Pages

Sunday, 30 April 2017

ஆசீவகம் – 3 : நெருப்பினுள் இருக்கலாம்!


ஆசீவகர் தாழிகளுக்குள் அமர்ந்து தவம் செய்வது  பற்றி, ஆசீவகம் – 2: தாழியுள் கொதிக்கும் உணர்வுகள் என்னும் பதிவில் கண்டோம். அப்பதிவின் இறுதி, ஆசீவகர் மேற்கொண்ட நான்குவகைத் தவமுயற்சிகள் எத்தகு கொடுமையானவை என்பது குறித்து அடுத்த பதிவில் காணலாம் என்பதாக முடிந்திருந்தது.

அதன் தொடர்ச்சியாகவே இப்பதிவு அமைகிறது. ஆசீவகம் குறித்த இதற்கு முந்தைய பதிவுகளைப் பார்க்காதவர்கள் பின்வரும் பதிவுகளைப் பார்ப்பது புரிதலுக்கு உதவும்.

1. சமணம் சில அனுபவங்கள் - ஆசீவகத்தைத் தோற்றுவித்தவர், அதன் காலம் இந்தியத் தொல்சமயங்களான பௌத்தம் மற்றும் சமணத்திற்கு இடையேயான உறவு முதலியவற்றை அறிய இப்பதிவு துணைசெய்யும்.

2. ஆசீவகம்- காமம் எப்படித் தோன்றுகிறது? எனும் இந்தப் பதிவு,  ஏறக்குறைய ஒத்த காலத்தில் வழக்கில் இருந்த சமண பௌத்த சமயங்களில் இருந்து ஆசீவகம் கொள்கை அளவில் எப்படி வேறுபடுகிறது என்பதை உணர்த்தும்.

3. ஆசீவகம் தாழியுள் கொதிக்கும் உணர்வுகள் என்னும் இந்தப் பதிவு தமிழகத் தொல்லாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தாழிகள் இறந்தோரைப் புதைக்க மட்டுமே பயன்பட்டன அல்ல. அவை, ஆசீவகர் அமர்ந்து தியானம் செய்யவும் உயிர்விடவும் பயன்பட்டவையும் கூட என்பதை விளக்கும்.

சமண பௌத்த சமயங்களை ஒப்பிடும் போது, ஆசீவகரின் நெறி தவம் செய்வதைக் கடுமையாக வலியுறுத்துவதைப் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் தவமுயற்சியில்  நீரையும் அவரை விதைகளையும் மட்டுமே உண்டு உயிரினைத் தக்க வைத்துக் கொண்டனர்.  இதுபோன்ற தவமுயற்சிகளின் வழியாகப் பிறர்க்கு இல்லா ஆற்றலைத் தாம் அடைய முடியும், வீடுபேறடைய முடியும்  எனக் கருதினர்.

குறிப்பாக, உடலை வருத்துவதன் மூலம் தம் புலன்களை அடக்கிவிடலாம் என்பதும், அதனால் மனதை ஒருமுகப்படுத்தி, இறந்தகாலம் குறித்தும் எதிர்காலம் குறித்தும் ஒருவர் தம் மனத்தில் என்ன நினைக்கிறார் என்பது குறித்தும் அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெறமுடியும் என்பதும் அவர்களுடைய நம்பிக்கையாய் இருந்தது.

லோமஹம்ஸ ஜாதகா என்னும் நூல் இவர்கள் செய்த நான்கு வகை தவமுயற்சிகள் குறித்துப் பேசுகிறது.

அவை,

1. உக்கிடிக்கப் பதானம் – சம்மணமிட்ட நிலையில் உணவொழித்துத்                               தன்னை வருத்திச் செய்யும் தவம்.

2. வகுளி வதம் -  வவ்வாலைப் போன்று ஏதேனும் ஒன்றைப் பிடித்துத்
                  தொங்கியபடி செய்யும் தவம்.

3. கண்டகப்பசயம் – முள் படுக்கை அமைத்து அதன்மேல் படுத்துக் 
                   கொண்டு செய்யும் தவம்.

4. பஞ்ச தபனம் – ஐந்து புறம் நெருப்பினை மூட்டி அதன் நடுவில் 
                இருந்து செய்யும் தவம்.

இன்று நாம் இதனைப் படிக்கும்போது இம்முயற்சிகள் ஒரு கேலிப்பொருளாய்ப் பார்க்கப்படக்கூடும். ஆயினும் எத்தனை எத்தனை வழிகளில் இவர்கள் ஞானம் பெற விரும்பினார்கள் புலன்களை அடக்கப் பாடுபட்டார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ள  இக்குறிப்புகள் உதவும்.

இந்தத் தவ முறைகளில் பஞ்சதபனம் என்பதில் ஐந்துபுறமும் நெருப்பு என்பது ஐம்புலன்களைப் பாதிக்கும் புறத்தாக்கங்களின் குறியீடாக இருக்கலாமோ என எனக்குத் தோன்றுகிறது.

இவை மட்டுமன்றி, ஒற்றைக் காலில் தவமிருத்தல், மண்ணுள் உடலைக் கழுத்துவரை புதைத்துத் தவமியற்றல் போன்ற முறைகளையும் ஆசீவகர் பின்பற்றியிருப்பதைக் காண முடிகிறது.

ஆசீவகர் குறித்த அறிமுகத்தை இத்துடன் நிறைவு செய்து இனி அவர்களது கொள்கைகள் தத்துவங்கள் தமிழகத்தில் அவர்களுடைய தாக்கம் எவ்வாறிருந்தது என்பன குறித்தெல்லாம் அடுத்ததடுத்த பதிவுகளில் காண இருக்கிறோம்.




தொடர்வோம்.
பட உதவி - நன்றி /https://upload.wikimedia.org/wikipedia/commons

25 comments:

  1. ஆசீவகர் குறித்த தகவல் மேலும் அறிய தொடர்கிறேன்...

    கவிஞரே சிறிய ஐயம் "ஐாதகா" இது சரியான வார்த்தையா ?
    த.ம.

    ReplyDelete
  2. வணக்கம் நண்பரே!

    முதல் வருகையோடு தவறினையும் சுட்டியமைக்கு நன்றி.
    ஜாதகா என்றே இருக்க வேண்டும்.
    பிழைபடத் தட்டச்சுச் செய்தமைக்கு வருந்துகிறேன்.
    இது போன்று ஏதேனும் பிழைகள் தென்படின் குறிப்பிட வேண்டுகிறேன்.

    கருத்திட்டமைக்கும் தொடர்கின்றமைக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. "ஜாதகா" என்றே இருக்கவேண்டும் என்பதே எனது கணிப்பும்.

      அதுசரி... "ஐ" இதற்கு துணைக்கால் எப்படி அடிக்க வரும் ? இதுவும் எனக்கு குழப்பமாக இருக்கிறது....

      த.ம. இணையவில்லையே...

      Delete
    2. வணக்கம் நண்பரே!

      மீள் வருகைக்கு நன்றி.
      //"ஐ" இதற்கு துணைக்கால் எப்படி அடிக்க வரும் ? இதுவும் எனக்கு குழப்பமாக இருக்கிறது....//
      ஐா
      இப்படி வருகிறது நண்பரே! :)

      நன்றி.

      Delete
    3. எனது கணினியில் "ஐ" அடித்த பிறகு துணைக்கால் இந்த மாதிரி வராமல் மறைந்து விடுகிறது
      நான் சீரியஸாகத்தான் கேட்கிறேன்.

      ஒருவேளை வாத்தியார்களுக்கு மட்டும் கணினி ஸ்பெஷலாக கவனிக்குமோ......

      Delete
    4. நண்பர் கில்லர்ஜி! உங்கள் ஐயம் சரியானதே! ஐக்குப் பக்கத்தில் துணைக்கால் தட்ட விசைப்பலகையில் பெரும்பாலும் வராதுதான். ஆனால், தமிழில் நிறைய விசைப்பலகை முறைகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்றில் இது இயலக்கூடியதாக இருக்கலாம்.

      Delete
  3. இதுவரை நான் அறியாதன ஆசீவகர் பற்றிய செய்தி!எனக்கு இதிலெல்லாம் அவ்வளவு ஆர்வமில்லை!உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது!

    ReplyDelete
    Replies
    1. சங்க இலக்கியப் பாடற்கருத்துகளில் இவர்தம் கொள்கை உள்ளது ஐயா.
      அது அறிந்தபொழுது உருவான ஆர்வமே எனக்கும்.

      தங்கள் வருகைக்கும் உற்சாகப்படுத்துதலுக்கும் நன்றிகள்.

      Delete
  4. மேலும் அறிய காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வருக வலைச்சித்தரே.
      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் இன்று நீங்கள் செய்த உதவிக்கும் நன்றி.

      Delete
  5. #ஒரு கேலிப்பொருளாய்ப் பார்க்கப்படக்கூடும்#
    அப்படித்தான் தோன்றுகிறது ,இந்த வழிகள் எல்லாம் ஞானம் அடையவா ,இருக்கிற ஞானத்தையும் இழக்கவா:)

    ReplyDelete
    Replies
    1. வருக பகவானே!

      உங்கள் குறி, உக்கிடிக்கப் பதானம் என்பதாய் இருக்கும் என நினைத்தேன்.

      என் கணிப்புத் தவறாகி விட்டது.:(

      தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. ஞானம், மெய்யறிவு, மன ஒருங்கிணைப்பு இவற்றினை அடைய அவர்கள் காட்டிய தீவிரமும் அதின் மேல் கொண்ட ஆழ்ந்த பற்றும் புரிகிறது.
    தொடருங்கள். காத்திருக்கிறோம்!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திரு.பாண்டியன் சுப்ரமணியம்,
      தங்களைப் போன்று ஆர்வம் உடையவர்கள் இப்பதிவுகளைத் தொடர்தல் என்னை எழுத ஊக்குவிக்கும்.
      மிக்க நன்றி.

      Delete
  7. ..,இவ்வாறு கடும்தவம் செய்து பெற்ற பலன் மக்களை சென்று சேர்ந்த்தா என்பது கேள்வி. இதற்கும் இன்னபிற தவமுயற்சிகளுக்கும் மாற்றாகத் தோன்றியதே அரவிந்தரின் பூரணயோகம்.

    - இராய செல்லப்பா நியு ஜெர்ஸி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      கடும்தவம் செய்து பெற்ற பலன்கள் இவர்தம் கொள்கைகளைத் தமிழகம் தம் பெருமைக்கான அடையாளங்களுள் ஒன்றாய் எந்த அளவு இன்றளவும் ஏத்திப் போற்றிக் கொண்டிருக்கிறது என்பது குறித்து இப்பதிவின் தொடர்ச்சியில் தெரியவரும்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
  8. தொடருங்கள் நண்பரே
    தொடர்கிறேன்

    ReplyDelete
  9. முள்படுக்கை மீது படுப்பதும், நெருப்பு நடுவில் செய்வதும் நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கின்றது. புலன்களை அடக்க இவர்கள் மேற்கொண்ட வழிமுறைகள் மிகவும் கொடுமையானவை தாம்! ஆசீவகருடைய கொள்கைகள், தமிழகத்தில் அவர்களுடையை தாக்கம் ஆகியவற்றை அறிந்து கொள்ள ஆவல். தொடருங்கள். தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி.

      உங்கள் வருகையும் கருத்தும் என்றும் ஊக்கமளிப்பதாகும்.

      மிக்க நன்றி.

      Delete
  10. ஆசீவகர்களின் தவ முறைகள் பற்றிய இத்தகவல்கள் இதுவரை எங்கும் அறியக் கிடைக்காதவை. மிக்க நன்றி! பஞ்சபதனத்தின் ஐந்து பக்கத் தீ ஐம்புலன்களின் குறியீடாக இருக்கலாம் எனும் உங்கள் கணிப்பு நீங்கள் எந்தளவுக்கு நூல்களை ஆழ்ந்து படிக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. வியக்கிறேன் ஐயா!

    ஆசீவகர்கள் பற்றிய அறிமுகங்களை விட அந்தச் சமயத்தின் கொள்கைகள் அறியச் சுவையாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா.

      இந்தச் சமயத் தத்துவ இடுகைகளைப் பொறுத்தவரை என் முன் உள்ள முக்கிய தடை படித்தவற்றைப் புரியும்படி விளக்குதல் என்பதுதான்.

      புரிகிறது. அதை எப்படிப் புரியும்படிச் சொல்வது என்பதில்தான் மிகத்தடுமாறுகிறேன்.

      இவர்தம் கொள்கைகளை விளக்குமிடத்து இது மிகப்பெரும் சவாலாக உள்ளது.

      முடிந்தவரை முயல்கிறேன் என்பதன்றி வேறில்லை.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றிகள்.

      Delete
    2. மதிப்பிற்கு உரிய ஐயா,
      தபனம் என்ற சொல்லுக்கு சூரியன், நெருப்பு, கொடிவேலி என்று பல பொருள்கள் இருப்பதாய் அறிந்தேன்., ஐந்து புறமும் நெருப்பு என்ற கூற்று ஏதோ நாம் தவறாய் புரிந்துகொண்டோம் என்ற எண்ணத்தை எழுப்புகிறது. மன்னியுங்கள் . அது ஏன் நீங்கள் கூறியது போல "ஐம்புலன்களைப் பாதிக்கும் புறத்தாக்கங்களின் குறியீடாக இருக்கலாமோ " என்பதைதாண்டி அது ஏன் ஐந்து புலன்களையும் ஒவ்வொன்றாய் அடக்கும் பயிற்சியாகவோ அல்லது "எரித்து அழிக்கும்" பயிற்சியாகவோ இருக்கக் கூடாது !?

      Delete
  11. its very informative, merkathiya thathuvam (western philosophy ) patri um eluthinal nanraga irukum

    ReplyDelete