”புது
வீடு”
இந்த
இரண்டு சொற்களையும் பாருங்கள்.
இரண்டு
சொற்களும் உ என்பதில் முடிகின்றன.
உ ஊ ஒ
ஓ ஆகிய நான்கு எழுத்துகளையும் உச்சரிக்கும் போது இதழ் குவிய வேண்டும் என்று சொல்கின்றன
நம் இலக்கணங்கள்.
இந்த
எழுத்துகளைச் சொல்லும் போது இதழ்கள் குவிகின்றன தானே?
ஆம்.
எழுத்துகளின் பிறப்பிலக்கணப்படி இங்கு இதழ்கள் குவியத்தான் வேண்டும்.
ஆனால்
புது வீடு
“புது”
இந்தச் சொல்லில் து என்ற எழுத்தை நாம் உச்சரிக்கும்போது இதழ் குவிகிறது.
வீடு
இந்தச் சொல்லில் டு என்னும் சொல்லைச் சொல்லும் போது இதழ் குவியாமல் சற்றே விரிகிறது.
இப்படி,
உ என்கிற எழுத்துத் தனக்குரிய இயல்பில் இருந்து குறைவதைத்தான் இலக்கணங்கள் குற்றியலுகரம்
என்கின்றன.
எங்கெல்லாம்
இது போல் ஓசை குறையும் என்பதை இலக்கணக்காரர்கள் வரையறுத்து வைத்திருக்கிறார்கள்.
க், ச்,
ட், த், ப், ற் என்னும் மெய்களின் மேல் உகரம் சேர்ந்து ( கு, சு, டு, து, பு, று )
குறிப்பிட்ட இடத்தில் வரும்போது இது போல உ என்னும் எழுத்தின் ஒலிப்பு அளவு குறைகிறது.
இது போல
ஓசை குறையும் உகரங்களுக்கு முன் உள்ள எழுத்தைக் கொண்டு இந்தக் குற்றியலுகரங்களை வகைப்
படுத்துகிறார்கள்.
‘பிசாசு’ என்ற சொல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.
இங்கு சு என்பதற்கு முன் வரும் சா என்கிற சொல் நெடில்.
எனவே
இது நெடில் தொடர் குற்றியலுகரம்.
‘செருப்பு’ இந்தச் சொல்லில் பு என்னும் குற்றியலுகரச் சொல்லின் முன் வரும் ப் என்பது வல்லினம்.
எனவே
இது வன்றொடர் குற்றியலுகரம்.
இந்த
வன்றொடர் குற்றியலுகரத்தை மட்டும் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த பதிவிற்கு இதன் புரிதல் அவசியமானது.
புது
என்ற சொல்லில் து என்னும் எழுத்து ஏன் குற்றியலுகரம் ஆகவில்லை என்றால், இரண்டு எழுத்துகள்
உள்ள சொல்லில் முதல் எழுத்துக் குறிலாக அமைந்து அடுத்த எழுத்தாய் இதுபோன்ற உகரம் வந்தால்
அது குற்றியலுகரம் ஆகாது . ( ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. )
இந்தக்
குற்றியலுகரம் சொல்லில் வரும் போது அதன் மேல் புள்ளி இட்டு எழுதுதல் பண்டைய மரபு.
ஓசை குறையாத
உகரங்களில் நின்று ஓசை குறைகின்ற குற்றியல் உகரங்களை வேறுபடுத்திக் காட்டத்தான் அவ்வாறு
குறியிடப்பட்டது.
யாப்பிலும்,
புணர்ச்சியிலும் இது தரும் தொல்லைகள்(?) அதிகம்.
தொல்காப்பியம் இதனை எழுத்துகளைப் போல எனக் குறிப்பிடுகிறது.
தொல்காப்பியம் இதனை எழுத்துகளைப் போல எனக் குறிப்பிடுகிறது.
பிசாசின்
வகைகள் எனக் கூட்டிவந்து ஏமாற்றிவிட்டேனோ என்று நினைப்பவர்களுக்கு,
இதோ வகைகள்,
“தன்னைப் புகழ்வானுஞ் சாட்சி சொல்லி நிற்பானும்
பொன்னைமிகத் தேடிப் புதைப்பானும் – ஒன்னலர்தம்
நண்புத்தி கேட்பானும் நாணமில் லாதானும்
பெண்புத்தி கேட்பானும் பேய்.”
அறுவகைப்
பிசாசின் வகைகள் இந்தப் பாடலில் சொல்லப்பட்டிருக்கின்றன.
பிசாசிலும்
எனக்கு நம்பிக்கையில்லை. அதனால் இப்பாடல் கூறும் எல்லாக் கருத்திலும் எனக்கு உடன்பாடும் இல்லை. :)
படம் - நன்றி https://encrypted-tbn0.gstatic.com/
Tweet |
வணக்கம்
ReplyDeleteஐயா
சிறப்பான இலக்கண விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.. மேலும் தொடர எனது வாழ்த்துக்கள். த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரூபன்!
Deleteதமிழின் பல நிலைகளை தெளிவாக எடுத்துச் சொல்லும் தங்களுக்கு நன்றிகள் பல.
ReplyDeleteத ம 3
தங்களின் வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி ஐயா!
Deleteஅழைப்பு அனுப்பி இருந்தும் என் தளம் பக்கம் காணோமே. பதிவுக்கு பிறகு வருகிறேன்
ReplyDeleteஐயா,
Deleteவணக்கம்.
பதிவிற்கு வந்திருந்தேன்.
கருத்திட முடியவில்லை.
நன்றி.
ஐயடா இப்படியா வெருட்டுவீர்கள்.எனக்கு பேய் பிசாசு என்றால் ரொம்ப பயம் இல்ல. அட அதற்குள் பேய் படம் வேறு ம்..ம்..ம் அப்புறம் எப்படி ....உகரம் ,குற்றெழு த்து, வன்தொடர் குற்றியலுகரம் எல்லாம் சேர்ந்தே நடுங்குது இல்ல..ஹா ஹா .just kidding. ஆசானே dont worry சரி மிகவும் தெளிவாக இலகுவாக அனைத்தையும் விளக்கியுள்ளீர்கள். இவற்றை எல்லாம் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி! மேலும் அறிய அவா. தொடர வாழ்த்துக்கள்
ReplyDeleteவாருங்கள் அம்மா!
Deleteபேய்ப்படம் போட்டிருக்கக் கூடாதுதான்.
இந்தத் தொடர் அனைத்திற்கும் ஒரே படம்தான் இடவேண்டும் என்று நினைத்தேன்.
மறந்து விட்டேன்.
இந்தப் பதிவு அடுத்த பதிவிற்காக!
தொடர்வதற்கு நன்றி!
சுவைதான் ஆறு வகை என்றால் ,பிசாசுமா,மனதை திடப் படுத்திக் கொண்டு காத்திருக்கிறேன் :)
ReplyDeleteஅறுசுவைகளில் பிரதான சுவை உங்களிடம் அல்லவா இருக்கிறது!
Deleteபிசாசும் சிரித்தபடி போய்விடாதா:)
ஐயா, வணக்கம்.
ReplyDeleteஇச்செய்யுளில் ‘பேய்’ என்பதைப் ‘பிசாசு’ என்று கருதாமல் “விரும்பத்தகாதது” “bad” என்று பொருள் கொள்ளலாம். “பேயுள்ளி” என்பதை “Wild Onions” என்று அகராதியில் குறிப்பிடுவதையும் ஒப்பிட்டு நோக்கவும். மேலும், பேய் என்பதை “to look miserable”/ “wild thing” எனவும், “பேயன்” என்ற சொல்லுக்கு “mad man” என்றும் ஆங்கிலத்தில் கூறப்படும். எனவே, நீங்கள் இப்பாடலில், பொருள் கொள்ளும் விதத்து, உடன்பாடு கொள்வதில் தவறில்லை என்பது என் தாழ்மையான கருத்து. நன்றி..
ஐயோ அம்மா!
Deleteயாப்புச்சூக்குமத் தொடரில் இந்தக் குற்றியலுகரத்தைப் பிசாசு என்று சொன்ன ஞாபகம்.
சரி தலைப்புக் கொஞ்சம் ஈர்க்குமாறு இருக்கட்டுமே அன்றியும் பிசாசு என்பதும் குற்றியலுகரம்தானே என நினைத்துத் தலைப்பிட்டேன்.
சத்தியமாய் இந்தச் சொல்லாராய்ச்சிப் பக்கமெல்லாம் போகவில்லை.
பேய்களைப் பார்க்க வேண்டுமானால் பரணியில் பார்க்கலாம்.
பிணங்களைத் தின்னும் ஒருவகை மனிதர் அவர் என்று எங்கோ எப்போதோ படித்திருக்கிறேன்.
தங்களின் பொருளாய்வில் நிறைய கற்கிறேன்.
நன்றி.
"பிசாசிலும் எனக்கு நம்பிக்கையில்லை. அதனால் இப்பாடல் கூறும் எல்லாக் கருத்திலும் எனக்கு உடன்பாடும் இல்லை" என்று தாங்கள் சொன்னாலும் தாங்கள் வெளிப்படுத்திய இலக்கணம் பயனுள்ளதே!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteகுற்றியலுகரம் பற்றி நல்ல விளக்கம். பயன்படுத்தும்போதே இதனை உணரமுடியும் என்று நம்புகிறேன்.
ReplyDeleteதங்களின் நம்பிக்கைக்கு நன்றி ஐயா!
Deleteவன்றொடர் குற்றியலுகரம் பற்றிய விளக்கத்தை அறிய ஆவலாய்...
ReplyDeleteஒரு சிக்கலுக்கான தீர்விற்கு இந்த வன்றொடர் குற்றியலுகரம் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது டிடி சார்.
Deleteஅதுதான்.
தாங்கள் தொடர்வதற்கு நன்றி.
அறியாச் செய்திகள் பல அறிந்தேன்
ReplyDeleteநன்றி நண்பரே
தம+1
நன்றி ஐயா!
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteகுற்றியலுகரம் - பிசாசு - குற்றியலுகரம் சொல்லில் வரும் போது அதன் மேல் புள்ளி இட்டு எழுதுதல் பண்டைய மரபு. ஓசை குறையாத உகரங்களில் நின்று ஓசை குறைகின்ற குற்றியல் உகரங்களை வேறுபடுத்திக் காட்டத்தான் அவ்வாறு குறியிடப்பட்டது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கியது நன்றாக இருந்தது.
நன்றி.
த.ம. 9.
தங்களது கருத்திற்கு நன்றி ஐயா!
Deleteஉ கரத்திற்கு இப்படியா? நல்லா இருக்கு,
ReplyDeleteகடைசி வரிகள் நன்று.
இல்ல,,,,,,,,,,,,,,,, சரி எதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை.
விவேக சிந்தாமணி சுட்டும் பாடல் வரிகள் மிக அருமை.
வாருங்கள் சகோ!
Deleteஇலக்கணம் பிடிக்கும் என்று இப்படி ஒன்றும் சொல்லாமல் போனால் எப்படி?
நிறைய கருத்துகளை எடுத்து வருவீர்கள் என்று நினைத்தேன்.
விவேக சிந்தாமணியை ரசித்துப் போனீர்களே.:(
நன்றி!
ஓசை குறையும் போது வரும் பிசாசும் நல்ல ஒப்பிடல்.. பிசாசு பற்றியெல்லாம் கவலையில்லை. குற்றியலுகரம் பற்றிய விளக்கதத்திற்காக காத்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே!
Deleteகுசுடுதுபுறு என்று பள்ளியில் படித்தது மீண்டும் நினைவுக்கு வந்தது. ஆனால் அப்போது இலக்கணத்தைப் புரிந்து படித்ததில்லை. தேர்வுக்காக வேண்டா வெறுப்பாக மனப்பாடம் செய்தது. இப்போது அப்படியல்ல.
ReplyDeleteஉங்கள் விளக்கம் எளிதில் புரியும் படி இருந்தது.
வன்றொடர் குற்றியலுகரத்துக்குச் சில காட்டுகள்:-
கொக்கு
முடிச்சு,
பகட்டு
சொத்து
நடிப்பு
காற்று
காசு, மாடு இவை நெடில் தொடர் கு.உகரம்.
இங்குக் கொடுத்துள்ள காட்டுகள் சரியாக இருந்தால் நான் புரிந்து கொண்டது சரியென்று பொருள்.
இரண்டெழுத்துச் சொல்லாக இருந்து முதல் எழுத்து குறிலாக இருந்தால் கு.உகரம் இல்லை ஒரே ஒரு விலக்கு உண்டு என்று சொன்னீர்கள். அதையும் சொல்லிவிடுங்கள்.
எளிமையாக இலக்கணத்தைப் புரிய வைப்பதற்கு நன்றி சகோ!
வாருங்கள் சகோ!
Deleteநீங்கள் சொல்வதனைத்தும் சரிதான்.
சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்!
விலக்கு “தபு“ என்னும் சொல்.
அது இன்றைய வழக்கில் இல்லை.
உரையாசிரியர்கள் காட்டுகிறார்கள்.
நீங்கள் இந்தக் குற்றியலுகரத்தையே இதழ் குவித்து உச்சரித்தீர்கள் என்றால் அது முற்றியலுகரமாகக் கொள்ளப்பட்டுவிடும்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
குற்றியலுகரம் பற்றி சொன்னீர்கள். நன்றி! ஆனால் எனக்கு இந்த பெயரெச்சம் பற்றி ஐயங்கள் உண்டு. அதுவும் ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் என்றால் இன்னும் குழப்பம் தான். வரும் பதிவுகளில் அது பற்றி எழுதுவீர்கள் தானே?
ReplyDeleteஐயா வணக்கம்.
Deleteஅது எளிமையானதுதான்.
விளக்கிவிட முடியும்.
தங்களின் வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றிகள்.
என் -தமிழாசிரியப் பணியின்போது- வகுப்பறையில் இந்தப் பிசாசுக்கதை!
ReplyDeleteஇந்தக் குற்றியலுகரம் நடத்தும்போது, அது இலக்கண வகுப்பு என்றோ, குற்றியலுகரப் பாடமென்றோ சொல்லாமல்.. “நம்ம ஊர்ல தமிழ் பேசுறோம்.. இங்கிலாந்துல அமெரிக்காவுல அவுங்க நாட்டு மொழியான ஆங்கிலத்தப் பேசுவாங்க.. இங்கிலாந்து ஆங்கிலமும், அமெரிக்க ஆங்கிலமும் ஒரே மாதிரி இருக்குமா? (நட்சத்திர விடுதிகளின் லிப்ட் மற்றும் தரைத்தளம் முதல்தளம் எனும் எண்களில், இவ்விரண்டு நாட்டு வழிமுறையும் மாறுவது போல) என்று பேச்சைக் கிளப்பி. “அது எப்புடீ இங்லீஷூன்னு வந்தா உலகம் முழுசும் ஒரே மாதிரித்தான?” என்னும் சந்தேகத்தையும் கிளப்பிவிட்டு மாணவர்கள் விவாதிப்பதை ரசிப்பேன். பிறகு நான் குறுக்கிட்டு, “நம்ம தமிழ்நாட்டுலயே எல்லா மாவட்டத்துலயும் தமிழ ஒரே மாதிரியாவா பேசுறம்? மாறுதுல்ல..?“ (கோவைத்தமிழ், நெல்லைத்தமிழ், மதுரைத் தமிழ் மற்றும் சென்னைத் தமிழ் பேச்சுவழக்கு வித்தியாசத்தை வேடிக்கையாகச் சொல்லிவிட்டு.. அந்தச் சூழலில் தேவைப்பட்டால் இந்த மொழி உச்சரிப்பு மாற்றம்தான் “கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்“ தமிழிலிருந்து பிரிந்து தனித் தனி மொழிகளாகக் காரணம் என்பதையும் சொல்வதுண்டு)
“உச்சரிப்பு மாறுபாட்டில் மண்சார்ந்த வழக்கங்களின் பின்னணி உண்டு... அதுபோலவே, ஆங்கிலேயர் தமிழை உச்சரிக்கும்போது, நம் தமிழ்நாட்டு வழக்குப் புரியாமல் பேசுவார்கள்.. –நாம மட்டும் அவுங்க இங்லீஷப் போட்டுப் பாடாப் படுத்தும்போது, அவிங்க விட்டுடுவாங்கெளா...?- உதாரணமா,
“கொக்கு, பறக்குது, சுட்டு, போடு” இத இங்லீஷ் காரவுங்க எப்புடிச் சொல்வாங்க?”
பசங்க உடனே கோரஸாக இந்த நான்கு சொற்களையும் முற்றியலுகரமாகவே உச்சரித்துக் காட்டிச் சிரிப்பார்கள்.. ஒரே சத்தம்தான்! (ஓசை குறையாதபடிக்கு)
“ஆங்.. ஏன் இங்லீஷ் காரவுங்க பேசுறது நமக்கு சிரிப்பா வருது? அதுதான் உச்சரிப்பு வேறுபாடு..! அவுங்களுக்கு குற்றியலுகரம்கிற நம்ம பேச்சு வழக்குத் தெரியாது! நம்ம பேச்சுல அது உண்டு...இப்ப இலக்கணத்துல உங்க பாடத்துல குற்றியலுகரம் பத்திப் பாப்பமா..? எங்க புத்தகத்த எடுங்க...“
அறுவகைக் குற்றியலுகரங்களை விளக்க, அவர்களுக்கு எளிதும், வேடிக்கையுமான உடல் உறுப்புகளைபே பெரும்பாலும் உதாரணமாகச் சொன்னால் இன்னும் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்..
காது – நெடில்தொடர்க் குற்றியலுகரம்,
மூக்கு - வன்றொடர்க் குற்றியலுகரம்,
நெஞ்சு - மென்றொடர்க் குற்றியலுகரம்,
மார்பு - இடைத்தொடர்க் குற்றியலுகரம்,
எஃகு - ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்,
வயிறு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்,
(எந்த எழுத்தைத் தொடர்ந்து வருகிறதோ அந்தக் குற்றியலுகரம் சரியா..? இப்ப, பாடத்துல இருக்குறத தவிர வேற உதாரணங்கள் சொல்லி அது எந்த வகைக் குற்றியலுகரம்னு அடுத்தவன சொல்லச் சொல்லு பாப்பம்.. (அடுத்தவன மாட்டிவுட இப்படி ஒரு வாய்ப்பு!) ஒவ்வொருத்தரும் ஒன்னு சொல்லணும் ... அட ஒன்று இரண்டு மூன்று நான்கு இதுல கூட இருக்கே சரி எங்க பாப்பம்.... யாரு ஆரம்பிக்கிறா...
சொல்லிக் குமிச்சுப்புட்டாங்கெல்ல?
பிசாசுகளின் மலரும் நினைவுகளுக்கு நன்றி விஜூ
----------------------------------------------------------
பின்னூட்ட நீட்சிக்கு மன்னிக்க...
ஐயா வணக்கம்.
Deleteதங்களின் வருகைக்கும் நீண்ட பின்னூட்டத்திற்கும் முதற்கண் நன்றிகள்.
உங்களின் பின்னூட்ட நீட்சியில் என்போன்றோர் கற்கப் பலவிடயங்கள் இருக்கின்றன.
எனவே நீள்வது நிச்சயம் நன்மையே பயக்கும்.
ஒரு வகுப்பறைக் காட்சி என் கண் முன் விரிவது போல உள்ளது உங்கள் பின்னூட்டத்தில்...........!
இது போலத் தமிழ் கற்பிக்கப்பட்டால், நிச்சயம் அடுத்த ஈராயிரம் ஆண்டுகளுக்குத் தமிழின் நிலைகுறித்துக் கவலை கொள்ள வேண்டியதில்லை.
ஆனால்.............
பிசாசினால் நானும் பயன்பெற்றிருக்கிறேன் என நினைக்க மகிழ்ச்சிதான் எனக்கு.
நன்றி ஐயா.
பயந்து கொண்டே படித்தேன் தொடர்கிறேன் கவிஞரே தாமத வருகைக்கு வருந்துகிறேன்
ReplyDeleteதமிழ் மணம் 11
உங்களைப் பார்த்து அந்தப் பிசாசல்லவா பயப்படவேண்டும் ))
Deleteதாமத வருகைக்கு நிச்சயமாய்க் கோபிக்க மாட்டேன் நண்பரே..!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
இந்த குற்றியலுகரம் பிசாசை இப்போதான் தெரிஞ்சுகிட்டேன். ஆனா எனக்கு தெரிந்த பிசாசு ஒன்றுதான். என்னை யார்யார் எல்லாம் பிரமிக்க வைக்கிறார்களோ? அல்லது திகைக்க வைக்கிறார்களோ அவர்கள் பிசாசு என செல்லமாய் அழைப்பது என் வழக்கம். ரொம்ப காலமா தில்லாயகம் சகாஸ் ரெண்டு பேரையும் அப்படி சொல்லிகிட்டிருந்தேன். நீங்க அந்த இடத்துக்கு போட்டிக்கு வந்த பிசாசு:))))))))) அவ்ளோ தான் எனக்கு தெரிஞ்சது:))))
ReplyDeleteஐயோ சாமி..........
Deleteநான் எந்தப் போட்டிகும் வரலை..!
நன்றி.
இந்தப் பிசாசுத் தொல்லையால் வகுப்பறையில் வாய்நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன் உயர்தர மாணவர்கள் என்பதால் அடி வாங்கல்ல ....இப்படி தெளிவா அன்றே சொல்லி இருந்தால் இந்தப் பிள்ளையும் நல்லா படிச்சிருக்கும் ம்ம் !
ReplyDeleteஇப்போவாவது இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே
மிக்க நன்றி பாவலரே !
உங்கள் பதிவுகளோடு கருத்துக்களையும் படிக்கும் போதுதான் முழுமை அடைகிறேன் நன்றி முத்து நிலவன் ஐயாவுக்கும் !
வாழ்க வளமுடன் !
தம +1
ReplyDeleteவணக்கம்!
பேய்வந்து நன்றே பிடித்த..பா! நற்சுவையின்
தாய்வந்து தந்த தமிழ்!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்