Sunday 19 July 2015

தோசையின் வரலாறு.


ஆம். நாம் சாப்பிடும் தோசையின் வரலாறு தான். எனக்குச் செய்யத் தெரிந்த ஒரே உணவு வகை. இன்று காலை அம்மையுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது சமையல் பற்றிய பேச்சினிடையே ரொம்பப் பெருமிதமாக ‘எனக்குத் தோசை சுடத்தெரியும்.’ என்று சொல்லிவிட்டேன்.


‘ஆமாமா… அது பெரிய விஷயம்தான்!!!’ என்றார் அம்மை கிண்டலாக.

சரி. தோசை சுடுவது பெரிய விஷயம் இல்லை.

ஆனால் தோசையைப் பற்றிச் சொன்னால் என்ன என்று தோன்றியது.

உடனே கணினிக்கு முன் வந்து உட்கார்ந்துவிட்டேன்.

இந்த நோய் இப்போதெல்லாம் எனக்கு அதிகமாகிவிட்டது.

பேசுகின்ற எதையாவது பற்றிக் கொஞ்சம் தெரிந்திருந்தால் கூட உடனே படிப்பவர்கள் படும் சிரமம் பற்றிச் சற்றும் நினைக்காமல் பதிவிடத் தோன்றுகிறது.

சமணம் குறித்த தொடர்பதிவின் அடுத்த பகுதி நிறைவுற்று ‘நான் நான்’ என அவையத்து முந்தி வரக் கை உயர்த்தத்தொடங்கி ஒரு வாரமாயிற்று.

ஒரு மோசமான ஆசிரியனாய் அதற்கான வாய்ப்பை மறுத்துக் கொண்டிருக்கிறேன்.

சரி … எனக்குப் பிடித்த தோசையின் வரலாற்றை முதலில் சொல்லிவிட்டு. அதன்பின் சமணம் பற்றிய பதிவுதான் என்ற முடிவோடு  இப்பதிவினைத் தட்டச்சத் தொடங்குகிறேன். 

 சமணம் ஆற அமரப் படிக்க வேண்டியது.

தோசை ஆறினால் நன்றாக இருக்காதில்லையா? :)

தோசை என்ற சொல், வடமொழிச்சொல் என்றும்  அதற்கான பெயர்க்காரணம் குறித்தும் சொல்லப்படும் நகைச்சுவை உங்களுள் பெரும்பாலானோர் அறிந்ததுதான்.

ஆனால் தோசை பற்றிய பதிவில் அதைச் சொல்லாமல் போய்விட்டால், அந்தச் சொல்லுக்கான விளக்கத்தை அரிதின் முயன்று கண்டுபிடித்த அந்த ஆராய்ச்சியாளனுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை என்ற குற்றம் வந்துவிடும். அது நமக்கெதற்கு..?

தோசைக்கான மாவைக் கல்லில் ஊற்றும் போது ‘சை’ என்று சத்தம் கேட்கும்.

ஒரு புறம் வெந்ததும் அதை மறுபுறம் திருப்பி  இடும்போது சை என்கிற சத்தம் கேட்டும்.

இப்படி இரண்டு முறை சை என்னும் சத்தம் கேட்பதால், ‘இரண்டு சை’ . இதையே வடமொழியில் சொன்னால் ( தோ – இரண்டு; + சை ) ’தோ‘சை எனப்பட்டது எனத் தோசைக்கான பெயர்க்காரணத்தை வடமொழியோடும் அந்த ஒலிக்குறிப்போடும் இணைத்துச் சொன்ன சொல்லாய்வாளரைப் பாராட்டத்தான் வேண்டும். பாராட்டிவிட்டேன்.

அந்த நகைச்சுவையை ஒரு ஓரமாய் வைத்துவிட்டுத் தோசையின் உண்மையான வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.

தமிழைப் பொருத்தவரை ஒன்றன் வரலாற்றினை அறிய, இலக்கியமும் கல்வெட்டும்தான் நமக்குள்ள முக்கிய ஆதாரங்கள். 

தோசை என்னும் சொல் பழைய இலக்கியத்தில் வருகிறதா? கல்வெட்டில் வருகிறதா என்று பார்த்தால் அதன் வரலாற்றை ஓரளவு கணித்துவிடலாம்.

சுப்ரதீபக் கவிராயரால் கூளப்ப நாய(க்)கன்மேல் பாடப்பட்ட, விறலிவிடு தூது  என்னும் நூலில் தோசை பற்றிய குறிப்பு வருகிறது.

( இந்நூல் தாய்ப்பரத்தை, தன் தொழில்(?) நுட்பத்தை மகளுக்குக் கூறுவது........உடலுறவு பற்றிய செய்திகள் என்றெல்லாம் தமிழில் பேசுகிறது (?!) என்பதால் வெளிவந்த புதிதில் தடைசெய்யப்பட்டது. பின்பு தணிக்கை செய்யப்பட்டு அந்நூலின் பலவரிகள் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டது. சமீபத்திய இந்நூல் பதிப்பொன்றைப் பார்த்தேன். அதுவும் தணிக்கை செய்யப்பட்ட பதிப்பின் மறுபதிப்பாகவே இருந்தது. நீங்கள் படிக்க அதிகம் வாய்ப்பில்லாத தணிக்கை செய்யப்படாத அதன் பதிப்பைப் படித்திருக்கிறேன் என்பதில் எவ்வளவு சந்தோஷம். :) )

அதனுள்,

-அப்பம்
வடைசுகியன் தோசை வகைபணி யாரம்
கடையிலே கொண்டுவகை கட்டி ”  ( கண்ணி – 335 )

( பக்.24., நாகமகூளப்ப நாயகன் விறலிவிடு தூது, துலுக்காணசட்டியார் பதிப்பு. 1906 )

என்று வருகிறது.

