Showing posts with label ஆய்வு. Show all posts
Showing posts with label ஆய்வு. Show all posts
Wednesday, 3 May 2017
Saturday, 2 January 2016
பழந்தமிழகத்தில் நடைபெற்ற சில ஜல்லிக்கட்டுக் காட்சிகள் ; பகுதி 1
அவள் இடையர் குலத்தைச் சார்ந்தவள். அதென்ன இடையர் குலம்? தமிழ் நிலங்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் எனப் பிரிக்கப்பட்ட போது, குறிஞ்சி நிலமாகிய காட்டிற்கும் மருதநிலமான வயல்வெளிக்கும் இடைப்பட்டிருந்த காடுகளால் ஆன நிலமான முல்லை இடைநிலம் என அழைக்கப்பட்டது. அந்த இடைநிலத்தில் வாழ்ந்ததனால் அவர் குலம் இடையர் குலம் எனப்பட்டது.
Sunday, 26 July 2015
ஒரு பாடலும் சில நினைவுகளும்.
குறிச்சொற்கள் :
அனுபவம்,
ஆய்வு,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Sunday, 19 July 2015
தோசையின் வரலாறு.
குறிச்சொற்கள் :
அனுபவம்,
ஆய்வு,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Wednesday, 3 June 2015
சமணம் – உயிரின் எடை.
ஒருகாலத்தில்
கல்வியையும் மருத்துவத்தையும் இருகைகளில் ஏந்தி, உயிர்களை அன்பு செய்யுங்கள் என்ற கோட்பாட்டைத்
தலையில் சுமந்து நாடெங்கும் அலைந்தவர்கள் சமணர்கள்.
அகிம்சை
என்றால் உயிர்களைக் கொல்லாமை என்று நாம் கூறுகிறோம்.
சமணர்களின்
கருத்துப்படி உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் அகிம்சை அல்ல. அவ்வுயிருக்கு நன்மை
செய்வதும் சேர்ந்ததுதான் அகிம்சை.
Monday, 6 April 2015
அறிவைப் பெருக்கும் வழிகள் ஆறு.
பண்டைய
நூல்களை வாசிக்கும்போது சில சொற்களுக்குப் பொருள் காண்பதோ கண்டவர் வாய்க் கேட்டறிவதோ மிகக் கடினமாக உள்ளது. உரை எழுதியவன் போகிற போக்கில் அருத்தாபத்தி என்பான்... அனுமானப் பிரமாணம் என்பான். அன்றைய காலத்தில் அது புரிந்திருக்கும். ஆனால் இன்று.........?!
என் புரிதலுக்காக இவற்றைச் சற்று ஆராய்ந்து பார்த்தபோது இவை மனிதனின் அறிவைப் பெருக்கும் வாயில்கள் எனப்பட்டதும் இவற்றின் மூலமாகத்தான் அவன் அறிவைப் பெறுகிறான் என்பதும் தெரியவந்தது. தமிழில் அவை அளவைகள் எனப்படுகின்றன. அளவைகள் என்றால்........... அறிவை அளக்கும் அளவைகள். அறிவை அளந்து நாம் பெற்றுக் கொள்ள உதவும் அளவைகள்.
Thursday, 12 March 2015
அவனுக்கு ‘முருகன் ‘ என்பது பெயர்.
குறிச்சொற்கள் :
ஆய்வு,
இலக்கணம்,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Tuesday, 10 March 2015
திருமணத்திற்கு முன் ஒரு தேனிலவு – இது சங்க காலம்.
அவர்
என்னுடன் பணியாற்றுபவர். தன் மகளுக்குப் பெரும் பொருட்செலவில் திருமணம் முடித்து வைத்திருந்தார்.
விடுப்பு முடிந்து பணியில் சேர வந்தததன் பின் பேச்செல்லாம் மருமகனைப் பற்றியும் திருமணம்
பற்றியுமாய்த்தான் இருந்தது.
அடுத்து
மணமக்களுக்கு ஹனிமூன் ஏற்பாடு செய்ய வேண்டும்
ஊட்டி கொடைக்கானல் என்று போனால் நல்லாயிருக்காது என்றார். வேறெங்கு அனுப்பலாம் என்று
கேட்டார்.
ஒருவர்
மூனாறு என்றார். இன்னொருவர் டாப்சிலிப் நன்றாக இருக்கும். ரிசாட் எல்லாம் இருக்கிறது
என்றார்.
மணவை
ஜேம்ஸ் அய்யா, தடாலடியாக “ அப்பப் பேசாம சுவிட்சர்லாந்த் அனுப்பி வைச்சுருங்களேன் சார்
“ என்று போட்டார் ஒரு போடு.
குறிச்சொற்கள் :
ஆய்வு,
இலக்கியம்,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Friday, 6 March 2015
அவன் - அவள் - ‘ அது ‘ -- இது சங்க காலம்.
அவள்
பின்னே பலமுறை அலைந்தவன் அவன்.
அவள்
அன்பைப் பெறுவதற்காகப் பலநாள் காத்திருந்தவன்.
நாளடைவில்
அவள் மனம் கனிகிறது.
அவளும்
அவன்மேல் அன்பு கொள்கிறாள்.
சாட்சிகள்
எவரும் இன்றி யாருமற்ற தனிமையில் அவளை அவன் திருமணம் செய்து கொள்கிறான்.
“இதேபோல்
ஒருநாள் உன்னைப் பெண்கேட்டு வந்து உன் உற்றாரும் பெற்றோரும் சூழத் திருமணம்செய்து கொள்வேன்“ என்று
உறுதி கூறுகிறான் .
Friday, 27 February 2015
“ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட தமிழ்ப்புகைப்படங்கள்“
இரு வாரத்திற்குமுன் நூலகத்திற்குச் சென்றிருந்தபோது எதேச்சையாய் ஒரு கட்டியான அட்டையுடன், கருப்பு நிறத்தில் புத்தகம் போன்ற, அதைவிடக் கனமான தொகுப்பு ஒன்றைக் காண நேர்ந்தது. எடுத்துப் பார்த்தபோது அது ஒரு பழைய
புகைப்பட ஆல்பம். குறைந்தபட்சம் எழுபது ஆண்டுகாலப் பழமையாவது இருக்க வேண்டும் அதற்கு..!
ஏனென்றால் அதன் எல்லாப்படங்களிலும் நீக்கமற நிறைந்திருந்த ஒருவரை எங்கேயோ பார்த்தது
போல் இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்றுத்தான் சட்டென நினைவுக்கு வந்தது.
அதிலிருந்தவர் எட்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன ஃபாதர். இருதயசாமி. அந்தப் புகைப்படங்களில்
பெரும்பான்மை அவருக்கு இருபது இருபத்தைந்து வயதாக இருக்கும் போது எடுக்கப்பட்டிருக்க
வேண்டும். முதல் படத்தில் இருந்ததும் அவராகத்தான் இருந்திருக்க வேண்டும். தரையில் குப்புறக் கிடந்து
தலையைச் சற்று உயர்த்தி, வாயிலிருந்து எச்சில் கோடாய் வழிய கேமராவைப்பார்த்துச் சிரிக்கும்
படம் அவருடையதுதான் என்பதை இறுதிவரை மாறாமல் இருந்த அவரது கூரிய மூக்குச் சொல்லிற்று.
Monday, 9 February 2015
சுட்டது தமிழ்.
தமிழில்
யார் வேண்டுமானாலும் எந்தத் தவறை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று நினைத்துத்
தமிழைப் பேசுகிறவர்கள் எழுதுகிறவர்கள் ஒரு புறம் , முன்னோர் இட்டுவைத்த சட்டதிட்டங்களின்
படியே பேசவும் எழுதவும் வேண்டும் என்று சொல்லித் திரியும் சிறுபான்மையினரான மொழிக்காப்பாளர்கள்
மறுபுறம் என்று தன் கடன் “பணி“ செய்து கிடப்பதே என்று இருக்கும் இருதரப்பினரையும் கொண்டு
நம் மொழி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.
Thursday, 5 February 2015
கானக நாடன் சுனை.
அது ஒரு
வித்தியாசமான சுனை. மிதக்கும் பொருள்களை மூழ்க வைக்கவும், மூழ்கும் பொருள்களை மிதக்க வைக்கவும் கூடிய தன்மை அதற்குண்டு. அதுதான் கானக நாடன் சுனை.
“சுரையாழ
அம்மி மிதப்ப ........“
எனத்
தொடங்கும் இந்தப் பாடல் பற்றிச் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன். அதன் தொடர்ச்சிதான்
இது.
இப்பாடல் தமிழ்ப்பாட நூல்களில், மொழிமாற்றுப் பொருள்கோளுக்கு
எடுத்துக்காட்டாக வழங்கப்பட்டு வருகிறது.
அதாவது
ஒரு பாடலில் பொருளைக் காணும்போது ஓரடிக்குள்ளாகவே சொற்களை இடம் மாற்றிப் பொருள் காண்பதற்கு
எடுத்துக்காட்டாய் வழங்கப்பட்டு வருகிறது.
Monday, 2 February 2015
கவிதையின் கழுத்தை இப்படியும் அறுக்கலாம்.
நீங்கள்
தமிழ் நாட்டில் பத்தாம் வகுப்பு வரை படித்தவர் என்றால் நிச்சயமாய் இந்தப் பாட்டைக்
கடக்காமல் உங்களால் போயிருக்க முடியாது. எதிர்பாராத
விதத்தில் நீங்கள் ஆசிரியராய், அதிலும் குறிப்பாய்த் தமிழாசிரியராய் இருந்துவிட்டால்
இந்தப் பாடல் இன்றும் மாணவர்களுக்குப் பாடமாய் இருக்கிறது. அதை நீங்கள் கற்பித்துக் கொண்டிருப்பீர்கள்.
உங்களைப்
பொறுமையிழக்கச் செய்ய விரும்பவில்லை.
பாடல்
இதுதான்,
Tuesday, 20 January 2015
நூறாண்டுக்கு முற்பட்ட கடிதமும் ஒரு பூட்டின் சாவியும்.
திருக்குறளில் 135 அதிகாரங்களோடு ஒரு சுவடி
பிரான்சில் இருப்பதாக ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக கவிஞர். பாரதிதாசன் அய்யா
அவர்கள் திருக்குறள் கற்பிதங்கள் பதிவின் பின்னூட்டம் ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.
அப்படி ஒரு சுவடி அது எந்த நூலகத்தில் இருக்கிறது என்றெல்லாம் அந்த ஆய்வாளர் குறிப்பிடவில்லை
போலும். திருக்குறள் 133 அதிகாரங்களை உடையது என்பது ஏறக்குறைய பத்து நூற்றாண்டுகளாய்
நிலைபெற்ற கருத்தே எனினும் பிரான்சில் அப்படி ஒரு சுவடி 1350 குறட்பாக்களோடு இருந்தால்
நிச்சயம் அதுவும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்ட பின்தான் அவை மிகைப்பாடல்களா என்பது தெளிவுபடுத்தப்
படவேண்டும்.
Saturday, 3 January 2015
யாப்புச் சூக்குமம் IV [ விருத்தத் தூண்டில். ]
வலைத்தளம் கொலைக்களமாக மாறும் முன் இந்தத்
தொடர்பதிவை முடித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. கம்பன் சொல்லுவானே,
''ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன்''
என. அப்படி நானும் ஆசை பற்றி அறையலுற்ற இந்த
யாப்புச்சூக்குமத்தின் சாவியை உங்கள் கையில் கொடுத்துவிட்டு, முற்றும் போட்டுவிடலாம்
என்று நினைக்கிறேன்.
( என்ன மணவை ஜேம்ஸ் அய்யா………………….சந்தம்
வண்ணம் எல்லாம் வேணுமா? )
மரபுக் கவிதைகளுக்கும் புதுக்கவிதைகளுக்கும்
உள்ள வித்தியாசம் இந்த ஓசைதான். தமிழின் இந்த ஓசை லயம் மரபுக் கவிதைகளை மனப்பாடம் செய்வித்தது.
அரங்குகளின் கடகட எனப் படிக்கப்படும் போது கைதட்டல் பெற்றுத் தரக் காரணமானது.
இதுவரை இந்த யாப்புச்சூக்குமத்தில் திறந்த
கதவுகளைக் கண்டிருந்த நீங்கள் இனி கண்படும் எந்தக் கதவையும் திறக்கக் கற்றுக் கொள்ள
வேண்டும்.
Monday, 29 December 2014
‘ங்‘ சொல்வது என்ன?
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது ஆசிரியப்
பயிற்சி மாணவிகள் எங்கள் வகுப்பிற்குப் பாடம் நடத்த வந்திருந்தார்கள். மூன்று விஷயங்களால்
அவர்கள் வருகை எங்களுக்குச் சுவாரசியமாய் இருக்கும்.
ஒன்று பார்த்துச் சலித்த முகத்திற்குப் பதில்
ஒரு புதுமுகம்.
இரண்டாவது நாங்கள் என்ன கேட்டாலும் என்ன
செய்தாலும் அவர்கள் எங்களை அடிக்கவோ திட்டவோ மாட்டார்கள்.
முக்கியமானது, பாடம் நடத்தும்போது இடையிடையே,
நிறையப் படங்கள், மாதிரிகள் எனக் காட்டுவார்கள். பாடத்தைவிட அதைப்பார்ப்பது மிகச் சுவாரசியமாய்
இருக்கும்.
சுருட்டப்பட்ட சார்ட்டுகளில் என்ன இருக்கிறது
என்பதும், மூடிவைக்கப்பட்ட பைகளில் இருந்து என்ன எடுத்துக் காட்டப்போகிறார்கள் என்பதும்தான்
பாடத்தை விட எங்களுக்கு பேரார்வமாய் இருப்பவை.
Thursday, 25 December 2014
திருக்குறள் கற்பிதங்கள் – புனைவு எண். 1
திருவள்ளுர் தினத்தைத் தேசியவிழாவாக வடமாநிலங்களிலும் கொண்டாட வேண்டும் என்று மத்தியஅரசு அறிவித்துள்ளது. திருக்குறளையும் வட மாநிலப் பள்ளிகளில்
பாடமாக வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்ற
தேன் வந்து பாயும் செய்திகள் நம் காதுகளில் வந்து விழுகின்ற அதே நேரம் திருக்குறளின்
பெருமையென பல்வேறு அறிஞர்கள் சொல்லும்,
திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில்
முடியும் என்கிற தகவல் பற்றிய மாற்றுப் பார்வை ஒன்றை முன்வைக்கத்தான் இந்தப் பதிவு.
Thursday, 11 December 2014
யாப்புச் சூக்குமம்-III [ விருத்தத்தின் எலும்புக்கூடு ]
விருத்தத்தின் எலும்புக்கூடு என்னும் இந்தப்பதிவை
படிக்கும்முன் நீங்கள் யாப்புச்சூக்குமம் பற்றிய முதலிரு பதிவுகளைப் படித்திருக்க வேண்டும்.
மரபுக்கவிதைகளைக் கட்டமைத்தல் குறித்த எனது
புரிதல் பற்றியது என்பதால் பொதுவாசகர்களுக்கும் மரபின் நுணுக்கங்களை மரபின் வழியில்
படித்தோருக்கும் இந்தப் பதிவு ஒரு சிறிதும் பயன்படாது என்பதால் இதைக் கடந்துவிடலாம்.
Friday, 21 November 2014
அந்தக் காலத்தில் காப்பி இருந்தது.
சமீபத்தில் இணையத்தில் அடுத்தவரின் பதிவை
அப்படியே எடுத்து ஒரு நன்றி கூடச் சொல்லாமல் ஒரு வலைப்பூவையே நடத்திக் கொண்டிருந்தவர்
குறித்து மாறி மாறிச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பலரும் தங்களுடைய படைப்புகள் திருடப்பட்டுள்ளனவா
என்று வேகமாய்ப்போய்ப் பார்த்ததுபோல் நானும் பார்த்தேன். அடுத்தடுத்துப் பல பதிவுகளையும்
அவர் தளம் போய்ப்பார்த்துவிட்டு வெளியே வந்து சிலமணி நேரத்தில் மீண்டும் சென்றபோது
அவருடைய தளப்பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது! அட.. பார்வையாளர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க இப்படியும் ஒரு வழியிருக்கிறதா என்று நான் சற்று வியந்தது உண்மை.
Wednesday, 6 August 2014
படைப்பின் உயிர். (2 )- முறைவைப்பு.
மெய்ப்பாட்டுச் சுவைகளின் வரிசை முறைக்குக் காரணம் உள்ளது என்பது பற்றிச் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை முதலில் பார்த்து விடுவோம்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் ( எட்டே) மெய்ப்பாடென்ப“
( தொல்-மெய்.3.)
எனத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் இந்த வரிசை முறையில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)




