வாசம் பிடித்து வருகின்ற வேட்டை நாயைப்போல
எங்கள் வீட்டிற்குள் நுழைந்தபோது,
“ரக்ஷிதா வாடாம்மா…” என்றவாறே
கீழே இருந்தவற்றை எல்லாம்,
கட்டில், உணவு மேசை எனச்
சற்றே உயரமாக
இடம் பெயர்க்கத் தொடங்கினாள் அம்மா!
கால் நக்கும் அதன் மஞ்சள் நாவுகளை
மிதித்துக் கிழித்து விளையாடியபடியே
உதவி செய்யத் தொடங்கினேன் அம்மாவிற்கு!
என் இடுப்பையும்
அம்மாவின் முழங்காலையும்
வெள்ளம் சமன் செய்திருந்தபோது,
என்னைத் தூக்கி வீட்டின் உள்மாடியில் உட்காரவைத்து,
“ இங்கேயே இரு” என்று சொல்லிக்
கீழிறங்கிப்போன அம்மாவைக்
கம்பியைப் பிடித்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன்.
வெள்ளம்,
கழுதையாகவும் குதிரையாகவும் எழுந்து கொண்டிருந்தது.
என் புத்தகப்பை, சிறு துணிமூட்டை, கைப்பை, அலைபேசி,
என எடுத்துக் கொண்டு மேலேறி.….,
நெற்றியில் முத்தமிட்டபடி
என்னைக் கட்டிக்கொண்டு,
“பயப்படாதடா….” என்று சொன்ன
அம்மாவின் இதயத்துடிப்பில்
குதிரையின் நாலுகால் பாய்ச்சல்!
“ஐயோ என் மடிக்கணினி” என்று கூவியபடி,
மீண்டும் படிகள் தடதடக்கக் கீழிறங்கிய அம்மா
தடுக்கிவிழுந்தது
ஒட்டகமாக இப்போது உருமாறியிருந்த
வெள்ளத்தின் கால்களின் கீழாயிருக்கும்!
“அம்மா” எனக் கத்தியபடி,
படியிறங்கப்பார்த்த என்னைச்
சேறுபடிந்த தலையுடன்,
மேலெழும்பிய
நீண்ட கைகள்,
“பின்னால் போ…போ...” என எச்சரித்தமிழ்ந்தன!
முன்போர் நாள்
நான் பார்த்தே இராத
‘அப்பாவின் பெயர் என்ன?’ எனக் கேட்டதற்குப்
‘பொறுக்கி’ எனப் பதில் சொன்னாள் அம்மா!
வகுப்பில் அப்பாவின் பெயர் கேட்கப்பட்ட
தருணமொன்றில்
இதே பதிலைச் சொன்னதற்கு
எல்லாரும் சிரிக்கிறார்கள்
என்றபோது கலங்கி வழிந்த அம்மாவின்
அதே கண்களைப் பார்த்தேன்
மேலெழும்பலின் இரண்டாம் முறை!
அதன்பின்,
வெளிவராமல்,
நீருள் இருந்தபடி
வெளிவராமல்,
நீருள் இருந்தபடி
என் கால் தொட நெருங்கும் வெள்ளத்தைப்
பின்னிழுத்துக் கொண்டே இருக்கிறாள் போலும்!
வெளியே,
மேலதிகப் படையணிகளைத் திரட்டி அனுப்பிக்கொண்டே
“சீக்கிரம்! சீக்கிரம்!!” என வெள்ளத்தைச்
சவுக்கடித்து வீட்டினுள் விரட்டுகிறது மழையதிகாரம்!
அடிபட்ட ஆவேசத்தோடு படியேறி
மேல்தளம் நிற்குமென் கால்சுருட்டி விரிகிறது நீர்ப்பாய்!
கீழே,
அம்மா தோற்றுக்கொண்டிருக்கிறாள்...!
இவ்வளவு நேரம் போராடிக் களைத்திருப்பாளாய் இருக்கும்!
இவ்வளவு நேரம் போராடிக் களைத்திருப்பாளாய் இருக்கும்!
துணிமூட்டையைப் பிரித்து
ஈரத்தலைதுவட்ட உலர்ந்த சேலையொன்றையும்,
என் புத்தகப்பையில்
கொஞ்சம் நீர் மிச்சமிருந்த குப்பியையும்,
அவளுக்கெனஎடுத்துக் கொண்டு
படியிறங்கிக் கொண்டிருக்கிறேன் நான்!
