மன்னன்
மட்டும் அல்ல, முதலமைச்சராக ஏன் பிரதமராகக் கூட ஆகலாம்.
மானங் கெட்டால் மட்டும் போதாது இன்னும் சிலவற்றைக் கூறி , அவையும் கெட வேண்டும் என்கிறார்
வள்ளுவர்.
கொஞ்சம்
அதிர்ச்சியாக இருக்கிறதா?
பொறுமை.!
பொறுமை..!!
ஆளவிரும்பும்
ஒருவன், தன்னிடம் அண்டவே விடக்கூடாத சில பண்புகளைக் குற்றம் என வகைப்படுத்தி அவற்றை
ஒரு நாட்டை ஆள்பவன் தன்னை நெருங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று குற்றம்கடிதல் என்னும் அதிகாரத்தில் கூற வருகிறார்
வள்ளுவர்.
இந்தக்
குற்றங்கடிதல் என்னும் தலைப்பை விளக்க வந்த பரிமேலழகர் , திருவள்ளுவர் அவ்வதிகாரக்
குறள்களில் குற்றங்கள் எனச் சொல்லியதைத் தொகுத்து, மன்னனிடம் இருக்கக் கூடாத குற்றங்கள் ஆறு என ஒரு பட்டியலைத் தருகிறார்.
அவை,
1) காமம்.
2) வெகுளி.
3) கடும்பற்றுள்ளம்.
4) உவகை.
5) மதம்.
6) மானம்.
என்பன.
கொஞ்சம் விளக்குவோம்.
1) காமம்
– வரம்பு கடந்த சிற்றின்ப விருப்பம்.
2) வெகுளி
– காரணத்துடனோ காரணம் இல்லாமலோ வரும் கோபத்தின் அளவு, தன் கட்டுப்பாட்டை மீறி அளவு
கடந்து போதல்.
3) கடும்பற்றுள்ளம்
– அதாவது தன்னிடம் உள்ள செல்வத்தை அவசியம் நேரும்போதும் செலவு செய்யாமல், அதன்மேல் மிகுந்த ஆசை கொண்டு இறுகப்
பிடித்து வைத்திருக்கின்ற கஞ்சத்தனம்.
4) உவகை
– தன்னிடம் உள்ள அரக்க குணத்தினால் வருந்த வேண்டியதற்கும் மகிழச்சியே கொள்ளுதல்.
5) மதம்
– இது பணம், அதிகாரம் முதலியவற்றால் வரும் பெருஞ் செருக்கு.
இதெல்லாம்
சரி,
மானம்
கெட வேண்டும் என்று வள்ளுவர் எப்படிச் சொல்லுவார் என்கிறீர்களா..?
மானம்
என்பதைத் திருவள்ளுவர் இரண்டாகப் பிரிக்கிறார்.
ஒன்று,
மாட்சி தரும் மானம்.
அது,
தம் நிலையில்
தாழாமையும், எச்சூழலிலாவது தம் நிலைக்குத் தாழ்வு ஏற்பட்டால் அதன் பின் உயிர் வாழாமையும்
என்று இருப்பது.
( சிலப்பதிகாரத்தில் தான் உரைத்த நீதி தவறாகிப்போய்த் தன் நிலை தாழ்ந்தது
என்பதை உணர்ந்தவுடன், பாண்டியநெடுஞ்செழியன் வீழ்ந்து இறந்ததை இங்கு எண்ணிப் பார்க்கலாம். )
சரி
இங்குக் குற்றம் என்றும் ஆள்வோன் தன்னை விட்டு நீக்க வேண்டும் என்றும் சொல்லப்படும் மானம் எது?
அதை
வள்ளுவர் ‘மாண்பிறந்த’ என்னும் அடைமொழி கொடுத்து, மாண்பிறந்த மானம் என்கிறார்.
அது,
எப்பொழுதும் தான் தாழாமல் பிறரையே தாழ்த்த வேண்டும் என்னும் கொடுங்கொள்கை.
இந்த
மானத்தைத்தான் ஆளும் அரசனை விட்டு அகற்றி ஒழிக்க வேண்டிய ஆறு குணங்களுள் ஒன்றாக வள்ளுவர் காட்டுகிறார்.
மானமும் கெட்டவன் மன்னன் ஆகலாம் என்பது இன்னும் சரியான தலைப்பாக இருக்கும்.
காமம் என்பதற்குப் பதிலாகச் சிறுமை என்றே வள்ளுவர் சொல்கிறார். “அளவிறந்த காமமாதலால் அது சிறுமை எனப்பட்டது”
எனப் பரிமேலழகர்தான் சிறுமை என்பதைக் காமம் என்று விளக்கம் அளிக்கிறார்.
சாதாரணமாக
உவத்தல் என்றால் மகிழ்தல்.
ஆனால்
இங்கு ஆள்வோனுக்கு இருக்கக் கூடாத உவகை அதுவன்று.
இது
“மாணா உவகை” .
அதாவது,
பிறர் துன்பம் காணப் பிறக்கும் பெருமகிழ்வு.
இங்கு ஆள்வோனைத் தேடி அடையும் செருக்கு என்னும் குற்றம் நீங்க வள்ளுவர் பரிந்துரைப்பது,
“
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை ”
‘தான்தான்
எல்லாம். தன்னால்தான் எல்லாம் நடக்கிறது. தான் இல்லாவிட்டால் எதுவும் இல்லை’ என்று ஆட்சியில் இருப்பவர் தன்னைக் குறித்து எண்ணம்
கொள்ளாதிருக்க வேண்டும்.
சில நேரங்களில் தகுதியின்மைகளே தகுதிகளாகக் கருதப்படும்
சூழலைக் காலம் முன்வைத்துப் போகிறது.
வள்ளுவர் ஆள்வோர் தம்மை விட்டு நீக்க வேண்டும் என்று சொல்லிப்போன இந்தத் தகுதியின்மைகளையே ஆட்சிபுரியத் தகுதிகளாகக் கொண்டு, ஆண்டோர்க்கும் ஆள்வோர்க்கும் இது பொருந்தும்.
தொடர்வோம்..!
படஉதவி- நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images
Tweet |
வணக்கம் !
ReplyDeleteஒரு கணம் தலைப்பை கண்டதும் அதிர்ச்சியடைந்தேன் :) அதற்கு பொருள் அறிந்ததும் புதுவித அனுபவம் ஒன்றினையும் இன்றைய பகிர்வின் மூலம் உணரப் பெற்றேன் !சுவாரஸ்யமான பகிர்வு !வாழ்த்துக்கள் சகோதரா .
தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி கவிஞரே!
Deleteதலைவர்கள் இக்குணங்களை இயல்பென எடுத்துக் கொண்ட பின், தலைப்பிலாவது அதிர்ச்சி இருக்கட்டுமே..! :))
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.
கருத்துக்கள் அருமை இனிமை
ReplyDeleteநன்றி நண்பரே
தம +1
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி ஐயா.
Deleteஇருக்கக்கூடாத குற்றங்களைப் பற்றிய ஆழமான பதிவினைக் கண்டேன். தலைப்பைப் பார்த்ததும் சற்று நெருடலாக இருந்தது. பதிவில் விளக்கமாக விளங்கவைத்துவிட்டீர்கள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி முனைவர் ஐயா.
Deleteபலர் பிரச்சனைக்கு உள்ளவதே மானம் கெடாததால்தான்
ReplyDeleteதம +
நானும் இதை வழிமொழிகிறேன் தோழர்.
