நம் தொன்மரபின் தொடர்ச்சி நம் தலைமுறையோடு முடிந்துவிடுமோ என்ற கவலையுடன் கட்சி வேறுபாடின்றித் தமிழகமெங்கும் உரத்தொலிக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக்குரல்களைப் பார்வையாளனாக இருந்து பார்த்த என்னை, மதிப்பிற்குரிய திரு. ஞானப்பிரகாசம் ஐயாவின் இருபதிவுகளும் தற்போது அவர் எனக்கு இது குறித்துத் தனியே விடுத்திருந்த மின்னஞ்சலும் இப்பதிவினை எழுத என்னை இழுத்து வந்திருக்கின்றன.
Wednesday, 30 December 2015
Friday, 18 December 2015
எது கவிதை?
‘தமிழகத்தில்
மக்கள் தொகையை விடக் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்’ என்பதாக என்றோ வாசித்த துணுக்கொன்று இப்போது நினைவுக்கு வருகிறது. இணையத்தில் இயங்கத்தொடங்கிய இந்தக் குறுகிய காலத்தில், எழுதுபவர்களில்
பெரும்பாலானவர்கள் கவிஞர்களாய்த் தெரிகிறார்கள். ஒருவேளை ‘காமாலைக்காரன் கண்ணுக்குக்
கண்டதெல்லாம் மஞ்சள்’ என்று கூறுவதுபோல என் கண்களுக்குத்தான் இப்படிப்படுகிறதோ என்னமோ?
Tuesday, 15 December 2015
Sunday, 13 December 2015
ரக்ஷிதாவின் கண்களில் இருந்து.....!
Monday, 7 December 2015
Wednesday, 2 December 2015
Monday, 30 November 2015
Saturday, 28 November 2015
உன் பணம் பணம் என் பணம்.
ஊரிலேயே
பெரிய பணக்காரன் அவன். பொன்னும் முத்தும் வைர வைடூரியங்களும் கொட்டிக் கிடக்கின்ற கருவூலம்
அவன் வீட்டில் இருந்தது. ஆனால், சேர்த்த செல்வத்தைக் கொண்டு சுகமாக வாழ்வோம் என்ற எண்ணமோ,
அது தேவைப்படுவோர்க்குக் கொடுத்து உதவுவோம் என்ற எண்ணமோ அவனிடம் ஒரு சிறிதும் இல்லை.
தன் சேமிப்பைப் பார்த்து, ‘இவ்வளவு செல்வமும் என்னுடையது என்னுடையது’ என்று எண்ணிக்கொண்டிருப்பதில்
அலாதி மகிழ்ச்சி அவனுக்கு.
Wednesday, 18 November 2015
Saturday, 14 November 2015
நான்கே அடிகளில் இராமாயணம்
பெருங்கதைகளை
மிகச் சுருக்கமாகச் சில வரிகளில் சொல்லிவிடும் தமிழ்ப்பாடல்கள் உண்டு. சிலப்பதிகாரக்கதையை ஒரு வெண்பாவில் சொல்லிப்போகும் பாடலை இதற்கு முன் பதிவொன்றில் கண்டிருக்கிறோம்.
Thursday, 12 November 2015
Saturday, 7 November 2015
Friday, 30 October 2015
Wednesday, 28 October 2015
Saturday, 17 October 2015
Monday, 12 October 2015
யானை எழுதிய சாசனம்.
| யானையின் பிடியில் உடல் முறிந்து. |
யானைகள் எப்போதும் பிரமிப்புத் தருபவை. சாந்தமும்
மூர்க்கமும் ஒருங்கே கொண்ட இயற்கையின் படைப்பு அவை. பண்டைய போர்க்களங்களில் அதன் ஆவேசம்,
மனிதனுக்காக மனிதனால் உருவேற்றப்படும் அதன் போர்வெறி, போர்க்களத்தில் வீறுகொண்டெழும் அதன் பேராற்றல், அதனை எதிர்த்துக் களமாடும் மனிதத் தறுகண், இவையெல்லாம் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை கற்பனை செய்திருக்கிறேன்.
Friday, 9 October 2015
Wednesday, 7 October 2015
கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்.
சித்ரா அக்கா எங்கள் தெருவின் தேர்ந்த கதைசொல்லி.
நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போதே அவருக்கு வயது முப்பதற்கு மேல் இருந்திருக்க
வேண்டும். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் செய்து கொள்ளவில்லை என்பதை விட அவரையாரும்
திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மையென இப்போது தோன்றுகிறது. ஒடிசலான உடல்வாகு. கருப்பென்றாலும்
களைமிகுந்த கண்கள்.
குறிச்சொற்கள் :
இலக்கியம்,
சங்க இலக்கியம்,
விளையாட்டு
Monday, 5 October 2015
பழமைக்குத் திரும்புகிறேன்!
வலைப்பதிவர் படைப்பூக்கப் போட்டிகள் முடிந்தன.
இனி மதிப்பீடுகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நெடுநாள் கழித்துக் கவிதை என்ற பெயரில்
கொடுக்கப்பட்ட வரையறைகளில் எழுத ஒரு வாய்ப்புக் கிடைத்தது. போட்டி என்பதைக் காட்டிலும்
பங்கேற்றல் என்பதே அதன் நோக்கம். போட்டியில்தான் எத்துணை எழுத்தாளுமைகள், தொழில்நுட்பப்
பதிவர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், கவிஞர்கள்,
நிச்சயம் இன்னும் மெருகேறி தமிழ் வாழும் என்கிற
நம்பிக்கை என்னுள் வலுவாக வேரூன்றி உள்ளது. போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பதிவர்களின்
பதிவுகளையும் படித்தவன் என்கிற முறையில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்..!
Friday, 2 October 2015
ஒரு துளி சேரப் பெருங்கடல்.
உலகம்
யாவையும் ஒருகுடைக் கீழாய்
ஒடுக்கும்
அறிவியல் நடக்கும் பாதையில்
முடங்கும்
தமிழின் முதுமை களைந்து
தடங்கள்
பதிக்கும் தமிழ்வலைப் பூக்கள்!
Subscribe to:
Posts (Atom)



