Saturday 30 May 2015

அளப்பதற்கு இது கதையல்ல!-உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்.(8)


சென்ற பதிவு ஒரு கேள்வியோடு முடிந்திருந்தது. அதற்கான விடை எளிதானதுதான். இதெல்லாம் ஒரு கேள்வியா இதற்குப் பதில் வேறு சொல்ல வேண்டுமா எனப் பலரும் நினைத்திருக்கலாம்.

கேட்டுச் சிலநாள் ஆனதால், கேள்வியை மீண்டும் நினைவு படுத்திக் கொள்கிறேன்.

எழுத்துகளை உச்சரிக்க ஆகும் கால அளவான மாத்திரை என்பதை அளக்கக் கண் இமைக்கின்ற பொழுதையும் கையை நொடிக்கின்ற பொழுதையும் அளவுகோலாகக் கொள்கிறார்கள்.

இப்படி அளப்பது எவ்வகை அளவையில் படும் என்பதுதான் முந்தைய பதிவின் கேள்வி.

தமிழ் அளவை முறையில் இதைப் போல ஒன்றின் அளவை  இன்னொன்றின் அளவோடு ஒப்பிட்டு அளக்கும் முறையைச் சார்த்தி அளத்தல் என்று கூறுகிறார்கள்.

எழுத்தின் ஓசை அளவை அளக்கக் கருவிகள் இல்லாத காலகட்டத்தில் அந்த அளவோடு ஒத்த கண் இமைக்கும் காலத்தையும் கை நொடிக்கும் காலத்தையும் எழுத்தின் ஓசையை அளக்கும்  முறையாகக் கூறிச்சென்றார்கள்.

இன்னும் சில அளவைகள் இருக்கின்றன.

வீணை, மத்தளம் போன்ற கருவிகளை ஒலித்துப் பார்த்து அதன் ஓசை ஒழுங்கைக் கணிப்பதைத் தெறித்து அளத்தல் என்று சொல்கிறார்கள்.

ஒரு மூட்டையில் உள்ள தேங்காயைக் கொட்டி எத்தனை எனப் பார்ப்பது போல அளப்பது எண்ணி அளத்தல் எனப்பட்டது.

எடையிட்டு நிறுத்துப்  பொருட்களை அளத்தலுக்கு நிறுத்து அளத்தல் என்று பெயர்.

படி போன்றவற்றின் உதவியால் தானியம் முதலானவைகளை அளக்கின்ற முறை தேங்க முகந்து அளத்தல்.

( அது சரி நிறுத்து அளத்தலுக்கும் தேங்க முகந்து அளத்தலுக்கும் என்ன வித்தியாசம்…?!!!  ஏன் இரண்டு அளவை ..? ஒன்று போதாதா..? கொஞ்சம் யோசிங்க. )

பூ மாலை , துணி முதலியவற்றை ‘இத்தனை முழம்’ என்றாற்போல் அளக்கும் அளவு நீட்டி அளத்தல்.

எண்ணை முதலான திரவங்களை ஊற்றி அளப்பது பெய்து அளத்தல்.

இவ்வாறான ஏழு அளவை முறைகள் அக்காலத் தமிழ் மக்களிடையே வழக்கில் இருந்திருக்கின்றன.

எழுத்துகளின் மாத்திரையை அளக்கும் முறையாகக் கண் இமைத்தலையும் கைந்நொடித்தலையும் தொல்காப்பியர் கூறுவதை விளக்க வந்த நச்சினார்க்கினியர், இப்படி அளக்கின்ற முறைக்குச் சார்த்தி அளத்தல் என்று பெயர். இது வழக்கில் உள்ள ஏழு அளவை வகைகளில் ஒன்று என்று அந்த ஏழு அளவைகளையும் பட்டியல் இடுகிறார்.

இதோ நச்சினார்க்கினியரின் கூற்று,

“ இனி அவ்வளவைதான், நிறுத்தளத்தல், பெய்தளத்தல், சார்த்தியளத்தல்,நீட்டியளத்தல், தெறித்தளத்தல், தேங்கமுகந்தளத்தல், எண்ணியளத்தல் என எழுவகைத்து. அவற்றுள் இது சார்த்தியளத்தலாம். ( நச்.தொல்.எழுத். 7 )

இந்தப் பதிவின் இடையில் உள்ள கேள்விக்கு வருவோம்.

தேங்கமுக அளத்தலும் நிறுத்து அளத்தலும் இன்று ஒன்றாகி விட்டன.
ஆனால் இரண்டையும் நாம் இன்றும் பயன்படுத்துகிறோம்.

