Wednesday, 10 May 2017

ஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?



மனிதன் கடவுளைப் படைக்க வேண்டிய கட்டாயம் ஏன் நேர்ந்தது, அல்லது கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதற்கானப் பதிலை, பிறப்பு – இறப்பு என்னும் பெரும் புதிரின் நடுவே  இன்பதுன்பங்கள் ஏன் வருகின்றன என அறியாமல் மாறிமாறி உழன்று, முடிந்து போகின்ற வாழ்வு பற்றிய அச்சுறுத்தலில் இருந்து நாம் பெறமுடியும்.

Saturday, 6 May 2017

அந்தக்கால ஆண்களின் சிகை அலங்காரங்கள்.


இது என்னடா முடி பற்றிய ஆராய்ச்சியா என்று கேட்டால் ஆம் அது பற்றியும் ஆராயத் தமிழில் நிறைய இடமுண்டு என்பதுதான் பதில்.

Wednesday, 3 May 2017

ஆண்மை இல்லாதவன்: பழந்தமிழக ஜல்லிக்கட்டுக் காட்சிகள்-1.3


பல மாதங்களுக்கு முன் எழுதத் தொடங்கிய ஒரு தொடர்பதிவை, நீண்ட இடைவெளிக்கும் வேறுவேறு பதிவுகளுக்கும் பின் தொடரும்போது சில சங்கடங்கள் இருக்கின்றன.

Monday, 1 May 2017

அட! இப்படியும் எழுதலாமா?


தேர்வினைக் கண்காணித்தல் என்பது சற்றுச் சுமையான அனுபவம்தான். மூன்று மணி நேரம் போவது மாணவர்க்குத் தெரியாது. ஆனால், கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியருக்கு மூன்றுமணி நேரம் நின்று கொண்டும் நடந்து கொண்டும் இருப்பது சற்றுச் சிரமமான பணிதான்.

Sunday, 30 April 2017

ஆசீவகம் – 3 : நெருப்பினுள் இருக்கலாம்!


ஆசீவகர் தாழிகளுக்குள் அமர்ந்து தவம் செய்வது  பற்றி, ஆசீவகம் – 2: தாழியுள் கொதிக்கும் உணர்வுகள் என்னும் பதிவில் கண்டோம். அப்பதிவின் இறுதி, ஆசீவகர் மேற்கொண்ட நான்குவகைத் தவமுயற்சிகள் எத்தகு கொடுமையானவை என்பது குறித்து அடுத்த பதிவில் காணலாம் என்பதாக முடிந்திருந்தது.

Friday, 28 April 2017

இருநூறாவது பதிவு – யார் இந்த ஊமைக்கனவுகள்?


வலைத்தளம் ஓர் ஊமையைப் பேச வைத்திருக்கிறது. தனிமை அடைகாத்த கனத்த கூட்டினுள் வெற்று வாசிப்புடன் முடங்கிக் கிடந்த என்னாலும் எழுத முடிகிறது என்கிற நம்பிக்கையை, நானெழுதுவதையும் வாசிக்கிறார்கள் என்ற மகிழ்வை இந்த வலையுலகின் வழி நான் அடைந்திருக்கிறேன்.

Thursday, 13 April 2017

ஒரு கொடூர மரணம்!


கொன்ற ஒருவரின் சடலத்தை எவ்வளவு சிதைக்க முடியும்? அப்படிச் சிதைக்க வேண்டுமானால் அவர்மேல் எவ்வளவு வெறி இருக்கும்?

Tuesday, 11 April 2017

குடுமியான்மலை – சிரிக்கும் கல்வெட்டு.


குடுமியான்மலை இசைக்கல்வெட்டுகள் குறித்துக் கேள்விப்பட்டிப்பீர்கள். அங்கிருக்கும் ஈசனுக்குக் குடுமி வந்தது பற்றியும் புராணக்கதை உண்டு. ஆனால் இந்தப் பதிவு, அங்கிருந்து சிரிக்கும் கல்வெட்டுப் பற்றியது.

Sunday, 9 April 2017

கொலை தூண்டும் கற்கள்!



ஒருவரைக் கொல்லவோ அல்லது தன்னுயிரைப் போக்கிக்கொள்ளவோ சாதாரண நிலையில் மனிதன் விரும்புவதில்லை. ஆனால் சில சூழ்நிலைகளில் இச்செயல்களை மனிதன் மேற்கொள்ள நேர்கிறது.

Wednesday, 5 April 2017

இது நியாயமா?


வகுப்புகள் முடிவடைந்து ஆண்டு இறுதித்தேர்வுக்கு மாணவர்களை அனுப்பும் நிகழ்வு நேற்று. பிரச்சினைகள் நிறைந்த வகுப்பு அது. மாணவர்களின் அளவுக்கு மீறிய முதிர்ச்சி, அதற்கான அவர்களின் பாவனைகள், பொறுத்துக் கொள்ள முடியாத அவர்தம் பழக்க வழக்கங்கள்..! வகுப்பறைக்குள் நுழைந்தாலே ஏதேனும் பஞ்சாயத்து இல்லாமல் தொடங்கியதில்லை.