தெளிவிற்கும்
மனதில்‘உன் தெளியாத நினைவிற்கும்
தேக்கங்கள் என்றும் இல்லை! – என்றன்
ஒளிவிற்கும்
நான்செய்த ஓராயிரம் கவிக்கும்
ஒளிசேர்க்க நீயும் இல்லை!
சிறகோங்கப்
பறந்திட்டுச் சிகரங்கள் தனைக்காணச்
சிந்தித்த நெஞ்சம் அன்று! - உன்றன்
உறவேங்க
உயிர்வாட உண்மைநிலை அறியாமல்
உள்ளத்தைக் கெஞ்சும் இன்று!
பகல்கண்டு
பாய்ந்தோடும் இரவைப்போல் உனைப்பார்த்தும்
பாராமல் ஓடு கின்றேன் ! – நீயென்
அகம்‘ஆண்ட
கதையெண்ணி அகம்மாண்ட நேரத்துன்
அன்பென்னில் தேடி நின்றேன்!
வானத்தில்
நிலவாய்‘என் வாழ்விற்குள் நீநிற்க
வாடாது குவியும் உள்ளம் – நீயும்
நானாக
வாழ்நேரம் நனவென்று கொண்டாடி
நொடிக்கும்‘ஓர் கவிதை சொல்லும்!
முடியாத
செயலிற்காய் முனைகின்ற என்நெஞ்சில்
முளைக்கின்ற பூக்கள் நோகும்! – என்றும்
விடியாத
கடலாழம் விழிமூடிக் கிடந்தாலும்
விதியுன்னை நோக்கிச் சாகும்!
இப்பிறவி
எனைவிட்(டு) அப்புறத்து போனாலும்
என்றென்றும் உன்னைக் காப்பேன் – இனி
எப்பிறவி
பெற்றாலும் என்னோடு நீவேண்டும்
என்றவரம் இன்று கேட்பேன்!
நல்லகவி நண்பரே....
ReplyDeleteஎல்லா ஏக்கங்களும்...
நீங்(க)கி வர(ம்)வேண்டும்.
இரட்டுற மொழிதலா கில்லர்ஜி!
Deleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!
இழப்பின் வலி சொல்லும் கவிதை...
ReplyDeleteவாசிப்போர்க்கும் வலிக்கும் ...
வலியும் ஒரு வாசிப்பு அனுபவமே ...
ரொம்ப நாளாயிற்றே தோழர் பார்த்து....?
Deleteவாசிப்பும் உங்கள் கருத்தும் காண மகிழ்ச்சி!
"சிறகோங்கப் பறந்திட்டுச் சிகரங்கள் தனைக்காணச்
ReplyDeleteசிந்தித்த நெஞ்சம் அன்று! - உன்றன்
உறவேங்க உயிர்வாட உண்மைநிலை அறியாமல்
உள்ளத்தைக் கெஞ்சும் இன்று!" என்ற அடிகளின்
உண்மைக்குத் தலைவணங்குகின்றேன்.
ரசனைக்கு நன்றி அய்யா!
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
அழகிய கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
த.ம 1வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ரூபன்!
Deleteவரம் கிடைக்க வாழ்த்துக்கள் !
ReplyDeleteத ம ?
தங்கள் வாழ்த்தும் மனதிற்கு நன்றி!
Deleteவணக்கம் ஐயா!
ReplyDeleteவிழிநீர் சொரிந்துநீ விடுகின்ற பெருமூச்சில்
மொழிகூட மௌனமாய்ப் போகும்! வலிகண்டு
தனைநொந்து வழிதந்து விதிகூடத் தயவாக
வினைமாற்றி நீவாழ விலகி ஓடும்!
வரைந்த வலியை எப்படி ரசிப்பது?...
வார்த்தைகளால் உணர்விப்பது என்பதற்கு
உங்கள் பாக்கள் மிகச் சிறந்த உதாரணம் ஐயா!
பாக்களுக்கான வலிகளாய் மட்டும் அவை இருக்கட்டும்!
யாவும் நலமாக அமைய வாழ்த்துக்கள் ஐயா!
உங்களின் கருத்திற்கும் பாடல் வரிகளுக்கும் நன்றி சகோதரி!
Deleteநல்ல கவி நண்பரே
ReplyDeleteதாங்கள் கேட்கும் வரம் தங்களுக்குக் கிட்டும்
நன்றி அய்யா!
Deleteமிகவும் அருமை சகோ
ReplyDeleteநன்றி கவிஞரே!
Deleteஇப்பிறவி எனைவிட்(டு) அப்புறத்து போனாலும்
ReplyDeleteஎன்றென்றும் உன்னைக் காப்பேன் – இனி
எப்பிறவி பெற்றாலும் என்னோடு நீவேண்டும்
என்றவரம் இன்று கேட்பேன்!
உள்ளத்து உணர்வுகளை
கவிகளால் கழுவி
கரைகின்றாய் எமது
நெஞ்சை நீ கேட்ட
வரம் யாவும் காற்றோடு
போகாது கை வந்துசேர்ந்து
களைகட்ட வேண்டும் ஓர்நாள்
sorry சிரிப்பே வரலை சகோ ! வலி தரும் அழகான வரிகள்.
வாழ்த்துக்கள் சகோ...!
\\\வீடுகள் தோறும் வாசல் படி/// புதிய கவிதை
அய்யோ உங்கள் சிரிப்பில்லாத பின்னூட்டமா?
Deleteசரி அப்ப இதோடு நிறுத்திக் கொள்வோம்!
இனி சிரிக்கும் படி எழுதிவிட்டால் போகிறது!
நன்றி சகோதரி!
ஏக்கமும் மனதின் பாரமும் அருமையான கவிதையில் ..கவிதையில் மட்டுமே அவை இருக்கட்டும் என்று வேண்டுகிறேன்..
ReplyDeleteநீங்கள் கேட்கும் வரம் கிடைக்கட்டும்!
நிச்சயமாய், அவை தற்பொழுது கவிதையில் மட்டுமே இருக்கின்றன சகோதரி!
Deleteதங்களின் பரிவினுக்கு நன்றிகள்!
முடியாத செயலிற்காய் முனைகின்ற என்நெஞ்சில்
ReplyDeleteமுளைக்கின்ற பூக்கள் நோகும்! – என்றும்
விடியாத கடலாழம் விழிமூடிக் கிடந்தாலும்
விதியுன்னை நோக்கிச் சாகும்!//
மனம் கரைகின்றது! அத்தனை வலி மிக்க வரிகள்! வலிமிக்க வரிகளை சுவைக்க வைக்கிறது தங்கள் மொழி!
வலி சுவைத்தல்
Deleteஅருமையான கவிதைக்கான தலைப்பைத் தந்து விட்டீர்களே அய்யா!
கருத்தினுக்கு நன்றிகள்!
மீண்டும் மீண்டும் கடைசி பத்தியை படிக்கத் தூண்டும் வரிகள்.
ReplyDeleteரசனைக்கு நன்றி அய்யா!
Deleteஇப்பிறவி எனைவிட்(டு) அப்புறத்து போனாலும்
ReplyDeleteஎன்றென்றும் உன்னைக் காப்பேன் – இனி
எப்பிறவி பெற்றாலும் என்னோடு நீவேண்டும்
என்றவரம் இன்று கேட்பேன்!
அருமையா முடுச்சிருக்கீங்க. அழகா தொடங்கி அழுத்தமாய் முடிக்கிறீர்கள். அழகு:)) தமிழ் விளையாடி இருக்கிறது:)
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரி!
Deleteஅன்பு நண்பருக்கு
ReplyDeleteஇதயம் கனத்த கவிதை. இப்பிறவியிலேயே கேட்கும் வரைம் கிடைக்கட்டும்.
மணவையாரின் வருகைக்கும் ஆசிக்கும் நன்றி!
Deleteசந்தம் கைவரப்பெற்ற கவிஞரே, உமது எழிலான கவிதைக்கு உரிய பரிசில் வழங்கக் கடை ஏழு வள்ளல்கள் யாரும் இன்று உயிருடன் இல்லையே அன்று ஏங்குகிறேன்.
ReplyDeleteதங்களைப் போன்றோரின் பின்னூட்டங்களைக் காட்டிலும் பெரிதாகப் பெறத்தக்க பரிசு எதுவும் இருப்பதாக நான் நினைக்க வில்லை அய்யா!
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்!
ReplyDeleteவணக்கம்!
கொஞ்சும் தமிழில் கொடுத்த கவியடிகள்
நெஞ்சுள் நிறைந்து நிலைத்தனவே! - தஞ்சமென
உந்தம் வலையில்என் உள்ளம் கிடக்கிறது
சந்தத் தமிழால் தழைத்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
எஞ்சும் தமிழில் எனக்குத் தெரிந்ததைக்
Deleteகொஞ்சம் எடுத்துக் கொடுக்கின்றேன் - விஞ்சுபுகழ்
கொண்டவரைக் கண்டதமிழ்த் தொண்டரென நின்றவர்‘உம்
பண்மரபில் மின்னுவெண் பா
கருத்திற்கு நன்றி அய்யா!
வலி புரிகிறது
ReplyDeleteஉங்கள் மனம் தெரிகிறது !
Deleteமுதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அய்யா!
அண்ணா! இந்த போஸ்ட்டை கொஞ்சம் படிச்சுபாருங்க ப்ளீஸ்:)
ReplyDeletehttp://makizhnirai.blogspot.com/2014/09/award-thanks.html
அன்பினுக்கு நன்றியம்மா!
Deleteவணக்கம் சகோதரா !
ReplyDeleteஇன்பத் தமிழில் இனிக்கும் அருமையான பாமாலைகளைத் தினமும்
வழங்கி வரும் தங்களுக்கு இந்த அம்பாளடியாள் விருது ஒன்றினை
வழங்கிக் கௌரவிப்பதில் பெருமை கொள்கின்றேன் .தயவு கூர்ந்து
அதனைப் பெற்றுக்கொள்ள வருமாறு அன்போடு அழைக்கின்றேன் .
http://rupika-rupika.blogspot.com/2014/09/blog-post_14.html
தங்களின் விருதினைப் நன்றியுடன் பெற்றுக்கொண்டேன்.
Deleteதங்களின் அன்பினுக்கு நன்றிகள் !!
சோகத்திலும் பலவிதங்கள் உண்டு ! அடைய முடியாத அல்லது பிரிந்த காதல் மனம் மற்றும் பிரிந்த அல்லது மறைந்த மனைவியின் நினைவுகள் உள்ளங்கை அகல்விளக்கின் கதகதப்பை போன்று மனமெங்கும் மெல்லிய சூட்டினை படரச்செய்திடும் மென்சோகம். இழந்ததை எண்ணி கலங்கும் அதே வேலையில் வருத்தங்கள் இன்றி வாழ்ந்ததை எண்ணி மகிழும் நிலை.
ReplyDeleteநன்றி
சாமானியன்.
உள்ளங்கை அகல்விளக்கின் கதகதப்புப் போல் மனமெங்கும் மெல்லிய சூடு....
Deleteநீங்கள் கவிதை எழுதவும் வந்து விடலாம் அண்ணா!
நிறைய விஷயங்கள் நாங்களும் கற்றுக் கொள்வோம் தானே!
உண்மை
வெறும் பேச்சிற்காகச் சொல்ல வில்லை!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!
பூக்கள் நோகுதோ இல்லையோ என் புலனுக்குள் நோகுது
ReplyDeleteஆழ்ந்த தமிழின் அழகான கவியில் ஒளிந்திருக்கும் வலிகள் !
வாழ்த்துக்கள் குருவே வாழ்க வளமுடன்
குருவா.............????
Deleteநானா...............????
அன்புச் சீராளரே!
அதற்கான தகுதியோ வயதோ
முற்றிலும் எனக்கில்லை!
அதுவும் தங்களுக்கு!
உங்கள் நகைச்சுவைக்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டதே,,,,,,,,,,,,,!!!
என்நெஞ்சக் கூட்டுக்குள் இனிக்கின்ற விழியாளின்
ReplyDeleteஎழில்போல இதையும் கண்டேன் - காலம்
வென்றாலும் தோற்றாலும் வேகாத உன்னுயிரில்
வெடிக்கின்ற பாக்கள் உண்டேன் !
கோட்டைக்குள் இருந்தாலும் குடிலுக்குள் இருந்தாலும்
கோடிமுறை படித்து ரசிப்பேன் - இந்தப்
பாட்டுக்குள் நீவார்த்த பைந்தமிழாம் முக்கனியின்
பழச்சுவைகள் உண்டு ருசிப்பேன் !
சொல்ல வார்த்தை இல்லா கவிதை பலமுறை படித்தேன்
இன்னும் இன்னும் படிக்க தோணுகிறது பாவலரே
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்களிடமும் தமிழ் கற்க ஆசைப்படுகிறேன்
நன்றி
இப்படி யெல்லாம் நீங்கள் பின்னூட்டம் இட்டால், இதை ரசிப்பவர்கள் என் பதிவை “என்னடா எழுதுறான்“ என்று நினைத்து விட மாட்டார்களா ( நானே அப்படி நினைக்கிறேன் ) சீராளன் அய்யா!
Deleteநான் உங்கள் ரசிகன்!
என்னிடத்தில் நீங்கள் தமிழ்கற்பதா?
சும்மா தமாசுக்குக் கூட அப்படிச் சொல்லிடாதீங்கோ!
நான் “ கான மயிலாடக் கண்டாடும் வான்கோழி“
சரியா!
தங்களின் வருகைக்கும் மேலான கவிதைகளுக்கும் என்றும் நன்றி அய்யா!
''..தெளிவிற்கும் மனதில்‘உன் தெளியாத நினைவிற்கும்
ReplyDeleteதேக்கங்கள் என்றும் இல்லை!...''
வதை....யில் இங்கு வந்தால் இதை உன்
கவிதை வாசித்தால் மனம் நிறையும்!....
அதை எப்படிக் கூற!......அருமை...
இனிய வாழ்த்து....
சகோதரா எனது வலைப்பூச் சங்கதி எனக்கு ஒன்றும் தெரியாது...
அது தானியங்கியாக நடக்கிறது.(கூகிள் போலும்)
நான் தொழில் நுட்பத்தில் மிக வறியவள்.
எனக்கு மாற்றவும் தெரியாது.
ஆனால் தங்கள் கருத்து வந்தது. மிக நன்றியுடன் மகிழ்வும்.
வேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சகோ.
Deleteஇப்பிறவி எனைவிட்(டு) அப்புறத்து போனாலும்
ReplyDeleteஎன்றென்றும் உன்னைக் காப்பேன் – இனி
எப்பிறவி பெற்றாலும் என்னோடு நீவேண்டும்
என்றவரம் இன்று கேட்பேன்!
அப்படியா? உண்மையா? நடந்தால் சரி.
அருமையான வரிகள். நன்றி.