Friday 6 March 2015

அவன் - அவள் - ‘ அது ‘ -- இது சங்க காலம்.


அவள் பின்னே பலமுறை அலைந்தவன் அவன்.
அவள் அன்பைப் பெறுவதற்காகப் பலநாள் காத்திருந்தவன்.
நாளடைவில் அவள் மனம் கனிகிறது.
அவளும் அவன்மேல் அன்பு கொள்கிறாள்.
சாட்சிகள் எவரும் இன்றி யாருமற்ற தனிமையில் அவளை அவன் திருமணம் செய்து கொள்கிறான்.
“இதேபோல் ஒருநாள் உன்னைப் பெண்கேட்டு வந்து உன் உற்றாரும்  பெற்றோரும் சூழத் திருமணம்செய்து கொள்வேன்“ என்று உறுதி கூறுகிறான் .


யாருக்கும் தெரியாமல் அவர்களுடைய உறவு தொடர்கிறது.
அந்த உறவை மட்டுமே விரும்பி வரும் அவனை ஒரு கட்டத்தில் அவள்  தன் வீட்டில் வந்து பெண்கேட்குமாறு வற்புறுத்தத் தொடங்குகிறாள்.

சரி என்று சொல்லிப்போன அவனை அதன் பின் அவளால் காணவே முடியவில்லை.
இவளுடைய வீட்டிலோ  திருமண ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஒருவனை மணந்து பின் இன்னொருவனுடன் எப்படி வாழ்வது?

இனியும் பொறுப்பதற்கில்லை. அவள் தோழியிடம் போட்டு உடைக்கிறாள். “ எல்லாவற்றையும் நிறுத்தியாக வேண்டுமடி! எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது “

தோழி திடுக்கிடுகிறாள். எப்பொழுதும் தன்னுடனேயே இருக்கும் இவள் எப்பொழுது ஒருவனைப் பார்த்தாள்? பழகினாள்? தானறியாமல் அப்படி ஒரு திருமணம் எப்படி நடைபெற்றிருக்க முடியும்?

“நீ பொய் சொல்கிறாய்..! நானறியாமல் எதுவும் நடைபெற வாய்ப்பே இல்லை! அப்படி இருக்க உன் மனதைக் கவர்ந்து மணம் புரியும் அளவிற்கு யார் போயிருக்க முடியும்?“

அவள் சொல்கிறாள், “அவன் ஒரு திருடன். திருடன் எங்காவது எல்லாரும் பார்க்கத் திருடுவானா?“ இன்னும் சொல்லப்போனால் நானே அறியாமல் என்னை இழந்த திருட்டு அது!“

“எங்கு நடந்தது?“

“நீர்த்துறை அருகில்!“

தோழியால் இன்னும் நம்ப முடியவில்லை.
தன்னுடன் விளையாடுகிறாளோ?
தன்னை ஏமாற்றுகிறாளோ..?

“உனக்குத் திருமணம் நடந்ததாகச் சொல்லும்பொழுது உன்னுடன் யார் இருந்தார்கள்?“

 “ என்னுடன் யாரும் இல்லை “

“யாரும் இல்லை என்றால் நீயே உன்னைத் திருமணம் செய்து கொண்டாயா? அவன் இருந்தானல்லவா? அவன் யார் என்று சொல்! அவனிடமே இது உண்மையா என்று கேட்டுவிடுகிறேன்!“ என்கிறாள்

அவள் சொல்கிறாள் “ அவன் ஒரு திருடன் . சொன்னபடி நடவாதவன். தனிமையில் என்னைத் திருமணம் செய்தபோது, “ இதே போல் ஊரறிய உன்னைத் திருமணம் செய்து கொள்வேன் “ என்று சொன்னவன்தான். ஆனால் என்னைப் பெண்பார்க்கிறார்கள் .. நீ விரைந்து வந்து என் பெற்றோரிடம் பேசி என்னைத் திருமணம் செய்துகொள் என்று சொன்னதற்குப்பின் அவன் என்னைப் பார்க்க வருவதே இல்லை. இப்பொழுது நீ அவனிடம்போய்ப் பேசினால், என்னைச் சந்திக்கவே இல்லை. அவளுக்கு அப்படி ஒரு வாக்குறுதி கொடுக்கவே இல்லை என்று சொன்னாலும் சொல்லுவான். அப்படிச் சொன்னால்  நான் என்ன செய்வேன்?  நீயாவது நான் சொல்வதை நம்புவாயா மாட்டாயா?“

தோழி கேட்கிறாள்.  “ அப்படிச் சொல்லிவிடுவானா அவன்? நீ பார்த்தாய் என்கிறாய்….. பழகினேன் என்கிறாய்……திருமணம் செய்தேன் என்கிறாய்…….இதை எல்லாம் பார்த்ததற்கு ஒரு சாட்சி கூடவா இல்லை.“

அவள் கலங்குகிறாள். அது இழக்கக் கூடாததை இழந்து விட்டோமோ என்பதனால் வந்த கலக்கம். தான் ஏமாற்றப்பட்டோமோ என்று நினைந்ததால் வந்த  கலக்கம். தன்னுடைய அன்பை அறியாமை எனக் கருதி இவள் பழிப்பாளோ என்ற அச்சத்தால் வந்த  கலக்கம்.

 அவளை அவன் திருமணம் செய்த போது இருந்த இடத்திற்கு அவளது எண்ணம் தாவுகிறது. 

யாராவது இருந்தார்களா?
யாராவது இருந்தார்களா?
யாராவது இருந்தார்களா?

 நினைவின் படலங்களை ஊடுருவிக் கொண்டே  வலியுடன் உள் துழாவுகிறது கடினத்தின் கத்தியொன்று.

கலங்கலாக ஒரு காட்சி தோன்றி மெல்லத் தெளிகிறது.

அந்தப் புலம் நினைவில் திரள்கிறது.

அங்குச் சலசலக்கும் நீரோடையொலி கேட்கிறது.
தினை தாள்
அதில், தினையின் அடிப்பகுதிபோலத் தோற்றமளிக்கும் தன் கால்களை ஊன்றி அதை நாடி வரும் ஆரல் மீன் வரவினைப் பார்த்தவாறு

அதோ அதோ…….குருகொன்று……!

ஆஹா! ஆஹா!! இதோ இங்கு நான் தேடிய அந்தச்
சாட்சி கிடைத்துவிட்டது.

எங்களைப் பார்த்த சாட்சியாய் அந்தக் குருகிருந்தது..... குருகிருந்தது…… எனத் தன்னை மறந்து கூவ முற்படுகிறாள்   அவள். அவசரத்தில் ஆராயாமல் நிகழ இருந்த பேதைமை.

அறிவு சட்டென விழித்துக் கொள்கிறது.

அட! குருகைப் போய்ச் சாட்சி  என்றால் யாராவது ஏற்பார்களா? அல்லது  குருகுதான் வந்து சாட்சி சொல்லுமா?

அது தன் வேலையை முடித்துவிட்டு இப்போது எங்கே இருக்கிறதோ….?

நினைவுகளை மீட்டெடுத்த போதும் அவநம்பிக்கை தந்த  ஆயாசத்தில் அவளை அறியாமலேயே  அவள் கண்கள் அந்தச் சாட்சியின் மேல் உறைகின்றன.

அவளுக்கே கேட்காத குரலில் அவள் வாய் முணுமுணுக்கிறது.

நான் அவனை மணந்த போது குருகும் இருந்தது.

அவள் மனக்கண்களில் அன்று சரியாகக் கவனிக்காது விட்ட குருகின் பிம்பம் நெருங்கித் திரள்கிறது. அது திடீரெனக் குனிந்து பின் தலையை உயர்த்திக் காட்டுகிறது.

அதன் அலகில் அது எதிர்பார்த்துக் காத்திருந்த ஆரல் மீன்.

உடலின் நடுவைக் கொடுத்துத் தலையும் வாலும் திமிறி உயிர் அடங்கும் கணங்களின் தரிசனம்.

ஒற்றை உதறலில் அத்திமிறலை அடக்கிவிடுகிறது குருகு.
அவள் கண்கள் மெல்ல மூடுகின்றன.

கண்ணீர்த் திரை பொதிந்த இமையில் உருக்கொள்கிறது அக்குருகின் முகம்.

எரிந்தடங்கும் ஓலைபோல் முற்றிலும் மாறி நிகழத் தொடங்கிவிட்ட  உருமாற்றம்.

அவளது மூடிய கண்கள் இன்னும் சுருங்குகின்றன.

அவள் உள்ளம் ஒருகணம் விம்மித்தணிகிறது.

அய்யோ அது.....அது......... குருகில்லை…

தனக்காகக் காத்திருந்த அவனல்லவா இது?

ஆம் அவனே தான்..!!!

சரி, அதென்ன அதன் அலகின் இடையே..? 

பார்வைக்கு அது ஆரல் மீனாய்த் தெரியவில்லையே...!

இமைகள் இன்னும் இறுக மூடுகின்றன.

அது …..அது…… நானல்லவா……………………………………………………?



கண்ட காட்சியை விரி்த்துரைக்கும் வழியற்று, மௌனம் பூசிய  எரிச்சலால்  கண்ணீராய் வழிகின்றன சொற்கள். நிராதரவாய் நிற்கும் அவளது கண்களில் இருந்து திரள்கிறது கால காலம் கடந்தும் பெருகி உலராது சலசலத்தோடி ஒழுகும் நீர்.

அதில்  இன்னும் கவலையற்றுத் திரியும் கணக்கற்ற மீன்களைக் காலூன்றிக் காத்திருந்து, கவர்ந்து கொத்த இன்றும்  நின்று கொண்டிருக்கின்றன  குருகுகள்.


அந்தக் குறுந்தொகைப் பாடல் இதுதான்,


“யாரும் இல்லைத் தானே கள்வன்;
தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?
தினை தாள் அன்ன சிறு பசுங் காஅல
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே!

பாடல் 25.
திணை – குறிஞ்சி
கூற்று – வரைவு நீட்டித்த இடத்து தலைவி தோழிக்குச் சொல்லியது.
பாடியவர் – கபிலர்.

பொருள் கொள்ள வசதியாய்ப் பாடலை முதலில் இப்படி அமைக்கலாம்.

தான் மணந்த ஞான்று தானே கள்வன். ( அவன் என்னை மணந்தபோது அவனது உள்ளத்தில்தான் கள்ளம் இருந்தது. என்னுடைய அன்பு போலியானதன்று. அது உண்மையானது. எனவே அவனே கள்வன்.)

தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ? ( அதனால் அவன், தான் சொன்ன உறுதிமொழிகளைக் காப்பாற்றாது ஏமாற்றினால் நான் என்ன செய்ய முடியும். நான் அவனை நம்பினேன் )

தினைதாள் அன்ன சிறுபசுங் கால ( தினையினது அடியைப்போன்ற பச்சை நிறக் கால்களை உடைய )

குருகும் உண்டு. ( குருகுதான் உள்ளது அவனுக்கும் எனக்கும் உள்ள உறவை மெய்ப்பிக்கும்படியாக )


இனி இந்தப் பாடலை அணுகிய முறை.

அகப்பாடல்கள் என்றாலே மூன்று விடயங்களைப் பிரதானமாகக் கொள்ள வேண்டி இருக்கிறது.

ஒன்று

முதற்பொருள். -  அது நிலமும்பொழுதும் ( Time and Space )
குறிஞ்சி ….பாலை, என்று ஐந்தாக நிலத்தையும் சிறு பொழுது பெரும் பொழுது என்றெல்லாம் பொழுதையும் பாகுபடுத்துவது இதற்குள் அடங்கும்.

இரண்டு

கருப்பொருள் – ( அதற்குப் பெரிய பட்டியல் இருக்கிறது பிறகு பார்ப்போம் )  ஆங்கிலத்தில் Background என்று வைத்துக் கொள்ளலாம்.

மூன்றாவது 

உரிப்பொருள் என்கிறார்கள். இதைத் Theme என்று சொல்லலாம்.

சங்கப்பாடல்களை அணுகுவதற்கு இவற்றின் துணை இன்றியமையாதது.

சங்கப்பாடல்களில் ஒவ்வொரு பாடலின் சூழலும் மிக முக்கியமானவை. சிக்கலை எளிதில் அவிழ்க்க உதவும் முதல் பிரி அதுதான். அதைப் புரிந்து கொள்ளும் விதமாகத்தான்  குறிப்பிட்ட ஒரு பாடலை யார் எதற்காகச் சொல்கிறார்கள் (கூற்று) என்று அகப்பாடல்களில் குறிப்பிடுகிறார்கள்.

இந்தப் பாடலை எடுத்துக் கொண்டால் இது குறிஞ்சித் திணையைச் சார்ந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 

புணர்தல் மற்றும் புணர்ச்சிக்கான காரணங்களை உட்பொருளாகக் கொண்டது இதனுடைய உரிப்பொருள் ( THEME)

இங்கு புணர்ச்சி நிகழந்தது. ஆனால் அது திருமணத்தில் முடியவேண்டும். அது நிகழவில்லை.

இப்பாடல் தலைவன் திருமணம் செய்யாமல் காலத்தை நீட்டித்துக் கொண்டிருந்த நிலையில் தலைவி அந்த உண்மையைத் தோழிக்குச் சொல்லியது  எனக் குறிப்பிடப்படுகிறது.

இதல்லாமல் இன்னொரு வாய்ப்பையும் பார்ப்போமே...!
வருவேன் என்றவன் வரவில்லையே என்று எண்ணியபடி காத்திருக்கும் அவள், தனக்குத்தானே மனதோடு புலம்புவதாகக் கூட இப்பாடல் இருக்கக் கூடாதா என்ன? 

சங்கப் பாடல் மரபில் அதற்கும் இடமிருக்கிறது.

இன்னொரு முறையிலும் இப்பாடலைக் காணமுடியுமா என்று பார்ப்போம்..

திருமண ஏற்பாட்டைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தோடு தனது களவை ( அவனுடனான உறவை ) அவள் தோழிக்கு வெளிப்படுத்துகிறாள்.

இப்படி வெளிப்படுத்துவதை  அறத்தொடு நிற்றல் என்கிறார்கள்.
அப்படியானால் இது தலைவி தோழிக்கு அறத்தொடு நின்றது.

தோழி தன் தாயிடம் ( செவிலி) இதைக் கூறி தலைவியுடைய தாயிடம் தெரிவிக்குமாறு சொல்கிறாள்.

தோழியின் தாய் என்பவள் தலைவிக்குச் செவிலியாவாள்.

இது செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்றது.


அவளது தாய் தன் கணவனிடமும் மக்களிடமும் இதனைத் தெரிவிக்கிறாள்.

இது நற்றாய் தன் ஐயர்க்கு அறத்தொடு நின்றது.

அவர்கள் அவளிடம்  இந்தக் கேள்வியை எழுப்புகின்றனர்.

அதற்கு அவள் கூறும் பதிலே இந்தப் பாடல்.

இப்படி ஒரு வாய்ப்பினை நாம் கொள்ள முடியுமா என்றால் கொள்ள முடியாது….!

ஏன் …..?

அதற்கான காரணத்தை அறிய வேண்டுமானால் நாம் முதலில் சங்கப் பாடல்கள் அவற்றின் மரபு பற்றிய அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

இந்தப் பாடல் தலைவியின் உறவுகள் கேட்பதற்குத் தலைவி கூறிய பதிலாக ஏன் இருக்க முடியாது என்பதற்கான காரணங்களை  யோசித்துக் கொண்டிருங்கள். அறிந்தால் அறியத் தாருங்கள்.


குருடன் கண்ட யானையாக,

சங்கப் பாடலுக்கான எங்க பாடல்.....,

என்னைத் திருடினான்!
ஊரறிய உன்னை மணக்கிறேன் என்று அன்று சொன்னதை மறந்து
நமக்குள் உறவொன்றுமில்லை
என்றந்தக் கள்வன் சொன்னால்
அதன் பின் நான் என்ன செய்வேன்?
அவன் வாக்களித்த 
அந்நாளில்,
அவ்விடத்தில்
ஓடும் நீரில்,
காலூன்றி
அதைத் தினையின் அடியினைப் போல
காட்டி ஏமாற்றி
அதன் அருகே நெருங்கும் ஆரல் மீனை,
உண்ணக் காத்திருந்து  அந்தக் குருகு..!
ஆம் பசியன்றி வேறறியாத அந்தக் குருகும் 
சாட்சியாய்  இருந்தது
அவன் என்னை மணந்த போது


                    ………………………………………………………………..தொடர்வோம்


படங்கள்

நன்றி - orientalbirdimages.org   (குருகு)
               moore123.com ( திணைதாள்)
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

66 comments:

  1. தமிழ் மணம் 1 நாளை வருகிறேன் கவிஞரே...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் நண்பரே!
      உறங்குவதுண்டா.........?
      எப்பொழுதானாலும் முதல் ஆளாக வந்து விடுகிறீர்களே!
      மகிழ்ச்சியும் நன்றியும்!

      Delete
  2. அன்பின் அய்யா! வணக்கம்!
    "அவன் அவள் அது"
    இது என்ன சிவசங்கரி கதையின் தலைப்பாயிற்றே!
    என்றே யோசித்தேன்.
    தொடக்கமும் நிகழ்கால கதையை நிகழ்த்திக் காட்டியது போன்றே ஒரு வடிவமைப்பு!
    கதையின் போக்கில் தலைவியின் விசனம் (கவலை) வசனமாக வடிவெடுத்து நின்றதா?
    அய்யாவுக்கே உரிய உயரிய வார்த்தை உருவங்கள் பேசியது தோழியிடம் மட்டுமல்ல!
    வாசகர்களாகிய எங்களிடமும்தான் என்பது போன்ற ஒரு ஒப்பற்ற உணர்வு எங்களது உள்ளூணர்வை உந்தி தள்ளியது.
    தலைவனின் தலையைக் கொய்து வர வேண்டும்!
    யாரும் இல்லாத தனிமையில் வந்த தலைவியிடம் இனிமை கொண்டாடிய குற்றத்தை புரிந்தமைக்காக! இந்த உள்ளூணர்வு உயிர் பெற்றதுக்கு காரணம் . எழுத்துக்களின் வலிமை அன்றி வேறு என்னவென்று சொல்லுவது?

    ஐந்திணைப் பாடல்களில், கபிலரின் குறிஞ்சி திணை அகப் பாடலான

    “யாரும் இல்லைத் தானே கள்வன்;

    தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?

    தினை தாள் அன்ன சிறு பசுங் காஅல

    ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்

    குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே!

    பாடலை படிக்கும் வயதில் ,பயணம் செய்ய இதுபோன்ற படிக்கட்டுகளை பதித்து நடந்து வா என்றழைக்கும் பாங்கை நான் யாரிடமும் கற்றது இல்லை!
    புரியும்படி சொல்லுவதில் சேதமில்லாத புயல் வேகம் உங்களிடம் கண்டேன்.

    முதற் பொருள், கருப்பொருள்? உரிப் பொருள்
    முப்பரிமாண விளக்கம் வெகு சிறப்பு
    அகப்பாடலின் அருஞ்சுவையை முழுமையாய் சுவைத்திட தொடர் பதிவினை
    தொடர காத்திருக்கிறேன்.
    அதற்கு
    "சிறு பசுங்கால் குருகு" நீயே சாட்சி!"

    நன்றியுடன்,
    புதுவை வேலு


    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!
      உங்கள் வருகையில் மகிழ்ச்சி!
      மெல்ல மெல்ல பிஸியான வலைப்பதிவாராக மாற ஆரம்பித்துவிட்டீர்கள்.
      மிக நீண்ட நாட்களுக்குப் பின்பான பின்னூட்டம்..!
      அவன் அவள் அது என்பது சைவ சித்தாந்தம்.
      அதைச் சிவசங்கரி சொல்வது பொருத்தம் தானே!
      தலைவனின் தலையை அவசரப்பட்டுக் கொய்துவிடாதீர்கள் அய்யா!
      அவனுக்கு என்ன பிரச்சினையோ ..!
      அவன் வந்து அவளது துயரத்தைப் போக்குவான் என்று நம்புவோம்.
      சங்கப் பாடல்மரபும் அப்படிக் கொள்ளத்தான் சொல்கிறது.
      தங்களது அன்பிற்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  3. வணக்கம் அய்யா!
    த ம வாக்கு 3
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  4. சொன்ன விதத்தை... அணுகிய முறையை மிகவும் ரசித்தேன்... தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி சார்.
      வாக்கிற்கும் சேர்த்து.

      Delete
  5. ///ஆம் பசியன்றி வேறறியாத அந்தக் குருகும்
    சாட்சியாய் இருந்தது///
    படிக்கப் படிக்கத் திகட்டாக வர்ணனை நண்பரே
    தங்களின் கவி அருமை
    நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. என் கவியா...?
      சங்கக் காலக் கவிதையின் செறிவின் நுட்பத்தின் முன் எல்லாம் இது போன்ற முயற்சிகள் வெறும் முயற்சிகள் மட்டும்தான் அய்யா!
      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!

      Delete
  6. எனக்கு ஒன்று மட்டும் புரிகிறது.
    இந்த மாதிரி சங்க கால பாடல்களை எல்லாம், உங்களை மாதிரி உள்ளவர்கள் எளிமைப்படுத்தி, இப்படி என்னைப் போன்றவர்களுக்கு புரிகிற மாதிரி மாற்றி அமைத்துக்கொடுத்தால், சங்ககாலப் பாடல்களின் மீது உள்ள ஆர்வம் இன்னும் அதிகாரிக்கும்.

    சங்ககாலப் பாடல்களை எவ்வாறு அணுக வேண்டும் என்று அழகாக விளக்கியுள்ளீர்கள். நன்றி ஆசானே

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஆசானே!
      நீண்ட நாளாயிற்றே பார்த்து!!
      நலமாக இருக்கிறீர்கள் தானே..!
      சங்கப் பாடல்களை அணுகும் விதம் எப்படி ஆரம்பிப்பது என்று புரியாமல்தான் சரி பாடலைச் சொல்லி அதிலிருந்து தொடங்கலாம் என்று முடிவு செய்தேன்.
      இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் என்பதுதானே பொருத்தம்!

      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  7. சங்க காலத்திற்கு எங்களை அழைத்துச்சென்றதோடு மட்டுமன்றி இயற்கையையும் பாத்திரப்படைப்புகளையும் எங்கள் முன் கொண்டுவந்தமைக்கு நன்றி. நிதானமான நகர்வுடன் காட்சிகள் கண் முன்னே நிகழ்வதைப் போலுள்ளன.

    ReplyDelete
    Replies
    1. முனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி

      Delete
  8. அருமை நண்பரே சங்காலபாடலை இக்காலத்திற்கு ஏற்ப படிக்க மிக எளிமையாகவும் தெளிவாகவும் இதற்கு மேல் யாராலும் எழுத முடியாது போலிருக்கிறது சிறு வயதில் படித்தைதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து படித்து ரசிக்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி & பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் மதுரைத்தமிழன்.
      தங்களின் கருத்துகளுக்கு நன்றி.
      படிப்பவர்கள் தங்களின் பார்வைக்குத் தகுந்தவாறு இன்னும் எளிமையாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.
      தங்களின் பாரட்டிற்கு நன்றி

      Delete
  9. கதையின் போக்கோடு சங்ககால பாடல்களையும் பிணைத்து தந்த விதம் அருமை கவிஞரே... தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தொடர் வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே!

      Delete
  10. சங்கப்பாடலை அழகான கதைபோல் கொண்டு சென்று எல்லாரும் அறியும் வண்ணம் எளிமையாய் அழகாய்... அருமையாய் தொகுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  11. அன்புள்ள அய்யா,

    அவன் - அவள் - ‘ அது ‘ -- இது சங்க காலப் பாடலை மிக அழகாக... அருமையாக விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது!
    யாருக்கும் தெரியாமல் அவர்களுடைய உறவு தொடர்கிறது. தலைவன் வருவான் எனக் காத்திருந்து காலங்கள் போனதால் தலைவி தோழியிடம் கூறுவதும் ‘இதை எல்லாம் பார்த்ததற்கு ஒரு சாட்சி கூடவா இல்லை?’ எனத் தோழி கேட்பதும்... சாட்சியை எண்ணி...‘தினையின் அடிப்பகுதி போலத் தோற்றமளிக்கும் தன் கால்களை ஊன்றி அதை நாடி வரும் ஆரல் மீன் வரவினைப் பார்த்தவாறு அதோ அதோ…….குருகொன்று……!’ குருகாக தலைவனும் மீனாக தலைவியும்... நல்ல கற்பனை... அழகாக ஒரு நாடகப் பாங்கில் அனைவரும் இரசிக்கும் வண்ணம் செய்ததை எண்ணி மெய் மறந்தேன்.

    சங்கப் பாடலுக்கான ஒங்க பாடல்....., எளிமை...அருமையாக இருந்தது.
    தொடருங்கள் அய்யா... தொடர்ந்து வருகின்றோம்!

    சங்க காலப் பாடலைப் படித்த பொழுது இந்தக் காலப் பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது...!
    ‘ பகலில் ஓர் இரவு ’ திரைப்படத்தில் ...

    இளமை எனும் பூங்காற்று....................

    பேச நினைத்தாள்... மறந்தாள்...
    கேள்வி எழும்முன் விழுந்தாள்...
    என்ன சுகமோ? என்ன உறவோ?

    இது இந்தக்காலத்துப் பாடல் என்றால்...
    சமீபத்தில் தினத்திந்தியில் படித்தது (27-2-2015)...

    சேலத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூயில் இருந்து 300 மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் 5 பஸ்களில் கேரளாவுக்குச் சுற்றுலா சென்று திரும்பி வருகின்ற பொழுது அதிகாலை 2 மணியளவில் 21 வயது மாணவி ஒருவருக்குத் திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் அவர் வேதனையில் அலறித்துடித்தார். அதிகாலை நேரத்தில் ஊருக்கு வெளியே பஸ் வந்து கொண்டிருந்ததால் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்துப் பஸ்சை பெட்ரோல் பங்கில் நிறுத்தினார்கள். அங்குள்ள கழிவறைக்குச் செல்லுமாறு அந்த மாணவியிடம் ஆசிரியைகள் கூறினார்கள். உடனே அந்த மாணவி கழிவறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டார். சிறிது நேரத்தில் மாணவியின் அலறல் சத்தம் கேட்டது. இதைக் கேட்டதும் சக மாணவிகளும், ஆசியைகளும் அதிர்ச்சி அடைந்தனர். கழிவறைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்...கழிவறைக்குள் மாணவி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவர் அருகில் ஒரு பெண் குழந்தையும் கிடந்தது. ஆனால் அந்த பெண் குழந்தை இறந்தே பிறந்தது தெரிய வந்தது.

    திருமணமாகாத அதுவும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவி கர்ப்பம் அடைந்திருப்பது தெரிந்திருந்தால் நாங்கள் அந்த மாணவியின் பெற்றோரிடமே தெரிவித்திருப்போமே! என்று ஆசிரியைகள் கூறினார்கள்.

    இந்த சங்க பாடலை அந்த மாணவி படித்திருந்தால்... தோழி... செவிலியிடமும்... செவிலி நற்றாய்க்கு அறத்தொடு நின்று...இது நற்றாய் தன் ஐயர்க்கு அறத்தொடு நின்று மணமுடித்திருக்க வழி கண்டு... அந்த மகவையும் காத்திருப்பாள் அல்லவா?

    இனி அவர்களெல்லாம் இது போன்ற சங்க பாடல்களைப் படிக்கச் செய்ய வேண்டும்...!

    -நன்றி.
    த.ம. 7.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      ஒரு பதிவிற் சொல்ல வேண்டிய செய்தியைப் பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறீர்கள் என்றெண்ணிய கணத்தில் பதிவிலும் இதைப் பகிர்ந்திருக்கிறீர்கள்.
      நீங்கள் காட்டிய பாடலை நான் ரசித்திருக்கிறேன்.
      ஆனால் இவ்வளவு ஆழமாக உள்ளவாங்கியதில்லை.
      அது எத்துணை தவறென இப்பொழுது தெரிகிறது.
      அந்தப்பாடலில் வரும்,

      மங்கை இனமும் மன்னன் இனமும்,
      குலம் குணமும் என்ன?
      தேகம் துடித்தால் கண்ணேது?

      என்கிற வரிகள், நம் செவ்விலக்கிய மரபில், இந்த ஆண் இந்தப் பெண்ணுக்கும் இடையில்தான் காதல் துளிர்த்தாகவேண்டும் என்னும் விதிசெய்யும் “ஒப்பு“ என்பதன் இலக்கணமாகச் சொல்லப்படும்,


      “குடிமை ஆண்மை ஆண்டொடு
      உருவு நிறுத்த காம வாயில்
      நிறையே அருளே உணர்வொடு திருவென
      முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே “ எனும் தொல்காப்பியப் பொருளதிகார நூற்பாவை மோதித் தகர்க்க வியந்துதான் போனேன் ஒரு கணம்.

      இப்பாடலுக்காகவே அந்தப் படம் முழுவதையும் பார்த்தேன்.

      தங்களின் கருத்திற்கும் பொருத்தமான இடத்தில் பொருத்தமான பாடலைச் சுட்டியமைக்கும் வாக்கிற்கும் நன்றி!

      Delete
  12. “சங்கக் க(வி)தைகள்“ என்றொரு புதிய(?) தலைப்பில் ஒரு நூறு கட்டுரைகள் எழுத வழிகாட்டும் பதிவு. நடையோ மிகமிகமிக அருமை அய்யா.
    (இத, இத, இந்த நடையைத்தான் நான் விஜூவிடம் எதிர்பார்த்தேன்) ஆர்க்கிமிடீஸ் போல, “யுரேகா“ என்று கத்த் வேண்டும்போல் தோன்றுகிறது.. (சரி வேண்டாம் அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுகிறேன் என்று புரிந்தால் சரி.)
    இன்னும் குருகு, ஆரல், இவற்றின் “இறைச்சி“ப் பொருள் பற்றியும் சொன்னால் சங்கக் கவிதைகளின் ஆழ-அகலம் இன்றைய கவிகளுக்குப் புரிமில்லயா விஜூ?
    தங்கை கிரேஸ் பிரதிபாவிற்கு இந்த நடை பாணியைச் சிபாரிசு செய்கிறேன்.
    நண்பர் விஜூ அப்படியே இதை ஆங்கிலத்திலும் ஆக்க (not translation) ஒரு வேண்டுகோளையும் வைக்கிறேன்..தமிழை உலகறியச் செய்திடும் தற்காலத் தமிழ் வளர்ச்சிக்கான உத்தி இதுவே. நன்றி வணக்கம்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா தங்களின் வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி!
      சென்ற பதிவில் சங்க இலக்கிய வாசிப்புக் குறித்துப் பார்ப்போம் என்று சொல்லிவிட்டேனே தவிர... எப்படித் தொடங்குவது எப்படித் தொடர்வது என்று மலைத்துப் போய்விட்டேன்.
      பத்துப் பதினைந்து பக்கங்கள் வறண்ட இலக்கணக் கருத்துகளைத் தட்டச்சியபிறகு, எனக்கே அது படிக்கும்படி இல்லாததால் என்னசெய்வது என்று அறியாத நிலை.
      விதி வரு முறையாக பாடலொன்றிலிருந்தே ஆரம்பித்துவிடுவோம் என்றுதான் கள்வனைப் பிடித்துக் கொண்டேன்.
      உள்ளுறையும் இறைச்சியும், நிச்சயமாய் இனிவரும் பதிவுகளில் சொல்ல நினைக்கிறேன்.
      அதே நேரம் செ.வை. சண்முகம், சோ.ந. கந்தசாமி ,தமிழண்ணல் போன்ற தமிழ்ப்பேராளுமைகள் தம்முள் மாறுபடுகின்ற இந்த உள்ளுறை இறைச்சி போன்றவற்றை எந்த வரையறையை மையப்படுத்திச் சொல்வது என்பது அறியாமல் திகைக்கிறேன்.
      தாங்கள் உதவ வேண்டும்.

      உண்மையில் மனக்கருத்து ஒன்றை யாப்புச் சட்டை மாட்டிவிட அறிந்திருக்கிறேன் என்பதன்றி கவிதை என்று பெரிதாய் எழும் நுண்ணுணர்வு இன்னும் கைவராதாகவே இருக்கிறது.

      நத்தைகள் மணற் கரையில் ஊர்ந்து போகத் தோன்றும் சுவடுகள் எழுத்தெனுமாறும் ஓவியமெனுமாறும் பார்ப்போரின் மனக்கருத்துக்குத் தோன்றுமாப்போலே..!
      சுருக்கமும் தெளிவும் இறுக்கமும் கொண்ட இந்தச் சங்கப்பாடல்களை இன்றைய தமிழில் பெயர்க்கவே தடுமாறித்தான் போனேன் அய்யா!

      ஆங்கிலத்தில்.......???????

      தங்களின் ஊக்கமும் நம்பிக்கைக்கும் என்றென்றும் என் நன்றி.


      ஒவ்வொரு பதிவிலும் உங்களைப் போன்றோரின் பாராட்டைப் பெறும் போதும்

      நூற்றுக்கு நூறு பெற்றுத் தட்டிக் கொடுக்கப்படும் சிறுவனின் ஆனந்தம் வந்துவிடுகிறது எனக்கு...!

      இன்னும் கடினமான தேர்வுகளுக்குக் கண்விழிக்கும் உற்சாகத்தை அது என்றும் கொடுக்கிறது.

      மீண்டும் மிக்க நன்றி!

      Delete
    2. விஜூ அண்ணா இவ்வளவு அருமையாக எழுதும்பொழுது நான் இன்னும் தொடரவேண்டுமா என்று தோன்றிவிட்டது நிலவன் அண்ணா.. :)
      ஆனால் விட்டுவிடமாட்டேன்....நீங்கள் சொன்னதைக் கடைபிடிக்க முயல்கிறேன், இருந்தாலும் விஜூ அண்ணா மாதிரி வருமா என்பது ஐயமே!

      Delete
  13. சங்கப்பாடலை அலசிய விதமும். அதற்கு தகுந்த தங்களின் பாடலும் வெகு சிறப்புங்க. மிகவும் ரசித்துப் படித்தேன் மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே!
      மரபில் கலக்குகிறீர்கள்.
      தங்களின் ரசனைக்கு நன்றி!

      Delete
  14. புலவர் வகுப்பில் எழுபது ஆண்டுகளுக்கு முன்னால் படித்த பாடல்! நினைவு படுத்தினீர்! வயதின் காரணமாக மறதி அதிகமாகி விட்டது தங்கள் விளக்கம் மிகவும் அருமை! எளிமை! தெளிவு !இனிமை . எழுதுங்கள் நானும் தொடர்வேன்

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      தங்களைப் போன்று இன்னும் படிக்கின்றவர்கள் எழுதுகின்றவர் மரபுவழித் தமிழ்க்கல்வி நல்லாசிரியர்களிடத்தில் வாய்க்கப் பெற்றவர்கள் நிச்சயம் பேறுபெற்றவர்கள்.

      தங்களின் வருகையும் கருத்தும் கண்டு பேருவப்பு.

      நன்றி

      Delete
  15. வணக்கம்
    ஐயா.

    சங்க காலம் என்றால் காதலும் வீரமும் செழித்து வளந்தது. (அகம்.புறம்) காதல் பாடல்கள் கருத்து மிக்கவை படிக்க படிக்க சலைக்காது.. இரசனை மிக்கவை.. பாடலுக்கான விளக்கமும் தங்களின் உரையும் நன்று..பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.. ஐயா. முத்து நிலவன் ஐயா சொன்னது போல.. சங்க கால கவிதைகள் என்ற தொகுப்பை உருவாக்கலாம்.. வருங்காலங்களில் த.ம 13
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன்.
      சங்ககாலம் என்றால் காதலும் வீரமும் செழித்து வளர்ந்தது என்பதை விடச் செழித்திருந்ததாய்க் காட்டப்பட்டிருக்கிறது என்று சொல்லுவது இன்னமும் துல்லியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும் நன்றி

      Delete
  16. அகநானுற்று பாடல்கள் அனைத்தும் தோழியை தூதாக வைத்துதான் உள்ளதா? ஆனால் அருமை, தோழியும் மாட்டிக்கொண்டாள். தோழிக்கு தோழி தேவை.
    புரியும்படி பாடல்களை விளக்கும் தன்மை மிக அருமை.
    நன்றி.

    sattia vingadassamy

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா!
      உங்களின் கேள்வி அகப்பாடல்கள் அனைத்தும் தோழியைத் தூதாக வைத்துத்தான் உள்ளதா என்பதாக அர்த்தப்படுத்திக் கொள்கிறேன்.
      தோழியைத் தூதாக வைத்து மட்டும் இல்லை.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  17. ”குருகும் உண்டு, தான் மணந்த ஞான்றே!” - இன்று எல்லோர் கையிலும் சாட்சியாக செல்தான் உண்டு.
    த.ம.14

    ReplyDelete
    Replies
    1. இதைத்தான்

      செல்(இல்லா) இடத்துச் சினம்தீது செல்(உள்ளிடத்தும்)
      இல்லதனில் தீய பிற

      என்று தீர்க்கதரிசனமாய்ச் சொன்னாரோ வள்ளுவர் :)))

      நன்றி அய்யா!

      Delete
  18. ஆஹா! என்னே தமிழின் சுவை! ஒரு ஐந்து வரிப் பாடலின் கருத்தும் அதன் பின்புலமும் கற்பனையைத் தூண்டி அழகாக காட்சிப்படுத்துகிறது. தலைவியின் அனுபவத்தை இயற்கையின் நிகழ்வோடு ஒப்பிடுகிறது.. அதை தாங்கள் விளக்கியிருக்கும் விதம் அற்புதம். மதுமலர் கண்ட வண்டு தேனுண்ட மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும்
    //அவளை அவன் திருமணம் செய்த போது இருந்த இடத்திற்கு அவளது எண்ணம் தாவுகிறது.

    யாராவது இருந்தார்களா?
    யாராவது இருந்தார்களா?
    யாராவது இருந்தார்களா?

    நினைவின் படலங்களை ஊடுருவிக் கொண்டே வலியுடன் உள் துழாவுகிறது கடினத்தின் கத்தியொன்று.
    கலங்கலாக ஒரு காட்சி தோன்றி மெல்லத் தெளிகிறது.//

    என்ற வரிகள் படிப்பவர் மனதை கொள்ளை கொண்டு அள்ளிச் செல்கிறது. தன்னை மறந்து இலக்கிய சுவையை ரசிக்க வைக்கிறது. சங்க காலத் தமிழை எளிதாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தங்களது பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. ஆஹா! என்னே தமிழின் சுவை! ஒரு ஐந்து வரிப் பாடலின் கருத்தும் அதன் பின்புலமும் கற்பனையைத் தூண்டி அழகாக காட்சிப்படுத்துகிறது. தலைவியின் அனுபவத்தை இயற்கையின் நிகழ்வோடு ஒப்பிடுகிறது.. அதை தாங்கள் விளக்கியிருக்கும் விதம் அற்புதம். மதுமலர் கண்ட வண்டு தேனுண்ட மயக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும்
    //அவளை அவன் திருமணம் செய்த போது இருந்த இடத்திற்கு அவளது எண்ணம் தாவுகிறது.

    யாராவது இருந்தார்களா?
    யாராவது இருந்தார்களா?
    யாராவது இருந்தார்களா?

    நினைவின் படலங்களை ஊடுருவிக் கொண்டே வலியுடன் உள் துழாவுகிறது கடினத்தின் கத்தியொன்று.
    கலங்கலாக ஒரு காட்சி தோன்றி மெல்லத் தெளிகிறது.//

    என்ற வரிகள் படிப்பவர் மனதை கொள்ளை கொண்டு அள்ளிச் செல்கிறது. தன்னை மறந்து இலக்கிய சுவையை ரசிக்க வைக்கிறது. சங்க காலத் தமிழை எளிதாக அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் தங்களது பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் படித்துக் கருத்துரைத்துப் போக வேண்டும் என்கிற எண்ணத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அய்யா!!

      Delete
  20. ஒரு short film பார்த்தது போன்று இருந்தது உங்கள் நடை.மிகவும் ரசித்தேன்.எளிமையாக இருக்கிறது.அருமை.

    ReplyDelete
  21. இந்தத் தொடரைப் படித்து முடித்தபின் சங்ககாலப் பாட்ல்களைப் புரிந்து கொள்ள முடியுமா.?

    ReplyDelete
    Replies
    1. அய்யா உங்கள் கேள்வியின் நியாயம் புரிகிறது.
      இந்தத்தொடரைப் படித்து முடித்தபின் இந்தக் கேள்விக்கான விடையை நீங்கள் அல்லவா சொல்லவேண்டும்?

      நன்றி!

      Delete
  22. சங்க காலத்தின் அகப்பாடல்கள் பலவும் இவ்வாறான கந்தர்வ மணம்(!?) பற்றி சர்வ சாதரணமாக கூறுகின்றன. ஆனால் இந்த காலத்து பொண்ணுங்க இருக்காங்களே!! அந்த காலத்திலும் தான் இருந்தார்கள் என்கிற அங்கலாய்ப்பை கேட்கும்போது குழப்பமாக இருக்கிறது. சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள் தொகுப்பின் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. lab இல் செயற்கையாய் குழந்தைகள் தயாரிக்கும் அளவு மனித இனம் முன்னேறிய பின்னும், பெண்கள் பரிதாபமாய் இந்த விசயத்தில் ஏமாந்து போவதாக கதை நீளும். ஆனால் ஒன்று அண்ணா ! தலைவன் ஊரின் வளத்தையும், தலைவி ஊரின் சூழலையும் சொல்வதற்காக மட்டும் இந்த பறவைகளும்,விலங்குகளும் பாடலில் இடம் பெற்றிருக்கின்றன என்ற வெற்று பாடப்புத்தக விவரணைகளை உடைத்தெறிகிறது உங்கள் இந்த முயற்சி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!
      நீண்ட நாளாயிற்றானாற்போல்!

      கந்தர்வ மணத்திற்கும் நமது களவு மணத்திற்கும் வேறுபாடிருக்கிறது.

      எட்டு வகையான திருமணங்கள் அந்தக் காலத்தில் (ஏன் இந்தக் காலத்திலும் ) நடைபெற்றதாகக் கூறப்பட்ட வடமொழி மரபில் காந்தர்வத்தோடு ஒத்ததுதான் இந்தக் களவு மணம்.

      ஆனால் இவற்றிற்கான அடிப்படை வேறுபாடு என்னவென்றால்,
      காந்தர்வ மணம் கற்பில் முடியவேண்டியதில்லை.
      அதாவது, திருமணம் புரிந்தபின் வாழும் மணவாழ்க்கையைத் தொடர வேண்டியதில்லை. அது உடல் சார்ந்த உறவென்ற மட்டில் நின்றுவிடும்.

      ஆனால் தமிழிலக்கிய மரபில்,

      களவு கற்பில் முடிந்தாக வேண்டும்.

      இந்தப்பாடல் , ஒருத்தியின் அங்கலாய்ப்பை ஆதங்கத்தை, கண்ணீரை, கவலையை, காத்திருப்பைக் கொண்டு முடிந்தாலும் கூட, சங்கமரபின் படி தலைவன் தலைவியை ஏமாற்றதவனாகவே சித்தரிக்கப் படுகிறான். எனவே அவன் அவளைத் திருமணம் செய்து கொள்கிறான் என்றே இக்கதைக்கு முடிவை எடுத்துக் கொள்ளவேண்டும். ( பாடல் அப்படி இல்லாத போது கூட )

      இது இலக்கியம்.

      புலவர்களின் “புனைந்துரை“

      அந்தக் காலத்தில் இவ்வாறான வாழ்க்கைதான் இருந்ததா?

      ஆண்கள் பெண்களை ஏமாற்றவில்லையா..?

      பெண்கள் ஆண்களை ஏமாற்றவில்லையா ..?

      என்றெல்லாம் கேட்டால் நிச்சயம் இவைகள் இல்லாமல் ஒரு சமுதாயம் இல்லை.

      தொடரும் பதிவுகளில் இதுபற்றி இன்னும் விவாதிக்கலாம் என்றே நினைக்கிறேன்.
      உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  23. ஆகா!... ஆகா!... ஆகா!... மிக மிக மிக அருமையாக இருக்கிறது ஐயா! பதிவே அருமையான கவித்துவ நடையில் அமைந்திருக்க இறுதியில் அந்தப் பாடலுக்கான புதுக்கவிதை வேறு! இதைத்தான் சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி என்பதோ!

    விளக்கம் நன்றாகப் புரிந்தது. ஆனால், முதல், கரு, உரிப் பொருட்கள் பற்றி விளக்கிய, அவை பாடலைப் புரிந்து கொள்ள உதவுகின்றன என்று கூறியுள்ள தாங்கள் அஃது எவ்வாறு என்று கூறவில்லையே? அடுத்த பதிவில் அதை எதிர்பார்க்கலாமா? கூடவே, சொல்வாரியாகப் பதவுரை கொடுத்து அதன் பின் மேற்படி விளக்கம் அளித்தீர்களானால் பதிவு, குறிப்பிட்ட பாடலைப் புரிந்து கொள்வதற்கானதாக மட்டும் அமையாமல், பழம்பாடல்களைப் புரிந்து கொள்வது எப்படி எனக் கற்பிக்கும் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவதாகவும் அமையும் என நம்புகிறேன். செய்ய முடியுமா ஐயா?

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      முதலில் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
      இந்தப் பதிவின் இலக்கு பாடலை எடுத்துப் பொருள் கூறல் என்பதல்ல.

      ஆனால் வெறும் வாசிப்பிற்கான அடிப்படைகள் என்ற மட்டில் இது எழுதப்பட்டால் எழுதும் நானே கூட இன்னொரு முறை படிக்க மாட்டேன் என்றே தோன்றியது.

      அதனால்தான் ஒரு பாடலைக் கொண்டு சிலவற்றைச் சொல்ல முயன்றது.

      இன்னமும் முதல் கரு உரிப்பொருள்கள் பற்றிப் பேசவில்லை.

      அவ்வார்த்தைகளை அறிமுகப்படுத்தியது என்ற நிலையில்தான் அவை இப்பதிவில் நிற்கின்றன.

      நிச்சயமாய் அவை பற்றிய விளக்கத்திற்குப் பிறகு பாடலைப் புரிந்து கொள்ள அவை எப்படி உதவுகின்றன/தடையாகின்றன என்பதை வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

      சொல்வாரியான பதவுரை...
      பழஞ்சொற்களின் பொருளைப் புரிந்து கொள்ள நிச்சயம் துணைபுரியும்.
      அடுத்த பதிவில் தாங்கள் கூறியதை மனதிற்கொண்டு செயல்படுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
    2. மகிழ்ச்சி ஐயா! அடுத்த பதிவுக்காய் ஆவலுடன் காத்திருக்கிறேன்(றோம்)!

      Delete
  24. அடடா என்ன அழகா எளிமையா சுவாரஸ்யமா மிக மிக.........அருமயா
    எத்தனை விளக்கங்கள் ஐயா இன்னும்தருக நாங்கள் வருகிறோம் பருக.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!

      Delete
  25. சிறந்த சிறுகதையொன்றைப் படித்த திருப்தி வருகிறது. மிகச் சிறந்த கவிதை நடையில் சங்கப் பாடல்களை அறிமுகப்படுத்தும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்!
    எளிய வரிகளில் எல்லோருக்கும் புரியும் படியாக அமைந்த உங்கள் பாடலும் அருமை! கவலையற்றுத் திரியும் மீனைத் தலைவிக்கும் கவர்ந்து கொத்த காத்திருக்கும் கொக்குக்குத் தலைவனையும் ஒப்பிட்டிருப்பது சிறப்பு.
    “கண்ட காட்சியை விரி்த்துரைக்கும் வழியற்று, மௌனம் பூசிய எரிச்சலால் கண்ணீராய் வழிகின்றன சொற்கள். நிராதரவாய் நிற்கும் அவளது கண்களில் இருந்து திரள்கிறது கால காலம் கடந்தும் பெருகி உலராது சலசலத்தோடி ஒழுகும் நீர்.”
    இவ்வரிகளை மிகவும் ரசித்தேன்.
    சங்கப்பாடல்களை அணுக முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகிய இம்மூன்றின் துணை தேவை என்றறிந்தேன்.
    வெளிப்படுத்துவதை அறத்தோடு நிற்றல் என்று சொல்வதும் அறிந்தேன். இதில் மட்டும் எனக்கு ஒரு சந்தேகம்:-
    திருமணத்துக்கு முன் வேறொரு ஆணுடன் தொடர்பிருந்ததால் அவனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; அடுத்த வனைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற அறத்தின் காரணமாக இதை வெளிப்படுத்துவது அறத்தோடு நிற்றல் என்று சொல்லப்படுகின்றதா? அல்லது மனதிலிருந்து வெளிப்படுத்தும் அத்தனையையும் அறத்தோடு நிற்றல் என்று சொல்கிறார்களா?
    மிகவும் basic ஆக என் கேள்வி இருந்தாலும் பொறுத்துக்கொள்ளுங்கள். எனக்குத் தமிழறிவு மிகவும் குறைவு; ஆனால் எப்படியாவது சங்க இலக்கியங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் இருக்கிறது.
    இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் பறவைகளைப் பற்றியுமெனக்குத் தெரிந்து கொள்ள ஆசை. இதில் குருகு பற்றிச் சொல்லியிருப்பதறிந்து மிகவும் மகிழ்ச்சி.
    பல விஷயங்களைக்கற்றுக்கொள்ள உதவிய பதிவுக்குப் பாராட்டுக்கள். தொடருங்கள்.
    தம வாக்கும் அளித்தேன். நன்றியுடன், கலையரசி.ஞா.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!

      முதலில் தங்களின் பாராட்டிற்கு நன்றி.

      குறைகள் இருப்பின் புரியாமை இருப்பின் அபத்தம் இருப்பின் உங்களைப் போன்றவர்கள் தயங்காது சுட்டிக்காட்ட வேண்டும்.

      பொதுவாக வாசகனின் அனுபவத்தை அணையுடக்கும் கற்பனையைப் பிரதியின் மேல் பாய்ச்சி இல்லாத பலவற்றையும் விளைத்தெடுப்பதாய்க் கூறப்படுவதுண்டு.

      அது சரிதான் என்றாலும் கூட, இந்த இடத்தில் மீனைத் தலைவிக்கும் குருகைத் தலைவனுக்கும் ஒப்பிடுவதற்குச் சங்க மரபு சார்ந்த காரணங்கள் உள்ளன.

      முத்துநிலவன் அய்யா இறைச்சி என்று கூறியிருப்பது இவை போன்றவற்றைத்தான்.

      தமிழ்ச்செவ்விலக்கிய வாசிப்பில் இந்த அடிப்படைகளைப் புரிந்து கொண்டால், பாடலுக்கு இன்னும் நெருக்கமாகச் சென்று அதில் பதிந்திருக்கும் காட்சிகளைப் பார்க்க முடியும்.

      வெறும் அடிப்படைகளை, இலக்கணப்பார்வைகளை மட்டுமே சொல்லிப்போனால் வாசிக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால்தான் பாடலைக் காட்டி விளக்கிக் கொண்டு போனது.

      இந்தப் பதிவில் நான் சொல்லி இருக்கும் அறத்தொடு நிற்றல், முதல் கரு உரிப்பொருள்கள் சங்க இலக்கிய அகப்பாடல்களை வாசிக்க அடிப்படையானவை.

      அவற்றை இன்னும் விரிவாகவும், ஏனைய அடிப்படை விடயங்கள் பற்றியும் தொடரும் பதிவுகளில் விவாதிக்க வேண்டும்.

      இந்த அறத்தொடு நிற்றலைப் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது சரிதான்.

      காதலித்தவனைக் கைப்பிடிப்பதுதானே அறம்........?
      ஒருவனைக் காதலித்துவிட்டு இன்னொருவனை(இன்னொருத்தியை) மணப்பதில்லையே..?

      அதில் உறுதியாக நிற்க வேண்டுமானால் அதை முதலில் வெளிப்படுத்த வேண்டும் அல்லவா?

      நான் இவனைக் காதலிக்கிறேன் ( இவனை எனக்குத் திருமணம் செய்து வையுங்கள் ) என்ற தலைவி சொல்வதோ,

      அல்லது,

      இவள் அவனைக் காதலிக்கிறாளாம். ( அவனைத்தான் திருமணம் செய்து கொள்வாளாம் ) என்று தோழி தன்தாயிடம் கூறித் தலைவியின் தாயிடம் இந்தச் செய்தியைத் தெரிவிப்பதாகவோ “ அறத்தொடு நிற்றல் “வருகிறது.


      காதலித்தவனைத் திருமணம் புரிதலே அறம் என்பதால், அதன் வழி நிற்க, அதுவரை யாரும் அறியாமல் இருந்த அந்தச் செய்தியை ( களவை ) உரியவழியில் வெளிப்படுத்துதல்தான் இந்த அறத்தொடு நிற்றல் எனச் சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன.

      இதிலும் “ தலைவன் அறத்தொடு நிற்றல் “ எனும் நிலை இல்லை. ( அவனுக்கு அது தேவையில்லையோ....?! :))
      அன்றிலிருந்தே எல்லாத் தலைவலியும் பெண்களுக்குத்தான் போல )

      சங்க இலக்கியத்தில் காணப்படும் பறவைகள் பற்றிய விரிவான செய்திகளுக்கு,
      P.L. சாமியின் “ சங்கஇலக்கியப் புள்ளின விளக்கம்“ என்ற நூலை நீங்கள் படிக்கலாம்.

      உங்கள் கேள்விகள் அபாரமானவை.


      இந்தச் சங்க இலக்கிய வாசிப்புப் பற்றிய பதிவுகள் கூடப் பதிவிடுதற்கான நெருக்கடியில் அவற்றை முழுதுமாக வாசித்துவிட முடியுமே என்கிற சுயநலத்தால்தான்.

      இதுபோன்ற கேள்விகள் வருமிடத்து இன்னும் படிக்க வேண்டும் என்கிற எண்ணமே மிகுகிறது.


      தங்களது தொடர்வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

      Delete
    2. நீண்ட விளக்கமளித்தமைக்கு மிகவும் நன்றி சகோ! மீண்டும் பள்ளிக்குப் போகலாம் என உற்சாகமாகப் பாடத்தோன்றுகிறது.
      சங்க இலக்கியத்தை மீண்டும் ஒருமுறை முழுவதுமாக வாசித்து விட வேண்டும் என்ற உங்கள் சுயநலம், எங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக உள்ளது. என் நீண்ட நாள் ஆசை நிறைவேறத்துவங்கியிருப்பது அறிந்து மகிழ்ச்சி. நீங்கள் சொன்ன அந்தப் பறவைகள் புத்தகத்தை அவசியம் வாங்கிவிடுவேன். பரிந்துரைக்கு நன்றி.
      “இந்தப் பாடல் தலைவியின் உறவுகள் கேட்பதற்குத் தலைவி கூறிய பதிலாக ஏன் இருக்க முடியாது என்பதற்கான காரணங்களை யோசித்துக் கொண்டிருங்கள். அறிந்தால் அறியத் தாருங்கள்.”
      சங்கக் காலத்தில் தோழியும் செவிலித் தாயும் தான் முக்கிய பாத்திரங்கள். சமயத்தில் தலைவனைச் சந்தித்துக் கடிந்துரைத்துத் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள்.
      மேலும் இக்காலத்தில் கூட இம்மாதிரியான விஷயத்தை யாருமே பெற்றோரிடமோ, உறவுகளிடமோ சொல்லமாட்டார்கள்.

      நட்பிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளக்கூடிய செய்தி இது.
      என் யூகம் சரியா?

      Delete
    3. சபாஷ் சரியாச் சொன்னீர்கள்.

      Delete
  26. ஆசானே! வணக்கம்!

    அருமையான விளக்கம் எளிதில் புரியும்படியான விளக்கங்கள்! இப்படி விளக்கம் அளித்தால் தமிழ் கற்கும் ஆர்வம் மேலிட்டு மாணவர்கள் என்ன, இந்த வயதிலும் நாங்களுமே தேர்வு எழுதி விடலாம் போலவே! ஆனால் வேண்டாம் தேர்விற்காக மட்டுமின்றி கற்கும் ஆர்வத்தினால் கற்பதே நல்லது!

    இந்தப் பாடலைக் காணும் போது சங்க காலத்திற்கும், இக்காலத்திற்கும் எந்த வித்தியாசமும் இருப்பதாகத் தெரியவில்லை இல்லையா ? அதாவது மனிதர்களின் மனம் காதலில் அப்படியேதான் உள்ளதோ?!!! தொடர்கின்றோம் ஆசானே!
    தலைப்பு அட்டகாசமாக இருக்கின்றது ஆசானே! ஈர்க்கும் வகையில்!

    ReplyDelete
    Replies
    1. ஆசானே..!
      அவன் அவள் அது என்பது சைவசித்தாந்தக் கருத்தல்லவா?
      அதனால் அது உங்களை ஈர்த்ததோ?
      மனிதர்கள் என்றல்ல உயிர்களின் அடிப்படை உணர்வே காதல் தானே!
      ““““தேர்வுக்கு மட்டுமின்றிக் கற்கும் ஆர்வத்தினால் கற்பதே நல்லது ““““
      உண்மை. உண்மை
      நன்றி ஆசானே!

      Delete
  27. இந்தப் பசுங்கால் குருகு அப்படியே மடையானை (INDIAN POND HERON) ஒத்திருக்கிறது. இந்தப்பசுங்கால்கள் இனப்பெருக்கக் காலத்தில் சிவப்பாக மாறுமாம். மடையானுமபசுங்கால் குருகுவும் ஒன்றா?

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோ!
      தங்களின் மீள்வரவும் ஆர்வமும் கண்டு மகிழ்ச்சியே..!
      உண்மையில் குருகு என்பது நாரை இல்லை என்றும் கொக்கு இல்லை என்றுமே தெரியும். தமிழ் ஆங்கில அகராதிகள் அதை Bittern என்றன.
      கூகுளில் தேடியபோது இப்பறவையைக் காட்டிற்று. அதன் கால்கள் பசிய நிறத்தில் இருந்தன.
      அதனால் இதுவாய்த்தான் இருக்கும் என்று எடுத்திட்டுவிட்டேன்.
      மடையான் பற்றி அறிந்ததில்லை.
      உங்களைப் போன்றவர்கள்தான் விளக்க வேண்டும்.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
    2. இத்தேடலுக்குக் கூகுள் காட்டும் படமும்

      [im]http://orientalbirdimages.org/images/data/indian_pond_heron_feb_15_2008.jpg[/im]

      என்றவாறுதான் உள்ளது.

      நீங்கள் சொல்வதன்படி பார்த்தால் இந்தப் பாடலின் பொருளை இன்னமும் விரிவு படுத்த முடியும்.

      தலைவி முதலில் கண்டது குருகை அல்ல.

      அதன் கால்களை.

      அவன் நோக்குங் காலை நிலன் நோக்கும் பார்வையாற் கண்டது இது.

      அவை அன்று அவள் காக்கின்ற தினையின் பசிய தாள்களைப் போல் முதலில் அவளைக் கவர்ந்தன.

      பிறகுதான் அவள் குருகின் பார்வையைப் பார்கிறாள்.

      அது ஒழுகு நீர் ஆரல் பார்க்கிறது.

      ஒழுகும் காலத்தை விடுத்து தன் இரையின் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் நிற்கிறது.

      உண்மையில் தமிழ்ச்செவ்விலக்கியங்களில் உள்ளுறையும் இறைச்சியும் எல்லாம் இயற்கையை அதன் நுட்பங்களைப் பெரிதும் சார்ந்து இருத்தலால் அவை பற்றி அறிவு அப்பாடல்களின் பொருள் மீட்சிக்கும் நுண்மைக்கும் தேவை என்பதை உங்களின் இந்தப் பின்னூட்டம் காட்டிவிட்டது.

      வருகைக்கும் பொருளை இன்னும் ஆழப்படுத்திய தங்களின் பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பல‘!

      Delete
    3. யோசிக்க யோசிக்க இந்த நாலு வரி பாடலின் பொருள் இன்னும் ஆழமாகிக் கொண்டே செல்வதை அறிந்து வியப்பாய் இருக்கிறது. உங்கள் புதிய விளக்கம் மிக அருமை.
      எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது.
      நீர்நிலைகள் என்றால் அதனருகே பல்வேறு பறவைகள் இருக்கும்; ஆனால் இவள் இந்தக்குருகை மட்டும் சொல்வானேன்? குருகு வந்து சாட்சியம் சொல்லுமா? பின் ஏன் குருகைச் சொன்னாள்?
      பறவைகளின் கால்கள் பெரும்பாலும் மஞ்சளாகவோ, சிவப்பாகவோ தான் இருக்கும். எனவே பச்சைக் கால்கள் உள்ள குருகு தான் இங்கு ஸ்பெஷல்!
      பச்சைக் கால்களைத் தினையின் தாள் என்று நம்பி ஏமாந்தன ஆரல் மீன்கள். அது போல் ஊரறிய உன்னைத் திருமணம் செய்து கொள்வேன் என்று அவன் சொன்ன ‘பச்சைப்’ பொய்யை நம்பி ஏமாந்து விட்டேன் என்று அவள் குறிப்பாகச் சொல்கிறாளோ!
      சங்கக் காலத்தில் பச்சைப் பொய் என்று சொல்வார்களா என எனக்குத் தெரியாது. சும்மா ஒரு யூகம் தான்.

      Delete
    4. இது மடையானைப் போலவே இருக்கிறது. மடையானுக்குக் குருட்டுக் கொக்கு என்றொரு பெயர் உண்டு. கால்களும் பச்சையாக இருக்கும். மீன் கிடைக்கும் வரைக்கும் கரையில் கண் தெரியாத பறவை மாதிரி உடம்பை குறுக்கிக் கொண்டு தவம் செய்வது போல் இருக்கும். மீன் அருகில் வந்தவுடன் சடாரென்று கழுத்தை நீட்டி இரையைப் பிடித்துவிடும்.சாமியின் சங்க இலக்கிய புள்ளினம் புத்தகம் பற்றிச் சொன்னதற்கு மிகவும் நன்றி. நீங்கள் சொன்னது போல் பாடலின் பொருள் மீட்சிக்கு இயற்கையின் நுட்பம் தெரிவது அவசியமாகிறது. என் கேள்விகளுக்கு விளக்கமாகப் பதில் அளித்திருப்பதற்கு மிகவும் நன்றி.

      Delete
  28. குறுந்தொகை பாடலின் சிறப்பினை விளக்கிய உமது பாங்கு போற்றுதலுக்குரியது.

    வாழ்த்துக்கள்

    கோ

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோதரரே!

      Delete
  29. அண்ணா, இந்தப் பதிவும், யாயும் ஞாயும் பதிவும் என் தளத்தில் வரைவில் இருக்கின்றன. இப்பொழுது அவற்றை வெளியிட்டால் அது ஒன்றும் இல்லாதது போல இருக்கும்..அப்படி அருமையாய் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.. :)
    உங்கள் வாசிப்பும் விரிவாக எழுதுதலும் கண்டு வியக்கிறேன் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. சகோ நீங்கள் சொல்வது தவறு.
      ஒரு பாடலை படைப்பை வாசிக்கும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுவத்தைப் பெறுகிறோம்.

      அது ஆளுக்கு ஆள் பார்வைக்குப் பார்வை வேறுபடும்.

      இன்னொரு செய்தி இப்பதிவுகளின் நோக்கம் சங்க இலக்கியங்களை எளிமைப்படுத்திச் செல்வதோ மொழிபெயர்ப்பதோ இல்லை.

      இது அவற்றை அணுகும் முறைகளைக் குறித்தே விவாதிக்கிறது.

      உங்களின் இலக்கு இதை விடப் பெரிது.

      வெறும் இலக்கணமாகச் சொல்லிக் கொண்டுபோனால் நான் மட்டும் படித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் என்பதால்தான் பாடல்களைச் சேர்க்கிறேன்.
      விருந்திற்கு வைக்கப்படும் ஊறுகாய் போல.

      விருந்து வேண்டுபவர்கள் உங்கள் தளத்திற்குத்தானே வந்தாக வேண்டும்.?

      தொடருங்கள்.

      தொடரத்தான் வேண்டும்.

      நன்றி

      Delete
    2. வணக்கம் அண்ணா.
      பார்வைக்குப் பார்வை வேறுபடும்தான் அண்ணா..உங்களின் நடை மிக அருமையாக இருக்கிறது என்பதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். ஊறுகாயா? அண்ணா...இது டூ மச் :)
      கண்டிப்பாகத் தொடர்வேன் அண்ணா..நன்றி

      Delete

  30. வணக்கம்!

    சங்கக் கவிதைகள் சாற்றும் கதையினைப்
    பொங்கும் உணர்வில் பொழிந்துள்ளீர்! - தங்கிப்
    பெருகும் இனிமை! உருகுமென் உள்ளம்!
    குருகின் அழகைக் குறித்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete