Monday, 30 June 2014
Friday, 27 June 2014
Monday, 23 June 2014
Friday, 20 June 2014
Sunday, 15 June 2014
Saturday, 14 June 2014
Thursday, 12 June 2014
Tuesday, 10 June 2014
Monday, 9 June 2014
முப்பாற்புள்ளி
Saturday, 7 June 2014
உன் பேர் சொல்லும் நேரம் !
எங்கேனும் உன்பேரைக் கண்டால்
எவரேனும் உன்பேரைச் சொன்னால்
எழுத்திற்கும் வலிக்காமல் ஏனோ
என்னுள்’உன் பேர்சொல்லிப் பார்ப்பேன்!
கோடையில் சாரலின் வாசம்;
குளிர்ந்திடுந் தென்றலும் வீசும்,
என்னிலுன் பேர்சொல்லும் தருணம்,
என்னுடல் உயிர்தன்னை உணரும்!
ஒருகோடி வெண்ணிலா பெய்த
ஒளிப்பாலில் அமுதூற்றிச் செய்த,
உன்பெயர் நான்காணும் நேரம்,
உனைக்காணா கண்களுள் ஈரம்!
சூரியப் பொம்மைக்கும் உன்பேர்,
சூல்கொண்ட நிலவுக்கும் உன்பேர்,
சூட்டும்’என் மனதிற்குள் எரியும்,
சூனியம் உனக்கென்று புரியும்?
காற்றோர்நாள் சொல்லிற்(று) உன்பேர் !
கடலெங்கும் முழங்கிற்(று) உன்பேர்!
கடல்கூடி மேகப்பெண் பெற்ற
மழைப்பிள்ளை சொல்லிற்(று) உன்பேர்!
கண்ணாடி வானத்தில் நீயென்
கண்ணுக்குத் தெரிகின்றாய் இங்கே!
காலத்தைக் கழுவேற்றிக் காதல்
கைகொட்டிச் சிரித்தாடும் பார்’பார்!!
Friday, 6 June 2014
உடம்பொடு புணர்த்தல்
எல்லாருக்கும்
வணக்கங்க!
இலக்கணமின்னாலே
எட்டுகாத தூரம் தெறிச்சு ஓடுற உங்கள மாதிரி ஒருத்தன்தாங்க நானும்...! இலக்கணம் படிச்சா
நாம மொழியைப் பேசுறோம்? எழுதுறோம்? அதெல்லாம் நமக்கெதுக்குன்னு பள்ளிக்கூடத்தில படிக்கும் போது சிரமப்பட்டு உயிர்மெய்,
ஆய்தம், குற்றியலுகரம், லிகரமின்னு 2 மதிப்பெண் வாங்கிறதுக்காக இதையெல்லாம் மனப்பாடம்
பண்ணதோட சரி!
Thursday, 5 June 2014
Tuesday, 3 June 2014
Monday, 2 June 2014
நான் அறிவேன்!
வெட்ட வெளியிடைப் பொட்டல் நிலம்படு
ஒற்றைப் பனைமரத்தில் - நீ
இட்ட அமுதினைத் தொட்டு ருசித்திடாப்
பட்டினிக் கூடுகளில் - உனை
Subscribe to:
Posts (Atom)