வகுப்புகள்
முடிவடைந்து ஆண்டு இறுதித்தேர்வுக்கு மாணவர்களை அனுப்பும் நிகழ்வு நேற்று. பிரச்சினைகள்
நிறைந்த வகுப்பு அது. மாணவர்களின் அளவுக்கு மீறிய முதிர்ச்சி, அதற்கான அவர்களின் பாவனைகள், பொறுத்துக் கொள்ள முடியாத அவர்தம் பழக்க வழக்கங்கள்..! வகுப்பறைக்குள் நுழைந்தாலே ஏதேனும்
பஞ்சாயத்து இல்லாமல் தொடங்கியதில்லை.
Showing posts with label இலக்கணம். Show all posts
Showing posts with label இலக்கணம். Show all posts
Wednesday, 5 April 2017
Thursday, 13 October 2016
Monday, 26 September 2016
கூட்டம் மயக்கும் கலை – அது இப்படித்தான்!
Sunday, 25 September 2016
கூட்டம் மயக்கும் கலை.
Thursday, 14 January 2016
மன்னியுங்கள்! இது ஒரு வலி மிகுந்த பதிவு!
பிரபல
வலைப்பதிவரும் நண்பருமான இதழியலாளர், திரு. எஸ். பி . செந்தில்குமார் அவர்கள் எனது
பதிவின் பின்னூட்டம் ஒன்றில் கேட்டிருந்த கேள்வியும் அதற்கான பதிலும்தான் இந்தப் பதிவின் சாரம். இதுவரை நான் எழுதிய பதிவுகளில் என் மனம் விரும்பாத பதிவு எது என்றால் அந்தப் பதிவினைத்தான் சொல்வேன்.
Tuesday, 19 May 2015
ஈறு கெடுவது எப்படி ?: உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்- (6)
மொழியைக்
கற்பிக்கும்போது குறிப்பாக இலக்கண வகுப்புகளில் பல சுருக்கு வழிகள் கடைபிடிக்கப்படுவதுண்டு.
புரிந்துகொள்வதில் மாணவருக்குச் சிரமம் இருக்கும் போதோ ( புரியும்படி ஆசிரியருக்குச்
சொல்லித்தர முடியவில்லை என்பதுதான் இதில் உண்மை ), அரிதான தருணங்களில் ஆசிரியருக்கே
அவ்விடயம் குறித்த தெளிவான புரிதல் இல்லாமல் இருக்கும் போதோ இந்தச் சுருக்குவழிகள்
கை கொடுக்கும்.
அப்படி
ஒரு சுருக்கு வழிதான்,
Saturday, 28 March 2015
காதலிப்பவர்களுக்கு இருக்கவேண்டிய பத்துப் பொருத்தங்கள் – இது சங்க காலம்.
Thursday, 12 March 2015
அவனுக்கு ‘முருகன் ‘ என்பது பெயர்.
குறிச்சொற்கள் :
ஆய்வு,
இலக்கணம்,
சங்க இலக்கியம்,
வாசிப்பு
Monday, 9 February 2015
சுட்டது தமிழ்.
தமிழில்
யார் வேண்டுமானாலும் எந்தத் தவறை எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று நினைத்துத்
தமிழைப் பேசுகிறவர்கள் எழுதுகிறவர்கள் ஒரு புறம் , முன்னோர் இட்டுவைத்த சட்டதிட்டங்களின்
படியே பேசவும் எழுதவும் வேண்டும் என்று சொல்லித் திரியும் சிறுபான்மையினரான மொழிக்காப்பாளர்கள்
மறுபுறம் என்று தன் கடன் “பணி“ செய்து கிடப்பதே என்று இருக்கும் இருதரப்பினரையும் கொண்டு
நம் மொழி இன்னும் இருந்து கொண்டிருக்கிறது.
Wednesday, 28 January 2015
எதுகை மோனை தேவையில்லாத் தமிழ் மரபுக்கவிதைகள்.
| நன்றி-www.heavyquestions.com |
மரபுக்கவிதைகள் என்றாலே எதுகைக்கும் மோனைக்கும்
அலைதல் ஒரு புறம் என்றால், பெரும்பாலான கவிதைகளில் கவிதாசிரியர் அப்படித் தேடிப்பிடித்து இடுகின்ற எதுகை மோனைகள் அடைக்க முடியாத
பெட்டியில் துருத்தித் தெரியும் அழுக்குத் துணி போலக் காட்சியளிப்பதைச் சாதாரண வாசகரால்
கூட உணர முடியும்.