ஆனால் இந்நூல் அத்துணை பழைமை உடையது அன்று. கூளப்ப நாய(க்)கனின் காலம் 1728 என்கிறது தமிழ் விக்கி.

நாம் இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போகலாம்.

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோவிற் கல்வெட்டில், தோசை குறித்த சுவையான செய்தி ஒன்று காணப்படுகிறது.

இக்கல்வெட்டு கி.பி. 1542 ஆம் ஆண்டைச் சார்ந்தது.

அச்சுராயன் என்பவரது ஆட்சிக்காலத்தில் காஞ்சிபுரத்தைச் சார்ந்த, திருவத்தியூர் அருளாளப்பெருமாள் கோவிலுக்குப் பக்தர் ஒருவர் அளித்த சிறு நிதி மூலம்  அவர் செய்யச் சொன்ன நிவந்தம் பற்றிய செய்தியை அக்கல்வெட்டு சொல்கிறது. 

ஒவ்வொரு ஏகாதசி அன்றும் பெருமாள் கருட வாகனத்தில் கிராம உலா சென்று திரும்பும்போது இன்னின்னார்க்கு அமுது படைக்க வேண்டும் எனவும், அதற்கு ஆகும் செலவாக, 250 பணமளிக்கப்பட்டது எனவும் அதைக்கொண்டு 35 தோசைகளை, 24 ஏகாதசிகளுக்குக் கொடுக்க வேண்டும் எனவும் அக்கல்வெட்டுச் செய்தி குறிப்பிடுகிறது. 

( கல்வெட்டு எண்-614/1919/கோயில் சாசனங்கள். பகுதி – 1 பக். 326)

பொதுவாகக் கோயில்களில் படைக்கப்படும் திருவமுது அம்மண்ணிற்குரிய உணவாகப் பாரம்பரியம் மிக்கதாக இருத்தலே மரபாகும். வேற்றார் உணவுகள், புதிய உணவு முறைகள் அங்குப் புகுத்தப்பெறுவதில்லை என்பதையும் இவ்விடத்தில் நாம் நினைவு கூர வேண்டும்.

எனவே தோசை என்னும் சொல், இக்கல்வெட்டிற்கு முன்பாகவே மக்களின் மரபுணவாக இருந்திருக்கிறது.

சரி இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.

“கஞ்சம் தோசை” (14)

என்றும்

அபூபம் கஞ்சம் இலையடை மெல்லடை
நொலையல் பூரிகை சஃகுல்லி போனகம்
மண்டிகை பொள்ளலும் அப்ப வருக்கம் “ (17)

பக்.174. பிங்கலநிகண்டு. மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை. சென்னை. 1917 )

என்றும் தோசையின் இன்னொரு பெயரையும் (கஞ்சம்) தோசையின் வகைகளையும் அறியத் தருகிறது பிங்கல நிகண்டு. 

பிங்கல நிகண்டின் காலம் உத்தேசமாக 10ஆம் நூற்றாண்டு.

எப்படியோ தோசைக்கு நம்மிடம் ஆயிரம் ஆண்டு வரலாறு இருக்கிறது.
என்ன போதாதா?

சரி, இன்னும் ஒரு சான்று.

தமிழின் முதல் நிகண்டு எனப்படும் திவாகர நிகண்டு,

பூரிகம் நொலையல் கஞ்சம் தோசை
  பேதப் பெயர்வகை அப்பம் ஆகும்

(பக்.38. பலபெயர்பொருட்டொகுதி. சேந்தன் திவாகரம் மூலபாடம், தாண்டவராய முதலியார் பதிப்பு. 1880)

என அப்பத்தின் வகைகள் நான்கனுள் ஒன்றாகத் தோசையைக் காட்டுகிறது.

திவாகர நிகண்டின் காலம். கி.பி. எட்டாம் நூற்றாண்டு.

நிகண்டுகள் புதிய சொற்களை உருவாக்கிச் சேர்ப்பன அல்ல.

அவை முன்பே வழக்கில் இருக்கும் சொற்களைத் தொகுத்துரைப்பன.

எனவே தோசை என நாம் உண்ணும் உணவு  இன்று நேற்றல்ல, ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் உணவு வகையுள் ஒன்றாக நம் மண்ணுக்கு உரிமை உடைய உணவு என்பதில் எவ்வித  ஐயமுமில்லை.

இறுதியாய்,

இந்தச் சொல் எப்படி வந்தது என்பதற்கு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்,  

( கல்லில் ) தோய்த்துச் செய்வது என்னும் பொருளில் தோய் + செய்  என்னும் சொற்கள் இணைந்து உருவான இச்சொல், மக்கள் வழக்கில் தோசை என்று ஆனது 

என்றும்,

மலையாளத்திலும், தோச எனவும், தெலுங்கிலும் கன்னடத்திலும் தோசை என்றும் வழங்கப்படுகிறது என்றும் செய்யும் சொல்லாய்வு மிகப் பொருத்தம் உடையதாகத் தோன்றுகிறது.

பதிவினை முடிக்கும் தருணத்தில் ‘தோசை ஆறுதுடா எப்ப வருவ?‘ என்ற குரல் சமையல் அறையில் இருந்து கேட்கிறது.

இதோ என்று பதிவினை முடிக்கும் அவசரத்தில் இந்த வரிகளைத் தட்டச்சுச் செய்து கொண்டிருக்கிறேன்.

ஆராய்ச்சிகள் என்றும் ஆறுவதில்லை. அது தோசையைப் பற்றியதாகவே இருந்தாலும் சரி.

தொடர்வோம்.

பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

75 comments:

  1. ஐயா... எத்தனை சான்றுகள்...!

    தங்களின் ஆராய்ச்சிகள் மேலும் தொடர வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      தங்களின் வருகைதான் முதல் வருகை.

      பதிவைப் படித்துப் பிழை பார்க்கும் நேரத்திற்குள் தமிழ் மணத்தில் இணைத்து வாக்கும் அளித்திருந்தீர்கள்.

      இவ்வளவு விரைவாகவா என எப்போதும் போல வியப்பே...!

      மகிழ்ச்சியும் நன்றியும்.

      Delete
  2. wow !
    In SRM Hotel Management they have a three story building for these kinds of research...
    one of my students told me this..
    i hope u have similar structure in your home...!
    vote +

    ReplyDelete
    Replies
    1. தங்களின் நம்பிக்கை .......

      அது என் இல்லம் வரும்போது தெரியும் தோழர் :)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  3. ஒரு தோசைக்கு இத்தனை அக்கபோரா!!!!! நீங்க ரொம்ப ஓவாரா போறீங்க பாஸ்! ஆமாம் சொல்லிட்டேன்:) நெஜமாவே மலைக்கவைக்குது அண்ணா பதிவு!

    ReplyDelete
    Replies
    1. தோசையே சரியாக சுட வராத என் சகோவிற்கு இதைபடித்தால் மலைப்புதான் ஏற்படும் என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்

      Delete
    2. ஹ ஹ ஹா

      மதுரைத் தமிழன் அவர்களே ஒரு முறை சகோதரியின் வீட்டிற்குச் சென்று தோசை சாப்பிட்டுப் பாருங்கள்.

      நீங்க நல்லா இருந்திங்கன்னா அப்பறம் நான் வந்து சாப்பிடுறேன்.

      ஹ ஹ ஹா

      சும்மா நகைச்சுவைக்காக...

      தமிழ் பற்றி எழுதினால் யார் வருகிறார்கள்...?

      தோசையைப் பற்றி எழுதவும் இப்ப பாருங்க.

      மதுரைத் தமிழனே எத்தனை தடவை வந்திட்டார்..! :)

      அதுக்காகத்தான் நடுவில் இது போன்று...!

      வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி சகோ.

      Delete
    3. உங்க தலைப்பில் தோசை என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தால் தமிழன் மட்டுமல்ல நார்த் இண்டியங்களும் இங்கே அதிக தடவை வந்து இருப்பார்கள்.. நம்ம சகோ விட்டிற்கு சென்று தோசை சாப்பிட்ட நம்ம பதிவரை கேட்டேன் அதற்கு அவர் சொன்னார் என் மச்சான் ரொம்ப அருமையாக தோசை சூட்டு தருகிறார் என்று சொன்னார் நீங்க சகோ சுட்ட தோசையை சாப்பிட்டுவிட்டு என்று சொல்லுவதற்கு பதிலாக சகோதரியின் வீட்டிற்குச் சென்று தோசை சாப்பிட்டுப் பாருங்கள் என்று சொன்னதால்தான் இந்த விளக்கம் ஹீஹீ

      Delete
    4. மைதிலி, மலைப்பா இருக்குனு போயிட்டீங்க..இங்க நீங்க சுட்ட தோசைய அண்ணா எடுத்துட்டு வந்தபோது மதுரைத் தமிழன் சகோ அதச் சுட்டு சாப்பிட்டுடாராம் ..ஷ்ஷ்ஷபா.....
      இப்போ எனக்குத் தோசை வேணும் :-)

      Delete
    5. ரெண்டு நாள் ஆன்லைன் வரலைனா இப்படியா ஆளாளுக்கு கலாய்ப்பீங்க:(((

      சும்மாவா சொன்னங்க -------- ஊரை கெடுக்கும்ன்னு! இப்படியா இந்த நாட்டி தமிழனோடு சேர்ந்துகொண்டு தங்கையை கலாய்ப்பது அண்ணா:((

      தகவல் சொன்னதற்கு நன்றி கிரேஸ்!

      (but! இந்த மாதிரி கமெண்ட்ஸ் ரொம்ப funny தான் இருக்கு. மைதிலி ஹாப்பி அண்ணாச்சி:))

      Delete
  4. அருமை! அருமை! தோ + சை = தோசை ; தோய் + செய் = தோசை. எப்படி சுட்டாலும் தோசை, தோசைதான். கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி தோசை பற்றிய கால ஆராய்ச்சி செய்து இருக்கிறீர்கள் படித்து ரசித்தேன்.

    உங்கள் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தில், இன்று எனது வலைத்தளத்தில், “ யானா நடாத்துகின்றேன் - ஜோசப் விஜூ’ “ என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்லேன். நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.

    தோசையைத் தொடர்ந்து இட்லி பற்றிய உங்கள் பதிவையும் ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

    த.ம.4

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      தங்களின் வருகைக்கும் என் மேல் கொண்ட அன்பிற்கும் கருத்திற்கும் உள்ளம் நெகிழ்ந்த நன்றிகள்.

      Delete
  5. தோசையின் வாசம் இழுத்தது......(அட இங்கேயுமா...? நீ அடங்க மாட்டாயே - என்னைச் சொல்லிக் கொண்டேன் சகோ ) வந்து பார்த்தால் அதன் வரலாறு.....ஆராய்ச்சி செய்து சொன்ன உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். நன்றி. அம்மாவுக்கு பாராட்டுக்கள்.
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கெல்லாம் போட்டியாய் வந்துவிட மாட்டேன் சகோ:)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. தோசைபற்றி இப்படி அருமையான பதிவு போட்ட நீங்கள் சங்ககாலத்தில் பூரிக்கட்டை பற்றிய ஏதும் தகவல் இருந்தா எழுதவும்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் மதுரைத் தமிழன்.

      அடிப்பதற்காகவோ, அடி வாங்குவதற்காகவோ கேட்கிறீர்கள் என்றால், சங்காலத்தில் அதற்கெல்லாம் உலக்கை தான்.

      அடிக்கடி அடிக்கும் தேவை இருக்காது.

      ஹ ஹ ஹா!

      தொடர்வதற்கு நன்றி.

      Delete
  7. விஜு சார் உங்களை "நடமாடும் தமிழ்பல்கலைகழகம்" என்று அழைக்கலாம்தானே?

    ReplyDelete
    Replies
    1. அழைக்கலாம் அய்யா, நான் வழிமொழிகிறேன்,
      நன்றி.

      Delete
    2. அய்யகோ நான் 10 வகுப்பு பாஸ் செய்யாத பையந்தான் என்னை போய் அய்யா என்ரு அழைப்பதா? உங்களை யாரு பையன் என்று அழைக்கிறார்கள் என் கேட்கிறீர்களா எங்க அப்பா அவர் அவர்து நண்பர்களும்தான் இன்னும் என்னை இந்த பையன் இந்த பையன் என அழைக்கிறார்கள் அப்ப நான் சின்ன பையந்தானே

      Delete
    3. “““““““விஜு சார் உங்களை "நடமாடும் தமிழ்பல்கலைகழகம்" என்று அழைக்கலாம்தானே?““““““““


      இதற்கு அந்தப் பூரிக்கட்டையால் ரெண்டு அடி அடித்திருக்கலாம்.:)

      நன்றி.

      Delete
    4. மதுரைத் தமிழன் சகோவை வழிமொழிகிறேன்

      Delete
  8. அன்புள்ள அய்யா,

    ‘எனக்குத் தோசை சுடத்தெரியும்.’ என்று இப்பொழுதானே ஒன்றைச் சொல்லி இருக்கிறீர்கள்கள்.... சும்மா சொல்லிவிட்டால் போதுமா? சுட்டுப் போட்டால்தான் தெரியும்...! சுட்டுப்போட்டாலும் வராது என்று அந்த தோசைக்குத்தான் தெரியும்.

    ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட நமது தோசையை ஆராய்ந்து பார்த்து அசத்தி விட்டீர்கள்.

    “சாருக்கு ஒரு மசால் தோசை” - ஹோட்டலில் ஆர்டர் செய்ய வேண்டுமா?...இல்லை...!“

    ஆமாம் ஒரு சந்தேகம்... ஹோட்டல் என்றால் தோசை என்று சொல்ல முடியாதல்லவா...?
    ஒரு புறம் வெந்ததும் அதை மறுபுறம் திருப்பி இடும்போது சை என்கிற சத்தம் கேட்டும்.

    இப்படி இரண்டு முறை சை என்னும் சத்தம் கேட்பதால், ‘இரண்டு சை’ . இதையே வடமொழியில் சொன்னால் ( தோ – இரண்டு; + சை ) ’தோ‘சை எனப்பட்டது என்றால்...ஹோட்டலில் இரண்டு முறை திருப்பி போடுவதில்லை அல்லவா...? அப்போ ‘ஏக்’சை என்று சொல்லலாமா...?


    தோசையம்மா தோசை;
    அம்மா சுட்ட தோசை;
    அரிசி மாவும் உளுந்த மாவும்
    கலந்து சுட்ட தோசை;
    அப்பாவுக்கு நாலு;
    அம்மாவுக்கு மூணு;
    அண்ணனுக்கு ரெண்டு;
    பாப்பாவுக்கு ஒண்ணு;
    தின்னத் தின்ன ஆசை
    திருப்பிக் கேட்டா பூசை.

    அய்யா... ஆத்தில ஆசையாய் சுட்ட தோசை (நானல்ல) அம்மா சுட்ட (வீட்டம்மா) தோசை ஆறிவிட்டது...!

    பரவாயில்லை... இருக்கவே இருக்கிறீர்கள்...மறந்தே போய்விட்டேன்.

    நன்றி.
    த.ம. 6.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வாருங்கள்.

      இந்த சூழலிலும் இவ்வளவு பெரிய பின்னூட்டம் இடுவதற்கு முதலில் நன்றி.

      “““““““““““““ஆமாம் ஒரு சந்தேகம்... ஹோட்டல் என்றால் தோசை என்று சொல்ல முடியாதல்லவா...?
      ஒரு புறம் வெந்ததும் அதை மறுபுறம் திருப்பி இடும்போது சை என்கிற சத்தம் கேட்டும்.

      இப்படி இரண்டு முறை சை என்னும் சத்தம் கேட்பதால், ‘இரண்டு சை’ . இதையே வடமொழியில் சொன்னால் ( தோ – இரண்டு; + சை ) ’தோ‘சை எனப்பட்டது என்றால்...ஹோட்டலில் இரண்டு முறை திருப்பி போடுவதில்லை அல்லவா...? அப்போ ‘ஏக்’சை என்று சொல்லலாமா...?“““““““““““““““““““

      ஏக்சை என்று சொல்ல முடியாது ஐயா.

      நம் ஊர் பக்க உணவு விடுதிதான் உங்களுக்குத் தெரியுமே...

      திருப்பிப் போடாத தோசைக்கு மாவை ஊற்றும் முன் கல்லில் நீர் தெளித்து விளக்கு மாற்றால் தேய்ப்பார்களே....

      அப்போது ஒரு சை கேட்கும்.

      அடுத்துத் தோசைக்கான மாவை ஊற்றும் போது ஒரு சை கேட்கும்.

      எனவே அங்கும் தோ சை தான்.


      இன்று காலை உங்களுக்குப் பூரிக்குப் பதிலாகத் தோசை சொன்னால் போகிறது!!!!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  9. தோசை பற்றிய ஆராய்ச்சி அருமை...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  10. வணக்கம் என் ஆசானே,
    தோசையைப் பற்றி தெரிந்ததால் தொசை சாப்பிடும் போதும் பயம்,,,,,,,,,
    நான் கின்டலுக்கு சைதோ என்பேன் ,
    விளக்கம் எம்மை வியக்க வைக்கிறது,,,,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் சைதோவிற்கும் நன்றி பேராசிரியரே!

      Delete
  11. அட தோசையை பற்றிக் கூட சுவாரஸ்யமான பதிவு. யாருக்கு வரும் இந்தக் கைவண்ணம். நீங்க சுட்ட தோசை நல்லா வந்ததோ இல்லையோ. பதிவு ருசியாகவே இருக்கிறது. தோசை வார்ப்பது அவளவு ஈசி இல்லை ஆதில் கூட ஒரு லாவகம் உள்ளது. என் கணவர் ஊற்றினால் தோசை நிச்சயமாக வராது ரொட்டி தான் வரும் அதை அவரே சாப்பிட மாட்டார். ம்..ம் ... உண்மையாகவே தோசை சுட்டீர்களா .....இல்லை .....தோசையை ..... சுட்டீர்களா. எப்படியோ வயிறு நிறைந்தால் சரி. தொடர வாழ்த்துக்கள் ...! ரசிக்கவைக்கும் பதிவுகள் ....

    ReplyDelete
    Replies
    1. அட தோசையைக் கூட வட மொழியில் அழைத்திருக்கிறோமே இதுவரை என்று கவலையாக இருந்தது. அப்போ இது நம் உணவு இல்லையா என்ற சந்தேகமும் கூடவே வந்தது. ஆனால் அது 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றதும் ஒரு மகிழ்ச்சி அத்துடன் தோய் + செய் என்பதால் தோசை என்பதாக கூறியதும் தமிழ் பெயர்தான் என்பதை அறிந்ததும் ஒரு பரமதிருப்தி .ஏற்பட்டது. ஒவ்வொரு சின்ன சின்ன விடயங்களும் இப்படி நிகண்டிலும் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறதே எனவும் ஆச்சரியமாகவே உள்ளது. நன்றி ! நன்றி ! தொடருங்கள் ...!

      Delete
    2. வாருங்கள் அம்மா.

      பதிவு ருசியாக இருந்ததா....!!

      மகிழ்ச்சி....!!! :)

      வேலைவெட்டி இல்லாமல் தோசையைப் பற்றியெல்லமா ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பது சாப்பிட்டுப் போகாமல எனக் கண்டிப்பீர்கள் என நினைத்தேன்.

      உங்கள் ரசனைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  12. ஜோசப்...

    இப்போதெல்லாம் மாதத்துக்கு ஒன்றிரண்டு நாட்கள்தான் வலைப்பூவுக்காக வாய்க்கிறது ! ஆகையால் ஒரு பதிவு அப்புறம் வலைப்பூக்களுக்கு வலம் என தற்காலிகமாய் அமைத்துக்கொண்டேன்...

    " இந்த நோய் இப்போதெல்லாம் எனக்கு அதிகமாகிவிட்டது... "

    உங்களுக்கே இப்படியென்றால் கருத்து கந்தசாமியான எனக்கு எந்த அளவுக்கு முற்றியிருக்கும் என யோசித்து பாருங்கள்....

    அம்மா சுட்ட தோசையில் உப்பில்லை என்றால் கூட பதிவிட தோன்றுகிறது ! அனுபவத்தில் சொல்கிறேன்... ரொம்பவும் முற்றிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் !!!

    " எனக்குப் பிடித்த தோசையின் வரலாற்றை முதலில் சொல்லிவிட்டு. அதன்பின் சமணம் பற்றிய பதிவுதான் என்ற முடிவோடு இப்பதிவினைத் தட்டச்சத் தொடங்குகிறேன். "

    வயிற்றுக்கு சோறு போனால்தான் சொக்கநாதனையே சேவிக்க முடியும் என்பதால் சமணத்துக்கு முன்னால் தோசை சரிதான் !

    தோசைக்கான பெயர்க்காரணம் நான் அறியாதது !

    இத்தனை ஆதாரங்களுடன் தோசையின் வரலாற்றையும் வழக்கம் போலவே வாய் பிளக்கும்படி சொல்லிவிட்டீர்கள் !

    " தோசை கதையை சூப்பாரா சொன்ன ஜோசப் தம்பிக்கு சூடா ஒரு நெய் தோசேய்ய் ! "

    முடிஞ்சா அந்த விரலிவிடு தூது uncensored version கதையை கொஞ்சம்... ஹீ...ஹீ...

    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா

      வாருங்கள் அண்ணா.

      எழுத்தின் சகல பரிமாணங்களையும் எடுத்திடுகிறீர்கள்.

      உங்கள் முகவரி தாருங்கள். அதன் பிரதியை இப்போதே அனுப்பி வைக்கிறேன்.

      ஆனால் அதன் அர்த்தமெல்லாம் கேட்டு என்னிடம் வரக் கூடாது.

      ஹ ஹ ஹா

      நன்றி.

      Delete
  13. காலையில் எழுந்ததும் தோசை என்றதைப் பார்த்ததும் அட நமக்கு ரொம்பப் பிடித்ததாயிற்றே! அட நம்ம சகோ தோசை பற்றியா எழுதியிருக்கிறார்...என்று வியப்புடன் ஆனால் அதேசமயம் அது தமிழருடன் தொடர்புடைய பல சான்றுகளுடன் இருக்கும் என்றே வாசிக்க வாசிக்கச் சுவையான பதிவு.
    பொதுவாகக் கோயில்களில் படைக்கப்படும் திருவமுது அம்மண்ணிற்குரிய உணவாகப் பாரம்பரியம் மிக்கதாக இருத்தலே மரபாகும்.// மதுரை அழகர் கோயில் தோசை மிகவும் புகழ் பெற்றது. நிவேதனம் என்பதன் தமிழ் சொல் நிவந்தம்?

    தோசையின் வரலாறும் அதில் இலையடை, மெல்லடை என்று வகைகள் வேறு!! இது அப்பம் வகை என்பதால் தான் ஆப்பத்திற்கு அப்பெயர் வந்ததோ...(அப்பம் போல் நடுவில் குண்டாக மேலெழுந்து வருவதால்!?)

    தோசை பெயர்க்காரணம் அட என்று சொல்ல வைத்தது...

    (கீதா : தோசையைப் பற்றிச் சொல்லி இன்றைய காலை உணவு இட்லி என நினைத்திருந்த நான் தோசையாக மாற்றினேன்..ஹஹஹஹ நன்றி!)


    ReplyDelete
    Replies
    1. நிகண்டு இப்படி உணவுப் பெயர்களுக்கான, இன்று நாம் உண்ணும் உணவு ஒவ்வொன்றின் வகைகளுக்கான ஏராளமான சான்றைத் தருகிறது.

      நிவேதனம் என்பது படையல் , இறைவனுக்குப் படைக்கப்படுவது எனப் பொருள்படுவது.

      நிவந்தம் என்பது கொடுக்கப்படுவது என்னும் பொருள் தரக்கூடியது.

      இரண்டன் பொருளும் வேறானது.

      தங்களின் வருகைக்கும் அன்பிற்கும் நன்றி சகோ.

      Delete
  14. சகோதரரின் வித்தியாசமான பதிவு! எந்த ஒரு சொல்லையும் தமிழுடன் மிக அழகாக அடையாளப்படுத்திச் சொல்லுகின்றீர்கள்! சகோ!

    ReplyDelete




  15. தோசையைப் பற்றிய வித்தியாசமான ஆராய்ச்சி! தமிழ் ஆராய்ச்சி. தோய், செய் பொருத்தமாக இருக்கிறது. எவ்வளவு பழமையான நூல்களில் எல்லாம் குறிப்பு வருகிறது? எப்படிப் பிடிக்கிறீர்கள் இதை எல்லாம்? பாராட்டுகள்.

    நானும் தோசை பற்றி ஒரு தொடர் பதிவு எழுதி இருக்கிறேன் - வேறு மாதிரி, எங்கள் ப்ளாக்கில்! முதல் பகுதியின் லிங்க் தருகிறேன். நேரம் இருந்தால், முடிந்தால் பின்னர் படித்துப் பாருங்கள்.

    http://engalblog.blogspot.com/2014/08/140804-1.html

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தோசைப் பதிவைப் பார்த்த ஆர்வத்தில்தான் இங்கு நிறைய பேர் வந்திருப்பார்கள் போல.....!

      ஆசை தோசை அப்பள வடை என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்.

      அதுபோல் இந்தத் தலைப்பைப் பார்த்து வந்தவர்களை ஆக்கிவிட்டேன் எனத்தோன்றுகிறது.. :(

      தங்களின் வருகைக்கும் விதவிதமான தோசைக்கும் நன்றி.

      Delete
  16. தோசை தமிழ்ச் சொல்லா என்ற ஐயம் எனக்கு வெகு நாட்களாக உண்டு. தோசை தமிழ்ச் சொல்தான் என்பதை சான்றுகளுடன் விளக்கியமைக்கு நன்றி! அதுபோல சாம்பார் தமிழ்ச் சொல்லா எனற ஐயமும் உண்டு. மராட்டியர்கள் தஞ்சையை ஆண்டபோதுதான் சாம்பார் அவர்களால் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது என சொல்லக் கேட்டிருக்கிறேன். உண்மை நிலை என்ன என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      சாம்பார் என்பது தமிழ்ச்சொல்லா என்பதற்குப் பின்வரும் விளக்கத்தைத் தமிழ் விக்கியில் இருந்து தருகிறேன்.

      ““““சாம்பார் என்றும் சாம்பரம் என்றும் அழைக்கப்படும் இந்த உணவு வகை தமிழகத்தில் பிறந்த ஒரு அறுசுவை உணவு.தமிழக கல்வெட்டு 1530 C.E பதிவின் வாயிலாக இது தமிழர்களின் பூர்வீக உணவு என்பது நமக்கு தெரிய வருகிறது அதாவது தஞ்சை வாழ் மாராத்தியர்களின் உணவு என்ற கருத்திலிருந்து முற்றிலும் விலகி நிற்க இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

      “அமுதுபடி கறியமுது பல சம்பாரம் நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக,”(South Indian Inscriptions, IV, 503, 1530 CE)

      என்பதே அந்த கல்வெட்டின் பதிவு.

      "கறியமுது பல சம்பாரம"---- பல காய்கறிகளை கொண்டு அரிசி உணவு படைத்தல் என்று பொருள்.

      "நெய்யமுதுள்ப்பட தளிகை ஒன்றுக்கு பணம் ஒன்றாக"---- அதாவது மிளகு மற்றும் நெய் சேர்ந்த சாம்பரம் உணவை பணம் ஒன்றுக்கு கொடு என்பதாக இந்த கல்வெட்டு அமைந்துள்ளது.

      இப்போ மாராட்டியர்கள் கதைக்கு வருவோம் இவர்கள் ஆட்சி யின் கீழ் தஞ்சை 1675 காலம் தான் வந்தது இப்படி இருக்க சாம்பார் தஞ்சை மாராட்டியர்களால் கண்டுபிடிக்கப்பட்டதை முற்றிலும் மறுத்து கூறலாம் மாராட்டிய மாநிலத்தில் வேரும்பருப்பை தால் என கூறி உண்ணும் பழக்கமே இன்று வரை உள்ளது அங்கு சாம்பார் என்ற சொல்லே கிடையாது.தமிழில் சாம்பு என்றால் குறைத்தல் அரைத்தல் என்று பொருள் அரைத்த தேங்காய் அல்லது தானியங்கள் என்று கூறலாம்.““““

      இது தங்களின் உடனடிப் பார்வைக்கு.

      நானும் இது குறித்துத் தேடுகிறேன்.

      நன்றி.

      Delete
  17. கல்வெட்டில் ஆரம்பித்து இலக்கியத்தில் பல நூறாண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று ஆதாரங்களைத் தேட முனைந்த தங்களின் உணர்வு பாராட்டத்தக்கது.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.

      Delete
  18. தோசை ஆராய்ச்சி அமர்க்களம். தமிழ் சரக்கு அதிகம் உள்ள மிக சில பதிவர்களில் நீங்களும் ஒருவர் . தொடரட்டும் உங்கள் தேன்ன்தமிழ்ப் பதிவுகள்

    ReplyDelete
    Replies
    1. அமர்க்களம்....!

      போர்க்களத்தைக் குறித்த இவ்வார்த்தையின் பொருள் எப்படி மாறியது என்பதைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றுகிறது.

      இன்னொரு ஆராய்ச்சி..


      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி ஐயா.

      Delete
  19. தோசை ஆராய்ச்சி அமர்க்களம். இதை நீர் தோசை செய்து சாப்பிட்டுவிட்டு எழுதுகிறேன். பொதுவாக நான் அதிகம் செய்வது தோசை தான். வித விதமாக தோசைகள் செய்வேன். :) ஆராய்ச்சியின் முடிவுகளை மனப்பாடம் செய்துக்கறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீர் தோசை என்றெல்லாம் தோசை இருக்கிறதா என்ன...? !!!!!

      எனக்கு அது பற்றியெல்லாம் தெரியாதே..!


      தங்கள் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
    2. உங்களுக்காக நான் பதிவிட்ட நீர் தோசை செய்முறை விளக்கம் கீழே. இது ஏதோ புதுசுனு தான் நானும் நினைச்சேன். கடைசியில் பார்த்தால் மதுரைப் பக்கம் பண்ணும் ஆப்பம் தான் மங்களூரில் நீர் தோசை என்கின்றனர். :) நடுவில் மெத்தென்று, சுற்றிலும் முறுகலாக, மெலிதாக! :))) தொட்டுக்கக் காரசாரமான சட்னியுடன்.


      http://sivamgss.blogspot.in/2015/05/blog-post_17.html

      இங்கே பார்க்கவும் நீர் தோசை செய்முறை.

      Delete
  20. எப்பவும் தோசை தானா என்று கேட்பவர்களிடம் இந்த ஆராய்ச்சி பற்றி சொல்ல வேண்டும். பகிர்வுக்கு நன்றிங்க ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே.

      Delete
  21. வணக்கம் ஐயா!

    என்ன ஒரு அற்புதமான ஆராய்ச்சி!..
    தோசையும் கொண்ட பேறு இன்று உங்கள் கரம்பட்டு (புகழ்) மணம் வீசுகிறது!..:)

    நான் இங்கில்லாத போது எக்கச்சக்கமான பதிவுகள்..!!!
    எங்கே தொடங்கி எப்போ படித்து முடிப்பேன் என தெரியவில்லை!
    மலைக்க வைக்கின்றீர்கள்!..

    ”எல்லாவற்றுக்குமாக” என் உளமார்ந்த இனிய நன்றியுடன்
    நல் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ.

      உங்கள் பின்னூட்டத்தை முதலில் நான் படிக்க வில்லை.

      நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகையும் உங்கள் கருத்தும் பார்த்த மாத்திரமே மகிழ்ச்சிதான்.

      மிக்க நன்றி.

      Delete
  22. இதுவரை, நானும் தான் பல தோசைகளை சு(இ)ட்டிருக்கிறேன்! வயிற்றுக்குள்! எதையும் ஆயும் திறமைக்கு எடுத்துக் காட்டாக இதையும்(தோசை) ஆய்ந்தீர்! நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி புலவர் ஐயா.

      Delete
  23. கஞ்சம் பற்றிக் கஞ்சத்தனம் இல்லாமல் விவரங்களைத் தொகுத்துள்ளீர்கள்!
    பழமையான தோசை! சுடச் சுட!

    ReplyDelete
    Replies
    1. கஞ்சத்தைப் பிடித்துக் கொண்டீர்களா...!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  24. தோசை குறித்த பல தகவல்கள் வியப்பினை அளித்தன! இனி தோசை சாப்பிடும் போதெல்லாம் உங்கள் பதிவு நினைவுக்கு வரும்! சென்ற மாதம் நானும் ஒருவழியாக தோசை சுடக்கற்றுக்கொண்டேன்! முடிந்தால் அதை எழுதுகின்றேன்! அருமையான பதிவு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. இந்த மருந்தைத் தின்னும்போது மட்டும் குரங்கை நினைக்காதீர்கள் என்பதைப் போலச் சொல்கிறேன். தோசை சாப்பிடும் போது என் பதிவை நினைக்காதீர்கள். :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு தளிர் சுரேஷ்.

      Delete
  25. தோசை பற்றிய ஆராட்சி அருமையான விருந்து!

    ReplyDelete
  26. சகோதரர் தமிழ் இள‌ங்கோ மூலம் இங்கு வந்தேன். வந்து பார்த்தால் தோசையைப்பற்றிய ஆராய்ச்சி! நூற்றாண்டுகளுக்கு முன்னால் போய் பிங்கல நிகண்டு, கல்வெட்டு, விறலிவிடு தூது என்று உதாரணங்கள் சொல்லி அசத்தி விட்டீர்கள். கடைசியில் தேவநேயப்பாவாணர் சொல்லிய விளக்கம் எழுதியது இதுவரை அறியாதது. அருமை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதற் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் நன்றி சகோ.

