ஒருகாலத்தில்
கல்வியையும் மருத்துவத்தையும் இருகைகளில் ஏந்தி, உயிர்களை அன்பு செய்யுங்கள் என்ற கோட்பாட்டைத்
தலையில் சுமந்து நாடெங்கும் அலைந்தவர்கள் சமணர்கள்.
அகிம்சை
என்றால் உயிர்களைக் கொல்லாமை என்று நாம் கூறுகிறோம்.
சமணர்களின்
கருத்துப்படி உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டும் அகிம்சை அல்ல. அவ்வுயிருக்கு நன்மை
செய்வதும் சேர்ந்ததுதான் அகிம்சை.
ஆபத்து
நிலையில் இருக்கின்ற ஓர் உயிரைக் காப்பாற்றாமல் போவது கூட அவ்வுயிருக்கு இழைக்கப்படும்
அநீதிதான் என்ற கொள்கை உடையவர்கள் சமணர்கள்.
இவர்களுடைய
கோட்பாடுகளைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்துவிடுவோம்.
நம்மிடம்
இந்த உலகத்தை இரண்டு கூறுகளாகப் பிரிக்க வேண்டுமென்றால் எப்படிப் பிரிப்போம்..?
கொஞ்சம்
யோசித்தால் நாம் விடையைச் சொல்லிவிடலாம்.
ஆம்.
உலகத்தில்
உள்ள அனைத்தையும் உயிர் உள்ளவை என்றும் உயிர் அற்றவை என்றும் பிரித்துவிட முடியும்.
இப்படி உலகை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறார்கள் சமணர்.
இதில்
உயிர் உள்ளவற்றைச் சீவன் என்றும் உயிர் அற்றவற்றை அசீவன் என்றும் குறிப்பிடுகின்றனர்.
சரி.அப்போ
கடவுள்………?
சீவனையும்
அசீவனையும் தாண்டி கடவுள் என்றொருவர் இல்லை என்கிறது சமண சித்தாந்தம்.
உலகாயுதத்தை
நாம் பார்த்தபொழுது அவர்கள், ஆகாயம் என்றொன்று இல்லை. நான்கு பூதங்களின் சேர்க்கையால்
தோன்றுவதே உடலும் அதில் உள்ள உயிரும் என்றும், அச்சேர்க்கை சீர்குலைந்தால் இரண்டும்
அழிந்து மீண்டும் பழையபடி நான்கு பூதங்களாகி விடும் என்று கூறியதைப் பார்த்தோம். (
காண்க – உலகாயதம்-கடவுளைக் கொன்றவனின் குரல் )
உலகாயதர் கொள்கைப் படி உயிர் அழியக்கூடியது.
சடப்பொருட்கள்
அழிவில்லாதவை.
உடல் தோன்றுவதற்கு முன்னும் உடல் அழிந்ததற்குப் பின்னும்
இருப்பதான உயிர் அல்லது ஆன்மா என்ற பொருள் இல்லை.
உலகம்
மாயை என்பதும், உயிர் என்னும் ஆன்மா அழிவற்றது என்பதும் வேதத்தை ஏற்பவர்களுடைய கருத்து.
( இது பொதுவான கருத்து. உயிர்-ஆன்மா வேறுபாடு உடையது என்கிறவர்களின் கருத்தை எல்லாம்
பார்க்க இருக்கிறோம். )
அவர்கள்
ஆன்மா ஒன்றே. அதுவே பரமாத்மா. அதைப் பலவாகக் கண்டு மயங்குவது அறியாமை. ஒன்றெனக் காண்பதே
அறிவு என்பார்கள்.
சமணர்,
உயிர் உள்ளன, உயிர் அற்றன ( சீவன், அசீவன் ) இரண்டுமே அழிவற்றவை. இரண்டுமே நிரந்தரமானவை என்ற கொள்கையை
உடையவர்கள்.
அவர்கள் உலகாயதர் போல் உயிர் இல்லை என்றும் சொல்லவில்லை. வேதாந்திகள் போல் ஒரே ஒரு உயிர்தான் இருக்கிறது என்றும் சொல்லவில்லை.
உயிர்கள்
உண்டு. அவை ஒன்றல்ல. அவை ஏற்கும் உடலுக்கேற்பப் பல என்கிறார்கள் சமணர்.
இந்த ஆன்மா மிகத் தூய்மையானது. அமைதியையும் ஞானத்தையும்
இயல்பாக உடையது.
மழை நீரைப்
போல.
நிலத்தின்
படும் மழைநீர், நிலத்தின் தன்மையை ஏற்பது போல, உயிரற்ற சடமான ( அசீவனான ) இந்த உடலுடன்
சேரும்போது உயிர் தன் தூய்மையையும் தனக்கே உரிய பேரறிவினையும் இழந்து சிற்றறிவு பெற்று
அல்லாடுகிறது.
ஆன்மாவிற்கு
உதவுவதாகச் சொல்லிக் கொண்டு இந்தப் புலன்கள் உலகோடு சேர்ந்து கொண்டு சீவனுக்குரிய இயல்பான
ஞானத்தை அடையவிடாமல் தடுத்து மறைக்கின்றன.
உண்மையில்
இந்தப் புலன்கள்தாம் ஆன்மாவை விழிக்கவிடாமல் செய்கின்ற கட்டுகள்.
அக்கட்டுகளை
அறுத்துவிட்டால் ஆன்மா தனக்கு உரிய இயல்பான ஞானத்தைப் பெற்றுவிடும். இதுவே கேவல ஞானம்
எனப்படும். ( கேவலம் என்றால் இங்குச் ‘சிறந்த’
என்று பொருள் ).
இப்படிப்
பட்ட உயிர்கள், புலன்களின் கட்டுக்களை அறுத்து இந்தக் கேவல ஞானத்தை அடையும் வரை மறுபடி
மறுபடி உடலை எடுத்துக் கொண்டே இருக்கின்றன.
சேரக்கூடிய
உடலின் புலன்களுக்குத் தகுந்தவாறு ஓரறிவு உயிர்கள் முதல் ஆறறிவு உயிர்கள் வரை உயிர்கள்
வேறுபடுகின்றன.
( ஓரறிவு முதல் ஆறறிவு வரை என்ற இந்த உயிர்கள் வகைப்பாட்டைக் கூறியதும் சமணக் கொள்கைதான். )
இதை எல்லாம்
விடச் சமணரின் உயிர் பற்றிய கொள்கை அறிய ஆச்சரியமூட்டுவது.
உயிருக்கு
எடையும் அளவும் உண்டு என்கின்றனர் சமணர்.
தான்
சேர்கின்ற உடலுக்கு ஏற்ற எடையையும் அளவையும் உயிர் பெறுகிறது என்கிறது சமணத் தத்துவம்.
உயிருக்குத்
தான் சேர்கின்ற உடலுக்கு ஏற்பத் தன் அளவைப் பெருக்கிக்
கொள்ளவும் சுருக்கிக் கொள்ளவும் முடியும்.
எனவே
சிறிய எறும்பின் உடலில் இருக்கும் உயிரானது அவ்வுடலை விட்டு நீங்கி மறுபடியும் ஒரு
யானையின் உடலில் புகுமானால் அந்த யானையின் உடலுக்கேற்ப தன் உயிரின் அளவைப் பெருக்கிக்
கொள்ளும்.
இதைப்
போலவே யானையின் உடம்பை விட்டு எறும்பின் உடலுக்குள் நுழைகின்ற உயிர் தன் அளவைச் சுருக்கியும்
கொள்ளும்.
உயிருக்கு
வடிவம் இல்லை. அது தான் ஏற்கின்ற உடலின் வடிவத்தைப் பெறுகிறது என்பது சமணர் நம்பிக்கை.
ஒரு குழந்தையின்
உடலில் இருக்கும் உயிர் அந்த உடல் வளர வளரத் தானும் அளவில் பெருக்கம் அடைகிறது என்று
கூறுகிறார்கள் சமணர்கள்.
உயிர்
பற்றி இவர்கள் ஏன் இப்படிக் கொள்கைகளைக் கொண்டிருக்கின்றனர்?
கைகால்
முறிவு , ஏதேனும் உறுப்புகளை உடலில் இருந்து நீக்கிவிடுதல் போன்றவற்றின் போது உடலெங்கும்
வியாபித்து இருக்கும் அந்த உயிர் சேதமடையாதா..?
அப்பொழுது
அது குறை உயிராய் மாறிவிடுமா..?
ஞானத்தை
இயல்பிலேயே கொண்ட உயிர் ஏன் இழிந்த உடலை எடுத்து இப்படிப்பட்ட சிற்றறிவில் சிக்கி அல்லாட
வேண்டும்?
இதற்கெல்லாம்
சமணரிடம் என்ன பதில் இருக்கிறது.
அறிய
சுவாரசியமானவை அவை.
காத்திருங்கள்.
பட உதவி - நன்றி http://cdn.pixelshooter.net/
தமிழ் மணம் 111
ReplyDeleteஇது ஒளியின் வேகம்.
Delete111
என்றாலும் கூட.
நன்றி நண்பரே!
ஒளியா ? ஒலியா ? கவிஞரே....
Deleteசிறந்த ஞானம் (கேவல) பற்றி அறிந்து கொண்டேன் அடுத்த பாகம் வரட்டும்.
ReplyDeleteசமணர்களின் பதில்கள் வரட்டும்.
ஆம்.
Deleteஅடுத்த பாகம் வரட்டும்.
நன்றி நண்பரே!
அன்புள்ள அய்யா,
ReplyDeleteசமணம் பற்றிய பல கருத்துகள் அருமை. – உயிரின் எடைஉயிர் பற்றிய கொள்கை அறிய ஆச்சரியமூட்டுவது என்று சொல்வது உண்மைதான்.
உயிருக்கு எடையும் அளவும் உண்டு என்கின்றனர் சமணர் என்பது பற்றி விளங்கிக் கொள்ள முடியவில்லை.
ஒரு கை ஓசை. விரிவாக எழுதமுடியவில்லை.
நன்றி.
த.ம. 2.
ஐயா,
Deleteவணக்கம்.
தங்களின் இச்சூழலிலும் பதிவைப் படித்துக் கருத்திட்டமைக்கு நன்றி.
ஒரு கை ஓசை.
அதற்கு இருவிரல்கள் போதுமே!
என்றாலும் ஓய்வில் இருங்கள்.
நன்றி.
காத்திருக்கிறேன்...தம +1
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி சகோ!
Deleteசமணத்தின் முக்கியக் கொள்கைகளில் ஒன்று உயிர் பற்றியது. அதனைத் தாங்கள் விவாதித்துள்ள விதம் புரியும்படி அருமையாக உள்ளது. சோழ நாட்டில் கும்பகோணம், கரந்தை, மன்னார்குடி, தீபங்குடி ஆகிய இடங்களில் சமணக்கோயில்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் பல இடங்களில் சமணர்கள் வாழ்கின்றனர். எனது களப்பணியின்போது தனியாகவும், நண்பர்களின் துணையோடும் 13 சிலைகளைக் கண்டுபிடித்துள்ளேன். விக்கி இணைப்பில் இதனைக் காணலாம். வரலாற்றுரீதியாக நான் அணுகியுள்ளேனே தவிர தத்துவ நோக்கில் அல்ல. பகிர்வுக்கு நன்றி. https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
ReplyDeleteவணக்கம் ஐயா!
Deleteதங்களைப் போல் களப்பணியோ, இவ்வளவு விரிந்த ஆய்வோ என்கிடத்தில் இல்லை. தாங்கள் காட்டிய இணைப்பில் தங்கள் பணிகள் பற்றி அறிந்து மிரண்டுதான் போனேன்.
இது பள்ளியின் புத்தகங்களோடு பெரும்பாலும் முடிந்துவிடும் சமண பௌத்தக் கொள்கைகள் கடந்து பொதுவான வாசிப்பிற்காக நான் அறிந்ததைப் பகிரும் முயற்சியே.
பௌத்தம் பற்றி யெல்லாம் உங்களைப் போன்றவர்கள் சொன்னால் அது எம்போன்றோர்க்கு மிக்க உறுதுணையாய் இருக்கும்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நெறிப்படுத்துதலுக்கும் நன்றிகள் !
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
சமணம் பற்றிதெளிவான விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.. கண்ம மறுபிறப்பு கோட்பாடு... தத்துவங்கள் நன்று.
சிறிய எறும்பின் உடலில் இருக்கும் உயிரானது அவ்வுடலை விட்டு நீங்கி மறுபடியும் ஒரு யானையின் உடலில் புகுமானால் அந்த யானையின் உடலுக்கேற்ப தன் உயிரின் அளவைப் பெருக்கிக் கொள்ளும்.
இதைப் போலவே யானையின் உடம்பை விட்டு எறும்பின் உடலுக்குள் நுழைகின்ற உயிர் தன் அளவைச் சுருக்கியும் கொள்ளும். ..
இதைப்போலதான் கீதையில் சொல்லப்படுகிறது நாம் பழைய ஆடையை களைந்து விட்டு புதிய ஆடையை அணிவதைப் போல...ஆன்மா ... சிறப்பான விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா வாருங்கள் ரூபன்,
Deleteஉங்களை இவ்வளவு விரிவாகப் பின்னூட்டம் போடச் செய்துவிட்டேனா? :))
உங்களுக்காகவே நிறைய எழுத வேண்டும்.
சைவம் வைணவம் போன்ற வைதிக சமயங்கள், சமணத்திலிருந்தும், பௌத்தத்திலிருந்தும் எடுத்துக் கொண்ட கருத்துகள் நிறைய....!
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வணக்கம் என் ஆசானே,ஆஹா தத்துவமா? எமக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் தாங்கள் ஏற்கனவே சொன்ன பதிவின் தொடர்ச்சியா?,,,,,,,,,,,,,,,,, அப்ப சரி,
ReplyDeleteசீவனையும் அசீவனையும் தாண்டி கடவுள் என்றொருவர் இல்லை என்கிறது சமண சித்தாந்தம்.
அப்பாடா, அப்பன்னா, இது நல்லா தான் இருக்கும் போல் இருக்கு,
சிறிய எறும்பின் உடலில் இருக்கும் உயிரானது அவ்வுடலை விட்டு நீங்கி மறுபடியும் ஒரு யானையின் உடலில் புகுமானால் அந்த யானையின் உடலுக்கேற்ப தன் உயிரின் அளவைப் பெருக்கிக் கொள்ளும்.
அப்போ குண்டடு உடலில் இருக்கும் உயிர் யானையின் உயிராகுமோ,,,,,,,,,,,,,,,,
அய்யா நான் வரலப்பா இங்கு,
உயிரின் எடை கிலோவா? கிராமா?
கரந்தையில் சமணர்கள் கோயில் உண்டு என கேள்விபட்டுள்ளேன். அது இப்போ பள்ளிக்கூடமாக உள்ளது என்றனர். சமணர்கள் மயில் தோகையுடன் ஆடையின்றி தெருவில் செல்வார்கள் என்று இப்போ உள்ள ஒரு 45/50 (அவர்கள் சிறுவயதில்)வயதுக்குள் உள்ளவர்கள் பார்த்துள்ளதாக கூறினார்கள்.
அவர்களின் சித்தாந்தமும் வித்தியாசமாகத்தான் உள்ளது.
அந்த சுவாரசியமான பதில் காண காத்திருக்கிறோம்.
நன்றி.
தம8
Deleteம்.ம் நானும் அறிந்துள்ளேன் தோழி மயில் இறகுகளால் மெல்ல தெருவை பெருக்கியபடியே நடந்து செலவார்கள் என்று ஏனெனில் சிறிய உயிர்களையும் மிதித்து கொன்று விடக் கூடாதென்றாமே. எத்தனை அக்கறை அவர்களுக்கு தான் உயிர்கள் மீது. ம்..ம் இப்போ சர்வசாதரணமாக கொன்று குவிக்கிறார்கள் மனிதர்களையே இங்கு. இது என்ன சாபமோ.
Deleteவாருங்கள் பேராசிரியரே!
Deleteஆசானே என அழைத்து என்னைக் கிண்டல் செய்வதை நீங்கள் விடப்போவதில்லை போல...!
கரந்தையில் சமணக் கோயில் உண்டு.
இன்னும் வழிபாட்டில் இருக்கின்ற கோயில் அது.
அங்கு நடக்கும் சடங்குகள் குறித்தான உங்கள் தமிழ்ச்சங்கத்தில் பயின்ற மாணவி ஒருவரின் எம்பில் ஆய்வேட்டை நான் பார்த்திருக்கிறேன்.
கல்லூரி நூலகத்தில் தேடினால் கிடைக்கும்.
சமணர்களைப் பற்றிப் பொதுவான கருத்து அவர்கள் ஆடையின்றிப் போவார்கள் என்றாற் போல...!
அவர்கள் சமணர்களில் சிறுபான்மையாய் முற்றும் துறந்த நிலையில் இருக்கும் திகம்பரர்கள் என்போரே...!
( திக் அம்பரர் - திசைகளையே ஆடையாக அணிந்தவர்கள் )
இன்னொரு பிரிவினர் வெள்ளுடை பூண்டுத் துறவு வாழ்க்கை வாழ்வோர் அவர் சுவேதாம்பரர் எனப்படுவோர்.
ஆனால் யாவர்க்கும் கொல்லாமை அறமே!
இது குறித்து இதன் தொடர்ச்சியில் பார்ப்போம்.
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.
உயிரைப் பற்றி இத்தனை விவரங்கள் சமணத்தில் சொல்லப் பட்டிருக்கிறதா ஆச்சர்யமூட்டும் பதிவு!
ReplyDeleteத ம 9
வாருங்கள் நண்பரே!
Deleteசமணம் பெரும் கடல்தான் நண்பரே! நான் இதுபோல் ஆயிரம் பதிவுகள் இட்டாலும் அவை ஒரு துளியளவு போலும் இல்லை. துமி அளவே!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ஞானத்தை இயல்பிலேயே கொண்ட உயிர் ஏன் இழிந்த உடலை எடுத்து இப்படிப்பட்ட சிற்றறிவில் சிக்கி அல்லாட வேண்டும்?
ReplyDeleteசுவாரசியமான பதிலுக்காக காத்திருக்கிறேன் ந்ண்பரே
நன்றி
தம +1
சமணம் என்றல்ல எல்லா மதங்களும் சிக்கி இடப்படும் இடங்களில் இதுவும் ஒன்று.
Deleteசமணம் என்ன சொல்கிறது என்பதைப் பகிர்கிறேன்.
நன்றி கரந்தையாரே!
அட ஆன்மாவை காக்க வேண்டிய ஐம்புலன்கள் அதை திசை திருப்பி விடுகின்றனவா. அது தான் நமக்கு இத்தனை அல்லலா?எப்படி கட்டவிழ்ப்பது எப்போ எமக்கு கேவல ஞானம் கிடைக்கும். அறிய ஆவலாக உள்ளேன். ம்..ம்.ம்
ReplyDelete\\\சரி சரி ஞானத்தை இயல்பிலேயே கொண்ட உயிர் ஏன் இழிந்த உடலை எடுத்து இப்படிப்பட்ட சிற்றறிவில் சிக்கி அல்லாட வேண்டும்?
இதற்கெல்லாம் சமணரிடம் என்ன பதில் இருக்கிறது.
அறிய சுவாரசியமானவை அவை.////
சட்டென்று அடுத்த பதிவை இடுங்கள் ஆவல் தாங்கலை ஹா ஹா ....மிக்க நன்றி வாழ்த்துக்கள் ,,,!
வாருங்கள் அம்மா!
Deleteஅப்படிச் சட்டென்று அடுத்த பதிவை இட முடியுமா..?
கணினியில் உட்கார்வதே குதிரைக் கொம்பாகிவிட்டது.
நிச்சயம் தொடர்கிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அம்மா!
சுவாரசியமான பதில்களை அறிய காத்திருக்கிறேன்...
ReplyDeleteநன்றி டிடி சார்.
Deleteநேரம் இருப்பின் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Love-Yourself.html
ReplyDeleteபார்த்தேன்.
Deleteஅலைபேசியில் பார்த்ததால் உடனே கருத்திட முடியவில்லை.
உங்களின் கருத்திற்கு மாறாகச் சமணர்களின் கருத்து இருக்கிறதுதானே :))
பார்ப்போம்.
நன்றி.
சுவாரஸ்யம் கூட்டும் பதிவின் தொடர்ச்சிக்கு காத்திருக்கிறோம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!
Deleteஅறிய சுவாரசியமானவை அவை.....அறிய ஆவலோடு காத்திருக்கிறேன் :)
ReplyDeleteஉங்களுக்குச் சுவாரசியமாய் இருக்குமா என்பது தெரியவில்லையே :))
Deleteநன்றி.
உயிரின் எடை பற்றியெல்லாம் இன்றே தெரிய வந்தது.
ReplyDeleteஇல்லறத்தாருக்கும் துறவறத்தாருக்கும் தனித்தனியே விரதங்களை வகுத்தவர்களும் சமணர்கள் என்று படித்திருக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி ஆசிரியரே.
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி கவிஞரே!
Deleteஎம் மதமும் சம்மதம் என்பதால் , நான் மதங்கள் பற்றி ஆய்வதோ அறிவதோ இல்லை!
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!
Deleteசித்தாந்தங்கள் சித்தாந்தங்கள் ....இதை எல்லாம் படிக்கச் சுவையாய் இருக்கலாம். ஆனால் நம் போன்ற சாதாரண மனிதர்கள் என்ன நினைக்கிறோம். சந்தடி சாக்கில் என் இரு பதிவுகளின் சுட்டிகளைத் தருகிறேன் ஒரு சாதாரணனின் எண்ணங்களும் அவை ஏற்படுத்திய கருத்தாடல்களும் சுவையாய் இருக்கும் படித்துப்பாருங்கள்
ReplyDeleteஅறியாமை இருள் gmbat1649.blogspot.in/2011/05/blog-post_6857.html
விடியலுக்காகக் காத்திருக்கிறேன் gmbat1649.blogspot.in/2011/02/blog-post_20.html
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா!
Deleteநிச்சயம் படித்துப் பார்க்கிறேன்.
சமணம் பற்றிப் பல செய்திகள் அறிந்து கொண்டேன்
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteசமண சமயத்தின் கோட்பாடுகள் (Jewels of Jains) சிலவற்றை எளிமையாக சுருங்க பதிவிட்டு விளக்கியமை நன்று. வாழ்த்துகள்.
ReplyDeleteவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteபிற உயிர்களைக் கொல்லாமல் இருப்பது மட்டுமல்ல, ஆபத்து சமயங்களில் உதவி செய்ய வேண்டியதும் அகிம்சையில் அடங்கும் என்ற சமணர்களின் கொள்கை மிகவும் பாராட்டப்பட வேண்டியது.
ReplyDeleteசீவன், அசீவன் இரண்டுமே அழிவற்றவை; உயிர் சேர்கின்ற உடலுக்கேற்ப எடையும் அளவும் பெறுகிறது; ஓரறவு முதல் ஆறறறிவு பற்றிய வரையறை என சமணத் தத்துவம் பற்றித் தெரியாதவைகளை அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி! தொடருங்கள்.
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ!
Deleteஇதுவரை அறியாத மிகச் சுவையான தகவல்களுக்கு நன்றி ஐயா!
ReplyDeleteஉயிர், ஆன்மா பற்றித் தாங்கள் இங்கு கூறியுள்ள சமணக் கருத்துக்கள் பலவும் இன்று இந்து சமயக் கொள்கைகளாகக் கருதப்படுகின்றன. இதை பாரதியாரும் தனது பகவத் கீதையில் கூறுகிறார். சமண, புத்த சமயங்களால் இந்து சமயம் அடைந்த வீழ்ச்சியிலிருந்து அதை மீட்க முயன்ற ஆதி சங்கரர் சமண, புத்த சமயங்களிலிருந்து நல்ல கருத்துக்கள் பலவற்றை இந்து சமயத்தில் சேர்த்தார் என்று அவரே கூறியுள்ளார். இன்று இந்து சமயத்துகாகக் கொடி பிடிக்கிற எத்தனை தற்குறிகளுக்கு இந்த வரலாறு தெரியும்!
வைதிக சமயங்கள் தமக்கு முன் உள்ள சமண பௌத்த சமயங்களில் கருத்துகளுள் ஏற்பன நல்லன அங்கீகாரம் பெற்றுத்தார வல்லன பலவற்றை ஏற்றுத் தமதாக்கி மொழிந்தவையே!
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
வெட்டுப்பட்ட உடலின் அளவாக சுருங்கும் தன்மை கொண்டது உயிர். சமண ஆகமம் சமயசாரமும் ஆதி சங்கரரின் நிர்வாண சதகமும் உயிர் பற்றிய சில ஒத்த கருத்துக்களை கூறியுள்ளன. படிக்கவும் :
ReplyDeletehttp://solkaruman.blogspot.in/2015/02/meetingpoint-harmony-samayasaram.html
வாருங்கள் ஐயா!
Deleteஉங்களின் வருகைக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் என் நன்றிகள்.
தங்களின் தளம் கண்டேன் கருத்துகள் அறிந்தேன்.
வெகுவாக அறியப்படாத சமணக் கருத்துகளை யாவரும் அறியத் தருகின்றமைக்கு முதலில் நன்றி.
சமணம் பற்றிய படித்த அறிவே என்னிடத்தில் உள்ளது. நீங்கள் அதைக் கடைபிடித்து ஒழுகுபவர் என்று நினைக்கிறேன்.
இன்னும் குறைந்த பட்சம் மூன்று பதிவுகளாவது சமணத் தத்துவங்களை விளக்கத் தேவைப்படலாம் என்று நினைக்கிறேன்.
சமய ரீதியில் ஆழந்து நோக்க உங்களைப் போன்றவர்களுக்கு இங்கு ஒன்றுமிருக்காது.
பொதுவாசிப்பிற்குச் சமணம் பற்றிய எளிய அறிமுகமாகத்தான் இந்தப் பதிவுகளை அமைக்கக் கருதினேன். அது பற்றிய ஆழ்ந்த ஞானமொன்றும் எனக்கில்லை.
சீவக சிந்தாமணி போன்ற சமண நூற்பயிற்சிக்கு இவ்வறிவு கூடுதல் தெளிவினை நல்கும். ஏன் திருக்குறள் பற்றி அறியவே சமணத் தத்துவங்கள் பெரிதும் உதவும்.
அன்றியும் பாடப்புத்தகத்தில் சமணம் பற்றிய சில தவறான கருத்துகள் இருப்பதாகக் கருதுகிறேன்.
உதாரணமாகச் சமண சமயத்தைத் தோற்றுவித்தவர் மகாவீரர் என்பது போன்று.
சமணம் அவர் தோன்றுவதற்கு முன்பே இருந்தது என்பதும், அதைத் தோற்றுவித்தவர் மகாவீரர் அல்லர் என்பதும் நான் அறிந்தது.
படித்தறிந்ததுதான்.
ஆனால் இன்னும் சில தரவுகளைத் தேடுகிறேன்.
உங்களைப் போன்றவர்கள் அதிற் தெளிவிருந்தால் பகிரலாம்.
நீங்கள் கூறிய ஆதிசங்கரரின் கொள்கை அத்வைதமும், ஏகான்மவாதமும், மாயாவாதமும் அல்லவா?
சமணக் கொள்கைகளை அது ஒத்திருத்தல் எனக்குப் புதிய செய்தி!
பொதுவாக அவர் தமக்கு முன் உள்ள சமயக் கொள்கைகளை எடுத்து அவற்றை வழிமொழிந்தவராகவே தோன்றுகிறது.
அவர் கொள்கைகளை விளக்க வேண்டுமானால் கருத்து முதல் வாதத்தைப் பற்றி எழுத வேண்டிவரும்.
உங்களிடம் வேண்டுவது , இங்கு நான் சமணம் பற்றிப் பதியும் கருத்துகளில் ஏதேனும் தவறான தகவலோ கருத்துப் பிழையோ இருந்தால் தயங்காமல் சுட்ட வேண்டும் என்பதே!
நன்றியுடன் திருத்திக் கொள்வேன்.
தங்களின் வருகைக்கும், இணைப்பினைக் கொடுத்தமைக்கும் மீண்டும் நன்றிகள்.
நெறிப்படுத்துங்கள்.!
என்ன... சமண சமயத்தை நிறுவியவர் மகாவீரர் இல்லையா?!! ஆகா! மேட்டர் பெரிசாப் போகுதே!
Deleteசமணத் தத்துவங்களைப் பாடப்புத்தகங்களில் படித்திருந்தாலும், இங்கு நீங்கள் எழுதியிருப்பது சுவாரஸ்யமாகவும், சிறிது வித்தியாசமாகவும் இருக்கின்றது. இவ்வளவு விளக்கமாகப் படிக்கவில்லையே! பௌத்தம், சமணம், சைவம், வைணவம், (சைவ, வைணவத்திலிருந்து மாறுபடும் மத்வாச்சாரியாரின் தத்துவம்) இவை அனைத்துமே சில ஒற்றுமைகள் இருந்தாலும் இந்த ஆன்மா, பரமாத்மா பற்றிய கருத்துகளில் வேறுபடத்தான் செய்கின்றன. நீங்கள் சொல்லியது போல் சைவம், வைணவம் இரண்டும், சமண, பௌத்த தத்துவங்களில் இருந்து சில பல நல்ல, அந்தக் கருத்துகளுடன் இசைபவற்றை எடுத்துக் கொள்ளப்பட்டவையே.....இந்த ஆத்மா பரமாத்மா, ஜீவாத்மா என்பதெல்லாம் கொஞ்சம் தலை சுற்ற வைக்கின்றன என்றாலும், என்ன என்று அறிந்து கொள்ள மீண்டும் வாசிக்கின்றோம்....தொடர்கின்றோம்....இந்த மர மண்டைகளில் பதிகின்றதா என்று பார்ப்போம்...
ReplyDeleteவணக்கம் பாவலரே !
ReplyDeleteநீண்டநாளாய் நான் எதிர்பார்த்திருந்த பதிவு இப்போதான் படிக்கக் கிடைத்தது நன்றி
சமணக் கொள்கைகளில் கொல்லாமை மட்டும் என்னைக் கவர்ந்தது மற்றையவை எல்லாம் ஆராய எனக்குத் தகுதி இல்லையே ........! மிகுதியையும் தொடர்கிறேன் !
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
தமிழ்மணம் கூடுதல் ஒரு வாக்கு
இன்று தான் இத்தொடரைப் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்..அடுத்தப் பதிவிற்கு ஓடுகிறேன் :-)
ReplyDeleteதாமதமாகப் படிப்பதில் இப்படி ஒரு லாபம்
தம +1
வணக்கம் சார்,
ReplyDeleteசமணம் பற்றிய ஒரு அடிப்படையும் தெரியாத எனக்கு,
எடுத்ததும் பதிவை வாசிக்கும்போது கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது.
உடனே விக்கியில் சமண தத்துவம் பற்றி அடிப்படை படித்ததும் தெலிவு வந்தது.
பதிவோடு மாற்று கருத்து இருந்தாலும் எனக்கு சமணம் என்ன சொல்கின்றன வாசிக்க ஆர்வமாக இருக்கு.
அந்த வகையில் சமணம் தொடரின் முதல் பதிவே மிகவும் பிடித்துவிட்டது சார்.
அடுத்த பகுதியை வாசிக்கச் செல்கிறேன் ...
//"அவ்வுயிருக்கு நன்மை செய்வதும் சேர்ந்ததுதான் அகிம்சை.//" - இது வரைக்கும் தெரியாமல் இருந்திருக்கேனே!
ReplyDeleteசுவராசியமான பதிலுக்காக நாளை போய் பார்க்கிறேன் ஆசானே...
பெரியதின் ஆவி பெரிது
ReplyDelete