( ஒரேயடியா சீரியஸா போய்க்கொண்டிருந்தா எப்படி…… என்பதால் இறந்தகாலத்தில் இருந்தெழும் இந்த இடைநிரப்பிப் பதிவுகள்…! )
களிகொண்டு துள்ளும் கயல்வண் டிரண்டும்
கணையொன்றில் என்றன் நிழலை
வெளிகொண்டு வந்து வெறிகொண்ட அன்பு
உளிகொண்டு கொண்ட உருமாற்றி னாலும்
உடையாமல் கொத்தும் உணர்வால்
தெளிவுண்டு காதல் தினம்தின்னக் காலத்
திருவோடுன் வாசல்
அருகே!
தசைவெந் துலர்ந்து தணல்மீது வேகும்
தவிப்பாகு மிந்தத்
தனிமை!
இசைகொன் றெழுந்த இரும்பான சொற்கள்
இடியாக வந்து
நொடியும்
விசையாக மோதும்! விழிமூடும் போதும்
விரிகின்ற உன்றன்
நகையால்
அசைகின்ற தீபம் அதிலாகும் என்னை
அறியாது பொய்மை
உலகே!
உறைகின்ற தீயை உள்ளத்தில் பூட்டி
ஒளிப்பஞ்சு
பூக்கள் உதிர்க்கும்!
மறைகின்ற மாலை மனம்கட்டிச் சேர்த்து
மறுக்குமுன்
நெஞ்சில் பதிக்கும்!
இறையென்ற போதும் எனக்கில்லை இன்பம்
இல்லாத உன்னில்
கிடைக்கும்!
முறைக்கின்ற பொய்யில் முகம்பூசும் கள்ளம்
மோகித்தே
மூழ்கிக் கிடக்கும்!!
படம் -- நன்றி https://encrypted-tbn1.gstatic.com/
Tweet |
வார்த்தை ஜாலம் அருமை கவிஞரே...
ReplyDeleteதமிழ் மணம் 2
நெடுநாட்களுக்குப் பின் நண்பரின் வருகை..!
Deleteவருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!
நெடுநாட்கள் இதை நான் அல்லவா சொல்லவேண்டும் கவிஞரே...
Deleteஇந்தப் பதிவு மட்டும் சீரியசாக இல்லையா ஐயா.?காதல் கவிதைபோல் தெரிகிறது. இதை நீங்கள் யாருக்காவது அனுப்பி இருக்கிறீர்களா? கூடவே பதவுரை பொழிப்புரை அனுப்பி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தலையைப் பிய்த்துக் கொள்வார்கள். பொதுவாகவே காதலிகள் ‘’ நம்மைப்”போல் அறிவுள்ளவர்கள் அல்ல. அப்படி இருப்பதும் நல்லதல்ல. இள வயதில் எழுத்துக்கள் எல்லாம் காதல் வசப்பட்டுத்தான் இருக்கும்
ReplyDeleteஅழைப்பினை ஏற்று வந்து வெளிப்படையான கருத்தினைத் தந்தமைக்கு நன்றி ஜி.எம்.பி. சார்..!
Deleteயாருக்கும் அனுப்பியதில்லை.
நல்லவேளை அனுப்பி எதுவும் புரியாமல் பதவுரை பொழிப்புரை வேண்டி தமிழாசிரியர் யாரிடமாவது கொடுத்திருந்தால் என்பாடு திண்டாட்டமாய்ப் போயிருக்கும்.....‘!!!!
மறைக்கப்பட்டதிலும் நன்மை இருந்திருக்கிறது. :))
தங்களின் வருகைக்கும் நேர்படச் சொன்ன கருத்திற்கும் மிக்க நன்றி!!!
வணக்கம்
ReplyDeleteஐயா
சொல்ல வார்த்தைகள் இல்லை மிக அருமையாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி ஐயா
பாடு பொருள் பற்றி சொல்லிய நடை சிறப்பு.த.ம3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன் தங்களின் தொடர்வருகைக்கும் தாங்கள் அளிக்கும் ஊக்கத்திற்கும்!!!
Deleteமறுக்காது காலம் மகிழ்வோடு ஏற்கும்
ReplyDeleteமறைத்தாலும் பூக்கள் மணக்குமே தோட்டத்தில்
கோர்த்திட்ட வார்த்தைகள் இன்னமுதம் ஈந்திடும்
பார்வையால் பாடிய பாட்டு.
கயல்வண்டிரண்டும் ...முறைக்கின்ற பொய்யில் முகம்பூசும் கள்ளம் ஆஹா என்னே வர்ணனை.
““திருவோடு““ பொருள் மயங்கிக் கிடக்கிறது என நினைக்கிறேன்.
Deleteதங்களின் வருகைக்கும் ரசனைக்கும் நன்றிகள்!
அன்புள்ள அய்யா,
ReplyDeleteஅழகாக சந்தத்தில் பாடிய கவிதை அருமை...
காதலைத் தின்னத் திருவோடு ஏந்தும் காலம்!!!!!
களியாட்டம் போடும் கவிதை வண்டு
கனியாகி விட்ட செண்டு
தளிராட்டம் போடத் தயங்கா துந்தன்
தவிப்பாலே செய்த கவிப்பா
அளித்தாயே வாழ்க்கை அறத்தால் சிறப்பா
அடைந்தாயே களிப்பா வுண்டு
ஒளிக்குமுன் வாசல் திருவோட்டை ஏந்தி
உயிர்க்காதல் வேண்டும் காலம் ...!
-நன்றி.
த.ம. 5.
வாருங்கள் அய்யா!
Deleteஉங்களின் பாடல் மறுமொழிக்கு மிக்க நன்றி..!!
அவள் வாசலில் காதலைப் பெற வேண்டி காலம் திருவோட்டுடன் காத்திருக்கும் என்னும் பொருளை உணர்ந்து சுட்டியமைக்கு நன்றி!
வழக்கமா போடுற சீரியஸ் பதிவுகளையே போடுங்க ,இந்த மர மண்டைக்கு பாதியாவது புரியும் :)
ReplyDeleteசீரியஸாக எழுதக் கூடாது என நினைத்து இப்படி ஆவதைத்தான் சீரியஸ் காமடி என்கிறார்களோ பகவானே:))
Deleteஉங்கள் பின்னூட்டத்திலும் உங்களின் முத்திரையைப் பதித்து விடுகிறீர்கள்.
ஹ ஹ ஹா!
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
அருமை...
ReplyDeleteஅருமையான வரிகள்.
வருகைக்கும் ரசிப்பிற்கும் நன்றி அய்யா!
Deleteஇசைகொன் றெழுந்து இரும்பான சொற்கள்
ReplyDeleteஇடியாக வந்து நொடியும்
விசையாக மோதும்! விழிமூடும் போதும்
விரிகின்ற உன்றன் நகையால்
அசைகின்ற தீபம் அதிலாகும் என்னை
அறியாது பொய்மை உலகே!//
வரிகள் ....என்ன சொல்ல ஆசானே! வார்த்தைகள் இல்லை ஆசானே! அருமை என்று மட்டும் சொல்லிச் செல்ல மனமில்லை ஆனால் விவரிக்கும் அளவிற்கு அறிவும் இல்லை...
மிகவும் ரசித்தோம்....(ரசிக்க மட்டுமே தெரியும். மொழியையும், அதன் அர்த்தத்தையும்..என்ன பா என்றெல்லாம் வகைப்படுத்தி ஆராயத் தெரியாது ஆசானே!)
வணக்கம் ஆசானே..!
Deleteவிவரிக்க வேண்டியதே இல்லை.
உணர்தல்..... அது போதுமானது...!
நான் வேண்டிய உணர்வை இந்த எழுத்துகள் உங்களுக்குக் கடத்தியதென்றால் அதை விடப் பெரிதென்ன..?
உங்களின் வருகைக்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி!
ஆஹா ..இப்படி ஒரு அழகான விருத்தப்பாவினை உடனும் எழுத
ReplyDeleteமுயற்சிக்க வேண்டும் என்கிறது என் மனம் அருமை ! மிக்க நன்றி
சகோதரா பகிர்வுக்கு .
எழுதுங்கள் சகோ..!
Deleteவடிவம் பிடித்திருந்தால் நிச்சயம் எழுதிப் பாருங்கள்.
மரபின் வடிவம் என்பது அப்படிப் பெறுவதும் தொடர்வதும் தானே..!!!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
ஆஆசானே னேற்று இட்டப் பின்னூட்டக் கருத்து எங்கு போயிற்று?
ReplyDeleteவெளிகொண்டு வந்து வெறிகொண்ட அன்பு
வினையாலே என்னை இறுக்கி
உளிகொண்டு கொண்ட உருமாற்றி னாலும்
உடையாமல் கொத்தும் உணர்வால்
தெளிவுண்டு காதல் தினம்தின்னக் காலத்
திருவோடுன் வாசல் அருகே!//
வார்த்தைகள் இல்லை ஆசானே! என்ன சொல்ல?!! இதன் கருத்தை ஆராய்ந்து சொல்லவோ, இல்லைக்கவிதையை ஆராய்ந்து என்ன பா வகையைச் சேரும் என்று சொல்லும் அளவிற்கோ எங்களுக்கு அறிவு இல்லையே! எனவே மிக அருமையான வரிகள் என்று சொல்லிச் செல்கின்றோம்...ஆனால் சோகமான வரிகள்! காத்திருக்கின்றீர்களோ?! திருவோடு ஏந்தி?! மறைத்ததால் விடை கிடைக்காமல் போனதே!
ஆராய்ச்சி எதற்கு ஆசானே...
Deleteஒரு வாசிப்பில் இதன் வரிகள் உள்ளார்ந்த ஓர் அனுபவத்தைத் தோற்றுவித்தால் போதுமானவை.
எழுதுதலின் பகிர்தலின் பயனை அவை பெற்றுவிட்டன என்றே நினைக்கிறேன்.
மிக்க நன்றி!
மீண்டும் மீண்டும் வாசிக்க அர்த்தம் புரிகின்றதோ..அஹ்ஹஹ நேற்று இட்டக் கருத்திற்கும், இன்று இட்டக் கருத்திற்கும் வித்தியாசம் இருக்கும் என்று தோன்றுகின்றது.....ம்ம்ம்
ReplyDeleteஹ ஹ ஹா
Deleteநன்றி ஆசானே...!
தொடர்வதற்கு!
ஆசானே, என்னுடைய அறிவுக்கு இது காதல் கவிதை மாதிரி தான் தெரிகிறது. இந்த கவிதையை படித்துக்கொண்டு வரும்போது, ஜி.எம் ஐயாவிற்கு ஏற்பட்ட சந்தேகம் தான் எனக்குள் எழுந்தது. (இந்த கவிதையை யாருக்காவது அனுப்பியிருப்பீர்களா என்று!) பதிலையும் படித்து விட்டேன்.
ReplyDeleteவாருங்கள் அய்யா!
Deleteநெடுநாளாயிற்று..!
தங்களின் தமிழ்ப்பணிகள் எம்மட்டுள...?
காதல் கவிதை மாதிரியாவது தெரிந்தததே.......!!!!!
ஹ ஹ ஹா!!!!
உன்மையில் ஒரு மாறுதலுக்காக, எழுதியதைப் பகிரப்போய் அது ஏமாறுதலாகி வி்ட்டது நகைமுரண்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!!!
பல பாடல்கள் நினைவிற்கு வருகிறது... தனி பதிவே போட வேண்டி வரும்...!
ReplyDeleteநேரம் கிடைப்பின் :-
நிலவே... மலரே... (http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Moon-Blossom.html)
கருத்துரையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்... நன்றி...
வாருங்கள் டி.டி. சார்.
Deleteஎளிமையின் சாத்தியங்களுக்காக இப்பதிவோடு தொடர்புடைய உங்கள் நினைவில் படும் பாடல்களை அறியத்தர வேண்டுகிறேன்.
தனிப்பதிவெனில் தனிப்பதிவாய்...!
பின்னூட்டத்தெனில் பின்னூட்டமாய்..!
நேரமிருக்கும் போது.....!
காத்திருக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
சொல் விளையாட்டு
ReplyDeleteஅருமை நண்பரே
நன்றி
தம 12
வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!
Deleteசந்தக் கவிதை சிந்தையில் தங்க
ReplyDeleteவந்திட வார்த்தைகள் வரிகளாய் பொங்க
தந்தது கண்டேன் தமிழ்ச்சுவை உண்டேன்
எந்தனை மறந்தேன் இன்பத்தில் பறந்தேன்
பாவதை எழுத பைந்தமிழ் சொற்களும்
ஏவலர் போல எதிர்வர வரிகளில்
ஆவலாய் படித்திட அனைவரும் என்போல்
காவல நீரே கவிதையும் பேரே!
தங்களின் அன்பினுக்கும் அழகிய கவிதைக்கும் நன்றி அய்யா!!
Delete‘களி கொண்டு துள்ளும் கயல் வண்டிரண்டு,’
ReplyDelete‘விழி மூடும் போதும், விரிகின்ற உன்றன் நகை’
‘காதல் தினம் தின்னத் திருவோடு உன் வாசலருகே’
‘முறைக்கின்ற பொய்யில் முகம் பூசும் கள்ளம்’
இவை நான் ரசித்த வரிகள்.
ஜிஎம்பி சார் பின்னூட்டத்தைப் படித்த போது பாடலைத் தமிழாசிரியரிடம் கொடுத்துப் பொழிப்புரை கேட்கும் காட்சி நினைவுக்கு வந்து சிரிப்பை அடக்க முடியவில்லை.
பகவான் ஜி கொடுத்த பின்னூட்டத்தையும் மிகவும் ரசித்துச் சிரித்தேன்.
ஆம் சகோ..
Deleteபிள்ளையார் பிடிக்கப் போய் என்னமோ ஆன கதைதான் இது...:))
இடையிடையே நம் கைச்சரக்கையும் கலந்து விடலாம் என்று நினைத்தால் இப்படிப் போய்விடுகிறது.
ரசிக்கின்றமைக்கும் தொடர்ந்து வந்து கருத்திடுகின்றமைக்கும் நன்றிகள்!
அசைகின்ற தீபம் அதிலாகும் என்ன
ReplyDeleteஅறியாது பொய்மை உலகே!///
என்ன விந்தையால் எழுதியதோ
எண்ணம் சிந்தைத் தருகிறதே
பண்ண பண்ண மீண்டுமே
பாதியுயிர் சேர்கிறதே
அண்ணலே எனை மறந்தேன்
அமுதமாய் இதைப் படித்தேன்
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteகவிதையோடு..பதவுரை...தெளிவுரையை காணாது தவித்தேன் நண்பரே....
ReplyDeleteகவிதையைப் புரியும்படி எழுதாதது என் தவறுதான் வலிப்போக்கரே!
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
உறைகின்ற தீயை உள்ளத்தில் பூட்டி ,ஒளிப்பஞ்சு பூக்கள் உதிர்க்கும் அழகிய வரிகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ!
Deleteமரபு சார்ந்த கவிதைகள் பலவற்றுள் எதுகை மோனையழகுக்காக மிகை வார்த்தைகளையெல்லாம் சேர்த்தெழுதும் பல கவிதைகளைப் பார்த்திருக்கிறேன்.ஆனால் இந்தக் கவிதையில் ஒரு வார்த்தையும் மிகை என்று சொல்லமுடியாமல் அவ்வளவு கச்சிதமாய் கருவோடு பொருந்தி ரசிக்கவைக்கும் அழகுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
ReplyDeleteகொஞ்சம் கூடத் தளம் தப்பாத இப்படிப்பட்ட மரபுக் கவிதைகளைக் காண்பது வர வர அரிதாகி விட்டது! அருமையாக இருக்கிறது!
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
மறைத்திட்ட வண்ண மடல்களால் இன்பம்
நிறைந்திட்ட நெஞ்சம் அடைந்தேன்! - அறைந்திட்ட
சொல்லனைத்தும் சொர்க்கத்தைக் காட்டும்!இப் பாட்டின்முன்
வில்லனைத்தும் தோற்கும் விரைந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
உறைகின்ற தீயை உள்ளத்தில் பூட்டி
ReplyDeleteஒளிப்பஞ்சு பூக்கள் உதிர்க்கும்!
மறைகின்ற மாலை மனம்கட்டிச் சேர்த்து
மறுக்குமுன் நெஞ்சில் பதிக்கும்!
இறையென்ற போதும் எனக்கில்லை இன்பம்
இல்லாத உன்னில் கிடைக்கும்!
முறைக்கின்ற பொய்யில் முகம்பூசும் கள்ளம்
மோகித்தே மூழ்கிக் கிடக்கும்!!
அட அட அட என்ன...... கவிதை காதலில் உருகி உருகி ம்..ம்..ம் கண் பட்டுப் போகும் அளவுக்கு ஒரு விருத்தம். அப்படியே கட்டிப் போட்டு விடுகிறது கவிதை .ஆமா ஐயாவும் திருவோடு ஏந்திநீர்களோ.......ஹா ஹா ... சா சா இருக்காது அப்பிடித் தானே.என்ன சிரிப்பு சிறிது மழுப்புகிறீர்களோ....ok ok நன்றி வாழ்த்துக்கள் ...!ம்..ம்..ம் எப்படித் தவறவிட்டேன் .....