      Delete
  27. #முடிஞ்சா அந்த விரலிவிடு தூது uncensored version கதையை கொஞ்சம்... ஹீ...ஹீ...#
    அதை ,நான் சில நாட்கள் முன் ...இளம் மனைவியின் கைமணம் !
    அடை போட்டதில் தேர் நின்றதோ இல்லையோ ...
    என்னவள் வைத்த அடையினில் நின்றது ...
    என் தோசை தின்னும் ஆசை !
    என்று எழுதியது சரிதானா விஜு ஜி :)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆசை உங்களவள் வைத்த தோசையிலேயே நின்றால் எப்படி...

      அடுத்தடுத்த உணவுகளுக்குப் போகவேண்டாமா..

      நீங்கள் தமிழ் படித்தவர் என்ற சந்தேகம் இன்னும் வலுப்படுகிறது எனக்கு..


      ஹ ஹ ஹா

      நன்றி பகவான்ஜி.

      Delete
  28. தோசையின் பெயர்க்காரணங்கள் ரசிக்க வைத்தன. அன்றாட வாழ்வில் நம்மோடு கலந்துவிட்ட தோசையைப் பற்றிய ஆராய்ச்சி கண்டிப்பாகத் தேவைதான். இதன் வரலாற்றை அறிய கல்வெட்டுக்கள், நிகண்டுகள் எனத் தேடி நீங்கள் சொன்ன ஆதாரங்கள் மலைக்கவைக்கின்றன. ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது தோசை எனும் போது வியப்பாய்த் தான் இருக்கிறது. அடுத்தது தமிழரின் முக்கிய உணவான இட்லி பற்றிய ஆய்வையும் செய்துவிடுங்கள்! பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.

      உணவுகளைப் பற்றியே ஒரு பதிவிடலாமோ என்ற எண்ணம் வருகிறது.


      காலம் கைகூடினால் அதையும் தொடர்வோம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  29. ஒரு தோசைக்கு நான்கு வகையான சட்னி தொட்டுச் சாப்பிட்டிருக்கிறேன். ஆனால், ஒரு தோசைக்கு நான்கு கால ஆராய்ச்சி செய்து இப்பொழுதுதான் பார்க்கிறேன்! அசத்தி விட்டீர்கள் ஐயா!

    தங்கள் தாயார் கூறுவது போல் தோசை சுடுவது என்பது எளிதானதாக இருக்கலாம். ஆனால், அதைச் சிறப்பாகச் சுடுவது அவ்வளவு எளிதன்று எனத் தோன்றுகிறது. எங்கள் பாட்டிமார்கள், சித்திமார்கள் என எல்லோரையும் விட என் அம்மாதான் முறுகலாகத் (அப்பாடா! தோசை தமிழ்ச் சொல்தான் என ஐயா உறுதிப்படுத்தி விட்டார். எனவே, துணிந்து இனி, தோசைக்கு முன்னால் ஒற்று தொட்டுக் கொள்ளலாம்.) தோசை சுடுவார். ஆனால், அவரிடம் கற்றுக் கொண்ட என் தம்பி இன்று அவரை விடச் சிறப்பாகத் தோசை சுடுகிறார். அம்மாவால் அவருடன் போட்டியிட முடியவில்லை. :-) ஆக, மற்ற பண்டங்களைப் போல, தோசை சுடுவதும் மதிக்கத்தக்க ஒன்றுதான்.

    //சமணம் ஆற அமரப் படிக்க வேண்டியது.
    தோசை ஆறினால் நன்றாக இருக்காதில்லையா?// - அமர்க்களம்!!!

    ReplyDelete
    Replies
    1. மிகுந்த நன்றி ஐயா.

      உங்களின் இவ்வளவு நீண்ட பின்னூட்டத்தை விட்டு அமர்க்களத்தை வெறிக்கின்றன கண்கள்.

      அமர்க்களம் என்றால் போர்க்களம்.

      அது அமர்க்களமானது எப்படி என்று ? :)

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  30. சமைக்க நேரமோ ஆர்வமோ இல்லாத நேரங்களில், மாவிருக்கு, தோசை ஊத்திக்கலாம் என்று சாதாரணமாய்ச் சொல்லும் தோசையின் பாரம்பரியத்தைப் படித்து அசந்து போய்விட்டேன். இனிமேல் தோசையைப் பார்த்தாலே உங்கள் நினைவு வரப்போகிறது. எப்பொழுதும் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள் அண்ணா :-)

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வீட்டிலுமா..?

      ஹ ஹ ஹா

      தண்ணீர்தானே வைத்துக் கொண்டால் போகிறது.


      தங்களின் அன்பினுக்கு நன்றி சகோதரி.

      Delete
    2. பின்ன? நான் தமிழச்சியாக்கும் :-)

      Delete
  31. சிறு விஷயமானாலும் மெனக்கட்டுத் தகவல் திரட்டி வழங்கியமைக்குப் பாராட்டு . சுவையாக எழுதும் திறமை உங்களிடம் இருக்கிறது . தோ என்பது இந்தி , வடமொழி அல்ல . வடமொழியில் துவா . உடன்மாவை ( புளிக்கும் முன் ) ஊற்றிச் செய்வது ஊற்றப்பம் ( ஊத்தப்பம் )

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டிற்கு முதலில் நன்றி ஐயா.

      வடமொழி என்பதைத் திராவிடம் என்பது போன்ற பொதுப்பொருளில் ஆண்டேன்.

      சமஸ்கிருதத்தை மட்டும் குறித்தன்று.

      எனினும் உங்களின் நெறிப்படுத்தலுக்கு மிக்க நன்றி.

      Delete
  32. தோசை பற்றிய பதிவினை ரசித்தேன் ஆராய்ச்சிகள் எல்லாம் நன்றாக இருக்கிறது. நான் எதையாவது குயுக்தியாகச் சொல்லி மாட்டிக் கொள்ள விரும்பவில்லை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete

  33. வணக்கம்!

    தோசைப் பதிவுக்குள் வீசும் மணமுகர்ந்து
    ஆசை பெருகும் அகத்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete