Showing posts with label விவாதம். Show all posts
Showing posts with label விவாதம். Show all posts
Wednesday, 12 October 2016
Thursday, 14 January 2016
மன்னியுங்கள்! இது ஒரு வலி மிகுந்த பதிவு!
பிரபல
வலைப்பதிவரும் நண்பருமான இதழியலாளர், திரு. எஸ். பி . செந்தில்குமார் அவர்கள் எனது
பதிவின் பின்னூட்டம் ஒன்றில் கேட்டிருந்த கேள்வியும் அதற்கான பதிலும்தான் இந்தப் பதிவின் சாரம். இதுவரை நான் எழுதிய பதிவுகளில் என் மனம் விரும்பாத பதிவு எது என்றால் அந்தப் பதிவினைத்தான் சொல்வேன்.
Wednesday, 30 December 2015
ஜல்லிக்கட்டு - எப்படித் தோன்றியது தெரியுமா?
நம் தொன்மரபின் தொடர்ச்சி நம் தலைமுறையோடு முடிந்துவிடுமோ என்ற கவலையுடன் கட்சி வேறுபாடின்றித் தமிழகமெங்கும் உரத்தொலிக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக்குரல்களைப் பார்வையாளனாக இருந்து பார்த்த என்னை, மதிப்பிற்குரிய திரு. ஞானப்பிரகாசம் ஐயாவின் இருபதிவுகளும் தற்போது அவர் எனக்கு இது குறித்துத் தனியே விடுத்திருந்த மின்னஞ்சலும் இப்பதிவினை எழுத என்னை இழுத்து வந்திருக்கின்றன.
Wednesday, 20 May 2015
Wednesday, 29 April 2015
எழுத்துகளுக்குக் கொம்பிருந்த காலம்;உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் -(4)
உங்கள்
தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் என்னும் இந்தத் தொடரால், எனக்கு உள்ள நன்மை பின்னூட்டங்களின் வழியாகப் பலவற்றைக்
கற்றுக் கொள்வதும், அதிலிருந்து அடுத்த பதிவிற்கான செய்திகள் கிடைத்துவிடுவதும் தான் .
எனவே
உங்கள் ஒவ்வொருவரின் வருகையைப் போன்றே பின்னூட்டத்தையும் கேள்விகளையும் விரும்புகிறேன்.
இப்பொழுது
நம்மிடையே இருக்கின்ற எழுத்தின் வடிவங்கள் காலந்தோறும் சிறு சிறு மாற்றங்களைப் பெற்று
இன்று நாம் பயன்படுத்தும் இந்த நிலைமையை அடைந்திருக்கின்றன.
Friday, 24 April 2015
கோபிநாத்தின் நீயா நானாவும் தினமணியும் - இரு அபத்தக் கருத்துகள்.
தமிழைக் காக்க மல்லுக்கட்டுவதாய்ச் சொல்லும் பலரும் மிகச் சாதாரணமாகத் தமிழ் குறித்த தவறான தகவல்களைப் போகிற போக்கில் பகிர்ந்து போவதைக் கண்டிருக்கிறேன். பதிவெழுதுவதற்கு முன்பெல்லாம் மெல்லச் சிரித்துப் போய்விடுதலே அதைக் காணும்போதும் கேட்கும் போதும் என் பதிலாக இருக்கும். எண்ணங்களிலும் எழுத்துகளிலும் உள்ள உண்மையைப் பார்க்காமல் எழுதுகின்றவர்கள் யார் சொல்கிறவர் யார் எனப் பார்க்கும் நிலைமை மாறுகின்ற வரை சிறிதளவு பிரபலமான ஒருவரால் கூடப் படிக்கும் அல்லது கேட்கும் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை முட்டாளாக்கிவிட முடிகிறது.
Sunday, 22 February 2015
“முனைவர் ‘பசி‘பரமசிவம் அய்யாவின் கவனத்திற்குப் பணிவுடன்“
மதிப்பிற்குரிய
அய்யா,
வணக்கம்.
முதலில் நீங்கள் தமிழில் முனைவர்(ப்) பட்டம் பெற்றிருப்பவர் என்பதால் மிகுந்த கவனத்துடனும்,
பணிவுடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.
நான்
பதிவுலகிற்கு வந்ததன் நோக்கம் இதுவன்று என்றபோதும் உங்களின் தளத்தில் பின்னூட்டப்பெட்டி
முடங்கி இருப்பதாலும் தங்களைத் தனியே தொடர்பு
கொள்ள மின்னஞ்சல் போன்ற வசதிகள் இல்லாமையாலும் என்னைக் குறித்து, என் பெயர் குறிப்பிடாமல்
சில செய்திகள் மட்டும் கொண்டு மீண்டும் ஒரு பதிவு தங்கள் தளத்தில் வந்திருப்பதாலும் அவற்றின் கருத்துகளோடு நான் மாறுபடுவதாலும் என் தரப்பை விளக்க வேண்டிய அவசியம் கருதியே
என் தளத்தில் நான் இந்தப் பதிவை எழுதுகிறேன்.
Subscribe to:
Posts (Atom)