Deleteமன்னனிடம் இருக்கக் கூடாத குற்றங்கள் ஆறு என படிக்கும்போதே இவைகள் தான் இப்போது இருக்கவேண்டும் என்பது போல் ஆகிவிட்டதே என நினைத்துக்கொண்டு படித்தேன். அதையே தாங்கள் பதிவின் இறுதியில் “வள்ளுவர் ஆள்வோர் தம்மை விட்டு நீக்க வேண்டும் என்று சொல்லிப்போன இந்தத் தகுதியின்மைகளையே ஆட்சிபுரியத் தகுதிகளாகக் கொண்டு, ஆண்டோர்க்கும் ஆள்வோர்க்கும் இது பொருந்தும்.” என சொல்லியிருப்பது சரியே. ஆனால் என்ன சொன்னாலும் யாருக்கும் இங்கு வெட்கமில்லை!
ReplyDeleteதாங்கள் சொல்வது உண்மைதான் ஐயா.
Deleteவெட்கப்பட வேண்டியதற்கு இப்போதெல்லாம் பலரும் வெட்கப்படுவதில்லை.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அருமையான விளக்கம்...
ReplyDeleteநன்றி டிடி சார்.
Deleteஇன்றைய ஆட்சி முறையில் இருப்பவர்களும் வருபவர்களும் மீண்டும் மீண்டும் வள்ளுவன் சொல்லிப்போனதை படித்து தெளிவு பெற்ற பின்பே ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் எப்படி இருக்கும்...?ம்ம். (நெனப்பு)
ReplyDeleteசிறப்பானதொரு விளக்கப்பதிவிற்கு நன்றிங்க ஆசிரியரே.
நீங்களும் வேணாம் உங்க ஆட்சியும் வேணாம் என்று போய்விடுவார்கள். அவ்வளவுதான்.! :)
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!
வாய் விட்டு ரொம்ப நேரமா சிரித்தேன். இதை நினைத்து நினைத்து.ம்..ம்..ம் ......
Deleteமன்னிக்க வேண்டும் சகோதரரே...
ReplyDelete" எப்பொழுதும் தான் தாழாமல் பிறரையே தாழ்த்த வேண்டும் என்னும் கொடுங்கொள்கை. "
சதாசர்வகாலமும் காலுக்கருகே தாழ்ந்திருக்கும் தொண்டரடிபொடிகளின் நினைவும்...
" தான்தான் எல்லாம். தன்னால்தான் எல்லாம் நடக்கிறது. தான் இல்லாவிட்டால் எதுவும் இல்லை’ என்று ஆட்சியில் இருப்பவர் தன்னைக் குறித்து எண்ணம் கொள்ளாதிருக்க வேண்டும்."
" மத்ததெல்லாம் சும்மாதான் ! " என்ற செருக்கு புன்னகையுடன் வீற்றிருக்கும் இன்றைய தலைவர்களின் ( மன்னர்களின் ? ) நினைவும் வருவதை தவிர்க்கமுடியவில்லை !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
வாருங்கள் அண்ணா!
Deleteபுலிகள் இருக்கும் மண்ணில்தான் புழுக்களும் இருக்கின்றன.
உயிர் என்னும் அளவில் இரண்டும் ஒன்றுதான்.
ஆனால்,......
அவை அதுவாவதில்லை.
இந்தப் பதிவின் ஒவ்வொரு பண்பிலும் எனக்கும் தோன்றியது அதுதான்.
இதன் தொடர்ச்சி ஒன்று இருக்கிறது.
நிச்சயம் ரசிக்கும் படி இருக்கும் என்று நினைக்கிறேன்.
சற்றே இடைவெளிவிட்டுப் பகிர்கிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
முதலில் தலைப்பைப் பார்த்ததும் என்னடா என்று தோன்ரியது...ஆனால் பதிவிற்குள் போகும் முன்னரேயே புரிந்துவிட்டது நிச்சயமாக ஆசானின் விளக்கம் இருக்கும் என்று. அப்படியே!
ReplyDeleteவள்ளுவருக்குச் சிலை வைத்தவர்கள், வள்ளுவரின் திருக்குற(ர)ள்(ல்) களுக்கு விளக்கவுரை எழுதினவர்கள் கூட நாட்டை எப்படி ஆண்டார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியாதா என்ன?! இன்றைய தலைப்பின் விளக்கங்கள் எல்லாம் நம்மை ஆள்பவர்களைத்தான் நினைவுபடுத்துகின்றது. எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கின்றார் ஐயன்.! மிக்க நன்றி ஆசானே! திருக்குறளை மேன்மைப் படுத்துவதற்கு.
டிடி அவர்கள் மிகவும் மகிழ்வுறுவார் இதனைப் படிக்கும் போது.
வாருங்கள் ஆசானே!
Deleteஉங்கள் வருகையை எதிர்பார்த்திருந்தேன்.
இவை எல்லாம் எதிர்பார்ப்புகள்தான்.
வள்ளுவரின் எதிர்பார்ப்பு.
நமது எதிர்பார்ப்பு.
நிறைவேறினால் நலம்.
குறைந்த பட்சம் ஒன்றிரண்டாவது.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஆசானே.
நல்லதொரு விளக்கவுரை அருமை நண்பரே...
ReplyDeleteதமிழ் மணம் 11
நன்றி நண்பரே.
Deleteநண்பர் என அழைத்ததற்கு இன்னொரு முறை நன்றி.
நல்ல விளக்கம்
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteஆசானே,
ReplyDeleteவணக்கம்.
தாங்கள் சொல்வது சரி, சில நேரங்களில் தகுதியின்மைகளே தகுதிகளாகக் கருதப்படும் சூழலைக் காலம் முன்வைத்துப் போகிறது.
இது உண்மை. எனவே தான் தவிர்க்க வேண்டியவைகளை தவிர்க்காமல் செயல்படுகிறார்கள் போலும்,
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பேராசிரியரே!
Deleteஅருமையாகச் சொல்லிச் செல்கிறீர்கள்...சகோ
ReplyDeleteதம +1
நன்றி சகோ.
Deleteதலைப்பு அதிர்ச்சியளித்தது. ஹா ஹா ஹா! தலைவர்கள் இக்குணங்களை இயல்பென எடுத்துக் கொண்ட பின், தலைப்பிலாவது அதிர்ச்சி இருக்கட்டுமே..! :))என்பதைப் பெரிதும் ரசித்தேன். உவகை ஏன் இருக்கக்கூடாது என்று பார்த்தால் இது மாணா உவகை. மாண் பிறந்த மானமும் அறிந்தேன். இன்று தலைவர்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பவர்கள் தாம் அதிகம். அறியாத செய்திகள். த.ம வாக்கு 14. என் தளத்தில் உங்கள் பின்னூட்டத்திற்குப் பதில் எழுதியிருந்ததைப் பார்க்க வில்லை என நினைக்கிறேன். முடிந்தால் எழுதுங்கள். நன்றி சகோ!
ReplyDeleteவாருங்கள் சகோ.
Deleteஉங்களின் தொடர்வருகைக்கும கருத்திடலுக்கும் நன்றிகள்.
உங்கள் தளத்தில் பின்னூட்டப் பதிலைப் பார்க்கவில்லை. இப்போதுதான் பார்த்தேன்.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதைப் பார்த்த போது எழுதத் தோன்றியது என்பதுதான் உண்மை.
பின் காலச்சுருக்கில் கதறக் கதற அதன் தலை இறுக்கியாயிற்று.
கொஞ்சம் அவகாசம் கொடுங்கள் .
நிச்சயம் எழுதுவேன்
நன்றி.
முடிந்த போது எழுதுங்கள். அவசரமே இல்லை. பதைப்பு நீர்த்து விடாமலிருக்க எழுது முன் மீண்டும் ஒரு முறை காணொளியைக் கண்டு விட்டு எழுதுங்கள். உங்கள் தளத்திலேயே காணொளியின் இணைப்பைக் கொடுத்து விட்டு எழுதுங்கள். நன்றி சகோ!
Delete( சிலப்பதிகாரத்தில் தான் உரைத்த நீதி தவறாகிப்போய்த் தன் நிலை தாழ்ந்தது என்பதை உணர்ந்தவுடன், பாண்டியநெடுஞ்செழியன் வீழ்ந்து இறந்ததை இங்கு எண்ணிப் பார்க்கலாம். )
ReplyDeleteநீங்கள் சொல்வதெல்லாம் 'பாண்டிய நெடுங்செழியன் 'களுக்கு பொருந்தும் ,இப்போ நடப்பது பதவி கிடைத்தால் போதுமென்ற 'நெடுங்செழியன் 'களின் காலம் :)
அதனால்தானோ இந்தக் கோலம்? :)
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி பகவானே!
“குற்றங்கடிதல்” குறட்பாக்களுக்கு பாண்டியநெடுஞ்செழியனின் மாட்சிமையை உதாரணமாக சொல்லிச் சென்ற விதம் அருமை ஐயா.
ReplyDeleteதங்கள் தொடர்வருகைக்கும் பதிவின் செய்திகளை எடுத்துக் காட்டி ஊக்கமளிப்பதற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteமானங் கெட்டவன் மன்னன் ஆகலாம்! - வள்ளுவர் சொல்கிறார்!...நல்ல விளக்கம். முத(லி)ல் அமைச்சருக்கே விளங்கிவிட்டது.... மக்களுக்கு விளங்காமலா போய்விடும்.
நன்றி.
த.ம. 16.
ஐயா வணக்கம்.
Deleteதாங்கள் உடல்நலம் சரியில்லாத நிலையிலும் பதிவுகளுக்கு வந்து கருத்திடுவது மகிழ்ச்சி என்றாலும் ஓய்வும் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆமாம் ஆமாம்,
மானங்கெட்டால் மன்னன் ஆகலாம் என்பது மட்டுமா விளங்கியது..?
மற்ற குணங்களும் சேர்த்துத்தானே..?
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
தலைப்பை கண்டவுடன் ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டேன் யாரை இப்படி திட்டுகிறீர்கள் என்று சாசா அப்படியெல்லாம் திட்ட வாய்ப்பே இல்லை ரொம்ப நல்ல பிள்ளையாச்சே என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்தேன்.ம்..ம்.ம். இவ்வளவு தகைமைகள் கொண்ட மன்னர்களை எப்படித் தேடுவது. எதற்கும் கொடுப்பினை வேண்டும் அல்லவா. எங்கேயோ வாசித்த ஞாபகம் வருங் காலமன்னனைதேர்ந்தெடுக்க யானையிடம் மாலையைக் கொடுத்து அது யார் கழுத்தில் இடுகிறதோ அவர் மன்னராவார் என்று. எதோ ஞாபகம் வந்திச்சு.அனைத்து குணங்களையும் அருமையாக விளக்கியுள்ளீர்கள் நன்றி நன்றி !தொடருங்கள் !
ReplyDeleteவாங்கம்மா, நானும் அப்படித்தான் நினைத்தேன், இப்படி போட்டு உடைப்பாரா? என்று, ஆனால் பரிமேலழகர் இருக்க பயம் ஏன் ன்று தான், ஆனால் நல்ல ஷாக், சூப்பர். நன்றிம்மா,
Deleteவள்ளுவர் சொன்ன தகுதிகளில் ஆட்சியாளர்களை தேடி கண்டுபிடிப்பது கடினம். ஆனால் நீங்கள் சொன்ன தலைப்பில் தேர்ந்தேடுத்துவிடலாம். அருமையான விளக்கம்.
ReplyDeleteத ம 18
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா.
Deleteவிளக்கம் அருமை! தொடர்கிறேன்!
ReplyDeleteநன்றி புலவர் ஐயா.
Deleteவணக்கம்!
ReplyDeleteமான நெறியுணர்ந்து வாழும் மனிதர்களை
வானம் வணங்கும் வளைந்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்