பிச்சைக்காரனின்
கையில் கிடைத்த அட்சயபாத்திரமாய்த்தான் இந்த இணைய அறிமுகம் எனக்கு வாய்த்தது.
என்னையும்
பொருட்படுத்தி என் எழுத்துகளையும் வாசிக்கும், கருத்திடும் அதனினும் மேலாய் அன்பு செலுத்தும் எண்ணற்றவர்களை இதன் மூலம் பெற்றேன்.
இங்கு
மட்டுமன்றி, அயல்நாடுகளில் இருந்தும் முகமறியா என்னையும் ஒரு பொருட்டாய் எண்ணி என்னைத் தேடி என் வீடு வந்தவர்கள் இணையம் மூலம்
மட்டுமே என்னை அறிந்தவர்கள்.
பின்னூட்டங்கள்
வாயிலாகப் பதிவுகளைப் படிப்பதோடு மட்டுமன்றி ஊக்குவித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நான்
கடன்பட்டிருக்கிறேன். இணையத்தியங்கும் உங்களைப்போன்ற எண்ணற்ற ஆளுமைகளிடமிருந்து நான் அறிவு பெற்றிருக்கிறேன்.
வெவ்வெறு
தளங்களில் புதிய புதிய உலகிற்கான மந்திரச்சாவிகளை எத்தனையோ முறை உங்கள் எழுத்துகள் எனக்கு அளித்துப்போய் இருக்கின்றன.
மிக நீண்டகால
காரணம் கூறாத இந்த இடைவெளியில் என் நலம் நாடி அனுப்பப்பட்ட உங்களில் பலருடைய மின்னஞ்சலுக்கு
நான் மறுமொழி கூறமுடியாது போனது.
என்னை
நன்கு தெரிந்த நான் மிக மதிக்கும் சிலருடைய தொலைபேசி அழைப்புகளையும் எடுக்க இயலாமல்
போனது.
எனது
குடும்பச்சூழலின் காரணமாகவே நான் பதிவுலகில்
தொடர்ந்து இயங்க இயலாமல் விலகி இருக்கவேண்டி இருந்தது. அதை விளக்குதல்
பரிதாபம் தேடுவதாய் அமையும். அதை நான் விரும்பவில்லை.
அதன் காரணமாகவே என்னைத் தொடர்புகொண்டவர்களுக்குப்
பதிலளிக்க இயலாமற் போனதேயன்றி ஒருபோதும் உங்களைப் புறக்கணித்தேன் என்று எண்ணிடாதிருங்கள்.
தற்பொழுது,
சற்றே அமைதி கிடைத்திருக்கிறது.
எழுதலாம்
என்ற நம்பிக்கை வாய்த்திருக்கிறது.
அதற்குமுன்
காரணமேதும் கூறாமல் நீண்டுபோன இந்த இடைவெளிக்கும், பதிலளிக்க இயலா மௌனத்திற்கும் உங்கள்
ஒவ்வொருவரிடத்தும் மன்னிப்பை வேண்டுகிறேன்.
இனித்தொடர்வோம்!
நன்றி
வாருங்கள் வாருங்கள்! உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். நீங்கள் மீண்டும் வருவீர்கள் என்ற நம்பிக்கையில்! மிக்க மகிழ்ச்சி.இனி மீண்டும் பதிவுலகம் தங்களின் அழகிய, இனிய தமிழால் புத்துணர்வு பெறும்.
ReplyDeleteமீண்டும் வந்ததற்கு மிக்க நன்றி, மகிழ்ச்சி ஆசானே/சகோ
தொடருங்கள், தொடருவோம்!!
வணக்கம் ஆசானே!
Deleteதங்கள் முதல் வருகைக்கும் என்மேற் கொண்ட அன்பினுக்கும் நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள் சார்...
ReplyDeleteபிரச்சினைகள் நீளும் போதெல்லாம் எழுத்தே நமக்கு அதிலிருந்து ஒரு அமைதி கொடுக்கும்...
தங்கள் வருகைக்கும் கருத்தினுக்கும் மிக்க நன்றி நண்பரே!
Deleteஇது விஷயமாக நானே உங்களை மீண்டும் சந்திப்பதாக இருந்தேன். மீண்டும் வலைப்பக்கம் எழுத வந்தமைக்கு நன்றி. வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் அன்பையும் என்மேற்கொண்ட அக்கறையையும் நன்கு அறிவேன் ஐயா!
Deleteதங்கள் வருகைக்கும் வாழ்த்தினுக்கும் நன்றிகள்!
நன்றாக எழுதுபவன் எழுதாமல் போனால் அவரை தேடுவது இயல்பு அதே சமயத்தில் பிரச்சனையில் இருக்கும் போது எல்லோருக்கும் பிரச்சனையை சொல்லிக் கொண்டிருக்கவும் முடியாதுதான் அதை புரிந்த்து கொள்ள முடிகிறது. எழுதுங்கள் வழக்கம் போல தொடர்கிறோம்
ReplyDeleteவாருங்கள் நண்பரே!
Deleteதங்கள் புரிதலுக்கு நன்றி!
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் தொடர்ச்சிக்கும் நன்றி!
அவர்கள் உண்மைகள்....சொல்லிய கருத்து தான் என் மனதிலும் தோன்றியது....
ReplyDeleteவாருங்கள் சகோ உங்கள் வருகை மகிழ்வழிக்கிறது...
தொடர்கிறோம்
வணக்கம் சகோ!
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்ச்சிக்கும் மிக்க நன்றி.
வருக! வருக!!சுவையான பதிவுகளைத் தருக!இரண்டு நாட்களுக்கு முன்புதான் தங்களைப் பற்றி திரு தமிழ் இளங்கோ அவர்களிடம் விசாரித்தேன்.தாங்கள் திரும்பவும் பதிவெழுத இருப்பது எல்லொருக்கும் மகிழ்ச்சியே!
ReplyDeleteவருக! வருக!!சுவையான பதிவுகளைத் தருக!இரண்டு நாட்களுக்கு முன்புதான் தங்களைப் பற்றி திரு தமிழ் இளங்கோ அவர்களிடம் விசாரித்தேன்.தாங்கள் திரும்பவும் பதிவெழுத இருப்பது எல்லொருக்கும் மகிழ்ச்சியே!
ReplyDeleteதங்களின் வருகைக்கும் அன்பினுக்கும் விசாரிப்பிற்கும் அளிக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ஐயா!
Deleteஉங்களியல்பு தெரிந்ததால்தான் வாளாவிருந்தேன் மீள்வரவு நல்வரவாகுக.
ReplyDeleteவணக்கம்.
Deleteதங்களின் புரிதலுக்கு நன்றி ஐயா!
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய ஐயா நேசமிகு வணக்கம்!
ReplyDeleteதாங்கள் மீண்டும் எழுத வந்தது கண்டு உண்மையாகவே உள்ளம் பூரிக்கிறேன். இந்த நீண்ட நெடும் இடைவெளியில் எத்தனையோ பேர் தங்களைப் பேசியிலும் மின்னஞ்சல் வழியிலும் நலம் உசாவியதாகக் கூறினீர்கள். ஆனால், அந்தப் பெரும் பட்டியலின் எந்த ஓரத்திலும் நான் இல்லை. சனவரியில் தாங்கள் எழுதிய அந்த (எங்களுக்கும்) வலி மிகுந்த பதிவுக்குப் பின் சில காலம் தாங்கள் எழுதாதிருந்ததை அடுத்து நான் தங்களை அழைத்து மீண்டும் தாங்கள் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். தாங்களும் சரி என்றீர்கள். ஆனால், அதற்குச் சில நாட்கள் கழித்து நண்பர் ‘கூட்டாஞ்சோறு’ செந்தில்குமார் அவர்களின் பதிவைப் படித்தபொழுதுதான் தாங்கள் இனி எழுதுவது என்பது ஐயத்திற்குரியதே என்று கூறியதை அறிந்தேன். அதனால் நான் அடைந்த திகைப்பும் வருத்தமும் கொஞ்சமில்லை. தளத்திலும் வந்து கருத்துரை மூலமாக மீண்டும் தாங்கள் எழுத வேண்டும் என்று கேட்டிருந்தேன். கிழமைக்கு ஒருமுறையாவது நினைத்துக் கொள்வேன், இப்படிக் கருத்துரைப் பெட்டிகள் வாயிலாக வலியுறுத்தாமல் ஒருமுறையாவது பேசியில் தொடர்பு கொண்டு கேட்டால் தாங்கள் மீண்டும் வந்து விட மாட்டீர்களா, மனம் மாறி விட மாட்டீர்களா என்று. இவை எல்லாவற்றுக்கும் காரணம், அந்த ஆசிரியன் ஒருவன் பேசியதால் தங்களுக்கு ஏற்பட்ட மன வேதனைதான் என்று நானாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். காரணம், அதுதான் தாங்கள் எழுதிச் சென்ற கடைசிப் பதிவு. எனவே, அப்படி மிகுந்த வேதனையோடு பதிவுலகை விட்டுச் சென்ற தங்களை, மீண்டும் வருமாறு எழுத்து வழியில் கேட்டும் வராதவரை, பேசி மூலம் வலுக்கட்டாயமாக அழைத்து வருவது புண்பட்ட தங்கள் மனத்தை மேலும் வேதனைப்படுத்தும் முயற்சியாக அமைந்து விடுமோ என்றெண்ணியே நான் கடைசி வரை தொடர்பு கொள்ளவேயில்லை.
இப்பொழுது, குடும்பச் சூழல் காரணமாகத்தான் தாங்கள் இத்தனை நாட்கள் எழுதாமல் இருந்தீர்கள் என்பதை அறிந்து இன்னும் என் வேதனை பன்மடங்காகிறது. என்ன பிரச்சினை, எப்பேர்ப்பட்ட பிரச்சினை என்று தெரியாவிட்டாலும், அது எப்பேர்ப்பட்ட பிரச்சினையாயிருந்தாலும் தாங்கள் பயின்ற தமிழின் துணை கொண்டு அதை வெல்வீர்கள், வென்றிருப்பீர்கள் என நம்புகிறேன்! பொதுவாக, வாழ்த்துக்களிலும் சாபங்களிலும் எனக்கு நம்பிக்கையில்லை. 2009 மே 18 முதல் அத்தகைய நம்பிக்கைகளை நான் இழந்து விட்டேன். இப்பொழுதும் நண்பர்கள் உறவினர்கள் போன்றோரின் பிறந்தநாள், திருமணம் போன்றவற்றுக்கு நான் வாழ்த்துத் தெரிவிப்பது கூட என் வாழ்த்துக் காரணமாக அவர்கள் நீடூழி நலம் வாழ்ந்து விடுவார்கள் என்பதால் இல்லை; மாறாக, குறிப்பிட்ட அந்த நிகழ்வுகளின்பொழுது அவர்கள் மீதுள்ள என் அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே நான் ‘வாழ்த்துக்கள்’ எனும் சொல்லைப் பயன்படுத்துகிறேன். ஆனால் இன்று, ‘வாழ்த்து’ என்பதற்கு உண்மையிலேயே ஆற்றல் இருக்குமானால் தங்கள் குடும்பப் பிரச்சினைகள் முற்று முழுதாகத் தீர வேண்டும் என நெஞ்சாரப் பணிவன்புடன் வாழ்த்துகிறேன்! காரணம், தங்கள் மீதான அன்பு மட்டுமில்லை, தங்கள் தமிழ் தொடர்ந்து தங்கு தடையின்றி முழு மனதோடு எங்களுக்குக் கிடைக்க வேண்டுமே எனும் தன்னலத்தினால்தான்.
தாங்கள் மீண்டும் எழுதத் தொடங்கியிருப்பது எனக்குக் விண்ணளாவிய மகிழ்ச்சியையும் குதூகலத்தையும் அளித்திருக்கிறது! மிக்க நன்றி! மிக மிக நன்றி!!
ஐயா வணக்கம்.
Deleteதங்கள் அன்பினில் நெகிழ்கிறேன்.
தங்களைப்போன்று என்மேல் அன்பு கொண்டவர்களைக் காணும்போதெல்லாம் நான் இதற்கு என்ன கைமாறு செய்வேனோ என்று அறியாமல் தவிக்கிறேன்.
“இதற்கெல்லாம் என் நோற்றேன் கொல்?” என்றுதான் தங்களைப் போன்றோரின் அன்பு காணத் தோன்றுகிறது.
முகமுகமறியாமல் தங்களைப் போன்றோர் என்மீது வைத்திருக்கும் பரிவும் நம்பிக்கையும் எதையும்தாங்கும் வலிமை தரும்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் என்றென்றும்.
//இதற்கெல்லாம் என் நோற்றேன் கொல்?// - தமிழை நோற்றிருக்கிறீர்களே, போதாதா? :-)
Deleteவலைப்பூவில் தங்களை மீண்டும் காண்பது மன நிறைவை அளிக்கின்றது ஐயா!
ReplyDeleteஐயா நலந்தானே?
Deleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.
வணக்கம் சகோ. தங்களின் இந்தப் பதிவு கண்டு மகிழ்கின்றேன். கூட்டாஞ்சோறு செந்தில அவர்களின் பதிவு மூலம் தாங்கள் இனிப் பதிவுலகம் வருவது சந்தேகம் என்றறிந்தபோது மிகவும் வருத்தமாயிருந்தது. உங்கள் பதிவுகள் இல்லாமல் பதிவுலகமே வெறிச்சோடிப் போயிருந்தது. தற்போது உங்கள் குடும்பப் பிரச்சினை சற்று ஓய்ந்து அமைதி கிடைத்திருப்பதறிந்து மகிழ்ச்சி. உங்கள் குடும்பத்தின் நிம்மதியும், மகிழ்ச்சியும் தங்களுக்கு என்றென்றும் நிலைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தரமான நல்ல பல பதிவுகளை வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். மிகவும் நன்றி!
ReplyDeleteவணக்கம் சகோ.
Deleteநண்பர் திரு செந்தில் அவர்கள் என்னை நேரில் சந்தித்திருந்தார். அப்பொழுது நான் அவரிடம் அவ்வாறு குறிப்பிட்டது உண்மையே!
“உங்கள் பதிவுகள் இல்லாமல் பதிவுலகமே வெறிச்சோடிப் போயிருந்தது.”
என நீங்கள் குறிப்பிட்டிருப்பது உங்கள் அன்பின் மிகை.
உங்கள் பதிவுகளையெல்லாம் இனிமேல்தான் படிக்க வேண்டும்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் எப்பொழுதும் நல்கும் ஊக்குவிப்பிற்கும் மிக்க நன்றி.
அட்சயப் பாத்திரத்தில் இருந்து இலக்கியச் சுவை விருந்துண்ண காத்துக்கொ ண்டிருக்கிறேன் :)
ReplyDeleteபகவானுக்குப் போகத்தானே பக்தனுக்கு :)
Deleteநன்றி பகவானே!
வருக..வருக...
ReplyDeleteநன்றி கவிஞரே!
Deleteவிஜூ!!! வாங்க வாங்க உங்களைக்காணவில்லையே என்று நேற்று தங்கை மைதிலியின் வலையில் ஒரு பின்னூட்டபோது நினைத்தேன். (அவரும் உங்களைப் போல் காணாமல் போய் 6மாதமாகிறது. நீங்கள் வந்துவிட்டதால் அவரும் வந்துவிடுவார் என்று நம்புகிறேன்) வாங்கய்யா... நிறைய வேலை கிடக்கு... எல்லாப் பிரச்சினைக்கும் ஏதாவது ஒரு தீர்வு வரும்தானே? அதை வேலை பார்த்துக் கொண்டே தேடுவோம். வழக்கம்போல் உங்கள் தமிழமுதைப் பருக நான் மட்டுமல்ல, வலைத்தமிழ் உலகே வாய்திறந்து கிடக்கிறது. த.ம.5
ReplyDeleteஐயா வணக்கம்.
Deleteமுதலில் தங்கள் அன்பினுக்கு நன்றி.
இது தங்களால் கூடிற்று.
மெல்ல பழைய தோழமைகளைப் பார்க்கும்போது மிகப்பலரும் பதிவெழுதி நாட்களாகிவிட்டதைக் காண்கிறேன். காணாத பதிவுகளை ஒவ்வொன்றாகக் காணவேண்டும். கருத்திட வேண்டும்.
மீண்டும் தாங்கள் என்மேற் கொண்ட அன்பிற்கும் ஊக்குவித்தலுக்கும் என்றென்றும் நன்றியுண்டு.
மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி புதுமை/வைக் கவிஞரே!
Deleteமீள் வருகைக்கு வாழ்த்துகள் பல...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDelete‘வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்காரம்...!’
‘இடைவெளி என்பது இடைவேளை அல்ல...!’
‘கனாக் காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல...
நிலாக் கால மேகம் எல்லாம்
உலாப் போகும் நேரம் கண்ணே!’
‘தலைவாழை இலைபோட்டு விருந்து வைப்பேன்...
தலைவா உன் வருகைக்கு தவம் இருப்பேன்...!’
நன்றி.
வணக்கம் ஐயா!
Deleteஎன் மீள் வருகையில் உங்கள் பங்கு இல்லாமலா?
நன்றி ஐயா.
மீண்டும் வருக... சுவையான பல பதிவுகள் தருக....
ReplyDeleteநன்றி நண்பரே!
Deleteவாழ்க்கை என்பதே மேடு பள்ளங்களால் நிறைந்ததுதானே
ReplyDeleteவருந்த வேண்டாம்
அனைத்தும் கடந்து போகும்
வலைக்கு வாருங்கள் நண்பரே
தங்களின் எழுத்துக்களைச் சுவைக்க ரசிக்கக் காத்துக் கொண்டிருக்கிறேன்
வருக வருக வருக
தங்களின் அன்பினுக்கு நன்றி கரந்தையாரே!
Deleteவருக! வருக!வாழ்த்துகிறேன்! காத்திருக்கிறேன் ஆவலோடு!
ReplyDeleteமிக்க நன்றி புலவர் ஐயா.
Deleteவருக ஐயா.தங்களின் பதிவுகளை காண ஆவலுடன் இருக்கிறேன்.
ReplyDeleteவணக்கம்.
Deleteதங்களின் முதல்வருகையும் கருத்தும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
என்றும் தங்கள் வரவு நல்வரவாகுக.
நன்றி.
வார்த்தைகளின்றி தவிக்கிறேன்.
ReplyDeleteஎன்ன சொல்வதென்றே தெரியவில்லை.
வருக வருக
வணக்கம் அண்ணா.
Deleteதங்கள்மனம் அறிவேன்.
நன்றி.
மீண்டு வந்ததற்கு நன்றி சார்! இடைவெளிகள் அதிக ஈர்ப்பை பெற்றுத் தரும்! தொடரட்டும் நம் நட்பு!
ReplyDeleteவணக்கம் நண்பரே!
Deleteதங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
நாம் அதிகம் எழுதுவதற்கும், திடீர்னு எழுதுவதை நிறுத்துவதற்கும் நம் மனநிலை, நம் தனிப்பட்ட சூழல்தான் காரணமென்று தெரிந்து இருப்பதால், யாரையும் வலியுறுத்தி நீங்கள் தமிழ்த்தொண்டு ஆற்றியே ஆகவேண்டும் என்று எழுதச்சொல்வது சரியா தவறா என்று தெரியவில்லை.
ReplyDeleteஅதனால் யாரையும் நட்பின் உரிமையால் "ஏன் நிறுத்திட்டீங்க? யாருக்குத்தான் பிரச்சினையில்லை? தொடர்ந்து எழுதுங்க!" என்றெல்லாம் நான் சொல்வதில்லை. என்ன பிரச்சினைனு தெரியாமல் பொத்தாம் பொதுவாக "எழுதுங்க" னுசொல்வது தவறுனு நினைக்கிறேன். பிறருக்காக மட்டும் நாம் எழுதிவிட முடியாது. நமக்காகவும்தான் நாம் எழுதுகிறோம். எழுதும்போது சுமை குறைய வேண்டும். எழுதுவது சுமையாக இருந்தால் அலல்து எழுதுவதால் சுமை அதிகமானால் நாம் எழுத முடியாது.
உங்க மனப்நிலைபடி எழுதுங்க, விஜு! :)
வணக்கம் திரு.வருண்.
Deleteதங்களின் வருகையும் மன உணர்வும் காண உவப்பு.
நீங்கள் சொல்வது போல, இவ்விடைவெளியில் என்னால் இணையம் வருதல் கூட இயலவில்லை என்பதே உண்மை.
உங்கள் மனதறிந்த கருத்திற்கு மிக்க நன்றி.
மகிழ்ச்சி......வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாரு்ங்கள் கவிஞரே!
Deleteநல்வரவு.
உங்கள் வலைத்தளத்திலும் பதிவொன்றும் இல்லையே...!
நலந்தானே?
எழுதுங்கள்.
நன்றி.