Sunday 13 July 2014

உயிர் திரும்பும்!





கரைகள் தகர்க்கும் ஆறெனநீ! – அவ்
     வாற்றைத் தடுக்கும் அணையென நான்!
நுரைகள் திரட்டி நீவருவாய்! – உனை
     நிரப்பி நிரம்பி நான்வழிவேன்!
வரைவில் என்றன் மனம் விழையும்  - அவ்
     வாழ்(வு) ஒன்றே சாந்துணையும்!
உரைகல் எதற்குன் மனமறிய? – என்
     உள்ளம் அறியும் அத்தனையும்!
                                    ( வரைவு – திருமணம்)

மூடும் விளக்கின் உயிரணையும்! – எனை
    மூட்டும் உன்தீ நனைந்தெரியும்!
கோடும் வளைவும் கவிதைகளாய் – அதில்
    கொட்டும் எண்ணைத் திரிபலவும்!
பாடுங் காற்றில் பாய்மரங்கள் – சுழல்
     படுத்தி உழற்றும் மனப்படகும்
தேடும் உன்கலங் கரைவிளக்கை – நீ
     தொலைவிருந் தாலும் கண்தொடவே!

கற்கள் எறிந்தாய் எனைத்துரத்த! – நான்
     காலடி வீழும்‘உன் நிழலலவோ?
சொற்கள் எறிந்தாய்ச் சுடுவதற்கு! – அது
     சுந்தர நிலவுதண் ஒளியலவோ?
பற்பல காரணம் எனைவெறுக்க – மனம்
     பகுத்திடும் கத்திகள் தினம்‘அறுக்க
அற்றிடா துன்னை‘என் மனம்விரும்பும்! – அன்றி
     அகல்வதேல் உடல்விட்(டு) உயிர்திரும்பும்!

மேகத் திரட்சியில் வான்மறைத்து – பின்
     மேனி இளைத்துச் சிதறிடவோ?
மோகக் கிறுக்கினில் உழன்றுழன்று – உனை
     மேவும் வழியற்றுப் பதறிடவோ?
தாகத் தவிப்பினில் நானிருப்பேன்! – வெகு
      தூரமில்லை‘உன் கானலில் நீர்!
வேகத்தில் ஓடவும் கால்களில்லை – அவை
      வெட்டிய உன்கைநான் வெறுப்பதில்லை!
                                                ( தொடரும்.....)
( “வீழ்ந்து விட்டேன் “ என்னும் முந்தைய பதிவின் தொடர்ச்சி)
                              
1995 மாயனூர்ப் பதிவுகளிலிருந்து........

Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

32 comments:

  1. வணக்கம்
    ஐயா

    கவிதை வரிகளில் கருத்துக்கள்
    அலைதிரண்டுஎழுகிறது
    ஆர்ப்பரிக்கும் வார்த்தைகள் மனதை
    வானளவுஅள்ளி எடுக்கிறது

    அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் உடன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  3. நானும்கூட வீழ்ந்து விட்டேன் கவிதைக்குழம்பாற்றில்....
    எனது ஹிந்தமிழ் காண்க...

    ReplyDelete
    Replies
    1. படித்துக் கருத்திட்டு விட்டேன் நண்பரே!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  4. அண்ணா,
    தொடங்கும்போது புதுக்கவிதை போல இருந்து பின் மரபாய் மாறி நதியென இக்கவிதை நீள்கிறது. முதல் நான்கு வரிகளும் மட்டும் இருந்தால் கூட ஒரு அட்டகாசமான ஹைக்கூ வை போல மிளிர்கிறதே!!
    கடைசி நான்கு வரிகளில் மரபின் சிகரம் தொட்டு
    மனதில் வலியை விட்டுச்செல்கிறது ! இப்படி ஒரு கவிதை படித்தபின்னும் உயிர் திரும்பாதா என்ன!!!

    ReplyDelete
    Replies
    1. கவிதை(?) முடியவில்லை சகோதரி!
      ஹைக்கூ, சென்றியூ, என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை!
      உங்கள் தளங்கள் பார்த்துக் கற்று வருகிறேன்!
      உயிர் திரும்பத் திருமூலரின் தந்திரம் தான் வசப்பட வேண்டும்!
      தங்களின் ரசனைக்கு நன்றி!

      Delete
    2. //கவிதை(?) முடியவில்லை// அப்போ நல்ல தமிழில் இதற்கு வேறு பெயரா?(அப்பவே சொன்னேன் அவரு கிட்ட கமென்ட் போடும்போது கவனமா இருன்னு கேட்டியா? பயப்படாதீங்க நான் என்மனசாட்சி கிட்ட சொன்னேன்:))
      //உங்கள் தளங்கள் பார்த்துக் கற்று வருகிறேன்!// கத்துகிறதுன்னு முடிவுசெஞ்சா நல்ல எக்ஸ்பெர்ட் கிட்ட தான் கத்துக்கணும். நானே இப்போ தான் balance பண்ண கத்துகிட்டு இருக்கேன். இந்த எல்.போர்டு கிட்ட !! ஒ!! பாருங்க நீங்க கலாய்ச்சதும் நான் என் இயல்பில் பேச தொடங்கிட்டேன்:))
      என்னால ரொம்ப நேரம் முகமூடி போடமுடியல:)) தப்பா சொல்லிருந்தா இந்த தங்கையை பொறுத்தருள்க !

      Delete
    3. முத்துநிலவன் அய்யாவை நேற்று எங்கள் ஊரில் பார்த்தேன்.
      உங்களை எல்லாம் பார்த்துக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று தான் கூறினேன். உங்கள் ஊர்க்காரர். சந்தேகம் இருந்தால் கேட்டுக்கொள்ளலாம். பிறகு ஹைக்கூ குறித்தெல்லாம் சொன்னது உண்மைதான் சகோதரி!
      எல்லார்க்கும் எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை.
      ஒரு வார்த்தைக்கு நான் பட்ட பாட்டை முந்தைய பதிவைப் பார்த்துத் தெரிந்து கொண்டிருப்பீர்கள் எனக் கருதுகிறேன்.
      கவிதையைப் பற்றிய என் பார்வையை http://valarumkavithai.blogspot.in/2014/07/blog-post_11.html
      பின்னூட்டத்தில் அளித்திருக்கிறேன். பார்த்தபின் இது கவிதை எனக் கருதினால் கருத்திடுங்கள். கேள்விக்குறியை ஆச்சரியக் குறியாக மகிழ்ச்சியுடன் மாற்றி விடுகிறேன்.
      உங்களின் கருத்தெதிர் பார்க்கிறேன்!
      மீள் வருகைக்கும் வரப்போவதற்கும் நன்றி!.

      Delete
    4. நான் அந்த பின்னூட்டத்தை ஏற்கனவே படித்திருக்கிறேன். என்றாலும் மறுமுறையும் பார்த்துவந்தேன்:)
      //எதனையாவது தூண்டிக் கிளர்த்தும் போது ( வலியோ சுகமோ எதுவானாலும்) அது ரசிப்புத் தரத்தைப் பெற்றுவிடுகிறது.// எனும் உங்கள் வாதத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்கள் என்றால் எனக்கு மிகவும் பிடித்த அறிவுமதியின் பௌர்ணமி கோப்பையில் இருள் குடித்தாய் எனும் வரிகள் ஏற்படுத்திய அதிர்வுகளை // கரைகள் தகர்க்கும் ஆறெனநீ! – அவ்
      வாற்றைத் தடுக்கும் அணையென நான்!
      நுரைகள் திரட்டி நீவருவாய்! – உனை
      நிரப்பி நிரம்பி நான்வழிவேன்!// எனும் வரிகளும் ஏற்படுத்தி இருக்கிறது என்கிறேன். ஒப்பி , உங்கள் கேள்வி குறியை ஆச்சர்ய குறியாய் மாற்றுங்கள் அண்ணா! அந்த வரிகள் உங்களால் படைக்கப்பட்டவை என்பதை விட உங்கள் விரல் வழி வெளிப்பட்ட குழந்தைகள். உங்கள் அவையடக்கம் ஏற்கமறுத்தாலும் அவை தன் அங்கீகாரத்தை பெற்றே தீரும்.
      எனக்கும் என் படைப்புகளுக்கும் மோதல் ஏற்படும் காலங்களில் கொஞ்சமும் விட்டுகொடுக்காமல் ,ஒவ்வொரு வார்த்தைகளையும் அவற்றின் விருப்படியே தான் அமைத்துக்கொள்கின்றன.ஷேக்ஸ்பியரின் THE LOVER, THE LUNATIC, THE POET நினைவு வருகிறது அல்லவா? பொழுது கிடைத்தால் எனது http://makizhnirai.blogspot.com/2014/01/manushyaputhiran.html// இந்த பதிவை படித்துபாருங்கள். வழக்கத்திற்கு மாறாய் பின்னூட்டத்தில் நிறைய பேசிவிட்டேன்:))
      //மீள் வருகைக்கும் வரப்போவதற்கும் // தீர்க்கதரிசி :))

