விழித்துக் கொண்டது பாம்பு!
விடத்தைத் துப்ப இடமில்லாமல்
விழுங்கிக் கொண்டது தன்னுள்!
விதையில்லாத மரங்களில் ஏறி
விதியிது என்று என்மனம் தேற்றி
விரையப் போகுது எங்கோ!
உரித்துப் போட்டது சட்டை!
உலர்த்திப் போடக் கொடியில்லாமல்
உதிர்த்துப் போகுது எங்கும்!
உயிர்த்துளை மிக்க புற்றுகள்
தோறும்
உடலைப் பதுக்குது மெல்ல!
உணர்வறியாது கூடுகள் கொன்ற
உலகில் வாழுது இன்னும்!
நடுக்கச் சீறிடும் நாக்கு!
நடித்துக் காட்டும் வரமில்லாமல்
நரகப் பட்டதன் மேனி!
நக்கிப் பிழைக்கும் குணமில்லாமல்
நறுக்கிக் கொண்டது வாலை!
நதியாய் வாழக் கரைகளுமின்றி
நகரத் தேய்வன நாட்கள்!
பட உதவி - நன்றி http://artboxdesign.biz/
பாம்பும், கவிதையும் அருமை.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
பாம்புக் கவிதையை இரசித்தேன் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 2
-நன்றி-
-அன்பு-
-ரூபன்-
தங்களின் வருகைக்கும் ரசனைக்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteஇரசித்தேன்
ReplyDeletesubbu thatha
www.subbuthathacomments.blogspot.com
A surprise for u in my blog.
வாருங்கள் ஐயா.
Deleteதங்களின் வருகையும் முதற்பின்னூட்டமும் காண பெருமகிழ்வு.
வெளியூரில் இருந்ததால் உடனே பதிலளிக்க இயலவில்லை.
இதோ வருகிறேன்.
நன்றி.
ReplyDeleteஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது நிகழ்வு பற்றி கவிதை வடிக்கும்போது, அந்த கவிதையின் எல்லா சொற்றொடர்களிலும் மோனை வருமாறு கவிதை எழுதுவதென்பது கடினம் என நினைத்திருந்தேன். ஆனால் தாங்கள் அதை வெகு எளிதாக சுவை குன்றாமல் கருத்து சிதையாமல் தந்திருக்கிறீர்கள். வியந்து நிற்கிறேன் தங்களின் கவிதையை படித்து!
வணக்கம்.
Deleteதங்களின் வருகைக்கும் ஊக்கமூட்டும் கருத்துகளுக்கும் நன்றி.
இந்த வலைத் தளத்திற்கு இதுகாறும் ஏன் வரவில்லை என்று
ReplyDeleteஎன்னையே நான் கேட்டுக்கொள்கிறேன்.
தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
வணக்கம்.
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.
ஆஹா! சகோ பாம்பும் கூட தங்கள் கவிதையில் நடமாடுகின்றது...அருமை...
ReplyDeleteகீதா: இது பாம்புக் கவிதை என்று மேலோட்டமாகத் தெரிந்தாலும், உட்பொருள் உள்ளது போலத் தெரிகின்றதே. நல்ல ரிதம்...தக தக தகிட......தக தக தத்தரிகிட...எனக்குச் சரியாக வந்ததா என்று தெரியவில்லை ஆனால் இப்படித்தான் நான் அதைப் பாடிப் பார்த்தேன்..
வாருங்கள் சகோ!
Deleteஉட்பொருள்தான். வெறும் பதரானதில்லை.
பாடிப்பார்த்தீர்களா....!!!!
மிக்க மகிழ்வு.
வருகைக்கும் தொடர்ச்சிக்கும் நன்றி.
தேய்வன நாட்கள், தொய்விலா சீர்கள். வாழ்க வளமுடன்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteசிறப்பான கவிதை! பாராட்டுக்கள்!
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteநன்றி ஐயா.
Deleteவேறு எதையோ உணர்த்துகின்றது...எது பாம்பாய் மாறியது?சகோ...
ReplyDeleteஅதிலொன்றுதான் உங்கள் பின்னூட்டத்திற்குப் பதிலளித்துக் கொண்டிருக்கிறது.;)
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவிஞரே!
அன்புள்ள அய்யா,
ReplyDeleteமனிதப் பாம்புகளைத் தோலுரித்துக் காட்டின கவிதை.
த.ம.5
வருகைக்கும் கருத்திற்கும் மி்க்க நன்றி ஐயா.
Deleteநண்பரே மன்னிக்கவும்! என்ன சொல்ல வருகிறீர்கள். பலமுறை படித்தும், எனக்குப் புரியவில்லை.
ReplyDeleteஐயா வணக்கம்.
Deleteதங்களின் வருகைக்கும் வெளிப்படையான கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.
படமும் கவியும் அருமை
ReplyDeleteதம +1
நன்றி நண்பரே!
Deleteபடத்தை உற்று பார்த்தேன் ,அப்புறம்தான் புரிந்தது ,இது மனிதப் பாம்பென்று :)
ReplyDeleteபாடலுக்குப் படத்தில் பொருள் கண்டுபிடித்துவிட்டீர்களே பகவானே! :)
Deleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
ReplyDeleteவணக்கம்!
பாட்டும் படமும் படைத்துள்ளீர்! பார்..நிலை
வாட்டும் மனத்தை வதைத்து!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
வதைத்துச் செயல்செய்யும் வாழ்வில் தமிழை
Deleteவிதைத்துப் புகழ்செய்யும் சொற்கள் - புதைநெஞ்சில்
நித்தம் கவிப்பூக்கள் நிற்கப் புவிசெய்..உம்
சித்தம்வா ழட்டுஞ் சிறந்து.
தங்களின் வருகைக்கும் குறளுக்கும் மிக்க நன்றி ஐயா.
வணக்கம் பாவலரே !
ReplyDeleteபாருக்கோர் செய்திதனைப் பாட்டில் எடுத்துரைத்தீர்
யாருக்கோ ஊட்டுகின்ற ஞானம்தான் - நீருக்கோர்
வண்ணம் நிலங்கொடுக்கும் வாழ்வொளிரத் தீதற்ற
எண்ணம் கொடுக்கும் எழில் !
சிந்திக்க வைக்கும் வரிகள் அசத்தல் கவிஞரே
வாழ்க வளமுடன் ....மன்னிக்கவும் தங்கள் வலைக்கு வந்தே ரொம்ப நாள் ஆகிறது
இன்றே எல்லாப் பதிவுகளையும் பார்த்து விடுகிறேன் !
தம +1
எண்ணம் கொடுக்கா எழிலெல்லாம் உங்கவிதை
Deleteவண்ணத் தமிழ்செய்ய வாய்பிளந்தேன்! - மண்ணோடிப்
போகும்வீண் நீரல்ல! சாகும்கான் வேருக்கே
ஆகும்நீர் நீர்செய்யு மாறு.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பாவலரே!
அருமை. ரசித்தேன்.
ReplyDeleteமிக்க நன்றி ஸ்ரீ.
Deleteஉமிழப்படாமல், உள்ளேயே உறைந்த விஷம் நாகரத்தின கற்கள் ஆகும் எனும் தகவல் மூட நம்பிக்கை என்றே நினைத்தேன் இந்த கவிதையை படிக்கும் வரை:)
ReplyDeleteவாருங்கள் வாருங்கள்.
Deleteஆம். நானும் படித்திருக்கிறேன்.
கண்ணிருந்தும் அக்கற்களை இழந்துவிட்டால் பாம்பு குருடாகிவிடுமாமே.....,
வாயிருந்தும் சொற்களை இழந்து ஊமையானவனைப் போல :)
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி
அருமை ஐயா, வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி பேராசிரியரே!
Deleteஆம் ஐயா, பல நேரங்களில் விழங்கித்தான் ஆகனும்,,,,
Deleteநன்றிகள்.
மன்னிக்கவும், விழுங்கி,,
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதனதன தனதன தானா என்னும் சந்தம் மனதைக் கவர்ந்திழுக்கிறது.
ReplyDelete:)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇது மலைப்பாம்பா மண்ணுளிப்பாம்பா என்பதை படிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிடுகிறீர்கள். கவிதையை எழுதும் போது தங்களுக்குள் படமெடுத்த பாம்பும், படிக்கையில் என்னுள் சீறிய பாம்பும் ஒன்றாகவே இருக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவு.
ReplyDeleteகவிதையின் வெற்றியும் அதுதான்.
மனப்பாம்பு அண்ணா! ;)
Deleteஆம் அண்ணா.
வாசிப்பவர் அனுபவத்திற்காக சில விடுதல்கள் இருக்க வேண்டும் என்கின்றது நவீன இலக்கியம்.
இது பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதுதான்.
இடநிரப்பியாக எடுத்திட்டேன்.
ஓரிடத்தில் ஓசை கெடுவதை நீங்கள் சொல்லவே இல்லையே ! :)
நன்றி.
இல்லையே ! :)
DeleteThis comment has been removed by the author.
Deleteஇனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துகள் அய்யா.
ReplyDeleteத ம +
நட்புடன்,
புதுவை வேலு
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteதங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி.
வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteதங்கட்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி.
நன்றாக இருக்கிறது கவிதை!
ReplyDeleteதெரியாமல்தான் கேட்கிறேன், என்னைப் போன்றவர்கள்தாம் எழுதத் தெரியாமல் ஏதோ கிறுக்கி வலையிதழ்களிலும் சொந்த வலைப்பூவிலும் கவிதைகளை வெளியிட்டுத் தேற்றிக் கொள்கிறோம். உங்களுக்கென்ன? ஆனந்த விகடன், குமுதம் போன்ற முன்னணி இதழ்களுக்குக் கவிதைகளை அனுப்பிவிட்டு அவர்கள் வெளியிட்ட பின்னர் வலைப்பூவில் ஏற்றலாமே? இந்த அளவுக்குத் எழுத்துத்திறமையை ஏன் வலைப்பூவோடு சுருக்கிக் கொள்கிறீர்கள்? அருள் கூர்ந்து வெளியே வாருங்கள் ஐயா!
வணக்கம் ஐயா.
Deleteஉங்களைப் போன்றோர்கள் எழுதத் தெரியாதவர்கள் என்றால் வேறு யாரை எழுதத் தெரிந்தோராய்க் கொள்வது...!!!!
எனக்கெல்லாம் இங்கு எழுதுவதும் தங்களைப் போன்றோரின் கருத்துகளை உடனுக்குடன் பெறுவதும் ஆனந்தமாய் உள்ளது.
எனக்கு இதுவே பெரிது.
தங்களின் அன்பினுக்கு நன்றி.
உணர்வறியாது கூடுகள் கொன்ற
ReplyDeleteஉலகில் வாழுது இன்னும்!
ஊமையாய் அழும் உள்ளம். ம்..ம் உணர்கிறேன் ...