழிநெடிலடி. எண்ணிக்கையை முன் சேர்க்க இது “ பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.“

    அடுத்த பாடல், ( இதை இலக்கண வகைமைக்காய்ச் சீர் பிரித்திருக்கிறேன் )

    “ஓமெனும் மந்தி ரத்தின்
           உட்பொருள் அறிந்தே னில்லை
       ஒன்பது கோணம் என்பார்
          ஒன்றுமே தெரிந்தே னில்லை .
    பூமகள் உன்பேர் சொல்லி
          புலம்பியே தொழுவே னன்றி
       பொருள்நிறை மந்திரங்கள்
          புரிந்து நான் சொன்னே னில்லை
    நாமங்கள் கோடி சொல்லி
          நாள்தோறும் பூஜை செய்வார்
       நானுனை அம்மா என்பேன் ,
           நாயேனும் வேறொன் றறியேன்
    சோமனின் துணையே தாயே
          சுடர்விடும் ஒளியின் தீயே
       சொல்லியழ உன்னை விட்டால்
          துணையெனக் கேது தாயே ‘
    இப்படி அமைத்துக் கொள்ளும் போது இதுவும் அடிக்குப் பன்னிரு சீர்.
    இதுவும் பன்னிருசீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தமே!
    முன்னதற்கும் பின்னதற்கும் வேறுபாடு. முன்னதன் பொது வாய்பாடு,
    விளம் - விளம் - காய் – விளம் – காய் – தேமாங்காய் என்பது இரட்டித்தும்,
    இரண்டாம் பாடல், விளம் – மா – தேமா என்பது இரட்டித்தும் வந்ததே! இரண்டாம் பாடலை நீங்கள் இசைத்தால், மூன்றாம் அடியிலன் பன்னிரண்டாம் சீரில், ( ‘அறியேன்‘ என்பதில் ) ஓசை நீள்வதைக் கணிக்க முடியும். அதன் காரணம் மற்ற அடிகளோடு ஒப்பிடும் போது இங்குத் தேமா வந்திருக்க வேண்டும். இது புளிமா வானதுதான் ஓசையை ஓரலகு நீட்டி விட்டது. இன்னும் சில இடங்களிலும் ஓசையின் கூட்டமும் குறைவும் பார்த்து நீங்கள் இதை நன்குணரலாம்.
    இதைச் சரிசெய்யவே இலக்கணம் துணைபுரியும்.
    மற்றபடி, மரபில் உங்களின் புலமையை நான் நன்கறிவேன் அண்ணா!
    பார்த்துக் கருத்திடுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  32. மிக்க நன்றி விஜூ. ஆனாலும் என் சந்தேகங்கள் தீர்ந்த பாடில்லை.

    \\\கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
    கபடு வாராத நட்பும்
    கன்றாத வளமையுங் குன்றாத இ*ளமையும்
    கழுபிணியிலாத உடலும்
    சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
    தவறாத சந்தானமும்
    தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
    தடைகள் வாராத கொடையும்
    தொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு
    துன்பமில்லாத வாழ்வும்
    துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
    தொண்டரொடு கூட்டு கண்டாய்
    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
    ஆதிகட வூரின் வாழ்வே!
    அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
    ஆதிகட வூரின் வாழ்வே!
    அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!
    அருள்வாமி! அபிராமியே!////

    அபிராமிப் பட்டரின் இந்தப் பாடல் தான் நாராயணா பாடலுக்கும் , அருட்கவியில் எழுதிவரும் வைத்தீஸ்வரா போன்ற பாடல்களுக்கும் நான் கொள்ளும் மாதிரி. இது 7+7 பதினான்கு சீர் இல்லையா? "தவறாத சந்தானமும்" "வழக்கமில்லை நாராயணா " இவை 2 சீர்களா 3 சீர்களா ?
    கோபித்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன். நன்றி

    ReplyDelete
  33. அண்ணா ,
    வணக்கம். தவறாக நினைத்துக் கொள்ள என்ன இருக்கிறது. தெரிந்தால் சொல்லப் போகிறேன். தெரியாவிட்டால் தெரிந்தாரைக் கேட்கப் போகிறேன். இல்லாவிட்டால் மண்டையைக் குடைந்து கொள்ளப் போகிறேன். அப்படியும் தெரியாவிட்டால் தெரியவில்லை என்று சொல்லப்போகிறேன். இதில் எனக்கு வருத்தங்கள் இல்லை. எப்போதும்!
    நீங்கள் காட்டியுள்ள அபிராமியம்மைப் பதிகத்தில் ஏழு சீர்கள் தெளிவாக உள்ளன அண்ணா!
    அடுத்த எதுகைக்கு முன் இவை இரட்டை ஆகும் போது அடிக்கு பதினாலு சீர்களாகும்.
    வாய்பாடு - ““காய் - விளம் - காய் - விளம் - விளம் - மா - மா “ என்னும் ஏழசைகளின் இரட்டி, ஆகப் பதினான்கு சீர்.
    ““தவறாத சந்தா னமும்““ எனும் ஓரிடத்திலும், ஈற்றரையடியின் ஈற்றுச் சீரிலும் ஓரசை வந்து வேறுபட்டாலும் பொதுமைப்படுத்தும் போது அவற்றை விலக்கி ஒத்தமைந்த வாய்பாடு கொள்ளுதல் தமிழ் மரபு,

    ““செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி
    இழைத்த இலக்கணம் பிழைத்தன போல
    வருவன உளவெனும் வந்தவற் றியலால்
    திரிபின்றி முடித்தல் தெள்ளியோர் கடனே ““

    என்றிதைச் சொல்லும் தொல்காப்பியம்( செய்- 235. இளம்.).

    ஆனால் நீங்கள் காட்டியுள்ள,
    \\\பாயிரம் கீர்த்தனை பல்லாண்டு பாடிடும்
    பழக்கமிலை நாராயணா
    பன்னிரு ஆழ்வாரின் பாசுரம் ஒன்றையும்
    படித்ததிலை நாராயணா
    வாயினால் மந்திரம் வரிசையாய் ஓதிடும்
    வழக்கமிலை நாராயணா .
    வருகின்ற இலாபத்தில் ஒருபங்கு உனக்கீந்தும்
    வசதியிலை நாராயணா////

    இந்தப் பாடலில், நீங்கள் சீர்களை அரையடிக்கு ஆறாகத்தான் நிறுத்தி இருக்கிறீர்கள். அடிக்குப் பன்னிரு சீர்.
    ஒருவேளை நீங்கள் அடிதோறும் நாராயணா என்னும் இச்சொல்லை “நாரா------யணா“ என்று நீங்கள் பிரித்துக் காட்டி ஓசையறுக்கிறீர்கள் என்றால் இதனைப் பதினான்கு சீராக கொள்வதில் தடையில்லை.
    நான் இதைப் பன்னிருசீராகக் கொள்ளக் காரணம், நீங்களிட்ட பின்னூட்டத்தில் அவ்வாறு சீர் அறுத்துப் பிரித்துக்காட்டவில்லை.
    ஒருவேளை அப்படிப் பிரிக்கலாம் என்றாலும் அப்படிப்பிரிக்கப்படுவதன், இறுதியில் நிற்பது, சீர் அன்று. வகையுளிப்படுத்தப்பட்ட அசையாகி ( யணா ) விடுகிறது .
    ஒரு சொல்லை குறிப்பாகப் பெயர்களை இப்படிப் பிரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அபிராபியம்மைப் பதிகத்திலும், ஈற்றில் வரும் அம்மையின் பெயர் “ அபிராமியே“ தான். ஈற்றில் நிற்கும் ஏகாரம் எடுத்தல் ஓசை பெற்று நிறைவதால் குறையோசையை நிறைவு படுத்தி நிற்கிறது.
    இதுவே நான் உங்களின் பாடலைப் பதினான்கு சீராகக் கொள்ளவில்லை.
    நாராயணா என்பதை இரு சீராக நீங்கள் கொண்டால் சீர் எண்ணிக்கைப் படி அதனைப் பதினான்கு சீராகக் கணக்கிடுவதில் தவறில்லை.
    அடுத்ததாக நீங்கள் காட்டிய,
    ““ஓமெனும் மந்தி ரத்தின்
           உட்பொருள் அறிந்தே னில்லை
       ஒன்பது கோணம் என்பார்
          ஒன்றுமே தெரிந்தே னில்லை““
    இப் பாடலைப் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாய்க் கொள்வதில் தடையேதும் உண்டா அண்ணா?
    மீண்டும் நான் தமிழாசிரியன் இல்லை. நான் கூறியதில் தவறேதும் இருந்தால், அது ஆய்ந்து திருத்திக் கொள்ள என்றும் ஆயத்தமாகவே இருப்பேன்.
    உங்களின் மறுமொழி வேண்டி நிறைகிறேன்.
    நன்றி!

    ReplyDelete
  34. நன்றி விஜூ .
    ஓமெனும் மந்திரத்தின் - என்னும் பாடலில் எனக்கு சந்தேகம் தீர்ந்தது.
    அபிராமியே என்ற ஈற்றுச் சொல்லுக்கு நிகரான வார்த்தையாகக் கருதியே நாராயணா என்று எழுதினேன் . அமிராமிப் பதிகம் 14 சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் எனப் படித்ததால் என் பாடலையும் அப்படியேக் கருதினேன். தெளிவாயிற்று இப்போது விஜு .மிக்க நன்றி

    ReplyDelete
  35. தமிழாசிரியர்கள் படித்தார்கள் என்றால் ... வகுப்பறையில் பெரும் புரட்சியே நடக்கும் ...

    ReplyDelete
  36. காய்ச்சீர், மாச்சீர் மாச்சீர் - என்பதன் மடக்கு, அல்லது
    விளச்சீர், மாச்சீர், மாச்சீர் என்பதன் மடக்கு என்று சொல்லலாமா விஜூ?
    அறுசீர் (கழிநெடிலடி)ஆசிரிய விருத்தத்திற்கான அருமையான விளக்கம் மற்றும் அருமையான எடுத்துக்காட்டுகள். தாமத வருகைக்கு மன்னிக்க.

    ReplyDelete
  37. இதை வெளியிட வேண்டா - தவறுகண்டு சுட்டுவதாகவும் தவறாக எண்ண வேண்டா. இவ்வளவு அரிய படைப்பில் சிறு பிழையும் வரலாகாது என்பதால்...
    கண்ணதாசன் விருத்தத்தின் கடைசி வரி “நெருப்பினில்“ என்பதே சரி.
    அதே போல நன்னடை அல்லது நல்நடை என்பதே சரி. மற்றவை அருமை.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம். இதை அழித்துவிடாதீர்கள்!
      நெருப்பினில் என்பது தட்டச்சுப் பிழையே!
      நீங்கள் சொல்லும் வரை கவனிக்க வில்லை.
      நன் நடை என்பது பிரித்து எழுதுவதாக நான் செய்த தவறே!
      நீங்கள் சுட்டி இராவிட்டால் நிச்சயம் கவனித்திருக்க மாட்டேன்!
      திருத்தி விடுகிறேன்.
      இதையே தங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன்
      நன்றி !

      Delete
    2. பாடல் நினைவில் இருந்து எழுதப்பட்டது.
      தவறுகளை அதனால் திருத்த வகையின்றிப் போனது!
      இனிக் கவனமாய் இருக்கத் தங்களின் கருத்து உதவும்!!!
      நன்றி

      Delete
    3. திருத்தி விட்டேன் அய்யா நன்றி!!!

      Delete
  38. வணக்கம் சகோதரா !

    அருமையான ஆக்கம் ! ஆரம்ப காலத்தில் இந்த அம்பாள்டியாளும்
    யாப்பிலக்கணம் அறியாமல் தவறிழைத்தேன் (மன்னிக்கவும் ).பின்னர் எங்கள்
    மதிப்பிற்குரிய ஆசான் கவிஞர் கி .பாரதிதாசன் ஐயா தான் கற்றுக்
    கொடுத்தார் இன்றும் கற்றுக் கொடுத்த வண்ணம் உள்ளார் .அந்த
    வகையில் நானும் மெல்ல மெல்லத் தவள ஆரம்பித்துள்ளேன் :))
    என் போன்றவர்களுக்கு இப் பகிர்வானது மிகவும் பயனளிக்கும்
    பொக்கிசமாகும் .மிக்க நன்றி சகோதரா .தங்களுக்கும் தங்கள்
    குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
    உரித்தாகட்டும் .வாழ்க வளமுடன் .

    அன்னையே தமிழே உன்னை
    அகமெலாம் கொண்டி ருப்பேன்
    என்னைநான் அறியும் முன்பே
    எனதுயிர் ஆனாய் நீயே !
    இன்னலைத் தடுத்தே ஆளும்
    இணையிலாத் தெய்வம் என்பேன் !
    கன்னலென் கவிதை என்று
    கவர்ந்திட வார்த்தை தாரும் !

    பொன்னையே நிகர்த்த பாக்கள்
    பொலிந்திட இன்பம் பொங்கும் !
    வன்முறை அழிந்த நாட்டின்
    வளங்களை எண்ணத் தோன்றும் !
    தன்பலம் அறிந்தே மக்கள்
    தரணியை வெல்லத் தூண்டும் !
    நின்னையே நினைத்து வாழும்
    நினைவிதில் வா ..வா ..தாயே !

    பொன்னான இத் தருணத்தில் தங்களின் தங்கக் கைகளால்
    இந்தப் பா வரிகளிலும் திருத்தம் காணப் பட வேண்டும் என்பதே
    எனது நோக்கம் ஆசிரியர் சகோதரா :)

    ReplyDelete
  39. வாருங்கள் சகோதரி!
    அதுதான் பட்டையைக் கிளப்புகிறீர்களே..!!!!
    பின்னென்ன..!
    நீங்கள் எல்லாம் தவழ்வதாகச் சொன்னால் நான் எல்லாம் என்னாவது..!!
    ம்ம்
    யாப்புச்சூக்குமத்தின் நான்காம் பாகம் உங்களுக்காகக் காத்திருக்கிறது .
    கண்டு அதனையும் முயலுங்கள்!
    நன்றி.
    ( என்னவோ போங்கள்.. என் கை தங்கக் கையாக வரம் கிட்டவில்லை.
    எந்தத் திருத்தமும் இல்லாப்பாடல். சந்தம் வசப்பட்டுவிட்டது.
    மீண்டும் வாழ்த்துகள்)

    ReplyDelete
  40. மிக்க மகிழ்ச்சி சகோதரா நான்காம் பாகத்தையும் முடிந்தவரை
    நானும் எழுத முயற்சிக்கின்றேன் :)

    ReplyDelete
  41. இதையும் கொஞ்சம் பாருங்கள் சகோதரா தங்களின் இனிய நற் கருத்தினையும்
    தாருங்கள் http://rupika-rupika.blogspot.com/2014/12/blog-post_31.html

    ReplyDelete
  42. விருத்தம் எனும் ஒன்பாவிற்க உயர் கம்பன் வருத்தத்தில் இருக்கின்றான்,
    வாஞ்சையுடன் அவன் வருத்தம் நீக்க ,,,,,,,,,,,,,
    தெளிந்தது எல்லாம்,,,,,,
    அருமை. நன்றி.

    ReplyDelete
  43. நண்பரே
    திருப்பாவைக்கு சீர் அசை விவரம் தர இயலுமா

    ReplyDelete