Tuesday, 18 August 2015

பின்னோக்கிய ஓர் ஓட்டம்


தமிழின்  மரபார்ந்த அறிவோடு அனாயாசமாக இயங்கும் தமிழாளுமைகளை இணையத்துக் காணுந்தோறும், வாசிப்பின் தொடக்கப்புள்ளியில் வாய்பிளந்து நிற்கும் சிறுபிள்ளையாய் என்னைக் கற்பனை செய்து கொள்வேன்.

Saturday, 15 August 2015

கிளிப்பாம்பு


கொஞ்சு மனக்கிளிகள் கூவு மொருபெயராய்க்
     கோடை மழைப்பெருக்கின் கோப முகக்குறியாய்ப்
பிஞ்சு உயிர்துடிக்கப் பேணு பிறைமடியாய்ப்
     பித்த னெனைப்பிடித்துப் போனவுன் மாயமென்ன?

Thursday, 13 August 2015

இதென்னடா குரங்கிற்கு வந்த சோதனை?


குரங்கு செய்யும் சேட்டைகளைப் பார்ப்பது என்பது சுவாரசியமானது. ஒரு குரங்கின் ஒட்டுமொத்த சேட்டைகளையும் ஒருசேரக் காணும் தருணம் யாருக்கும் அவ்வளவு எளிதாக வாய்ப்பதில்லை. நடக்கக் கூடியதோ இல்லையோ, குரங்கு செய்யும் பல சேட்டைகளைப்  புலவன் கற்பனை செய்து அழகாக்கிக் தரும்போது நம்  ரசனைக்குரியதாக அந்தச் சேட்டைகள் மாறிவிடுகின்றன.

Wednesday, 12 August 2015

உயிர் ஓலம்




ஒடித்துக் கண்சிறை உருக்கிக் கொண்டெனை
     ஒறுத்துக் கொன்றிடா துடைக்க ஐம்புலன்
இடித்து நெஞ்சிடம் இறுக்கி என்கரை
     இறைக்கும் உன்முகம் இனிக்க என்‘உலை

Sunday, 9 August 2015

பறவை வேட்டை (2)



பறவை வேட்டை தொடர்ச்சி..தங்களுக்கு வரப்போகும் எந்த ஆபத்தையும் உணராமல் இரு குருவிகளும் கூடைக்குக் கீழே இறைக்கப்பட்டிருந்த தானியப் பரப்பைக் கொத்திக் கொண்டிருந்தன. ‘இன்னும் எதற்காக இவன் காத்திருக்கிறான்?’ மெதுவாக அவன் கைகளில் இடித்தேன். அவன் சிலையைப் போல அசையாமல் இருந்தான்.

Saturday, 8 August 2015

பறவை வேட்டை






படிக்கும் காலத்தில் எனக்கொரு நண்பன் இருந்தான். பெயர் சசிகுமார். ஆறாம் வகுப்பில் அறிமுகமானவன். நான் முட்டாள்தனமாக என்ன சொன்னாலும் செய்தாலும் என்னை விரும்பி எப்பொழுதுமே வெறுத்திடாத மனது அவனுக்கு. அதனாலோ என்னமோ எங்கள் நட்பு நீடித்திருந்தது.

Tuesday, 4 August 2015

இரவில் தன்அறைக்கு வந்த திருடனைத் தனியே பிடித்த தமிழ்ப்பெண்.




திருடனைப் பிடிப்பது என்பது கொஞ்சம் பயமும் பதற்றமும் நிறைந்த அனுபவமாகத்தான் இருக்கும். அதுவும் இருட்டு நேரமென்றால் கேட்கவே வேண்டாம். யாரும் இல்லாத நேரத்தில் தனியே படுத்திருக்கும் ஒரு பெண்ணிடம் திருட வந்தவனாய் இருந்தால்..? அது இன்னும் கொடுமை!

Monday, 3 August 2015

தூக்கமும் ஒரு கனவும்.


நல்ல கனவுகள் தொடர வேண்டும் என்றும் கெட்ட கனவுகள் கலைந்து எழுந்தால் போதுமென்றும் நினைப்பது மனித இயல்புதான். இன்னொரு புறம் தூங்காத ஒருவருக்குத் தூக்கமென்பதே கனவுதான்.

Saturday, 1 August 2015

சொற்கள் சொல்லாத பொருளை அறிதல்;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (14)


‘சொல்லாத சொல்லுக்குப் பொருளில்லை’ என்பார்கள். ஆனால் சொல்லுகிற சொல்லுக்கும் சொல்லின் பொருளன்றி  வேறு பொருள் இருக்கிறது என்றால் நாம் என்ன செய்வது? இன்றைய பதிவு இதைப் பற்றியதுதான்.

Friday, 31 July 2015

ஒரு பாடலும் அது பற்றிய படிக்க முடியாத பதிவும்.




‘ஆனந்த யாழை மீட்டுதலுக்கான சில குறிப்புகள்’ என்கிற தலைப்பை இப்பதிவிற்குத் தேர்ந்து வைத்திருந்தேன். இதுவரை ஒரு தொடர்பதிவினை அடுத்தடுத்து இட்டதில்லை. ஆனால் இந்தப்பாடலின் கருத்தோட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதால் தொடர்ந்து இடவேண்டியதாயிற்று. இப்பதிவுடன் அவ்வளவுதான் இப்பாடலின் பொருள் வேட்டை என்னளவில் நிறைவுற்றது.

Tuesday, 28 July 2015

ஒரு பாடலும் சில அர்த்தங்களும்.



மணமாகிச் சில நாட்களிலேயே அவனைப் பிரிய வேண்டிய நிர்பந்தம். அவளுக்கு அவனைப் பிரிய மனமே இல்லை. வாழ்க்கைச் சூழல் அப்படி.. இங்கிருந்து நாம் சேர்க்கும் பொருள் வாய்க்கும் வயிற்றிற்குமே போதாது. மழைதொடங்கும் காலத்திற்குள் நாம் வாழக் கொஞ்சம் பொருள் திரட்டி வந்துவிடுவேன் என்கிறான் அவன். அவளுக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. பொருள் என்ன பெரிய பொருள்? அவனுடன் இருப்பதைவிட வேறென்ன தனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியும்?

Sunday, 26 July 2015

ஒரு பாடலும் சில நினைவுகளும்.


நாம் இரசித்த மிகச்சில பாடல்கள் இறந்தகாலத்தின் அந்தப் பாடலை அனுபவித்த  சுகமான தருணங்களைச் சட்டென மீட்டெடுக்க வல்லவை.
இரை வைக்கப்பட்ட தூண்டிலாய் ஒவ்வொருமுறையும் எங்கிருந்தேனும் வீசப்படும் அவை நம்மைச் சிக்கெனப்பிடித்து இறப்பின் கரைகளில் வீசியெறியும்.

Friday, 24 July 2015

நான்.


என் பால்யத்தின் சிறுபிள்ளைத்தனமான வாசிப்பில் எல்லாவற்றையும் நிறைய அறிந்ததாக எண்ணி, ஏதோ ஒரு பெரிய ஒளிவட்டம் என் தலைக்குப் பின்னே இருப்பதான செருக்கில் ஒரு கிணற்றுத் தவளையில் வெற்றுத் தலைக்கனத்தோடு அலைந்து கொண்டிருந்த காலம் அது.

Thursday, 23 July 2015

இந்த அளவு போதை தரும் சரக்கு டாஸ்மாக்கில் கிடைக்குமா?



குடிப்பது தீங்கானது. தமிழகத்தில் மதுவைத் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்க, திடீரென்று பெரிய போதை தரும் சரக்கைப் பழைய தமிழ் இலக்கியத்தில் இருந்து  கண்டுபிடித்து, ‘இதெல்லாம் அப்பவே நாங்க கண்டுபிடிச்சிட்டோம்’ என்று தோளுயர்த்திச் சொல்லுவதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை.

Tuesday, 21 July 2015

சமணம் ( 5 ) – தொடக்கம் இல்லை. முடிவு உண்டு. எப்படி?



உலகத்தின் தோற்றத்திற்கு அணுக்கள் ஒன்றிணைந்து அதனோடு, காலம் ஆகாயம் எனுமிவை சேரவேண்டும் என்றும் அதே நேரம் இவையன்றி வேறு சிலவும் வேண்டுமென்பது சமணர் கருத்து என்றும் சமணம் பற்றிய சென்ற பதிவில் முடித்திருந்தோம்.

இப்பதிவு அணுக்கள், காலம் ஆகாயம் என்பதோடு உலகின் தோற்றத்திற்குச் சமணம் சொல்லும் மேலும் இரு கூறுகளைப் பற்றியது. 

Sunday, 19 July 2015

தோசையின் வரலாறு.


ஆம். நாம் சாப்பிடும் தோசையின் வரலாறு தான். எனக்குச் செய்யத் தெரிந்த ஒரே உணவு வகை. இன்று காலை அம்மையுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது சமையல் பற்றிய பேச்சினிடையே ரொம்பப் பெருமிதமாக ‘எனக்குத் தோசை சுடத்தெரியும்.’ என்று சொல்லிவிட்டேன்.

Saturday, 18 July 2015

தமிழ்ச் சித்திர எழுத்துக்கள் – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (13)



தமிழில் எழுத்துகளே தேவை இல்லை. ஆங்கிலத்தை வைத்தோ அல்லது வேறு சில குறியீடுகளை வைத்தோ தமிழை எழுதியும் படித்தும் கொள்ளலாம் என்கின்ற குரல் மெத்தப் படித்தவரிடையே ஒலித்துக்  கொண்டிருக்கும் போது, நாம் தற்போது எழுதும் இந்தத் தமிழ் நெடுங்கணக்கு அல்லாமல் வெவ்வேறு பயன்பாட்டிற்கென நம்மிடையே இருந்து, இன்று இல்லாமல் போய்விட்ட சில எழுத்துக்களைப் பற்றிப் பகிர்வதே இந்தப் பதிவின் நோக்கம்.

Thursday, 16 July 2015

கொஞ்சம் அருவருப்புத்தான்.


இளகிய மனம் கொண்டவர்கள்  இதனைப் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கைக் குறிப்புடன் கூடிய காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவற்றைப் பார்க்காமல் நம்மில் சிலர் தவிர்த்திருப்போம். நகைச்சுவை, வீரச்சுவை, காதல், என எத்தனையோ சுவைகளைக் கொஞ்சமாவது இலக்கியத்தில் படித்துக் கடந்திருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்கு ஓர் அருவருப்பு உணர்ச்சியை இதற்கு முன் எந்தப்பாடலும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.

Wednesday, 15 July 2015

காமத்திற்குக் கண் இல்லை என்கிறார்கள் - ஏன்?


பொதுவாக இன்றைய ஊடகங்களில்  பாலியல் சார்ந்த, முறை தவறிய- சமூக மரபுகளுக்கு மாறான உறவுகள் குறித்துச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கான அடிப்படையாகக் குறிப்பிடப்படுவது காமம்.

Monday, 13 July 2015

அம்மணமும் சம்மணமும் – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள். (12)


ஆடையற்ற உடலை அம்மணம் என்பதும்  உட்கார்ந்த நிலையில் காலை ஒன்றன்மேல் ஒன்றாக மடித்திடுவதைச் சம்மணம் என்பதும் நாம் இன்றும் வழங்கும் வழக்கு. சம்மணம் என்பதைச் சம்மணங்கால், சம்மணப் பூட்டு என்றும் வழங்குகிறோம்.