Thursday, 13 April 2017

ஒரு கொடூர மரணம்!


கொன்ற ஒருவரின் சடலத்தை எவ்வளவு சிதைக்க முடியும்? அப்படிச் சிதைக்க வேண்டுமானால் அவர்மேல் எவ்வளவு வெறி இருக்கும்?

Tuesday, 11 April 2017

குடுமியான்மலை – சிரிக்கும் கல்வெட்டு.


குடுமியான்மலை இசைக்கல்வெட்டுகள் குறித்துக் கேள்விப்பட்டிப்பீர்கள். அங்கிருக்கும் ஈசனுக்குக் குடுமி வந்தது பற்றியும் புராணக்கதை உண்டு. ஆனால் இந்தப் பதிவு, அங்கிருந்து சிரிக்கும் கல்வெட்டுப் பற்றியது.

Sunday, 9 April 2017

கொலை தூண்டும் கற்கள்!


ஒருவரைக் கொல்லவோ அல்லது தன்னுயிரைப் போக்கிக்கொள்ளவோ சாதாரண நிலையில் மனிதன் விரும்புவதில்லை. ஆனால் சில சூழ்நிலைகளில் இச்செயல்களை மனிதன் மேற்கொள்ள நேர்கிறது.

Wednesday, 5 April 2017

இது நியாயமா?


வகுப்புகள் முடிவடைந்து ஆண்டு இறுதித்தேர்வுக்கு மாணவர்களை அனுப்பும் நிகழ்வு நேற்று. பிரச்சினைகள் நிறைந்த வகுப்பு அது. மாணவர்களின் அளவுக்கு மீறிய முதிர்ச்சி, அதற்கான அவர்களின் பாவனைகள், பொறுத்துக் கொள்ள முடியாத அவர்தம் பழக்க வழக்கங்கள்..! வகுப்பறைக்குள் நுழைந்தாலே ஏதேனும் பஞ்சாயத்து இல்லாமல் தொடங்கியதில்லை.

Tuesday, 25 October 2016

ஆசீவகம்-2:தாழியுள் கொதிக்கும் உணர்வுகள்


ஆசீவகர் பற்றிய “காமம் எப்படித் தோன்றுகிறது? என்ற பதிவு ஆசீவகர்கள் காமத்தைத் தடுக்கக் கையாண்ட வழிமுறை அதிர்ச்சியானது என்பதுடன் முடிந்திருந்தது.

Sunday, 23 October 2016

தமிழ்நாட்டின் நாஸ்டர்டாமஸ்.

நாஸ்டர்டாமஸ்- எதிர்காலத்தைக் கணித்து எழுதிய குறிப்புகளுக்காக உலகம் முழுவதும் அறியப்படுபவர். அவரது காலத்திற்குப் பின் நடந்தனவற்றை அவர் எழுதிய குறிப்புகளோடு பொருத்தி, உலகம் முழுவதும் நடக்க இருப்பதை அன்றே கணித்துச் சொன்னவர் என்ற புகழுக்குச்சொந்தக்காரர்.

Friday, 21 October 2016

நாம் பேசும் சொற்களா இவை?:உங்கள் தமிழைத்தெரிந்து கொள்ளுங்கள்-19


நாம் அன்றாடம் பேசிட எழுதிட எத்தனையோ சொற்களைப் பயன்படுத்துகிறோம்.
நாம் பயன்படுத்தும் சொல்லுக்கு நாம் குறிக்க விரும்பும் பொருளன்றி வேறு பொருளும் இருக்கலாம்.  அல்லது நாம்  குறிப்பிட்ட சொல்லுக்கு உரிய பொருளை அறியாமல் அதனைப் பயன்படுத்தவும் செய்யலாம். சில சொற்கள்  நாளடைவில் தம் நுண்ணிய பொருள் வேறுபாடு மறைந்து ஒரே பொருளாய்ப் போய்விடலாம்.

பயன்பாட்டில் உள்ள மொழியின் தன்மை இது.

பேசுதல் என்கிற பொருளைக் குறிக்கத் தமிழில் பல சொற்கள் உண்டு.

அறைதல், இயம்புதல், இசைத்தல், உரைத்தல், கூறுதல், சாற்றுதல், நவிலுதல், நுதலுதல், பகர்தல், பறைதல், பன்னுதல், புகலுதல், புலம்புதல், மாறுதல், மொழிதல், என்பன அவற்றுள் சில.

ஆனால் பேசுதலுக்கும் அதற்கு இணையாக வழங்கப்படுகின்ற இச்சொற்களுக்கும் நுண்ணிய வேறுபாடுண்டு எனக் காட்டுகிறார் தேவநேயப்பாவாணார்.

இதோ அவர்தரும் பொருள்:

பேசுதல் –  ஒருமொழியிற் சொல்லுதல்.
அறைதல் – ஓங்கிப் பேசுதல், வன்மையாகச் சொல்லுதல்
இயம்புதல் – இனிமையாகச் சொல்லுதல், இசைக்கருவி இயக்கிச்                      சொல்லுதல்
இசைத்தல் – கோவையாகச் சொல்லுதல்
உரைத்தல் – நூலுக்கு உரைகூறுதல், விளக்கிச்சொல்லுதல்
கூறுதல் – பாகுபடுத்திச் சொல்லுதல்
சாற்றுதல் – பலரறிய நல்லுரை கூறுதல்
நவிலுதல் – நாவினால் ஒலித்துப் பயிலுதல்
நுதலுதல் – சொல்லித் தொடங்குதல்
நுவலுதல் – நூலுரைத்தல், நுண்பொருள் கூறுதல்.
பகர்தல் – பண்டங்களின் விலை கூறுதல்.
பறைதல் – உரத்துச் சொல்லுதல்.
பன்னுதல் – பணிக்காய் ( விவரமாய் )ச் சொல்லுதல்.
புகலுதல் – விரும்பிச் சொல்லுதல்
புலம்புதல் – தனிமையிற் சொல்லுதல்.
மாறுதல் – திருப்பிச் சொல்லுதல்., மறுமொழி கூறுதல்.
மொழிதல் – சொற்களை நன்றாய்ப் பலுக்கிச் சொல்லுதல்.

( பக்.33., சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு )

வாருங்கள் நம் தமிழை நாம் தெரிந்து கொள்வோம்.

(  பேரறிஞர்களின் பேருழைப்பால் தொகுக்கப்பட்ட தமிழ்லெக்சிகனில் உள்ள குறைகளைச் சான்றாதாரங்களுடன் பட்டியலிட்ட பாவாணரின் தமிழறிவும், அதனைப் பொருட்படுத்தாமல்  அலட்சியம் செய்த அந்நாள் தமிழறிஞர்களும் பற்றிய அவலச்சுவை மிகுந்த முன்னுரை ஒன்று இந்நூலில் உண்டு. குறைந்தபட்சம்  தமிழார்வம் மிக்கவர்களேனும் பார்க்க வேண்டும் என்பது என் பரிந்துரை )

படஉதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images