Saturday 7 November 2015

பாம்பு




விழித்துக் கொண்டது பாம்பு!
விடத்தைத் துப்ப இடமில்லாமல்
விழுங்கிக் கொண்டது தன்னுள்!
விதையில்லாத மரங்களில் ஏறி
விரட்டிச் சாய்க்குது என்னை!
விதியிது என்று என்மனம் தேற்றி
விரையப் போகுது எங்கோ!

ரித்துப் போட்டது சட்டை!
உலர்த்திப் போடக் கொடியில்லாமல்
உதிர்த்துப் போகுது எங்கும்!
உயிர்த்துளை மிக்க புற்றுகள் தோறும்
உடலைப் பதுக்குது மெல்ல!
உணர்வறியாது கூடுகள் கொன்ற
உலகில் வாழுது இன்னும்!

டுக்கச் சீறிடும் நாக்கு!
நடித்துக் காட்டும் வரமில்லாமல்
நரகப் பட்டதன் மேனி!
நக்கிப் பிழைக்கும் குணமில்லாமல்
நறுக்கிக் கொண்டது வாலை!
நதியாய் வாழக் கரைகளுமின்றி
நகரத் தேய்வன நாட்கள்!

பட உதவி - நன்றி http://artboxdesign.biz/
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

55 comments:

  1. பாம்பும், கவிதையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  2. வணக்கம்
    ஐயா

    பாம்புக் கவிதையை இரசித்தேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 2
    -நன்றி-
    -அன்பு-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  3. இரசித்தேன்
    subbu thatha
    www.subbuthathacomments.blogspot.com
    A surprise for u in my blog.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஐயா.

      தங்களின் வருகையும் முதற்பின்னூட்டமும் காண பெருமகிழ்வு.

      வெளியூரில் இருந்ததால் உடனே பதிலளிக்க இயலவில்லை.

      இதோ வருகிறேன்.

      நன்றி.

      Delete


  4. ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது நிகழ்வு பற்றி கவிதை வடிக்கும்போது, அந்த கவிதையின் எல்லா சொற்றொடர்களிலும் மோனை வருமாறு கவிதை எழுதுவதென்பது கடினம் என நினைத்திருந்தேன். ஆனால் தாங்கள் அதை வெகு எளிதாக சுவை குன்றாமல் கருத்து சிதையாமல் தந்திருக்கிறீர்கள். வியந்து நிற்கிறேன் தங்களின் கவிதையை படித்து!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துகளுக்கும் நன்றி.

      Delete
  5. இந்த வலைத் தளத்திற்கு இதுகாறும் ஏன் வரவில்லை என்று

    என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன்.



    தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.



    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  6. ஆஹா! சகோ பாம்பும் கூட தங்கள் கவிதையில் நடமாடுகின்றது...அருமை...

    கீதா: இது பாம்புக் கவிதை என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும், உட்பொருள் உள்ளது போலத் தெரிகின்றதே. நல்ல ரிதம்...தக தக தகிட......தக தக தத்தரிகிட...எனக்குச் சரியாக வந்ததா என்று தெரியவில்லை ஆனால் இப்படித்தான் நான் அதைப் பாடிப் பார்த்தேன்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!

      உட்பொருள்தான். வெறும் பதரானதில்லை.

      பாடிப்பார்த்தீர்களா....!!!!

      மிக்க மகிழ்வு.

      வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.

      Delete
  7. தேய்வன நாட்கள், தொய்விலா சீர்கள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  8. சிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  9. வேறு எதையோ உணர்த்துகின்றது...எது பாம்பாய் மாறியது?சகோ...

    ReplyDelete
    Replies
    1. அதிலொன்றுதான் உங்கள் பின்னூட்டத்திற்குப் பதிலளித்துக் கொண்டிருக்கிறது.;)
      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே!

      Delete
  10. அன்புள்ள அய்யா,

    மனிதப் பாம்புகளைத் தோலுரித்துக் காட்டின கவிதை.

    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மி்க்க நன்றி ஐயா.

      Delete
  11. நண்பரே மன்னிக்கவும்! என்ன சொல்ல வருகிறீர்கள். பலமுறை படித்தும், எனக்குப் புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் வெளிப்படையான கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. படமும் கவியும் அருமை
    தம +1

    ReplyDelete
  13. படத்தை உற்று பார்த்தேன் ,அப்புறம்தான் புரிந்தது ,இது மனிதப் பாம்பென்று :)

    ReplyDelete
    Replies
    1. பாடலுக்குப் படத்தில் பொருள் கண்டுபிடித்துவிட்டீர்களே பகவானே! :)

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete

  14. வணக்கம்!

    பாட்டும் படமும் படைத்துள்ளீர்! பார்..நிலை
    வாட்டும் மனத்தை வதைத்து!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
    Replies
    1. வதைத்துச் செயல்செய்யும் வாழ்வில் தமிழை
      விதைத்துப் புகழ்செய்யும் சொற்கள் - புதைநெஞ்சில்
      நித்தம் கவிப்பூக்கள் நிற்கப் புவிசெய்..உம்
      சித்தம்வா ழட்டுஞ் சிறந்து.

      தங்களின் வருகைக்கும் குறளுக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  15. வணக்கம் பாவலரே !

    பாருக்கோர் செய்திதனைப் பாட்டில் எடுத்துரைத்தீர்
    யாருக்கோ ஊட்டுகின்ற ஞானம்தான் - நீருக்கோர்
    வண்ணம் நிலங்கொடுக்கும் வாழ்வொளிரத் தீதற்ற
    எண்ணம் கொடுக்கும் எழில் !

    சிந்திக்க வைக்கும் வரிகள் அசத்தல் கவிஞரே
    வாழ்க வளமுடன் ....மன்னிக்கவும் தங்கள் வலைக்கு வந்தே ரொம்ப நாள் ஆகிறது
    இன்றே எல்லாப் பதிவுகளையும் பார்த்து விடுகிறேன் !
    தம +1

    ReplyDelete
    Replies
    1. எண்ணம் கொடுக்கா எழிலெல்லாம் உங்கவிதை
      வண்ணத் தமிழ்செய்ய வாய்பிளந்தேன்! - மண்ணோடிப்
      போகும்வீண் நீரல்ல! சாகும்கான் வேருக்கே
      ஆகும்நீர் நீர்செய்யு மாறு.

      வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பாவலரே!

      Delete
  16. அருமை. ரசித்தேன்.

    ReplyDelete
  17. உமிழப்படாமல், உள்ளேயே உறைந்த விஷம் நாகரத்தின கற்கள் ஆகும் எனும் தகவல் மூட நம்பிக்கை என்றே நினைத்தேன் இந்த கவிதையை படிக்கும் வரை:)

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வாருங்கள்.

      ஆம். நானும் படித்திருக்கிறேன்.

      கண்ணிருந்தும் அக்கற்களை இழந்துவிட்டால் பாம்பு குருடாகிவிடுமாமே.....,

      வாயிருந்தும் சொற்களை இழந்து ஊமையானவனைப் போல :)

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  18. அருமை ஐயா, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி பேராசிரியரே!

      Delete
    2. ஆம் ஐயா, பல நேரங்களில் விழங்கித்தான் ஆகனும்,,,,

      நன்றிகள்.

      Delete
    3. மன்னிக்கவும், விழுங்கி,,

      Delete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. தனதன தனதன தானா என்னும் சந்தம் மனதைக் கவர்ந்திழுக்கிறது.

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. இது மலைப்பாம்பா மண்ணுளிப்பாம்பா என்பதை படிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறீர்கள். கவிதையை எழுதும் போது தங்களுக்குள் படமெடுத்த பாம்பும், படிக்கையில் என்னுள் சீறிய பாம்பும் ஒன்றாகவே இருக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு.
    கவிதையின் வெற்றியும் அதுதான்.

    ReplyDelete
    Replies
    1. மனப்பாம்பு அண்ணா! ;)

      ஆம் அண்ணா.

      வாசிப்பவர் அனுபவத்திற்காக சில விடுதல்கள் இருக்க வேண்டும் என்கின்றது நவீன இலக்கியம்.

      இது பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான்.

      இடநிரப்பியாக எடுத்திட்டேன்.

      ஓரிடத்தில் ஓசை கெடுவதை நீங்கள் சொல்லவே இல்லையே ! :)

      நன்றி.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  24. இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் அய்யா.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

      நன்றி.

      Delete
  25. வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.

    தங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    நன்றி.

    ReplyDelete
  26. நன்றாக இருக்கிறது கவிதை!

    தெரியாமல்தான் கேட்கிறேன், என்னைப் போன்றவர்கள்தாம் எழுதத் தெரியாமல் ஏதோ கிறுக்கி வலையிதழ்களிலும் சொந்த வலைப்பூவிலும் கவிதைகளை வெளியிட்டுத் தேற்றிக் கொள்கிறோம். உங்களுக்கென்ன? ஆனந்த விகடன், குமுதம் போன்ற முன்னணி இதழ்களுக்குக் கவிதைகளை அனுப்பிவிட்டு அவர்கள் வெளியிட்ட பின்னர் வலைப்பூவில் ஏற்றலாமே? இந்த அளவுக்குத் எழுத்துத்திறமையை ஏன் வலைப்பூவோடு சுருக்கிக் கொள்கிறீர்கள்? அருள் கூர்ந்து வெளியே வாருங்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      உங்களைப் போன்றோர்கள் எழுதத் தெரியாதவர்கள் என்றால் வேறு யாரை எழுதத் தெரிந்தோராய்க் கொள்வது...!!!!

      எனக்கெல்லாம் இங்கு எழுதுவதும் தங்களைப் போன்றோரின் கருத்துகளை உடனுக்குடன் பெறுவதும் ஆனந்தமாய் உள்ளது.

      எனக்கு இதுவே பெரிது.

      தங்களின் அன்பினுக்கு நன்றி.

      Delete
  27. உணர்வறியாது கூடுகள் கொன்ற
    உலகில் வாழுது இன்னும்!

    ஊமையாய் அழும் உள்ளம். ம்..ம் உணர்கிறேன் ...

    ReplyDelete