உலகம்
யாவையும் ஒருகுடைக் கீழாய்
ஒடுக்கும்
அறிவியல் நடக்கும் பாதையில்
முடங்கும்
தமிழின் முதுமை களைந்து
தடங்கள்
பதிக்கும் தமிழ்வலைப் பூக்கள்!
கரங்கள்
ஆயிரம் விரித்துப் பதிவர்
களங்கள்
காணுவர்! கதிர்தமிழ் ஒன்றாய்க்
காணும்
முயற்சியில் புதுகை மாநகர்
கட்டி
யெழுப்பும் பதிவர் திருவிழா!
அழைப்பிதழ்
காண்க! அனைவரும் வருக!
உழைப்பவர்
உள்ளம் மகிழ
ஒருதுளி
எனவே இணைய(க்) கடலே!
நன்றி - கவிஞர். ந. முத்துநிலவன்.
கவிஞர். வைகறை.
வணக்கம், ஐயா,
ReplyDeleteஅழைப்புக் கவி அருமை,
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் முதற்கருத்திற்கும் நன்றி பேராசிரியரே!
Deleteவாழ்த்துக்கள் ஐயா
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteஒரு துளி சேரச் சேரப் பெருங்கடல் ஆகிப்
புதுகை வலைப்பதிவர் அலை வீசட்டும்...!
தமிழெழுச்சி எங்கும் பொங்கட்டும்...!
கவிதையில் அழைப்பு கண்டு களித்தேன்.
நன்றி.
த.ம. 3.
கவிதைப் பின்னூட்டத்திற்கு நன்றி ஐயா.
Deleteசந்திப்போம் . வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
நிகழ்வுசிறக்க எனது வாழ்த்துக்கள்.த.ம 5
நிகழ்வில் எனது ஜன்னல் ஓரத்து நிலா கவிதை நூல் அறிமுகம் ஆகிறது.. வேண்டி படித்து விமர்சனம் எழுதுங்கள்...
எனதுபக்கம் பத்திரிகை தகவல் கவிதை அனைத்தையும் காண வாருங்கள்
Jரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நீ தந்த பிரியம்.:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ஐயா.
Deleteஆகா
ReplyDeleteதங்களின் அழைப்பேஅற்புதம்
நன்றி நண்பரே
தம +1
நன்றி ஐயா.
Deleteவாழ்த்துக்கள்! விழா சிறக்கட்டும்!
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteஅழகான கவிதையுடன் கூடிய அழைப்பிதழ் கண்டென். மிக்க மகிழ்ச்சி! நன்றி!
ReplyDeleteநன்றி சகோ.
Deleteகவிதையிலேயே இனிய வரவேற்பு நன்றி நன்றி ! மிக்க மகிழ்ச்சி.!
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள் ...!
நன்றி அம்மா.
Deleteபதிவர்கள் ஒன்று கூடி மகிழ்ந்திட விட்ட அழைப்பிதழ் அருமை ! அருமை !
ReplyDeleteவாழ்த்துக்கள் அன்பு உள்ளங்கள் இங்கு ஒன்று கூடி மகிழட்டும் .
நன்றி பாவலரே.
Deleteஅருமை ஐயா!
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்!
விழா சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteவணக்கம் பாவலரே !
ReplyDeleteஅழகான கவிதைக்கு ஆயிரம் நன்றிகள் விழா சிறக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
தம +!
நன்றி பாவலரே.
Deleteவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.
ReplyDeleteதம +1
நன்றி ஸ்ரீ
Deleteகடல் அலையில் காலை நனைக்க நானும் தயாராகி விட்டேன் :)
ReplyDeleteதைரியமாய்ச் செல்லுங்கள்.
Deleteஅடித்துக் கொண்டுபோகாமல் காப்பாற்ற கரையில் நின்று கொண்டிருக்கிறேன் ;)
நன்றி ஜி.
நமக்காக நாம் விடுக்கும் அழைப்பு. கவிதை அழகு. சந்திப்போம்.
ReplyDeleteஅட! சகோதரரே! என்ன அருமையான அழைப்பு! கவிநயத்துடன் உங்கள் நடையில்!!! தனிவழி!!!
ReplyDeleteவருவீர்கள் தானே?!! சந்திக்கும் ஆவலுடன்.....
வணக்கம் ஆசானே.
Deleteஉறுதியில்லை.
முயல்கிறேன்.
நன்றி.
மீண்டும் வாசித்தோம்!! அட்டகாசம்! முடிலைப்பா...ஹஹஹ்!!
ReplyDeleteநன்றி ஆசானே.
Deleteஆஹா மிக்க நன்றி சகோ....காத்திருக்கின்றோம்..உங்களைக்காண....விழாவில்....
ReplyDeleteவணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.
ReplyDeleteஅழைப்புக் கவிதை நன்று!
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteவிட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........
ReplyDeleteபணம்அறம்
நன்றி
வணக்கம்.
Deleteதளம் மாறி வந்துவிட்டீர்கள் போலிருக்கிறது.
:(
நன்றி ஐயா.
ReplyDelete
ReplyDeleteவணக்கம்!
வலைப்பதிவர் நட்பை வரவேற்ற பாடல்
கலைச்சுவையைக் காட்டும் கமழ்ந்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
கமழும் தமிழ்ப்பாகின் கற்கண்டுச் சாற்றில்
Deleteஅமிழும்பின் னூட்ட மழகு
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா