இடியெடுத்துவெளி
மழையுதிர்த்துவளர் கடல்கலக்கவருந் தும்பியை
இரையெடுத்துநுரை பறையொலித்துமலர் கரைதெளிக்கவரு வெள்ளலை!
படமெடுக்கஒளி
வடிவெடுத்தபகல் நொடியுகுத்தகுறு மின்னலைப்
பரிந்தெடுத்துமுடி இழைபிரித்ததலை செறிவுறுத்துமிருள்
வெண்ணிலா!
அடியெடுத்துமலை
தடதடக்கவிழ துடிதுடித்துருகும் ஓடைகள்!
அதையெடுத்தருவி பதைபதைப்புடனே விதைதெளிக்கவெழும்
ஆறுகள்!
வடிவெடுத்தமுகில்
கொடிபிடித்துநட மிடவிழித்துளிகள் தேடுமே!
வசமிழந்தமனப் பசிவிரட்டதமிழ் இசையொலித்துவரக்
கூடுமே!
சிகைகலைந்ததென
இலைபொழிந்துதுயர் நிலைகலங்கியழு மாவனம்!
சினைபிடிக்கமழை சிதைகெடுக்கவெழும் முனைஉயிர்த்துகளின்
சேகரம்!
முகைமடித்துமலர்
இதழ்கடிக்கவெழில் முடைகரத்திடையில் கானகம்
முகம்தெளித்தபனி பகலெழுப்பிவிட முடம்களைந்துதொடர்
நாடகம்!
குகையொளிந்தஇருள்
பகைபொதிந்தகனல் குறைசலித்துநிறை வேடமும்
குழிவிழுந்தவிதை மழைவலைச்சிறகில் எழுந்திறம்‘அறிந்த
பாடமும்
மிகைகளைந்ததமிழ்க்
கவிபடிந்தகுறு நகைபிறந்தெழுக நாதமே!
மிதமுணர்ந்தமொழி பதமறிந்தமனம் இதமறிந்திடுதல்
போதுமே!
படம் - நன்றி-http://www.netanimations.net/Animated-moving-cinemagraph-of-heavry-storm.gif
தமிழ் இசையொலித்து வருகிறது ஐயா... அருமை...
ReplyDeleteவணக்கம் ஐயா.
Deleteதங்கள் முதல் பின்னூட்டமும் பாராட்டும் காணப் பெருமகிழ்வு.
நன்றி.
நீண்ட நாட்களின் பின் மழைப் பெருக்கில் நனைகிறேன். மீண்டும் வருகிறேன் நனைந்தெளுந்து மிக்க நன்றி பதிவுக்கு.
ReplyDeleteபலதடவை பாடி மகிழ்ந்தேன். சொல்லாடலும் கற்பனையும் தித்திப்பே.
Deleteமிகைகளைந்ததமிழ்க் கவிபடிந்தகுறு நகைபிறந்தெழுக நாதமே!
மிதமுணர்ந்தமொழி பதமறிந்தமனம் இதமறிந்திடுதல் போதுமே!
ஆஹா என்ன சொல்வேன் எத்தனை அழகு தமிழ் எத்தனை நுணுக்கங்கள்.
மொழியின் இதம் பதம் அறிந்தளிக்கும் ஆற்றலும் அற்புதம் ஐயனே!
நன்றி நன்றி! நன்றி! கற்க முடியாவிட்டாலும் ரசிக்கவாவது மேலும் தாருங்கள்.
வாருங்கள் அம்மா!
Deleteஇங்கும்மழைதான்.
தங்களின் வருகையும் ஊக்கப்படுத்துதலும் காண ஒரு புறம் மகிழ்ச்சி.
இதைக் கற்பது கடினமா என்ன?
சிலநிமிடங்கள் ஆகாதே உங்களுக்கு..!!!!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
அன்புள்ள அய்யா,
ReplyDeleteதுடிதுடிப்புடனே கவிபடைத்திடவே அடியெடுத்துவைத்த தாயவள்
துணையிருப்பவளாம் இயற்கையன்னையவள் வரமனைத்தையுமே தந்தவள்!
அருமை.
த.ம.4
வணக்கம் ஐயா.
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
உங்கள் முயற்சி சிறப்பானது.
நன்றி
சிறப்பான கவிதை மழை.
ReplyDeleteநன்றி.
கோ
தங்களின் வருகைக்கும் முதற்பின்னூட்டத்திற்கும் நன்றி கோபி ஐயா.
Deleteஇசையொலித்து வரும் மழைப் பொழிவெனப் பாடல் கண்டேன்!
ReplyDeleteஅருமையாக இருக்கின்றது கவிநடை!
வாழ்த்துக்கள் ஐயா!
வாருங்கள் சகோ!
Deleteதங்களைப் போன்ற பாவலர்களின் வாழ்த்து இன்னும் நன்கெழுதத் துணைசெய்யும்.
நன்றி
மழைக்கவி அருமை !
ReplyDeleteநன்றி ஐயாஇ
Deleteநிறுத்தி நிதானமாக இரண்டு முறை வாசித்து ரசித்தேன். எனக்கு ரசிக்க மட்டுமே தெரியும். எப்படி எழுதுகிறீர்கள்! அருமை.
ReplyDeleteஉங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீ.
Deleteதங்களின் கவிதையினைப் படித்து ரசிக்கும்பொழுது
ReplyDeleteமழை பொழியத் தொடங்கிவிட்டது
நன்றி நண்பரே
தம+1
அங்குமா?!
Deleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே!
ரசித்தோம் ரசித்தோம் இதைப் பல முறை வாசித்து வாசித்து உங்கள் மொழி ஆளுமையையும் ரசித்து வாய்விட்டுப் படித்து வியந்து, எப்படி எழுதுகின்றார் என்று திறந்த வாய் மூடாது அந்த நடையில் மெய்மறந்து ...வார்த்தைகள் இல்லை இதற்கு மேல்...சகோதரரே..
ReplyDeleteதங்களின் அன்பினுக்கு மிக்க நன்றி சகோ.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதமிழ் இசையொலித்து வந்துவிட்டதே!
ReplyDeleteஎப்படி எழுதுகிறீர்கள் என்று சிலாகித்துப் படித்தேன் பலமுறை
Deleteஅங்கும் மழைபொழிவை இப்பொழுதே பார்த்தேன்.
Deleteஎழுதுதல் கடினமில்லை. எளிதே!
நிச்சயம் நீங்களும் எழுதலாம்.
நன்றி
அதுவும் இரு இடங்களிமே சற்று சிறிய மழை...உங்கள் வரிகள் இன்னும் அழகு சேர்த்து சில்லிட வைத்தது தூறலை...
ReplyDeleteதூறல் ர என்றாகி விட்டதோ என்று அழித்து பின்னர் பின்னூட்டமிட்டோம்..அதனால்தான் இரு முறை..
நல்லவேளை தமிழென்றதால் தப்பித்தீர்கள்!
Deleteமலையாளத்தில் இது அஸப்யம் அல்லவோ? :)
நன்றி சகோ.
அருமை நண்பரே!
ReplyDeleteத ம 8
"வடிவெடுத்தமுகில் கொடிபிடித்துநட மிடவிழித்துளிகள் தேடுமே!
ReplyDeleteவசமிழந்தமனப் பசிவிரட்டதமிழ் இசையொலித்துவரக் கூடுமே!" என
நன்றே அழகுறப் பாபுனைந்து
எம் உள்ளம் சுவைத்திட வைத்தீர்கள்
www.ypvnpubs.com
தங்கள் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி திரு. யாழ்ப்பாவாணன் அவர்களே!
Deleteஇது போதும்...என்றே கவிமழையில் நனைந்தபடி நிற்கிறேன்.
ReplyDeleteதொடருங்கள் ஆசிரியரே.
வாருங்கள் பாவலரே!
Deleteஉங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமா என்ன?
எழுதத் தொடங்குங்கள்!
தங்களின் கவிதை மழையில் நனைந்தேன். பிரமிப்புடன் இரசித்தேன். அழகாக கவிதையில் சொற்சிலம்பம் ஆடியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteஐயா வணக்கம்.
Deleteஇதன் ஓசை கடந்து சென்றால் பொருளின் நிறப்பிரிகையைக் காண உங்களால் முடியும் என்று நினைக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் மேலான ஊக்கமூட்டுதலுக்கும் வாழ்த்தினுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் ஐயா,
ReplyDeleteசிகைகலைந்ததென,,,,,,,, ம்ம்,
ஏற்கனவே மழையில் நனைந்து கிடக்கிறேன்,,,,
இப்போ கவிமழையில் நனைந்து
தொடருங்கள்,,,,,,, நனைந்தபடி நாங்களும்
வாழ்த்துக்கள்.
பேராசிரியர்க்கு வணக்கம்!
Deleteஅடுத்த பதிவிற்குத் தலைப்புக் கிடைத்துவிட்டதுபோல..!!!
எழுதத் தொடங்குங்கள்.
காத்திருக்கிறோம்!
நன்றி
வணக்கம் ஐயா,
Deleteமுன்பெல்லாம் எனக்கு எல்லாம் தெரியும் என்று இருந்தேன். இப்போ தான் தெரிகிறது. நான் கிணற்று தவளை என்று,,
எழுதத் தொடங்குங்கள்.
காத்திருக்கிறோம்!
நன்றி
வணக்கம் ஐயா,
Deleteமுன்பெல்லாம் எனக்கு எல்லாம் தெரியும் என்று இருந்தேன். இப்போ தான் தெரிகிறது. நான் கிணற்று தவளை என்று,,
எழுதத் தொடங்குங்கள்.
காத்திருக்கிறோம்!
நன்றி
ஐயா
Deleteஎனக்கும் கற்றுத் தாருங்கள் கவி முடையும் கலையை
கற்றுத் தருபதல்ல கற்பனையில் வருவது
இதழ் மூடிய முறுவல் ஏன்,,
பேராசை என்றா????????
சரி தான் முடவனின் கொம்புத்தேன் ஆசை????????
நன்றி ஐயா,,
அருமை! சொற்கோர்வையும் விவரிப்பும் சிறப்பு! நன்றி!
ReplyDeleteதங்களின் தொடர்வருகைக்கும் பாரட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே!
Deletewonderfull flow of language with "eathukai and monai"
ReplyDeleteதங்களின் வருகையும் கருத்தும் மேலும் நான் கவனமாக எழுதவும் மேம்பாடுறவும் துணைசெய்யும்.
Deleteதொடர்ந்துவரவும் கருத்திடவும் வேண்டுகிறேன்.
வாய் விட்டு படித்தால் நாவுக்கு நல்ல பயிற்சி போலிருக்கே ,உங்க கட கட கவிதை :)
ReplyDeleteஇருந்தாலும் வாய்விட்டுச் சிரிக்க வைத்து நோய்விட்டுப் போக வைக்க நீங்கள் தரும் பயிற்சிக்கு ஈடாகுமா இதெல்லாம் பகவானே!
Deleteகருநிறமுகில்தம் குளிர்மிகுவலிதீர் சிறையகத்துமீளும் விண்துளி
ReplyDeleteகலைநயமிகுநல் கவிபுனையவொரு கருவளித்துமேவும் கண்வழி
ஐயா, தங்களின் இசை நிறை பாடல்கள் தமிழின் இனிமையை, மேலும் மேலும் மெருகூட்டுகின்றன. வாழ்க வளமுடன்.
ஐயா வணக்கம்.
Deleteமுதலில் நலந்தானே?!
சிறிது இடைவெளிக்குப் பிறகு பதிவிட ஆரம்பித்ததும் அனிச்சையாய் உங்களைத் தேடிற்று மனது.
அடுத்தடுத்த ஒவ்வொரு பதிவுகளிலும்.
உங்கள் வருகையும் கருத்தும் கண்டு மனம் மிக மிக மிக மகிழ்வடைகிறது.
இதோ,
உங்கள் மறுமொழிக் கண்ணிகள் நான் முடித்த பதிவை இன்னும் நீட்டிக்கின்றன.
யாரென்றறியாதபோதும் காணாமையின்போது உள்ளூரத் தேடித்தவிக்கின்ற இந்த அன்பை இப்பொழுது இவ்வலைத்தளத்தின் ஊடாகத்தான் நான் முதன்முறையாக அனுபவிக்கிறேன்.
தங்கள் வலைப்பூவில் எழுதத் தொடங்குங்கள்.
நன்றி
நான்வரினும் வாராமல் சென்றிடினும் அன்றாடம் நின்றாடும் நினைவு மாறா.ஐயா. தங்கள் அன்பிற்கு இன்றும் என்றும் நான் அடிமை. நன்றி.
Deleteநன்றி
ReplyDeleteப்பா! ப்பா! ப்பா! உச்சம்!!!
ReplyDeleteமழையால் என்னவெல்லாம் நிகழ்கிறது என இப்படி அக்குவேறு ஆணிவேறாய் நீங்கள் வருணித்திருக்கிறீர்கள். மழையால் இப்படியொரு பாவும் தமிழுக்குக் கிடைக்கும் என்பதை மட்டும் இந்தப் பட்டியலில் சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்! உச்சம்!! உச்சம்!!!
வணக்கம்.
Deleteதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஅருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என்று தனிசிறப்பு இருக்கவேண்டும். தங்களிடம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இசையுடன் கூடியதாக உள்ளது. படிப்பதற்கு இனிமை. நன்றி அய்யா. தொடர்க உமது பணி.
ReplyDeleteஅருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என்று தனிசிறப்பு இருக்கவேண்டும். தங்களிடம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இசையுடன் கூடியதாக உள்ளது. படிப்பதற்கு இனிமை. நன்றி அய்யா. தொடர்க உமது பணி.
ReplyDeleteஅருமையாக உள்ளது கவிதை. மரபுக்கவிதை எழுதுவதற்கு என்று தனிசிறப்பு இருக்கவேண்டும். தங்களிடம் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இசையுடன் கூடியதாக உள்ளது. படிப்பதற்கு இனிமை. நன்றி அய்யா. தொடர்க உமது பணி.
வணக்கம் ஐயா.
Deleteதங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.
தொடருங்கள்.
சிறப்பான கவிதை. ரசித்தேன் ஐயா.
ReplyDeleteநன்றி ஐயா.
Delete
ReplyDeleteவணக்கம்!
கோடை நிழலாய்க் கொடுத்த விருத்தங்கள்
கூடைக் கனிகளின் கூட்டு!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
கூட்டுக் குறட்பாக்கள் கொண்ட பின்னூட்டம்
Deleteகாட்டும் புலமைக் கலை
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா
ஆகா அற்புதம்
ReplyDelete