Monday 10 October 2016

இவளை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? – கண்டுபிடிப்பவர்களுக்குப் பரிசாம்!


உங்களில் சிலர் நிச்சயம் இவளைப் பார்த்திருக்கக் கூடும். கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்குப் பரிசு என்று வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

காலே இரண்டு நடந்தறியாள்! உறுகண் இரண்டும்
மேலே சிமிட்டும்! விழிக்கறியாள் அந்த மெல்லிநல்லாள்!
பாலே குடிக்க வழியறியாள்! கொஞ்ச பாக்குத்தின்பாள்!
ஆளையறிந்து சொல்லுவோர்க் கிட்டபொன் ஆயிரமே!

ஆளை அறிந்து சொன்னால் ஆயிரம் பொன் தரப்படும் என்கிறான் புலவன்.

பரிசினை அறிவித்த புலவன் இறந்துபோனான்.


கால் இருந்தும் நடக்காத, கண் இருந்தும் பார்க்காத அவள் யார் எனக் கண்டறிந்து யாராவது அவரிடம் பரிசு பெற்றார்களா என்பதும் தெரியவில்லை. 

அவளைக் கண்டுபிடிக்க உங்களை அழைக்கிறேன்.

இதோ போன்ற பாடலை முன்பும் “விடுகதை தெரியும்! அதென்ன விடுகவி?-;உங்கள் தமிழைத் தெரிந்துகொள்ளுங்கள்-(10)” என்னும் பதிவில் பார்த்திருக்கிறோம்.

கொஞ்சம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் விடைகளுக்காய்ப் பின்னூட்டம் தற்காலிகமாக மட்டுறுத்தப்படுகிறது.

நாளை இரவு 9 மணிக்கு உங்களின் பின்னூட்டங்களும் அவள் யார் என்பதும் பதிவிடப்படும்.

உங்கள் விடை அறியக் காத்திருக்கிறேன்.

பாக்கு வெட்டி என்பதே  சரியான விடை




சரியான விடையளித்தோர்க்குப் பாராட்டுகள்.!!!
தொடர்வோம்.

படஉதவி -  நன்றி https://encrypted-tbn0.gstatic.com/images
               
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

53 comments:

  1. ஆஹா... இப்படியும் ஒருத்தியா... யாராக இருக்கும்? பாக்குவெட்டியாளா.. பதிலறிய ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோ.

      பதிவிட்டுச் சிலநிமிடங்களுக்குள் முதற்பின்னூட்டம். சரியான பதிலோடு...!

      நல்லவேளையாக பின்னூட்டத்தை மட்டுறுத்தி வைத்தேன்.

      இல்லாவிட்டால் சுவாரசியம் போயிருக்கும்.

      வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

      பரிசு....?

      புலவனைத் தேடுகிறேன். :)

      என்னால் சில புத்தகங்கள் கொடுக்க முடியும் அவ்வளவுதான்.

      நன்றி.

      Delete
    2. ஆஹா... நான்தான் முதலாவது என்பதும் சரியான விடை என்பதும் மகிழ்வளிக்கிறது.
      \\என்னால் சில புத்தகங்கள் கொடுக்க முடியும் அவ்வளவுதான்.\\
      பொன்னினும் பெரிய பரிசல்லவா அவை... மிக்க நன்றி சகோ.

      பாக்குத்தின்பாள் என்ற வரியில்லையெனில் கத்தரிக்கோல் என்று சொல்லியிருப்பேன். பால் பாக்கெட் கத்தரிக்க அதைப் பயன்படுத்துவதால் அதுவாக இருக்குமோ என்று முதலில் நினைத்தேன். பலரும் சரியான விடையளித்திருப்பது மகிழ்வளிக்கிறது.

      Delete
  2. இலக்கியத்தில் நான் என்றுமே பூஜ்யம்தான். இருந்தாலும் முயற்சிக்கிறேன்.

    //காலே இரண்டு நடந்தறியாள்! உறுகண் இரண்டும்
    மேலே சிமிட்டும்! விழிக்கறியாள் அந்த மெல்லிநல்லாள்!//

    முதல் இரண்டு வரிகளை படித்தபோது சிலப்பதிகாரத்து நாயகி கண்ணகியை குறிப்பதாகப் படுகிறது.

    //பாலே குடிக்க வழியறியாள்! கொஞ்ச பாக்குத்தின்பாள்!
    ஆளையறிந்து சொல்லுவோர்க் கிட்டபொன் ஆயிரமே!//

    ஆனால், அடுத்த இரண்டு வரிகள் குழப்புகின்றன. செல்வச்செழிப்பில் வளர்ந்ததால் கண்ணகியின் கால்கள் நடந்து பழக்கப்படவில்லை. அப்படிப்பட்ட கண்ணகியை கோவலன் நடக்கவைத்தே மதுரைக்கு கூட்டி வருவதாக படித்த ஞாபகம். பாலே குடிக்க வழியறியாள்! கொஞ்ச பாக்குத்தின்பாள்! என்பது வறுமையில் இருக்கும் ஒரு பெண்ணை குறிப்பதாகவும் படுகிறது.

    ஒரே குழப்பமாக இருக்கிறது நண்பரே! நீங்களே விடையை சொல்லிவிடுங்கள்..!

    த ம 2

    ReplyDelete
    Replies
    1. மிக ஆழமாகச் சிந்தித்திருக்கிறீர்கள் நண்பரே!

      பலரும் சிந்திக்காத கோணம்.

      விடை கிடக்கிறது.

      உங்களின் பார்வையிலும் பாடலைப் பார்க்கலாம் என்று தோன்றியது உண்மை.

      உங்கள் பதில் இலக்கியத்தில் நீங்கள் பூஜ்யமில்லை என்பதைக் காட்டிற்று என்பதே உண்மை.

      நன்றி.

      Delete
  3. வணக்கம் அய்யன் !
    நீண்ட நாட்களின் பின் வலை களைகட்டி இருக்கிறது. தங்கள் வரவு நல்வரவாகுக. தங்கள் மீள்வருகை கண்டு மட்டற்ற மகிழ்ச்சியே. ஏன் இந்த நீண்ட மௌனம் என்னவாயிற்று என்று காரணம் தெரியாமல் வருந்தினேன், வலையுலகம் நல்ல ஒரு எழுத்தாளனை இழந்து விடக் கூடாதே என்று.தமிழ்த் தாய் விடுவாளா தன் பிள்ளையை எப்படியோ இழுத்து வந்துவிட்டாள் பார்த்தீர்களா? நல்லதப்பன் தொடர என் வாழ்த்துக்கள். எனக்கும் வலைக்கு வர நேரமும் சூழலும் அமைவதில்லை. இன்று தற்செயலாக முகநூலில் கண்ணுற்ற போது விடை சரியோ தப்போ விடை பகர்ந்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கு வந்தேன். மிக்க நன்றி இந்தப் பதிவை எடுத்து வந்ததற்கு. எனக்குப் பிடித்ததும் கூட. சரி பார்க்கலாம் \\\பாக்குவெட்டியாக ///இருக்கும் என்று நினைக்கிறன். நாளை வரை காத்திருக்கிறேன் பதிலுக்கு. நன்றி நன்றி !வாழ்க வளமுடன் ....!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அம்மை.

      நலம்.

      உங்களை மீண்டும் காண மிக்க மகிழ்ச்சி.

      உங்கள் தளத்திலும் வந்து பார்த்தேன் பேரமைதி.

      என்னாயிற்று

      எழுதுங்கள்.

      உங்களின் விடை தவறாகுமா?

      வாழத்துக்களுடன் வலைத்தளத்தில் எழுத அழைக்கிறேன்.

      நன்றி.

      Delete
  4. விடுகவி சுவாரசியமாயிருக்கிறது. இப்போதைக்கு எனக்குத் தோன்றும் விடை பாக்கு வெட்டி.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரி சகோ.
      வாழ்த்துக்கள.

      Delete
  5. ஒவ்வொரு ஃக்ளூவும் முன்னுக்கு பின் முரணாய் ....அவளை என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை !பாக்கு வேறு தின்கிறாள் ,நீங்களே சொல்லிடுங்க :)

    ReplyDelete
    Replies
    1. பாக்குத்தின்பதை வைத்துத்தான் பலரும் கண்டுபிடித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் பகவானே!

      வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

      Delete
  6. நான் நாளை இரவு 9.15 க்கு வருகிறேன் விடையோடு...
    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. விடையைப் பெற்றுப் பதிவிட்டேன் நண்பரே! :)

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  7. Replies
    1. முயற்சி கூலி தந்து விட்டதே! :)

      Delete
  8. நானும் விடையினை அறியக் காத்திருக்கிறேன் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

      Delete
  9. எனக்கு அம்புட்டு அறிவு எல்லாம் கிடையாதுங்கோ......

    ReplyDelete
    Replies
    1. அப்படி யாரையும் சொல்ல முடியாது வலிப்போக்கரே.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  10. கத்தரிக்கோல் அல்லது பாக்குவெட்டியாக இருக்கலாம் என ஊகிக்கிறேன். சரியா ஐயா?

    ReplyDelete
    Replies
    1. பாக்குத் தின்பாள் என்று வந்ததால் பாக்குவெட்டி
      மற்றபடி இரண்டிற்கும் ஒப்புமை உடையதுதான் ஏனைய வரிகள்.

      தங்களின் வருகைக்கும் முயற்சிக்கும் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.

      Delete
    2. மிக்க மகிழ்ச்சி ஐயா! நன்றி!

      Delete
  11. அருமை.யோசித்துப் பார்த்தேன் விடை புலப்படவில்லை.மயற்சி செய்து பார்த்து விட்டு தெரிந்தால் மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  12. விடையை அறிய ஆவல்....
    காத்திருக்கிறேன் ஐயா...

    ReplyDelete
  13. முதலில் வணக்கம்.
    இன்னும் எதையும் படிக்கவில்லை. படு வேகமாக இருக்கிறீர்கள்.விடுபட்ட பதிவுகளை படித்துவிட்டு வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் அண்ணா

      வருக வருக.

      Delete
  14. எனக்கில்லை..... எனக்கில்லை... ஆயிரம் பொன் எனக்கில்லை... ஐயோ.. இந்த நேரம் பார்த்து மண்டபத்துல கூட யாரும் ஆள் இல்லையே... ஏய்... சொக்கா...!

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா.

      பொன் யாருக்கும் இல்லை ஸ்ரீ.

      புலவனைத் தேடுவோம்.


      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      Delete
  15. கண்டு பிடிக்க வேண்டுமே...இன்று வீட்டுப் பணிகள் பல. எழுதி எடுத்துக் கொண்டேன். நேரம் கிடைக்கும் போது பார்த்து விடை சொல்ல முயற்சி செய்கிறேன்....போச்சே போச்சே ...ஆயிரம் பொற்காசுகள்!!!!!!! அதுவும் போட்டி என்றால் கண்டு பிடிக்க வேண்டும் என்று துடிக்கிறது...முயற்சி செய்கிறேன்..

    சகோ வருகிறேன் பின்னர் சகோ....
    கீதா

    ReplyDelete
    Replies
    1. என் இயல்பிலேயே இருக்கிறீர்கள் சகோ.

      தவறாகிவிடக்கூடாது என்று எந்தவிடையையும் பகிரவில்லை என்றே தோன்றுகிறது.

      வாருங்கள்.

      நன்றி.

      Delete
  16. விடுகவி.... புதிதாய் இருக்கிறது.... விடை தெரிந்து கொள்ள நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. கவி விடுவித்தாகிவிட்டது.

      பதிவு காணவேண்டுகிறேன்.

      நன்றி.

      Delete
  17. பொம்மையா (பதுமையா) என்மனைவி கேட்டாள்

    ReplyDelete
    Replies
    1. விடை பாக்கு வெட்டி என்பது ஐயா.

      முயற்சிக்கு நன்றி.

      Delete
  18. பாக்கு வெட்டி என நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் நினைத்தது சரிதான் ஐயா.

      வாழ்த்துக்கள்.

      நன்றி.

      Delete
  19. பொம்மை....என்று நினைத்தால்....பாக்குத்தின்பாள் என்பது யோசிக்க வைக்கிறது....மீண்டும் வருகிறேன். சகோ

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பொம்மைக்கும் பொருந்தி இருக்கிறதோ?

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

      Delete
  20. இதில் நேரடியாக அர்த்தம் இல்லாமல் வேறு ஒரு அர்த்தமும் வருவதாக இருக்கும் என்றும் தோன்றுகிறது. தமிழ்ப்புலமையில் தருமி நான்...இங்கு புலமைவாய்ந்தவர்கள் பலர் இருக்க...ம்ம்ம்ம் முயற்சி தொடர்கின்றது...

    கீதா

    ReplyDelete
  21. ஆத்தா! நான் பாசாயிட்டேன்!

    ReplyDelete
    Replies
    1. விடை எங்கே இபு??!!!! அப்பதானே நீங்க பாசாயிட்டீங்களா இல்லையா என்று தெரியும்!!!!!! ஓ உங்கள் ஊகத்தை வைத்துச் சொல்லுகின்றீர்களா...ம்ம்ம்

      கீதா

      Delete
    2. இல்லை சகோ! அவர் விடையை வெளியிட்டதைப் பார்த்துத்தான் நான் இந்தக் கருத்தை வெளியிட்டேன்.

      Delete
  22. பூஜ்யம் என்பது உறுதியாகிவிட்டது.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் இல்லை நண்பரே!

      உங்கள் பல்துறைப் புலமையும் அதை ரசிக்கும் என்னைப்போன்ற பலலட்சக்கணக்கான வாசகர்களுமே அதற்குச் சாட்சி.

      நன்றி.

      Delete
  23. இக்கால மற்றும் வருங்காலத் தலைமுறைக்கு இப்பாடலைக் கொடுத்தால், கண்டுபிடிப்பது கஷ்டமே. பாக்கு வெட்டியை அவர்கள் பார்த்தே இருக்க மாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் பாக்கெட்டுகளில் அடைபட்டிருக்கும் பாக்குத் துகள்களே. எனவே பாக்கு வெட்டியின் புகைப்படத்தை உங்கள் விடைக்குக் கீழ் வெளியிடுவது அவசியம் என்பது என் கருத்து. இன்றைக்கு ஒன்பது மணிக்குத் தேர்வு முடிவைத் தெரிந்து கொள்வது போல் த்ரில்லிங்காக இருந்தது!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாய் வெளியிடுகிறேன் சகோ.

      நன்றி.

      Delete
  24. கைப்பாவை அல்லது வயதான மூதாட்டி?

    கீதா

    ReplyDelete
  25. ஓ எல்லோரும் சொல்லியிருப்பதைப் பார்த்தால் பாக்குவெட்டியோ??!!! என் வீட்டில் இருக்கிறது. பாக்கு வெட்டுவதில்லை என்றாலும் பெருங்காயக்கட்டி, இன்னபிற துண்டு செய்வதற்கு உபயோகப்படுத்துவது உண்டு. அதுவும் பதிலாக இருக்குமோ என்று யோசித்து பின்னர் கைவிட்டேன்...கண்கள் போன்று இருக்கும் தான்....இரு கால்கள் போல இருக்கும் தான் அதை நிற்க வைத்துப் பார்த்தால் கிட்டத்தட்ட ஒரு உருவம் கிடைக்கும்தான் புகைப்படம் கூட எடுத்துவைத்துள்ளேன்....இருந்தாலும் ஏனோ அது எனக்கு உறுதியான பதிலாக இருக்கும் என்று யோசிக்காததால் ஊகமாகக் கூடச் சொல்லத் தோன்றாததால் விட்டுவிட்டேன். போச்சு போச்சு பொற்காசுகள்!! ஹஹஹ் பரவாயில்லை பரிசா முக்கியம்? உங்கள் விளக்கத்திற்காகக் காத்திருக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா

      பதிவில் பதிலிட்டிருந்தேன்.

      தவறுதலாய்ப் பின்னூட்டத்தில் இட்டதாய்க் கூறிப் பின் மாற்றினேன் சகோ..

      தங்களின் முயற்சிக்கு நன்றி.

      Delete