Friday 11 July 2014

“உள்ளங்கவர் களவன்“




உங்களில் பலரும் இதை உள்ளங்கவர் கள்வன் என்றே வாசித்திருப்பீர்கள். என் மேல் அக்கறை உள்ள ஒரு சிலர், “தலைப்பையே எழுத்துப் பிழையோடு எழுதிவிட்டான் உடனே  திருத்துமாறு சொல்ல வேண்டும்“ என்று மனதிற்குள்ளாவது நினைத்திருப்பீர்கள். மன்னிக்க வேண்டும். நான் சொல்ல வந்தது உள்ளங் கவர் களவனைப் பற்றித்தான்!
இதை ஓலைச் சுவடி நடையில் எழுத வேண்டுமானால், புள்ளி இல்லாமல் “ “உளளஙகவரகளவன“ என்று தான் எழுத வேண்டும். இப்ப உனக்கு என்ன தான் பிரச்சினை என்கிறீர்களா? இது தான் பிரச்சினை!

வாசகர்களுக்கு மிகப் பரிச்சியமான சங்கக் கவிதைகளை அனைவர்க்குமான வாசிப்பனுபவத்திற்கேற்ப வழங்கி வரும் கிரேஸ் பிரதிபா அவர்கள்,


எனும் வலைப்பூவில் ஐங்குறுநூற்றுக் கள்வன் பத்தின் பாடல் ஒன்றை மொழிபெயர்த்திருந்தார். அவர்களது முயற்சியையும் உழைப்பையும் தமிழார்வத்தையும் போற்றுவோம்!

அதற்கு அவர்களின் ஒலிபெயர்ப்புப் பின்வருமாறு,

"sennel am seruvil kadhir kondu kalvan
thann aga mann alaich sellum oorarku
el valai negizha saa-ai 
allal uzhappadhu evankol annai"
பொருளில் kalvan – crab, என்று விளக்கி இருக்கிறார். உ.வே.சா. கொண்ட முதன்மைப் பாடமும், சங்க இலக்கிய ஆங்கில பெயர்ப்பாளரான வைதேகி ஹெர்பர்ட் அவர்கள் கொண்ட பாடமும் இது தான் என மொழிபெயர்ப்பாளர் குறிக்கிறார்.  இங்குக் கள்வன் என வரும் சொல் நண்டைக் குறித்து வருகிறது. முத்துநிலவன் அய்யா, இதைப் பார்த்தபின் இச்சொல் களவன் எனவரும் எனவும், சங்க இலக்கியச் சொல்லாட்சியில் அவரை விட அதிகப் பரிச்சயமுள்ள  நான் (??????) இதைக் குறித்து விளக்குவேன் என்னும் பொருளில் அப்பதிவின் பின்னூட்டத்தில்,

this is forwarded to Mr.Joseph Viju Trichy, who is well versed than me in wordings of sangam literature (even though he is an English teacher) Thank you grace.  

எனுமாறு  குறிப்பிட்டு எனக்குத் தனியே, ‘பார்த்துக் கருத்திடுமாறு‘ மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பி இருந்தார். என்மேல் அய்யா கொண்டது நிச்சயமாய் அதிகப் படியான நம்பிக்கைதான்.

அவரைப் பற்றியும் அவர் யாவர்க்கும் அளிக்கும் உற்சாகம் பற்றியும் அறிந்தோர், அவர்  என்போன்றோர்க்கு ஊக்கமூட்டக் கூறிய உரையிது என்று அறிவர். இது போன்ற நேரங்களில், எல்லாம் அறிந்திருந்தும், எங்களைப் போன்றவர்களுக்காக அந்த இடத்தை அவர் விட்டுச் செல்வது அவரது பெருந்தன்மையே ஆகும்.

என்னைப் போன்ற சாதாரண வாசகர்க்குக் ‘களவனாய்‘ இருந்தால் என்ன ‘கள்வனாய்‘ இருந்தால் என்ன இரண்டிற்கும் நண்டு என்று அர்த்தம். என்று சுலபமாக விட்டுச்செல்ல முடியும். இரு சொல்லுக்குமான அகராதிப் பொருளிலும் அவ்வாறுதான் இருக்கிறது. ஆனால் ஆய்வாளர்கள் அவ்வாறு விட்டுச் செல்ல முடியாது. இங்கு ஏதேனும் ஒரு வடிவம் தான் வந்திருக்க முடியும். அதுதான் பழைய வடிவம் ! அது எந்த வடிவம் ?
களவனா? கள்வனா?

இதில் என்னை வேறு மாட்டிவிட்டு விட்டார். சரியா தவறா எனக் காரணம் சொல்லத் தெரியாத பல நேரங்களில் வாசிப்பு அனுபவம் எனக்குக் கைகொடுத்தது உண்டு. எனக்கு முதலில் தோன்றியது “களவன் என்பதே சரியான வடிவம்“ . என்பது தான். 

அதற்காகச் சும்மா சொல்லிப் போய் விட முடியுமா? ஆதாரம் வேண்டுமே? கருப்பு சரியா? கறுப்பு சரியா என்று இதே போன்றொரு சிக்கலை முத்து நிலவன் அய்யா என் பதிவொன்றின் பின்னூட்டத்தில் முன்வைத்தது நினைவுக்கு வந்தது.

http://oomaikkanavugal.blogspot.in/2014/06/blog-post_15.html

அன்று ஒரு தவறை மறைக்க ஏகப்பட்ட விளக்கங்களைக் கொடுத்துத் “தலை தப்பிச்சது தம்பிரான் புண்ணியம்“ என இப்படியும் சொல்லலாம் அப்படியும் சொல்லாம் என சொல்லி வைத்துவிட்டேன். 

இங்கு இது சங்கச் செய்யுளாயிற்றே! அப்படி ஓடி விட முடியாதே! அன்று வழக்கில் இருந்த வடிவம் எது? எப்படிக் கண்டறிவது?

இந்தச் சிக்கலுக்கான காரணங்களில் ஒன்று முன்னர் நான் கூறியது. ஓலைச் சுவடிகளில் புள்ளி வைத்து எழுதப்படாமை. பயிற்சி இருப்பவர்கள் நாம் இப்பொழுது படிப்பது போல் அதைப் புள்ளி இல்லாமலேயே படித்து விட முடியும். இது போன்ற சிக்கலான இடங்களில் பழம் மரபில்  ஆசிரியர் உரைத்தலை அமைவுறச் சங்க இலக்கியப் பாடம் சொல்லக்  கேட்கும் போது ‘கள்வன்‘ எனக் கொள்வதா ‘களவன்‘ எனக் கொள்வதா எனும் ஐயம் ஏற்பட வழியில்லை. ஆனால் உ.வே.சா காலத்தில் சங்க இலக்கியப் பயிற்சி இல்லாததையும் பத்துப் பாட்டு, எட்டுத்தொகை போன்ற நூல்களின் பெயர் போலும் அவர் காலத்தில் அறியப்படாமல் இருந்ததையும் ‘என் சரித்திரத்தில்’ அவரே கூறிச் செல்வார். 

ஒரு மரபின் தொடர்ச்சி அறுந்து போன நிலையில் மீள் வாசிப்புக்கு உட்படுத்தப் படும் இது போன்றவொரு செவ்விலக்கியத்தில் பயன்படுத்தப் பட்ட சொல், புள்ளி அற்ற நிலையில் இருக்கும்போது, அதை எப்படி வாசிப்பது என்கிற ஐயம் உ.வே.சா. விற்கு இருந்ததில் வியப்பில்லை. ஆதனால்தான் அவர் ‘கள்வன்‘ என்பதை முதன்மைப் பாடமாகக் கொண்டுவிடுகிறார். அடிக்குறிப்பில் பிரதிபேதமாக “களவன்“ என்பதை அவர் குறிப்பிடுவது கூட, பிரதி பேதம் அல்ல! எல்லாப் பிரதியிலும்         “ களவன “ என்றுதான் இருந்திருக்கும் போது அச்சொல் எப்படிப் பிரதி பேதமாக முடியும்? அது வாசிப்புப் பேதம் தான்! மிக ஆச்சரியப்படக் கூடிய விடயம் என்ன வென்றால் , நானறிந்த  வரைச் சங்க இலக்கியங்கள் தவிர, பிற்கால எந்த இலக்கியத்திலும் நண்டைக் குறிக்கக் களவன் என்ற சொல்லோ கள்வன் என்ற சொல்லோ பயன் படுத்தப் படவில்லை என்பது தான்!

நம் எல்லாருக்கும் தெரியும் கள்வன் என்ற சொல்லை நாம் திருடனைக் குறிக்கப் பயன்படுத்துவது. நம் இலக்கியங்களில்  வெவ்வேறு பொருளைக் குறிக்கும் படியான ஒரே சொற்கள் உண்டு. அதை வேறுபடுத்திக் காட்டப் புலவர்கள் அடையைப் பயன்படுத்துவர். 

சான்றாகக் “ களிறு “ என்ற சொல். இந்தச் சொல் யானையைக் குறிக்கப் பயன்படும் என்பதை நாம் அறிவோம். அதே நேரம் சங்ககாலச் சூழலில் இச்சொல் பன்றியைக் குறிக்கவும் பயன்பட்டிருக்கிறது.

ஒரு புலவன் அரசனை “ களிறு அன்னாய் ! ( யானை போன்றவனே) என்று புகழ்வதாக வைத்துக் கொள்வோம். சங்ககாலத்தில் இதைக் கேட்கும் அரசன் “பன்றி மாதிரியானவனே“ என்று பொருள் கொள்ளவும் இடமுண்டு. இப்படிப் பொருள்மாறாட்டத்தைத் தடுக்கப் புலவர்கள் ஒரு வழியைக் கையாளுவர். அது அச் சொல்லுக்கு முன் ஒரு அடையைச் சேர்த்து விடுவது. சான்றாகப் “பெருங்களிறு“ ( குறிஞ்சிக்கலி-12) என்பது போல. 

இலக்கணங்கள் இவ்வாறு கூறுவதை வெளிப்படை என்னும். ( இது தெரியாமல் சுஜாதா தம் புறநானூறு உரையில் “ நரியைப் பரியாக்கிய சிவபெருமானைப் போல “பன்றியை யானை ஆக்கி“ உலவ விட்டது தனிக்கதை)

முதலில் “ புள்ளிக் கள்வன் “ என இந்தச் சொல்லைப் பார்த்தபோது கள்வன் எனும் சொல் திருடனையும் நண்டையும் குறிக்கும் பொதுச் சொல்லாதலால் அதை வேறுபடுத்தப் புள்ளி எனும் அடை கொடுத்து இங்குக் கள்வன் எனக் கூறப்படுவது நண்டே என வெளிப்படுத்தற்கு அமைத்திருப்பரோ எனக் கருதினேன். 

ஆனால் பல வகையான நண்டுகளுள் புள்ளி பெற்ற நண்டை வேறுபடுத்திக் காட்டவும் இந்த அடை பயன்பட்டிருக்கலாம் என்னும் காரணத்தால் இவ்வாதத்தை முன்னெடுத்துச் செல்வதில் தடங்கல் ஏற்பட்டது. 

பின் ஒரு வழி தோன்றிற்று. இந்தச் சொல் வெண்பா யாப்பிலோ. கட்டளைக் கலித்துறை வடிவத்திலோ வந்திருந்தால் எளிதாகக் கள்வனா களவனா எனக் கண்டுபிடிததிட முடியுமே என்று எண்ணினேன். வெண்பா யாப்பில் கள்வன் என்பது நேர் நேர் என அசைக்கப்பட்டு தேமா எனவும் களவன் என்பது நிரை நேர் என அசைக்கப்பட்டு புளிமா எனவும் கொள்ளப்படும்.  இவற்றிற்கு முன்னும் பின்னும் வரக்கூடிய சொற்களுக்குக் கட்டுப்பாடுகள் உண்டு. எனவே வெண்பாவில் இந்தச் சொல் வந்திருந்தால் இதன் உண்மை வடிவத்தைக் கண்டுபிடிக்க வழியுண்டு.

அதே போல் கட்டளைக் கலித்துறை என்னும் வடிவம் நேரசையில் தொடங்கும் அடிக்குப் பதினாறு எழுத்துக்களும் நிரையசையில் தொடங்கும் அடிக்குப் பதினேழு எழுத்துக்களும் வருமாறு அமையும். இதில் மெய் எழுத்துக்களை எழுத்தாகக் கருதிச் சேர்ப்பதில்லை. எனவே களவன் என்பது மூன்று எழுத்தாகவும் கள்வன் என்பது இரண்டு எழுத்தாகவும் கொள்ளப்பட்டிருக்கும். ஆகக் கட்டளைக் கலித்துறைப் பாடல் ஏதேனுமொன்றில் இந்தச் சொல் வந்திருந்தாலும் கண்டுபிடித்து விடலாம். சிக்கல் என்னவென்றால், சங்கப்பாடல்கள் பெரிதும் ஆசிரிய யாப்பின. கட்டளைக் கலித்துறை வடிவம் அக்காலத்தில் இல்லை. ஆனால் சோதனைக்கென்றே பிற்கால இலக்கியங்களில் இந்தச் சொல்லாட்சி இல்லை. நான் பெரிதும் என் ஐயங்களைத் தீர்த்துக் கொள்ளும் என் அய்யா, முனைவர் பா.மதிவாணன் அவர்களைக் கேட்டபோது, அன்றாட மீனவர் வழக்கில் இச்சொல் வழங்கப்படுகிறதா? வழக்கில் உளளதென்றால் எவ்வாறு வழங்கப்படுகிறது என்று அறிவதன் மூலம் தீர்வு கண்டு விடலாம் என்றார். அடடா! இவ்வளவு நேரம் மண்டையை உடைத்துக் கொண்டோமே என நினைத்து, நேற்று இரவு அப்படியே, இதைச் சகோதரியின் வலைப்பூவில் 

    வணக்கம்.
First and foremost, the literary artistry went into translating this poem is highly commendable.
I am just a humble reader of this blog and, clearly not an erudite arbiter of Sangam literature as Pulavar.Na.Muthunilavan           claims.
Since I am being dragged to explain my stand on this, I bound to share my perspectives.
It is not a contemporary quandary, the uncertainties shrouded in identifying the correct word form while expounding Sangam poetry has provoked a serious debate among the authorities of Sangam literature a long before and still continues to haunt us.
Premise 1: The palm leaf inscriptions are devoid of dots. So, the word Kalavana (
களவன) can be perceived as Kalvan (கள்வன்) or kalavan (களவன்) or in this         case    both.
Premise 2: later sangam accepts the usage of both the word interchangeably to mean      crab.
That being said, the synonymous trait shared by the two aforementioned seemingly identical words further exacerbates the obscurity and makes it difficult to identify the exact form (i.e. text) of word that was really intended.
In my opinion the traditional learning of Sangam text had been curtailed in the course of time and led us to confront these obscurities. Even Vu.Ve.Sa has acknowledged this in his memoirs named “En Sarithiram” (My legacies). From my acquaintance with Sangam literature, Kalavan (
களவன்) could be the more appropriate word form in this context.
There are few other hypothetical ways to substantiate my claim, for instance, when this particular Word were constructed by following the stipulations of “Venba” or “Kattalai Kalithurai. It could have been much easier for us now to decode the text. Unfortunately, these are post sangam tools to compose a less ambiguous poetry.
While going through this never-ending turmoil, Prof.B.Mathivanan offered me a simple solution to look up for these words (or seemingly close words) in Dravidian languages or at least in the slang of Tamil fishermen.
I am apologetic for replying such late, I hope this seminal issue will lead us to a healthy     debate.
நன்றி!

என இக்கருத்து      இன்னும் பல ஆரோக்கியமான விவாதங்களுக்கு இட்டுச்செல்வதாய் அமையும் எனப் பின்னூட்டமிட்டு முத்துநிலவன் அய்யாவிற்கும் தெரியப்படுத்தி விட்டேன். என்றாலும் இது தான் சரி எனச் சொல்ல முடியாமையால் நிம்மதி இல்லை. முத்துநிலவன் அய்யா வழக்கம் போலவே என்னைப் பாராட்டிக் கலித்தொகை பற்றி அடிக்கோடிட்டுக் காட்டியிருந்தார். கலித்தொகையில் ஒரு இடத்தில் களவன் வருகிறது என்பதைக் குறித்து வைத்திருந்தேன். கலிப்பா எனும் பாவினுள் பல வகை உண்டு. அதன் ஒரு வகை கலிவெண்பா என்பது. வெண்பாவின் வகைகளுக்கு அடிவரையறை உண்டு. குறைந்த பட்சம் இரண்டு அடிகள்( குறள் வெண்பா) அதிக பட்சம் பன்னிரண்டு அடிகள் (பஃறொடை வெண்பா)

பன்னிரண்டு அடிகளுக்கு மேலே போய்விட்டால் அது கலிவெண்பா என கலிப்பாவின் வகைக்குள் வந்துவிடும்.( தூது நூல்கள் எல்லாம் இந்த வகையில் அமைவன). சரி .கலித்தொகையில் களவன் வரும் இடத்தைப் பார்த்துவிடுவோம். எனப் புரட்டினேன்.


புள்ளிக் களவன் புனல்சேர் பொதுக்கம்போல்
 வள்ளுகிர் போழ்ந்தனவும் வாளெயி றுற்றனவும்
 மொள்ளிதழ் சோர்ந்நநின் கண்ணியு நல்லார்
 சிரறுபு சீறச் சிவந்தநின் மார்புந்
 தவறாதல் சாலாவோ கூறு “ ( மருதக்கலி -23;10-14)
துள்ளிக் குதித்து விட்டேன். நச்சினார்க்கினியர் இதன் யாப்புவடிவத்தைக் கலிவெண்பா என்று குறிக்கிறார்.

அலகிட்டுப் பார்ப்பினும் இவ்வடிகள் வெண்பா இலக்கணத்தைப் பெற்றுள்ளன என்பது புலனாகும். இங்கும் ஓலைச்சுவடியில்,

“ புளளிக களவன “ எனவே இவ்விரு சீர்களும் காட்டப்பட்டிருக்கும்.
ஆனால் இங்கு இதைப் ‘புள்ளிக் கள்வன்‘ என்று கொள்ள முடியாது. ஏனென்றால்  அது “ நேர்நேர் – நேர்நேர் “ என அசைக்கப்பட்டு நேர் – நேர் ஒன்றும் நேரொன்று ஆசிரியத் தளை ஆகி வெண்பாவின் இலக்கணம் கெட்டு விடும். 

 “புள்ளிக் களவன்“ என அமைந்தால் மட்டுமே ( நேர்நேர் – நிரைநேர்) என நேர் நிரை ஒன்றி இயற்சீர் வெண்டளையாய் வெண்பாவின் இலக்கணத்துட்படும்.

எனவே “களவன“ சுவடியுள் எழுதப்பட்டு ‘கள்வன்‘ என உ.வே.சா. அவர்களால் முதன்மை வாசிப்புப் பிரதியாகக் கொள்ளப்பட்டது களவன் என்றே இருக்க வேண்டும்.

“அலவன் அள்ளி குளிர்ஞெண்டார் மதி
களவன் என்றிவை கற்கடகப் பெயரே“ 

என நண்டின் வேறு பெயர்கள் காட்டும் சேந்தன் திவாகரத்தில் ” அலவன்- களவன் “ என வரும் ஒலிபற்றிய எதுகை அமைப்பும்  இதை மேலும் உறுதிப்படுத்தும்.

இன்னும் சொல்ல வேண்டுமேல் அலவன் களவன் ஞெண்டு, கற்கடகம் என்பன நண்டு என்னும் ஒரு பொருள் குறித்த பல சொல்லாக வழங்கப் படினும் இவற்றிடையே வேறுபாடுண்டு. அலவன், களவன் என்பன ஆறும் வயலும் இடமாய்க் கொண்டு வாழ்வன. ஞெண்டு கடல்சார்ந்து வாழ்வது.
எப்படியோ, இந்தக் குழப்பம் தீர்ந்த மகிழ்ச்சியில் இன்றிரவு நன்றாக தூக்கம் வரும்.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

45 comments:

  1. படிக்க, படிக்க, ஆச்சர்யமாக இருக்கிறது நண்ரே.... தங்களை பாராட்டுமளவுக்கு எமக்கு போதாது,,,
    தற்போது எனது எனக்குள் ஒருவன் காண,,,,

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர் ஜி.
      உங்களின் முதல் பின்னூட்டத்திற்கும் சேர்த்து.
      ஆய்வுக் கட்டுரைகள் என்றாலே தவிர்த்துப் போய் விடும் சூழலில் நீங்கள் படித்ததும் கருத்திட்டதும் குறித்து பெரிதும் மகிழ்ச்சி!

      Delete
  2. சிறந்த இலக்கியப் பொழிப்பு
    பாராட்டுகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக நன்றி அய்யா!

      Delete
  3. உங்களுக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  4. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. வணக்கம்.
    ஆஹா..ஒரு ஐயத்திற்கு முழுபொறுப்பும் எடுத்துக்கொண்டு ஆய்ந்து பதில் சொல்லிவிட்டீர்களே. அசந்து அமர்ந்திருக்கிறேன். மொழிபெயர்ப்பையும், எழுந்த ஐயத்தையும் குறிப்பிட்டு பதிவிட்டதற்கு முதலில் என் மனமார்ந்த நன்றி.
    பிள்ளைகளுடன் வீட்டுப்பாடம், இரவு உணவு என்று நேரம் சென்றாலும் மனதில் 'களவன்-கள்வன்' ஓடிக்கொண்டே இருந்தது. உ.வே.சா. பிரதிபேதமாக களவன் என்று குறிப்பிட்டதை மீண்டும் எடுத்துப் பார்த்தேன். என் சரித்திரம் இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்திருப்பதால் அதில் களவனைத் தேடி ஓய்ந்துபோனேன். :) என்னுடைய சாதாரண மனதிற்கு கள்வன் என்றால் அனைவரும் திருடன் என்று அறிவர், அதனால் களவன் என்று பயன்படுத்திக்கொள்ளலாமோ என்று தான் தோன்றியது. கலித்தொகைப் பாடலையும் வெண்பா இலக்கணத்தையும் அழகாக ஒப்பிட்டு தெளிவு படுத்திவிட்டீர்களே. இரண்டையும் ஒப்பிட்டு இவ்வளவு அழகாய் ஒரு தெளிவு வருமாறு பதிவிட்டதைக் கண்டு வியந்து மகிழ்கிறேன். வெண்பா இலக்கணம் பள்ளியில் படித்ததோடு சரி..அதனை இப்படி ஆய்ந்து உணரப் பயன்படுத்தலாம் என்று தெரிவித்ததற்கும் நன்றி.
    உங்களை அறிமுகம் செய்த திரு.முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்துவதோடு நில்லாமல் இப்படி உதவியும் செய்கிறார்கள். அவர்கள் நட்பு கிடைத்தது என் பாக்கியமே.

    மீண்டும் உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி!
      வணக்கம். இந்தத் தேடலுக்கும் ஆய்வுக்கும் உங்களின் அருமையான மொழிபெயர்ப்புப் பதிவுதான் ஆதாரம். சிறு கருத்து வேறுபாட்டிற்கும், உரிய இடமும் மதிப்பும் அளித்துத் தீர்வுகாணத் தயாராய் இருப்பவர்கள் நான் கண்டவரைத் தமிழ்ச் சமூகத்தில் குறைவுதான். உங்கள் மொழிபெயர்ப்புப் பணியை வாழ்த்தும் அதே நேரம் பிறருடைய கருத்துக்களுக்கு நீங்கள் அளிக்கும் மதிப்பைக் கண்டு வியக்கிறேன. நிச்சயமாய்த் தமிழுலகில் நீங்கள் பேசப்படும் நாள் தொலைவில் இல்லை.உங்களை எல்லாம் பார்க்க நான் கற்க இன்னும் இருக்கிறது. அதற்கு முடிவுதான் ஏது?
      இரண்டு கருத்துக்களை உங்களின் பின்னூட்டத்தில் கூற விரும்புகிறேன்.
      1) பிரதி பேதம் அல்லது பாட பேதம் என ஐயர் பதிப்பித்த ஓலைச் சுவடிகளில் காணப்படுவது இரண்டு ஓலைகளில் காணப்படும் வேறுபட்ட சொல் ஆட்சி கருதியது.
      புறநானூற்றில் வரும் “ பார்ப்பார் தப்பிய “ என்ற அடிக்குக்
      “ குரவர் தப்பிய “ என ஒரு ஓலைச்சுவடியில் காணப்பட்டால் , ஒன்றிற்கு மேற்பட்ட சுவடிகளில் காணப்படும் பெரும்பான்மை வழக்கு நோக்கியோ, பயிற்சியிலோ, அல்லது இவ்வரிகள் வேறேதேனும் உரை மேற்கோள்களில் வருமிடம் கண்டோ ஒரு பாடத்தை முதன்மைப் பாடமாகக் கொண்டு, மற்றொன்றை (பி-ம்) எனக் குறிப்பது சுவடியை அச்சில் பதிப்பிக்கும் ஐயர் வழக்கு.
      ஆனால் இவ்விடம் புள்ளி இல்லா சுவடிமுறையால் ஐயர் கண்ட அனைத்துச் சுவடிகளிலும் “ களவன “ எனவே எழுதப்பட்டிருக்கும். இதில் பிரதி பேதம் இல்லை.
      எப்படி வாசிப்பது? எங்கு புள்ளி இட்டு அச்சில் பதிப்பிப்பது? என்பதுதான் பிரச்சனை!
      2) என் சரித்திரத்தில் களவன் இல்லை. ஆனால் சங்க இலக்கியப் பயிற்சி இன்மையைப் பற்றியும் அவ்விலக்கியங்களைத் தேடிச் சலித்தமை குறித்தும்
      உ. வே. சா. குறிப்பிடும் இடம் உண்டு.
      முத்து நிலவன் அய்யாவின் பணிகளைப் போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம்.
      நன்றி!

      Delete
    2. வணக்கம் ஐயா.
      என் ஐயத்தைத் தீர்த்துவைத்தமைக்கு நன்றி. நான் தமிழறிஞர் இல்லை ஐயா, தமிழ் மேல் கொண்ட காதலால் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். யான் பெற்ற இன்பத்தை உலகினர் அறிய வேண்டும் என்று விழைகிறேன், அவ்வளவே. // நிச்சயமாய்த் தமிழுலகில் நீங்கள் பேசப்படும் நாள் தொலைவில் இல்லை// உங்களின் இந்த வாழ்த்து மனம் மிக மகிழவைக்கிறது. அதற்கு நான் தகுதியாகும்படி மேலும் கற்கத் தூண்டுகிறது. மனமார்ந்த நன்றி சகோதரரே..

      Delete
  6. நான் யாரையும் அர்த்தமின்றிப் புகழ்ந்தறியாதவன். ஒவ்வொருவரிடமு்ம் ஏதேனும் ஒரு திறன் இருக்கும் என்று நம்புபவன். அதன்படி, திறமை இருப்பவரை, இருக்கும் திறனை மிகையின்றி எடுத்துச் சொல்வேன். அவ்வாறே ”என்னிலும் சங்க இலக்கியச் சொல்லாட்சியிற் சிறந்த நண்பர் விஜூ இதுபற்றி விளக்குவார்” என்று சிறந்த மொழியாக்கங்களைச் செய்துவரும் தங்கை கிரேசுக்குச் சொன்னேன். அது உண்மைதான் என்பதைத் தனியொரு பதிவின் வழியே நண்பர் விஜூ எடுத்துக் காட்டியிருக்கிறார். அவர் திறன் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். “நான் சொன்னது, உண்மை வெறும்புகழ்ச்சி இல்லை” ஏனெனில் --
    “அய்யர் உரையால்,நம் அய்யம் களைந்திடச்
    செய்தான் (அக்) களவன் மகன்“ (நன்றி -கபிலர், கலித்தொகை-51)

    ReplyDelete
    Replies
    1. அய்யாவுக்கு வணக்கம்.
      மனம் வருந்தச் செய்தேனோ அய்யா? சங்க இலக்கியங்களில் உண்மையாகவே எனக்கு ஆழ்ந்த பரிச்சியமில்லை !
      கலித்தொகை படித்திருக்கிறேன். பின் பத்துப்பாட்டு. அதுவும் கூட இவற்றிற்குள்ள நச்சினார்க்கினியரின் உரைப்புலமைக்காய்!
      அங்கொன்னும் இங்கொன்றுமாகக் காட்டப்படும் பிற சங்கப் பாடல்களைப் பொதுவாக வாசித்திருப்பேனே ஒழிய நுட்பமாய் முழுதும் படித்ததில்லை என்பதுதான் உண்மை நிலை. இனியேனும் படிக்க வேண்டும்.
      நீங்கள் அவற்றிற்கான வாய்ப்பினைத் தந்து போகிறீர்கள்.

      “அறிவினாக்களும் ஐயவிடைகளும்“ என்னும் என் முந்தைய பதிவைப் போலத் தீர்வினை உங்களால் சொல்ல முடிந்த இடத்திலும் கண்டுபிடிக்குமாறு சொல்லி எங்களைப் படிக்கத் தூண்டுகிறீர்கள், மீன் கொடுக்காமல் தூண்டிலைக் கொடுப்பது போல!
      அய்யரின் பதிப்புப் போல ஆராய்ச்சிப் பதிப்புகளை இன்று வரை எவரும் வெளியிட்டதில்லை ( இ.வை. அனந்தராமையர், வையாபுரிப்பிள்ளை, வை.மு. கோபாலகிருஷ்ணமாசாரியார் இவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் தொடர்ந்த ஆக்கங்கள் இல்லை)
      ஆராய்ச்சி முடிந்து விடவில்லை. இங்கு கள்வன் எனும் பாடத்தை அய்யர் கொண்டமைக்கான வலுவான காரணங்களை நாம் ஆராய வேண்டியுள்ளது.
      நேற்றிரவு நான் நன்றாகத் தூங்கினேன்!
      கடைசியாக, வருவது “ கள்வன் மகன் “ தானே அய்யா?
      பிரச்சனை ஒன்றும் இல்லையே!
      நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உள்ளது.
      நன்றி!

      Delete
    2. பிரச்சினை ஒன்றும் இல்லை விஜூ. கடைசியாக வருவது “கள்வன் மகன்“ எனும் பொருளில்தான்..(கலித்தொகை 51இன் கடைசிவரி) ஆனால் “அக்“ சேர்த்தால் கள்வன் என்றும் சேர்க்கா விடில் களவன் என்றும் படித்தால் வெண்டளை பிழையாத தன்மைகை்காகவும், பலஇடங்களில் கள்வன்-களவன் சொல் மாற்றத்தினை நினைவூட்டுவதற்காகவும் அப்படிப் போட்டேன். (இதெல்லாம் இப்படி உரையெழுதி நானே விளக்கும் அளவிற்கு நான் எழுதிய குறள் “லட்சணமாக“ இருந்திருக்கிறது! (லட்சணமாக என்னும் சொல்கூட இலக்கணம் சரியாக இருக்கிறது கவிதை இல்லை என்பதை தொனிப்பொருளாக உணர்த்துவதாக இருக்கிறது பாருங்கள்)

      Delete
  7. உலக தமிழ் ஆராய்ச்சியாளார்கள் மேற்க்கொள்ள வேண்டிய தமிழ்ப் பணியினை
    திரு.ஜோசப் விஜு அவர்கள் வலைத் தளத்தில் செய்து வருவதற்கு முதலில்
    எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாசிப்பிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி வேலு அவர்களே!
      இணைந்து இன்னும் தொடர்வோம்!
      நன்றி!

      Delete
  8. சகோதரரே,

    இந்த பதிவு முழுவதும் பொதிந்திருக்கும் தமிழின் உண்மைகளை பற்றி நான் எதுவும் கூறப்போவதில்லை ! இந்த பதிவின் பின்னால் ஒளிந்திருக்கும் உங்களின் பல்லாண்டுகால " தமிழ் தவ வாசிப்பு " மற்றும் அர்ப்பணிப்பில் நூறில் ஒரு விழுக்காடு இருந்தால் மட்டுமே அது சாத்தியம் என்பதால் !

    ஆனால் நான் வியந்த மற்றொரு விடயம் இந்த பதிவு முழுவதும் பரவியிருக்கும் உங்களின் உண்மை ! எக்காரணம் கொண்டும் யார் மனதையும் புண்படுத்திவிடக்கூடாது என்ற உறுதி ! நீங்கள் கூறுவது சரியென தெரிந்தாலும் அதனை அதிகபட்ச உதாரணங்களோடு முன்னிறுத்தும் பாங்கு.

    உங்கள் தமிழ் புலமை தெரிந்ததுதான் ! இந்த பதிவில்தான் உங்களின் ஆங்கிலத்தை வாசித்தேன்...

    எதிர்காலம் உங்களுக்கென ஒரு மிக சிறப்பான உயரத்தை தேர்வு செய்துவைத்திருக்கிறது சகோதரரே...

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      வணக்கம். தங்களின் பின்னூட்டங்கள் குறித்துத் தனி பதிவே போட்டுவிடலாம் போல! எல்லாம் தொலைவில் இருந்து பார்க்கும் போது சாத்தியப்படாதது போலத்தான் தோன்றுகிறது.
      உள்ளே குதித்து விட வேண்டியது தான்.
      உயிர் வேண்டுமானால் நீந்தக் கற்க வேண்டும். இல்லையேல் மூழ்கிச் சாகவேண்டும் என்பதைப் போல! எனக்கென்ன வசதி என்றால் மூழ்கிச் சாகாமல் கைபிடித்துத் தூக்கி விடத் தமிழறிஞர்களைத் துணைகொண்டு தைரியமாய்க் குதித்து விடுகிறேன்.
      நீங்களும் வாருங்கள்.
      தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்னும் பழமொழி தமிழில் உண்டு தானே!
      ( மின்னஞ்சல் கிடைத்ததா அண்ணா? தாமதத்திற்கு வருந்துகிறேன் )

      Delete
  9. வணக்கம் ஐயா!

    அருமை! மிக அருமை!

    இன்றைக்கென்று எனக்கு நேரமே கிட்டாமல் இப்போதான் வலைக்கு வரமுடிந்தது.
    வந்து பார்த்ததும் ஆகா.. ஐயாவின் புதுப்பதிவு என்று ஆவலாக வந்த எனக்கு..... எனக்..கு ’ஐயோ.. இதெல்லாம் - சங்க இலக்கியம் - உனக்குப் புரியுமா இளமதின்னு’ என் மனச்சாட்சி கேட்டதுதான் புரிந்தது...:)

    இவற்றையெல்லாம் நான் எங்கே படித்தேன் ஐயா!..
    ஆவல் நிறைய உண்டு. ஆனால் கிடைப்பதும், கிடைத்தாலும் புரிவதற்கும் காலநேரம், சக்தி போன்றன என்னிடம் இருக்க வேண்டுமே. ஆதங்கம் தான்!..

    பார்த்துப் படித்து பயன் பெற முயல்கிறேன் ஐயா!..

    அருமையான பணி! சிறந்த தேடல்கள்!

    தொடருங்கள் இவை போன்ற ஆய்வுகளை மேலும்...

    தங்களுக்கும் தோழி கிரேஸ், மற்றும் முத்துநிலவன் ஐயாவுக்கும்
    என் உளமார்ந்த நன்றியுடன் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      என் பதிவை ஆவலாகப் படிக்கிறீர்கள் எனக் கேட்டதும் சந்தோஷம் தாங்க முடியல!
      இந்த வரி ஒன்று போதும் இன்னும் பத்து பதிவுகள் எழுதி விடுவேன்.
      நன்றி!

      Delete
    2. அவசரப்பட்டுத் தவறாகப் புரிந்து கொண்டேனோ?
      எனக்கு, எனக்.....கு, ஐயோ என்பதை பார்க்கத் தவறிவிட்டேன்.
      இருந்தாலும் பாராட்டுகிறீர்களே,
      உங்கள் நல்ல மனம் வாழ்க!

      Delete
  10. என் உள்ளங்கவர் களவன் தான் அது.
    நான் மிகவும் விரும்பி உண்பேன்...)))

    அருமையான தேடல் ஐயா.
    இந்த அளவிற்கு எல்லாம் எனக்கு அறிவு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்காக Special ஆகப் புள்ளிக் களவனையே கொடுத்திருக்கிறேனே சகோதரி!
      பத்திரமாய் பிடித்துச் சமைத்து எனக்கும் கொஞ்சம் கொடுத்தனுப்புங்கள்!
      கவிதை சிறுகதை தொடர்கதை என மரபிலும் நவீனத்திலும் கலக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் “ இந்த அளவிற்கு அறிவு இல்லை “ என்று பொய் சொன்னால் நண்டு கொடுக்கால் கடித்துவிடப்போகிறது. அதற்காகவென்றே அரிச்சந்திரன் வளர்த்த நண்டாகப் பார்த்துப் பிடித்துப் போட்டிருக்கிறேன்.
      நன்றி!

      Delete
  11. வணக்கம்!

    களவனா கள்வனா ஆய்ந்தளித்தீர்! முத்து
    நிலவனார் நெஞ்சம் நெகிழ! - நலமுடன்
    சூடா மணிநிகண்டு சொல்லும் விளக்கமுடன்!
    வாடாமல் நன்றே வகுத்து!

    மண்டல புருடர் எழுதிய சூடாமணி நிகண்டில் உள்ள பாடலைக் கீழ்த் தருகிறேன்.

    நளிவிடம் தெறுகால் துட்டன் ஆட்டிய விருச்சிகம் தேள்!
    களவனே குளிர நள்ளி கவைத்தாள் கர்க்கடகம் ஞெண்டே
    உளுவு உசுவாகுமென்ப உற்ற வண்டூகம் தேரை
    தளரரி நுணலை நீகம் தவளையாம் போகமும்போ்!

    பாட்டின் விளக்கம்

    தேளின் பெயர் : நளிவிடம், தெறுகால், துட்டன், விருச்சகம்

    ஞெண்டின் பெயர் : களவன், குளிரம், நள்ளி, கவைத்தாள், கா்க்கடகம்

    உளுவின் பெயர்: உசு

    தவளையின் பெயர் : மண்டூகம், தேரை, அரி, நுணலை, நீகம், போகம்

    சூடாமணிப் பாட்டில் களவன் என்ற சொல் எதுகையில் அமைந்துள்ளதால் குழப்பமின்றி உணரலாம்.

    அபிதானமணி மாலை என்ற நுாலில் 784, 785 ஆகிய நுாற்பாக்கள்
    நண்டின் பெயர்களை உரைக்கின்றன.

    784.
    நண்டு குளீரம் நளிர் குளிர்நள்ளி புள்ளி
    அண்டகம் ஞண்டு ஞெண்டு அலவன் கவைத்தாள்
    கள்வன் மதி கருக்கடகம் ஆமே!

    785.
    ஆண்நண்டின் பெயர் அலவன் என்ப.

    இங்குக் கள்வன் என்று வந்துள்ளது. களவன் என்ற சொல் பின்னாளில் கள்வனெனப் பிழையாக வழங்கி இருக்கக்கூடும்.

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்!
      நீண்ட நாட்களாக உங்கள் பின்னூட்டம் இல்லாமல் மனம் சோர்ந்திருந்தேன். உங்களின் தமிழ்ப்பணிகளுக்கிடையில் தொந்தரவு செய்யக் கூடாது என்பதால் மின்னஞ்சலும் அனுப்பவில்லை. ஒட்டுமொத்தமாய்ச் சேர்த்து செறிந்த பின்னூட்டமொன்றை இட்ட உங்களின் இந்தப் பின்னூட்டமே ஆழக்கால் பட்ட உங்கள் புலமையின் அடையாளம்!
      எதுகைச் சான்றை நான் இறுதியாகக் கொண்டது, எதுகை நயத்திற்காய் செய்யுள் விகாரமாய்ப் புலவர்கள் பல சொற்களை மாற்றிவிடவும் இடமுண்டு என்பதால் தான்!
      இந்தச் சங்கச் சொல்
      வேறேதேனும் பிற்கால இலக்கியங்களில் ஆட்சி பெற்றிருந்தால் காட்ட வேண்டுகிறேன்.
      சங்கச் செய்யுளான கலித்தொகையில் இச்சொல்லின் ஆட்சியும் வெண்பா வடிவில் இது அமைந்திருப்பதும்
      களவன் என்பதை நிறுவ ஆதாரமாக அமைந்த போதும், நிச்சயமாய் இவ்விலக்கியத்தை நன்கறிந்த ஐயர் ஏன் கள்வன் என்பதை முதன்மைப் பாடமாகக் கொண்டார் என்பதை அறிய விரும்புகிறேன். தெரிந்திருப்பின் தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.
      ஒவ்வொரு பதிப்பிலும், தவறுகள் திருத்தியும், செம்மைப் படுத்தியும் பதிப்பித்தலை இயல்பாகக் கொண்ட உ.வே.சா அவர்கள் மறுபதிப்பிலும் இப்பாடமே கொண்டமைக்கு நுட்பமான காரணங்கள் கண்டிப்பாய் இருக்க வேண்டுமென்பது என் எண்ணம்! உங்கள் பதிலுக்காய்க் காத்திருக்கிறேன். திருக்குறளில் மிறை கவிகள் கண்டுணர்த்த உங்களை
      “ இருட்டில் மறைந்த விளக்கு“ எனும் என் பதிவொன்றைக் காண அழைக்கிறேன்.
      நன்றி!

      Delete
    2. உ.வே.சா அவர்கள் நினைத்த காரணங்களை அறிய நானும் ஆவலாய் இருக்கிறேன். நன்றி.

      Delete
  12. "ஊமைக் கனவுகள்" விஜு ஐயா! நாங்கள் ஊமைகளாகிப் போனோம்! தங்களது இந்த ஆய்வைப் படித்து! தங்களது புலமையை முத்துநிலவன் ஐயா சொன்னது மிகையல்ல! ஆங்கிலமும், தமிழும் துள்ளி விளையாடுகின்றன! தங்களது அருமையான விள்க்கங்களைக் குறித்துக் கொண்டோம்! நல்ல தமிழும், ஆங்கிலமும் கலந்து கற்பிக்கப்படும் ஒரு வகுப்பைப் போல் உணர்ந்தோம்! பின்னூட்டங்களும் பல விளக்கங்களுடன் இருப்பதால் நல்ல ஒரு healthy debate என்றுதான் சொல்ல வேண்டும். அவற்றையும் குறித்துக் கொண்டோம்! எஙள் அறிவை வளர்க்கத்தான்! இது போன்ற புலமை மிக்க அறிவாளிகளுக்கிடையில் நாங்களும் இருப்பது எங்களுக்கு மிக்க மகிழ்வாக உள்ளது! நிறைய கற்க முடிவதால்...

    மிக்க நன்றி! ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தமிழ் கற்றுக்கொண்டது. ஆங்கிலம் பெற்றுக் கொண்டது. இப்பதிவின் மூலமாக நானும் படிக்க வேண்டியது நிறைய இருக்கிறது எனத் தெரிந்து கொண்டேன் அறிஞரே! எல்லாவற்றிலும் எல்லாரும் புலமை பெறுவது கடினம் தான். அப்படி ஒரு நிர்பந்தத்திற்கு உள்ளாகும் போது வாசிக்கும் பரப்புச் சற்று விரிவடைவதில் மகிழ்ச்சியே!
      உங்களின் கருத்தும் தன்னடக்கமும் உங்கள் சான்றாண்மையைக் காட்டுகிறது. பெரிதும் மகிழ்கிறேன்.

      Delete
  13. ஐயா, முதலில் தங்களின் திறமைக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.

    எனக்கும் சங்கப் பாடல்களுக்கும் தூரம் அதிகம். ஆனால் பாடல்களுடைய பொழிப்புரையை மட்டும் படித்து ரசிப்பேன்.

    தங்களின் இந்த ஆராய்ச்சியைப் பார்த்து, வியந்து விட்டேன். தங்களின் அறிமுகம் உண்மையில் என்னுடைய தமிழ் அறிவை வளர்க்கும் ஐயா. மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பெருந்தகையீர்,
      வணக்கமும் நன்றியும்! இது போன்ற பதிவுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டுமல்ல அறிந்து கொள்ள நமக்கும் ஏதோ இருக்கிறது எனப் படித்தும் பின்னூட்டமிட்டும் தொடரும் உங்களின் தமிழார்வம் மிகமிக வியப்பூட்டுகிறது. சங்கப் பாடல்களை ரசிப்பீர்கள் என்கிறபோதே உங்களின் மொழி ஆர்வமும், தமிழறிவும் புரிந்து விட்டது.
      உங்களைப் போன்றவர்கள் உள்ளவரை “மெல்லத் தமிழினி வளரும்.“
      நன்றி!

      Delete
  14. \\இது போன்ற புலமை மிக்க அறிவாளிகளுக்கிடையில் நாங்களும் இருப்பது எங்களுக்கு மிக்க மகிழ்வாக உள்ளது! நிறைய கற்க முடிவதால்.../// சகோதரர் துளசீதரன் சொன்னதை தான் நானும் நினைத்தேன். இந்த சின்ன அறிவுக்கே எட்டியது அன்றே நான் நினைத்தது எவ்வளவு உண்மை என்பதை . நீங்கள் எப்படியெல்லாம் நிரூபித்துக் கொண்டு வருகிறீர்கள் தெரியுமா. எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியே. எனக்கு இவற்றை அறியும் அவா இருந்தும் ஆற்றலும் அறிவும் போதவில்லையே என்பது வருத்தமே. அதை விடுங்கள்.
    தாங்கள் எவ்வளவு பொறுப்புடன் கள்வன் களவன் என்பதை ஆராய்ந்து உதாரணங்களுடன் உறுதிப் படுத்தியுள்ளீர்கள். அனைவரும் அசந்து போகும்படி. எனவே நீங்கள் இனி நிம்மதியாக
    தூங்கலாம் இல்லையா. ஹா ஹா இல்லை இல்லை சுடச் சுடத் தானே பொன்னும் மின்னும். கேள்விகள் பிறந்தால் தான் உங்கள் புலமை இன்னும் மின்னும் இல்லையா ? ஹா ஹா கோபப் படாதீர்கள் என் மீது. தொடர வாழ்த்துக்கள் ....!
    வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
    Replies
    1. சகோதரி,
      தங்களது பின்னூட்டத்தைப் பார்க்கும் போதே ஏதோ இனம்
      புரியாத சந்தோஷம் மனதிற்குள்...........!
      வரிகளையோ அர்த்தங்களையோ பார்க்கத் தோன்றவில்லை முதலில்! திரை வழியே எதிரொலிக்கும் உங்கள் சிரிப்பின் சலனங்களைக் கண்டுபோகிறேன்.
      “ சங்கு சுட்டாலும் வெண்மை தரும் “ எனப் படித்திருக்கிறேன்.
      நீங்கள் பொன் எனக் கூறிவிட்டீர்கள்!
      உங்கள் பாராட்டு மழையில் உருகும் பொன்!
      நன்றி!

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  15. பல்வேறு பணிகள்
    இனைய தொடர்பில் சிக்கல் என
    பல காரணங்களால் உங்கள் தளம் வர முடியவில்லை ...
    இணையத்தின் தமிழ் வெளிச்சம்
    இவ்வளவு நாட்களாக எங்கே ஒளிந்திருந்தது ?

    ஒரு வார்த்தையை புரிந்துகொள்ள சரியாய் அதைச் சொல்ல எத்துனை வாசிப்பு வேண்டும் என்று நான் உணர்ந்துகொண்ட பதிவு ...
    உணரவைத்ததற்கு நன்றிகள் ..
    தொடரட்டும் தமிழ்ப்பணி
    சகோதரி கிரேசிற்கும், உங்களை செய்யப் பணித்த நிலவன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள் ..
    www.malartharu.org

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ஊர் கடந்து போனீர்கள் என்றறிந்தேன்.
      சந்திக்கக் கூட வில்லை!
      வருத்தம் உண்டு!
      நன்றி!

      Delete
  16. ஆரோக்கியமான விவாதம். ஆழ்ந்த பரிமாற்றங்கள். தங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்துவருகிறேன்.
    மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார் இன்றைய வலைச்சரத்தில். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் தகவலுக்கும் நன்றிகள்!

      Delete
  17. ஐயா ,'களவன்' அல்ல,'கள்வன்' என்று நிறுவிய தங்களின் திறம் வியந்து,செயல் மறந்து வாழ்த்துகிறேன்."பல்வேறு படிநிலைகளில் செம்மையாகப் பதிப்பிக்கும் உ.வே.சா அவர்கள்,'கள்வன்' எனக் கொண்டமைக்கு நுட்பமான காரணம் இருக்க வேண்டும்"...அட அட என்ன தங்களின் ஆய்வுத் தாகம்.நிலவன் அய்யா ஒருவரைப் புகழ்கிறார் என்றால் சும்மாவா...?!.ஆய்வுப் பந்தைத் தாங்கள் பக்கம் திருப்பி அனுப்பிய சகோதரிக்கும் நிலவன் அய்யா அவர்களுக்கும் நன்றி..!

    ReplyDelete
    Replies
    1. அது தமிழின் சீரிளமைத்திறம் தானே புலவரே!
      தங்களின் சிலம்புடைத்த கதையை எப்போது தொடர்வீர்கள்!
      ஆவலுடன் காத்திருக்கிறேன்.

      Delete
  18. அப்பப்பா! எப்பேர்ப்பட்ட விவாதம்!! என்ன ஓர் ஆராய்ச்சி! எட்டிப் பிடிக்க முடியாத வான் மேகத்துச் சித்திரத்தைக் கண்ணாலேயே விழுங்குபவன் போல் படித்து முடித்தேன் இதை! நன்றி ஐயா!

    ReplyDelete
  19. அய்யா!
    உங்களின் பெயர் எனக்குத் தமிழின் மேல் ஆர்வம் ஏற்படக் காரணமான தமிழாசிரியரின் பெயர். பெயரைப் பார்க்கும் போதே மட்டில்லா மகிழ்ச்சி!
    உங்கள் நடையைக் காணும்போது கவிதை எழுதுவீர்கள் போலத்தெரிகிறதே!
    மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. //உங்களின் பெயர் எனக்குத் தமிழின் மேல் ஆர்வம் ஏற்படக் காரணமான தமிழாசிரியரின் பெயர்// - அப்படியா! வியப்பாக இருக்கிறது!

      //நடையைக் காணும்போது கவிதை எழுதுவீர்கள் போலத் தெரிகிறதே!// - ஆம் ஐயா! கவிதை கிறுக்கு(வது)ம் உண்டு!

      மதித்துப் பதிலளித்ததற்கு நன்றி!

      Delete
  20. சங்க இலக்கியத்தின் பால் ஈடுபாடு கொண்டு வாசித்தறிந்து வியந்துகொண்டிருக்கும் எனக்கு கிரேஸ் பதியும் ஐங்குறுநூற்றுப்பாடல்கள் மிகவும் விருப்பமானவை. களவன்-கள்வன் வேறுபாடு குறித்து அவர்கள் எழுப்பிய ஐயம் இந்த அளவுக்கு ஒரு மாபெரும் விளக்கப்புதையலைக் கண்முன் கொண்டுவந்து கொட்டியிருப்பது கண்டு மகிழ்கிறேன். எந்த அளவுக்கு சிரத்தையாய் முயன்று தெளிவித்திருக்கிறீர்கள் என்பது உங்களுடைய பதிவின் விளக்கங்களின் மூலம் அறியமுடிகிறது. பின்னூட்டங்களும் கருத்துக்கு வலு சேர்க்கின்றன. மிக மிக நன்றி தங்களுக்கு.

    ReplyDelete
  21. வணக்கம்
    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
    http://blogintamil.blogspot.com/2014/09/RAJA-DAY-9.html?showComment=1409625104465#c5929268728443619592

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...:

    வலையுலக உறவுகள் கேட்டதிற்கு ஏற்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறேன்


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  22. அய்யா எனக்கு ஒரு பாடல் நினைவில்,
    ஆஅவலன் தன் பார்ப்பினோடு ஈரலையும் கொண்டு, ஈரலைப் புள்ளியுள்,,,,,,,,,,,,,,,,,,,, எனும் பாடல், அலவன் களவன் தானே,
    எனவே களவன் என்பது சரியாக இருக்கும் என் நினைக்கிறேன்.
    முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டிப்
    பூக்குற்று எய்திய புனலணி ஊரன்
    ஐங்குறுநூறு 23 எனும் பாடல் காணலாம்.
    குறுந்தொகைப் பாடல் ஒன்று உள்ளது உடன் நினைவிற்கு வரவில்லை. நினைவுபடுத்தி பார்க்கிறேன். அல்லது நூல் பார்த்து சொல்கிறேன்.
    வரிபுனை சிற்றில் பரி சிறந்து ஓடி
    புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல்
    செம்போர் இரணை அலவன் பார்க்கும்
    சிறுவிளையாடல் - நற்றிணை 123
    எனும் பாடல். எனவே களவன் சரியாகும் என்பது கருத்து. தாங்கள்,,,,,,,,,,

    ReplyDelete