‘ஆனந்த
யாழை மீட்டுதலுக்கான சில குறிப்புகள்’ என்கிற தலைப்பை இப்பதிவிற்குத் தேர்ந்து வைத்திருந்தேன்.
இதுவரை ஒரு தொடர்பதிவினை அடுத்தடுத்து இட்டதில்லை. ஆனால் இந்தப்பாடலின் கருத்தோட்டம்
தடைபட்டுவிடக் கூடாது என்பதால் தொடர்ந்து இடவேண்டியதாயிற்று. இப்பதிவுடன் அவ்வளவுதான்
இப்பாடலின் பொருள் வேட்டை என்னளவில் நிறைவுற்றது.
Pages
▼
Friday, 31 July 2015
Tuesday, 28 July 2015
ஒரு பாடலும் சில அர்த்தங்களும்.
மணமாகிச் சில நாட்களிலேயே அவனைப் பிரிய வேண்டிய நிர்பந்தம். அவளுக்கு அவனைப் பிரிய மனமே இல்லை. வாழ்க்கைச் சூழல் அப்படி.. இங்கிருந்து நாம் சேர்க்கும் பொருள் வாய்க்கும் வயிற்றிற்குமே போதாது. மழைதொடங்கும் காலத்திற்குள் நாம் வாழக் கொஞ்சம் பொருள் திரட்டி வந்துவிடுவேன் என்கிறான் அவன். அவளுக்கு அதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை. பொருள் என்ன பெரிய பொருள்? அவனுடன் இருப்பதைவிட வேறென்ன தனக்கு மகிழ்ச்சியைத் தந்துவிட முடியும்?
Sunday, 26 July 2015
Friday, 24 July 2015
Thursday, 23 July 2015
Tuesday, 21 July 2015
சமணம் ( 5 ) – தொடக்கம் இல்லை. முடிவு உண்டு. எப்படி?
உலகத்தின் தோற்றத்திற்கு அணுக்கள் ஒன்றிணைந்து
அதனோடு, காலம் ஆகாயம் எனுமிவை சேரவேண்டும் என்றும் அதே நேரம் இவையன்றி வேறு சிலவும்
வேண்டுமென்பது சமணர் கருத்து என்றும் சமணம் பற்றிய சென்ற பதிவில் முடித்திருந்தோம்.
இப்பதிவு அணுக்கள், காலம் ஆகாயம்
என்பதோடு உலகின் தோற்றத்திற்குச் சமணம் சொல்லும் மேலும் இரு கூறுகளைப் பற்றியது.
Sunday, 19 July 2015
Saturday, 18 July 2015
தமிழ்ச் சித்திர எழுத்துக்கள் – உங்கள் தமிழைத் தெரிந்து கொள்ளுங்கள் (13)
தமிழில்
எழுத்துகளே தேவை இல்லை. ஆங்கிலத்தை வைத்தோ அல்லது வேறு சில குறியீடுகளை வைத்தோ தமிழை
எழுதியும் படித்தும் கொள்ளலாம் என்கின்ற குரல் மெத்தப் படித்தவரிடையே ஒலித்துக் கொண்டிருக்கும் போது, நாம் தற்போது எழுதும் இந்தத் தமிழ் நெடுங்கணக்கு
அல்லாமல் வெவ்வேறு பயன்பாட்டிற்கென நம்மிடையே இருந்து, இன்று இல்லாமல் போய்விட்ட சில
எழுத்துக்களைப் பற்றிப் பகிர்வதே இந்தப் பதிவின் நோக்கம்.
Thursday, 16 July 2015
கொஞ்சம் அருவருப்புத்தான்.
இளகிய
மனம் கொண்டவர்கள் இதனைப் பார்க்க வேண்டாம்
என்ற எச்சரிக்கைக் குறிப்புடன் கூடிய காட்சிகளை நாம் பார்த்திருப்போம். அப்படிப்பட்டவற்றைப்
பார்க்காமல் நம்மில் சிலர் தவிர்த்திருப்போம். நகைச்சுவை, வீரச்சுவை, காதல், என எத்தனையோ சுவைகளைக்
கொஞ்சமாவது இலக்கியத்தில் படித்துக் கடந்திருக்கிறேன். ஆனால் இந்த அளவிற்கு ஓர் அருவருப்பு
உணர்ச்சியை இதற்கு முன் எந்தப்பாடலும் என்னுள் ஏற்படுத்தியதில்லை.
Wednesday, 15 July 2015
Monday, 13 July 2015
Sunday, 12 July 2015
புதிருக்கு விடை கண்ட கதை.
காளிதாசனைப்
பற்றிய கதை எல்லாருக்கும் நினைவிருக்கும். காளிதாசன் எனக் காளியின் தாசனாய் மாறுவதற்கு
முன்னால் ஒன்றும் அறியாதவனாய், இளவரசியை மணமுடிக்கப் போய், அவள் மௌனமாய்க் கேட்கும் கேள்விகளுக்கு, மனம் போன
போக்கில், 1, 2, என விரல்களைக் காட்டிப் பதிலளிக்க, அது தனது கேள்விகளுக்கான தத்துவார்த்தமான
பதில் என்று இளவரசி அவனை மணம் முடித்துக் கொள்வாள்.
Saturday, 11 July 2015
Friday, 10 July 2015
நீங்கள் கையாளும் சொல்லுக்குச் சுவையூட்டுவது எப்படி என அறிவீர்களா?
பொதுவாக
நமது எழுத்துகள் படிக்கப்படவேண்டும் என்றும் கவனிக்கப்பட வேண்டும் என்றும் எழுதுகின்ற
எல்லாருக்குமே நினைப்பிருக்கும். ஆனால் அவை பரவலான கவனம் பெறாத போதோ, தவிர்க்கப்படும்போதோ
ஏன் இப்படி…… என்கிற கேள்வி எழும்.
நாம்
சொல்ல நினைப்பதில் விஷயம் ஏதும் இல்லாவிட்டால் நிச்சயமாய் எவ்வளவு நன்றாகச் சொன்னாலும்
அது கவனம் பெறாது.
அதே நேரம்,
சொல்ல வருவதில் விஷயம் இருக்கிறது. ஆனால் சொல்வதில் சுவையில்லாதபோதும் அது உரிய கவனத்தைப்
பெறுவதில்லை.