Pages
▼
Friday, 30 October 2015
Wednesday, 28 October 2015
Saturday, 17 October 2015
Monday, 12 October 2015
யானை எழுதிய சாசனம்.
யானையின் பிடியில் உடல் முறிந்து. |
யானைகள் எப்போதும் பிரமிப்புத் தருபவை. சாந்தமும்
மூர்க்கமும் ஒருங்கே கொண்ட இயற்கையின் படைப்பு அவை. பண்டைய போர்க்களங்களில் அதன் ஆவேசம்,
மனிதனுக்காக மனிதனால் உருவேற்றப்படும் அதன் போர்வெறி, போர்க்களத்தில் வீறுகொண்டெழும் அதன் பேராற்றல், அதனை எதிர்த்துக் களமாடும் மனிதத் தறுகண், இவையெல்லாம் எப்படி இருந்திருக்கும் என்று பலமுறை கற்பனை செய்திருக்கிறேன்.
Friday, 9 October 2015
Wednesday, 7 October 2015
கிச்சுக்கிச்சுத் தாம்பாளம்.
சித்ரா அக்கா எங்கள் தெருவின் தேர்ந்த கதைசொல்லி.
நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போதே அவருக்கு வயது முப்பதற்கு மேல் இருந்திருக்க
வேண்டும். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் செய்து கொள்ளவில்லை என்பதை விட அவரையாரும்
திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பதுதான் உண்மையென இப்போது தோன்றுகிறது. ஒடிசலான உடல்வாகு. கருப்பென்றாலும்
களைமிகுந்த கண்கள்.
Monday, 5 October 2015
பழமைக்குத் திரும்புகிறேன்!
வலைப்பதிவர் படைப்பூக்கப் போட்டிகள் முடிந்தன.
இனி மதிப்பீடுகளுக்கான போட்டி நடைபெற்று வருகிறது. நெடுநாள் கழித்துக் கவிதை என்ற பெயரில்
கொடுக்கப்பட்ட வரையறைகளில் எழுத ஒரு வாய்ப்புக் கிடைத்தது. போட்டி என்பதைக் காட்டிலும்
பங்கேற்றல் என்பதே அதன் நோக்கம். போட்டியில்தான் எத்துணை எழுத்தாளுமைகள், தொழில்நுட்பப்
பதிவர்கள், சமூகச் சிந்தனையாளர்கள், கவிஞர்கள்,
நிச்சயம் இன்னும் மெருகேறி தமிழ் வாழும் என்கிற
நம்பிக்கை என்னுள் வலுவாக வேரூன்றி உள்ளது. போட்டியில் பங்கேற்ற அனைத்துப் பதிவர்களின்
பதிவுகளையும் படித்தவன் என்கிற முறையில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் வணக்கங்களும்..!
Friday, 2 October 2015
ஒரு துளி சேரப் பெருங்கடல்.
உலகம்
யாவையும் ஒருகுடைக் கீழாய்
ஒடுக்கும்
அறிவியல் நடக்கும் பாதையில்
முடங்கும்
தமிழின் முதுமை களைந்து
தடங்கள்
பதிக்கும் தமிழ்வலைப் பூக்கள்!