      Delete
    5. ”ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகவைச்
      சான்றோன் எனக்கேட்ட தாய்”
      ( மகனை - மகவெனச் செய்த மாற்றம் எனது )
      நிச்சயமாய் எழுதிய பொழுதினும் பெரிதுவக்கிறேன்.
      இவற்றை எவர்கண் படாமல் காத்துப் பொதிந்து வைத்த காலங்களுண்டு.
      இறந்த பிணங்களெனப் புதைத்ததும் உண்டு!
      தொலைத்த களங்களில் சருகெனக் கிடந்து,
      உங்கள் வார்த்தைகளில் உயிர் பெற்றலையும் என் பட்டாம்பூச்சிகளின் காலொட்டிய மகரந்தங்கள் மழையெனப் பெய்யும் இந்நொடி ,
      உதிக்கும் பூக்களால் ஆயிரம் தோட்டங்களை உருவாக்கலாம் என்ற நம்பிக்கையைப் பெற்றுவிட்டேன் சகோதரி!
      இது தனிப்பதிவாய் நீண்டுவிடும் அபாயத்திற்கு அணையிட்டு ,
      கவிதை !!!!!!!!!!! ரசித்தமைக்கு
      நன்றி!

      Delete
    6. பார்க்கப் பலமுறை முயன்றேன்!

      “வருந்துகிறோம், இந்த வலைப்பதிவில் நீங்கள் தேடும் பக்கம் இல்லை.“
      என்றே வருகிறது. என்ன செய்ய?

      Delete
  5. வணக்கம் ஐயா!

    எண்ணக் கரையுடைத்து ஏற்றிய பாக்களோ?
    கண்ணைக் கரைத்ததே ஈர்த்து!

    பாக்கள் எம்மை அப்படியே இன்னுமோர் உலகிற்கே
    இட்டுச் செல்லுகிறதே!..

    உங்கள் எண்ணத்திலும் எழுத்திலும்
    கரை புரண்டு விழும் அலையென
    வார்த்தைகள் வந்து விழுந்து தவள்கின்றன ஐயா!..

    மிகவே ரசிக்கின்றேன்! தொடருங்கள்!

    அன்புடன் வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. கன்னல் கவிவாணி என்பாட்டும் ஏத்துவது
      மின்னல்! குறளோ மழை!
      நன்றி சகோதரி!

      Delete
  6. கற்கள் எறிந்தாய் எனைத்துரத்த! – நான்
    காலடி வீழும்‘உன் நிழலலவோ?
    சொற்கள் எறிந்தாய்ச் சுடுவதற்கு! – அது
    சுந்தர நிலவுதண் ஒளியலவோ?
    பற்பல காரணம் எனைவெறுக்க – மனம்
    பகுத்திடும் கத்திகள் தினம்‘அறுக்க
    அற்றிடா துன்னை‘என் மனம்விரும்பும்! – அன்றி
    அகல்வதேல் உடல்விட்(டு) உயிர்திரும்பும்!
    அருமை அருமை !சகோ அனைத்தும் ரசித்தேன் அகலக் கண்திறந்து வாழ்க வளமுடன் ....!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் சிரிப்பெனக்கள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது சகோதரி!
      நீங்கள் ஒளித்து வைத்தாலும் கூட!
      பாராட்டிற்கும் ரசனைக்கும் நன்றி!
      உங்கள் படைப்புகளைக் காணத் தவம் கிடக்க வேண்டும் போலும் .
      கிடக்கிறோம்.
      விரைவில் வரம் அருள்க!

      Delete
    2. அதே!! அதே!! இனியா செல்லம் கருத்தை படிக்கும்போதே பின்னணியில் அவங்க சிரிப்பு சத்தம் கேட்கும்.

      Delete
  7. "கற்கள் எறிந்தாய் எனைத்துரத்த! – நான்
    காலடி வீழும்‘உன் நிழலலவோ?
    சொற்கள் எறிந்தாய்ச் சுடுவதற்கு! – அது
    சுந்தர நிலவுதண் ஒளியலவோ?" என்ற
    அடிகளை அடியேன் விரும்புகிறேன்!
    சிறந்த கவிதை!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  8. முடித்த விதமும் சிறப்பு... வாழ்த்துக்கள்...

    ஏன் தளத்தை .com-க்கு மாற்றவில்லை...? மாற்றினால் தமிழ்மணமும் வேலை செய்யும்...

    மேலும் விளக்கத்திற்கு : இனி நீங்கள் மா(ற்)ற வேண்டும்...!
    [http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html]

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி அய்யா!
      தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதி்த்யன் மாதிரி பல முறை முயன்று பார்த்துவிட்டேன்.
      ஒன்றும் நடக்கவில்லை!
      அன்பிற்கு நன்றி அய்யா!

      Delete
  9. தொடர் கதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
    தொடர்கவிதை இப்பொழுது கேள்விப்படுத் தொடர்கிறேன்.

    அந்த கடைசி இரு வரிகள் சிம்ப்ளி சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. பெருந்தகையீர்!
      தொடர் கவிதை என்றல்ல “ நீயல்லால் வேறொரு காட்சியில்லை“ எனுந்தலைப்பில் எழுதப்பட்டது இது.
      ஒட்டுமொத்தமாய்ப் பதித்துச் சலிப்பிக்க வேண்டாமே எனக்கருதி நான் பகுத்துக் கொண்டேன்.
      தங்களின் ரசனையை நானும் ரசித்தேன் .
      சைவ சித்தாந்தச் செல்வர், சிவத்திரு .சொக்கலிங்க ஐயா அவர்களின் சரித்திரத் தொடர்ச்சியைப் பெரிதும் எதிர்பார்க்கிறேன். நன்றி

      Delete
    2. விளக்கத்திற்கு நன்றி ஐயா.

      இன்னும் இரு நாட்களில் ஐயா அவர்களின் சரித்திரத்தின் அடுத்த பகுதியை பதிவிடுகிறேன்.

      மிக்க மகிழ்ச்சி ஐயா.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
  10. சுவைபட எழுதுகிறீர்கள். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
      உங்கள் வலைப்பூவிற்கு வரமுடிய வில்லையே அய்யா!
      தனிப் பார்வைக்கு மட்டுமோ?
      நன்றி

      Delete
  11. ///கற்கள் எறிந்தாய் எனைத்துரத்த! – நான்
    காலடி வீழும்‘உன் நிழலலவோ?
    சொற்கள் எறிந்தாய்ச் சுடுவதற்கு! – அது
    சுந்தர நிலவுதண் ஒளியலவோ?//
    ஆகா
    அருமை

    ReplyDelete
  12. வணக்கம்!

    கண்ணுள் கமழும் கருத்தேந்தி - உயிர்
    காதல் கவிதை படைத.துள்ளீர்.
    விண்ணில் உலவும் நிலவாக - இங்கு
    விளைத்த அடிகள் ஒளிர்ந்தனவே!
    மண்ணில் மணக்கும் மலரைப்போல்
    மனத்துள் மணக்கும் நடைச்சந்தம்!
    பண்ணில் குளித்து மகிழ்ந்திட்டேன் - தமிழ்
    பாடும் கவியே என்நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      சங்கத் தமிழைக் கவிச்சாற்றைச்
      ..... சந்தக் கவிதைத் தேன்கூட்டை
      மங்கச் செய்யா மரபு‘படை
      ..... மறவ! உங்கள் திறமறிவேன்!
      எங்கும் தமிழக் கொடிபறக்க
      ..... இயக்கும் காற்றாய் நீரிருக்கச்
      சிங்க முழவின் ஒலிகேட்கச்
      ..... சிதறும் முயலாம் தமிழ்ப்பகையே!
      நன்றி அய்யா!

      Delete
  13. " உரைகல் எதற்குன் மனமறிய? – என்
    உள்ளம் அறியும் அத்தனையும்! "

    வரைவின் வழியாய் தொடங்கும் இல்லற வாழ்வு முழுவதுமே இருபாலாரும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டிய வைர வரிகள் !

    " பாடுங் காற்றில் பாய்மரங்கள் – சுழல்
    படுத்தி உழற்றும் மனப்படகும்
    தேடும் உன்கலங் கரைவிளக்கை – நீ
    தொலைவிருந் தாலும் கண்தொடவே! "

    காதல் மனதின் நிலையை விளக்கும் உன்னத வரிகள் !

    இப்படி சொல்லிக்கொண்டே போனால் கவிதை முழுவதையும் உடைத்து, உடைத்து பின்னூட்டம் முழுவதுமே நிரப்பிவிடுவேன் ! சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் மிக சுருக்கமாக சொல்லிவிட்டார்.... ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை என பல களாங்களையும் தொடுவதோடு கவிதையின் சிற்சில வரிகளே கூட ஒரு தனிக்கருத்துடன் கூடிய சிறு கவிதையாய் நிற்கின்றன.

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
  14. படிக்கப் படிக்க இன்பம் என்பது இக் கவிதைக்கு முற்றிலும் பொருந்தும் மரபில் கூறப் பட்டாலும் புதுக்கவிதையின் கூறுகள் இதில் அதிகமாகவே தெரிகிறது. இக்கவிதையை மைதிலி அவர்கள்.புதுக்கவிதையாய மாற்றியது இன்னும் சிறப்பு
    நல்ல கவிதைகளை அறிமுகம் செய்யும் மைதிலி கஸ்தூரி ரங்கனுக்கு நன்றி.

    ReplyDelete