Friday 19 June 2015

பிறவிக் கோளாறுகளின் வகைகள்! – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (9)


பழந்தமிழகத்தில் பிறந்த குழந்தைகள் அனைத்தும் நலமுடன் பிறந்துவிடவில்லை. சில குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறந்தன. பிறப்பில் ஏற்படும் கோளாறுகளைத் தமிழர்கள் எண்வகையாகப் பிரித்திருந்தனர்.

அவை

1)   சிதடு

2)   பிண்டம்

3)   கூன்

4)   குறள்

5)   ஊமை

6)   செவிடு

7)   மா

8)   மருள்
              என்பன.

சிதடு என்பது குருடு (  நன்றி திரு தர்மலிங்கம் ராஜகோபாலன் அவர்களே!)

பிண்டம் என்பது முழுமனித உருவிற் குறைபாட்டுடன் கையில்லாமல் கால் இல்லாமல் இதுபோல் ஏதேனும் உறுப்புகள் இல்லாமல் பிறக்கும் குழந்தைகள்.

உடல் நிறைவடையாது இப்படி இறந்து பிறக்கும் குழந்தைகள் ஊன்தடி என அழைக்கப்பட்டன.

பிறக்கும் போதே வளைந்த உடலுடன் பிறக்கும் குழந்தை கூன் எனப்பட்டிருக்கிறது.

குறள் என்பது உரிய உடல்வளர்ச்சி அற்றுக் குட்டையாகப் பிறக்கும் குழந்தைகள்.

ஊமை.

செவிடு

       என்பனவற்றின் பொருள் நாம் அறிந்தன.

மா என்பது மனித உருவில் இருந்து வேறுபட்டு விலங்குருவாய்ப் பிறப்பது.

மருள் என்பது பிறப்பிலேயே  உற்றறியும் அறிவும் உணர்ந்தறியும் அறிவும் இன்றி இருப்பது.

இவற்றை,

சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும்
கூனுங் குறளு மூமுஞ் செவிடும்
மாவு மருளு முளப்பட வாழ்நர்க்
கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்” ( புறம் – 28. )

என்னும்  புறநானூற்றுப் பாடல் எண்பேரெச்சங்கள்  எனக் குறிப்பிடுகிறது.

எச்சம் என்றால் குறையை உடையது என்று பொருள்.

இதில் கூறப்படாத மற்றுமொரு பிறவிக் குறைபாடு சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.

அறிந்தவர்கள் கூறலாம்.

யாரும் கூறாமல் இருந்தால் நாளை அதைக் கண்டுபிடிக்க உதவும் சிறு குறிப்பொன்று தருகிறேன்.

சற்று முயன்று பாருங்கள்.

வாருங்கள்.....நம் தமிழை நாம் தெரிந்துகொள்வோம்!!

விடை இப்பதிவின் தொடர்ச்சியில்.

விடையை சகோ கலையரசி அவர்கள் கூறிவிட்டார்கள். உடல் ஒட்டிப் பிறக்கும் இரட்டையரும் பிறவிக் குறை உடையவராகவே கருதப்படுவர்.

இன்னும் ஒருகேள்வி மிச்சம் இருக்கிறது.

இவர்களைப் பண்டைய இலக்கியங்கள் எப்பெயரிட்டு அழைத்தன என்பது...!

விடையறிந்தோர் கூறலாம். விடை அடுத்த பதிவில்.

புதிருக்கான விடை “ காதலுக்குப் பலியான தோழி ” எனும் பதிவில்.

முந்தைய உங்கள் தமிழை அறிந்துகொள்ளுங்கள் என்னும் 8 பதிவுகளின் தொடர்ச்சி.பட உதவி- நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images


Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

48 comments:

 1. அன்புள்ள அய்யா,
  ‘பிறவிக் கோளாறுகளின் வகைகள்!’ புறநானூற்றுப் பாடல் எண்பேரெச்சங்களை அழகாக விளக்கியது அருமை.

  நன்றி.
  த.ம.3.

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கம்.

   உங்கள் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

   Delete
 2. நம்மவர்கள் தொடாத துறையே இல்லை என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி முனைவர் ஐயா.

   Delete
 3. தொடர்கிறேன் சகோ....தம 5

  ReplyDelete
 4. வணக்கம் என் ஆசானே,
  பிறவிக் குறைபாடு எனில் அது ஆண் பெண் தன்மை பெறுதல், பெண் ஆண் தன்மை பெறுதல் என அலி, பேடு இவையா?
  தாங்கள் தான் சொல்லனும்,
  குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
  ஆள் அன்று என்று வாளின் தப்பார்
  தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
  எனும் பாடல் ஊன்தடி பிறந்த குழந்தையையும் ஆள் என்று வாளால் வெட்டி,,,,,
  இது சேரமன்ன,,,,,,,,,, நீர் வேண்டி காலம் தாழ்த்தி கிடைத்த காரணம்,,,,,,,,,,
  தாங்கள் சொன்ன குறைபாடு முயற்சிக்கிறேன்
  தங்கள் விளக்கம் அருமை,
  நன்றி,

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் பேராசிரியரே!
   அலி பேடு என்பதைப் பிறவியிலேயே கண்டுபிடிக்க முடியாது என நினைக்கிறேன்.

