இத்தலைப்பில் அமையும்
பதிவுகள் நீண்ட பதிவுகள் அல்ல.
ஐந்து நிமிடங்களுக்குள்
நீங்கள் படித்துக் கடந்து போகக்கூடியவை.
ஆங்கிலத்தைப் பொருத்தவரை
இது போன்ற பல முயற்சிகள் அம்மொழி வளரச் செய்யப்படுகின்றன. மொழிப் பயன்பாட்டையும்
மொழி பற்றிய புரிதலையும் மொழிச் செம்மையையும் மேம்படுத்துபவை இவை.
தமிழ் பற்றி இங்கு நான்
கூறப்போகும் செய்திகள் பலருக்கும் தெரிந்ததாக இருக்கலாம்.
வெகுசிலருக்குப் புதியதாக
இருக்கலாம்.
அறிந்தோர்க்கும்
அறியாதோர்க்கும், ஏதேனும் ஓர் இம்மி அளவேனும் தமிழ்மொழி பற்றிய இச்சிறுசிறு பதிவுகள் உதவுமாயின் அதுவே, இத்தொடரின் பயன்.
இனி,
உங்கள் தமிழைத்
தெரிந்துகொள்ளுங்கள் – ( 1 )
தமிழில் எழுத்துகள்
மொத்தம் எத்தனை ?
ஒன்றாம் வகுப்பில்
இருந்து முனைவர் பட்ட ஆய்வர் வரை தமிழ்நாட்டு மாணவரிடம் இதற்கு வெவ்வேறான விடைகள்
இருக்கின்றன.
அவை,
உயிர் + மெய் = 30
உயிர் + மெய் + ஆய்தம் =
31
உயிர் + மெய் + உயிர்மெய்
+ ஆய்தம் = 247
இவற்றுள் சரியான விடை
எது?
சரி இதற்கு விடையை நானே
சொல்லிவிடுகிறேன்.
தமிழில் உள்ள மொத்த
எழுத்துகள் 30 தான்.
247 என்று சொல்லும்போது
நாம் உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகளோடு சார்பெழுத்துகள் எனப்படும் ஆய்தத்தையும்
உயிர்மெய் எழுத்துகளையும் சேர்த்துக் கொள்கிறோம்.
நாம் இன்றைய பள்ளி
அளவிலான தமிழில் பெரிதும் பார்வை நூலாகக் கொள்வது (Reference Book) நன்னூல் என்னும் இலக்கண
நூலைத்தான்.
இந்த இலக்கண நூலின்படி
இந்தச் சார்பெழுத்துகளையும் சேர்த்து 247 எனச் சொல்கிறோம் என்றால் அப்படியும் சொல்ல
முடியாது.
ஏனென்றால் நன்னூல்
கருத்துப்படி சார்பெழுத்துகளையும் சேர்த்துத் தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் 399.
அடுத்து உள்ளது
முக்கியமான கேள்வி,
இன்று தமிழ்ப்பாடப்புத்தகத்தில்
மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 என முதன் முதலில்
வகைப்படுத்திய நூல் எது ?
விடை…………………………………….
தெரிந்தவர்கள் சொல்லலாம்.
தெரியாதவர்கள் என்னுடைய
முந்தைய பதிவுகளில் இதற்கான விடை இருக்கிறது. தேடிப்பார்த்துத் தரலாம்.
மற்றவர்கள்
காத்திருங்கள்.
எழுத்துப் பற்றிய அறிவில் இருந்து நம்முடைய தமிழைத் தொடங்குவோம்.
நம் தமிழை நாம் தெரிந்து
கொள்வது முக்கியம் இல்லையா ?
படம் உதவி - நன்றி.
https://encrypted-tbn2.gstatic.com/
இம்புட்டு நாளா இது கூட தெரியாம இருந்திருக்கியே மைதிலி:((அவ்வ்வ்வ்.
ReplyDeleteஆமாம் நீங்க இரண்டுமாசம் லீவ்ல இருந்திங்கல்ல..
Deleteமறந்திட்டேன்.
பரவாயில்லை.
கொஞ்சம் பிரேக்ல இருந்து கால எடுத்தா சரியாயிடும்:))
வணக்கம்
ReplyDeleteஐயா
எழுத்துக்களின் எண்ணிக்கை.. புதிய தகவலாக உள்ளது.. படித்தது. 247நன்னூல்படி 399 என்பது வித்தியாசமாக உள்ளது. பொறுத்திருந்து பார்க்கிறேன் மற்றவர்களின் கருதையும் பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன் .
Deleteதொடர்வதற்கும் ஊக்கப்படுத்துவதற்கும் நன்றிகள்.
அன்புள்ள அய்யா,
ReplyDeleteதமிழைத் தெரிந்துகொள்ளள தாங்கள் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது.
தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் 30 தான். 247 என்று சொல்லும்போது நாம் உயிர் எழுத்துகள், மெய்யெழுத்துகளோடு சார்பெழுத்துகள் எனப்படும் ஆய்தத்தையும் உயிர்மெய் எழுத்துகளையும் சேர்த்துக் கொள்கிறோம்.
மேலே உள்ள படமே தமிழ் சொல்லும் பாடமாக அமைந்திருக்கிறது... அருமை.
-நன்றி.
த.ம. 4.
பணிப்பளுவின் இடையிலும் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி அய்யா!
Deleteகவிஞரே இது கொஞ்சம் ரிஸ்க் போல தெரியுது இருங்க ரஸ்க் சாப்பிட்டு வர்றேன்.
ReplyDeleteதமிழ் மணம் ஐந்தருவி
வாருங்கள் நண்பரே..!
Deleteஉங்கள் அருவியில் நனைகிறேன்.
நன்றி.
நம் தமிழை நாம் தெரிந்து கொள்வது முக்கியம் இல்லையா ?
ReplyDeleteநிச்சயமா......ம்..ம்..ம் ஏகப்பட்ட சமாச்சாரம் இருக்கும் போல இருக்கிறதே.சரி நாம போயிட்டு அப்புறமா வருவோம். நம்ம இங்கிலீஷ் டீச்சர் வந்திட்டாங்க இல்ல. அவங்களும் பார்த்து சொல்லட்டும் தெரிஞ்சுக்குவோம். ஹா ஹா.... ஷ் ..காட்டிக் குடுத்திடாதீங்கையா என்னை.
ஏதோ அறிஞ்சது தெரிஞ்சத, பாத்தது படிச்சத சொல்லாம்ன்னு ஆரம்பிச்சது......,
Deleteஎவ்வளவு தூரம் போகுதின்னு பாப்போம்!
நன்றி
தமிழ் ல மூன்று எழுத்துக்கள்தான் எனக்குத் தெரியுது சார். :) மறைந்திருக்கும் 27 எழுத்துக்களும் மனக்கண்ணில் தெரிகிறது. :)
ReplyDelete247 னு சொன்ன புத்தகம், எந்தப் புத்தகம் அதுனு கூகிள்ப் பண்ணி கண்டுபிடிச்சு வந்து, தவறான ஒரு பதிலைக் கொடுப்பதற்கு பதிலா நான் பொறுமை காக்கலாம்னு காத்திருக்கேன். :)
முதல்ல எனக்குப் புரியவே இல்லை.
Deleteஅதுக்குள்ள தொல்காப்பியம் எல்லாம் நினைவில ஓட.............. இவர் சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே என்பதைச் சொல்ல வராறான்னெல்லாம் யோசிச்சு மண்டை காய்ஞ்சு போய் திரும்பவும் பார்த்தா.........................
பகவான்ஜி கிட்ட இருந்து பொதுவா வரும் பின்னூட்டம் :))
ஹ ஹ ஹா
கூகுள்ல இருக்குதோ இல்லையோ நானே சொல்லி இருக்கேன்.
பார்க்கலாம்.
நிச்சயம் யாராவது சொல்லுவாங்க.
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
ரூபன் அவர்களின் சந்தேகம் தான் எனக்கும்..! அது என்ன நன்னூல் கணக்குப்படி 399 எழுத்துக்கள்..? ஒருவேளை எங்கள் தமிழய்யாவும் பாடநூல்களும் தவறாக சொல்கின்றனவா..! பொறுத்திருந்து பார்ப்போம்! தொடக்கமே வித்தியாசமாக இருக்கிறது.
ReplyDeleteத ம 7
அய்யா வணக்கம்.
Deleteபாடநூல்கள் மாணவர்கள் பயன்படுத்தும் எழுத்து வடிவங்களின் அடிப்படையில் அப்படிச் சொல்கின்றன.
ஆனால் நமக்கு உள்ள அடிப்படை எழுத்துருக்கள் 30 தான்.
சார்பெழுத்துகள் என்றால் அதில் உயிர்மெய்யையும் ஆய்தத்தையும் மட்டும் சேர்ப்பது இந்தப் பயன்பாட்டில்தான்.
ஆனால் சார்பெழுத்துகள் என்பதில் இவ்விரண்டு மட்டும் இல்லை.
எனவே எழுத்துகள் எனறால் முப்பது என்பதோ அல்லது சார்பெழுத்துகள் அனைத்தையும் ( இங்கும் பிரச்சினை இருக்கிறது. எந்த நூல் அடிப்படையில் இந்தச் சார்பெழுத்தின் வகைப்பாட்டைக் கொள்வது என்பது அது) சேர்த்துச் சொல்வதுதானே சரி.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றிகள்.
பொங்கி பெருகட்டும் தமிழ் பால்
ReplyDeleteமனதில் தங்கி சிறக்கட்டும் அன்பால்!
தொடர்க!!!
த ம +1
நட்புடன்,
புதுவை வேலு
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி அய்யா!
Deleteஇவ்வாறான பதிவுகள் இப்போதைய தேவை. அனைத்து தரப்பினருக்கும் பயன்படும். நன்றி.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அய்யா!
Delete37 எழுத்துக்கள் மட்டும் ஒன்றில் இடம் பெறவில்லை என்பது பற்றி அறிவேன்... இதை....
ReplyDeleteகாத்திருக்கிறேன் ஐயா...
உங்களுக்குத் தெரியாததா டிடி சார். :))
Deleteவணக்கம் சகோ. தொல்காப்பியம் என்பது என் அறிவிற்கு எட்டியது. சரியா என தாங்கள் தான் கூற வேண்டும்.
ReplyDeleteதொல்காப்பியரின் கருத்துப்படி, தமிழில் உள்ள எழுத்துகள் 30 + 3 தான்.
Deleteமுப்பது எழுத்துகள்.
அதனைச் சார்ந்து வரக்கூடிய மரபினை உடைய மூன்று எழுத்துகள்.
தொல்காப்பியர் காலத்தில் தமிழ் எழுத்துகள் 247 என்றால் ஒருவேளை அவருக்கு மயக்கமே வந்திருக்கலாம்:)
நன்றி சகோ வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும்!
நல்ல முயற்சி! பின்னாளில் நீங்கள் நூலாக வெளியிடும் அளவுக்கு கொஞ்சம் விளக்கமாகவே எழுதவும்.
ReplyDeleteத.ம.12
அய்யா வணக்கம்.
Deleteவிளக்கமாக எழுதுவதை விட இந்தத் தலைப்பைப் பொறுத்தவரைச் சுருக்கமாக எழுதிப் போவதையே விரும்புகிறேன்.
தமிழையும் அதனைச் சார்ந்த சில சிறு சிறு தகவல்களையும்.
தங்கள் வருகைக்கும் தக்க அறிவுரைகள் பகர்கின்றமைக்கும் மிக்க நன்றி.
வலையிலும் ஆசிரியப் பணியா.? தொடர உள்ளேன் ஐயா.!
ReplyDeleteநகுதற் பொருட்டன்று நட்பு, என்றபடி நீங்கள் எல்லாம் இருக்கின்றீர்கள் என்கிற நம்பிக்கையில் தொடர்கிறேன் அய்யா!
Delete
ReplyDeleteநல்ல முயற்சி. தமிழ்மொழி பற்றி இதுவரை அறியாதவைகளையும், தங்களின் கேள்விக்கான பதிலையும் அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.
நிறைய பேருக்கு விடை தெரிந்திருக்கும் அய்யா.
Deleteதெரிந்தவர்கள் பலரும் இந்தப் பதிவைப் பார்க்காமலோ அல்லது பார்த்தும் பின்னூட்டம் இடாமலோ போயிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
தங்களின் வருகையும் கருத்தும் இன்னும் எழுத ஊக்குவிப்பதாய் உள்ளன.
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
“இன்று நாம் வழங்கும் உயிர்- ஆய்தம் – மெய்,
ReplyDeleteஎன்னும் நெடுங்கணக்கு முறை தொல்காப்பியத்தில்
இல்லை. முதன்முதலில் இதற்கான இலக்கணச்
சான்றை நமக்கு வீரசோழியமே தருகிறது.
(வீரசோழியம். சந்திப்படலம். காரிகை.1)
வீரசோழியத்தை அடுத்தெழுந்ததாகக் கருதப்படும்
நேமிநாதம் ஆய்தத்தை முதலெழுத்தினோடு
சேர்க்கிறது.(நேமிநாதம்.எழுத்.1).”
உங்கள் கேள்விக்கான விடை எனக்குத் தெரியவில்லை. உங்கள் பழைய பதிவான ஆய்தம் என்ற கட்டுரையில் தேடி இதனைக் கொடுத்துள்ளேன். தேடலின் போது படிக்க வேண்டிய அருமையான பழைய பதிவுகள் நிறைய இருக்கின்றன என்ற உண்மை தெரிந்தது. நேரங்கிடைக்கும் போது அவசியம் வாசிக்கவேண்டும்.
நம் தமிழைப் பற்றித் தெரியாத விபரங்களை அறிந்து கொள்ள இத்தொடர் மிகவும் அவசியமானது; மிகவும் பயனுள்ளதும் கூட. கேள்வி பதில் பாணியில் அமைவது சிறப்பு. கொஞ்சமேனும் யோசிக்க வைக்கிறது.
தொடருங்கள்.
ஹ ஹ ஹா
Deleteவாருங்கள் சகோ.
இதை உயிருக்கும் மெய்க்கும் இடையில் ஆய்தத்தை நாம் வைத்திருக்கிறோம் அல்லவா? அந்த முறைக்கு நமக்கு முதன் முதலில் கிடைக்கும் ஆதாரம் வீரசோழியம் என்பதைச் சொல்லி இருக்கிறேன்.
தமிழ் எழுத்துகள் 247 என்பது வீர சோழியக் கருத்தன்று.
ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்.
யாரேனும் நிச்சயம் பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன்.
பழைய பதிவுகளை நீங்கள் பார்ப்பதாகக் குறிப்பிட்டமை குறித்து மகிழ்ச்சி.
ஆனால் அப்பதிவுகள் சகலரும் வாசிக்கும் தரத்தில் அமையவில்லை என்கிற குறை எனக்கே உண்டு.
கூடுமானவரை எழுத்தில் பழகப்பழக எளிமையான வடிவத்தைக் கையாள வேண்டும் என்கிற புரிதல் இப்பொழுதுதான் எனக்கு வந்திருக்கிறது.
அதற்கு முயன்று கொண்டும் இருக்கிறேன்.
தங்களின் வருகைக்கும் அளிக்கும் உற்சாகத்திற்கும் நன்றிகள்.
நேற்றைய தேடலில் உங்கள் பழைய பதிவுகள் சிலவற்றை வாசித்தேன். என்று சொன்னேன் அல்லவா? அப்போதைய நடை புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாயிருப்பது உண்மை தான் சகோ. நிதானித்து வாசித்துத் தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இப்போது நடை மிகவும் எளிதாய் மாறி நன்கு புரிந்து கொள்ளக்கூடியதாய் மாறியிருப்பதை என்னால் நன்கு உணர முடிந்தது. பாராட்டுக்கள் .
Deleteநன்னூல் கருத்துப்படி சார்பெழுத்துகளையும் சேர்த்துத் தமிழில் உள்ள மொத்த எழுத்துகள் 399. அறியாத புதிய செய்தி. எப்படி என்பதை விளக்கவும்.
ReplyDeleteஅதை ஒவ்வொன்றாக எடுத்து அதன் சரி தவறு என்பவை குறித்து இத்தொடரில் விவாதிப்போம் சகோதரி.
Deleteதங்களின் மீள் வருகைக்கு நன்றி.
நன்றி.
அட! முப்பது எழுத்துக்கள் மூலம் 247 எழுத்துக்கள் உருவாகின்றன என்று தெரியும். இதை சொன்னது யார் தெரியவில்லை! காத்திருக்கிறேன்! நல்ல முயற்சி! கூடியவிரைவில் நானும் மீண்டும் இலக்கண பதிவு ஆரம்பிக்கலாம் என்று எண்ணம்! நிறைய படிக்க வேண்டும் பின்னர் துவக்க வேண்டும். நன்றி!
ReplyDeleteஅய்யா வணக்கம்.
Deleteஏற்கனவே நீங்கள் இலக்கணப் பதிவுகளை இட்டிருக்கிறீர்களா..?
நிச்சயம் வருகிறேன் பார்க்கிறேன்.
உடனே ஆரம்பியுங்கள்.
இத்தலைப்பில் இலக்கணம் மட்டுமன்றி தமிழ் சார்ந்த பலவிடயங்களையும் அவ்வப்போது பகிர விவாதிக்க நினைக்கிறேன்.
சிறிய பகுதிகளாக...!
தங்களது வருகையும் கருத்தும் என்றும் வேண்டும்.
நன்றி.
இன்றைய சூழலில் மிகவும் அவசியமான பதிவு நண்பரே
ReplyDeleteதொடருங்கள்
கற்றுக் கொள்ளக் காத்திருக்கிறேன்
நன்றி நண்பரே
கண்டதைப் பகிர்தல் என்பதன்றி பெரிதாய் ஒன்றும் இல்லை கரந்தையாரே...!
Deleteஉங்களின் பணியோடு ஒப்பிடும் போது இது ஆகச் சிறிதானதுதான்.
வருகைக்கும் தொடர்வதற்கும் என்றும் நன்றிகள்.
தம +1
ReplyDeleteநன்றி அய்யா!
Deleteபயனுள்ள பதிவுகள் கவிஞரே எல்லோரையும் போல நானும் பொறுத்திருந்துதான் பார்க்கணும் உங்கள் வலையில் உள்ள பதிவுகளைப் படிக்கும்போதுதான் எனக்குள் இருக்கும் அறிவு இவ்வளவுதான் என்னும் உணர்வு பிறக்கிறது ..தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteதம 14
புதிய பதிவுகள் ஒன்றும் உங்கள் தளத்தில் வரக்காணோமே கவிஞரே..!
Deleteவந்து வந்து சோர்ந்தே திரும்புகிறோம்.
விரைவில் வாருங்கள்.
இங்கு என் அறிவு ஏதும் இல்லை கவிஞரே...!
படித்ததைத் பகிர்தல் அன்றி!
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் நன்றி.
நேரமிருப்பின் பழைய கவிதை இடுகளையும் படித்துக் கருத்துரைத்தால் மிக்க மகிழ்வாய் இருக்கும்.
தங்களுடைய கருத்தை எதிர்பார்க்கிறேன்.
நன்றி.
தேடிப் பார்த்தேன் தென்படவில்லை ,குத்துமதிப்பாய் சொல்கிறேன் ,அது தொல் காப்பியம் தானே :)
ReplyDeleteவாருங்கள் பகவானே...!
Deleteஉங்கள் கண்களுக்குமா அகப்படாமல் போனது ? :)
தொல்காப்பியம் இல்லை .
ஒரு நாள் பொறுங்கள் பகவானே..!
நன்றி
அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன் சகோ..நன்முயற்சிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிஞரே..!
Deleteஒரு நாள் பொறுங்கள்.
நன்றி.
ReplyDeleteநீண்ட பதிவாக இல்லாமல் சிறிய அளவாக கொடுக்க நினைப்பதால் நிச்சயம் அது வெற்றி பெரும் பதிவாக ஆகிவிடும்... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி அய்யா!
Deleteபழையப் பதிவுகளைப் புரட்டிப்பார்த்தேன்...ஆய்தம் பார்த்து வீரசோழியம் என்று நினைத்தேன்..அது இல்லை என்று மேலே சொல்லியிருப்பது பார்த்தேன். அதனால் மேலும் தேடினேன்..ஒன்றை நினைத்திருக்கிறேன்..பார்க்கலாம்.
ReplyDeleteஅறிந்து கொள்ளக் காத்திருக்கிறேன்.
உங்கள் கணிப்பு நிச்சயம் சரியாகவே இருக்கும் சகோ.
Deleteஅடுத்த பதிவினை இட்டுவிட்டேன்.
சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
நன்றி.
இல்லையண்ணா..
Deleteஅடுத்தப் பதிவைப் பார்த்துவிட்டேன்.
சரி, முத்து வீரியம் உங்கள் பதிவுகளில் எங்கு ஒளிந்திருக்கிறது என்று சொல்லுங்கள் ப்ளீஸ்... :)
வாருங்களம்மா!
Deleteஎன் கேள்விக்கென்ன பதில் என்ற பதிவில் முத்துவீரியம் பற்றிச் சொல்லி இருக்கிறேன்.
ஆனால் எழுத்தின் தொகை பற்றி அங்குக் குறிப்பிடவில்லை.
பின்னூட்டங்களிலோ எங்கோ எழுதிய நினைவு இருக்கிறது.
தேடுகிறேன்.
இல்லாவிடடால் வெறுமே தேடவைத்தற்கு மன்னிப்பு.
நன்றி.
ஆகா! தமிழில் எத்தனை எழுத்துக்கள் என்பது கூடத் தெரியாமலா சுற்றிக் கொண்டிருக்கிறோம்!!! தலைகுனிகிறேன். சில வேலைகள் காரணமாக உங்கள் பதிவுகளை முன்பு போல் உடனுக்குடன் படிக்க முடிவதில்லை. சேர்த்து வைத்துக் கொண்டு ஒருநாள் ஆற அமரப் படிக்க வேண்டும். இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள ஆவல்! அடுத்த பதிவுக்காய்க் காத்திருக்கிறேன். நன்றி ஐயா!
ReplyDeleteஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை அய்யா!
Deleteஇன்னும் தமிழ் இலக்கணப் பாடத்தில் நாம் பயிலும் சில வழக்குகளுக்கான ஆதாரம் வேறு சில இடங்களில் விரவிக் கிடக்கிறது.
மாணவன் அறியாவிட்டாலும் கற்பிக்கும் ஆசிரியன் எதை ஆதாரமாகக் கொண்டு இத்தகவல் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அடுத்த பதிவினை இட்டிருக்கிறேன். பதிலாக.
நேரமிருக்கும் போது கண்டு கருத்திடுங்கள்.
நீங்கள் சுட்டிய எழுத்துப் பிழையைச் சரிசெய்துவிட்டேன்.
சுட்டியமைக்கு மிக்க நன்றி.
சிறப்பான தகவல்களோடு பதிவுகள் தொடரும் போல தெரிகிறது..
ReplyDeleteபதில்தான் தெரியவில்லை..ஆசிரியர் நீங்கள்தான் தெளிவிக்கவேண்டும்..
தொடர்ந்து வாசிப்போம் ... தமிழின் சுவையை அருந்துவோம்..
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு பாண்டியன்.
Deleteஇது தான் நினைக்கிறேன்,
ReplyDeleteதாங்கள் சொல் கேட்க இருக்கிறேன்,
எனக்கு கற்க ஆசை,,
மொழி முதல் காரணம் ஆம் அணு திரள் ஒலி
எழுத்து அது முதல் சார்பு என இரு வகைத்து
உயிர் உம் உடம்பு உம் ஆம் முப்பது உம் முதல்
உயிர்மெய் ஆய்தம் உயிரளபு ஒற்றளபு
அஃகிய இ உ ஐ ஔ மஃகான்
தனிநிலை பத்து உம் சார்பெழுத்து ஆகும்
முதல் முப்பது 30
சார்பெழுத்து 10
உயிர்மெய் 208
உயர் ஆய்தம் எட்டு, 8
உயிரளபு எழு முன்று, 21
ஒற்றளபெடை ஆறு ஏழ், 42
உகரம் ஆறு ஆறு, 36
ஐ கான் முன்று, 3
ஓள கான் ஒன்று, 1
மஃகான் முன்று, 3
ஆய்தம் இரண்டு, 2
விரி 1
இதில் விடுபட்டுள்ளது, சரிபார்த்து பின் எழுதுகிறேன்.
எங்கோ விட்டுவிட்டேன் அவசரம்,,,
சென்ற பதிவில் உங்களுக்கு இலக்கணம் பிடிக்கும் என்றதால்தான் மீண்டும் இந்தப் பக்கம் இலக்கணக் காற்றடித்தது சகோ.
Deleteஉயிர் மெய் கணக்கில் வேறுபாடிருக்கிறது போல..
உயிர்மெய்
என்பதை மட்டும் 216 என்று திருத்திவிட்டால் இது நன்னூல் சொல்லும் 399 என்னும் எழுத்துத் தொகைக்கான கணக்கு அல்லவா சகோ.
அல்லது வேறு எந்நூலிலேனும் இவ்வகைமை இருக்கிறதா.
தங்களின் வருகைக்கும் ஆழமான பின்னூட்டக் கருத்திற்கும் நன்றி.
தங்களின் பதிவு பார்க்க தாமதமாகிவிட்டது, எனவே அவரமாக தவறாக எழுதிவிட்டேன், தாங்கள் சொன்ன 216 சரி மொத்தம் பார்க்கல, வருந்துகிறேன், எனக்காகவும் எனும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது,இன்றைய இளைய தலைமுறை மாணவர்களும், ஆசிரியர்களும் எப்படி இலக்கணத்தில் இருக்கிறார்கள் என்று பார்த்தால் ஒன்றும் சொல்வதுபோல் இல்லை. எனவே தங்கள் பதிவினை நான் மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன். கற்றுக்கொள்ளதான்.
Deleteசிறந்த வழிகாட்டல்
ReplyDeleteதொடருங்கள்
உள்ளோம் ஐயா! ஆசானே வகுப்பிற்குத் தாமதம்! பரவாயில்லை இணைய வகுப்புதான் என்றாலும் இங்கும் ஆஜர் ஆகிவிடுவது நல்லது....
ReplyDeleteஅட ஆமாம் ல 30 உயிர் , மெய்....இரண்டும் இணைந்து வருவதுதானே உயிர்மெய் ....ஆனால் அடிப்படை எழுத்துக்கள் 12 +18 சரிதான்...ஆனால் விடைதான் தெரியவில்லை......ஆவல்!
உயிர்-12, மெய்-18, ஆய்தம்-1, உயிர்மெய்யெழுத்து-216 எனும் இவ்வெண்ணிக்கை முடிவு பற்றிய உங்கள் ஆய்வு சிறப்பானது. ரொம்ப நாளாவே எனக்கொரு சந்தேகம் விஜூ. உங்கள் பதிவோடு தொடர்புடையது என்பதாலும், உங்களைப் போலும் தேடல் உள்ளோரன்றி வேறு யாரிடமும் இந்தக் கேள்வியைக் கேட்க முடியாது என்பதாலும் கேட்கிறேன் -
ReplyDeleteஆரம்ப கால இலக்கணியர், பேசப்பட்ட தொடர்களிலிருந்து எழுத்துகளைப் பிரித்தறிந்து ஒலிவடிவமாகவும் பின்னரே வரிவடிவமாகவும் தொகுத்திருப்பார்கள் இல்லையா? அதில் தான் எனக்கொரு சந்தேகம்- சார்பெழுத்துகள் என வகைப்படுத்தப்பட்டுள்ள தனித்த வரிவடிவம் இல்லாத குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகார-ஔகார-மகர-ஆய்தக் குறுக்கங்களை “எழுத்து“ (சரி சார்பெழுத்து) என்று வகைப்படுத்துவது சரியா? இந்த ஓசைக் குறைவை உச்சரிக்கும்போது தெரிந்துகொள்வோமே அன்றி அவற்றுக்குப் பழங்காலத்திலாவது தனித்த வரிவடிவம் இருந்திருக்குமா? இந்த ஓசைக் குறைவைக் கொண்ட சில ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் இப்படி (சார்பெழுத்துப் போல) சொல்கிறோமே? இதற்கு ஆங்கிலத்தில் தனி இலக்கணம் உண்டா? For Example - Talk, Walk etc words are being pronounced as Tak, wak.. Isn't it? தெளிவுறுத்த வேண்டுகிறேன்.
அய்யா வணக்கம்.
Deleteஅடுத்தடுத்த பதிவுகள் இட்டுப் போனதால் தங்களின் இந்தப் பின்னூட்டத்தை வெளியிட்டுவிட்டு பதிலளிக்கத் தாமதமாயிற்று.
பொறுத்திட வேண்டும்.
உங்களின் இவ்வினா ஐயவினா அன்று அறிவினா என்று அறிவேன்.
இதற்கான பதில் பின்னூட்டத்தின் வரம்பை மட்டுமன்று பொதுவான பதிவுகளின் வரம்பையும் தாண்டும் என நினைக்கிறேன்.
ஆகவே நீளமாகக் கூற நினைத்த உங்களின் இவ்வினாவிற்கான விடையைக் கூடிய மட்டும் சுருக்கமாகத் தர முயல்கிறேன்.
எனக்குத் தெரிந்ததை.
தவறெனில் திருத்துங்கள்.
உங்கள் கேள்வியில் எழுத்து என்பது எழுதப்படுவது என்கிற கருத்தைக் காண்கிறேன்.
தொல்காப்பியம் இதை எழுப்பப்படுவது ( ஒலிக்கப்படுவது ) என்கிற பொருளிலும் ஆள்கிறது. அதுவே இதன் வேர்ச்சொல்லாக இருக்க வேண்டும்.
நூன்மரபில் எழுத்துகளைப் பற்றிப் பேசும் பெரும்பான்மைச் சூத்திரங்கள் அதன் வரிவடிவு பற்றிப் பேசுவனவல்ல அவை எழுத்துகளின் ஒலியமைப்புப் பற்றிப் பேசுவன என பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார் போன்றோர் கருதுகின்றனர்.
இங்கு எழுத்து என்பதை எழுதப்படுவதான வரிவடிவத்தைக் குறிக்கவே நானும் இனிப்பயன்படுத்துகிறேன்.
நாம் வர்க எழுத்து என இன்று வடமொழியின் ஒலிப்பு முறையை ஒட்டிச் சொல்லும், க போன்ற எழுத்துகளின் மாற்றொலிகளான Ka, Ga போன்ற ஒலிப்பு முறைகளும் தொல்காப்பியக் காலத்தில் இல்லை என்கிறார் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரியார்.
கார்டுவெல்லின் கருத்தும் இதுவே.
இப்படிக்கொள்வதற்குத் தொல்காப்பிய நூன்மரபில் இடமிருக்கிறது.
ஒலிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டும் வடிவும் பொதுமையும் பரவலாக்கம் பெற்றவையாகவும் தான் எல்லா மொழிகளின் எழுத்துகளும் இருக்கின்றன. ஆங்கிலமும் இதற்கு விதிவிலக்கன்று. அங்குச் சொல்லின் இடையில் உள்ள சில எழுத்துகள் உச்சரிக்கப்படாமை Silent எனப்படுகின்றன. இவை உச்சரிப்பில் நிகழ்ந்த வேறுபாடாக இருக்கலாம். எழுத்தின் மரபில் இன்னும் பேணப்பட்டுக் கொண்டிருப்பதாக இருக்கலாம்.
எழுத்துருக்கள் இல்லா மொழிகள் பலநேரங்களில் எழுத்துருக்கள் உள்ள மொழிகளின் எழுத்தமைப்பைப் பார்த்தும், தம் மொழியிலுள்ள ஒலித்தேவை கருதியும் எழுத்துகளை அமைத்துக் கொள்வதும் உள்ளதுதான்.
நீங்கள் கூறியதுபோல,
சார்பெழுத்துகளுக்குத் தனி வரிவடிவம் இல்லை.
உயிர்மெய் என்றாலும் கூட அவை, புள்ளியும் கோடும் மேல்விலங்கும் கீழ்விலங்கும் பெற்றமையும் முதல் எழுத்தின் வடிவத்தில் சில மாற்றங்களைப் பெற்றே எழுத்துருவாய் இருக்கின்றன.
( புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதினர் என்னும் உரையாசிரியர் கருத்து, வரிவடிவ மாற்றத்தின் வளர்ச்சி பற்றிய ஆய்வுக்கு முக்கியக் குறிப்பாகும்)
நீங்கள் காட்டிய இந்தக் குறுக்கங்களும் அவற்றின் மறுதலையான அளபெடைகளும் உச்சரிப்பை அடிப்படை எழுத்துகளை வைத்துக்கொண்டு அவற்றை வரிவடிவப்புலப்பாட்டில் கொணர்வதற்கான வழிமுறைகள் என்றே எனக்குத் தோன்றுகிறது.
முதல் எழுத்துகளைச் சார்ந்து சில புள்ளிகளையோ எழுத்துகளையோ சேர்த்து அடையாளமிடப்பட்டுப் பயன்படுத்தப்பட்வைதான் அவை.
முதல் எழுத்தோடு இக்குறியீடுகளைச் சேர்க்கும் போது அவைதரும் பொருள் என்ன என்பதற்காகப் பின் இலக்கண மரபு இது கூறிப்போய் இருக்கலாம்.
ஆகவே அவற்றிற்கும் தனி எழுத்து இல்லை.
மொழி வளர்ச்சிக்கான இன்னொரு முயற்சி அல்லது படிநிலை.
ஆனால் எந்த நிலையிலும், தமிழ் எழுத்துகளின் அடிப்படையை அகர முதல னகர இறுவாய் என வரையறுத்ததையும், இன்னொரு மொழி உட்புகும் போதும் வடவெழுத்தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாக்க வேண்டும் என்பதையும் அதற்கேற்பவே தமிழ் மரபு இன்றும் இருந்து வருவதையும் அதன் தொடர்ச்சியில் நாம் இருப்பதையும் எண்ணும் போது வியப்பாய் இருக்கிறது.
இவை என் கருத்தே.
தவறாய் இருப்பின் சுட்டிட வேண்டுகிறேன்.
நன்றி.
ReplyDeleteவணக்கம்!
நம்மின் மொழியை நவிலும் உரைபடித்தேன்
உம்மின் உயர்வை உணர்ந்து!
உம்போன்றோர் செய்யும் உயர்செயலின் முன்னாலே
Deleteஎம்முடைய தொன்று மிலை!
நன்றி அய்யா!
வலை உலகில் அற்புதமான தமிழ்ப் பணி செய்து வருகிறீர்கள். ஐயங்கள், விவாதங்கள் எழுப்பி எனைப் போன்றவர்களுக்கும் கொஞ்சம் தமிழ் அறிவு உண்டாக்கச் செய்வதற்கு நன்றி. தொடரட்டும்
ReplyDeleteஅப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அய்யா!
Deleteபடித்ததைப் பகிரும் சிறு முயற்சிதான் இது.
தங்களைப் போன்றோரின் வருகையும் பார்வையும் ஊக்கமும் இன்னும் நான் எவ்வளவு கவனத்தோடு இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.
வருகைக்கும் கருத்திற்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி.
உயிர் 12+மெய்18+உயிர்மெய் 216+ஆய்தம்01=ஆக 247 ; இவை சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப நீண்டோ குறுகியோ ஒலிப்பதனால் ஏனைய உயிரளபெடை 12 உம் ஒற்றளபெடை 42 உம் குற்றியலிகரம் 37 உம் குற்றியலுகரம் 36 உம் ஐகாரக்குறுக்கம் 3 உம் ஔகாரக்குறுக்கம் 1 உம் மகரக்குறுக்கம் 3 உம் முற்றாய்தம் 8 உம் உருவாகின்றன இவற்றிற்கு தனிப்பட்ட வரி வடிவம் தமிழில் இல்லை ஆதலால் தமிழெழுத்துக்கள் 247 ஏ ஆகும்.
ReplyDelete