Pages
▼
Wednesday, 30 September 2015
Tuesday, 29 September 2015
பூனை நடனம்.
நிலத்தையும் மரத்தையும் விலங்கையும் புள்ளையும் கொண்டு
திணை வகுத்தோர் தமிழர் என்பது நமது பண்டைய பெருமிதம். உலகம் சிறுபறையெனத் தன்னை நம்மிடம் கையளித்திட்ட
பிறகு, ஓர் எறும்பு ஊர்தலின் போது ஏற்படும் அதிர்வையும் அதன் இன்னொரு பகுதியில்
இருந்து நாம் உணர வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆனால் யானைகளின் அசுர ஓட்டத்தைக் கூடக்
கேட்க மறுக்கின்ற செவிடர்களாய் நம்மிற் பெரும்பான்மையோர் இருக்கிறோம் என்பதே யதார்த்தம்.