Thursday 25 December 2014

திருக்குறள் கற்பிதங்கள் – புனைவு எண். 1


திருவள்ளுர் தினத்தைத் தேசியவிழாவாக வடமாநிலங்களிலும் கொண்டாட வேண்டும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளதுதிருக்குறளையும் வட மாநிலப் பள்ளிகளில் பாடமாக வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது  என்ற தேன் வந்து பாயும் செய்திகள் நம் காதுகளில் வந்து விழுகின்ற அதே நேரம் திருக்குறளின் பெருமையென பல்வேறு அறிஞர்கள் சொல்லும்,
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் என்கிற தகவல் பற்றிய மாற்றுப் பார்வை ஒன்றை முன்வைக்கத்தான் இந்தப் பதிவு.


நானறிந்தவரை திருக்குறளைப் போல எடுப்பார்க் கைப்பிள்ளையான நூல் வேறெதுவும் தமிழில் இருக்க முடியுமா என்று தெரியவில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால் அதுவே அதன் சிறப்பாகவும் அமைந்து விடுகிறது.

திருக்குறள் எல்லாருக்கும் பொதுவான நூல் என்பதிலோ அறநெறிக் கருத்துகளைக் கொண்ட நூல் என்பதிலோ மாற்றுக் கருத்தில்லை. அதன் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறனே போதும் அது பேசப்படவும், பாராட்டப்படவும்!

ஆனால் நம்மைப் போல இல்லாத  பெருமைகளை இருப்பதாகப் பேசி நம்முதுகில் நமக்குநாமே தட்டிக் கொடுத்துக் கொள்ளவும் நம்மைவிட்டால் வேறு ஆளில்லை.

அதில் ஒன்றுதான்,
இந்தத் திருக்குறளைத் திருவள்ளுவர் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடித்திருக்கிறார் என்பதைத் திருக்குறளின் பெருமைகளுள் ஒன்றாகச் சொல்லிச் சந்தோஷப்பட்டுக் கொள்வதும்.

இது பாமரர்கள் சொன்னதல்ல. பெரும்புலமை மிக்கோரால் சொல்லப்பட்டது.

“அகர முதல னகர இறுவாய்
முப்பஃ தென்ப “

என்னும் தொல்காப்பிய சூத்திரத்திற்கு அரண் சேர்க்க, “ திருவள்ளுவரும் இதுகருதியே தன் நூலை அகர முதல னகர இறுதியாய் அமைத்தார்“ என்று கூறுவது.

இணைய வெளியிலும் முகநூலிலும் திருக்குறளின் பெருமை பேசப்படும் இடத்தில் எல்லாம் இந்தக் கருத்து வழிமொழியப்படுவதை நிச்சயம் நீங்கள் கண்டிருப்பீர்கள்.

இது உண்மையா ? திருவள்ளுவர் இப்படித் தன் நூலை அமைத்தாரா என்றால்  உறுதியாக அப்படிக் கூற முடியாது என்பதே பதில்!

எப்படி…?

திருக்குறளுக்கு உரையெழுதிய பழைய பத்து உரையாசிரியர்களைப் பற்றிய பாடலொன்று உள்ளது.

தருமர் மணக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிதி பரிமே லழகர் - திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காலிங்கர் வள்ளுவர் நூற்கு
எல்லையுரை செய்தார் இவர்
.

வெண்பாவிற்கேற்ப இவர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்களே தவிர இவர்களின் காலவரிசை இதுவன்று. பழைய உரையாசிரியர்களுள் மணக்குடவர் காலத்தால் எல்லாருக்கும் முற்பட்டவர்.

பத்துப்பேருள் காலத்தால் பிற்பட்டவர், கடைசியானவர் பரிமேலழகர்.
திருக்குறளின் அதிகாரத்தில் பாடல்களை வரிசைப்படுத்துவதில் இவர்கள் தம்முள் வேறுபடுகிறார்கள். 

பரிமேலழகருக்குக் காலத்தால் முற்பட்டவர்களாகிய, மணக்குடவர், காலிங்கர், பரிப்பெருமாள் ஆகியோரின் உரையில் திருக்குறளில் கடைசியில் அமைந்த குறள், அதாவது 1330 ஆவது குறள்,

புலத்தில் புத்தேள்நா டுண்டோ நிலத்தொடு
 நீரியைந் தன்னா ரகத்து“

என்பதுதான். தற்பொழுதைய குறள் பதிப்புகள் அனைத்திலும் இந்தக் குறள் 1323 ஆம் குறளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திருக்குறளுக்குப் பரிமேலழகருக்கு முன் உரையெழுதிய பலருக்கும் இக்குறளே திருக்குறளின் கடைசிக் குறள். ( 1330)
பரிமேலழகர்தான் கடைசியாக இருந்த இந்தக் குறளை இடம்மாற்றி விட்டு அதன் இடத்தில்,

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

என்னும் குறளை வைக்கிறார். அவருடைய உரைக்குப் பின்புதான் இம்மாற்றம் நிலைபெற்று விடுகிறது. இது மட்டுமன்று சத்தமின்றி இன்னும் பல மாற்றங்கள் குறளில் நின்று நிலைபெற்று விட்டன.

பரிமேலழகரின் வரிசையை ஒட்டித்தான் இன்றைய குறள் வரிசையமைப்புப் பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இங்குக் குறிப்பிட வேண்டி இருக்கிறது.

இப்பொழுது, சொல்லுங்கள்,  திருவள்ளுவர் திருக்குறளை அகரத்தில் ஆரம்பித்து னகரத்தில் முடிந்திருக்கிறார் என்று சொல்வது முற்றிலும் பொருந்துமா?

பட உதவி - வல்லமை.காம்

                                புனைவுகள் தொடரும்……..
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

65 comments:

  1. விவாதத்திற்கு உரிய செய்திதான் நண்பரே
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. விவாதங்களை எதிர்நோக்குகிறேன் அய்யா!
      தங்களின் வருகைக்கும் முதல் கருத்திற்கும் நன்றி!!

      Delete
  2. அகரத்தில் ஆரம்பித்து னகரத்தில் முடிப்பதில் என்ன சிறப்பு என்பதை சொன்னால் ,நானும் பீற்றிக்கொள்ள எதுவாய் இருக்கும் !
    த ம 2

    ReplyDelete
  3. கவிஞரே கருத்துரை நாளை.....

    ReplyDelete
  4. ஆகா ...
    தகவலுக்கு நன்றி ...

    ReplyDelete
  5. மற்றைய உண்மைப் பெருமை ஏதும் இல்லாதார் குல-சாதிப்பெருமை பேசிக்கொள்வதுபோலவும், பள்ளிப் பிள்ளைகள் “திருக்குறளில் எங்கள் பள்ளி “ என்பது போலவும்தானே அன்றி, திருக்குறளின் உண்மைப் பெருமை இதுவன்று சரியாகச் சான்று காட்டிச் சுட்டியது மகிழ்வளித்தது, நன்றி பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா இக்கருத்து ஏற்கனவே சுட்டப்பட்டு் விட்டதுதான் என்று நினைக்கிறேன்.
      பலரும் அறியாதது!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
    2. ஓ ..
      மயங்கக் கூறி விட்டேனோ?
      மன்னியுங்கள் அய்யா!
      திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியவில்லை என்னும் கருத்து ஏற்கனவே சுட்டப்பட்டு விட்டது என்பதைச் சொன்னேன் அய்யா!
      தமிழ்மணம் வாக்குப் பட்டை பதிவின் இறுதியில் இருக்கிறது அய்யா!
      சென்றி பதிவில் கேட்டிருந்தீர்கள்
      தங்களின் மீள் வருகைக்கு நன்றி!

      Delete
  6. புதிய தகவல். தமிழறிஞர்களே பதில் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்லுங்கள் அண்ணா!
      நன்றி

      Delete
  7. இன்னுமொரு ஆரோக்கியமான இலக்கிய விவாதமா நடக்கட்டும் நடக்கட்டும்
    அவசியமானவைகளை அறியத் தருவதற்கு நன்றிகள் பல. இன்னும் ஒரு தடவையாவது வாசித்து விட்டு கருத்திடுகிறேன். ஹா ஹா ....அப்போ தானே நன்றாகப் புரியும்.

    ReplyDelete
    Replies
    1. இன்னும் ஒருதடவை இன்னும் ஒருதடவை
      இன்னும் ஒருதடவை வாசித்து - பின்னொன்னும்
      தோணாமல் போகட்டும்! தண்டப் பதிவென்று
      வேணாலும் சொல்லுங்க ளேன்!!!!!
      ஹ ஹ ஹா!
      (புரியாம ஏதோ கிறுக்கித் தள்ளுறேங்கிறத இப்படியும் சொல்ல முடியுமா? “இருக்கட்டும் இருக்கட்டும்...டும்)

      Delete
    2. சாபமிட வேண்டாம்சற் புத்திரா கொள்சாந்தம்
      கோபம்கூ டாதென்மேல் பாவம்நான் என்செய்வேன்
      நுண்ணறிவு கொண்டவள் இல்லையே உம்மைப்போல்
      அன்னைதமி ழுக்குநீர் கண்!

      எடுப்பார்கைப் பிள்ளையா மோகுறள்! நன்றே
      எடுத்துரைத்தீர் பள்ளியிலும் பாடத்திட் டம்அமையும்
      எனவறிந் தேமகிழ்ந்தேன் பெற்ற பயனைப் பெருக்க
      வெனவிழைந்தீர் நல்லமனம் கொண்டு !

      அரிய விடயங்கள் பல அறியத் தந்தீர் நன்றி!
      மேலும் அறிய ஆவலாய் உள்ளேன். தொடரட்டும் தங்கள் அரியபணி.

      Delete
  8. வணக்கம் ஐயா!

    இனிய நத்தார் தின நல் வாழ்த்துக்கள்!

    இத்தனை விடயங்கள் உள்ளதா?..
    நுனிப்புல் மேயும் ஆடு போன்றதே என் அறிவு!..:(
    இப்பொழுதாயினும் இப்படியாயினும் இங்கு உங்கள் பதிவுகள் மூலம்
    அறியக் கிடைத்தது என் பேறே!.. அவ்வகையில் மகிழ்ச்சிதான்!..:)

    தொடருங்கள்!.. நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. புல்நிறைய இருந்தால் தரையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் தடுமாற்றம் நிகழும்.
      அறிவாட்டை அவிழ்த்துவிட்டு, புல்லை மேயச் செய்தால் பின் எல்லாம் துலங்கும்!
      எவ்வளவு அருமையான கருத்துகளை ஒரு வரியில் சொல்லிவிட்டுப் போகிறீர்கள்!
      பின் மழைக்காலமானாலும் மந்தி கொப்பிழக்கப் பாயாது என்பது சும்மாவா?

      வருகைக்கும் அரிய கருத்திற்கும், வாக்கிற்கும் நன்றி சகோதரி!!!

      Delete

  9. ஐயா வணக்கம்!

    தேன்அளந்த செந்தமிழில் தீங்குறளைச் செய்தளித்தார்
    வான்அளந்த சீா்மணக்கும் வள்ளுவனார்! - நான்அளந்து
    கற்றுக் தெளிந்திடவே கட்டுரை தந்துள்ளீா்!
    முற்றும் சாியென் முடிவு!

    பிரஞ்சு நாட்டில் பழமை வாய்ந்த சுவடிகளைப் பாதுகாக்கும் நுாலகத்தில் உள்ள திருக்குறள் நுாலில் 135 அதிகாரங்கள் உள்ளன. [இருபது குறள்கள் அதிகமாக உள்ளன] புதுவையில் இருந்து ஆய்வு செய்ய வந்த ஆய்வாளா் இதனை எனக்குத் தொிவித்தார். அவா் தம் ஆய்வேட்டில் இதைக் குறித்து எழுதுவேன் என்றும் இருபது குறள்களை உலகுக்கு வெளிபடுத்துவேன் என்றும் கூறிச் சென்றார்.

    அந்த இருபது குறள்கள் வள்ளுவர் எழுதியவையா? பின் வந்தோர் இணைத்தவையா ஆய்வுக்குறியவை.

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      நிச்சயம் அது போன்ற முயற்சிகள் வர வேண்டும்.
      திருக்குறள் பாயிரம் சொல்லும்,

      “ஆயிரத்து முன்னூற்று முப்ப தருங்குறளும்
      பாயிரத்தி னோடு பகர்ந்ததற்பின் - போயொருத்தர்
      வாய்கேட்க நூலுளவோ மன்னுதமிழ்ப் புலவ
      ராய்க்கேட்க வீற்றிருக்க லாம் “

      என்ற நத்தத்தனாரின் வாக்கும்,

      “வீடொன்று பாயிரம் நான்கு விளங்கறம்
      நாடிய முப்பத்துமூன் றொன்றூழ் - கூடுபொருள்
      எள்ளில் எழுப திருபதிற்றைந் தின்பம்
      வள்ளுவர் சொன்ன வகை“

      என்னும் சிறுமேதாவியார் வாக்கும்,

      “பாயிரம் நான்கில் லறமதிருபான் பன்மூன்றே
      தூய துறவற மொன்றூழாக - ஆய
      அறத்துப்பால் நால்வகையா ஆய்ந்துரைத்தார் நூலின்
      திறத்துப்பால் வள்ளுவனார் தேர்ந்து“

      எனும் எறிச்சலூர் மலாடனார் வாக்கும்,

      “அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
      உருவல் அரணிரண் றொன்றொண்கூழ் - இருவியல்
      திண்படை நட்புப் பதினேழ்குடி பதின்மூன்று
      எண்பொருள் ஏழாம் இவை“

      என்னும் பொத்தியார் வாக்கும்,

      “ஐயாரும் நூறும் அதிகாரம் மூன்றுமாம்
      மெய்யாய வேதப் பொருள்விளங்கப் - பொய்யாது
      தந்தான் உலகிற்குத் தான்வள் ளுவனாகி
      அந்தாமரை மேல் அயன்“

      என்னும் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் வாக்கும்

      “அறம்முப்பத் தெட்டு பொருள்எழுபது இன்பத்
      திறம்இருபத் தைந்தால் தெளிய - முறைமையால்
      வேதவிழுப் பொருளை வெண்குறளால் வள்ளுவனார்
      ஓதஅழக் கற்றது உலகு“

      என்னும் பெருமருதனார் வாக்கும் நோக்கத் திருக்குறள் 133 அதிகாரங்களையும் 1330 பாடல்களையும் உடைய நூல் என்பது குறைந்தது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உறுதிப்படுத்தப்பட்டு வரும் செய்தி என்பது தெரிகிறது.
      சுவடிகளின் ஆயுட் காலம் முன்னூறு ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்க முடியாது என்று எண்ணுகிறேன்.
      பாதுகாப்பான சூழலில் வைத்திருப்பதாகக் கொண்டால் கூட அச்சுவடிகள் பதினான்காம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவையாகத்தான் இருக்கும்.
      திருவள்ளுவ மாலையின் கருத்தினை நோக்க , அதற்கு முன் பே குறளில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை 1330 என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது என எனக்குத் தோன்றுகிறது.
      அடுத்துத் தமிழ்நாட்டில் திருக்குறளுக்கு மட்டுமே அதிக அளவு ஓலைச்சுவடிகள் கிடைத்துள்ளன.
      மதபேதமற்று சைவமடங்களும் இதைத் தமதென்று கொண்டாடிப் பேணி வந்துள்ளன.
      அவை எதிலும் தாங்கள் சொன்ன இநத மிகைப் பாடல்கள் இல்லை.
      கம்ப ராமாயணத்தில் வெள்ளைப் பாடல்கள் என்றும்,சீவக சிந்தாமணியில் கந்தியார் பாடல்கள் என்றும் பின்வந்தோர்களால் சேர்க்கப்பட்ட பாடல்களைப் போல யாரோ ஒருவரால் சேர்க்கப்பட்ட மிகைப் பாடல்களாகவே தாங்கள் சொல்லும் இருபது பாடல்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
      பார்க்க வேண்டும்.
      இன்னொரு புறத்தில், திருக்குறளை விஞ்சும் அளவிற்குச் சொற்கட்டும் சுவை கூட்டும் உடைய குறள் வெண்பாக்களை நாம் யாப்பருங்கல விருத்தியில் காண முடியும்.
      பல நேரங்களில் அட இந்தக் குறள் நம் திருக்குறளில் இல்லையே என நான் வியந்திருக்கிறேன்.
      வள்ளுவர் எழுதியதோ பின்வந்தோர் இணைத்ததோ அது ஆய்வுக்குரியவை என்பதில் சந்தேகமில்லை.

      தாங்கள் அங்கிருக்கிறீர்கள் என்பதால் அதை வெளிப்படுத்துவது, தமிழுக்குச் செய்யும் சேவையாக அமையும்.
      உண்மையை உலகு உணரட்டும். வாய்ப்பிருப்பின் அவற்றை அறியத் தாருங்கள்.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!

      Delete
    2. இன்னும் பலவற்றை அறிந்து கொள்ள வருகிறேன்... நன்றி...

      Delete
    3. திருக்குறள் பாயிரம் என்பதைத் திருவள்ளுவ மாலை எனத்திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.
      நன்றி

      Delete
  10. அன்புள்ள அய்யா!
    இதுபோன்ற இன்பம் இழைந்தோடும் இலக்கிய விவாதக் கருத்துக்களை காணும்போது

    எனது சிற்றறிவுக்கு, சிட்டென்று பறந்து வந்து சிட்டுக் குருவி சொல்லும் செய்தி என்னத் தெரியுமா?

    தமிழ் இலக்கியம் படித்து முடித்து விட்டு நிறைய பேர் முனைவர் பட்டம் பெறுவதற்கு ஆராய்ச்சிகுரிய தலைப்பு கிடைக்காமல், ,

    கிடைத்தால் குலதெய்வத்திற்கு கிடா வெட்டி நன்றி காணிக்கை செய்ய இருப்பாதாக சொல்லியது.


    ஆஹா! இதோ கிடைத்து விட்டது அருந்தலைப்பு:

    "திருவள்ளுவர் திருக்குறளை அகரத்தில் ஆரம்பித்து னகரத்தில் முடிந்திருக்கிறார் என்று சொல்வது முற்றிலும் பொருந்துமா?

    "
    வருங்கால முனைவர்களே!
    முயல்வேகம் எடுத்து ஓடி வாருங்கள்!

    வந்து, தலைப்பை பதிவு செய்து கொள்ளுங்கள்!
    நன்றி!

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. இன்பம் இழையோடும் இலக்கிய விவாதம்
      சிற்றறிவு... சிட்டுக்குருவி ... செய்தி..
      கவிஞரே..!
      முனைவர் பட்டத்திற்கு தலைப்பா இல்லை.
      கொஞ்சம் பொறுங்கள் அதற்கான சிறப்புப் பதிவு ஒன்று இருக்கிறது!!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  11. இந்த முறை பதிவை நேற்றே படித்துவிட்டேன். பின்னூட்டமும் படித்தபின் நிறைய தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பின்னூடத்தை ஒருநாள் தள்ளிப்போட்டேன். சரிதான் .பாரதிதாசன் அய்யாவிற்கு நீங்கள் தந்திருக்கும் விடை சொல்கிறது நீங்கள் வீசிவிட்டு காத்திருந்த தூண்டிலின் கதையை:)) இன்னும் நிறைய புதையல்கள் கைவசம் இருக்கும்போல...என்ன என்னிடம் தான் திறவுகோல் இல்லை... நான் காத்திருக்கிறேன் மற்றொரு சரியான கேள்விகொண்டு யாரேனும் மறுமுறை திறக்கக்கூடும்:)

    ReplyDelete
    Replies
    1. பாரதிதாசன் அய்யா சொல்லி இருக்கும் செய்தி முக்கியமானது சகோதரி..!
      புதியது! இது வரை அறியாதது. ஒரு வேளை அது மட்டும் உண்மையாய் இருந்தால் பலரது ஆராய்ச்சிகள் அர்த்த மிழந்து விடும்.
      அய்யா அந்த இரண்டு அதிகாரங்களைத் தமிழுலகு அறியத்தருவார் என்று நம்புவோம்.
      உண்மையா பொய்யா என்பதை மேலாய்வுகள் முடிவு செய்யட்டும்.
      தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் ஒன்பது இயல்கள் உள்ளன.
      அதில் பின்னான்கியல்களுக்கு மட்டுமே பேராசிரியரின் உரை உள்ளது.
      ஆனால் முன்னைந்தியல்களுக்கும் பேராசிரியரின் உரையொன்று இதைப் போலவே மேலைநாட்டு நூலகம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டுப் பதிப்பாக்கம் பெறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
      உண்மையில் தொல்காப்பியத்திற்குக் கிடைத்த அற்புதப் புதையலாகத்தான் அது அமையும்.
      என்னிடம் புதையல்கள் இருக்கிறதோ இல்லையோ புரியாத விடயங்கள் நிறைய இருக்கின்றன.
      அறிந்தது குறைவுதான்.
      தேடல் தொடர்கிறது.
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!!

      Delete
  12. வணக்கம்
    ஐயா.

    நல்ல விளக்கம் புரிந்து கொண்டேன் ஐயா.
    திருவள்ளுவருக்கு பின்பு எத்தனை உரையாசிரியர்கள் உரை எழுதினாலும் அத்தனை ஆசிரியர்களின் உரை அங்கீகாரம் இல்லை. இருப்பினும் இன்றை நுாற்றாண்டில் உயர்தர பாடத்திட்டத்தில் தமிழ்பிரிவில் 10 அதிகாரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. யார் எழுதின உரை என்றால் பரிமேலகழகர்...
    படித்தவன் பாட்டை கெடுத்தான் எழுதினவன் ஏட்டை கெடுத்தான் என்பது போலதான் மற்ற உரையாசிரின் கருதுத்துகள்.. தங்களின் ஆய்விற்கு பாராட்டுக்கள். ஐயா. மீண்டும் தொடருகிறேன் ....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.ரூபன் !!

      Delete
  13. திருக்குறளைப் பற்றியும், உரைகளைப் பற்றியும் ஆழமான அலசல்.

    ReplyDelete
    Replies
    1. முனைவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  14. கவிஞரே விவாதத்திற்குறிய விடயங்கள் ஆனால் எமக்கு பக்குவம் போறா... ஆகவே படித்தேன் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாசிப்பிற்கும் நன்றி ஜி!!!

      Delete
  15. ஐயா, வணக்கம். தங்களின் இடுகையை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன். மிக்க நன்றி. சி,குருநாதசுந்தரம், புதுக்கோட்டை.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் தமிழ்ப்பற்றிற்கும் என்மேல் கொண்ட அன்பினுக்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  16. அறியாத தகவல்! இதுபோன்ற தகவல்கள் தமிழ் அறிவை வளர்த்துக் கொள்ள உதவும்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!

      Delete
  17. தமிழர்கள்பற்றி பலரும் விமர்சிக்கும்போது நமக்கு கோபம் வரும். நம் இனம் என்பதால். ஆனால் தமிழ்ப் பற்றின் காரணமாக பல விசயங்கள் மிகைப் படுத்தப் பட்டுள்ளன என்கிற கருத்து என்னிடம் உண்டு.

    திருக்குறள் அனைத்தையும் எழுதியது ஒரு கவிஞர்தானா? என்பதே எனக்கு சந்தேகம். :)))

    ReplyDelete
    Replies
    1. அய்யா ,
      வணக்கம். உண்மைதான். இதே திருக்குறளின் காலம் பிற்பட்டது என்பதுட்படச் சில கருத்துகளைக் கூறியதால் வையாபுரிப்பிள்ளை, தமிழ்த்துரோகி எனப்பட்டார். இன்றுவரை அவர் காட்டிய ஆதாரங்கள் மறுக்கப்படாமல், அவரது தரப்பு நியாயங்கள் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றன.
      பழம்பெருமை பேசி அதிலேயே கிடப்பது மட்டும் வளர்ச்சி என நினைத்தவர்கள் தமிழின் வளர்ச்சியைத் தங்கள் பங்கிற்குப் பின்னோக்கிச் செலுத்தினார்கள் என்றே தோன்றுகிறது.
      நானும் இதே போலக் கொடும் பற்றுடன் இருந்தவன் தான் என் பள்ளிக்காலத்தில்.........!
      “உலகமொழிகளில் ஒப்புயர்வற்றதும் எல்லா மொழிகளுக்கும் தாயாக விளங்குவதுமான தமிழில் ...........“என்று நான் தொடங்கிய அந்தக் கட்டுரையில்,இவ்வரிகளை அடிக்கோடிட்டு, எல்லா மொழிகளுக்கும் தாயாக விளங்குவது என்பதற்கு அடுத்து (?) எனும் குறியை இட்டிருந்தார் என் தமிழாசிரியர்.
      “என்ன அய்யா ஏன் இப்படிக் கேள்விக்குறிஒன்றை இட்டிருக்கிறீர்கள் “என்று கேட்டதற்கு,““ உலகமொழிகளுக்கு எல்லாம் தாய் தமிழ் என்பது உனக்கு எப்படித் தெரியும்?““ என்றார்.
      “இல்லை அய்யா எல்லாரும் சொல்கிறார்கள்“ என்றதற்கு,“ எல்லாரும் சொல்வதை அப்படியே சொல்வதற்கு உனக்கேன் அறிவு“ என்றார்.
      “ஆராய்ந்து பார். நீ சொன்ன கருத்து தவறு. ஒரு சார்பானது, ஒரு வேளை நீ சொல்வதற்குத் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அந்த ஆதாரங்களுடன் உன் கருத்தைச் சொல்“ என்றார்.இத்தனைக்கும் அவர் ஒரு தமிழாசிரியர்.
      எனக்கு அப்பொழுது தோன்றியது ஒன்றுதான், “ இவர் ஒரு பச்சைத் தமிழ்த் துரோகி்“
      அவ்வயதில் எனக்கு அது புரியவில்லை. என்னைப் புறக்கணித்த அவர்மேல் கடும் கோபம்தான் இருந்தது.
      பின்பு அய்யா சொன்னதன் அர்த்தம் விளங்கிற்று.
      இது மாதிரி மிகைப்படுத்தப்பட்ட அலங்காரங்களால்தான் நம்மொழி மிளிர வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்பதும் புரிந்தது.
      இந்தப் புரிதல் இருக்கின்றவர்கள் மிகக்குறைவே.
      உங்களிடம் அது இருப்பதில் மகிழ்ச்சியே!
      //திருக்குறள் அனைத்தையும் எழுதியது ஒரு கவிஞர்தானா? என்பதே எனக்கு சந்தேகம்//
      அடுத்தது பின்னூட்டத்தில் சந்தேகம் என்கிற பெயரில் என் அடுத்தடுத்த பதிவுகளின் சரக்கைக் காலி செய்து விடுவீர்கள் போல உள்ளதே அய்யா? :))
      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்!!!

      Delete
  18. திருக்குறள் பற்றிய உங்கள் மாற்றுப் பார்வை தொடரை வரவேற்கிறேன். புலவர் அல்லது கவிஞர்கள் நினைக்காததை எல்லாம் அவன் நினைத்ததாக சொல்வது உரையாசிரியர்கள் வழக்கம்தான். அதனை வெளிக் கொணர்ந்தமைக்கு பாராட்டுக்கள்.
    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. உரையாசிரியர்களைப் பற்றி நன்கு புரிந்து வைத்திருக்கிறீர்களே அய்யா!
      ஆனால் அவர்களுகம் இல்லாவிட்டால், இரண்டாயிரம் ஆண்டுகால இடைவெளியைப் பொருள்புலப்படுத்தி நிரப்ப வல்லார் யார்?
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!!!

      Delete
  19. இன்னுமா தங்களின் விமர்சனத்துக்கு தமிழ்புலவர்கள் பதிலுரைக்கவில்லை.... ??? ஆச்சரியம்தான்..

    ReplyDelete
    Replies
    1. விமர்சனம் என்றல்ல ஒரு மாற்றுப்பார்வைதான் வலிப்போக்கர் அவர்களே!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!

      Delete
  20. கொல்லன் உலைக் களத்தில் எட்டிப் பார்க்க வந்த ஈ நான். விட்டுப் போக மனமில்லை. மீண்டும் வருவேன்

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்!
      நானும் தங்களோடு வந்து எட்டிப்பார்க்கும் ஈ தான்!!!!!
      பார்ப்போம் வாருங்கள்!!
      நன்றி

      Delete
  21. அன்புள்ள அய்யா,

    த.ம. 10.
    தொடருங்கள். தொடர்கிறோம்.

    மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!

      Delete
  22. " ஆனால் நம்மைப் போல இல்லாத பெருமைகளை இருப்பதாகப் பேசி நம்முதுகில் நமக்குநாமே தட்டிக் கொடுத்துக் கொள்ளவும் நம்மைவிட்டால் வேறு ஆளில்லை. "

    மிகச்சரி !

    முத்துநிலவன் அய்யா அவர்கள் பொருத்தமான பின்னூட்டமிட்டுவிட்டார்கள்.

    கி.பாரதிதாசன் அவர்களின் பின்னூட்டத்துக்கு நீங்கள் அளித்த பதிலை இந்த பதிவின் தொடர்ச்சியாக காண்கிறேன்...

    இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள்கூட தங்களின் இந்தியா பற்றிய புரிதலை பெரும்பாலும் வடபகுதியுடனேயே முடித்துக்கொண்டனர். தென்பகுதியை ஆண்ட பிரெஞ்சுகாரர்களுக்கு தமிழின் மீது எந்த ஆர்வமும் இருந்ததில்லை. ஐரோப்பிய கண்டத்தை பொறுத்தவரை பழந்தமிழ் ஆராய்ச்சியில் அதிகம் ஈடுபட்டவர்களை கொண்ட நாடு ஜெர்மனியே ஆகும்.தமிழுக்கும் ஜெர்மனிய ஆராய்ச்சியாளர்களுக்குமான உறவு நீண்ட வரலாற்றை கொண்டது.

    தமிழ் ஆராய்ச்சி மட்டுமன்றி இந்திய சுதந்திரத்தை பற்றிய, இந்தியாவில் கூட இல்லாத ஆவணப்படங்கள் ஜெர்மன் நாட்டின் ஆவணகாப்பகங்களில் உண்டு. ( அந்த நாட்டின் ARTE தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தவர்களுக்கு புரியும். )

    தமிழுக்கு துரும்பையும் அசைக்காத பிரெஞ்சு நாட்டில் திருக்குறளின் விதியை மாற்றும் சான்று இருக்குமானால் அதனை வெளிக்கொணர்வது தமிழுக்கு ஆற்றும் அளப்பரிய தொண்டாக அமையும்.

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr



    ReplyDelete
    Replies
    1. அண்ணா,
      வணக்கம். வழக்கம் போலவே செறிவான பின்னூட்டம். வடமொழிக்கு ஒரு மாக்ஸ்முல்லர் என்றால் தமிழுக்கு கார்டுவெல்.
      ஆனால் கார்டுவெல்லுக்கு முன்பே தமிழ் தனித்தன்மை உடைய மொழி, சமஸ்கிருதத்தில் இருந்து கிளைத்ததல்ல என்னும் கருத்துடன் திராவிட மொழிக்குடும்பத்தை ஆராய்ந்த பிரான்ஸ் ஒயி்ட் எல்லீஸின், 40 வயதிற்குப் பின்புதான் நூல்களை வெளியிடுவது என்ற கொள்கை தமிழுக்குக் கிடைத்த சாபமாய்ப் போயிற்று.
      42 ஆம் வயதில் அவன் இறந்து போனான்.
      A.C.Burnell இன் “The Aindra School of Sanskrit Grammarians.“ என்ற நூலுக்கு எல்லீஸ் எழுதிய முன்னுரை ஒன்று போதும் அவனது மொழி ஆய்வை விளக்க..!
      அவன் நூலெழுத எடுத்து வைத்திருந்த,பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட குறிப்புகள், அவன் இறப்பிற்குப் பின் அவன் பட்லருக்கு சமையலுக்கு, அடுப்பெரிக்கப் பயன்பட்டதுதான் உச்சகட்ட சோகம்......!
      இன்னொரு புறம்,கார்டு வெல்லின் , ''A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN OR SOUTH INDIAN FAMILY OF LANGUAGE'' இன் சீர்படுத்தப்பட்ட இரண்டாம் பதிப்பில் தமிழப் பழங்குடியினர் பறையர்களும், தோடாக்கள் முதலானோரும் என்பதற்கு ஆதாரத்துடன் அவர் அளித்திருந்த விளக்கங்கள் அடங்கிய முன்னுரையின் பல பக்கங்களை நீக்கிவிட்டு, அப்புத்தகத்தை அதன் பின் நம் தமிழறிஞர்கள் வெளியிட்டதும், அதுமட்டுமே இருப்பதாகப் பார்த்துக் கொண்டதும் , குறிப்பிட்ட சமூகத்தினர் பெருமையைப் பெற்றுவிடக் கூடாது என்பதையும் காட்டுகிறது.
      கவிதா சரண் என்பார் , ஏறக்குறைய அழிந்திருந்த அந்த நூலினை மீட்டெடுத்து, மீள்பதிப்பு செய்து வாங்குவோர் யாருமில்லாமல் வீட்டில் அடுக்கி வைத்திருக்கிறார். உங்களுக்காக ஒரு பிரதி வாங்கி வைத்திருக்கிறேன்.
      இதுதான் நம் தமிழின் நிலைமை!
      மாற்றுக் கருத்துக்களை முன்வைக்க முடியாத தருணத்தில், தனிநபரைச் சாடுவது, கருத்துகளையே முடக்குவது, அல்லது திரிப்பதுதான் காலம் காலமாக நம் மொழியில் நடைபெற்று வரும் சோகம்!!!
      திசை மாறிப் போகிறேனோ அண்ணா!

      கவிஞர் பாரதிதாசன் அய்யா, இந்த அருந்தகவல்களைத் தமிழுலகு அறியத் தருவார் என்று நானும் உங்களைப் போல் ஆவலுடன் இருக்கிறேன்.
      நன்றி.

      Delete
    2. //அவன் நூலெழுத எடுத்து வைத்திருந்த,பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட குறிப்புகள், அவன் இறப்பிற்குப் பின் அவன் பட்லருக்கு சமையலுக்கு, அடுப்பெரிக்கப் பயன்பட்டதுதான் உச்சகட்ட சோகம்......!// - கொடுமை! கொடுமை!! கொடுமை!!!

      Delete
    3. கவிதாசரண் அவர்களின் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க முயற்சி பற்றி ஆனந்த விகடனுக்கு அவர் அளித்த நேர்காணல் மூலம் அறிந்தேன். அதில், நூலை வெளியிடவிருப்பதாகவும், பணம்தான் இல்லையென்றும் கூறியிருந்தார். அதன் பின் வெளியிட்டு விட்டாரா? அது தெரியாது. தெரியப்படுத்தியற்கு நன்றி ஐயா!

      Delete
    4. வெளியிட்டுக் கடை விரித்தார் .............கொள்வாரில்லை.
      வீட்டில் அடுக்கி வைத்திருக்கிறார் அய்யா!!
      நன்றி

      Delete
    5. சோகம்தான்! விகடனை அணுகி, நூல்காட்சிகளின்பொழுது அவர்கள் கடையில் இந்த நூலையும் வைத்து விற்றுத் தந்தால் அதற்குரிய தரகுக்கூலி (commission) தருவதாக ஒப்பந்தம் போட அவர் முயலலாம். பெரிய லாபம் கிடைக்காவிட்டாலும் நூல் நன்கு விற்கும். போட்ட காசாவது திரும்பி வரும்.

      Delete
  23. வணக்கம் ஆசானே,
    இரு நாட்களுக்கு முன்பே இந்த பதிவை படித்து விட்டேன்.
    நான் படிக்கின்ற காலத்தில், இந்த திருவள்ளுவரை திட்டிக்கொண்டே தான் திருக்குறளை ஏனோ தானோ என்று படித்தேன் (மனப்பாடம் பண்ணினேன்). அதனால் அதனை விமர்சிக்கும் தகுதி கிடையாது என்பதால் தான் பின்னூட்டம் எழுதுவதற்கு தயங்கினேன். மிண்டும் இன்று தங்களின் பதிவையும் பின்னூட்டக் கருத்துகளையும் படித்தபோது, ஆஹா ஒரு ஆரோக்கியமான விவாதத்தை மௌனமாக படிக்க முடிகிறதே என்று எண்ணி மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்!
      உங்கள் வகுப்பிலிருந்தே வருகிறேன். திருக்குறளோடு எனக்கு இருக்கும் அனுபவமும் இப்படித்தான். யாப்புச் சூக்குமத்தை நீங்கள் படிக்க வில்லையோ..?!
      அன்று தேர்வு நிர்பந்ததால் பிடிக்காமல் போன பலவற்றையும், இன்று தேடிப்பிடித்துப் படிப்பது எனது வாடிக்கையாய்ப் போயிற்று.
      எவ்வளவு விடயங்களைக் கவனிக்காமல் கடந்திருக்குமோம் என்பதும் தெரிந்தது. “ அறிதோறும் அறியாமை காணல்?! “
      மதிப்பெண்கள் தேவை இல்லை என்பதால் எந்தக் கட்டாயமுமின்றி நூல்படித்தல் சுகம் தானே?!!
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!

      Delete
  24. நல்லதோர் ஆய்வுப் பதிவு. எனது தேடலுக்கு நல்ல விருந்து. அடுத்தப்பதிவை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அருமையான பதிவு நண்பரே.....!

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்!
      தங்களைப் போன்ற தமிழார்வர்கள் என் தளத்திற்கு வருவதும், பாராட்டுவதும், மனநிறைவைத் தருகிறது.
      என்னாலும் இவை பற்றி எழுத முடியும் என்னும் தன்னம்பிக்கையைத் தந்து போகிறீர்கள் !
      தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!!

      Delete
  25. ஆய்வுக்கு உரிய விடயம். கற்பித்ததை மாற்றுக் கருத்தின்றிக் கற்றவர்கள் தாமே நாம். வள்ளுவர் காலத்து வழக்கும் தெரியாது அதை உரையால் உணர்த்தியவர் காலத்து வழக்கும் தெரியாது.
    பாலெல்லாம் நல் ஆவின் பாலாமா
    பாரிலுள்ள நூலெல்லாம் வள்ளுவன் செய் நூலாமோ - நூலில்
    பரித்த உரையெல்லாம் பரிமேலழகன்
    தெரித்த உரையாமோ தெளி

    என்று பரிமேலழகரை கற்பித்ததனால் அதுவே உண்மை என்று கற்றோம். பின் கற்பித்தோம் கட்டுரை வடித்தோம். இப்போது இப்பதிவு படித்த பின் சிறு அவமானத்தைத் தருகின்றது. எனினும் இது நம் குற்றமல்ல. நம் கால மாற்றத்தின் குற்றம். இவ்வாறான பதிவுகள் படிக்கும் போது மனதுக்கு மகிழ்வு ஏற்படுகின்றது.மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. சகோ, தங்களின் பின்னூட்டம் படித்தால் நீங்கள் ஆசிரியையாய் இருப்பீர்கள் எனத் தோன்றுகிறது.
      அவமானம் ஏதும் வேண்டியதில்லை சகோ.
      பரிமேலழகரும் தமிழ் மரபிற்கேற்பக் கொஞ்சமேனும் திருக்குறளைக் காட்ட வேண்டும் என்று நினைத்திருக்கலாம்.

      பரிமேலழகனே நினைக்கும் போது நாம் நினைப்பதில் தவறென்ன?

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  26. திருக்குறள் பற்றி மாற்றுக் கருத்துக்கள் உண்டு என்பது தெரியும். அதாவது, அதை இயற்றியவர் ஒருவரா பலரா? அவர் மயிலாப்பூர்க்காரரா கன்னியாகுமரிக்காரரா? திருக்குறள் எந்தச் சமயத்தையும் சாராத நூலா அல்லது சமணச் சார்பு நூலா? இப்படிப் பல மாறுபட்ட கருத்துக்கள் இருப்பது தெரியும். ஆனால், நூலைத் தொகுத்த விதத்திலேயே மாற்றுக் கருத்துக்கு இடமுண்டு என்பது இதுவரை அரசல் புரசலாகக் கூடக் கேள்விப்படாத செய்தி. இதைத் தெரிவித்ததற்கு மிக்க நன்றி ஐயா!

    ஆனால், வழக்கம் போல சில ஐயங்கள்! நீங்கள், திருக்குறளுக்கு மொத்தம் இரண்டு வகையான வரிசைப்படுத்து முறைகள் இருந்ததாகப் பதிவில் கூறியிருக்கிறீர்கள். அதாவது, பரிமேலழகருக்கு முன் ஒரு மாதிரி, பரிமேலழகருக்குப் பின் ஒரு மாதிரி என்பதாக. இவற்றுள் சரியானது எது, ஏன்? மேலும், பரிமேலழகர் இப்படி, அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிவதாகத் திருக்குறள் இருக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி அதை அடுக்கினாரா அல்லது உண்மையாகவே அஃது அப்படித்தான் இருக்க வேண்டுமா? திருக்குறள் மூன்று பாற்களாகவும், 133 அதிகாரங்களாகவும் மட்டுமல்லாமல் பல இயல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது இல்லையா? அப்படிப் பார்க்கும்பொழுது, எந்த இயலுக்கு அடுத்து எந்த இயல் வர வேண்டும் என்கிற முறைப்படி அடுக்கினால் எப்படி அமைகிறது, மரிமேலழகர் அடுக்கியுள்ளபடியா அல்லது அதற்கு முந்தைய பாணியிலா? இவற்றையெல்லாம் கூறாமல் பதிவை அந்தரத்தில் நிறுத்தி விட்டீர்களே ஐயா?! அடுத்த பதிவில் பதில் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. அய்யா,
      வணக்கம்.
      உங்களுடைய வருகையை முன்பே எதிர்பார்த்தேன். ஏன் காத்திருந்தேன் என்று கூடச் சொல்லலாம் .
      பின் ஏதேனும் அலுவலில் இருப்பீர்கள் என்று அமைதிபட்டுக் கொண்டேன்.
      திருவள்ளுவர் திருக்குறளை அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிப்பதாக அமைத்திருக்க வாய்ப்பு மிக மிகக் குறைவுதான் அய்யா!
      அவ்வாறெனில், குறளுக்குகு மிகப்பழமையான உரையாசிரியர்களது முறைவைப்பில் அது அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியவில்லை.
      பரிமேலழகரின் முறைவைப்பு உள்நோக்கம் கொண்டது.
      அது திருவள்ளுவர் அமைத்ததாகச் சொல்வதற்குரிய வாய்ப்புகள் மிகமிகக் குறைவுதான்.
      தமிழ் எழுத்துகள் “ அ வில் தொடங்கி ன் இல் முடிகின்றன என்பதால் பரிமேலழகர் இம்மாற்றத்தைச் செய்திருக்க வேண்டும்.
      இதுபோன்ற பல மாற்றங்கள் முன்னோர் உரை நோக்கப் பரிமேலழகரால் செய்யப்பட்டிருக்கின்றன.
      அதன் காரணங்களை ஆராய்வது ஆகச் சிறந்த ஆராய்ச்சிதான். யாரும் செய்ததாகத் தெரியவில்லை.

      மேலதிகத் தெளிவிற்கு, மதுரைப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள, தண்டபாணி தேசிகரின் திருக்குறள் உரைவளத் தொகுப்பினை நோக்க வேண்டுகிறேன்.
      திருக்குறளை எடுப்பார் கைப்பிள்ளை என்று பதிவில் நான் குறிப்பிட்டிருப்பது, மதங்களுக்கு ஏற்றவாறும், ‘‘இனங்களுக்கு ‘‘ ஏற்றவாறும் அது திரித்துப் பொருள் கூற வாய்ப்புக் கொடுத்து நிற்பதைத்தான். திருக்குறள் பைபிளிள் கருத்துகளைக் கூறுகிறது இயேசுவின் சீடரான St.Thomas என்பார் இந்தியாவிற்கு வந்த போது அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு சீடராகி வள்ளுவர் படைத்த வாய்மொழியே “ திருக்குறள்“ என்றெல்லாம் புத்துரை வரைந்த மு. தெய்வநாயகம் என்பாருக்கும் திருக்குறள் இடமளித்திருக்கிறது.
      இவருக்கு முனைவர் பட்டம் வேறு கிடைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
      அவர் சொல்லாமல் விட்டது, திருவள்ளுவரும் தோமையாருடன் வந்து இங்கிருந்து தமிழ் கற்றுத் திருக்குறளைப் படைத்தார் என்பதைத்தான்.

      சற்று தமிழ் நூல்களை ஆய்வு மனப்பாங்கில் வாசிக்கும் யாருக்கும் இது சிரிப்பு மூட்டுமென்றால்,
      வைதிக மரபுப்படி திருக்குறளுக்கு உரைவகுத்து, வடமொழி மரபே திருக்குறளின் வேர் என்று என்று சொன்ன பரிமேலகரைப் பார்த்தும் நாம் சிரிக்கத்தான் வேண்டும்.
      வட மொழியையும், சமயத்தையும் நீக்கிவிட்டுப் பார்த்தோமானால், பரிமேலழகரின் உரைவளம் சிறந்தது அய்யா!
      ஒரு அதிகாரத்திற்குப் பின் இன்னொரு அதிகாரம் ஏன் வைக்கப்பட்டது, ஒரு இயலுக்கு அடுத்து இன்னொரு இயலின் முறைவைப்பிற்குக் காரணமென்ன என்பது போன்ற ஏராளமான விடயங்களைப் பரிமேலழகர் விவரித்துச் செல்கிறார்.
      எல்லாவற்றையும்விட அவர் உரையில் இருக்கும் இலக்கியச் செழுமையும், ( வடநூல் மரபினவாய் இருந்தாலும் ) காரண காரிய ஆய்வும், சொற்பொருள் நுண்மையும், மேலே சகோதரி சொன்னதைப் போல, “ உரையெல்லாம் பரிமேலழகன் உரையாமோ “ என்றுச் சொல்லச் செய்து விட்டது.
      குணம் நாடிக் குற்றமும் நாடி மிகை நாடினால் பரிமேழகனின் உரை நன்று.

      என்ன,

      படிக்கும் நாம் “கசடு“ அறக் கற்க வேண்டும் அவ்வளவே.

      விரைவில் விரிவாகப் பதிவிட முயல்கிறேன் அய்யா!!

      நன்றி.

      Delete
    2. ஆகா! ஆகா! என்னவோர் அருமையான விளக்கம்! நன்றி ஐயா!

      அலுவலெல்லாம் ஒன்றுமில்லை; கொஞ்சம் சூழல் சரியில்லை. கணினியிலும் சில சிக்கல்கள். அதனால்தான் வர முடியவில்லை. காத்திருக்க வைத்ததற்கு வருந்துகிறேன் ஐயா!

      Delete
  27. ஆனால் நம்மைப் போல இல்லாத பெருமைகளை இருப்பதாகப் பேசி நம்முதுகில் நமக்குநாமே தட்டிக் கொடுத்துக் கொள்ளவும் நம்மைவிட்டால் வேறு ஆளில்லை.

    அதில் ஒன்றுதான்,
    இந்தத் திருக்குறளைத் திருவள்ளுவர் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடித்திருக்கிறார் என்பதைத் திருக்குறளின் பெருமைகளுள் ஒன்றாகச் சொல்லிச் சந்தோஷப்பட்டுக் கொள்வதும்.//

    மிகவும் சரியே ஆசானே! நம்மைப் போல மார்த்டட்டிக் கொள்பவர்கள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

    திருக்குறளைப் பற்றிய தகவல் எங்களுக்குப் புதிது. இதுவரை கேட்டதில்லை. திருவள்ளுவரைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் பல விவாதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. திருவள்ளுவர் எந்த காலக்கட்டம்...என்பது முதல்....நம் ஊர் மக்கள் அதற்கு மேலாகச் சென்று திருவள்ளுவர் எந்த சாதி என்பது வரை அலசி ஆராய்வார்கள்.

    எங்களின் தாழ்மையான கருத்து, இது ஒரு நல்ல விவாதமாக இருக்கலாம். ஆனால், திருக்குறள் என்பது மிகவும் உயர்வான கருத்துக்களைக்கொண்ட ஒரு நூல். அதை யார் எந்தக் காலகட்டத்தில் எழுதினால் என்ன? அதி வரும் கருத்துக்களை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளலாமே!

    மிக அழகான ஒரு பதிவு...வேலைப் பளுவால் தாமதம்...

    ReplyDelete
    Replies
    1. வர வேண்டும் ஆசானே..!
      திருக்குறள் ஓர் உயரிய நூல் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை ஆசானே.! பதிவின் தொடக்கத்திலேயே, “““திருக்குறள் எல்லாருக்கும் பொதுவான நூல் என்பதிலோ அறநெறிக் கருத்துகளைக் கொண்ட நூல் என்பதிலோ மாற்றுக் கருத்தில்லை. அதன் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறனே போதும் அது பேசப்படவும், பாராட்டப்படவும்! “““
      என்று நானும் அதனை ஒத்துக் கொண்டிருக்கிறேன்.

      இங்குப் பிரச்சனை தற்சார்பான, ஒரு தலைப்பட்சமான எண்ணங்களை அந்நூலின் மேல் சுமத்தும் உரைகளைக் கொண்டு அந்நூலை அணுகுவது!

      அதைத்தான் திருக்குறள் சொல்லுகிறது என்று வாதிப்பது.

      திருக்குறளின் பொருளை விளங்கிக் கொள்ள எண்ணும் வாசகன் மனதில் தவறான கற்பிதங்களை உருவாக்குவது.

      அதைக் குறளின் கருத்தென்று எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்?

      உதாரணமாக,

      திருக்குறளின் ஏழாம் அதிகாரத்தின் தலைப்பு, புதல்வரைப் பெறுதல்.
      மணக்குடவர் முதலியோர் இவ்வதிகாரத்திற்குக் கொடுத்திருக்கும் தலைப்பு “ மக்கட்பேறு “ திருவள்ளுவர் என்ன தலைப்புக் கொடுத்தார் என்பது தெரியவில்லை. ஆனாலும் மக்கள் என்ற சொல்லும் மகன் என்ற சொல்லுமே இவ்வதிகாரத்தின் பத்துக் குறளிலும் வருகின்றன என்பதால்
      மக்கட் பேறு என்பது இவ்வதிகாரத்தின் தலைப்பாக மற்ற உரையாசிரியர்கள் கொள்வதில் நியாயம் இருக்கிறது. ( மக்கட்பேறு எனும் சொல்லாட்சியே குறளில் இருக்கிறது )

      பரிமேலழகரின் உரைப்படி இவ்வதிகாரம், “புதல்வரைப் பெறுதல்“ என்று மாற்றம் பெற்றிருக்கிறது. ( புதல்வன் எனும் சொல் இதில் இல்லை)

      சாதாரணப் படிப்பவர்க்குத் தோன்றும் புதல்வன் என்றால் என்ன மக்கள் என்றால் என்ன... இதில் என்ன வேறுபாடு இருக்க முடியும் என்று?”

      பரிமேலழகரின் விளக்கத்தைக் கேளுங்கள், “ இரு பிறப்பாளர் மூவரானும், இயல்பாக இறுக்கப்படூஉங் கடன் மூன்றனுள், முனிவர் கடன் கேள்வியானும், தேவர் கடன் வேள்வியானும், தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலானும் அல்லது இறுக்கப்படாமையின், அக்கடன் இறுத்தற் பொருட்டு, நன் மக்களைப் பெறுதல் “

      இவ்வுரைக்கு விளக்கம் வேண்டுமேல்,

      இருபிறப்பாளர் எனப்படுபவர், பூணூல் தரிப்பதற்கு முன் ( உபநயனம்) உள்ள ஒருபிறப்பும், பூணூல் அணிந்ததற்குப் பின்னுள்ள ஒரு பிறப்பும் ஆகிய இரண்டு பிறப்புகளை உடைய , முனிவர்கள், தேவர்கள், தென்புலத்தார் என்போர்.

      அவர்களுக்கு விதிக்கப்பட்ட (?) கடன் மூன்றாவது, முனிவர்க்கு வேதத்தைக் கேட்டு மனனம் செய்தல், தேவர்க்கு வேள்வி, தென்புலத்தார்க்கு புதல்வரைப் பெறுதல்.

      ( இங்கும் முனிவர் என்பது, பிராமணரையும், தேவர் என்பது சத்திரியரையும் தென்புலத்தார் என்பது வைசியரையுமே குறிக்கிறது. என்றால்..........மற்ற மக்களுக்குப் பிறப்பது..(?))

      சரி, ஓதல் வேள்வி, கடந்து, பித்ருக்களுக்குக் கொடுக்க வேண்டிய கடமைகளைக் கொடுக்க ஆளில்லாதவர்கள், “புத்“ எனும் நரகத்தில் கிடந்து அழிய வேண்டியதுதான்.
      அந்தகைய நரகத்தில் விழாமல் பெற்றோரைக் காப்பாற்றுபவன்தான், புதல்வன்..(?)..( புத் - அல்- அன் அல்லது புத் - அல்- வி)
      எனவே ‘தென்புலத்தார் கடன் புதல்வரைப் பெறுதலல்லது இறுக்கப்படாது‘
      என்ற பரிமேலழகரின் உரைப்படித் திருக்குறள் நீதி கூறுகிறது என்றால் அதை “உலகப் பொதுமறையாய்“ ஏற்க முடியுமா ஆசானே?

      மீண்டும் நாம் திருக்குறள் ஒரு உயரிய நூல் என்பதை ஒப்புக் கொள்கிறோம்.

      ஆனால் இவ்வுரைகளின் வழி திருக்குறளை அணுகுவோர்க்கு,

      “வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
      உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி ?“
      என்னும் மனோண்மணியம் சுந்தரனார் வாக்குப் பொய்யென்றல்லவா தோன்றும் ?

      இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கிறது.....

      வேலைப்பளுவினூடே வந்து ஆழ்ந்த கருத்துக்களை இட்டமைக்கு மிக்க நன்றி ஆசானே!!

      Delete