நம் தொன்மரபின் தொடர்ச்சி நம் தலைமுறையோடு முடிந்துவிடுமோ என்ற கவலையுடன் கட்சி வேறுபாடின்றித் தமிழகமெங்கும் உரத்தொலிக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக்குரல்களைப் பார்வையாளனாக இருந்து பார்த்த என்னை, மதிப்பிற்குரிய திரு. ஞானப்பிரகாசம் ஐயாவின் இருபதிவுகளும் தற்போது அவர் எனக்கு இது குறித்துத் தனியே விடுத்திருந்த மின்னஞ்சலும் இப்பதிவினை எழுத என்னை இழுத்து வந்திருக்கின்றன.
Pages
▼
Wednesday, 30 December 2015
Friday, 18 December 2015
எது கவிதை?
‘தமிழகத்தில்
மக்கள் தொகையை விடக் கவிஞர்களின் எண்ணிக்கை அதிகம்’ என்பதாக என்றோ வாசித்த துணுக்கொன்று இப்போது நினைவுக்கு வருகிறது. இணையத்தில் இயங்கத்தொடங்கிய இந்தக் குறுகிய காலத்தில், எழுதுபவர்களில்
பெரும்பாலானவர்கள் கவிஞர்களாய்த் தெரிகிறார்கள். ஒருவேளை ‘காமாலைக்காரன் கண்ணுக்குக்
கண்டதெல்லாம் மஞ்சள்’ என்று கூறுவதுபோல என் கண்களுக்குத்தான் இப்படிப்படுகிறதோ என்னமோ?