Pages
▼
Sunday, 31 August 2014
Thursday, 28 August 2014
Monday, 25 August 2014
Thursday, 21 August 2014
Monday, 18 August 2014
Saturday, 16 August 2014
Monday, 11 August 2014
சொல் வேட்டை!
பழைய இலக்கியங்களைப் பனையோலையில் இருந்து
பிரதி எடுக்கும் போது சில சொற்கள் அழிந்திருக்கும். சில எழுத்துக்கள் தெளிவில்லாமல்
இருக்கும்.
சில நேரங்களில் இடையே இருக்க வேண்டிய ஓலைச்சுவடிகள்
சில இல்லாமல் இருக்கும். அப்படிப்பட்ட இலக்கியங்களுக்கு வேறு பிரதி இருந்தால் ஒப்பு
நோக்கித் திருத்தம் செய்யலாம். அந்தப் பாடல்கள் எங்காவது யாராவது மேற்கோளாக எடுத்துக்
காட்டி இருந்தால் அங்கிருந்து எடுத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் அவ்வளவுதான்!
Friday, 8 August 2014
Wednesday, 6 August 2014
படைப்பின் உயிர். (2 )- முறைவைப்பு.
மெய்ப்பாட்டுச் சுவைகளின் வரிசை முறைக்குக் காரணம் உள்ளது என்பது பற்றிச் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை முதலில் பார்த்து விடுவோம்.
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் ( எட்டே) மெய்ப்பாடென்ப“
( தொல்-மெய்.3.)
எனத் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் இந்த வரிசை முறையில் சூத்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
Monday, 4 August 2014
கேள்விக்கு என்ன பதில்?
இலக்கணப் பெரும் பரப்பில் நான் பெரிதும் மதிக்கும் அறிஞர். புலவர். கோபிநாத் அவர்கள் “ இமைக்கும் நொடி“ மற்றும் “ படைப்பின் உயிர்“ ஆகிய பதிவுகளின் இறுதியில் இரண்டு கேள்விகள் கேட்டிருந்தார். பின்னூட்டத்திற்கான பதிலிடும் வரம்பைத் தாண்டி நீண்ட அதன் கருத்துக்களின் நீட்சியால் தனிப்பதிவாக்கிடக் கருதினேன். அப்பதிவுகளின் தொடர்ச்சியாக இதனைக் கொள்ளலாம் என்பதும் இதற்குக் காரணம்.
Sunday, 3 August 2014
இமைக்கும் நொடி.
மரபிலக்கணங்களின்
உரைகளை வாசிக்கும் போது அவை வாய்மொழியாக ஆசிரியரால் கற்பிக்கப்பட்டதன் எழுத்துப் பதிவுகள்
என்பதை மனதில் கொள்ளவேண்டும். உரை என்றாலே உரைக்கப்படுவதுதானே! ஏனென்றால் ஒரு நூலைப்
படிக்கும் போது நம்மனதில் தோன்றும் அல்லது நமக்கே தோன்றாத பல ஐயங்களை உரையாசிரியர்கள்
எழுப்பி அவற்றிற்கான விடைகளை அளித்துச் சென்றிருப்பார்கள். அவை ஏதோ புத்திசாலி மாணவனால்
அன்றைய வகுப்பறைச் சூழலில் எழுப்பப்பட்ட நல்ல கேள்விகளாக இருந்திருக்கும். அல்லது ஆசிரியர்
பாடம் சொல்லிக் கொடுக்கும் போது அவருக்கே தோன்றிய சந்தேகத்திற்கான பதிலாக இருந்திருக்கும்.
Friday, 1 August 2014
படைப்பின் உயிர்.
படைப்பாளியான நீங்கள் உங்கள் படைப்பின் வழியே படிப்பவருக்குள் நுழைந்து அவர்கள் மனத்தை
உருக்க வேண்டுமா? மகிழ்வூட்ட வேண்டுமா? சிரிக்கச் செய்ய வேண்டுமா? கண்ணீர் விடச்
செய்ய வேண்டுமா? உங்களின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அப்படிப் படைப்பொன்றினை ஆக்கத்
தமிழ் இலக்கணம் வழிசொல்லித் தருகிறது. படைப்பாளி எப்படித் தன்
படைப்பை வாசகனுடைய மனதை இடமாகக் கொண்டு இதை நிகழ்த்த இயலும்? தன் அனுபவத்தைப் படைப்பின் வாயிலாகப் படிப்போனின் மனத்தில் இறக்கி வைப்பது எப்படி? திரைப்படங்களில், நாடகங்களில் இது
சாத்தியப்படும். சில
உண்மைச் சம்பவங்களின் எடுத்துரைப்புகள் பாதிக்கப்பட்டவரால் பகிரப்படும் போது
நம் மனதில் கலக்கம் ஏற்படுவதுண்டு. ஆனால்
எழுத்து வழியாக
இதை எப்படிக் கொண்டு
செல்வது? தானுணர்ந்த அனுபவத்தை எப்படித் தன் எழுத்தில் இறக்கி வைப்பது? படிப்பவரின் மனம் படிந்து அவர்களின் உணர்வுகளை எப்படித் தொட்டெழுப்புவது? அதற்கென்றே வடிவமைக்கப் பட்டதுதான் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல்.