Sunday 27 September 2015

யாது ஊர்? யாவர் கேளிர்??




உலகளாவிய மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் - 2015. 
வகை - 4 : முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை.

கசாப்புக் கடையொன்றில் தொங்க விடப்பட்டுள்ள
தோலுரிக்கப்பட்ட என் உடலை
நிலைகுத்திய விழிகளோடு பார்த்துக் கொண்டிருக்கிறது
வெட்டப்பட்ட எனது தலை..!

கண்முன்னே வன்புணர்வுக்குள்ளாகி
வயிறுகிழிக்கப்பட்டு  வீதியில் வீசி எறியப்பட்டவள்
என் சகோதரி!

நிராதரவாய்…, நீதிமறுக்கப்பட்டுக்
கயமையின் கண்ணிகளில் சிக்கிச்
சுட்டுக்கொல்லப்பட்டவன் என் சகோதரன்!

      குண்டுகள் சிதறடித்த சதைக்குவியலில்
மொழிபெயர்ப்பு வேண்டப்படாத அழுகையோடு
மாரடித்துக் கதறிக்கொண்டிருப்பவள் என்தாய்!

மனநிலைபிறழ்ந்து
வீதிதோறும் கல்லெறிந்து விரட்டப்பட்டு
முதுமையின் சரிவில் உருண்டுகொண்டிருப்பவன்தான்,
கால் இடறாதென் கைபிடித்தபடி எப்போதும் என்னிடம்
“கவனம் கவனம்” என்றெவென் தந்தை..!

இது பற்றிய யாதொரு பிரக்ஞையும் அற்று
எங்கோ யாருக்கோ நிகழந்ததெனத்
தம் கூடுகளுக்குள் பாதுகாப்புடன்
படுத்துறங்குகிறது மனித நேயம்!

யாது ஊர்? யாவர் கேளிர்?? என்றறியாமல்
நாடும் நாதியுமிழந்து நடுத்தெருவில் மலங்க விழிப்பவருள்
‘கணியன் பூங்குன்றனும்’ ஒருவனாய் இருக்கிறான்! 


உறுதி மொழி.

1. “ யாது ஊர்? யாவர் கேளிர்?? “ என்னுந் தலைப்பில், புதுக்கவிதை வகைமையின் கீழ் எழுதப்பெற்ற இப்படைப்பு, எனது சொந்தப் படைப்பே என உறுதி அளிக்கிறேன்.

2. இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும்மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“ க்காகவே எழுதப்பட்டது என உறுதி அளிக்கிறேன்.

(3) இதற்கு முன் வெளியான படைப்பன்று எனவும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன்.

பட உதவி - நன்றி http://onlineuthayan.com/images/



Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

42 comments:

  1. கணியன் பூங்குன்றனும் ஒருவனாய்.
    ...........
    மனதைக் ......
    கவிதைக் கொள்ளும் உண்மைகள்.....
    அய்யா கவிதை அருமை.
    வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பேராசிரியரே!

      தங்களின் முதல்வருகைக்கும் பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி!

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. அன்புள்ள அய்யா,

    நாதியற்று ‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என்று வாழும் நம் தொப்புள்கொடி உறவுகளைப் பற்றி உரக்கச் சொல்லிய சிறப்பான புதுக்கவிதை, போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.

    த.ம.2.

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. கணியன் பூங்குன்றனார் வழியில் வந்தவர்களுக்கே இந்த நிலையா ,ஐயகோ,ஐ நா சபை என்று ஒன்று இருந்தும் ,இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல:?
    நெற்றி அடி உங்க கவிதை ,வாழ்த்துகள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் ஐயா, சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள்! வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் தொடர்வதற்கும் வாழ்த்திற்கும் நன்றி ஐயா.

      Delete
  7. புதுக்கவிதைப் போட்டியில் வெற்றி பெற இருக்கும் தங்களுக்கு எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா வணக்கம்.

      முதலில் தங்களின் நம்பிக்கைக்கு நன்றி.

      இதை விடச் சிறப்பாகப் பலரும் எழுதியுள்ளனர்.

      இது ஒரு பங்கேற்பு அவ்வளவே!

      தங்களின் வாழ்த்திற்கு நன்றி.

      Delete
  8. முதல் பத்தியே பகீரென்று முகத்தில் அறைகிறது.. மனிதநேயம் மரத்துப்போனதன் பாதிப்பிலிருந்து கணியன் பூங்குன்றனாரும் தப்பவில்லை.. மனதைப் பிசையும் யதார்த்த வரிகள். வெற்றி பெற நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  9. சத்தியமான வரிகள் சகோதரா! அண்டை வீட்டில் நடந்தாலே அலட்டிக் கொள்ளாத மானிட பதர்கள் வாழும் உலகமிது. என்ன செய்ய? எனும் ஆற்றாமையோடு நகர்கிறது நம்மைப் போன்றோரின் வாழ்க்கை பக்கங்கள். சக மனிதனின் துன்பத்தைக் காணாது இருந்து விட்டு தனக்கென்று நடக்கும் போது இதைக் கேட்க நாதியே இல்லையா என்பது எவ்வளவு பெரிய அயோக்கியதத்தனம்.

    ReplyDelete
  10. சத்தியமான வரிகள் சகோதரா! அண்டை வீட்டில் நடந்தாலே அலட்டிக் கொள்ளாத மானிட பதர்கள் வாழும் உலகமிது. என்ன செய்ய? எனும் ஆற்றாமையோடு நகர்கிறது நம்மைப் போன்றோரின் வாழ்க்கை பக்கங்கள். சக மனிதனின் துன்பத்தைக் காணாது இருந்து விட்டு தனக்கென்று நடக்கும் போது இதைக் கேட்க நாதியே இல்லையா என்பது எவ்வளவு பெரிய அயோக்கியதத்தனம்.

    ReplyDelete
  11. சத்தியமான வரிகள் சகோதரா! அண்டை வீட்டில் நடந்தாலே அலட்டிக் கொள்ளாத மானிட பதர்கள் வாழும் உலகமிது. என்ன செய்ய? எனும் ஆற்றாமையோடு நகர்கிறது நம்மைப் போன்றோரின் வாழ்க்கை பக்கங்கள். சக மனிதனின் துன்பத்தைக் காணாது இருந்து விட்டு தனக்கென்று நடக்கும் போது இதைக் கேட்க நாதியே இல்லையா என்பது எவ்வளவு பெரிய அயோக்கியதத்தனம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. வெற்றி பெற வாழ்ததுக்கள் நண்பரே
    தம +1

    ReplyDelete
  13. மனிதநேயம் பற்றி எவ்வளவு சிறப்பாக புதுக்கவிதையில், விம்ம வைத்து விட்டது மனச்சாட்சி.
    கரைந்தன கண்கள் கனத்தது உள்ளம். வலிமை அற்றுப் போனது உடல் மிக்க நன்றி இனிய கவிக்கு.....அருமை அருமை !
    வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி அம்மா

      Delete
  14. பாதுகாப்பாய்ப் படுத்துறங்கும் மனித நேயத்துக்கு ச் சரியான சாட்டையடி! ஈழத்தின் இறுதிப்போர் கண்முன்னே வந்து மனதை நெகிழச் செய்தது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  15. அதிர வைக்கும் கவிதை. வெற்றி பெற வாழ்த்துகள்.

    ReplyDelete
  16. இறுதி வரிகள் இயக்கத்தை தடைசெய்தது. வாழ்த்துக்கள் தங்களின் இதுபோன்ற பகிர்வுகளையும் எதிர்பார்க்கிறேன். (கற்கத்தான்)
    வாழ்த்துக்கள் ஆசிரியரே.

    ReplyDelete
    Replies
    1. கவிஞரே என்னைக் கிண்டல் செய்யாவிட்டால் உங்களுக்குத் தூக்கம் வராதோ?
      ம்ம்.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  17. புதுக் கவிதை ஆனாலும் புலமைக் கவி! நன்று!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகை உவப்பு ஐயா.

      நன்றி.

      Delete
  18. படித்து முடித்த பின் செயலற்று அமர்ந்திருந்தேன்;உங்கள் கவிதையின் தாக்கம்.

    ReplyDelete
  19. இதயத்தைக் கிழித்து விட்டீர்கள் ஐயா!

    யாராவது இதை மொழிபெயர்த்து ஒபாமாவுக்கு அனுப்பி வைக்க முடியுமா?...

    ReplyDelete
    Replies
    1. ஐயா

      என் எண்ணங்களை முற்றுமுழுதாகப் பதிய இயலவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு.

      தங்களின் அன்பினுக்கு நன்றிகள்.

      Delete
    2. //என் எண்ணங்களை முற்றுமுழுதாகப் பதிய இயலவில்லை என்ற வருத்தம் எனக்கு உண்டு// - எனக்கும்தான் ஐயா! ஆனால், வருந்தாதீர்கள்! மாறும்! எல்லாம் மாறும்!! விரைவில்...

      Delete
  20. சுளீரென்று உரைக்கும் வரிகள்..
    பிரமாதம் அண்ணா

    ReplyDelete
  21. Blood oozes out from my heart as i browse over the lines of your poetry.
    well done sir.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள்.

      தங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் நன்றி.

      என் இந்த எழுத்துகளால் உங்கள் மனதில் கடந்துவந்திருப்பேனாகில் அதனைவிட இதற்குப் பெரிய வெற்றி ஒன்றும் இல்லை.

      தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

      தொடர்ந்து உங்களின் கருத்துகளை எதிர்நோக்குகிறேன்.

      Delete

  22. வணக்கம்!

    கணியன் உரைத்த கவியடியை நன்றே
    அணியும் உலகே அழகு!

    பாட்டரசர் கி. பாரதிதாசன்
    தலைவர்:
    கம்பன் கழகம் பிரான்சு
    உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்

    ReplyDelete
  23. அழகை அறிகின்ற ஆற்றலெனைப் போன்ற
    மழலையும்பா ராட்டும் மனது!

    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  24. மனதைக் கிளறி மனிதனா நீ!
    மானமுள்ள தமிழினமா நீ!
    என்று உங்கள் கவிதை வினா எழுப்புவதை உணர்கிறேன்.
    செயவதறியாது மறுகுகிறேன்.

    ReplyDelete