Monday, 26 September 2016

கூட்டம் மயக்கும் கலை – அது இப்படித்தான்!




மிகுந்த வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்பட்டிருக்கிறது. இப்பதிவிற்கு இவ்வளவு ஆர்வத்துடனான பங்கேற்பை, மறுமொழியை உண்மையில் நான் எதிர்பார்க்கவேயில்லை.

Sunday, 25 September 2016

கூட்டம் மயக்கும் கலை.


ஒன்பதாம் வகுப்பில் ஆசிரியை ஒருவர் கட்டுரை ஏடுகளைத் திருத்தி மாணவர்க்குக் கொடுத்துப் பொதுவான பிழைகளைச் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்தார்.

Saturday, 24 September 2016

இதனால் சகலமானவர்களுக்கும்………!


பிச்சைக்காரனின் கையில் கிடைத்த அட்சயபாத்திரமாய்த்தான் இந்த இணைய அறிமுகம் எனக்கு வாய்த்தது.

Thursday, 14 January 2016

மன்னியுங்கள்! இது ஒரு வலி மிகுந்த பதிவு!


பிரபல வலைப்பதிவரும் நண்பருமான இதழியலாளர், திரு. எஸ். பி . செந்தில்குமார் அவர்கள் எனது பதிவின் பின்னூட்டம் ஒன்றில் கேட்டிருந்த கேள்வியும் அதற்கான பதிலும்தான் இந்தப் பதிவின் சாரம். இதுவரை நான் எழுதிய பதிவுகளில் என் மனம் விரும்பாத பதிவு எது என்றால்  அந்தப் பதிவினைத்தான் சொல்வேன்.

Tuesday, 12 January 2016

சொல்லாத சொல்லுக்கும் பொருள் உண்டு; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-17


தொடர்பதிவுகளை இடைவெளிவிட்டுத் தொடர்வதை வழக்கமாகக் கொண்டிருந்த நான் கடந்த சில பதிவுகளாகக் கலித்தொகைப் பாடலொன்றைத் இடைவெளியின்றிப் பதிந்து போனேன். இன்னும் அந்த ஒருபாடலே முடிவு பெறவில்லை. சரி…., நீண்ட பதிவிற்கு ஓர் இடைவெளிவிட்டுச் சிறிய பதிவொன்றை இடலாமே என்று இதனைத் தொடர்கிறேன்.

Saturday, 9 January 2016

உயிர்கள் உதிரும் களம் – பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள் – 1. 2




ஏறுதழுவுதல் தொடங்கிவிட்டது. வேகமாகச் சீறிப்பாயும் காளையை அடக்க வீரன் ஒருவன் களமிறங்கிவிட்டான். அது தொழுவில் இறங்கி நிதானமாக நின்று தன்முன் சிறுபதரென நிற்கும் அவனையே ஊன்றிப் பார்க்கிறது.

Saturday, 2 January 2016

பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள் ; பகுதி 1




அவள் இடையர் குலத்தைச் சார்ந்தவள். அதென்ன இடையர் குலம்? தமிழ் நிலங்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப் பிரிக்கப்பட்ட போது, குறிஞ்சி நிலமாகிய காட்டிற்கும் மருதநிலமான வயல்வெளிக்கும் இடைப்பட்டிருந்த காடுகளால் ஆன நிலமான முல்லை இடைநிலம் என அழைக்கப்பட்டது. அந்த இடைநிலத்தில் வாழ்ந்ததனால் அவர் குலம் இடையர் குலம் எனப்பட்டது.

Wednesday, 30 December 2015

ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது தெரியுமா?



நம் தொன்மரபின் தொடர்ச்சி நம் தலைமுறையோடு முடிந்துவிடுமோ என்ற கவலையுடன் கட்சி வேறுபாடின்றித் தமிழகமெங்கும் உரத்தொலிக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக்குரல்களைப் பார்வையாளனாக இருந்து பார்த்த என்னை, மதிப்பிற்குரிய திரு. ஞானப்பிரகாசம் ஐயாவின் இருபதிவுகளும் தற்போது அவர் எனக்கு இது குறித்துத் தனியே விடுத்திருந்த மின்னஞ்சலும் இப்பதிவினை எழுத என்னை இழுத்து வந்திருக்கின்றன.

Friday, 18 December 2015

எது கவிதை?


‘தமிழகத்தில் மக்கள் தொகையை விடக் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்’ என்பதாக என்றோ வாசித்த துணுக்கொன்று இப்போது நினைவுக்கு வருகிறது. இணையத்தில் இயங்கத்தொடங்கிய இந்தக் குறுகிய காலத்தில், எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் கவிஞர்களாய்த் தெரிகிறார்கள். ஒருவேளை ‘காமாலைக்காரன் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்’ என்று கூறுவதுபோல என் கண்களுக்குத்தான் இப்படிப்படுகிறதோ என்னமோ?

Tuesday, 15 December 2015

சமணம் – 6; குளிரும் சூரியனும் கொதிக்கும் வெண்ணிலாவும்!



சமணம் பற்றிய தொடர்பதிவின் ஐந்தாம் பகுதியை எழுதி ஐந்து மாதத்திற்குப் பிறகு இதன் தொடச்சியை எழுதுவதால் ஒரு பருந்துப்பார்வையில் இதற்கு முன் சமணம் பற்றிய இடுகைகளில் கூறப்பட்ட செய்திகளைத் தொகுத்துப் பார்த்துவிடலாம்.

Sunday, 13 December 2015

ரக்ஷிதாவின் கண்களில் இருந்து.....!


வெள்ளம்
வாசம் பிடித்து வருகின்ற வேட்டை நாயைப்போல
எங்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது,

Monday, 7 December 2015

கங்கங்கங்கங்கங்கங்கம்; தமிழ்தாங்க! இதன் பொருள் தெரிகிறதா?


கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கிறது. தட்டச்சுப் பழகுபவர்கள் அடித்துப் பழகும் எழுத்துகளைப் போலத்தான் முதற்பார்வைக்குத் தோன்றுகிறது.

Wednesday, 2 December 2015

எங்கிருந்தாலும் வாழ்க.

ஈரமுலர்ந்த  மணல்வீடொன்றின் கலைந்துதிரும் ஆயிரமாயிரம் துகள்களின்  மிச்சமிருந்தன, வனைந்த கரங்களால் இணைந்த கனவுகள். அலை ஆரத்தழுவி அத்தனையும் உட்செரித்த  பேராழங்களில் உவர்மண்ணாய்க் கிடந்தவோர் நாளில் திடீரென நினைவு வந்தது,…. அன்று அவனை அறியாமல் அகன்றுபோன அவளது பிறந்தநாள்…….!

Monday, 30 November 2015

காதல் நிறைவேறுமா என்பதை அறியப் பழந்தமிழ்ப்பெண்கள் செய்த சோதனை!


பெண்கள் தங்கள் மனதில் உள்ள காதலை முதலில் வெளிப்படுத்தி ஓர் ஆண் தன்னை விரும்புகிறானா இல்லையா என்பதை அறிவதற்கான வாய்ப்புகள் இன்றும் கூட, நம் சமூகத்தில் குறைவுதான். ஓர் ஆண் என்றால் தன் காதலை வெளிப்படையாகவோ குறிப்பாகவோ புலப்படுத்தித் தான் காதலிக்கும் பெண்ணின் நிலைப்பாட்டை அறிய அதிகம் வாய்ப்புகள் உள்ளன.

Saturday, 28 November 2015

உன் பணம் பணம் என் பணம்.


ஊரிலேயே பெரிய பணக்காரன் அவன். பொன்னும் முத்தும் வைர வைடூரியங்களும் கொட்டிக் கிடக்கின்ற கருவூலம் அவன் வீட்டில் இருந்தது. ஆனால், சேர்த்த செல்வத்தைக் கொண்டு சுகமாக வாழ்வோம் என்ற எண்ணமோ, அது தேவைப்படுவோர்க்குக் கொடுத்து உதவுவோம் என்ற எண்ணமோ அவனிடம் ஒரு சிறிதும் இல்லை. தன் சேமிப்பைப் பார்த்து, ‘இவ்வளவு செல்வமும் என்னுடையது என்னுடையது’ என்று எண்ணிக்கொண்டிருப்பதில் அலாதி மகிழ்ச்சி அவனுக்கு.

Wednesday, 18 November 2015

தகனம்.




கொதிக்கும் நினைவென்னை வடிக்கின்றது! – வெந்து
     கிடக்கும் கனவின்னும் துடிக்கின்றது!
விதிக்கும் விளையாட்டுப் பிடிக்கின்றது! – நாட்கள்
     விடிந்தும் விழிமூடிக் கிடக்கின்றது!

Saturday, 14 November 2015

நான்கே அடிகளில் இராமாயணம்

பெருங்கதைகளை மிகச் சுருக்கமாகச் சில வரிகளில் சொல்லிவிடும் தமிழ்ப்பாடல்கள் உண்டு. சிலப்பதிகாரக்கதையை ஒரு வெண்பாவில் சொல்லிப்போகும் பாடலை இதற்கு முன் பதிவொன்றில் கண்டிருக்கிறோம்.

Thursday, 12 November 2015

படைப்புகளுக்குத் தலைப்பிடுதல்; உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்-16


நாம் எழுதும் பதிவுகள் அல்லது படைப்புகளுக்குத் தலைப்பிடுவது என்பது நம் பதிவுகளைவிட முக்கியமானதாய் இருக்கிறது என்பதை என் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அதுவே வாசகரை நம் பதிவுகளின் உள்நுழைய வரவேற்கும் தோரணவாயில்.

Saturday, 7 November 2015

பாம்பு




விழித்துக் கொண்டது பாம்பு!
விடத்தைத் துப்ப இடமில்லாமல்
விழுங்கிக் கொண்டது தன்னுள்!
விதையில்லாத மரங்களில் ஏறி
விரட்டிச் சாய்க்குது என்னை!

Friday, 30 October 2015

தன் உடலை ஒன்பது துண்டுகளாக வெட்டிப்பலி கொடுத்தவனது கல்வெட்டு.




நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய இராணுவத்திற்கென ஆட்களைத் திரட்டிப் பயிற்சி அளித்து, ஜப்பானியப் படைத்தலைவனை அணுகி, அவர்களது படையோடு இணைந்து ஆங்கிலேயர் ஆட்சியை இந்திய மண்ணை விட்டு அகற்ற உதவிகோருகிறார்.