Friday, 31 July 2015

ஒரு பாடலும் அது பற்றிய படிக்க முடியாத பதிவும்.




‘ஆனந்த யாழை மீட்டுதலுக்கான சில குறிப்புகள்’ என்கிற தலைப்பை இப்பதிவிற்குத் தேர்ந்து வைத்திருந்தேன். இதுவரை ஒரு தொடர்பதிவினை அடுத்தடுத்து இட்டதில்லை. ஆனால் இந்தப்பாடலின் கருத்தோட்டம் தடைபட்டுவிடக் கூடாது என்பதால் தொடர்ந்து இடவேண்டியதாயிற்று. இப்பதிவுடன் அவ்வளவுதான் இப்பாடலின் பொருள் வேட்டை என்னளவில் நிறைவுற்றது.

Tuesday, 28 July 2015

ஒரு பாடலும் சில அர்த்தங்களும்.



மணமாகிச் சில நாட்களிலேயே அவனைப் பிரிய வேண்டிய நிர்பந்தம். அவளுக்கு அவனைப் பிரிய மனமே இல்லை. வாழ்க்கைச் சூழல் அப்படி.. இங்கிருந்து நாம் சேர்க்கும் பொருள் வாய்க்கும் வயிற்றிற்குமே போதாது. மழைதொடங்கும் காலத்திற்குள் நாம் வாழக் கொஞ்சம் பொருள் திரட்டி வந்துவிடுவேன் என்கிறான் அவன். அவளுக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. பொருள் என்ன பெரிய பொருள்? அவனுடன் இருப்பதைவிட வேறென்ன தனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியும்?

Sunday, 26 July 2015

ஒரு பாடலும் சில நினைவுகளும்.


நாம் இரசித்த மிகச்சில பாடல்கள் இறந்தகாலத்தின் அந்தப் பாடலை அனுபவித்த  சுகமான தருணங்களைச் சட்டென மீட்டெடுக்க வல்லவை.
இரை வைக்கப்பட்ட தூண்டிலாய் ஒவ்வொருமுறையும் எங்கிருந்தேனும் வீசப்படும் அவை நம்மைச் சிக்கெனப்பிடித்து இறப்பின் கரைகளில் வீசியெறியும்.

Friday, 24 July 2015

நான்.


என் பால்யத்தின் சிறுபிள்ளைத்தனமான வாசிப்பில் எல்லாவற்றையும் நிறைய அறிந்ததாக எண்ணி, ஏதோ ஒரு பெரிய ஒளிவட்டம் என் தலைக்குப் பின்னே இருப்பதான செருக்கில் ஒரு கிணற்றுத் தவளையில் வெற்றுத் தலைக்கனத்தோடு அலைந்து கொண்டிருந்த காலம் அது.

Thursday, 23 July 2015

இந்த அளவு போதை தரும் சரக்கு டாஸ்மாக்கில் கிடைக்குமா?



குடிப்பது தீங்கானது. தமிழகத்தில் மதுவைத் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்க, திடீரென்று பெரிய போதை தரும் சரக்கைப் பழைய தமிழ் இலக்கியத்தில் இருந்து  கண்டுபிடித்து, ‘இதெல்லாம் அப்பவே நாங்க கண்டுபிடிச்சிட்டோம்’ என்று தோளுயர்த்திச் சொல்லுவதற்காக இந்தப் பதிவை எழுதவில்லை.

Tuesday, 21 July 2015

சமணம் ( 5 ) – தொடக்கம் இல்லை. முடிவு உண்டு. எப்படி?



உலகத்தின் தோற்றத்திற்கு அணுக்கள் ஒன்றிணைந்து அதனோடு, காலம் ஆகாயம் எனுமிவை சேரவேண்டும் என்றும் அதே நேரம் இவையன்றி வேறு சிலவும் வேண்டுமென்பது சமணர் கருத்து என்றும் சமணம் பற்றிய சென்ற பதிவில் முடித்திருந்தோம்.

இப்பதிவு அணுக்கள், காலம் ஆகாயம் என்பதோடு உலகின் தோற்றத்திற்குச் சமணம் சொல்லும் மேலும் இரு கூறுகளைப் பற்றியது. 

Sunday, 19 July 2015

தோசையின் வரலாறு.


ஆம். நாம் சாப்பிடும் தோசையின் வரலாறு தான். எனக்குச் செய்யத் தெரிந்த ஒரே உணவு வகை. இன்று காலை அம்மையுடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது சமையல் பற்றிய பேச்சினிடையே ரொம்பப் பெருமிதமாக ‘எனக்குத் தோசை சுடத்தெரியும்.’ என்று சொல்லிவிட்டேன்.

Saturday, 18 July 2015

தமிழ்ச் சித்திர எழுத்துக்கள் – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (13)



தமிழில் எழுத்துகளே தேவை இல்லை. ஆங்கிலத்தை வைத்தோ அல்லது வேறு சில குறியீடுகளை வைத்தோ தமிழை எழுதியும் படித்தும் கொள்ளலாம் என்கின்ற குரல் மெத்தப் படித்தவரிடையே ஒலித்துக்  கொண்டிருக்கும் போது, நாம் தற்போது எழுதும் இந்தத் தமிழ் நெடுங்கணக்கு அல்லாமல் வெவ்வேறு பயன்பாட்டிற்கென நம்மிடையே இருந்து, இன்று இல்லாமல் போய்விட்ட சில எழுத்துக்களைப் பற்றிப் பகிர்வதே இந்தப் பதிவின் நோக்கம்.

Thursday, 16 July 2015

கொஞ்சம் அருவருப்புத்தான்.


இளகிய மனம் கொண்டவர்கள்  இதனைப் பார்க்க வேண்டாம் என்ற எச்சரிக்கைக் குறிப்புடன் கூடிய காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவற்றைப் பார்க்காமல் நம்மில் சிலர் தவிர்த்திருப்போம். நகைச்சுவை, வீரச்சுவை, காதல், என எத்தனையோ சுவைகளைக் கொஞ்சமாவது இலக்கியத்தில் படித்துக் கடந்திருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்கு ஓர் அருவருப்பு உணர்ச்சியை இதற்கு முன் எந்தப்பாடலும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.

Wednesday, 15 July 2015

காமத்திற்குக் கண் இல்லை என்கிறார்கள் - ஏன்?


பொதுவாக இன்றைய ஊடகங்களில்  பாலியல் சார்ந்த, முறை தவறிய- சமூக மரபுகளுக்கு மாறான உறவுகள் குறித்துச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கான அடிப்படையாகக் குறிப்பிடப்படுவது காமம்.

Monday, 13 July 2015

அம்மணமும் சம்மணமும் – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள். (12)


ஆடையற்ற உடலை அம்மணம் என்பதும்  உட்கார்ந்த நிலையில் காலை ஒன்றன்மேல் ஒன்றாக மடித்திடுவதைச் சம்மணம் என்பதும் நாம் இன்றும் வழங்கும் வழக்கு. சம்மணம் என்பதைச் சம்மணங்கால், சம்மணப் பூட்டு என்றும் வழங்குகிறோம்.

Sunday, 12 July 2015

புதிருக்கு விடை கண்ட கதை.


காளிதாசனைப் பற்றிய கதை எல்லாருக்கும் நினைவிருக்கும். காளிதாசன் எனக் காளியின் தாசனாய் மாறுவதற்கு முன்னால் ஒன்றும் அறியாதவனாய், இளவரசியை மணமுடிக்கப் போய்,  அவள் மௌனமாய்க் கேட்கும் கேள்விகளுக்கு, மனம் போன போக்கில், 1, 2, என விரல்களைக் காட்டிப் பதிலளிக்க, அது தனது கேள்விகளுக்கான தத்துவார்த்தமான பதில் என்று இளவரசி அவனை மணம் முடித்துக் கொள்வாள்.

Saturday, 11 July 2015

மனிதன் என்பவன் மிருகம் ஆகலாம்.


பொருளுக்குச் சுவையூட்டுவது பற்றிய சென்ற பதிவின் தொடர்ச்சியாக அமையும் இந்தப் பதிவிற்கும் இதன் தலைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. முதலில் வருவது கொஞ்சம் தலைப்பிற்குத் தொடர்பில்லாத செய்தி என்பதால் நேரத்தை வீணாக்க விரும்பாதவர்கள் நேராக இதன் இரண்டாம் பகுதிக்குச் சென்றுவிடலாம்.

Friday, 10 July 2015

நீங்கள் கையாளும் சொல்லுக்குச் சுவையூட்டுவது எப்படி என அறிவீர்களா?


பொதுவாக நமது எழுத்துகள் படிக்கப்படவேண்டும் என்றும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் எழுதுகின்ற எல்லாருக்குமே நினைப்பிருக்கும். ஆனால் அவை பரவலான கவனம் பெறாத போதோ, தவிர்க்கப்படும்போதோ ஏன் இப்படி…… என்கிற கேள்வி எழும்.
நாம் சொல்ல நினைப்பதில் விஷயம் ஏதும் இல்லாவிட்டால் நிச்சயமாய் எவ்வளவு நன்றாகச் சொன்னாலும் அது கவனம் பெறாது.
அதே நேரம், சொல்ல வருவதில் விஷயம் இருக்கிறது. ஆனால் சொல்வதில் சுவையில்லாதபோதும் அது உரிய கவனத்தைப் பெறுவதில்லை.

Tuesday, 7 July 2015

சமணம் (4) – கடவுளின் துகள்.


உயிர்கள் எப்படி உருவாயின? உலகத்தைப் படைத்தவர் யார்.. என்றெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்குக் கடவுள் என்று ஒருவன் இருக்கிறான். அவன் நம்மையும் இந்த உலகத்தையும் படைத்தான் என்று சொல்வது  எவ்வளவு எளிதானது...!

இந்த உலகம் எப்படித் தோன்றியது?

கடவுள் படைத்தார்.

உயிர்கள் எப்படித் தோன்றின?

கடவுள் படைத்தார்.

Sunday, 5 July 2015

நான்கு வரியில் சிலப்பதிகாரக் கதை ; உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள்-11



கோவலன் கண்ணகியின் சிலப்பதிகாரம் ஒரு பெருங்காப்பியம். ஆனால் நான்கு வரிகளில் அச்சிலம்பின் பெரும்பகுதியும் சிலப்பதிகாரத்தின் வினைக் கோட்பாடும் கூறப்பட்டிருந்தால் அது  ஆச்சரியம் தரக்கூடிய செய்திதானே?

Friday, 3 July 2015

சமணம்-(3): இந்த உலகம் எப்படித் தோன்றியது;எப்படி அழியும்?


பெரிய விளையாட்டரங்கத்தைச் சுற்றி ஓடுவதைப் பார்த்திருப்போம். அம்மைதானத்தை ஒரு சுற்று சுற்றுவது என்பது, எங்கு ஓடத்தொடங்கினோமோ அங்கு வந்து முடிவது என்பதுதானே? 

Wednesday, 1 July 2015

ஆதலினால் காதல் சுகம்.


சின்ன விழிக்குருவி செல்லச் சிறகசைக்கத்
தின்ன உயிர்கொடுத்துத் தீர்வதனால் – கன்னமிட்டுப்