வித்தின் அகத்துறை
வீரியமே! – சிறை
விட்டுப் புறம்வருக! – தடை
எத்திப் புறப்படும்
ஏறெனவே – புகழ்
ஏட்டில் இடம்பெறுக! – வெறும்
சொத்தைக் கதையினில்
சோம்புதலை – விதி
சொல்லி முடங்குதலை – தலை
கொத்திச் சிதைத்துக் குழியிற் புதைத்துக்
கொள்கைக் கொடிநடுக!
அஞ்சு பகையழி ஆயுதமே! – அறம்
ஆண்ட எழில்மரபே! – மது
கெஞ்சிக் குடித்துக் கிடப்பதுவோ – இடர்
கேட்டுக் கழிவறையுள்? – சுவை
நஞ்சு வளர்முக மூடிகளின் – கால்
நக்கிடு பேடிகளின் - அரண்
எஞ்சல் இலாமல் இடித்துத் தகர்க்க
எண்ணும் படைதிரள்க!
சங்க மொழிக்குள சாளரமே! – உன்
சாபத் தளைகளைப்பார்! – தினம்
மங்கு புகழ்வளர் மாமருந்தே! – உனில்
மண்டு களைகளைத்தீர்! – முடக்
கங்கு லறுத்திடுங் காவியமே! – உயர்
கல்வித் திறப்பெருக்கால் - நீ
எங்குந் திரி!பொருள் ஈட்டு! வளம்படை!
எங்கள் தமிழென்று சொல்!
பாவகை - சிந்து.
உறுதி மொழி.
1.“எங்கள்தமிழென்றுசொல் ” என்னுந் தலைப்பில், மரபுக்கவிதை வகைமையின் கீழ் எழுதப்பெற்றஇப்படைப்பு, எனது சொந்தப்படைப்பே என உறுதி அளிக்கிறேன்.
2. இப்படைப்பு,“வலைப்பதிவர் திருவிழா2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம்நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்2015“ க்காகவே எழுதப்பட்டது என உறுதிஅளிக்கிறேன்.
(3) இதற்கு முன் வெளியான படைப்பன்று எனவும் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ்எதிலும் வெளிவராது எனவும் உறுதி அளிக்கிறேன்.
பட உதவி - நன்றி https://encrypted-tbn2.gstatic.com/images
Tweet |
அன்புள்ள அய்யா,
ReplyDeleteசத்தின் சரித்திரக் காவியமே -தமிழ்ப்
பாட்டில் வடித்துவைத் தாயே ஓவியமே!
போட்டியில் வெல்க! போர்ப்படைத் தமிழால்!
த.ம.2
நன்றி ஐயா.
Deleteஉந்தும் உணர்வுடன் ஓர்கவி பாடினையே!
ReplyDeleteசிந்தெனத் தந்தனை தேன்!
ஆஹா..! அருமையோ அருமை ஐயா!
வெற்றி கிட்டாமலா போகும் உங்களுக்கு!
வாழ்த்துக்கள் ஐயா!
நன்றி சகோ.
Deleteஆஹா... எங்கெங்கு சென்றாலும் போட்டிப் படைப்புக்கள்...
ReplyDeleteஅண்ணா கவிதை அருமை... வெற்றிக்கனி தங்களுக்கே...
வாழ்த்துக்கள்.
நன்றி ஐயா.
Deleteஎத்தனை உணர்வுகளோடு தன்மானம் தழைக்க பிறந்த இக்கவிதை
ReplyDeleteசொல்கிறது பிழைக்க வழி ஆக்ரோஷம் வரும்படியாய்.
இதுவும் வெற்றிக்கே நன்றி ! வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
ஆஹா! இளைஞர்கள் வீறு கொண்டு எழுவது திண்ணம்..
ReplyDeleteவெற்றி பெற (சொல்லணுமா என்ன, வெற்றி உங்களுக்குத்தான்) வாழ்த்துகள் அண்ணா.
நன்றி சகோ
Deleteஅருமை. வெற்றி பெற வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி ஸ்ரீ
Deleteஅருமை
ReplyDeleteஅருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
தம +1
நன்றி ஐயா.
Deleteவணக்கம் ஐயா,
ReplyDeleteஎழுச்சிமிகு பா வரிகள்,
வாழ்த்துக்கள், இன்னும் எழுதுங்கள் ஐயா,
நன்றி.
நன்றி பேராசிரியரே.
Deleteஎங்கள் தமிழென்று சங்கே முழங்கு! என்று பாடத்தோன்றிய வரிகள்.
ReplyDeleteஎங்கும் திரி பொருள் ஈட்டு
எங்கள் தமிழென்று சொல்...சூப்பர்.
வாழ்த்துக்கள் ஆசிரியரே.
நன்றி பாவலரே!
Deleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteபின்னியெடுக்கிறீர்கள் ஐயா! நம் மைதிலி சகா அவர்கள் கூறுவது போல இணையத் தமிழுலகும் முதன்மை அச்சு ஊடகங்களுக்கு நிகரான இடத்தைப் பெற்றால் தங்களுடைய இத்தகைய எழுச்சியூட்டும் பாடல்கள், அந்தக் காலத்தில் பாரதியார் பாடல்கள் இந்திய விடுதலை உணர்வை இளைஞர்களிடம் வளர்த்தது போல இன்றைய இளைஞர்களிடத்தில் தமிழ் விடுதலை உணர்வை ஊட்டும்! அந்தக் காலம் விரைவில் வர விரும்புகிறேன்!
ReplyDeleteதாங்கள் என்மேல் கொண்ட மிகுமதிப்பிற்கு நன்றி ஐயா.
Deleteஅழகான வரிகளில் தமிழின் இனிமையை சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteவெற்றிக்கு வாழ்த்துக்கள்!
த ம 12
நன்றி ஐயா.
Deleteஅஞ்சு பகையழி ஆயுதமே! – அறம்
ReplyDeleteஆண்ட எழில்மரபே! – மது
கெஞ்சிக் குடித்துக் கிடப்பதுவோ – இடர்
கேட்டுக் கழிவறையுள்? அருமை அருமை! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!
நன்றி சகோ.
Deleteஅட்டகாசச் சிந்து!
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteநன்றி ஐயா.
ReplyDeleteநன்றி ஐயா.
ReplyDelete"மது
ReplyDeleteகெஞ்சிக் குடித்துக் கிடப்பதுவோ – இடர்
கேட்டுக் கழிவறையுள்?"ஆகா செறிவான,அடர்த்தியான வரிகள்..!
" முடக்
கங்கு லறுத்திடுங் காவியமே! – உயர்
கல்வித் திறப்பெருக்கால் - நீ
எங்குந் திரி!பொருள் ஈட்டு! வளம்படை!
எங்கள் தமிழென்று சொல்!".....நெருப்பு வரிகள் அய்யா!
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்..! பரிசு நிச்சயம்.! வாழ்த்துகள்!
தங்களின் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றி ஐயா
Delete
ReplyDeleteவணக்கம்!
சிந்துக் கவிபாடிச் செந்தேன் குடமளித்தீர்
சிந்தை குளிரும் செழித்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
செழிக்க உரம்பாய்ச்சும் செந்தேன் குறளென்
Deleteவிழிக்குள் செலுத்தும் வியப்பு
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா