Thursday 12 June 2014

நாள் எதிர்பார்த்திரு!



கலைபடைத்தவன் களம்முடித்ததை

மலைபொறித்தவன் மரபினன்,

அலைகடல்’அழத் தளைதகர்த்திடும்

கொலைக்களத்துயிர் கொடுக்கிறான்!


நெஞ்சில்வேலினைத் தாங்கியேபகை

எஞ்சுதல்’அறச் செய்தவன்,

கெஞ்சலாகுமோ? குனிதல்வீரமோ?

நஞ்சையுண்டுயிர் சிந்துவான்!


செருமுனைக்குச்செல்! வருவனங்கெனப்

பெருமிதத்துடன் சொன்ன தாய்

தெருவலைந்தவன் சதைதிரட்டுவாள்!

கருசிதறிடப் பதறுவாள்!


உழுதவீரமும் உதிரஈரமும்
 
தொழுதுநின்னடி பணியுமோ?

அழுதகண்களின் அமிலநீர்த்துளி

பொழியும்நாளெதிர் பார்த்திரு!


மொழியும்மானமும் உயிரின்மேலெனும்

வழியில்வந்தவன் அழிகிறான்!

புழுவென்றாயினை! புயலென்றாகிதீப்

புழுதிவிட்டெழு தமிழமே!
Related Posts Plugin for WordPress, Blogger...

பதிவுகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...

26 comments:


  1. வணக்கம்!

    வஞ்சித்துறைப் பாடல்
    நெஞ்சுள்சுவை நல்கும்!
    கொஞ்சும்தமிழ் தந்து
    விஞ்சும்புகழ் பெற்றீா்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  2. அய்யா! வணக்கம்.

    எஞ்சும்இன மெல்லாம்
    அஞ்சும்படி யான,
    வஞ்சஞ்தனை வீழ்த்த
    மிஞ்சும்தமிழ் பாடல்!

    வருகைக்கும் கருத்திட்டமைக்கும் நன்றி!

    ReplyDelete
  3. அருமை கவிஞரே !
    நெஞ்சில்வேலினைத் தாங்கியேபகை
    எஞ்சுதல்’அறச் செய்தவன்,
    கெஞ்சலாகுமோ? குனிதல்வீரமோ?
    நஞ்சையுண்டுயிர் சிந்துவான்! இவை மிகவும் பிடித்த வரிகள். வேதனை நிறைந்த கவிதை. நன்றி! தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோதரி!

      Delete
  4. வணக்கம் சகோதரரே!

    நெஞ்சில் வீரமும்
    சிந்தையில் வெல்வோம் என்ற ஓர்மமும்
    கிளர்ந்தெழச் செய்கிறது உங்கள் கவிதை!

    மிக மிக அருமையான சீர்களைச் சிறப்பாக அடுக்கிச்
    சீறிவரும் நல்லதொரு வீர உணர்வுக் கவிதை தந்தீர்கள்!

    காலம் கனியட்டும் கனவுகள் நனவாகும்!...
    வாழ்த்துக்கள் சகோதரரே!

    ReplyDelete
    Replies
    1. கனவு மெய்ப்படத்தான் வேண்டும்.
      நன்றி!

      Delete
  5. Replies
    1. நான் பன்னிரண்டாம் வகுப்புப் படிக்கும் சமயம்...!
      என் தமிழாசிரியார் ஒரு கவிதை சொன்னார்.

      “ தூங்கிய தமிழனைத்
      தட்டி எழுப்பினேன்!
      அவனோ,
      நின்று கொண்டே தூங்குகிறான்“

      என்று.
      உங்கள் பின்னூட்டம் அதை நினைவுபடுத்தி விட்டது.
      எனினும் நம்பிக்கை உண்டு அய்யா!
      ஏனெனில் தமிழ் இருக்கிறதே....!

      Delete
    2. சுயநலம் மிக்கவர் நம்மவர்..
      ஜோ பிரிட்டோ
      இலயோலா கல்லூரி
      போன்ற மீதம் இருக்கும் உணர்வாலர்களுக்காக
      தப்பி கிடக்கிறது தமிழகம்
      இல்லை என்றால் கடல் காரி உமிழ்ந்து விழுங்கியிருக்கும் என்று தோன்றுகிறது

      Delete
  6. இதேபோலொரு சூழல் பற்றிச் சொன்ன எம் பேராசிரியர் முனைவர் இரா.இளவரசு அ்யயா தன் கவிதையைச் சொன்னார் -
    “தூங்குவோர் தமை எழுப்புதல் கூடும்,
    தூங்குவோர் போல நடிப்பவர் தம்மை
    ஓங்கி அறைந்து செவிப்பறை கிழித்தே
    ஒவ்வொரு பல்லையும் எண்ணிக் கொடுத்தே
    உதைத்துத் திருத்த ஒருபடை வேண்டும்
    தமிழ்க்காளையே - அதில்
    உன்னையும் உறுப்பினனாக்கிக் கொள்வாய்
    இந்த வேளையே!” - இரண்டும் இரண்டு விதம், இரண்டு கோணம். நமக்கு, இரண்டு வகையான தேவையும் உள்ளது நண்பா.
    உமது ஆற்றல்மிக்க தமிழ் இதனைச் செயற்படுத்தட்டும். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா,
      வருகைக்கும் கருத்தினுக்கும்,
      தங்கள் என்மேல் கொண்ட நம்பிக்கைக்கும்..!

      Delete
    2. கவிதை அருமை அண்ணா..

      Delete
  7. "மொழியும்மானமும் உயிரின்மேலெனும்
    வழியில்வந்தவன் அழிகிறான்!
    புழுவென்றாயினை! புயலென்றாகிதீப்
    புழுதிவிட்டெழு தமிழமே!" என்ற
    உணர்வு வரிகளை விரும்புகிறேன்!

    சிறந்த பகிர்வு!

    visit: http://ypvn.0hna.com/

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும், படித்துக் கருத்திடுகின்றமைக்கு நன்றி.

      Delete
  8. கலங்க வைக்கும் வரிகள்...

    ReplyDelete
  9. உணர்ச்சிக்கவிஞர் காசிஆனந்தன் ஐயா அவர்களை நினைவுபடுத்துகிறது உங்கள் கவிதை..!தமிழம் வீறு கொண்டெழும் நாளும் வருமா..? வலியை ஏற்படுத்திவிட்டது உங்கள் வெப்பக்கவிதை.
    கவிஞரே.! தொடர்ந்து உங்கள் கவிதை வாளைச் சுழற்றுங்கள்.!

    ReplyDelete
  10. அய்யா,
    வணக்கம். தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியுடையேன்!

    ReplyDelete
  11. மனதுக்கு வேதனை தரும் வரிகள். தொடருங்கள் கவிதைகளை. தொடர்கிறோம். (1)http://ponnibuddha.blogspot.in/2014/06/l.html
    (2) http://drbjambulingam.blogspot.in/2014/05/2014.html

    ReplyDelete
    Replies
    1. முனைவர்க்கு வணக்கம்.
      வேதனை எனதிலக்கன்று.
      நம் பகைவர்க்கும் வரலாகாக் கேடு...!
      மானமிழந்து மாற்றலர் தொழும்பராய்
      ஈனமுற்றிருக்க விரும்பாமல் நடந்த போர்!
      தொலைக்காட்சியில் பத்தோடு பதினொன்றாய்ப் பார்த்திருக்க முடியவில்லை அய்யா!
      நன்றி!

      Delete
  12. தோழர் ரிப்ளை என்கிற பட்டனை அழுத்தி பின்னூடங்களுக்கு பதிலிடுங்கள்.

    அருமையான எழுசிக் கவிதை தோழர்
    படம் மனதை காயப்படுத்தி விட்டது..
    http://www.malartharu.org/2014/01/gold-vein.html

    ReplyDelete
    Replies
    1. கருத்தினுக்கு நன்றி!
      முதல் பதிவினுக்கான பின்னூட்டத்திற்கும் வழிநடத்துதலுக்கும் நன்றியுடையேன்!

      Delete
  13. கவிதை அருமை.....மனதைக்கலக்கப்போவதை படமே பாதி சொல்லிவிட்டது. கவிதை கண்ணீர் வரவழைக்கிறது......இன்னும் தொடர்க.....

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சகோதரி!

      Delete
  14. உங்களைப் பின்பற்றுபவராகவும் ஆகியிருக்கிறேன். காண்க

    ReplyDelete
    Replies
    1. அவர் நீங்களாயிருந்தால் உங்களைப் பற்றி என் முதல் பதிவிலேயே குறிப்பிட்டிருப்பேன். காண்க
      “இவர் அடி என் முடி மேலன “
      http://oomaikkanavugal.blogspot.in/2014/05/blog-post.html

      Delete