   நீங்கள் சொல்லும்பாடல் சரிதான். ஊன்தடி என்பது அதில் வருகிறது.

   நான் சொன்ன குறைபாடு அதுவன்று.

   விடைகாணச் சிறுகுறிப்பொன்றை மாலையில் தருகிறேன்.

   கண்டுபிடித்துவிடமுடியும் உங்களால் காத்திருங்கள்.

   நன்றி.

   Delete
 5. இவற்றுள் சிதடு, குறள், மருள் தெரியாதன.மகி இங்குக் குறிப்பிட்டிருக்கும் குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும் என்ற பாடலை ஏற்கெனவே படித்திருக்கிறேன். குறைபாடுகளையும் எட்டு வகையாக அப்போதே பிரித்துத் தனித்தனிப் பெயர் இட்டிருக்கிறார்கள் என்பது எனக்குப் புதிய செய்தி. வியப்புத் தரும் செய்தியும் கூட.
  இன்னொரு குறைபாடு பற்றித் தெரிந்து கொள்ள ஆவல். தொடருங்கள் சகோ! த. ம வாக்கு 8.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ!

   இதில் சொல்லப்படாக் குறைபாடு இன்றும் நாம் நாளிதழ்களில் காண்பதுதான்.
   அதை ஒரு பாடலில் கண்டேன்.

   குறிப்புக் கொடுத்தால் கண்டுபிடித்துவிடுவார்கள்.

   பார்ப்போம்.

   தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 6. குட்டையாய் இருந்தால் குறள் ,சரிதானே :)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பகவானே!

   நீங்கள் சொல்வது உண்மைதான். உயரத்தை வைத்து [co="green"]ஐந்துவகையாக [/co]மனிதர்களை அழைத்திருக்கிறார்கள்.

   மிகக்குள்ளமானவர் [co="green"]“குறள்“[/co] என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

   அவரைவிடச் சற்று உயரமானவர்கள் அதாவது சராசரி உயரத்திற்கும் சற்றுக் கீழ்ப்பட்டவர்கள், [co="green"]“சிந்தன்“[/co] என்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

   சரியான அளவு அதாவது சராசரியான உயரம் உடையவர்களை [co="green"]“ அளவிற்பட்டான்”[/co] என்று கூறியிருக்கிறார்கள்.

   சராசரிக்கும் மேல் உயரம் இருந்தால் அவன் [co="green"]“நெடியன்“ [/co]எனப்பட்டிருக்கிறான்.

   உலக சாதனை படைப்பதுபோல் வியக்கும் அளவிற்கு உயரமானவன் [co="green"]“ கழி நெடியன்"[/co] எனப்பட்டிருக்கிறான்.

   இதை யாப்பருங்கல விருத்தியின் 23 ஆவது சூத்திரம் பின்வருமாறு கூறுகிறது.


   [co="red"]“குறளடி முதலாகிய அடிகளை இடுகுறியானும் காரணக் குறியானும் வழங்குப. ‘காரணக் குறியான் வழங்குமாறியாதோ?’ எனின், மக்களில் தீரக் குறியானைக் ‘குறள்’ என்ப; அவனின் நெடியானைச் ‘சிந்தன்’ என்ப; குறியனும் நெடியனும் அல்லாதானை ‘அளவிற்பட்டான்’ என்ப; அவனின் நெடியானை ‘நெடியன்’ என்ப; தீர நெடியானைக் ‘கழி நெடியன்’ என்ப. அதனால் இவ்வடிக்கும் இவ்வாறே பெயர் சென்றன என்ப.“[/co]

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
  2. ஐயா... வரும் பதிவர் மாநாட்டில் உங்களின் அற்புதமான தேடலைப் பற்றியும் நீங்கள் பேச வேண்டும் என்று விரும்புகிறேன்... நன்றி...

   Delete
 7. ம்.. ம் ஊமை, செவிடு சொல்லி விட்டீர்கள். குருடு சொல்லவில்லையே ஒரு வேளை அதுவாக இருக்குமோ.ம்ம் பார்க்கலாம்.
  சிதடு, மா, இருள் புதிய வார்த்தைகள் மட்டும் அல்ல மா பற்றி நான் அறிந்ததே இல்லை.மீண்டும் வருகிறேன்.பதில் யாராவது சொல்வார்களா? யார் என்ன தான் சொல்கிறார்கள் என்று பார்ப்போம். பதிவுக்கு நன்றி !வாழ்த்துக்கள் ..!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் அம்மா.

   ஆம் குருடு என்பதைச் சொல்லவில்லையே.

   அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.
   அதிலும் கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது எனும் தொடரைப் பதிவில் சேர்த்திருந்தேன்.

   பின் எல்லாவிடத்தும் இதுவே மேற்கோளாய்க் காட்டப்படுவது என்பதால் தவிர்ந்தேன்.

   குருடு என்பது நிச்சயம் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

   இங்குள்ள எச்சொற்களேனும் அப்பொருள்படுமா எனப் பார்க்க வேண்டும்.

   எனக்குத் தெரியவில்லை.

   இதில் நான் கூறாத குறைபாடொன்றினை நீங்கள் கூறியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

   எனினும்,

   நான் சொல்லவந்தது வேறொரு குறைபாட்டினைப் பற்றி.


   காத்திருப்போம்.

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
  2. வணக்கம் அம்மா.

   திரு. தர்மலிங்கம் ராஜகோபாலன் அவர்கள் கூறியதே சரி.


   சிதடன் என்ற சொல் குருடரைக் குறிக்கிறது.

   அவருக்கும் உங்களுக்கும் நன்றி.

   Delete
 8. அறியாதன அறிந்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

   Delete
 9. அந்த குறைபாடு என்னவென்று அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. விடையைச் சகோ கலையரசி அவர்கள் கூறிவிட்டார்கள் ஐயா.

   புதிரில் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது.

   தொடர்வதற்கு நன்றி.

   Delete
 10. எட்டு வகையாக குறைபாடுகளை இன்றே தெரிந்துகொண்டேன்.
  அடுத்த பகிர்வுக்கு காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி கவிஞரே!

   Delete
 11. நாளிதழ்களில் காணப்படுவது என்று நீங்கள் சொன்னதால் ஒரு யூகம். தலை, மார்பு என இன்னோர் உடலுடன் ஓட்டிப்பிறக்கும் குழந்தைகள் உண்டு. அதை அறுவை மூலம் அகற்றினார்கள் என்ற செய்தி அடிக்கடிக் கண்ணில் படும். குருடு ஏற்கெனவே இனியா சொல்லிவிட்டார்கள். கண்ணில் இன்னொரு குறைபாடு மாறுகண். வேறு ஏதும் தோன்றவில்லை.இனி நீங்கள் தான் சொல்லவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.

   வாழ்த்துகள் சரியாகக் கண்டுபிடித்துவிட்டீர்கள்.

   உடல் ஒட்டிப் பிறந்த இரட்டையர் இதுபோல் பிறவிக் குறை உடையவர்கள் வகையில் அடங்குவர்.

   அவர்களைச் சங்க இலக்கியம் ஒரு பெயரிட்டு அழைக்கிறது.

   அது காரணப்பெயர்தான்.

   யோசித்தால் கண்டுபிடித்துவிடலாம்.

   குறிப்பு வேண்டுமானால் தருகிறேன்.

   அச்சொல்லின் ஒரு பகுதி மரத்தோடு தொடர்புடையது.

   விடை இப்பதிவின் தொடர்ச்சியில்.

   நீங்கள் கண்டுபிடித்துவிடுவீர்கள் என்றே நினைக்கிறேன்.

   நன்றி.

   Delete
  2. எவ்வளவோ யோசித்தும் என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை சகோ! காரணப்பெயர் என்று சொல்லியிருப்பதால் என் யூகம். ஒட்டு+ இரட்டை= ஒட்டிரட்டை! விடையை நீங்களே சொல்லிவிடுங்கள்!

   Delete
 12. “சிதடன்” என்னும் சொல்லின் பொருள் “பார்வையற்றோன்” என அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது ஐயா.
  http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/romadict.pl?page=151&table=fabricius&display=utf8
  ஒன்பதாவது எச்சம் அறியக் காத்திருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஐயா வணக்கமும் மிக்க நன்றியும்.

   சிதடன் என்னும் சொல் உடைய பாடல் எனக்குப் பத்தாம் வகுப்பில் பாடமாய் இருந்தது.

   “துஞ்சுபுலி இடறிய சிதடன் போல ” என்று அதில் ஒருவரி வரும்.

   நானும் என் எழுத்தில் இச்சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

   நான் உள்வாங்கியதும் பயன்படுத்தியதும் “அறிவற்றவன்“ என்ற பொருளில்தான். அதன் பொருள் குருடன் என்பது நீங்கள் சொல்லும் வரை என் மனதில் இல்லை.

   மிகப் பலவிடங்கள் இதுபோல மனதில் தங்கி இருக்கும் கருத்தேற்றங்களால் சறுக்கியிருக்கிறேன்.

