Tuesday 20 January 2015

நூறாண்டுக்கு முற்பட்ட கடிதமும் ஒரு பூட்டின் சாவியும்.

திருக்குறளில் 135 அதிகாரங்களோடு ஒரு சுவடி பிரான்சில் இருப்பதாக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக கவிஞர். பாரதிதாசன் அய்யா அவர்கள் திருக்குறள் கற்பிதங்கள் பதிவின் பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சுவடி அது எந்த நூலகத்தில் இருக்கிறது என்றெல்லாம் அந்த ஆய்வாளர் குறிப்பிடவில்லை போலும். திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது என்பது ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகளாய் நிலைபெற்ற கருத்தே எனினும் பிரான்சில் அப்படி ஒரு சுவடி 1350 குறட்பாக்களோடு இருந்தால் நிச்சயம் அதுவும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட பின்தான் அவை மிகைப்பாடல்களா என்பது தெளிவுபடுத்தப் படவேண்டும்.

அந்தக்காலத்தில் காப்பி இருந்தது என்னும் பதிவில், “தங்களுடைய  பேசப்படாத படைப்புகளை வாழ்விக்கத் தங்களையே பலியிட்டவர்கள்“ எனக்குறிப்பிட்டிருந்தது, கம்பராமாயணத்தில் தம் கைச்சரக்கைக் கலந்துவிட்ட வெள்ளியம்பலத் தம்பிரான் ( வெள்ளைப்பாடல்கள் ) சீவகசிந்தாமணியில்  கலப்படம் செய்த, கந்தியார் பாடல்கள் இவற்றைத்தான். தங்களால் அது போன்றதொரு படைப்பை அளிக்க முடியாது என்றெண்ணிய இவர்கள் பூவோடு சேர்ந்து தங்கள் நாரும் மணக்கும் என்று எண்ணி தங்களது திறமையையும் இடையிடையே காட்டியிருப்பார்கள் போல. என்ன கொடுமை என்றால் நச்சினார்க்கினியர் போன்ற மேதாவிகளால் கூட அசல் எது போலி எது என்று பிரித்தறிய முடியாமல் இந்த போலிப்பாடல்கள் நூலோடு நூலாய்க் கலந்துவிட்டதுதான். அதுதானே ஒரு தரமான (?) போலியின் வெற்றி (!). ஒரு இலக்கியத்தின் மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை சுவடியின் இறுதியில் குறிப்பிடப்பட்டிருக்கும் போது அதைவிட அதிகமாக வரும் பாடல்களை “மிகைப்பாடல்கள்“ என்று சொல்ல முடிந்தது. ஆனால் இடையிடையே தான்கலந்து போயிருக்கும் இந்தப் போலிகளைப் பிரித்தறியத்தான் முடியவில்லை.

பிரான்சில் 135 அதிகாரங்களை உடைய திருக்குறளின் சுவடி எங்கிருக்கும் என்பதற்கான விடை தெரியாத கேள்வி மனதின் ஒரு ஓரத்தில் தங்கிக்கிடந்தது.

சரி ………….!

நிறைய விஷயங்கள் இப்படித்தான் திறக்கச் சாவி இல்லாத பூட்டாய் மனதின் ஆழத்தில் கனத்துக் கிடக்கும்.
வாசிப்பின் சிலதருணங்களில் கிடைக்கும் சில சாவிகள் பொருந்தும்.பொருந்துகின்ற சாவிகள் எல்லாம் பூட்டைத் திறக்க வேண்டும் என்பதில்லை. அவற்றுள் ஏதேனும் ஒன்றில் பூட்டு திறந்து கொள்ளும். சிலவற்றிற்கு நாமாகச் சாவிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பதிவில் நான் குறிப்பிடுவது 1350 குறளை உடைய நூல் இங்கிருக்கலாம் என்று அனுமானிக்கப்  பொருத்தமான சாவி ஒன்றினைத்தான்.

இரண்டு அதிகாரங்கள் அதிகமாக உள்ள திருக்குறள் அங்கு இருக்குமா என்பதை பிரான்சு வாழ் அன்பர்கள்தான் போய்ப்பார்த்துச் சொல்ல வேண்டும்.
சரி இனியாவது விஷயத்துக்கு வருவோம்.


உ.வே.சா அவர்கள் சீவக சிந்தாமணியை 1887 இல் பதிப்பிக்கிறார். அந்தப் பதிப்பைப் பாராட்டி நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் அய்யருக்குப் பல கடிதங்கள் வருகின்றன. அதில் ஒரு கடிதத்தில் பாரீஸ் நகரத்தின் முத்திரை இருக்கிறது.

அதில் எழுதப்பட்டது இதுதான்.,


                                                     SOCIETE HISTORIQUE
                                                    CERCLE St. SIMON                                                       Parris la April 3d 1891.

ம-ள-ள-ஸ்ரீ சாமிநாதையரென்னும் பெரும்புகழ் பொருந்திய தமிழாசிரியராம் மகா சிறப்பிற் புலவர் தமக்கு நாம் பாரிசுமா நகரத்தில் தமிழாசிரியர் எழுதுபவையாவன: சிந்தா மணியாஞ் சிறப்புடைய காப்பியமே பொன்றாதின் மாலை பொருந்திவரக் - கண்டேனே சிலப்பதிகாரமுதற் சீர்நூல்கள் நான்கு மளித்தலா மென்மரறைந்து. நீர் 1887-ஆம் ஆண்டி லச்சிற் பதிப்பித்த சிந்தாமணி யைக்கண்டு மிகவு மதிசயமா யிருந்தோமென்றும் நீர் செய்த வுலகோர்க்குப் பெரியவுபகார மறிந்தோமென்றும் இன்னம் பழைய புத்தகங்க ளச்சிற் பதிப்பித்தற் குரியவா யுண்டென் றும் உமக்கு நாமெழுத வேண்டுமென் றெண்ணிக்கொண்டு வருகிறோமாதலால் மிகவும் களிகூர்ந்து வாழ்வோ மெப்போ தென்றால் சிலப்பதிகாரம் மணிமேகலை குண்டலகேசி வளையா பதியென்னும் வேறு நாற்பெருங்காப்பியங்கள் பரிசோதித் துக் கொடுத்தவப்போதே சொல்லுவோம்.

சிலப்பதிகாரமோ வென்றால் சென்னப்பட்டணத்தில் முன் 1885-ஆம் வருஷத்தில் அதின் முதற் காண்டம் உரையின்றிக் கொடுத்தார்களென்றறிகின்றோ மானா லிரண்டாமும் மூன்றாமும் தருகவென்று பல விசேடமா யறவிய மனத்த ரெல்லோருங் கேட்போர்.

மணிமேகலையோ வென்றால் நங்கட்கண் ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனாலந்தப் பிரதியெழுதியவன் பழைய வெழுத்துக்களறியாதபடியினாலே சில கவிகளும் வார்த்தைகளு மெழுதாமல் விட்டான். ஆதலினாலிந்தப் பிரதி படித்தற் குரிய தல்லது.
சிறப்புப் பொருந்திய நூலவைகளச்சிற் பதிப்பித்தலின்றி விட்டாற் கையெழுத்துப் பிரதிகளடைக்கலாமோ வென்று கேட்கிறோம். இங்குதான் பாரிசுமா நகரத்தில் printing type உண்டு. இதுவுமல்லாமல் French பாடைக்குத் திருப்பி யாவர்க்கும் பயன்செய்ய அளிக்கக் கூடுமென்று முமக்கு நாமெழுதுகின்றோம்.

எம்முடைய புன்றமிழை உம்முடைய தயையினாலேயே வாசித்துக் கொண்டால் ஒரு காகிதமெமக்கு மறுபடி யனுப்பினால் மிகவும் சந்தோடமா யிருப்போம்.

சுவாமியுடைய கிருபையெல்லாமும் மேலே வருகவென்று உங்கள் colleague and servant ஆயிருக்கிறோம்.
Prof. J. Vinson


என்ன பொழிப்புரை வேண்டி இருக்கிறதா….? புரபஸர் சொல்ல வந்ததை இன்றைய நடையில் ஓரளவிற்கு இப்படிச் சொல்லலாம்.


மரியாதைக்குரிய ஐயர் அவர்களுக்கு,
பிரான்சில் தமிழாசிரியனாய்ப் பணியாற்றுபவனாகிய நான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

“சிந்தா மணியாம் சிறப்புடைய காப்பியமே
பொன்றாதின் மாலை பொருந்திவரக் – கண்டேனே
சிலப்பதி காரமுதல் சீர்நூல்கள் நான்கும்
அளித்தலாம் என்மர் அறைந்து “

நீங்கள் 1887 இல் அச்சில் பதிப்பித்த சிந்தாமணியைக் கண்டு மிக வியப்படைகிறேன். நீங்கள் இந்த உலகத்திற்குச் செய்தது பேருதவியாகும். இன்னும் அச்சில் வர வேண்டிய பழைய நூல்கள் பல உண்டென்று உங்களுக்கு எழுதக் கருதியிருந்தேன். இதன் தொடர்ச்சியாக, ஐம்பெருங்காப்பியங்களில் எஞ்சி உள்ள, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி எனும் நான்கு நூல்கள் ஆய்ந்து பதிப்பிக்கப்பட்டால் இன்னும் பெரு மகிழ்வடைவேன்.

இவற்றுள் சிலப்பதிகாரத்தின் முதற்காண்டத்தின் மூலம் மட்டும் ( பாடல்கள் மட்டும் ) 1885 இல் சென்னையில் இருந்து வெளியிடப்பட்டது. அதற்கும் உரை இல்லை. அதனுடைய இரண்டாம் காண்டமும் மூன்றாம் காண்டமும் வெளிவர வேண்டும் என அந்நூலை ஆர்வத்துடன் படிக்கக் கருதும் அனைவரும் எண்ணிக் காத்திருக்கின்றனர்.

மணிமேகலை என்றால் என்னிடம் ஒரு கையெழுத்துப்படிஇருக்கிறது. ஆனால் அதைச் சுவடியில் இருந்து பெயர்த்து எழுதியவன் பழைய எழுத்துகளைச் சரிவர அறியாதவன். எனவே அவன் அவனுக்குப் புரியாத பாடல்களையும் வார்த்தைகளையும் எழுதாமல் இடையிடையே விட்டு எழுதிவிட்டான். எனவே என்னிடம் இருக்கும் கையெழுத்துப்பிரதி படிக்கப் பயன்படாததாய்ப் போய்விட்டது.

சிறப்புப் பொருந்திய இந்த நூல்களை அச்சில் பதிப்பிக்காமல் கையெழுத்துப் பிரதியிலேயே அடைத்து வைத்தால் அதனால் பயனென்ன? இங்கு பாரிஸில் பிரிண்டிங் டைப் உண்டு. (  Type writer ? ) . அதுமட்டுமன்றி, இவற்றைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்து அனைவருக்கும் பயன்படுமாறு அளிக்கவும் முடியும் என்பதற்காகத் தங்களுக்கு இதை எழுதுகிறேன்.

என்னுடைய புன்தமிழை நீங்கள் என்மேல் இரக்கம் கொண்டு வாசித்து எனக்கு ஒருபதில் அனுப்பினால் மிக்க மகிழ்வேன்.

இறைவனின் அருள் உங்கள்மேல் நிலவட்டும்.

உங்களுக்குத் துணையிருப்போனும் பணியாளனுமாகிய

பேரா. ஜூ. வின்ஸோன்.

இக்கடிதத்தை எழுதிய ஜூலியன் வின்ஸோனைப் பற்றி ஐயர் அறிந்திருக்க வில்லை. அவர் பிரான்சில் தமிழ்ச் சுவடிகள் இருக்கிறதா என்றுதான் முதலில் ஆச்சரியப்படுகிறார். பின் வின்ஸோன் எவ்வாறு தமிழ் படித்தார் என்றும் தன்னுடைய கடிதத்தில் கேட்கிறார். ஜூலியன் வின்ஸோனின் கடிதத்தில் பிரான்சில் நிறைய தமிழ்ச்சுவடிகள் உள்ள பெரிய நூலகம் ஒன்றிருப்பதைக் குறிப்பிடுகிறார்.

அவர்  தந்தையார் காரைக்காலில் ஜட்ஜாக இருந்தாரென்றும் அக்காலத்தில் தான் தமிழ் படித்ததாகவும் கூறுகிறார்.. வின்ஸோன் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் கீழ்நாட்டு மொழியியல் துறையின் ( The School of Living Oriental Languages ) ஆசிரியராகப் பணியாற்றி வருவதாகவும் பதிலில்  குறிப்பிடுகிறார்.

ஐயர் அவர்கள், சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் அச்சிடும் பொருட்டு அந்நூற்சுவடிகள் எதுவும் பாரிஸில் கிடைக்குமா என்று கேட்டு வின்ஸோனுக்குக் கடிதம் எழுதுகிறார். அதற்கு வின்ஸோன்  எழுதிய பதில் வருமாறு:

                                                     Paris la May 7th 1891

எனதன்பிற்குரிய மகா சாஸ்திரிகளே,

நாம் போன மாசமுமக்கெழுதின காகிதம் உங்கிட்ட வந்ததுக்கு முன்னே நீர் எமக்கனுப்பிய காகித மடைந்தது. அதில் நீர் சிலப்பதிகார மச்சிற் பதிப்பித்தற்குரிய தென்றும், அதைப் பரிசோதித்துக் கொண்டு வருகிறே னென்றும், கண்ட பிரதிகளில் உரை தப்பியிருக்கிற தென்றும், இங்கு பெரிய புத்தகசாலையிற் சிலப்பதிகாரத்தொரு கையெழுத் துப் பிரதியுண்டோ வென்றும் கேட்கிறீர்.

அதுக்கு உத்தரங் கொடுக்க வருகிறோம்.

Bibliothique Nationale என்கிற பெரிய புத்தகசாலை யிலிருக்கின்ற ஓராயிரந் தமிழ்க்கையெழுத்துப் புத்தகங்களெமக்கு நன்றாய்த்தெரியும். அவைகளின் list or catalogue பண்ணினோ மானால் அவற்றுள் சிலப்பதிகாரம் இல்லை.

பழைய புத்தகங்களோ வென்றால் அந்தச் சாலையிலே மணிமேகலை ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனால் நாம் போன மாசம் எழுதிய காகிதத்திற் சொன்னபடி அந்தப் பிரதியில் பற்பல கவியும் வார்த்தையு மெழுதாமல் விட்டிருக்கின்றது. அந்தப் பிரதியிலு மூலமாத்திர முரையின்றி வருகின்றது. அது ஓலைப்பிரதியாகும். நாம் அதைக் கடுதாசியி லெழுதினோம், நங்கட சிறு புத்தகசாலையிலே வைக்க. ஆதலால் நீரதைப் பார்க்க வேண்டுமேல் அந்தக் கடுதாசிப் பிரதியனுப்புவோம். நீரதைக் கண்டு மில்லாத கவிகளும் வார்த்தைகளும் போட்டுத் திருப்பியனுப்பலாம்.

நாமிங்குத் தமிழைப் படித்தோ மல்ல. நாம் பிள்ளையா யிருக்கும்போது எங்கடகப்பனார் காரைக்காலிலே French Judge ஆயிருந்தாரப்போதே தமிழைப் பேசவு மெழுதவும் படித்தோம். இங்கு நாம் செய்த சில கவிகளுமக்கு அனுப்புகின்றோம்.

இங்ஙனம், Julien Vinson அன்புடையவன்
உரை குறையதாயினுஞ் சிலப்பதிகார மச்சிற் பதிக்க வேண்டும்!!

ஐயரோடு அவருக்கு இருந்த கடிதத் தொடர்புகள் நீள்கின்றன. ஐயர் பதிப்பிக்கத் திட்டமிட்ட நூலொன்றின் பிரதியை, ஐயர் கேட்டுக்கொண்டதால் அப்படியே படியெடுத்து அனுப்புகிறார்  வின்ஸோன். பழைய எழுத்துகளைப் படிக்கவும் பார்த்து எழுதுவும் முறையான பயிற்சி வேண்டும். அது எல்லார்க்கும் ஆவதன்று என்று வியக்கும் ஐயரை, வெண்பா அகவல் என்று எழுதி இன்னும் இன்னும் வியக்க வைக்கிறார் வின்ஸோன். 1910 ற்குப்பின் ஐயருக்கு அவரோடு இருந்த தொடர்பு அறுபடுகிறது.

இத்தனைக்கும் வின்ஸோன், தமழறிஞரோ மொழியியல் படித்தவரோ அல்லர். அவர் ஒரு கானியல் துறை ( Forestry ) பட்டதாரி. வனத்துறையில் உதவி ஆய்வாளராகத் தனது பணியை முதலில் தொடங்கிவர்.
தமிழ் மட்டுமல்லாது பிரஞ்சு, தென்மேற்கு பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஒரு பிரிவினரால் பேசப்படும் போஸ்க் ( Bosque ), ஹிந்துஸ்தானி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றுப் பின்னாளில் மொழியியலாளராகப் பணியாற்றிவர்.

தமிழ் இலக்கணத்தைப் பிரஞ்சில் மொழிபெயர்த்தவர், சீவக சிந்தாமணி மற்றும் திருக்குறளின் சில பகுதிகளையும் பிரஞ்சில் மொழிபெயர்த்துள்ளார்.

இந்தப் பதிவு, வின்ஸோனைப் பற்றியதல்ல, பிரான்சில் இவர் குறிப்பிட்டுள்ள, Bibliothique Nationale நூலகத்தில் 1350 பாடல்களை உடைய திருக்குறள் பிரதி இருக்கக் கூடுமா என்ற சந்தேகத்தை முன்வைப்பதே!

இதில் இன்னோர் பிரச்சனையும் இருக்கிறது..!

திருக்குறளைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கும் வின்ஸோன் அங்கிருக்கும் திருக்குறள் பிரதிகளைப் பார்க்காமல் இருந்திருப்பாரா?
அல்லது அதற்கு முன்பே அச்சில் வந்துவிட்ட திருத்தமான திருக்குறள் இருக்கப் பழைய சுவடிகளை ஏன் பார்க்க வேண்டும் என நினைத்திருப்பாரா?

கேள்விகள்தான் ஆய்விற்கான முதற்படிகள்..!

பிரான்சு வாழ் தமிழ்ப்பெருமக்கள் இந்தச் சாவியைக் கொண்டு முயன்று பார்க்கலாம்.

பூட்டு ஒருவேளை திறக்கலாம்.
இல்லாவிட்டால் வேறுசாவி தேடலாம்.

துணை நூல்.
நினைவு மஞ்சரி.  – உ.வே. சாமிநாதய்யர்.
படம் - நன்றி கூகுள்.
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

52 comments:

  1. 135 அதிகாரங்களோடு குறள் என்னும் செய்தி ஆச்சர்யம் அளிக்கிறது! பண்டைத் தமிழ் படிக்க சிரமமாயிருப்பினும் ஓரளவிற்கு படித்து மகிழ்ந்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் முதற் கருத்திற்கும் நன்றி திரு தளிர் சுரேஷ் அவர்களே!
      பழையது எப்பொழுதும் சுவையானதுததான் நமக்குச் சுவைக்கத் தெரிந்தால்!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  2. விடை தெரியாத வினாவாகி நின்றா விடயத்திற்கு
    கடை வைத்து தந்துள்ளீர்கள்.(பூட்டுக் கடை)
    எது எப்படியோ?
    வேலை பஞ்சம் மிகுதியாகி போய் விட்ட பிரான்சில்
    வேலை தேடி தந்து விட்டீர்கள்?

    பூட்டு சாவி இரண்டையும் தேடி எங்களது பயணம் தொடர வாழ்த்துங்கள்?
    (ஒரு வேளை பகல் வேளை
    கையில் விளக்கொடு சென்றானாம்
    மனிதன் அங்கே காணவில்லை
    தேடுகிறேன் அவன் என்றானாம்?)
    நன்றியுடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. அது சரி பிரான்சில் வேலைப்பஞ்சம் வந்துவிட்டதா?
      இங்கு வேலை தெரிந்த, வேலையை ஆத்மார்த்தத்துடன் செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை அய்யா!
      முதலில் இந்தச் சாவி திறக்கிறதா என்று பாருங்கள்.
      இல்லா விட்டால் இன்னொரு சாவியால் முயன்று பார்க்கலாம்.

      விளக்கோடு மனிதனைத் தேடி அலைந்த அந்த மனிதனின் இன்னொரு கையில் முகம்பார்க்கும் கண்ணாடி ஒன்றைக் கொடுத்திருக்கலாம்.

      .....;))


      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா.

      Delete
  3. அன்புள்ள அய்யா,

    ‘நூறாண்டுக்கு முற்பட்ட கடிதமும் ஒரு பூட்டின் சாவியும்’ படித்தேன்.
    நல்லதொரு ஆய்விற்கு வித்திட்டிருக்கிறீர்கள்.
    வாசிப்பின் சிலதருணங்களில் கிடைக்கும் சில சாவிகள் பொருந்தும்.பொருந்துகின்ற சாவிகள் எல்லாம் பூட்டைத் திறக்க வேண்டும் என்பதில்லை. அவற்றுள் ஏதேனும் ஒன்றில் பூட்டு திறந்து கொள்ளும். சிலவற்றிற்கு நாமாகச் சாவிகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எப்படியோ பூட்டிய பூட்டு திறந்தால் நல்லது.

    பிரான்சில் இவர் குறிப்பிட்டுள்ள, Bibliothique Nationale நூலகத்தில் 1350 பாடல்களை உடைய திருக்குறள் பிரதி இருக்கக் கூடுமா என்று தேடினால் பூட்டிய பூட்டு ஒரு வேளை திறக்கப்படலாம்.

    பேராசிரியர் ஜூலியன் வின்ஸோனின் பாரிஸில் இருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டில் அயல்நாட்டிலிருந்து எழுதிய அருமைத்தமிழை படித்தது மிகுந்த மகிழ்ச்சி.

    உ.வே.சா ஐயரோடு அவருக்கு இருந்த கடிதத் தொடர்புகள் எண்ணி எண்ணி வியக்கின்றேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா உங்களின் வருகைக்கும் பதிவொன்றின் ஆதார வரிகள் சிலவற்றை மேற்கோள் காட்டியமைக்கும் மிக்க நன்றி

      Delete

  4. சிறந்த ஆய்வுக் கட்டுரை ஒன்றைத் தந்து இருக்கிறீர்கள். அன்றைய தமிழ் கடிதங்களுக்கு இன்றைய தமிழில் பொழிப்புரைகள் தந்து புதுமையைச் செய்து விட்டீர்கள்.

    // கேள்விகள்தான் ஆய்விற்கான முதற்படிகள்..! //

    என்ற உங்கள் வரிகள் உங்கள் ஆராய்ச்சி அனுபவத்தைச் சொல்லும். பிரான்சில் 135 அதிகாரங்களை உடைய திருக்குறளின் சுவடி எங்கிருக்கும் என்ற தங்கள் கேள்விக்கு நிச்சயம் ஒருநாள் (முப்பது ஆண்டுகளாக எனக்குள் இருந்த, ஙப்போல் வளை – என்ற கேள்விக்கு உங்கள் மூலம் விடை கிடைத்தது போல) விடை கிடைக்கும்.
    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி அய்யா!
      ஆராய்ச்சி ஒன்றும் இல்லை அய்யா!
      இது வெறும் அனுமானமே..!
      இருந்தால் நல்லது .
      இல்லாவிட்டால் மிக நல்லது.
      வாசிப்பின் ஏதாவது ஒரு தருணத்தில் தெரியும் இது போன்ற திடீர் வெளிச்சங்கள் பலமுறை எனக்குக் கை கொடுத்திருக்கின்றன.
      பார்ப்போம்.
      தங்களின் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  5. வணக்கம்
    ஐயா.

    விரிவான கருத்தாடல் புதுமையான தகவல்.. ஆய்வுக்கு ஒரு வழிகாட்டால்.... பகிர்வுக்கு நன்றி ஐயா.j.ம 3
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி ரூபன்.

      Delete
  6. எனக்கு என்னவோ உ.வே.சு அய்யர் இன்னும் இருப்பதாகவும், அவர் தமிழில் ஒரு ப்லாக் நடத்துவதாகவும், தமிழ் இலக்கணம், இலக்கியம் குறித்த அரிய பல தகவல்களை திரட்டி தன் வலைபக்கத்தில் தருவதாகவும் ஒரு செய்தி கிடைத்தது. பேசுபொருளில் ஒரு நேர்த்தியோடு, பலரையும் பேசவைக்கும், அருமையாய் பேசும் அத்தளத்திற்கு அவர் பேசாத தளம் என்று பெயரிட்டிருப்பதாகவும் ஒரு தகவல். அதையும் தாங்கள் ஆராய்ந்தது சொன்னால் நன்றாக இருக்கும்:)
    ரொம்ப நாள் கழித்து அண்ணனை சந்திக்கிறேன். அருமையான கட்டுரை அண்ணா!

    ReplyDelete
    Replies
    1. அம்மு....\\\\அருமையாய் பேசும் அத்தளத்திற்கு அவர் பேசாத தளம் என்று பெயரிட்டிருப்பதாகவும்//// இதுபோல எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே உங்களுக்கு அப்பிடி தோணுதா அம்மு ஹா ஹா தெரிஞ்சா சொல்லுங்க ok வா ....

      Delete
    2. சிறப்பாகச் சொன்னீர்கள்! :-D

      Delete
    3. உ.வே.சு அய்யா் இன்னும் இருந்து கொண்டு பிளாக் வேறு நடத்துகிறாரா?
      சரி சரி சாவி கிடைத்ததும் நிச்சயமாய்ச் சொல்கிறேன்.;))அம்மா.....அய்யா நீங்களுமா?

      Delete
  7. நுணுக்கமாக எழுதப்பட்டுள்ள பதிவு. தங்களது தேடல்களும் தொகுப்புகளும் வியப்பைத் தருகின்றன. பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அய்யாவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

      Delete
  8. எங்கு உள்ளது என்று சொல்லுங்கள்... திறக்க வருகிறேன்... எனக்கு அந்த இரண்டு அதிகாரங்கள் வேண்டும்...!

    ReplyDelete
    Replies
    1. திறந்து பார்த்தால்தான் அய்யா தெரியும் அங்கு இருக்கிறதா இல்லையா , அசலா போலியா என்றெல்லாம்..!
      அங்கிருக்கும் தமிழன்பர்கள் முயற்சிப்பார்கள் என்று நம்புவோம்.
      நன்றி

      Delete
  9. சாவி எடுத்தாலும் பூட்டையும் தேடுமேன்
    கூவி அழைத்தாலும் வாராதே காண்பதுவும்
    கண்ணாய் இருந்தால் மகிழ்வோம்! பொறிக்கட்டும்
    பொன்னால் பெயரை நன்று !
    ஆச்சரியமாகவே உள்ளது எத்தனை விடயங்கள் ....ம்..ம்....
    எத்தனை பொறுமையோடு இவற்றை ஆய்வு செய்து எத்தனை பொறுப்போடு இவற்றை எமக்கு அறியச் செய்துள்ளீர்கள். தமிழுக்கு செய்யும் பெரிய தொண்டுகள் அல்லவா இவை இன்னமும் தங்களால் ஆகவேண்டியவை நிறைய இருக்கும் போலிருக்கிறதே. ஆற்றுங்கள் பணியை தொடர்கிறோம் தமிழ் தாய் கொடுத்து வைத்தவள் இப்படிப் பிள்ளையை பெற.!
    தொடர வாழ்த்துக்கள்....! பதிவுக்கு மிக்க நன்றி !

    ReplyDelete
    Replies
    1. நான் இதில் ஒரு ஆய்வும் செய்யவில்லை அம்மா.
      நான் சொன்னபடி ஏதும் அங்குள்ள சுவடிகளில் இருந்தால் அது காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதைதான்!
      உங்கள் அனைவரின் இது போன்ற அன்பைப் பெற நான்தான் கொடுத்து வைத்தவன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  10. வணக்கம் ஐயா!
    ஆழ உழுது தேடிப் பயிர் செய் என்று என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கின்றேன்!
    ஆழ்ந்த ஆய்வுக் கட்டுரை! அத்தனையையும் ஓ! அப்படியா... என்று கேட்டு மனதில் பதித்துக்கொள்கின்றேன்!
    வாசிப்புக் குறைபாடு ஐயா எனக்கு!.. நேரமில்லை.. சூழல்.. இன்னும் இன்னும் என்று காலம் கடந்துவிட்டது.. இங்கு உங்கள் மூலம் இப்படி அறியக் கிடைத்தது மகிழ்வே!..

    தொடருங்கள்!.. வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. தங்களது உடல் நலனில் கவனம் கொள்ளுங்கள் சகோ!
      மற்றவற்றைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
      தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  11. இன்னும் இரு அதிகாரங்களா? திருக்குறளுக்கு?! இருக்குமா? அது எந்த அதிகாரமாக இருக்கும் , பொருட்பால், அறத்துப்பால், காமத்துப்பால்? எதில் இருந்திருக்கும்? பல கேள்விகள் எழுகின்றன....

    அன்றைய தமிழ் சேர்த்து எழுதப்பட்டதாக இருக்கின்றது இல்லையா...ஃப்ரொஃபசரின் தமிழ்.....//பழைய புத்தகங்களோ வென்றால்// //நாமிங்குத் தமிழைப் படித்தோ மல்ல. நாம் பிள்ளையா யிருக்கும்போது எங்கடகப்பனார் காரைக்காலிலே French Judge ஆயிருந்தாரப்போதே தமிழைப் பேசவு மெழுதவும் // இதைப் படித்த போது சற்று வைணவத் தமிழ் போல இருந்தது. அப்படியே என்று சொல்ல முடியா விட்டாலும்....

    பூட்டைத் திறக்கப் போவது யாரு??!!

    (திறக்கப்பட்டால்.....பாவம்...திருக்குறள் முழுவதும் மனப்படமாகத் தெரியும், எந்த அதிகாரத்தில் எந்தப் பாடலைக் கேட்டாலும் சொல்லுவர், சிறு மேதை என்றெல்லாம் சொல்லித் தொலைக் காட்சிகளில் அடிக்கடித் தோன்றும் சிறு குழந்தைகள்....இன்னும் இரு அதிகாரம் மனப்பாடம் செய்ய வேண்டி வருமோ?!!!ஹஹ்ஹ )

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஆசானே!
      இச்செய்தி புதியதுதான்.
      பாரதிதாசன் அய்யா என் பதிவொன்றின் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்த செய்தி அது.
      அதற்கான வாய்ப்புகள் இருக்கலாம். அச்சுவடிகள் இங்கே இருக்கலாமோ என்கிற கேள்வியை முன்வைத்துத்தான் இப்பதிவு.
      பூட்டைத் திறக்கப்போவது யாராய் இருந்தால் என்ன?
      அவர்கள் தமிழுலகில் நிச்சயம் பேசப்படுவார்கள் என்பது உறுதி.
      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      Delete
  12. உங்களுக்கென்று பல விசயங்கள் கிடைக்கின்றன ஆசானே! ஹப்பா உங்கள் தேடல்...ம்ம்ம் பாராட்டுக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இயல்பாக எழுதிப்போகிறீர்கள் ஆசானே..!
      நானோவென்றால் படித்ததைத்தானே பகிர வேண்டியிருக்கிறது.
      தங்களின் பாராட்டிற்கு நன்றி!

      Delete
  13. பாரதிதாசன் ஐயா அவர்கள் போட்ட விதைக்குத் தாங்கள் சிறந்த உரத்தையும் தூவிவிட்டிருக்கிறீர்கள். இது மட்டும் உண்மையாக இருப்பின் உலகத் தமிழர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கக்கூடிய ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வு அரங்கேறும்.

    ReplyDelete
    Replies
    1. அவ்விரு அதிகாரங்களும் பிற்சேர்க்கையாய்க் கூட இருக்கலாம். ஆனால் அதை ஆதாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி மறுக்காதவரை இச்செய்தியை வெறுமே புறந்தள்ள முடியாதுதானே அய்யா!
      ஒரு வேளை இவ்வதிகாரங்கள் திருக்குறளின் பகுதியாக இருந்துவிட்டால், நிச்சயம் நீங்கள் சொன்ன வரலாற்று நிகழ்வு நிறைவேறும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  14. அன்பு விஜூ. அரிய தேடல். சாவி கிடைத்து, பூட்டும் திறந்தால் அதன் பிறகு தமிழ்நாட்டில் எழும் பெரிய வேட்டு! எழட்டும். ஆனாலும் நீங்கள் சொன்னதுபோல இந்த இடைச்செருகல் பண்டிதர்கள் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமல்ல.. என் கருத்தில் இது சங்க இலக்கியப் பதிபபுத் தொட்டே தொடங்கி விட்டது. சங்க இலக்கியத் தொகுப்புகளில் முருகாற்றுப் படையின் பின்வரும் 10வெண்பாவுக்கும் முருகாற்றுப் படைக்கும் சற்றும் தொடர்பில்லை
    (அஞ்சு முகம்தோன்றின் ஆறு முகம் தோன்றும்
    வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில்
    ஒருகால் நினைக்கின் மறகாலும் தோன்றும்
    முருகாவென் றோதுவார் முன் - எனும் புகழ்பெற்ற வெண்பா உட்பட)
    சிலப்பதிகாரத்தின் காதைகள் முடிவின் கடைசியில் வரும் வெண்பாக்கள்..
    எனச் சொல்லிக்கொண்டே போகலாம் (கம்பராமாயணத்தில் சொல்லவே வேண்டாம்) இதுபற்றியே ஒரு நூல் எழுதலாம் போல.. நிற்க. திருக்குறளில்தான் பெரிய அளவிற்கு பாடபேதம் இல்லை. (பொருட்பேதம் நிறைய) ஐந்திரம் - ஐந்திறம் பற்றி ஐராவதம் தினமணி இணைப்பில் 15ஆண்டுக்கு முன் எழுதிய மோசடி பற்றியும் படித்திருப்பீர்கள்.. இப்போது திருக்குறளில் கூடுதலாக இரண்டு அதிகாரம் என்பது அப்படியாக இருக்கலாம்.. (பழைய நடையில் எழுதிச் சேர்த்துவிடுவது) பாரீசு நண்பர்கள்தான் நீங்கள் கொடுத்திருக்கும் குச்சியை வாங்கிக்கொண்டு ஓடி தேடல் ஓட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் (காரைக்குடியில் சாவிக்கு “தொறகுச்சி“என்று சொல்லும் வழக்குண்டு) உங்கள் தொடக்கம் நல்லபடி தொடரவும் தமிழுக்கு நல்லது நடக்கவும் வாழ்த்துகள் விஜூ. அப்புறம் உங்கள மொழிபெயர்ப்பு அழகு!(பண்டிதத் தமிழில் படிக்கும்போதே வெண்பா வாச்சேனு நினைச்சேன் அதே வடிவில் போட்டீர்கள் பாருங்கள் அங்கே நிற்கிறார் விஜூ! ) வாழ்த்துகள். நல்லதொரு பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      இதற்காக எந்தத் தேடலையும் நான் மேற்கொள்ளவில்லை. வேறொரு வாசிப்பில் என் கண்ணில் பட்டது. உ.வே.சா வெளியிட்டிருந்த இந்தக் கடிதம். பின்னூட்டம் ஒன்றனோடு பொருத்திப்பார்த்தது மட்டுமே நான் செய்தது.
      கீழ்க்கணக்கு நூல்கள் மற்றும் சிலப்பதிகாரத்தின் பின் வைக்கப்பட்டுள்ள வெண்பாக்கள் குறித்து ஏற்கனவே விவாதித்துள்ளதாய் நினைவு.
      ஆனால் அவற்றிற்கும் இத்திருக்குறளின் மிகை அதிகாரங்களுக்கும் வேறுபாடுண்டு.
      நீங்கள் குறிப்பிடும் வெண்பாக்கள், பாடுபொருளானும் மூல நூலின் யாப்பு வடிவானும் வேறுபட்டுத் தனியன்களாய் அமைபவை.
      ஆனால் இவை குறள்வெண்பாவின் வடிவத்தில் அமைந்தவை.
      எப்பாலில் இவை சேர்க்கப்பட்டிருக்கின்றன எனத் தெரிந்தால் இன்னும் இது உண்மையா என்று சான்று தேடலாம். பழம்பாடல்தானா அல்லது கலப்படப் புலமையா என்று சான்று தேடலாம்.
      ஐந்திரம் ஐந்திரம் பற்றி படித்திருக்கிறேன் அய்யா. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பா எனத்தெரியவில்லை. அது பழைய சர்ச்சை அல்லவா? புலவர் வீரபத்திரனாரின் வாய்மூலம் வெளிப்படுத்தப்பட்ட நூல்.
      அதற்கு முன்பே போலிக் கூத்த நூல் ஒன்றும் வெளியிடப்பட்டு அது சிலப்பதிகாரம் குறிப்பிட்ட கூத்தநூலாய் இருக்க முடியாது என்பது நிறுவப்பட்டுவிட்டது.
      போலி அசல் என்பதை இன்னொரு கோணத்தில் பார்த்தால், இது தொல்காப்பியம் குறிப்பிடும் ஐந்திரம் அன்று என்றும் சிலப்பதிகாரம் குறிப்பிடும் கூத்தநூல் அன்று என்றும் குறிப்பிட வேண்டும்.
      இன்று பழைய திரைப்படத்தின் பெயரால் புதிய திரைப்படம் வருவதைப் போல.
      ஐந்திரம் என்று நீங்கள் சொன்னதும் எனக்கு நினைவுக்கு வருவது, அப்படி ஒரு நூல் உண்மையில் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியில் எதேச்சையாய் தொல்காப்பியப் பாயிரத்தைப் பார்க்க நேர்ந்து, நிறைய ஆதாரத்துடன் A.C . BURNELL, எழுதிய “On the Aindra school of Sanskrit grammarians“ என்ற நூலும் அதில் அவர் எழுதிய பாணினியத்திற்கு முன்பிருந்த பல்வெறு இலக்கணப்பள்ளிகளும் நினைவுக்கு வருகின்றன.
      தனித்துக்காண்பியாது வரிநெடுக இருந்த வரிகளை வாசிக்கும் போது எனக்குத் தோன்றியதை உறுதிப்படுத்த அலகிட்ட போதுதான் வெண்பா என்பது பிடிபட்டது அய்யா.
      நீங்களும் அதைச் சரியாய் கவனித்திருக்கிறீர்கள் என்று எண்ணும் போது மகிழ்ச்சிதான்.
      தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!

      Delete
  15. தம+
    பார்ப்போம் விளைவை
    ஆவல் மேலிட காத்திருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களோடு தோழர்.
      நன்றி

      Delete
  16. பிரான்சு வாழ் நம் பாரதிதாசன் அய்யா அவர்கள் இந்நேரம் பூட்டைத் திறந்து இருப்பார் என்று நினைக்கிறேன் :)
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அவர் இதற்கான முயற்சி செய்வார் என்று நம்புவோம் பகவான்ஜி. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete
  17. இலக்கணமானாலும். இலக்கியமானாலும் வரலாறு ஆனாலும் எதையும் அலசி ஆய்ந்து காரண காரியங்களை , விளக்கி எழுதும் தங்கள் பதிவு நற்றமிழ் வளர செய்யும் தொண்டு கண்டு, நான் பெரிதும் வியப்பதோடு பாராட்டுகின்றேன்! தங்களை நேரில் கண்டு உரையாட ஆசைப்படுகிறேன் முதுமையின் காரணமாக நான் எங்கும் வர இயலாமை! ஒருவேளை தாங்கள்
    சென்னை வரும் வாய்ப்பிருந்தால் முன்கூட்டியே அறிவித்தால் சந்திக்க ஏற்பாடு செய்யலாம்!என கைபேசி-எண்9094766822

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம்.
      தாங்கள் நினைப்பதுபோல் நான் பெரியவன் அல்ல.
      தங்களைப் போன்றவர்கள் என் தளம் வருவதும் பாராட்டுவதும் ஒரு புறம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு புறம் கூச்சமாகவும்தான் உள்ளது.
      என்னை இன்னும் அதற்குத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன்.
      தங்களின் தொலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டேன்.
      சென்னை வருவதாய் இருந்தால் நிச்சயம் நானே வந்து தங்களைச் சந்திக்கிறேன்.
      தங்களின் அன்பினுக்கு நன்றி.

      Delete
  18. அடேங்கப்பா, என்ன ஒரு தேடல். உங்களின் இந்த தேடல் மூலம் நாங்களும் நிறைய தெரிந்து கொண்டோம்.
    எனக்கு இருக்கும் ஒரு வருத்தம் என்னவென்றால், அன்னிய தேசத்தவர்கள் எல்லாம் தமிழ் படித்திருக்கிறார்கள், படிக்கிறார்கள் (எனக்கு தெரிந்த ஜப்பானியர்கள் இருவர், தமிழகத்துக்கே வராமல் தமிழ் படித்திருக்கிறார்கள்.) ஆனால் நாம் தான் தமிழ் படித்தால் வெட்கக்கேடு என்ற ஒரு நிலைப்பாட்டில் இருக்கிறோம். இந்த நிலை மாறி, மீண்டும் அனைவரும் தமிழ் படிப்பார்களா?

    "//கேள்விகள்தான் ஆய்விற்கான முதற்படிகள்..!//' - உண்மை தான்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அய்யா!
      எப்பொழுதுமே நம்மிடம் உள்ள நல்லபல விடயங்கள் நமக்குத் தெரிவதில்லை. அடுத்தவர் சொல்லித்தான் “ இது உண்மையாக இருக்குமோ“ என்று யோசிக்கிறோம்.
      ஆண்டைகள் பற்றிய பிரமிப்பில் “தன்னை மறக்கும்“ அடிமை மனோபாவம் இது.
      மொழியை இழப்பது தன் அடையாளத்தையே இழப்பது என்கிற உண்மை உணரப்பட்டால் தான் நம்மொழி காப்பாற்றப்படும்.
      தன் பையன் ஆங்கிலத்தைச் சரியாகப் படிப்பது பேசுவது சிறந்தது என்றும் தமிழைத் தவறாகப் பேசுவது நாகரிகமானதென்றும் எண்ணிக் கொண்டிருக்கும் மிகப்பல படித்த, பாமரர்களின் மனோபாவம் மாறாதவரை அதற்கு உரமிடும் ஊடகங்கள் மாறாத வரை, மொழிக்கல்வி, குற்றியலுகரத்திலும், ஒற்றளபடையிலும் மட்டும் இல்லை அது அன்றாட பேச்சு, எழுத்துத் தமிழைச் செம்மைப்படுத்தும் முயற்சிகளை மதிப்பெண்களை அளவுகோலாகக் கொள்ளாது முன்னெடுப்பது என்கிற சிந்தை வரும் வரும் அனைவரும் தமிழைப் பழகும் நிலை மாறுவது என்பது.............................................................................. ?
      உங்கள் ஆதங்கம் என் ஆதங்கமும் தான்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!

      Delete
  19. பிரமாண்டமான பதிவுதான் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே!

      Delete
  20. அன்பு சகோதரருக்கு...

    இரண்டு நாட்களுக்கு முன்னரே இந்த பதிவை படித்துவிட்டாலும், எனது மன குளத்தின் அடியாழத்தில் சலனமற்று அமிழ்ந்துகிடந்த நினைவுப்பேழைகளில் சில சாவியின்றியே ( சாவி... உங்களின் இந்த பதிவு ?! ) திறந்துகொண்டதால் பின்னூட்டமிட தாமதம் !

    முதலில் அயராத உங்களின் மொழி ஆராய்ச்சிக்கு வியக்கிறேன். பிரெஞ்சுக்காரர்கள் தமிழுக்கு பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்ற என் எண்ணம் இந்த பதிவின் மூலம் தகர்ந்தது !

    1350 திருகுறள் பிரதி...

    உலகின் மாபெரும் நூலகங்களில் ஒன்று Bibliothèque nationale de France ... அதன் பல பகுதிகளுக்கு அனைவரையும் அனுமதிப்பதில்லை. பண்டைய நூல் தேடல் என தொடங்கினால் பிரான்சை பொறுத்தவரை அந்த நூலகத்திலிருந்து தொடங்குவதே மதி !

    ஆனாலும் " சென்று வருகிறேன், வென்று வருகிறேன் " என சூளுரைத்து கிளம்ப மொழி ஆராய்ச்சி ஒன்றும் கத்தரிக்காய் கொள்முதல் அல்ல ! ஒரு வேளை அந்த நூலகத்தின் மூலப்பிரதிகளின் பகுதிக்கு அனுமதி கிடைத்தாலும் பண்டை தமிழை படித்தறியும் அளவுக்கான பண்டிதமும் புலமையும் வேண்டும் ! அப்படி இருப்பினும் அடுத்ததாக அது குறள் தான் என நிருபிக்க வேண்டிய அவசியம்...

    அந்த தகுதிகளெல்லாம் அற்ற என்னால் இயன்ற சின்ன உதவி... இந்த ஆராய்ச்சி தொடர்பாக யார் முயற்சித்தாலும் அவர்களுக்கு என்னாலான உதவிகளை செய்ய தயாராக உள்ளேன்.

    அடுத்ததாக ஜூலியன் வின்ஸோன் ( Julien Vincent )...

    தமிழ் மண்ணின் மொழி புலமை கைக்கூடியவர்கள் கூட சமூக அடுக்குகளின் காரணத்தால் எல்லோருக்கும் இலக்கிய அறிவு எட்ட முட்டுக்கட்டையாய் நின்ற அந்த காலத்தில் இந்த மேலை நாட்டவரின் ஆர்வமும் தமிழுக்கான அர்ப்பணிப்பும் ஆச்சரியம் !

    அவரின் தந்தை காரைக்காலில் ஜட்ஜாய் இருந்ததை படித்ததும் பல நினைவுகள்...

    புதுச்சேரிக்கு அடுத்து இந்தோ பிரெஞ்சு கலாச்சாரத்தின் மிச்சமாய் நின்றது காரைக்கால் ! ஆனால் அந்த மிச்சங்களெல்லாம், கடந்த பதினைந்து வருடங்களில் மிக வேகமாக அழிக்கப்பட்டுவிட்டன ! எனது தாய் வழி முப்பாட்டன், பிரெஞ்சு காலனியாதிக்க காரைக்காலில் நகரசபை உறுப்பினராக இருந்தவர் ! அந்த காலத்தின் ஜட்ஜுகளில் ஒருவரான து லா ப்ளோர் ( De La Fleur ) பற்றி பல கதைகள் கூறுவாள்...ஹூம் ! ஒரு நினைவு மீட்சி பதிவுக்கு யோசிக்க வைத்துவிட்டீர்கள்...


    நன்றி
    சாமானியன்

    ReplyDelete
    Replies
    1. அண்ணா வணக்கம்.
      உங்கள் மனக்குளத்தின் பேழைகளைப் பூட்டாமல் வைத்திருக்கிறீர்கள். :))
      அதுதான் வசதியும் கூட.
      முதலில் இது மொழி ஆராய்ச்சி இல்லை அண்ணா. அதற்கு நெடுந்தூரம் போக வேண்டும். ஐரோப்பியர்கள், ஏதேனும் புதையல் ரகசியம் இருக்கலாம் என்றெண்ணிக் கொண்டு போனார்களோ என்னமோ..?
      பிரிட்டிஷ் காரர்களும் இப்படிக் கொண்டு போய் வண்டிநிறைய லண்டன் நூலகத்தில் கொட்டிவிட்டுப் போய் இருக்கிறார்கள்.
      வணிகம் செய்ய வநதவர்கள் நாட்டைப் பிடிக்கக் கருதியபோது, அந்நாட்டின் மக்களை, அதன் இலக்கியத்தை, வரலாற்றை, கலாச்சாரத்தை, அறிவியலை (?), மருத்துவத்தை, வானியலை, அறிய விரும்பினார்கள். ஒருவேளை இச்சுவடிகள் அதற்குப் பயன்படும் எனக் கருதிய வெகு சிலரால் எடுக்கப்பட்டது தான் இந்த முயற்சி.
      அது அவர்களின் சுயநலம் சார்ந்தது என்றாலும் கூட தீயிலோ வெள்ளத்திலோ, கரையான் வாயிலோ போயிருக்க வேண்டியதை காப்பாற்றினார்கள் என்ற மட்டில் நாம் அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டவர்களாய் இருக்கிறோம்.
      அந்த நூலகம் பற்றி எனக்கேதும் தெரியாது. நீங்கள் கூறுவதை வைத்துப் பார்த்தால் என் சாவியில் பூட்டு திறந்து கொள்ளும் என்றுதான் தோன்றுகிறது.
      வின்ஸோனின் மரபு வழியினர் இருக்கிறார்களா?
      அவர்களைத் தேட வழியுண்டா?
      ஏனெனில் அவர் அந்நூலகத்திலிருக்கும் கையெழுத்து, மற்றும் சுவடிகளைத் தன் வீட்டு நூலகத்தில் வைப்பதற்காகப் பிரதியெடுத்ததாகக் கூறுகிறார். தமிழில் வெளிவராத பல நூல்கள் அங்கிருக்கும் என என் மனதிற்குப் படுகிறது.
      ஒரு வேளை மேற்குறிப்பிட்ட நூலகத்தில் கையெழுத்துப் பிரதியோ, ஓலைச்சுவடியின் ஒளிநகலோ கிடைக்கு மெனினும் சுவடிப்பிரதியை வாசிப்பதில் என்னால் தங்களுக்கு உதவ முடியும்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா!

      Delete
  21. பிரம்மிப்பாக ...இருக்கிறது...தங்களின் தேடல்...நிறைய அறிய தந்து கொண்டு இருப்பதற்கு நன்றி சகோ

    தம் 11

    ReplyDelete
    Replies
    1. தங்களுடைய வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சகோ.

      Delete
  22. திருக்குறளைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கும் வின்ஸோன் அங்கிருக்கும் திருக்குறள் பிரதிகளைப் பார்க்காமல் இருந்திருப்பாரா?
    நிச்சயமாக பார்த்திருப்பார் படித்திருப்பார் என்றே எண்ணுகின்றேன் நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. அப்படியானால் இருவாய்ப்புகள் உள்ளன.
      ஒன்று அச்சுவடி வேறெந்த பிரான்சு நூலகத்திலாவது இருக்க வேண்டும்.
      அல்லது அப்படி ஒரு சுவடி இல்லாமல் இருக்க வேண்டும்.
      பார்ப்போம் அய்யா!
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.

      Delete

  23. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
    நல்வணக்கம்!
    திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
    வலைச்சரம் ஆறாம் நாள் - பல்சுவை விருந்து
    இன்றைய வலைச் சரத்தின்
    சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
    வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

    வாழ்த்துக்களுடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    (குழலின்னிசையை தொடர தாங்கள் உறுப்பினரானால் அகம் மகிழ்வேன்! நன்றி!)

    ReplyDelete
  24. மிக அரிய தகவலைப் பகிர்ந்திருக்கிறீர்கள். இன்றுதான் வைலச்சர அறிமுகத்தின் மூலம் உங்கள் வலைத்தளத்திற்கு வந்தேன். தொடர்கிறேன்.

    ReplyDelete

  25. வணக்கம்!

    சனவாி மாதம் புதுவை வந்திருந்தபொழுது ஆய்வாளரைச் சந்திக்க எண்ணினேன். சந்திக்க இயலவில்லை. தொலைப்பேசி வழியாக அவருடன் இதைக் குறித்துப் பேசுகிறேன்.

    பல அாிய நுால்கள் பிரஞ்சு நுாலகத்தில் உள்ளதாக அவா் அன்று தொிவித்தார். தங்கள் விருப்பின்படி அங்குச் சென்றுப் பார்க்கிறேன்

    செம்மணம் வீசிடும் செந்தமிழைக் காத்திட்டால்
    நம்மினம் காணும் நலம்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


    ReplyDelete
  26. அய்யா அவர் ஓலைச்சுவடியைப் படித்து இருப்பார்.
    அவரைப் போல் தாமும் குறள் எழுதி பழகியிருப்பார். அது அப்படியே அதில் சேர்ந்து இருக்கும். எல்லாம் சரி. ஆனால் வள்ளுவன் பற்றிய குறிப்புகள் எங்கே?
    என் பதிவிலே கேட்டு இருந்தேன். நன்றி.

    ReplyDelete