Saturday, 3 January 2015
யாப்புச் சூக்குமம் IV [ விருத்தத் தூண்டில். ]
வலைத்தளம் கொலைக்களமாக மாறும் முன் இந்தத்
தொடர்பதிவை முடித்து விட வேண்டும் என்று தோன்றுகிறது. கம்பன் சொல்லுவானே,
''ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு
பூசை முற்றவு நக்குபு புக்கென
ஆசை பற்றி அறையலுற்றேன்''
என. அப்படி நானும் ஆசை பற்றி அறையலுற்ற இந்த
யாப்புச்சூக்குமத்தின் சாவியை உங்கள் கையில் கொடுத்துவிட்டு, முற்றும் போட்டுவிடலாம்
என்று நினைக்கிறேன்.
( என்ன மணவை ஜேம்ஸ் அய்யா………………….சந்தம்
வண்ணம் எல்லாம் வேணுமா? )
மரபுக் கவிதைகளுக்கும் புதுக்கவிதைகளுக்கும்
உள்ள வித்தியாசம் இந்த ஓசைதான். தமிழின் இந்த ஓசை லயம் மரபுக் கவிதைகளை மனப்பாடம் செய்வித்தது.
அரங்குகளின் கடகட எனப் படிக்கப்படும் போது கைதட்டல் பெற்றுத் தரக் காரணமானது.
இதுவரை இந்த யாப்புச்சூக்குமத்தில் திறந்த
கதவுகளைக் கண்டிருந்த நீங்கள் இனி கண்படும் எந்தக் கதவையும் திறக்கக் கற்றுக் கொள்ள
வேண்டும்.
Thursday, 11 December 2014
யாப்புச் சூக்குமம்-III [ விருத்தத்தின் எலும்புக்கூடு ]
விருத்தத்தின் எலும்புக்கூடு என்னும் இந்தப்பதிவை
படிக்கும்முன் நீங்கள் யாப்புச்சூக்குமம் பற்றிய முதலிரு பதிவுகளைப் படித்திருக்க வேண்டும்.
மரபுக்கவிதைகளைக் கட்டமைத்தல் குறித்த எனது
புரிதல் பற்றியது என்பதால் பொதுவாசகர்களுக்கும் மரபின் நுணுக்கங்களை மரபின் வழியில்
படித்தோருக்கும் இந்தப் பதிவு ஒரு சிறிதும் பயன்படாது என்பதால் இதைக் கடந்துவிடலாம்.
Monday, 24 November 2014
பின்னூட்டம் இடுவோர் கவனத்திற்கு…!
பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுகிறோம், அதற்குத்
தமிழில் இலக்கணம் இருக்கிறதா என்று மணவையார் சென்ற பதிவில் கேட்டிருந்தார். ஒரு பேச்சிற்காய் இருக்கிறது
என்று சொல்லி விட்டுப் பேசாமல் இருந்தால் மீண்டும் எப்பொழுது சொல்வீர்கள் என்று கேட்டு விட்டார். தினமும் பார்க்க வேண்டியவர். இனித் தப்பிக்க முடியாது என்று நினைத்து முதலில், பல
பிரபலப் பதிவர்களின் தளங்களுக்கு உள்ளே போய்ப் பின்னூட்டங்களை மட்டும் படித்துத் தேவையானதை நகலெடுத்து அப்படியே கணினியில் சேமித்துக் கொண்டிருந்தேன். அடுத்த “காப்பி“ வருவதற்குள் இதை முடித்துவிடவேண்டும்.
பதிவர்களின் பெயர்களையோ பதிவுகளையோ, பின்னூட்டங்களையோ இங்குக்
குறிப்பிடாமல், நான் கண்ட அந்தப் பின்னூட்டங்களின் இயல்புகள் இப்படி இருந்தன என்று
பார்த்து அவற்றை ஏதேனும் பொது வகைமையின் கீழ்க்கொண்டு வரமுடியுமா? ஏதேனும் இலக்கணக்
கொள்கைகளை இதற்குப் பொருத்திக் காண முடியுமா என்று பார்ப்பதற்கு ஒரு நாளாயிற்று. நான் பார்த்த பின்னூட்டங்களின் அடிப்டையிலும், எனக்குத் தெரிந்த இலக்கணக்கொள்கையின் அடிப்படையிலுமே இவற்றை ஒழுங்கு படுத்துகிறேன். இந்த வரம்பு தாண்டி எவையேனும் இருக்குமானால் கூடுதல் செய்திகளைக் கூற நமது நண்பர்களும்
ஆசிரியர்களும் இருக்கிறார்களே என்ற நினைப்பில் பொதுமையைப் பகிர்கிறேன்.
Friday, 21 November 2014
அந்தக் காலத்தில் காப்பி இருந்தது.
சமீபத்தில் இணையத்தில் அடுத்தவரின் பதிவை
அப்படியே எடுத்து ஒரு நன்றி கூடச் சொல்லாமல் ஒரு வலைப்பூவையே நடத்திக் கொண்டிருந்தவர்
குறித்து மாறி மாறிச் செய்திகள் வந்துகொண்டிருந்தன. பலரும் தங்களுடைய படைப்புகள் திருடப்பட்டுள்ளனவா
என்று வேகமாய்ப்போய்ப் பார்த்ததுபோல் நானும் பார்த்தேன். அடுத்தடுத்துப் பல பதிவுகளையும்
அவர் தளம் போய்ப்பார்த்துவிட்டு வெளியே வந்து சிலமணி நேரத்தில் மீண்டும் சென்றபோது
அவருடைய தளப்பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருந்தது! அட.. பார்வையாளர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க இப்படியும் ஒரு வழியிருக்கிறதா என்று நான் சற்று வியந்தது உண்மை.
Sunday, 16 November 2014
யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்!
அடுத்த
பதிவு “அந்தக் காலத்தில் காப்பி
இருக்கிறது“என்று சொல்லி விட்டேன். உண்மைதான்.என்ன கொஞ்சம் சூடாக
இருக்கிறது. அது ஆறும் வரை
சும்மா இருக்காமல் நூலொன்றிற்கு உரைபார்க்க உட்கார்ந்தேன். மிகுந்த மலைப்புத்தான். என்ன
செய்வது. புரிவதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே..!
வெண்பா
வகுப்போ முடிந்தது. என் பாவைப் பாடலாம்
என்று எழுதினால் அதுவும் வெண்பா யாப்பில்
மட்டும்தான் வருகிறது இப்போதெல்லாம். இது
என் குருவிற்கு எழுதியதாக வைத்துக் கொள்ளலாம்.
Thursday, 13 November 2014
வெண்பாவில் பட்ட விழுப்புண்கள்.
வெண்பாப்புலி
மேக்குடி நரசிம்மன் அய்யாவின் பாடலில் பிழையிருக்கிறது என்று
கூற யாராயிருந்தாலும் நேர் நிரை பற்றிய
அறிவு மட்டும் போதுமானதாய்
இருக்கும்.
ஆனால் வெண்பா எழுதுவதற்கு வார்த்தைகளைத்
தேடி நொந்த கதை எல்லாருக்கும்
பொதுவானதுதான்.
சென்ற இரு பதிவுகளின் பின்னும்
வெண்பா எழுதிப் பார்த்தவர்களும் பின்னூட்டத்தில்
வந்தவர்களும் சிலரேனும் இருப்பார்கள். வெண்பா அறிந்த பலரும்
ஒன்று இரண்டு என்று இவன்
சொல்லுவது சரியா என்று சரி
பார்த்திருப்பார்கள்!
எழுத முயன்று சொற்களைத் தேடித்
தேடிச் சோர்ந்து போய்,
“சீச்சீ
இந்தப் பழம் புளிக்கும்“ என்று
விட்டவர்களும் சிலர் இருப்பர். தேவையில்லை
எனிலும் தெரிந்து வைத்துக் கொள்வோம் என்று சிலர் இருக்கலாம்.
உங்களில்
மிகப்பலர்க்கும் ஏற்பட்டு இருக்கிற வெறுப்பு
எனக்கும் பலமுறை ஏற்பட்டிருக்கிறது.
வெண்பாவைப்
பிழையாக இப்பொழுதும் நான் எழுதுகிறேன்.
Sunday, 9 November 2014
யாப்புச்சூக்குமம் II – துலங்கும் உருவம்.
இதைத்
தொடரும்முன் என் மதிப்பிற்குரிய முத்துநிலவன் அய்யாவிற்கு நன்றி சொல்லிவிடுகிறேன்.
ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் படித்திருக்கிறேன். உண்மையில் தம் மாணவரின் வளர்ச்சிக்கு உதவுவதும்,
தவறு காணும் போது திருத்திடச் சொல்வதும், அதே நேரம் மாணவர்கள் சோர்ந்து பின்தங்கும் போது கைதூக்கி
விடுவதும், உயரச்சென்று அவன் மறந்து போகும் போதுகூட “இவன் என் மாணவன்“ எனக்கூறி பெருமைபட்டுக்
கொள்வதும் எல்லா ஆசிரியர்களுக்கும் இயல்பானதுதான்.
நான்
அவர் பெருமைப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு உயரே
சென்று விடவில்லை. நான் நன்றி சொல்லக் காரணம் நான் இந்த வலையுலகிற்கு
வர அவர் காரணம் என்பது மட்டுமல்ல. என்னை அறிமுகப்படுத்தி விட்டோம். நம் வேலை முடிந்தது என்று அவர்
இருந்துவிடவில்லை. என் ஒவ்வொரு பதிவிற்கும் சரியென்றும் தவறென்றும் நியாயமான விமர்சனங்களை முன் வைத்தே
இருக்கிறார். முந்தைய யாப்புச்சூக்குமம் என்னும் பதிவை அதிகப்பதிவர்களால் பெரிதும் விரும்பிப் பார்க்கப்படுகின்ற
அவர் தளத்தில் அறிமுகப்படுத்தியதோடல்லாமல் என்தளத்தில் வந்து காணுமாறு சொல்லிவைத்தார்.
என் இலக்கணப் பதிவுகளுக்கு இத்தனை வாசகரை நான் கண்டதில்லை. இதற்கு வரும் பின்னூட்டங்களைக்
கண்டபின்னர்
Wednesday, 5 November 2014
யாப்புச் சூக்குமம்.
ஆசிரியப் பயிற்சியின் போது திருச்சியிலிருந்து
மாயனூருக்குத் தினமும் செல்லும் புகைவண்டிப் பயணங்கள் இப்பொழுது எண்ணினாலும் இனிமையானவை. புகைவண்டி
திருச்சியிலிருந்து புறப்படுவதால் பெட்டி காலியாகவே இருக்கும். எனக்குப்பிடித்தச் சன்னலோர
இருக்கைக்குப் போட்டி இருக்காது. காவிரியும் பச்சைபசேல் வயல்களும் ஓவியம் போல் இருமருங்கிலும்
கிடக்கப் புகைப் பெருமூச்சு விட்டபடி ஓடும் இரும்புக் குதிரையின் சவாரியில் முன்பின்னாய் மேல்கீழாய்ச் சுழலும் தியானானுபவத்தை நினைக்கும் போதெல்லாம் சட்டென
விழுந்துவிடும் மனம்.
பலபல மனிதர்கள்..பலவித அனுபவங்களுடனான இருவருட
இரயில் அனுபவத்தில், மேக்குடி நரசிம்மன் அவர்களால் எனக்கு ஏற்பட்ட அனுபவம்தான் இது. அந்த
வண்டியில் அந்தக்காலத்தில் என்னோடு பயணம் செய்த பலருக்கும் இதே போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கலாம்.
நம் மக்கள் தொகையில் மிகுதியாக உள்ளவர்களைப் போல அவர் ஒரு கவிஞர். அல்லது அப்படி அழைக்கப்பட வேண்டுமென ஆசைப்படுபவர். குறிப்பாய், அந்தப் பெரும்பான்மையுள் சிறுபான்மையாய் இருக்கின்ற மரபுக் கவிஞர். அதிலும் ஆகக் கடினமென்னும்
வெண்பாப்புலி.
Sunday, 26 October 2014
சிதைக்கப்பட்ட சித்திரங்கள்
எட்டாம்
வகுப்பில் எங்கள் தமிழாசிரியர் கண்அறுவை சிகிச்சைக்காய் ஒருமாத காலம் மருத்துவ விடுப்பில் இருந்தார். அவருக்குப் பதிலி ஆசிரியராக
ஒருவர் வந்திருந்தார். தனது சுயவிவரங்களை அவர்
அறிமுகப்படுத்திக் கொண்டதாக நினைவில்லை. அதனால் அவர் பெயர் தெரியவில்லை. முப்பது வயது
இருக்கலாம். தலையை அடிக்கடிக் கோதிக்கொள்ளும் அளவிற்கு நிறைய முடியும் , பேன்ட், இன்
செய்த சர்ட், ஷூ, கேட்டவரை வசீகரிக்கும் குரல் எனப் பார்த்த உடனே என்னைக் கவர்ந்துவிட்டார்.
உண்மையில் அதுவரை தமிழாசிரியரை மட்டுமல்ல எந்த ஆசிரியரையும் அவ்வளவு நேர்த்தியாக உடையுடுத்தி
நான் பார்த்ததில்லை. புறத்தோற்றத்தில் யார் பார்த்தாலும் உடனே மதிப்பு வந்துவிடும்
அவர்மேல்.
Tuesday, 14 October 2014
இரட்டைவால் குரங்கும் இருபதுகால் ஆடும்.
மொழியில் உள்ள ஒரு சில புதிர்களை, விந்தையான விஷயங்களைக்
காணும் போது முதலில் வியப்பு தோன்றும். என்ன சொல்லியிருக்கிறார்கள் அல்லது என்னதான்
சொல்ல வருகிறார்கள் நம்மைக் குழப்ப வேண்டுமென்றே கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டிருப்பார்களோ
இந்தப் புலவர்கள் என்றெல்லாம் நினைத்தாலும் அந்தப் புதிரை அவிழ்க்கும் சூக்குமம் பிடிபட்டுவிட்டால்
தோன்றும்
Subscribe to:
Posts (Atom)