படஉதவி- நன்றி http://ichef.bbci.co.uk/news/660/media/images/
Tweet |
அன்புள்ள அய்யா,
ReplyDeleteவெள்ளத்தில் தாய்ப் பாசம்
உள்ளத்தில் சேய் நேசம்
‘பொறுக்கி’ ஆகிய தந்தை
ரக்ஷிதாவிற்கு யார் காப்பு?
த.ம.1
ஐயா தங்களின் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
Deleteவணக்கம் பாவலரே !
ReplyDeleteமழை நாளின் வக்கிரம்
அழகாக வாசிக்கப்படுகின்றன .......!
அருமை தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தம +1
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteநெகிழ்ச்சி...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteவெள்ளத்தின் வேக்காட்டில் உள்ளம் நெகிழவே
ReplyDeleteதள்ளாடி வீழும் தளர்ந்து!
தற்போதைய நிலைமைக்கு ஏற்ப பொருத்தமான பதிவு! அருமை அருமை ! வழமை போலவே. எதையும் அழகுறப் பதிவிடும் ஆற்றல் படைத்தவர் ஆயிற்றே.ஹா ஹா ... தொடர வாழ்த்துக்கள் ...!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அம்மை.
Deleteகவிதையை வாசிக்கும் போது அம்மாவின் இதயத் துடிப்பில் குதிரையின் நாலு கால் பாய்ச்சல்; என் நெஞ்சிலோ குதிரையின் எட்டு கால் பாய்ச்சல். அம்மாவுக்கும் ரஷிதாவும் என்ன ஆனதோ? அவர்கள் பிழைக்க வேண்டுமே என மனம் பதறுகிறது. இது போல் எத்தனை பேர் வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்திருப்பார்கள்; அல்லது உயிர் பிழைக்க எத்தனை பிரயத்தனம் செய்திருப்பார்கள் என்று எண்ணும் போது வேதனையாயிருக்கிறது. கண்ணெதிரே இருவரும் உயிருக்குப் போராடும் காட்சியை விவரிப்பது போல் மனதை மிகவும் பாதித்த கவிதை. மிகவும் நெகிழ வைத்தது. த ம வாக்கு
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஉயிர்த்துடிப்பின் நடுக்கத்தை, சற்றும் குறையாத -பொறுக்கி எடுத்த- சொற்களில் எங்கள் நெஞ்சில் இறக்கிவிட்டுப் போய்விட்டீர்கள்... எங்கள் பாரத்தைக் கண்களிலிருந்து வழித்தெடுக்கும் கைகளும் நடுங்குகின்றன அய்யா.
ReplyDeleteஉருக்கமான கவிதை. இதுபோன்று எத்தனைப் பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்களோ தெரியவில்லை.
ReplyDeleteத ம 7
படிச்சு முடிக்க முடியலை அண்ணா...... கண்ணீர் வழிகிறது..............அந்த அம்மா இப்படி உங்கள் பேனாவில் குடிபுகுந்திருக்க வேண்டாம்......
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
Deleteகவிதை கற்பனை என்றே நினைக்கிறேன் இருந்தாலும் உண்மை நிகழ்வுமாக இருந்திருக்க வாய்ப்பும் உண்டு என்கிறது உள் மனது.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteகவிதையை ....இல்லை இல்லை ...சோகச் சொல் சித்திரத்தை ரசித்தேன் !
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பகவானே!
Deleteவேதனை
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா
Deleteஅப்பாடி.... எத்தனை சோகம். படிக்கும் போதே பதறுகிறது நெஞ்சம்......
ReplyDeleteபடிக்கவே உள்ளம் நடுங்குகிறதே
ReplyDeleteஎத்தனை பேர் இவ்வேதனையினை அனுபவித்திருப்பார்கள்
நினைக்கவே நெஞ்சம் நடுங்குகிறது
வெள்ளம்,
ReplyDeleteகழுதையாகவும் குதிரையாகவும் எழுந்து கொண்டிருந்தது....நல்ல உதாரணம்...
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வலிப்போக்கரே!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
மனதை நெருடும் கவிதை படித்துமகிழ்ந்தேன் நன்றாக உள்ளது த.ம11
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteகலங்க வைக்கிறீர்கள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.
DeleteThose who survived the onslought of the crises lik a war,sunami and the flood will never forget the thunderous waves of thoughts coming over again and again.I was simply watching as the flood water trickling through the closed door on 1-2 night of Dec 15.How ever we were fortunate as the water did not rise futher.
ReplyDeletehighly sentimental expression sir.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteசகோதரரே...மனம் கலங்க வைத்துவிட்டீர்கள். வேறு சொல்லத் தெரியவில்லை..
ReplyDeleteகீதா: சகோ.....மனம் நொறுங்கிவிட்டது அதுவும் தாய் மூழ்குவதையும் அந்தச் சின்னப் பெண்ணையும் சொல்லி....வாசிக்கும் எங்களை அந்த உணர்வில் கொண்டுவந்து விட்டு இறுதியில் தாயை உங்கள் எழுத்துக்களிலாவது காப்பாற்றியிருக்கலாமே. மனம் உறைந்துவிட்டது.
ஆனால் உண்மைக் குற்றவாளிகள் நன்றாகத்தான் இருக்கின்றார்கள்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
Deleteவணக்கம் கவிஞரே,
ReplyDeleteஎன்னைப் போன்ற கல் மனமும் கண்களில் நீர் உகுத்தால் ,,,,,,,
கவிஞரே முடிவு ஏனோ ஏற்க மனம் நடுங்குகிறது. ஒரு வேளை இது தான் நியதியோ,
ஆனால், எனக்கு என்னவோ, அவள் அந்த நீரிலே இறங்கிவருவதாகத் தான்,,
நினைக்கிறேன்.
பொருத்தமான கவிதை,
தாமதத்திற்கு மன்னிக்க,
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பேராசிரியரே!
Deleteரக்ஷிதா போன்று சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு இந்த கவிதை
ReplyDeleteஅர்ப்பணிப்பு என சொல்வேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteவெள்ள நிகழ்வுகளை டிவியில் பார்க்கும் போது ஏற்பட்ட பாதிப்பைவிட இந்த பதிவை படிக்கும் போது ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகம். என் தாயார் இறந்து போது கூட என் மனதில் இந்த அளவு பாதிப்பு ஏற்படவில்லை ஆனால் இது மிகவும் என் மனதை பாதிக்கிறது. உங்கள் எழுத்தை பாரட்ட தோன்றினாலும் இந்த பதிவால் ஏற்பட்ட பாதிப்பால் பாராட்டாமல் போகிறேன் காரணம் எழுத்தை பாராட்டினால் சோகத்தை பாராட்டியது போல ஆகிவிடும்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஅச்சோ என்ன சொல்ல !?? வலி அதிகரித்த இதயத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டே இறுதி வரியை வாசித்து முடித்தேன்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.
Deleteவணக்கம்!
ReplyDeleteகல்லுருகும் வண்ணத்தில் கட்டிய காதைக்குள்
சொல்லுருகும்! பொங்கித் துயருருகும்! - புல்லளவும்
நெஞ்சம் உறங்காது! விஞ்சும் பெருமழையால்
அஞ்சும் உலகே அரண்டு!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
அய்யோ அண்ணா ஏற்கனவே வெள்ளத்தின் தாக்கத்தை அறிந்து பதறிய மனம் இன்னும் அடங்கவில்லை ... தாயும் ரஸீதாவும்!!! கடவுளே!!!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
Deleteஅப்பப்பா, இந்த வெள்ளத்தின் பாதிப்பை இவ்வளவு உணர்வுப்பூர்வமாக சொல்ல முடியுமா என்ன!
ReplyDeleteஉள்ளத்தை அப்படியே பாதித்து விட்டது.
ஐயா நலமாக உள்ளீர்களா?
Deleteநீண்ட நாட்களுக்குப் பின்பான உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
இதயத்தை உறையச் செய்யும் கவிதை! பதைபதைக்கச் செய்யும் கடைசி வரிகள்! அந்தக் குழந்தையைப் "போகாதே" எனக் கத்திக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டுவிடத் தோன்றுகிறது. பெயர் சரியாக வைத்திருக்கிறீர்கள், ரக்ஷிதா!...
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteவார்த்தைகளுக்கு வலியை உணரவைக்கும் சக்தி உண்டு என்பதை நிருபித்து விட்டீர்கள்
ReplyDelete