   இதோ இங்கும்.

   இனியா அம்மா சொல்லாவிட்டால், நீங்களும் சுட்டிக்காட்டாவிட்டால் என் மனப்பிழை ஒருபோதும் திருந்தி இருக்காது.

   பதிவில் திருத்திவிட்டேன்.

   அறிவூட்டியமைக்கும் மிக்க நன்றியுண்டு.

   தொடர்ந்து வந்து கருத்திடுகின்றமைக்கு நன்றி.

   Delete
 13. அறியாதன அறிந்தேன்.நன்றி

  ReplyDelete
 14. அறியாதன அறிந்தேன்.நன்றி

  ReplyDelete
 15. ஆகா
  தாங்கள் எழுத எழுதத்தான் தமிழின் மகிமை
  புரிகிறது
  தமிழன் தொடாத துறையே இல்லை அல்லவா
  நன்றி நண்பரே
  தம+1

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கரந்தையாரே!

   Delete
 16. தொடர்ந்து வருவேன்!

  ReplyDelete
 17. தொடரட்டும் அறிமுகங்கள் ..
  தம +

  ReplyDelete
 18. உங்கள் பதிவின் மூலம் நிறைய அறியாத செய்திகளை தெரிந்து கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

   Delete
 19. அறியாத விஷயங்கள்! அறிந்து கொண்டேன்! தேடிப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு. தளிர். சுரேஷ் அவர்களே.

   Delete
 20. ஆஹா! சங்கப் பாடல்களில் இருந்து அருமையானத் தகவல்கள், கலக்குங்கள் அண்ணா

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ.

   நீங்கள் வரும் வரை உங்கள் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான்.

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 21. புறநானூறு சொல்லிய உடல் குறைபாடுகள் பற்றிய ஒரு சிறப்பான ஆக்கம் கண்டேன் பாராட்டுகள் .

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

   Delete
 22. உலகாயித மெய்மத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஒரு சிறந்த ஆக்கத்தைக் கண்டேன் மிகசிறந்த ஆக்கம் அறிஞ்சர் களான பேரா. நெடுஞ்செழியன் அறிஞ்சர் குணா பேன்றோர் பல ஆய்வுகள் செய்து தமிழகத்திற்கு தந்தார்கள் நீங்களும் பதிவு செய்தமைக்கு பாராட்டுகள் .

  எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இதையும்


  .// இங்குச் சொல்லப்படும் எந்தக் கருத்தும் எனது கருத்தல்ல. இக்கருத்தினோடு எனக்குள்ள உடன்பாடு மற்றும் உடன்பாடின்மை என்பது என்னோடு இருக்கிறதே அன்றி அதை ஒரு சார்பாய் இப்பதிவுகளில் எங்கும் வெளிப்படுத்திடவில்லை.//

  சொல்லும்போது உங்களின் எண்ணம் எமக்கு புரிகிறது உமது கொள்கையும் எம்மால் அறிந்து கொள்ள இயலுகிறது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.

   இது வேறொரு பதிவில் இட்டிருக்க வேண்டிய பின்னூட்டமோ..?!

   இருப்பினும் நன்றி.

   “““““சொல்லும்போது உங்களின் எண்ணம் எமக்கு புரிகிறது உமது கொள்கையும் எம்மால் அறிந்து கொள்ள இயலுகிறது““““““

   அறிந்ததை தயவு செய்து யாரிடமும் சொல்லிவிடாதிருங்கள் :)

   நன்றி.

   Delete
 23. அருமையான ப்திவு பல தெரியாதவற்றை தெரிந்து கொண்டோம் ஆசானே!

  ReplyDelete
 24. அட! உஅயரத்தைப் பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டோம்....குறள் என்றால் மிகவும் உயரம் குறைவானவர் என்பது ம்ம்ம்சரியாகத்தான் இருக்கும்...."குறள்" சிறியதுதானே...ஆனால் பொருள் மிகப் பெரியது அல்லவா...மூரித்தி சிறிது....கீர்த்தி பெரிது என்பது போல்....

  என்னை எல்லோரும் நாலடியார் என்று அழைத்து வந்தனர்....உயரம் குறைவு என்பதால்....இப்போது நானே "நான் குறல்" என்று சொல்லிக் கொடுக்கலாம் போல அவர்கள் என்னை அழைக்க......

  ---கீதா

  ReplyDelete

 25. வணக்கம்!

  முதுகண்ணன் தந்த மொழிகண்டேன்! இன்ப
  மதுவுண்டேன்! மின்னுமதி கொண்டேன்! - புதுப்புது
  வண்ணங்கள் காட்டும் வலைப்பதிவர் சோசப்பின்
  எண்ணங்கள் என்றும் இனிப்பு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete