இன்றைய
சூழலில் சர்க்கரை, இதயநோய், போன்ற பல வியாதிகள் வந்தவர்களுக்கும், வராமல் தடுக்க நினைப்பவர்களுக்கும்
மருத்துவர்கள் சொல்லும் தாரக மந்திரம், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி .
தமிழ்
மருத்துவ முறையும் இதைத்தான் சொல்கிறது இன்னும் சற்று விளக்கமாக..!
நம்முடைய
உடல் வாதம் , பித்தம், சிலேத்துமம் ( ஐ ) என்னும் மூன்றின் சமநிலைகளால் ஆனது.
வாதம்
– காற்று
பித்தம்
– நெருப்பு
சிலேத்துமம்
– நீர்
என மூன்று
இயற்கைக் கூறுகளோடு இவை ஒப்பிடப்படுகின்றன.
ஓர் ஆரோக்கியமான
உடலில் வாதத்தின் அளவே பிரதானமாய் இருக்கும்.
வாதத்தின்
(காற்றின்) அளவு ஒரு பங்கு என்றால் அதில் பாதி அளவு பித்தம் இருக்கவேண்டும்.
பித்தத்தின்
அளவில் பாதி சிலேத்துமம் இருக்க வேண்டும் என்றெல்லாம் நாட்டு மருத்துவ நாடி அறிவியல் கூறுகிறது.
இதில்
ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டால் உடலில் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன.
எப்போதுமே
உடல் தன்னளவில் இந்த மாறுதல்களைச் சமன் படுத்த முயலும்.
முடியாதபோது
நோயின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.
நம் மருத்துவம்
மருந்துகள் மூலம் அவற்றைச் சமப்படுத்த முயல்கிறது.
இச்சமநிலை பிறழ்வுக்கு ஒருவன் எவ்வாறு காரணமாகிறான், எப்படி அதைச் சமநிலையில் வைத்துக் கொள்ள முடியும்? என வரும்முன் காப்பதற்கான அறிவுரைகளை அது கூறுகிறது.
இச்சமநிலையை
இழப்பை ஒருவன் தன் உணவாலும் செயலாலும் தவிர்க்க முடியும் எனக் கூறுகிறது நம் மருத்துவம்.
‘உணவைக் கட்டுப்பாட்டில் வை’ என்றோ, அல்லது ‘உடற்பயிற்சி குறைந்தது இவ்வளவு நேரம் செய்’ என்றோ அது எங்கும் பொத்தாம் பொதுவாகக் கூறிச் செல்லவில்லை. மிக நுட்பமாகவும் ஆழமாகவும் உணவு மற்றும் செயல்களின் எல்லையை வரையறுக்கிறது.
உணவானாலும்
சரி செயலானாலும் சரி ஒவ்வொன்றிலும் மூன்று
கூறுகள் முக்கியம் என்கிறது நம் மருத்துவம். அவை மூன்றும் அதிகமும் ஆகக் கூடாது. குறையவும் கூடாது.
உணவை
எடுத்துக் கொள்ளுங்கள்.
உணவு
அதிகம் - குறைவு என்றால் நாம் நினைப்பதுபோல நிறைய சாப்பிடுவது அல்லது குறைவான அளவு சாப்பிடுவது
என்பது மட்டும் அல்ல.
அதிகம்
குறைவு என்பதை நாம் உண்ணும் உணவின் சுவை, சக்தி, அளவு மூன்றையும் கொண்டு அது தீர்மானிக்கிறது.
நாம்
உண்ணும் உணவில் குறிப்பிட்ட ஒரு சுவை மட்டும் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது.
அப்படி
இருந்தால் அது நோயை ஏற்படுத்தும்.
உணவு
தருகின்ற சக்தி ( இன்று நாம் சொல்லும் கலோரி ) அதிகமாகவும் குறைவாகவும் இருக்கக் கூடாது.
அதுவும்
நோய் செய்வதே!
நாம்
உண்ணும் உணவின் அளவும் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது.
இருந்தால்
அதுவும் நோய் செய்யும்.
இவ்வாறு
உணவை அதிகமாக உண்பது குறைவாக உண்பது என்பதை மூன்றாகப் பகுத்துரைக்கிறது.
அடுத்து
செயல்.
செயல்
என்றால் நம் உடலின் செயல்பாடுகள் அல்லது இன்று நாம் சொல்லும் உடற்பயிற்சி என்பது மட்டும் அல்ல.
செயலின்
அதிகம் குறைவு என்பது, நாம் சிந்தனை சொல் இயக்கம்
இம்மூன்றின் செயல்பாடுகளையும் குறிப்பதாகவே நம் மருத்துவம் கொள்கிறது.
இவை அதிகமானாலோ
குறைவானாலோ அதுவும் உடலின் சமநிலையைப் பாதித்து நோயை உண்டாக்கும் என்கிறது அது.
நம் மனதில்
ஓடுகின்ற எண்ணங்கள் மிக அதிகமாக எல்லை கடந்து ஓடினாலோ அல்லது சிந்தனையின் அளவு குறைந்தாலோ
அது உடலுக்கு நோய் செய்யும்.
நம்முடைய பேச்சு நீண்டாலும் அல்லது குறைந்து போனாலும் அதனால்
உடல் நலனிற்குப் பாதிப்பு ஏற்படும்.
( பொதுவாக
மனநிலை பிறழ்ந்தவர்களிடம் ( சிந்தனை அதிகரித்தல் அல்லது குறைதல், பேச்சு அதிகமாதல்
அல்லது முற்றிலும் இல்லாமற் குறைதல் எனும்
இவ்விரு இயல்புகளையும் பார்க்கமுடியும். )
நாம்
உடலுறுப்புகளால் செய்கின்ற வேலை ( அல்லது நாம் இப்போது சொல்லும் உடற்பயிற்சி ) அதுவும் எல்லை கடந்து போனாலும்
குறைந்து போனாலும் நோயை உண்டாக்கும்.
ஆக,
வாதம்
பித்தம் சிலேத்துமம் என்னும் மூன்றின் சமநிலையை நாமே சீர் குலைக்கக் கூடியதாய் அமைவன நாம் உண்ணும் உணவும் நம்முடைய செயலும் என்றும்
இவற்றை
ஒழுங்கு செய்தாலே நம் உடலில் தோன்றும் பல பிரச்சினைகளைச் சரி செய்துவிட முடியும் என்றும் நம் முன்னோர் மருந்தியல் வரும்முன் காக்கும் வழிமுறையைக் கூறிச்சென்றிருக்கிறது.
( வாத பித்த
சிலேத்துமத்திற்கான காற்று, தீ, நீர், ஒப்பீடு மற்றும் நாடி அறிவியல் நீங்கலாக ) இத்துணைச் செய்திகளையும் நான் கூறுவது, நாட்டுமருத்துவ நூல்களின் துணையோடோ
அல்லது வேறெந்த வைத்தியப் பட்டறிவு கொண்டோ அன்று.
ஒரு குறள் அதற்குப் பரிமேலழகர் சொல்லும் உரை. அதனுள் விளக்கப்படுவனவே இவ்வளவும்.
இதோ குறள்,
மிகினுங் குறையினு நோய்செய்யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று. ( குறள் – 941 )
அதற்குப்
பரிமேலழகர் கூறும் விளக்கம்,
“நூலோர் எண்ணியவெனவே, அவர் அவற்றான் வகுத்த வாதப்பகுதி, பித்தப்பகுதி, ஐப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது, சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல் இவை இரண்டும் இங்ஙனமன்றி மிகுதல் குறைதல் செய்யின், அவை தத்தம் நிலையின்நில்லாவாய் வருத்தும் என்பதாம். காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்றும்மை விகாரத்தான் தொக்கது.
இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம், அவை துன்பம் செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன. இன்பம் செய்தற்காரணம் முன்னர்க்கூறுப.”
இன்னும் பரிமேலழகரால் நாம் அறிவன நிறைய.
தொடர்வோம்.
பட உதவி- நன்றி https://encrypted-tbn3.gstatic.com/images
#நம் மனதில் ஓடுகின்ற எண்ணங்கள் மிக அதிகமாக எல்லை கடந்து ஓடினாலோ அல்லது சிந்தனையின் அளவு குறைந்தாலோ அது உடலுக்கு நோய் செய்யும்.#
ReplyDeleteஇதை அடிப்படையாய் வைத்து அடுத்து வருகிற புதுக்கோட்டை பதிவர் சந்திப்பில் ஆராய்ச்சி செய்தால் நல்லது :)
தங்களது பரிந்துரைக்கு நன்றி பகவானே!
Delete//வாதம் பித்தம் சிலேத்துமம் என்னும் மூன்றின் சமநிலையை நாமே சீர் குலைக்கக் கூடியதாய் அமைவன நாம் உண்ணும் உணவும் நம்முடைய செயலும்//
ReplyDeleteஅற்புதம்
மேலும் அறியக் காத்திருக்கின்றேன் நண்பரே
நன்றி
தம +1
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி ஐயா!
Deleteமருந்தின் முக்கியத்துவத்தினை காரணகாரியத்துடன் அறிந்தேன். இலக்கியத்தின் விளக்கமாக ஆரம்பித்து நல்ல பொருண்மை பற்றி விவாதித்த விதம் நன்று.
ReplyDeleteதங்களின் மதிப்பீட்டிற்கு நன்றி ஐயா!
Deleteதமிழ் மருந்தின் மகத்துவம் அறிந்தேன்.
ReplyDeleteத ம 9
நாம் இழந்தது, பாராதது இன்னும் நிறைய இருக்கிறது நண்பரே!
Deleteமருத்துவத்தில் மட்டுமன்று.
பல துறைகளிலும்!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!
பரிமேலழகரால் மட்டுமல்ல... உங்களாலும் ஐயா...
ReplyDeleteநான் ஒன்றும் செய்ய வில்லை டிடி சார்.
Deleteவெகு சிலர்க்குச் சற்றுப் புரிதல் சிரமமுள்ள உரையொன்றை விளக்கிப் போயிருக்கிறேன் அவ்வளவே!
ஒருவகையில் இதுவும் பகிர்வு போலத்தான்.
இடையில் நம் சரக்கையும் சேர்த்து.
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!
அன்ள்ள அய்யா,
ReplyDeleteநோயற்ற வாழ்க்கைக்கு எங்கே சித்த மருத்துவம் படித்து விட்டீர்களோ என்று எண்ணினேன். பரவாயில்லை... நம்முடைய உடல் வாதம் , பித்தம், சிலேத்துமம் ( ஐ ) என்னும் மூன்றின் சமநிலைகளால் ஆனது என்ற விவரங்களை அய்யன் வள்ளுவனை மூலமாகக் கொண்டு பரிமேலழகரின் துணையுடன் விளக்கிய விதம் அருமை.
நன்றி.
த.ம. 11.
ஐயா வணக்கம்.
Deleteஇயலாத நிலையிலும் தாங்கள் இங்கு வந்து என் பதிவிற்குக் கருத்து இடுகின்றமைக்கு மிக்க நன்றி.
வாதம் பித்தம் சிலேத்துமம் இவை மூன்றும் உணவுடை செயல்களின் ஒவ்வாமையாலும் இயற்கை வேறுபட்டாலும் மிகுதலுங் குறைத்தலும் நேரும் பொழுதே, அவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும் என அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteதங்களின் தொடர்வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!
Deleteஅடுத்த பதிவினை எப்பொழுது இடப் போகிறீர்கள்?
காத்திருக்கிறேன்.
நன்றி.
நோய் வரக்காரணம் பித்தம், வாதம், சிலேத்துமம் (கபம் என்பது சரிதானா )இவை சமநிலையில் இல்லாமையே என்று அருமையான விளக்கம் தந்தீர்கள் மேலும் அறிய அவா.
ReplyDeleteஇருப்பினும் எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?
பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் யாரும் எதையும் கற்றுக் கொடுக்கவில்லையே. அவற்றுக்கும் நோய்கள் நோக்காடுகள் உண்டா . ஆறறிவு கொண்ட நமக்கு அனைத்தையும் கற்றுத் தர வேண்டியதாக உள்ளது அதுவுமில்லாமல் எதை சாப்பிடுவது எதை விடுவது என்ற குழப்பம் வேறு இவை எல்லாம் எதற்கு என்று புரியவே இல்லை,அத்துடன் குரங்கில் இருந்து மனிதன் உருவானான் என்றால் அவை பழங்களைத் தானே உண்டன சமைத்த உணவை சாப்பிடும் வழக்கம் அவைக்கு இல்லை தானே இந்த உண்ணும் உணவும் உடுத்தும் உடையும் பின்னர் வந்தது தானே. அறுசுவை உணவை அதன் பின்னர் தானே கண்டு பிடித்தார்கள்.அறுசுவை உணவுகளுக்கும் உடலுறுப்புகளின் செயல் பாடுகளுக்கும் தொடர்பு உண்டு என்றறிகிறேன். இதெல்லாம் எவ்வாறு சாத்தியம். உண்மையில் சமைக்காத உணவை தானே நாம் சாப்பிட வேண்டும் இல்லையா ஆதிமனிதனும் அதை தான் உண்டிருப்பான் இல்லையா இதற்கான விளக்கம் இருக்கிறதா தரமுடியுமா? தங்கள் பதிலை அறிய ஆவலாக உள்ளேன்.
மிக்க நன்றி பதிவுக்கு தொடர வாழ்த்துக்கள் ...!
சிலேத்துமமம் கபம் என்பது சரிதான் அம்மா!
Deleteஏதேது வள்ளுவனின் கருத்தை வழி மொழிந்தால் என்னை வைத்தியர் என்று எண்ணிக் கொண்டீர்கள் போலிருக்கிறது :))
இங்கு சொல்லப்படுவது ஒருவனின் அகக் காரணமாக வரும் நோய்கள்.
புறக்காரணமாக வருவனவும் ஊழினால் வருவனவும் ( பிறவியினால் வருவன, இன்றைய பரம்பரை நோய் போல) உள்ளன.
நெருப்பும் உப்பும் கண்டுபிடிக்கப்பட்ட பின்தான் செயற்கைச் சுவைக்கு மனிதன் பழக்கப்பட்டான் என்று நினைக்கிறேன்.
மனிதன் அடிப்படையில் தாவர உண்ணிதான் என்ற கருத்தும் உண்டு.
எனக்குத் தெரிந்தது அவ்வளவே..!!!
( இப்படி எல்லாம் என்னை மாட்டி விடாதீர்கள் அம்மா!)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
நல்லா மாட்டி விட்டேனா ஹா ஹா .... திருவள்ளுவரை தேடிப் பிடிக்க முடியாது இல்ல அதான் உங்களைக் கேட்கலாம் என்று நினைத்தேன். இப்போ அதற்கும் வேட்டா. ம்..ம் சரி சரி புரிகிறது நன்றி நன்றி !
Deleteஅவசியமான சிறப்பான பகிர்வு
ReplyDeleteநன்றி ஐயா!
Deleteஉணவு, சிந்தனை,செயல்,பேச்சு, உணவுச் சுவையின் சமச்சீர்,...என இன்னும் ....உள்ளவற்றையும் அழகாய் எடுத்துச் சொல்லி இருக்கிறீர்கள். சகோ. கண்டிப்பாக அறியப்பட வேண்டியது. நன்றிகள் த.ம +1
ReplyDeleteநன்றி சகோ!
Deleteபிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு ஒன்று இருந்தே ஆக வேண்டும் அல்லவா.. தமிழ்மணம்14
ReplyDeleteநிச்சயமாய்.
Deleteஅதிலென்ன சந்தேகம் வலிப்போக்கரே..!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி!
பரிமேலழகர் உரையைப் படித்தால் எதுவும் புரியவில்லை. உங்கள் விளக்கம் எளிதில் புரிகிறது. சித்த மருத்துவம் பற்றிச் சொல்லிச் செல்கிறீர்கள் என்று நினைத்தேன். முடிவாக தெரியாத குறளைச் சொல்லி அதற்கு உரையையும் விளக்கி விட்டீர்கள். சுவை, சக்தி, அளவு இது கூடினாலும் குறைந்தாலும் பிரச்சினை தான். இன்றைக்கும் பொருந்துமாறு உள்ளது, விளக்கத்துக்கு நன்றி.
ReplyDeleteபழைய உரைகள் என்பவை நமக்குக் கிடைத்திருக்கின்ற சுரங்கங்கள் சகோ.
Deleteசிக்கல் என்ன வென்றால் வழி கண்டுபிடித்து உள் நுழைந்து அதில் உள்ளவற்றை எடுத்து வெளி கொண்டு வருவது சிரமமாய் உள்ளது.
அது பண்டிதத் தமிழ்.
நமக்குப் புரிந்தால் இனிமையாய் இருக்கும்.
புரியும் மொழியில் சொலலப்படவேண்டும்.
அது மாபெரும் தமிழறிஞர்கள் செய்ய வேண்டிய பணி.
இது கான மயிலாட வேண்டிய இடத்தில் வான் கோழியின் ஆட்டம்.
அவ்வளவுதான்.
வருகைக்கும் தொடர்கின்றமைக்கும் மிக்க நன்றி.
எண்ணம், பேச்சு, செயல் ஆகியவைகளுக்கு உடல் நலத்துடன் நேரடி தொடர்பு உண்டு என்ற கருத்து மிகவும் உண்மை.
ReplyDeleteதன் நவீன மருந்துகளின் பின்விளைவுகளை மிக தாமதமாக உணர்ந்துக்கொண்ட மேலைமருத்துவம் இன்று " positive thinking " நோக்கி திரும்பியுள்ளது !
வழக்கம் போலவே நாம் குழி தோண்டி புதைத்துவிட்ட நமது இயற்கை மருத்துவத்தை தோண்டி எடுத்து செல்வம் கொழிக்கும் வியாபாரமாக பெருக்க தொடங்கிவிட்டார்கள் !...
நாளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் அருகம்புல் சாற்றை " இதுதான் ஒஸ்தி ! " என சிலாகித்து குடிப்பார்கள் நம்மவர்கள்...
நன்றி
சாமானியன்
( சகோ... மறுபடியும் "பொறுமையா" படித்து கருத்து சொல்லுங்களேன்....! )
அண்ணா வணக்கம்.
Deleteஆம் இன்று ஒருங்கிணைந்த மருத்துவ நெறியாள்கை மனதையும் உடலையும் உட்கொள்வதையும் மையங்கொண்டதாய் விரிவு படுத்தப்பட்டுள்ளது.
உங்களின் கருத்து இப்பதிவிற்கு இன்னொரு துலக்கத்தைத் தர வல்லது.
பொறுமையாய்ப் படித்துக் கருத்துச் சொல்லி விட்டேன்.
படிப்பதற்கு உங்களுக்குத்தான் பொறுமை வேண்டும். ;))
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா.
அன்பு வலைப்பூ நண்பரே!
ReplyDeleteநல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.
முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!
கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )
சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
மற்றும்!
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
TM +1
வாழ்த்துகள் ஐயா.
Delete//இத்துணைச் செய்திகளையும் நான் கூறுவது, நாட்டுமருத்துவ நூல்களின் துணையோடோ அல்லது வேறெந்த வைத்தியப் பட்டறிவு கொண்டோ அன்று. ஒரு குறள் அதற்குப் பரிமேலழகர் சொல்லும் உரை// - நான் நினைத்தேன் இப்படித்தான் இருக்குமென்று.
ReplyDeleteபரிமேலழகர் ஒருவேளை மருத்துவராக இருந்திருப்பாரோ! இந்தப் பதிவுகளையெல்லாம் மொத்தமாய்த் தனியே தொகுத்து நூலாக்கி வெளியிட்டால் சித்த மருத்துவர்களே படித்துப் பயன்பெறக்கூடியதாய் அமையும்.
Deleteபண்டைய உரையாசிரிகள் பல்துறைப் புலமையாளர்கள்.
மருத்துவத்தில் இவர்கள் அறிவினைக் காண்பது போலவே, அரசியலில், வானியலில், சூழலியலில், நிலவியலில், அறிவியலில்,தர்க்கத்தில் இவர்களின் அறிவு நாம் கடக்கக் கடக்க வியக்க வைப்பதாய் இருக்கும்.
அவர்களிடம் குறை இல்லையா எனக் கேட்டால் நிச்சயம் இருக்கிறது. ஆனால் அவர்களின் அறிவுப் பெருக்கின் பேரொடையில் அவை சிறுதுரும்பாய்ப் போகும்.
எவ்வளவு நுட்பங்கள், தடைவிடைகள், விவாதங்கள், சம்மட்டி அடிகள் என்றெல்லாம் அவர்கள் காட்டிச் சென்றிருப்பதை நோக்க ஊன்றிப்படிக்கும் யார்க்காயினும் இதுபோன்ற ஆசிரியரிடத்துப் பாடம் கேட்கக் கொடுப்பினை இல்லையே என்று தோன்றும்.
எனக்குத் தோன்றி இருக்கிறது.
இத்தகவல்கள் சித்த மருத்துவர்கள் அறிந்தவையாய்த்தான் இருக்கும் என்றே எனக்குப் படுகிறது.
மருத்துவக் கருத்துகள் இன்னும் இருக்கின்றன.
அதைப் பரிமேலழகரைப் பார்ப்போர்க்காய் மிச்சம் வைத்துவிட்டுச் சற்று அரசியலுக்கு வரலாம் எனக் கருதுகிறேன்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ஆஹா தமிழ் மருத்துவ மகத்துவம், அருமை அண்ணா..
ReplyDeleteஉணவே மருந்து, மருந்தே உணவு :)
நீண்ட நாட்களுக்குப் பின்பான உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழச்சி சகோ..!
Deleteபார்த்தீர்களா... ஆடு போல காணுமிடமெங்கும் வாய் வைத்துப் போய்க் கொண்டிருக்கிறேன்.:))
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
ஆமாம் அண்ணா, இப்பொழுதெல்லாம் நிம்மதியாக அமர்ந்து எழுதுவது என்பது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.
Deleteபல விசயங்களும் அருமையாகச் சொல்கிறீர்கள் அண்ணா..இப்டி சொல்றீங்களே :)
வாதம் பித்தம் சிலேத்துமம் என்று பெயர் சொல்லிப் போகட்டும். எதன் அளவு எவ்வாறு இருக்கிறது என்பது பரிசோதனைக்கு உட்படுத்தித்தான் சொல்கிறார்களா.?நாடி பிடித்துப் பார்ப்பவன் வாய் மொழிதானே.
ReplyDeleteஐயா வணக்கம்.
Deleteநாடி பிடித்துப் பார்ப்பதுதானே ஐயா பரிசோதனையே..!
நாடி பிடித்துப் பார்ப்பவனின் வாய்மொழி போலத்தானே இன்று பரிசோதனைக் கூடங்களின் எழுத்து மொழியும்..!!!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
வணக்கம் ஆசானே,பரிமேலழகருக்கு நல்ல விளக்கம்.
ReplyDeleteஇது திருக்குறளுக்கான விளக்கம் இல்லை என்றுதானே சொல்ல வருகிறீர்கள் பேராசிரியரே :)
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
( பொதுவாக மனநிலை பிறழ்ந்தவர்களிடம் ( சிந்தனை அதிகரித்தல் அல்லது குறைதல், பேச்சு அதிகமாதல் அல்லது முற்றிலும் இல்லாமற் குறைதல் எனும் இவ்விரு இயல்புகளையும் பார்க்கமுடியும். )// ஆம்! மிகச் சரியே!
ReplyDeleteவாதம், பித்தம், சிலேத்துமம்....நீங்கள் சொல்லியதுதான்..) இதுதான் ஆயுர்வேதத்தில் கபம் எனப்படுகின்றது இல்லையா?
உலகாய்தத்தாரால் சொல்லப்ப்டும் கருத்து இதைப் போலத்தானோ. நம் உடல் பஞ்ச பூதங்களால் ஆனவை என்பது உண்மைதானே, வயிற்றில் நெருப்பு, நீர், காற்று, என்று இருப்பதால், எப்படி நம் பூமியில் இந்தப் பஞ்சபூதங்களில் ஏதேனும் ஒன்று தன் நிலையிலிருந்து பிறழ்கின்ற போது பல இயற்கைச் சீரழிவுகள் ஏற்படுகின்றாதோ அது போலத்தானே நம் உடலிலும் இந்த மூன்றிலும் குளறுபடிகள் ஏற்படும் போது நோய் வருகின்றது. ஆயுர்வேதத்தில் ஆகாஷ தத்துவம் என்றும் உடம்பில் இருப்பதாகச் சொல்லுகின்றது.....அது எப்படி என்ன என்று புரிந்து கொள்ள முடியவில்லை...
மிக மிக நன்றாக இருக்கின்றது ஆசானே! தொடர்கின்றோம்...
ஒரு புதையல் நிலவறையில் இறங்கி மாணிக்கத்தை கண்டெடுக்கும் பக்குவம் வாசிப்பை நேசிப்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம் ..
ReplyDeleteபணி தொடரட்டும் தோழர்
தம +
வணக்கம்!
ReplyDeleteபரிமே லழகரின் பட்டறிவைச் சொல்லும்
வரிமேல் விழியினை வை!
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்