கடையில் இருந்து அரிசியைக்  கிலோக் கணக்கில் நிறுத்து வாங்குகிறோம்.

ஆனால் வீட்டில் உலை வைக்க இவ்வளவு கிராம் என்று நிறுத்துப் பயன்படுத்துவதில்லை.

அப்போது பயன்படுவது படியோ டம்ளரோ என்னவானாலும் அது தேங்கமுகந்தளக்கும் அளவைதான்.


வாருங்கள் நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்!

பட உதவி- நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

52 comments:

  1. வணக்கம்,
    அருமையான விளக்கம் ஆசானே, வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை.இது கதையல்ல தான். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பேராசிரியரே!

      நீங்கள் எல்லாம் என்னை ஆசான் என அழைத்துப் பகடி செய்கிறீர்கள்தானே?!!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
      தாமதத்திற்கு வருந்துகிறேன்.

      Delete
  2. கதை அல்ல என்றாலும் ரசிக்க வைக்குதே உங்க அளத்தல் :)

    ReplyDelete
    Replies
    1. அதற்கு இது அளத்தல் இல்லையே!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பகவானே!

      தாமதத்திற்கு வருந்துகிறேன்.

      Delete
  3. தமிழ் எவ்வளவு நுட்பமானது என்பது பீடுக்குரிய செய்தி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழர்!

      தாமதத்திற்கு வருந்துகிறேன்.

      Delete
  4. அளவைகள் விளக்கம் அருமை சகோ...

    நன்றி தம +1

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ!

      தாமதத்திற்கு வருந்துகிறேன்.

      Delete
  5. சிறப்பான பகிர்வு ! மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு .

    ReplyDelete
  6. அளவைகளில் இத்தனை வகைகளா
    தமிழ் ஓர் கடல் அல்லவா
    நன்றி நண்பரே
    தம 9

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      தாமதத்திற்கு வருந்துகிறேன்.

      Delete
  7. ஏழு அளவை முறைகள் அக்காலத் தமிழ் மக்களிடையே வழக்கில் இருந்திருக்கின்றன என்பதை அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!

      தாமதத்திற்கு வருந்துகிறேன்.

      Delete
  8. அருமையாக... மிகவும் எளிதாகவும் புரிய வைக்கிறீர்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி டிடி சார்!

      தாமதத்திற்கு வருந்துகிறேன்.

      Delete
  9. அத்தனையும் அன்றே அளந்து பெயரிட்ட
    வித்தகர் யாவரும் முத்துக்கள் போன்றவர்
    நித்தமும் நாமவரை மெச்சிடுவோம் சித்தமென
    சத்தமின்றி புதிதாய்க்கற் போம் !

    அளவைகளை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி ! அழகாகவும் எளிதாகவும் புரியவைப்பதற்கு. தொடர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  10. மறதி அதிகமாகி வரும் எனக்கு உங்கள் பதிவுகள் மலரும் நினைவுகளாகும்!

    ReplyDelete
  11. அம்மாடி!!!! இனி இங்க என்ன பேசுறதா இருந்தாலும் அளந்து தான் பேசணும்:)

    ReplyDelete
    Replies
    1. ஆனா அளக்கக் கூடாதுதானே :)

      நன்றி.

      Delete
  12. மூன்றாம் நான்காம் வகுப்புகளில் முகத்தலளவை நீட்டலளவை என்றெல்லாம் படித்த நினைவு வருஇறது

    ReplyDelete
    Replies
    1. நானும் படித்திருக்கிறேன் ஐயா!

      ஆனால் இந்தச் சார்த்தல் அளவை நாங்கள் படிக்கும் போது இல்லை.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      தாமதத்திற்கு வருந்துகிறேன்.

      நன்றி.

      Delete
  13. கதைஅளப்பது எப்படி.?

    ReplyDelete
    Replies
    1. // கதைஅளப்பது எப்படி.?// என்று நீங்கள் கற்றுத்தந்தால் கற்றுக் கொள்ளக் காத்திருக்கிறேன்.

      நன்றி.

      Delete
  14. ஏழுவகை அளத்தல் முறைகளை அறிந்தேன். எல்லாமே எனக்குப் புதிய செய்திகள். புதிய செய்திகளை எளிதாகப் புரிய வைப்பதற்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      தாமதத்திற்கு வருந்துகிறேன்.

      நன்றி.

      Delete
  15. அளத்தலின் வகைகள் தெரிந்து கொண்டேன் நண்பரே! அறியத்தந்தமைக்கு நன்றி!
    த ம 14

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே!


      தாமதத்திற்கு வருந்துகிறேன்.


      Delete
  16. பயனுள்ள அளவைகள் பற்றிய தெளிவூட்டல்
    தமிழ் இலக்கண விளக்கம் தொடர
    எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
  17. பயனுள்ள பதிவு

    ReplyDelete
  18. அடேயப்பா... ஒவ்வொரு வகை அளத்தலுக்கும் என்ன அழகான பொருத்தமான தமிழ்ச்சொற்கள். புதிதாய் அறிந்தேன். நன்றி விஜி சார்.

    ReplyDelete
  19. அளக்க முடியாத அளவில் அளவைகள் இருக்கின்றன என்பதை நினைக்கும்போது வியப்பு மேலிடுகிறது. இதுதான் நம் தமிழ். பாராட்டுகள்.
    நேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
    http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html

    ReplyDelete
    Replies
    1. நன்றி முனைவர் ஐயா.

      இதோ வருகிறேன்.

      Delete
  20. நண்பர் விஜூவுக்கு வணக்கம்.
    “அளப்பரிய“ அளவை பற்றிய செய்திகளை அளந்து அளந்து தருகிறீர்கள். ஆதாரமும் அளவோடு! வேறென்ன சொல்ல? இது பற்றி நான் வேறொன்று அளக்க முடியாதே! தமிழ்ப்பேச்சு வழக்கில் “அளப்பது“ பற்றி அறிவீர்கள்தானே? தொடர்க அளப்பரிய தமிழ்ப் பணி. “உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்“ என்னும் தலைப்பிலேயே தினமணி நாளிதழில் தமிழண்ணல் அவர்கள் எழுதிவந்த தொடர் பின்னர் இதே தலைப்பில் நூலாகவும் வந்துவிட்டது. எனவே நீங்களும் இதைத் தொகுத்து நூலாக்கலாம். ஆனால், நூலாக்கும்போது தலைப்பில்மட்டும் சிறிய மாற்றம் செய்க. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அளப்பது பற்றி அறிவேன் ஐயா!

      தமிழண்ணல் எழுதியது பற்றி அறியவில்லை.

      பார்த்திருப்பேனாய் இருக்கும்.

      இத்தலைப்புச் சட்டெனத் தேர்ந்ததுதான்.

      அறியத்தந்தமைக்கு நன்றி.

      நூலாக்கும் எண்ணம் எல்லாம் இல்லை ஐயா!

      இங்குப் படிக்கின்றவர் நினைந்தே மகிழ்வுதான் எனக்கு.


      தங்களின் ஊக்கமூட்டலுக்கு நன்றி.

      Delete
  21. அளத்தல் அருமைதான்

    ReplyDelete
  22. அளத்தல் முறைகளை அழகாக விளக்கி உள்ளீர்கள் பாவலரே கற்றுப் பயன் அடைகிறோம்
    தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !

    தம கூடுதல் ஒன்று

    ReplyDelete
  23. ஆசானே,
    பாலமகிபக்கங்களில் நாடகம். நேரம் இருக்கும் போது பார்த்துசெல்லவும்.

    ReplyDelete
    Replies
    1. இதோ வருகிறேன் பேராசிரியரே!

      Delete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அளவை அளவோடு அளந்து கொண்டேன் கவிஞரே...
      தமிழ் மணம் முதலாவது....

      Delete
  25. வணக்கம்
    ஐயா
    மிக எளிமையாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் யாவருக்கு விளங்கும்வகையில்... பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  26. மாத்திரை அளவையில் இந்த சார்த்தி அளத்தல் என்பதெல்லாம் புதிது அதற்கு முன்னர் தாங்கள் விளக்கியது வரை பள்ளியில் படித்தது. விளக்கங்கள் எல்லாம் புதிய பாடங்கள்..

    ம்ம்ம் இவ்வுலகில் எத்தனையோ பேர் தங்கள் சிற்றறிவை வைத்துக் கொண்டு "அளந்து" கொண்டிருக்கும் வேளையில் தாங்கள் அளவையை இவ்வளவு அழகாக அறிவால் அளந்து எழுதுவது எங்களுக்கு நல்லதொரு பாடத்தைக் கற்பிக்கின்றது ஆசானே! மிக்க நன்றி!

    ReplyDelete

  27. வணக்கம்!

    நம்மின் முதல்நுால் நவிலும் அளவுகளை
    இம்மண் உணர எடுத்துரைத்தீர்! - செம்பொன்னைக்
    காக்கும் உளமாய்க் கணிந்த தமிழ்கொண்டோம்!
    பூக்கும் வனமாய்ப் பொலிந்து!

    விரைவின் காரணத்தால் எண்ணை வந்திருக்கும்.
    எண்ணெய் என மாற்றம் செய்யவும்

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete